Sehwag PX
எஸ்.பி.ஐ கேன்சர் இன்சூரன்ஸ்

#Virukipolicy | T&C*

புற்றுநோயானது மனிதர்களிடையான அச்சறுத்தல் மிகுந்த நோய்களில் ஒன்று என்பதை உலகளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டது. உலகளாவிய உண்மையை தவிர, எந்நேரத்திலும் யாருக்கும் வரக் கூடியதான இந்நோயின் மிக திடுக்கிடும் அம்சம் வாழக்கைக்கான அச்சுறுத்தலாக அமைந்து விடலாம்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பொது மக்களிடம் இருந்து புற்றுநோய்க்கான பல்வேறு காரணங்கள் வல்லுனர்கள் மூலம் கண்டறியப்பட்டு மேற்கோள்காட்டி கூறப்பட்டாலும், பிடிபடாமல் இருக்கும் புற்றுநோயின் சரியான ஆணி வேர் வல்லுனர்களால் துல்லியமாக கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. ஆகையால், நோயினால் பேராபத்து விளைவிப்பதற்கு முன்பாக நோயின் தாக்கம் குறைந்த அளவில் இருக்கும் பொழுதே முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகவும் அவசியமாகும்.

எஸ்.பி.ஐ கேன்சர் இன்சூரன்ஸ் எதனால் முக்கியம்?

முன்பே குறிப்பிட்டப்படி, புற்றுநோயானது முன்பே கணிக்க முடியாத அரிதான நோயாகும். மேலும், புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கு செல்லும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்றுநோய் மருத்துவமனைகள் மிகவும் விலை உயர்ந்தவை. புற்றுநோய் சிக்கலான மருத்துவ உபகரணங்களையும், விலையுயர்ந்த மருந்துகளையும் கொண்ட ஒரு விலையுயர்ந்த நோயாகும். எனவே, மிக விரைவாக புற்றுநோய் காப்பீடு(கேன்சர் இன்சூரன்ஸ்) மூலம் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது, அவசரமானதாகும்.

எஸ்.பி.ஐ கேன்சர் இன்சூரன்ஸ் : சம்பூர்ன் கேன்சர் சுரக்சா

முன்பே குறிப்பிட்டப்படி, புற்றுநோயானது முன்பே கணிக்க முடியாத அரிதான நோயாகும். மேலும், புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கு செல்லும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்றுநோய் மருத்துவமனைகள் மிகவும் விலை உயர்ந்தவை. புற்றுநோய் சிக்கலான மருத்துவ உபகரணங்களையும், விலையுயர்ந்த மருந்துகளையும் கொண்ட ஒரு விலையுயர்ந்த நோயாகும். எனவே, மிக விரைவாக புற்றுநோய் காப்பீடு மூலம் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது, அவசரமானதாகும்.

  • ஆறு வயதில் இருந்து அறுபது வயதுக்கு இடைப்பட்ட எந்தவொரு தனி நபருக்கும் கேன்சர் இன்சூரன்ஸ் பாலிசிகள் கிடைக்கின்றன. அதிகபட்ச முதிர்வு வயது எழுபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகும்.
  • சம்பூர்ன் கேன்சர் சுரக்சா பாலிசியைப் பொறுத்தவரையில், அடிப்படையில் ஐந்து ஆண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் வரையிலான பாலிசிக் காலவரை கொண்டிருக்கும் தொடர்ச்சியான பிரிமீயம் தொகை செலுத்துவது தொடர்பானதாகும். இதில், குறைந்தப்பட்ச உறுதித் தொகை ரூபாய் 10 லட்சம், அதிகப்பட்ச உறுதித் தொகை ரூபாய் 50 லட்சம்.
  • சம்பூர்ன் கேன்சர் சுரக்சா பாலிசியில் சம்பந்தப்பட்ட நபர் பெறும் பிற நன்மைகள் என பார்த்தால், வாடிக்கையாளர்கள் தங்களின் மொத்த தொகையில் 120% தொகையை பெற முடியும் என்பதை குறிப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சம்பந்தப்பட்ட பாலிசிதாரர் ஒவ்வொரு படிநிலையை சார்ந்து ஒட்டு மொத்த தொகையைப் பெறுவதில் பயனடையலாம், இந்த தொகை 30% முதல் 150% வரை உறுதிப்படுத்தப்படும். இந்த அம்சம் தேர்வு செய்யப்படும் பொழுது நோய் கண்டறியும் கட்டத்தில் கணக்கிடப்படும்.
  • இதைத் தவிர, சம்பந்தப்பட்ட பாலிசிதாரர்கள் மாதாந்திர வருமான ஆதாயமாக ஆரம்பக் காலத்தில் தேர்வு செய்த உறுதி தொகையில் 40% பெறலாம். மீதமுள்ளவை புற்றுநோயின் முக்கிய கட்டத்தின் கீழ் மொத்த தொகையின் நன்மையைப் பெறும் வகையில் குவிந்து இருக்கும்.
  • பிரிவு 80D என்ற விதிமுறைகளின் கீழ் கேன்சர் இன்சூரன்ஸ் பாலிசிகள் வரி சலுகைகளையும் உறுதிப்படுத்துகிறது.

சம்பூர்ன் கேன்சர் சுரக்சாவின் பிற முக்கிய அம்சங்கள் : விவரமாக

  • புற்றுநோயின் முதல் கட்ட நிலையில் பரிசோதனைகள் செய்யும் பொழுது, உறுதிச் செய்யப்பட்ட மொத்த தொகையில் முப்பது சதவீத தொகையைப் பெறுவதன் முக்கியத்துவம் முக்கியமாக குறித்துக் கொள்ள வேண்டியதாகும்.
  • சம்பூர்ன் கேன்சர் சுரக்சாவின் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், இது மிகவும் குறைந்த அளவிலான பிரீமியம் தொகையக்கு வாக்குறுதி அளிக்கிறது. மாதாந்திர குறைந்தப்பட்ச பிரீமியம் தொகை ரூ.50 அல்லது வருட அடிப்படையில் ரூ.600 ஆகும். இந்த பிரீமியம் அளவுகள் பாலிசியில் நுழையும் வயதுடன் இணைக்க்கப்பட்ட தொகையின் அடிப்படையில் அமைந்து இருக்கும்.
  • புற்றுநோயின் அனைத்து மூன்று நிலைகளும் சம்பூர்ன் கேன்சர் சுரக்சாவால் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில், தீவிரம், சிறிய மற்றும் முன்கூட்டியே உள்ளிட்ட நிலைகள் அடங்கும்.
  • இந்த அம்சங்களைத் தவிர, சம்பூர்ன் கேன்சர் சுரக்சா பிரீமியம் தொகை செலுத்தும் எளிதான நான்கு வழிகளை வழங்குகிறது. ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் ஒரே மாதிரியாக பணத்தை செலுத்தக் கூடிய வசதி இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, எஸ்.பி.ஐ தன் பிரீமியம் கொள்கைகளை மக்களுக்கு இன்னும் இணக்கமானதாக ஆக்கிக் கொண்டது. பாலிசியில் தேவையான தொகையை செலுத்த நான்கு விருப்பங்கள் கொடுக்கப்படுகிறது, அவை மாதந்தோறும், அரையாண்டு, கால் ஆண்டு அல்லது ஆண்டிற்கு ஒருமுறை என்பதாகும். சம்பந்தப்பட்ட பாலிசிதார் தனது விருப்பத்தின்படி, மேலே குறுப்பிட்ட எந்தவொரு விருப்பத்திலும் கவனம் செலுத்த முடியும். மேலும், பாலிசி எடுக்கும் ஆண்/பெண் கூடுதல் கட்டணம் இன்றியும் எந்த நேரத்திலும் பணம் செலுத்தும் காலத்தை மாற்றிக் கொள்ள முடியும்.  
  • சம்பூர்ன் கேன்சர் சுரக்சா பாலிசியில் இருக்கும் சுவாரஸ்யமான அம்சம் என்றால் ஆன்லைன் மூலம் வாங்கினால் பாலிசி 5% தள்ளுபடியை வழங்குகிறது.
  • ஆறு வயது முதல் அறுபத்து ஐந்து வயதுக்கு இடைப்பட்ட எந்தவொரு நபராக இருந்தாலும் எஸ்.பி.ஐ கேன்சர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கலாம் என்பது முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது. மேலும், இன்சூரன்ஸ் பாலிசி ஆனது சம்பந்தப்பட்ட பாலிசித்தாரர் எழுபத்தி ஐந்து வயதை அடையும் பொழுது முதிர்வு அடைகிறது.
  • சம்பூர்ன் கேன்சர் சுரக்சா பாலிசியில் குறிப்பிடப்பட வேண்டியவையில் மிகவும் போற்றத்தக்கது என்னவென்றால், இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு முன்பாக ஒருவர் மருத்துவ சோதனைகளை மேற்கொள்ள தேவையில்லை என்பதாகும். பொதுவாக சந்தையில் பேசப்படுவதில், ஒரு பாலிசியை வாங்குவதற்கு முன்பாக பாலிசிதாரர் முதன் முதலாக ஒரு குறிப்பிட்ட மருத்துவ சோதனை மையத்தில் ஒரு குறிப்பிட்ட மருத்துவ சோதனைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. விதிகளின் படி, மருத்துவ சோதனைகளின் முடிவைப் பொறுத்து பாலிசியின் முடிவு நிறுத்தப்படும் அல்லது ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால், எஸ்.பி.ஐ இன்சூரன்ஸ் பாலிசி இதுபோன்ற எந்தவொரு செயலையும் செய்வது இல்லை. இது சம்பந்தப்பட்ட பாலிசிதாரருக்கு தொந்தரவு இல்லாத செயல்முறையை உறுதிச் செய்கிறது.
  • சம்பூர்ன் கேன்சர் சுரக்சாவில் இருக்கும் முதலீட்டாளர் யாராக இருந்தாலும் அவர் இந்திய வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி நன்மை பெறுவதற்கு தகுதி உடையவராவர் என்பது இதில் இருக்கும் மிகவும் பயனுள்ள மற்றொரு அம்சமாகும்.
  • எஸ்.பி.ஐ லைப் இலவச புற்றுநோய் மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறது. பொதுவாக பேசப்படுவதில், தனியார் மருத்துவர்கள் மூலம் வழங்கப்படும் இரண்டாம் முறை ஆலோசனைக் கருத்துக்கள் வழக்கமாக மிகப்பெரிய கட்டணத்துடன் இருக்கும். ஆனால், சம்பூர்ன் கேன்சர் சுரக்சா ஆனது புற்றுநோய் மற்றும் சிட்டுவின் கார்சினோமாவிற்கான இரண்டாம் முறை கருத்துக்களை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. கூடுதலாக, தேவையான சிகிச்சைத் திட்டமானது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் குழுவினால் பாலிசிதாரருக்கு பரிந்துரை செய்யப்படும். உலகின் முன்னணி மருத்துவ மையங்களில் இருந்தும் கூட சில பயனுள்ள ஆலோசனைக் கருத்துக்களில் இருந்து காப்பீடு செய்துக் கொண்ட நபர் பயனடைவார்.
  • எஸ்.பி.ஐ மூலம் ஃப்ரீ லுக் ஆப்ஷன் என அழைக்கப்படும் ஒன்று வழங்கப்படுகிறது. பொதுவாக கூறப்படுவதில், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் நுண்ணிய நுணுக்கங்களை சில நேரங்களில் சம்பந்தப்பட்ட பாலிசிதாரர் தவறவிட்டது உண்டு. கவனிக்கப்படாத அம்சங்கள் எதிர்காலத்தில் புத்துயிர் பெற்று மேற்பரப்பில் வந்து இருக்கலாம். ஆகையால், பாலிசி எடுக்கும் ஆண்/பெண் குறிப்பிட்ட புள்ளியில் திருப்தி அடையவில்லை என்றால் பாலிசியை திருப்பி அளிக்க வாடிக்கையாளருக்கு எஸ்.பி.ஐ 15 முதல் 20 நாட்கள் அவகாசம் அளிக்கிறது. இருப்பினும், திருப்பி அளிப்பதற்கான சரியான காரணத்தை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.