கார் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

கார் காப்பீட்டு பிரீமியத்தை ஒப்பிடுக

அல்லது

கார் இன்சூரன்ஸ் என்பது திருட்டு, கொள்ளை மற்றும் மூன்றாம் தரப்பு பொறுப்பு போன்ற வடிவங்களில் வாகனத்திற்கு எதிராக ஏற்படும் சேதங்களில் இருந்து வாகனத்திற்கு தேவைப்படும் நிதி சார்ந்த பாதுகாப்பினை வழங்கும் ஓர் இன்சூரன்ஸ் திட்டமாகும். சரி, நாம் இந்தியாவில் இருக்கும் உண்மை பற்றிய விழிப்புணர்வு அடைய வேண்டும். நீங்கள் வாகன இன்சூரன்ஸ் ப்ளான் இல்லாமல் இந்திய சாலைகளில் பயணித்தால் அபராதத்தை செலுத்த வேண்டி இருக்கும். கார் இன்சூரன்ஸ் என்பது சட்டபூர்வமான பொறுப்பு, உடல்ரீதியான சேதங்கள், உடற் காயங்கள், போக்குவரத்து மோதல்கள் போன்றவற்றை உள்ளடக்கிய  நிதிசார்ந்த அவசர நிலையில் வாகனத்திற்கான பாதுகாப்பினை வழங்கும் சிறந்த இன்சூரன்ஸ் திட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது. தேவையான நேரத்தில் நிச்சயம் உதவக்கூடிய வகையில் கார் இன்சூரன்ஸ் பல்வேறு நன்மைகள் மற்றும் தேவையான அம்சங்களை கொண்டிருக்கிறது.

கார் இன்சூரன்ஸ் பாலிசியின் உதவியுடன், விபத்து, திருட்டு, தீ, வெடிப்பு, தானாக பற்றிக் கொள்ளுதல், கலவரங்கள், பயங்கரவாத செயல்கள், ரயில், சாலை, விமானம் & எலிவேட்டர் மூலமான போக்குவரத்து மற்றும் இயற்கை பேரழிவுகள் (நிலநடுக்கம், வெள்ளம் மற்றும் பல) மூலம் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் அல்லது இழப்புகளுக்கு எதிராக தேவைப்படும் பாதுகாப்பினை பாலிசிதாரர் பெற முடியும்.    

 1. இது மூன்றாம் தரப்பு காயங்கள் அல்லது மரணம் அல்லது உடைமைகளுக்கு ஏற்படும் சேதங்கள் ஆகியவற்றிக்கான அனைத்து நிதிசார்ந்த பொறுப்புகளுக்கு எதிராக தேவைப்படும் பாதுகாப்பினை வழங்கவும் செய்கிறது.
 2. தனிப்பட்ட விபத்துக்கள் கூட பல்வேறு கார் இன்சூரன்ஸ் கீழ் வருகின்றன.

இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் வைத்து இருப்பது கட்டாயமாகும். எனவே, அதனை புத்திசாலித்தனத்துடன் தேர்வு செய்வது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இப்பொழுதெல்லாம், கார் இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்யும் போது ஒரு நபரால் நன்கு ஆராயக் கூடிய எண்ணற்ற விருப்பங்கள் இருக்கின்றன. ஆன்லைனில் நிறுவனங்களுக்கு என்று சொந்தமாக இருக்கும் இன்சூரன்ஸ் தளங்கள் மூலம் வாடிக்கையாளர் தனக்கு பொருந்தக்கூடிய இன்சூரன்ஸ் ப்ளான்-ஐ வாங்குவது மிகவும் எளிதாகி விட்டது.

சிறந்த கார் இன்சூரன்ஸ் திட்டங்கள் பலவிதமான நன்மைகள் மற்றும் அம்சங்களை வழங்குகிறது. ஆன்லைன் மூலம் முதலீடு செய்வதன் மூலம் மக்கள் கார் இன்சூரன்ஸில் பணத்தினை சேமிக்க முடியும். இங்கே PolicyX.com இல், நாங்கள் சிறந்த தள்ளுபடிகளை வழங்கி வருகிறோம். அதன்மூலம் நீங்கள் கார் இன்சூரன்ஸில் எளிதாக அதிக தொகையை சேமிக்க முடியும்.

இந்தியாவில் உள்ள கார் இன்சூரன்ஸ் பாலிசிகளின் வகைகள்

இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் ஆனது அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட இரு வெவ்வேறான வடிவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

 1. மூன்றாம் தரப்பு பொறுப்பு கவரேஜ் 

உங்களின் மூலம் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதங்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்கு உரித்தான இன்சூரன்ஸ் செய்தவரின் பொறுப்பின் கீழ் இருக்கும் வழியினை அடிப்படையாகக் கொண்டு மூன்றாம் தரப்பு பொறுப்பு(தர்டு பார்ட்டி லியபிலிட்டி) பாதுகாப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தரப்பு பொறுப்பு பாதுகாப்பு என்பது பாலிசிதாரருக்கு ஏற்படும் சேதங்கள் அல்லது இழப்புகள் ஆகியவற்றின் பாதுகாப்பிற்கு(கவர்) பொறுப்பாகாது. இது மோட்டார் வாகன சட்டம் 1988 கீழ் பாதுகாக்க குறைந்தப்பட்ச அபாயங்களை கவனித்துக் கொள்ளவதை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய சட்டத்தின் படி, ஒவ்வொரு கார் உரிமையாளரும் ஒரு மூன்றாம் தரப்பு பொறுப்பு இன்சூரன்ஸ் வைத்து இருப்பது கட்டாயமாகும்.

மூன்றாம் தரப்பு பொறுப்பு இன்சூரன்ஸ் மேற்கோள்கள்(கோட்ஸ்) ஆனது கீழே உள்ளதை உள்ளடக்கிய சில கூறுகளின் கலவையாகும்.

 • மூன்றாம் தரப்பு பிரீமியம்
 • தனிப்பட்ட விபத்து உரிமையாளர், டிரைவர் கவர்
 • சரக்கு மற்றும் சேவை வரி

எப்பொழுது மூன்றாம் தரப்பினருக்கான அடிப்படை பிரீமியம் தொகையுடன் வருகிறோ, அவை வழக்கமாக கியூபிக் கேபாசிட்டியை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். ஐ.ஆர்.டி.ஏ ஒவ்வொரு ஆண்டும் இந்த விகிதத்தை திருத்தி அமைக்கிறது.

 1. விரிவான பாதுகாப்பு

விரிவான பாதுகாப்பு(கவரேஜ்) என்பது கார் இன்சூரன்ஸில் மிகப் பயனுள்ள வடிவமாகும். இந்த வடிவிலான பாதுகாப்பு, இன்சூரன்ஸ் செய்தவர் மற்றும் மூன்றாம் தரப்பு பொறுப்பு ஆகிய இரண்டிற்கும் பாதுகாப்பு வழங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், மூன்றாம் தரப்பு பொறுப்பு பாதுகாப்பு என்ற அடிப்படை பாதுகாப்பை மட்டும் பெறுவதில்லை, மேலும் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தையும் உள்ளடக்கிய ஓர் முழுமையான பாதுகாப்பினையும் அளிக்கிறது. இது இன்சூரன்ஸ் செய்யப்பட்ட கார் மற்றும் மூன்றாம் தரப்பு பொறுப்பிற்கும் கூட அதிகபட்ச செலவினங்களுக்கு எதிராக பாதுகாப்பினை வழங்குகிறது.

அதேபோல், இயற்கை பேரழிவுகள், விபத்துக்கள், திருட்டு, தீ மற்றும் இன்னும் பல காரணங்களால் காரில் ஏற்படக்கூடிய இழப்புகள் அல்லது சேதங்களுக்கு எதிராகத் தேவைப்படும் நிதிசார்ந்த பாதுகாப்பினை இன்சூரன்ஸ் செய்தவர் பெற முடியும். இது கூடுதலான நன்மைகளை கொண்ட ஒரு முழுமையான கார் இன்சூரன்ஸ் திட்டமாகும். ஒரு விரிவான பாதுகாப்பினை(கவர்) நோக்கி செல்வதே எப்பொழுதும் அறிவுறுத்தப்படுகிறது. இது பல பயனுள்ள நன்மைகளுடன் அதிகபட்ச விசயங்களுக்கு எதிராக தேவைப்படும் பாதுகாப்பினை வழங்குகிறது.

நீங்கள் விருப்பமானதை தேர்வு செய்யும் போது கவரை(பாதுகாப்பு) முழுமையாக சரிபார்த்தல் மிக முக்கியமாகும். பிரீமியம் தள்ளுபடிகளுடன் நீங்கள் சேர்த்துக் கொள்ள விரும்பும் சிறப்பு அம்சங்களுக்காக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. PolicyX.com ஆனது சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வதில் உங்களுக்கு உதவிட சரியான தளமாகும். அதேபோல், கார் இன்சூரன்ஸ் பாலிசிகளின் அம்சங்கள், நன்மைகள், உள்ளடக்கம் என கிடைக்கும் பலவற்றை அடிப்படையாக வைத்து நீங்கள் எளிதாக ஒப்பீடு செய்யலாம் மற்றும் அதற்கேற்ப சிறந்த ப்ளான்-ஐ தேர்வு செய்யலாம்.

விரிவான கவரேஜ்க்கான மேற்கோள்கள் ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ள சில கூறுகளின் தொகையாகும்.

 • மூன்றாம் தரப்பு பிரீமியம்
 • சொந்த சேதங்களுக்கான பிரீமியம்
 • தனிப்பட்ட விபத்து உரிமையாளர், ஓட்டுனர் கவருக்கான பிரீமியம்
 • கூடுதலான கவரேஜ்கள்(ஆட் ஆன்ஸ்)
 • சரக்கு மற்றும் சேவை வரி

அடிப்படையில், உங்களின் கார் இன்சூரன்ஸ் ப்ளான்-கான பிரீமியம் தொகை ஆனது இன்ஷூர்டு டிகலர்டு வல்யூ(ஐ.டி.வி) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இதில், ஐ.டி.வி(IDV) அதிகரித்தால் பிரீமியம் அதிகரிக்கும், அதேபோல் ஐ.டி.வி ஆனது குறைந்தால் பிரீமியம் குறையும்.

கார் இன்சூரன்ஸின் நன்மைகள்

கட்டாயமாக்கப்பட்ட அம்சங்களை கொண்டிருப்பதை தவிர, கார் இன்சூரன்ஸ் உங்களுக்கான பல நன்மைகளை பரவலாகக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவில் உள்ள கார் உரிமையாளர்களுக்கான சிறந்த தயாரிப்புக்களை உருவாக்கும் வழிகளுக்கு உதவுகிறது. அவற்றில் சில நன்மைகள் பின்வருமாறு,

இழப்புகள் அல்லது சேதங்களுக்கு எதிரான கவர்

விபத்துக்கள், தீ, திருட்டு, தானாக பற்றிக் கொள்ளுதல், வெடித்தல், வன்முறை, பயங்கரவாத செயல்கள் அல்லது இயற்கை பேரழிவுகள் உள்ளிட்ட நிலைகளில் ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு எதிரான கவரேஜ் ஆகும்.

தனிப்பட்ட விபத்து கவர்

மூன்றாம் தரப்பினரின் இறப்பு அல்லது காயங்கள் அல்லது வாகனத்தின் சேதங்கள் போன்றவை மூலம் ஏற்படும் நிதி ரீதியான பொறுப்பிற்கு எதிரான கவர்.

கூடுதல் கவர்

இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் ஆனது ஏற்கனவே இன்றியமையாத ஒன்றாக உள்ளது, சட்டத்தின் கட்டாயத்தால் மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகளைக் கொண்டிருப்பதாலும் அவசியமாகிறது. அடிப்படையில், கார் இன்சூரன்ஸ் பாலிசி ஆனது வாகன திருட்டு, விபத்து, தீ, வெடிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்புகளுக்கும் எதிராக தேவைப்படும் பாதுகாப்பினை வழங்குகிறது. நீங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் முதலீடு செய்வது உங்கள் சொந்த வாகனத்தின் பாதுகாப்பிற்கானது. உங்களால் ஏற்படும் விபத்தின் போது அதிக அளவிலான தொகையை உங்கள் பையில் இருந்து இழப்பீடாக வழங்குவதில் இருந்து உங்களை மூன்றாம் தரப்பு பொறுப்பு கவர் பாதுகாக்கிறது. ஆனால், அதற்கேற்ப இருக்கும் பல்வேறு நன்மைகள் யாவை என்பதை நீங்கள் ஆராய வேண்டும் ? கார் இன்சூரன்ஸ் உங்களுக்கு வழங்குவதை பற்றி ஆராய்ந்து பார்ப்போம்.

பூஜ்ஜிய தேய்மானம் கவர்

நீங்கள் பூஜ்ஜிய தேய்மான கவருக்காக சென்றால், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து குறைபாடுள்ள பகுதியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அசல் பாகத்திற்கான செலவை பெறுவதற்கு நீங்கள் பொறுப்பாக இருப்பீர்கள். வழக்கமாக, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 2 முதல் 3 ஆண்டுகளான கார்களுக்கு இந்த பயனுள்ள கூடுதலான இணைக்கப்படும் பாதுகாப்பினை வழங்குகின்றன. இந்த கூடுதலாக இணைக்கப்பட்ட பாதுகாப்பின் நன்மைகளை பெறுவதற்கு நீங்கள் கூடுதலாக பணம் செலுத்த வேண்டி இருக்கும்.

நோ க்ளைம் போனஸ்

உங்களின் பாலிசி காலத்தில் எந்தவொரு க்ளைம் தாக்கலும் செய்யவில்லை என்றால், உங்கள் பாலிசி புதுப்பித்தல் நேரத்தில் உங்களுக்கென்று தள்ளுபடிகள் கிடைக்க தகுதி பெறுவீர்கள். அந்த தள்ளுபடிகளே நோ க்ளைம் போனஸ் என அழைக்கப்படுகிறது. பிரீமியம் செலுத்துவதில் அதிக பணத்தை சேமிக்க இத்தகைய தள்ளுபடிகள் அதிகம் உதவுகின்றன.

சாலையோர உதவி

மிகவும் பயனுள்ள சார் இன்சூரன்ஸ் பாலிசி உடன், கூடுதல் இணைக்கப்பட்ட பாதுகாப்பின் வடிவில் கிடைக்கும் பல்வேறு வடிவிலான உதவியில் விருப்பமானதை நீங்கள் பெற முடியும்.  இந்த நன்மைகள் அவசர போக்குவரத்திற்கு, டெய்லி அலவன்ஸ், பேட்டரி நின்று விட்டால், டாக்ஸி நன்மைகள், இழுத்து செல்லும் வசதிகள், கார் ஓடிக் கொண்டு இருக்கும் போது எரிபொருள் வெளியேறிய நேரத்தில் உதவி, இலவச திட்டங்கள் மற்றும் இன்னும் பல சூழ்நிலையில் உதவுகிறது. தேவையற்ற சூழ்நிலைகளில் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இந்த சிறிய அளவிலான விசயங்கள் உங்களுக்கு திறம்பட உதவுகின்றன.

இன்வாய்ஸ் கவர்

இது பொதுவாக விலைப்பட்டியல்(இன்வாய்ஸ்) கவர்க்கு திருப்பி அளித்தல் என அறியப்படுகிறது. அடிப்படையில் இந்த கூடுதலாக இணைக்கப்பட்ட பாதுகாப்பு (ஆட் ஆன் கவர்), விபத்தின் காரணமாக காரில் எந்தவொரு சேதங்கள் ஏற்படுவதன் காரணமாக முழுமையான இழப்பு ஏற்படும் நேரத்தில் பாலிசிதாரருக்கு உதவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காரின் மிகக்குறைந்த மதிப்பை இன்சூரன்ஸ் செய்தவருக்கு வழங்குவர். ஆனால், இணைக்கப்பட்ட கவரேஜ் (ஆட் ஆன் கவரேஜ்) உதவி உடன், நீங்கள் புதிய காரினை வாங்குவதில் உதவியாக இருக்கும் தொகையை பெறுவீர்கள்.

மாற்றிக்கொள்ளுதல் கவர்

திட்டத்தின் இத்தகையை அம்சமானது, உங்கள் காரின் சாவியை தொலைத்து விட்டால் உங்களுக்கு உதவிடும். அதனை மாற்றிக் கொள்வதற்கான செலவுகளை இந்த அம்சம் கவர் செய்து இருக்கும். மேலும், புதிய பூட்டை வாங்கிக் கொள்வதற்கும் கவரேஜ் வழங்குகிறது. பொதுவாக இன்சூரன்ஸ் செய்தவர், பாலிசியின் முழு காலத்திலும் ஒருமுறை இந்த திட்டத்தின் நன்மையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆன்லைனில் கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதன் நன்மைகள்

ஆன்லைனில் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் முதலீடு செய்வது மிகவும் வசதியான மற்றும் பயனுள்ள இடை நிலையாகும் . இன்றைய நாட்களில், இன்சூரன்ஸ் பாலிசி வாங்குதலில் முழு செயல்முறையையும் எளிதாக்க, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல்வேறு புதுமையான யோசனைகளை வெளியிட்டிருக்கின்றன. கார் இன்சூரன்ஸ் பாலிசியில் முதலீடு செய்வது கீழ் காணும் பலவேறு நன்மைகளை கொண்டிருக்கிறது.

எளிதாக அணுகக்கூடியது

ஆன்லைன் ஊடகத்தின் வழியாக, எந்த இடத்தில் இருந்தும் இணையதளம் மற்றும் செயலியை இலவசமாக அணுக முடியும். உங்களிடம் இன்டர்நெட் இணைப்பு இருந்தால் உங்களுக்கு இடம் மற்றும் நேரம் ஏதும் தடையில்லை. அதேபோல், உங்கள் வீட்டில் இருந்தே எந்தவொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தளத்தையும் பார்வையிடலாம் மற்றும் எளிதில் பயனுள்ள திட்டத்தை வாங்க முடியும். மேலும், பாலிசி திட்டங்களை ஒப்பீடு செய்ய ஆன்லைன் இன்சூரன்ஸ் வெப் அக்ரிகேட்டர் உதவியை பெறலாம் மற்றும் அனைத்தில் இருந்தும் சிறந்த ஒன்றை பெற முடியும்.

எளிதானது, தொந்தரவு இல்லா மற்றும் குறைவான நேரம் எடுக்கும்

இன்சூரன்ஸ் வாங்குவதில் உள்ள முழு செயல்முறையும் மிகவும் எளிதாகி விட்டது. நீங்கள் எந்த நேரத்திலும் உள் நுழையலாம் மற்றும் உங்களின் கொள்முதலை(வாங்குதல்) மேற்கொள்ளலாம். இன்சூரன்ஸ் வாங்குதலில் உள்ள முழு செயல்முறையும் தொந்தரவு இல்லாதது மற்றும் ஆஃப்லைன் இன்சூரன்ஸ் பாலிசியை ஒப்பீடும் போது மிகக்குறைந்த நேரத்தையே எடுத்துக் கொள்கிறது. இதற்கு குறைந்த அளவிலான ஆவணங்கள் மட்டுமே தேவைப்படுகிறது மற்றும் நீங்கள் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

பல்வேறு விருப்பங்களை ஒப்பிடலாம்

ஆன்லைன் தளத்தில், இந்தியாவில் உள்ள டாப் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு ப்ளான்களை நீங்கள் ஒப்பீடு செய்ய முடியும். உங்களின் தேவைகள், பாதுகாப்பு, பட்ஜெட் உள்ளிட்டவையை அடிப்படையாக கொண்டு இன்சூரன்ஸ் திட்டங்களை நீங்கள் ஒப்பீடு செய்யலாம். ஆன்லைனில் உங்களின் தேவைக்கு ஏற்ப சிறந்த இன்சூரன்ஸ் திட்டங்களை தேர்வு செய்யும் சுதந்திரத்தை அடிப்படையாகவே நீங்கள் பெற முடிகிறது.

மலிவான விலை மற்றும் குறைந்த ஆவணங்கள்

நீங்கள் ஆன்லைனில் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் முதலீடு செய்யும் பொழுது, ஆஃப்லைன் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் நீங்கள் குறைந்த விலையில், அதேநேரத்தில் எளிதாகவும் வாங்க முடியும். மேலும், ஆன்லைன் வழியாக கார் இன்சூரன்ஸ் வாங்கும் நபர்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியத்தில் குறிப்பிட்ட தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில், பேப்பர்கள் இல்லாத ஆவணமாக்கம் நடைபெறுவதால் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செலவினங்களும் குறைவதால் ஆன்லைன் பாலிசி வாங்கும் போது பிரீமியத்தில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

உடனடியான பிரீமியம் கணக்கிடுதல் மற்றும் ஒப்புதல்

இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் என்கிற பெயரின் மூலம் பிரபலமான பில்ட்-இன்-டூல் உடன் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வருகின்றன. இன்சூரன்ஸ் செய்யும் நிறுவனம் சில அடிப்படை தகவல்களை நிரூபிக்க வேண்டும் மற்றும் பிறவற்றை கால்குலேட்டர் பார்த்துக் கொள்ளும். உங்களின் க்ளைம்-க்கு எளிதில் ஒப்புதல் அளிப்பதற்கு வழங்கப்பட்ட தகவல்களை எந்த நேரத்திலும் இன்சூரன்ஸ் நிறுவனம் சரிபார்க்க செய்வர்.

கார் இன்சூரன்ஸில் உள்ள உள்ளடக்கம் மற்றும் விலக்குகள்

உள்ளடக்கம்

விலக்குகள்

விபத்துகள் நிகழும் போது உங்கள் வாகனத்தில் ஏற்படும் அனைத்து சேதங்களுக்கும் பாதுகாப்பு வழங்கும்.

மது போதையில் வாகனத்தை இயக்கும் போது ஏற்படும் விபத்தில் வாகனத்தில் ஏற்படும் சேதங்கள்.

ஒருவேளை விபத்தில் இறப்பு அல்லது நிரந்தர இயலாமையின் போது தனிப்பட்ட விபத்து பாதுகாப்பு கிடைக்க உத்திரவாதம்

போர் அல்லது அணுசக்தி அபாயங்களின் போது ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்கள்

வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் பல

இயற்கை பேரழிவுகளுக்கு எதிராக நிதி ரீதியான பாதுகாப்பு

சட்டவிரோத நடவடிக்கையில் உங்கள் காரை உபயோகிக்கும் போது ஏற்படும் விபத்து சேதங்கள்

ஒருவேளை திருட்டு நிகழ்ந்தால், இன்சூரன்ஸ் நிறுவனமானது உங்கள் வாகனத்தின் ஐடிவி-க்கு நிகரான தொகையை அளிக்கும்.

சரியான ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனத்தை இயக்கும் பொழுது ஏற்படும் இழப்புகள்

வன்முறை, போராட்டம், தீ விபத்து, பயங்கரவாதம் போன்ற மனிதனால் உருவாக்கப்படும் ஆபத்துகளுக்கும் கவர் செய்யப்படும்.

வாகன பாகத்தின் தொடர்ச்சியான தேய்மானங்கள் காரணமாக ஏற்படும் வழக்கமான மெக்கானிக்கல் செலவுகள்.

கார் இன்சூரன்ஸ் கீழ் நீங்கள் என்ன பெற முடியும் - உள்ளடக்கம்

மூன்றாம் தரப்பு பொறுப்பிற்கு எதிரான பாதுகாப்பு

இது விபத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பு வாகனத்தை இயக்கிய நபருக்கு ஏற்படும் உடல் இயலாமை அல்லது காயம்/இறப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்றாம் தரப்பு சேதங்களுக்கு அளிக்கும் இழப்பீடுகளுக்கு எதிரான நிதி இழப்பை கவர் செய்கிறது.

தனிப்பட்ட விபத்துக்கு எதிரான கவரேஜ்

வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள் அல்லது மனிதனால் உருவாக்கப்படும் ஆபத்துக்களின் காரணமாக ஏற்படும் இழப்புகள் அல்லது உருவாகும் சேதங்கள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் விரிவான கார் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கவர் செய்யப்படுகிறது. இடி, மின்னல், புயல், சூறாவளி, வெள்ளப்பெருக்கு, பெருங்காற்று, புயல், உறைபனி, பனிப்புயல், பறைச்சரிவு, நிலச்சரிவு உள்ளிட்ட முக்கிய இயற்கை அழிவுகள் காரணத்தை உள்ளடக்கி உள்ளது. மேலும், மனிதனால் உருவாக்கப்படும் ஆபத்துக்களான கொள்ளை, திருட்டு, வன்முறை, போராட்டம், வெளிப்புற வாகனத்தால் ஏற்படும் விபத்துக்கள், தீங்கிழைக்கும் செயல்கள், பயங்கரவாத நடவடிக்கை மற்றும் ரயில், விமானம், உள்ளூர் நீர்வழி பயணம்,லிப்ட், எலிவேட்டர் போன்றவையில் கொண்டு போகும் போது ஏற்படும் சேதங்கள் கூட பாலிசி அக்ரிமென்ட்டில் உள்ளடங்கி உள்ளது.

கூடுதலான கவரேஜ்

அடிப்படை சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கான பாதுகாப்பை தவிர, பல பாலிசிகள் வாகனத்திற்கு தேவைப்படும் பிற வகையான உதவிகளுக்கும் தங்களின் கவரேஜ்-ஐ நீட்டித்து வழங்குகின்றன. இருப்பினும், பாலிசியின் பிரீமியம் தொகையும் அதிகரிக்கச் செய்கிறது. பின்வரும் சில கூடுதலான நன்மைகள் அல்லது இணைக்கக்கூடியவை (ஆட்-ஆன்) ஆகியவையை தங்களின் கார் இன்சூரன்ஸ் பாலிசிக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்யலாம்.

பூஜ்ஜிய தேய்மானம் கவர்

வாகனத்தில் தேய்மானங்கள் வழக்கமாக நிகழக்கூடியது, சில ஆண்டுகளில் வாகனத்தின் மதிப்பினை தேய்மானங்கள் குறைத்து விடுகின்றன. ஆகையால், பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் பாலிசிதாரர்களை தேய்மானங்களின் இழப்புகளில் இருந்து பாதுகாக்கின்றனர் மற்றும் காரின் சேதமடைந்த பாகத்தினை பழுதுப்பார்க்க அல்லது மாற்றிக் கொள்வதன் மூலம் தேய்மானத்திற்கான தொகையை க்ளைம் செய்ய அனுமதிக்கிறது. இது வாகனத்தின் பாலிசியுடன் கூடுதல் பாதுகாப்பை இணைத்த பிறகு அதிகம் நாடிச் செல்வதில் ஒன்றாக உள்ளது.

என்சிபி வைத்திருத்தல் கவர்

என்சிபி அல்லது நோ க்ளைம் போனஸ் என்பது ஒரு ஆண்டில் பாலிசியில் இருந்து க்ளைம் தொகைக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் பாலிசிதாரருக்கு கிடைக்கும் வெகுமதி ஆகும். 5 ஆண்டுகளுக்கு வரை என்சிபி-ஐ குவித்து வைப்பதன் மூலம் ஒருவர் 50% தள்ளுபடியை பெற முடியும். எனவே, ஒரு க்ளைம் தாக்கலை மேற்கொண்ட பாலிசிதாரர் என்சிபி-ஐ பெற முடியாது. என்சிபி வைத்திருத்தல் கவர் நடைமுறைப்படுத்துவதால், குறிப்பிட்ட காலத்திற்கு என்சிபி-ல் எந்தவொரு விளைவும் இல்லாத முன் வரையறுக்கப்பட்ட வரம்புகளின் கீழ் உரிமையாளர்கள் க்ளைம் தாக்கல் செய்யலாம்.

சேதங்கள் அல்லது இழப்புகளுக்கு எதிரான கவரேஜ்

இந்த வகையான பாலிசி ஆனது விபத்து ஏற்படும் சூழ்நிலையில் இறப்பு அல்லது இயலாமை அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் காயங்கள் அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் உடைமைகளின் சேதங்களுக்கும் எதிராக பாலிசிதாரருக்கு மூன்றாம் தரப்பு பொறுப்பினை கவர் செய்யும் ஓர் விரிவான கார் இன்சூரன்ஸ் ப்ளான் ஆகும்.

சாலையோர உதவிகள்

ஒரு விரிவான கார் இன்சூரன்ஸ் பாலிசி உடன் சேர்ந்து, உங்கள் வாகனம் சிக்கிக் கொள்ளும் பொழுது அல்லது விபத்தினை சந்திக்கும் பொழுது அல்லது இயந்திரக்கோளாறு அல்லது தொலைத்தூர இடத்தின் மத்தியில் எலெக்ட்ரிக் பிரச்சனை காரணமாக நகர முடியாமல் இருக்கும் போது இத்தகைய இணைக்கப்பட்ட அம்சம் காப்பாற்றுகிறது. இது இழுத்து செல்லுதல், பேட்டரின் ஜம்ப் ஸ்டார்ட், எரிபொருள் மறு நிரப்புதல் மற்றும் மெக்கானிக் மூலம் சர்வீஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது.

டெய்லி கேஷ் அலவன்ஸ்

பாலிசிதாரர் தன் வாகனத்தை சர்வீஸ்க்கு வழங்கி உள்ள நிலையில், கார் நிறுவனம் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தை குறிப்பிட்ட காலத்திற்கு மேல் வைத்து இருக்கும் போது, பாலிசிதாரர் டெய்லி கேஷ் அலவன்ஸ் என அழைக்கப்படும் கூடுதலாக இணைக்கப்பட்ட (ஆட்-ஆன்) கவர் மூலம் போக்குவரத்துக்கு அல்லது பயணங்களுக்கான தொகையை க்ளைம் செய்ய முடியும்.

ஒரு அடிப்படை கார் இன்சூரன்ஸ் ப்ளான் கீழ் கவர் செய்யப்படாதவை

ஒரு அடிப்படையான கார் இன்சூரன்ஸ் ப்ளான் கீழ் தேவைப்படும் கவரேஜை பெறுவதற்கு உத்திரவாதம் இல்லாத சில அபாயங்கள் இங்கே உள்ளன. எனினும் சிலவற்றிற்கு எதிராக பாதுகாப்பினை பெற நீங்கள் கூடுதலாக இணைக்கப்பட்ட கவர் நோக்கி செல்லலாம்.

 • கார் அல்லது அதன் பாகத்தில் இயற்கையாக நிகழும் தேய்மானங்கள் காரணமாக ஏற்படும் மெக்கானிக்கல் செலவினங்கள் வழக்கமான தரநிலை(ஸ்டான்ட்ர்டு) திட்டத்தில் கவர் செய்யப்படாது. எனினும், பூஜ்ஜிய தேய்மானம் கவர் என்ற விருப்பம் மூலம் உங்கள் பாலிசி உடன் கூடுதலான பாதுகாப்பினை இணைத்துக் கொள்ளலாம்.
 • வழக்கமாக, காரின் எஞ்சினில் விபத்து இல்லாத போதும் ஏற்படும் கோளாறுகள் போன்றவைக்கு பாதுகாப்பு பெறுவதற்கு உத்திரவாதமில்லை. எஞ்சின் ப்ரோடேக்டர் கவர் மூலம் இதற்கான பாதுகாப்பை பெறலாம். இது விபத்து இல்லாத, எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் ப்ரேக்டவுன் எதிரான பாதுகாப்பினை வழங்குகிறது.
 • அடிப்படை கார் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் வாகனத்தில் பயணிக்கும் பயணி அல்லது வாகனத்தை இயக்கம் ஓட்டுனர் ஆகியோர் உள்ளடக்கப்படவில்லை. எனினும், தேவையான பாதுகாப்பிற்கு கூடுதலாக நீட்டிக்கப்பட்ட விபத்து கவரை இணைத்துக் கொள்ள முடியும்.
 • ஸ்டான்ட்ர்டு கார் இன்சூரன்ஸ் பாலிசி ஆனது இந்திய புவியமைப்பிற்கு மட்டுமே பொருந்தும். எனினும், ஒவ்வொரு வாகனத்திற்கும் கூடுதலாக ரூ.500  பிரீமியம் தொகையை செலுத்துவதன் மூலம் பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம் மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் நீட்டித்துக் கொள்ள முடியும். இருப்பினும், புவியமைப்பு நீட்டிப்பு ஆனது அங்கு வாழ்பவர்/மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் காயங்கள் அல்லது வாகனத்தின் சேதங்களுக்கான பாதுகாப்பில் விலக்கு அளிக்கிறது.
 • இவை எப்பொழுதும் பாலிசி ஆவணங்கள் வழியாக கவனமாக செல்லவும் மற்றும் அதில் உள்ளடக்கிய கட்டுபாடுகளை புரிந்து கொள்ளவும் அறிவுறுத்தச் செய்கிறது. இது க்ளைம் பூர்த்தி செய்யும் நேரத்தில் உதவியாக இருக்கும் மற்றும் குழப்பங்களை தவிர்க்கும் மற்றும் முழு செயல்முறையின் தெளிவான புரிதலை வழங்கும்.

ஆன்லைனில் கார் இன்சூரன்ஸ் ஒப்பீடு ஏன்?

இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் வைத்து இருப்பது கட்டாயம் என்பதை அனைவரும் அறிந்து இருப்போம். இந்தியாவில் உள்ள பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்ததில் ஈடுபட்டுள்ளனர். எனவே அதனுடன் பல விருப்பங்கள் இருப்பதால் சரியான இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது கடினமாகும். இங்கு PolicyX.com இல், பிரீமியம் மீது நீங்கள் 60 சதவீதம் வரை சேமிக்க அனுமதிக்கும் இலவச மேற்கோள்கள்(கோட்ஸ்) கிடைக்கும்.

கிடைக்கக்கூடிய இலவச மேற்கோள்கள் உதவியுடன், சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்தெடுப்பதற்கான முழு செயல்முறையையும் எளிதாக்கலாம். இது கார் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியாகும். முதலில் பல்வேறு கார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அம்சங்கள், நன்மைகள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் அனைத்து மேற்கோள்களையும் ஒப்பிடுக. இத்தகைய செயல்முறையின் வழியாக, உங்களுக்கான சிறந்த திட்டத்தை எளிதாக பெறுவீர்கள்.

மோட்டார் இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்ட போதும், விரும்பிய பட்ஜெட்டில் சிறந்த பாலிசியை பெறுவதும் அவசியம். PolicyX.com இல், சிறந்த பிரீமியம் விகிதத்தை வழங்க நாங்கள் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் கூட்டு வைத்து இருக்கிறோம். இலவச மேற்கோள்களை வழங்குவதற்கு நாங்கள் பின்பற்றும் செயல்முறை மிகவும் எளிமையானது. உங்களுக்கு தேவையானது எல்லாம் உங்களின் தனிப்பட்ட விவரங்கள், வாகனம் தொடர்பான விவரங்களை ஆன்லைன் படிவத்தில் நிரப்ப வேண்டும் மற்றும் சில படிநிலைகளிலேயே நீங்கள் சிறந்த வாகன இன்சூரன்ஸ் பாலிசியை பெறலாம். 

கார் இன்சூரன்ஸ் ஒப்பீடு பயனுள்ளது ஏன்? 

வசதியான

இது உடனடியாக டாப் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மேற்கோள்களை நீங்கள் ஒப்பீட அனுமதிப்பதன் மூலம் மிகவும் வசதியானது. சொந்தரவு இல்லை மற்றும் பயன்படுத்துவது எளிது. ஆன்லைன் இன்சூரன்ஸ் வெப் அக்ரிகேட்டர் ஆனது நீங்கள் வீட்டில் இருந்தே இருவேறு பாலிசிகளை ஒப்பீடு செய்ய அனுமதிக்கிறது.

தெளிவு

நீங்கள் ஒப்பீடு செய்வதன் மூலம் பாலிசி தொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவுப்படுத்திக் கொள்ள முடியும். மேலும், கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் சேர்த்து உங்களுக்கு சிறந்த கவர் எது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். பாலிசி எதையெல்லாம் உள்ளடக்கும் மற்றும் எது இல்லை என்பது குறித்த தெளிவை நீங்கள் பெறுவீர்கள். அது சரியான முடிவை எடுக்க உதவி புரியும்.

பல்வேறு விருப்பங்கள்

கிடைக்கும் பல்வேறு விருப்பங்கள் உடன், உங்கள் காருக்கான சிறந்த இன்சூரன்ஸ் பாலிசிக்கான விருப்பத்தை நீங்கள் உறுதி செய்யலாம். ஒப்பீடுவதன் மூலம், சந்தையில் உள்ள பல இன்சூரன்ஸ் நிறுவனங்களை பற்றி அறிந்து யார் சிறந்த பிளானை உங்களுக்கு வழங்குவார் என்பதை நன்றாக தெரிந்து கொள்ள முடியும்.

பணம் சேமிப்பு

ஆம், ஒப்பீடு செய்தவன் மூலம் கார் இன்சூரன்ஸ் வாங்கும் முழு செயல்முறையின் போது உங்களால் பணத்தை சேமிக்க முடியும். பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து இலவச மேற்கோள்களை ஒப்பிடுவது வழங்குகிறது.

வெளிப்படைத்தன்மை

ஆன்லைனில் கார் இன்சூரன்ஸ் பற்றி ஒப்பிடுவது சிறந்த யோசனையாகும், தயாரிப்புகளின்(ப்ரோடேக்ட்) தொடர்புடைய அனைத்து விவரங்கள் மற்றும் ஒவ்வொரு தெளிவையும் பெறலாம். உங்களுக்கான பிரீமியம் எவ்வளவு, இதன் கீழ் எதையெல்லாம் பெற முடியும் மற்றும் எதையெல்லாம் பெற முடியாது போன்ற முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருக்கிறது. 

புதிய கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது எப்படி? 

படி 1 : இந்த பக்கத்தின் மேலே கிடைக்கக்கூடிய மேற்கோள்கள்(கோட்ஸ்) பிரிவிற்கு செல்லவும்.

படி 2 : அடிப்படை விவரங்களை நிரப்பி இலவசமாக கார் இன்சூரன்ஸ் மேற்கோள்களை பெறுங்கள்

படி 3 : “ ப்ரோசீடு “ டப்-ஐ கிளிக் செய்யவும்

படி 4 : அம்சங்கள், நன்மைகள், கவர், வசதிகள், பிரீமியம் உள்ளிடவையை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள்களை ஒப்பிடவும்.

படி 5 : கிடைக்கக்கூடிய தள்ளுபடிகளை சரிபார்க்கவும்

படி 6 : உங்கள் தேவையுடன் பொருந்தக்கூடிய சரியான ப்ளான்-ஐ தேர்வு செய்யவும்.

படி 7 : “ பைய் “ என்ற டப்-ஐ கிளிக் செய்யவும்.

படி 8 : பல்வேறு பணம் செலுத்தும் வழிகளில் பணத்தினை செலுத்தவும்

படி 9 : பிங்கோ, நீங்கள் இன்சூரன்ஸ் செய்து விட்டீர்கள். 

சிறந்த கார் இன்சூரன்ஸ் ப்ளான்-ஐ தேர்வு செய்வது எப்படி?

கார் இன்சூரன்ஸ் என்பது அடிப்படையில் ஒப்பந்தத்தின் படி, காருக்கு ஏற்படும் சேதங்களால் உருவாகும் நிதி ரீதியான இழப்புகளுக்கு எதிராக செலுத்த வேண்டியது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கடமையாகும். இந்தியாவில் சட்டப்பூர்வமாக வாகனத்தை இயக்க மோட்டார் இன்சூரன்ஸ் ப்ளான் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கார் திருடப்படுவது அல்லது சேதமடைவது உள்ளிட்ட சூழ்நிலையில் நீங்கள் சந்திக்கும் இழப்புகளுக்கு பாதுகாப்பு வழங்கும்.

உங்கள் கார் இன்சூரன்ஸ் திட்டம் தொடர்பான பிரீமியம் தொகையானது, உங்கள் காரின் இன்சூர்டு டிக்லர்டு வல்யூ(IDV)-ஐ சார்ந்து இருக்கும். அதிக அளவில் ஐடிவி இருந்தால் பிரீமியம் தொகையும் அதிகரிக்கும். குறைந்த ஐடிவி மதிப்பு இருந்தால் பிரீமியம் தொகையும் குறைவாக இருக்கும். இது ஏற்கனவே இருக்கும் பாலிசியை புதுப்பித்தல் அல்லது வாங்குவதற்கு முன்பு அம்சங்கள் அல்லது ப்ளான்-களை ஒப்பீடு செய்ய மிகவும் முக்கியமாகும்.

PolicyX.com இல், நீங்கள் சில நிமிடங்களிலேயே இலவச மேற்கோள்களின் உதவியுடன் டாப் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசிகளை ஒப்பீடு செய்ய முடியும். இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு முன்பு நீங்கள் நிச்சயம் சரிபார்க்க வேண்டிய சில விசயங்கள் இங்கே உள்ளன. ஆட்டோ இன்சூரன்ஸ் பாலிசியானது திருட்டு, விபத்து போன்றவையால் ஏற்படும் இழப்புகளை கவர் செய்வதை முக்கியமாகக் கொண்டுள்ளது. ஒரு சிறந்த கார் இன்சூரன்ஸ் ப்ளான் மூலம் பம்பர் டூ பம்பர் கவரேஜ்-ஐ நீங்கள் பெறலாம்.

இன்றைய நாட்களில் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வாகனத்தை இழுத்து செல்லும் வசதி, தேய்மானங்கள் மற்றும் பிற மதிப்பு-சேர்க்கப்பட்ட சேவையை வழங்குகின்றன. இதனால் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் பொழுது அனைத்து விதிமுறைகள் மற்றும் கட்டுபாடுகளை சரிபார்ப்பது மிக அவசியம். பாலிசி ஆவணங்கள் வழியாக கவனமாக படிக்கவும் மற்றும் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு பல்வேறு ப்ளான்ஸ்-களை ஒப்பீடு செய்யவும். 

கார் இன்சூரன்ஸ் ப்ளான் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விசயங்கள் 

பிராண்ட்

பாலிசியை வாங்கும் பொழுது அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நன்மதிப்பை கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியம். நிறுவனத்தின் பதிவுகள் மற்றும் க்ளைம் விகிதத்தை சரிபார்க்கவும். ஒருவேளை இன்சூரன்ஸ் நிறுவனம் மோசமான க்ளைம் விகிதத்தை கொண்டு இருந்தால் வாகன இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் பொழுது நிச்சயம் அறிவுறுத்தப்படாது.

தன்னார்வ மிகுதி

வல்லுனர்களின் கூற்றுப்படி, தன்னார்வ மிகுதி(வாலின்டரி எக்செஸ்) ஆனது என்சிபி தொகையை விட குறைவாக இருந்தால் நீங்கள் அடுத்த ஆண்டிற்கு தகுதி பெறுவீர்கள்.

பாதுகாப்பு அம்சங்கள்

உங்கள் காரில் அலாரம், இம்மொபலைசர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருந்தால் நீங்கள் சிறந்த தள்ளுபடிகளை பெறுவீர்கள்.

என்சிபி

உங்களுக்கு எந்தவொரு கூடுதல் சுமையை அளிக்காத மற்றும் உங்கள் பையில் இருந்து சொந்தமாக செலுத்தக்கூடிய சூழ்நிலையில் சிறிய சேதங்கள் அல்லது இழப்புகளுக்கு க்ளைம் தாக்கல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், அதிக தொகையை செலுத்த தேவைப்படும் நேரம் போன்ற எதிர்கால தேவைக்கு என்சிபி-ஐ சேமித்து வைக்கலாம்.

நெட்வொர்க் கேரேஜ்

கார் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதன் நோக்கமானது, உங்கள் வாகனத்தில் இழப்புகள்/சேதங்கள் ஏற்படும் சூழ்நிலையில் எந்தவொரு நிதி சார்ந்த அவசர நிலைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதாகும். பெருவாரியான ஆன்லைன் நிறுவனங்கள், உங்கள் வாகனம் நெட்வொர்க் கேரேஜ் இல் பழுதுப்பார்த்தால் மட்டுமே பணமில்லாத சர்வீஸ்-ஐ வழங்குகின்றன. எனவே, அதிகளவில் நெட்வொர்க் கேரேஜ்களை தங்கள் பட்டியலில் கொண்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தை கவனிக்கவும்.

கார் இன்சூரன்ஸ் ரினியூவல்

கார் இன்சூரன்ஸ் ஆனது நீங்கள் எப்பொழுது வாகனத்தை இயக்கினாலும் கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஆவணமாகும், இல்லையென்றால் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். நீங்கள் சரியான இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருக்க மறக்க கூடாது மற்றும் அதே நேரத்தில் அந்த இன்சூரன்ஸ் பாலிசி புதுப்பித்து வைத்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் சரியான நேரத்தில் புதுப்பிக்க மறந்து விட்டால், அந்நிறுவனம் உங்களுக்கென கருணைக் காலத்தை அளிக்கலாம். எனினும், ஆன்லைன் கார் இன்சூரன்ஸ் சர்வீஸ் பயன்படுத்தி வீட்டில் இருந்தே சரியான நேரத்தில் நீங்கள் எளிதாக புதுப்பிக்க முடியும்.

புதுப்பித்தலுக்கு, நீங்கள் எந்தவொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் உதவியை பெறலாம் அல்லது எங்களிடம் கேட்கலாம், அதே உதவியை நாங்கள் அளிப்போம். ஆன்லைன் புதுப்பித்தல் செயல்முறை மிகவும் எளிதானது மற்றும் சொந்தரவு இல்லாதது. புதுப்பித்தல் நேரத்தில், நீங்கள் ஏற்கனவே உள்ள இன்சூரன்ஸ்-ஐ புதுப்பிக்க முடியும் அல்லது பெயர்வுத்திறன்(போர்ட்டபிலிட்டி) செல்லலாம். அதே சமயத்தில், ஏற்கனவே இருக்கும் நன்மைகள் மற்றும் போனஸ்கள் உடன் புதிய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உங்கள் காரை இன்சூரன்ஸ் செய்ய முடியும்.

ஆன்லைனில் ரினியூவ் செய்வது எப்படி?

 1. எங்களின் கார் இன்சூரன்ஸ் பக்கத்திற்கு செல்லவும்
 2. உங்களின் காரின் பிராண்ட், மாறுபாடு, ஆர்டிஓ குறியீடு, பதிவு செய்த ஆண்டு உள்ளிட்ட சில அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்யவும்.
 3. மேற்கோள்களை சரிபார்க்க மற்றும் உங்கள் தேவைகளுடன் செல்லக்கூடியது என நினைப்பதை பெறவும்.
 4. எங்களின் வல்லுநர் குழுவிடம் தனிப்பட்ட உதவிகளை நீங்கள் கேட்கலாம்.

ஆன்லைன் கார் இன்சூரன்ஸ் ரினியூவல் பட்டியல் 

உங்கள் ஆன்லைனில் காரின் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்க வரும் பொழுது நீங்கள் அனைத்து முக்கியமான தகவல்களை கவனிக்க வேண்டும். 

 • சரியான கவரேஜ் : மூன்றாம் தரப்பு பொறுப்பு ப்ளான் மட்டும் வைத்து இருப்பவர்கள் விரிவான பாலிசி பற்றி சிந்திக்க தொடங்க வேண்டும். இத்தகைய உதவிகரமான மற்றும் பயனுள்ள இன்சூரன்ஸ் ப்ளான் உடன் நீங்கள் விருப்பிய கவரை எளிதாக பெறலாம். 
 • ஐடிவி சரிபார்க்க : திருட்டு அல்லது இழப்பு ஏற்படும் தருணங்களில் நீங்கள் இழப்பீடு பெறுவீர்கள். பிரீமியத்திற்கு எதிராக காரின் இன்ஷூர்டு டிக்லர்டு வல்யூ மறு மதிப்பீடு செய்யப்படும். அதே சமயத்தில், நீங்கள் சிறந்த விலை பற்றி தெரிந்து கொள்வீர்கள்.  
 • க்ளைம் சரிபார்க்க : இது மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும். உங்களின் முந்தையை நிறுவனத்தின் க்ளைம் விகிதம் மூலம் செல்லவில்லை என்றால், தற்போது அதனை சரிபார்க்கவும்.  
 • பணமில்லா கேரேஜ்களை சரிபார்க்க : உங்கள் காருக்கு பழுதுப்பார்த்தால் சேவையை வழங்கும் உங்கள் பகுதிக்கு அருகே உள்ள அனைத்து பணமில்லா கேரேஜ்களையும் கவனிக்கவும். 
 • ஆட்-ஆன்ஸ் : உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றை பெறுவதற்கு கிடைக்கக்கூடிய அனைத்து ஆட்-ஆன்ஸ்(கூடுதல் இணைப்புகள்)-ஐ சரிபார்க்கவும். 
 • கழித்தல் மற்றும் தள்ளுபடி : கிடைக்கும் அனைத்து தள்ளுபடிகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விலக்கு(கழித்தல்) என்பது நீங்கள் க்ளைம்-க்கு முன்பு ஒவ்வொரு முறையும் செலுத்த வேண்டிய தொகையாகும்.

கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கணக்கிடுதல் 

ஒவ்வொரு கார் இன்சூரன்ஸ் உரிமையாளரும் தங்களின் பிளானை செயலில் வைக்க பிரீமியம் செலுத்த வேண்டும். உங்களின் கார் இன்சூரன்ஸ்க்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை அறிய, நீங்கள் ஆன்லைன் பிரீமியம் கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை பயன்படுத்தலாம். இந்த பிரீமியம் தொகை எளிதான ஃபார்முலா மூலம் கணக்கிடப்படுகிறது.

இந்த எளிமையான ஃபார்முலா ஆனது கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கணக்கிடுதல் நன்றாக புரிந்து கொள்ள உதவுகிறது. பிரீமியம் = சொந்த சேத பிரீமியம் – (நோ க்ளைம் போனஸ் + தள்ளுபடிகள்) + ஐஆர்டிஏஐ மூலம் நிலையான பிரீமியம் தொகை + ஆட்-ஆன்ஸ் செலவுகள். 

கார் இன்சூரன்ஸ் விலையை பாதிக்கும் காரணிகள்

கார் இன்சூரன்ஸின் பிரீமியம் பின்வரும் காரணிகளை அடிப்படையாக் கொண்டது. 

 1. வாகனத்தின் ஐடிவி ( இன்ஷூர்டு டிக்லர்டு வல்யூ)
 2. வாகனத்தின் வயது மற்றும் வகை
 3. எஞ்சினின் கியூபிக் கேபாசிட்டி
 4. புவியியல் அமைப்பு
 5. உரிமையாளர்-ஓட்டுனரின் பாலினம் மற்றும் வயது
 6. எரிபொருள் வகை
 7. ஓட்டுனரின் தொழில்
 8. தன்னார்வ கழித்தல்
 9. நோ க்ளைம் போனஸ்(என்சிபி)
 10.  திருட்டு எதிர்ப்பு சாதனம் பொருத்துதல் 

கீழே குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிகளின் அடிப்படையில், கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை நிறுவனம் நிர்ணயிக்கிறது. 

வாகனம் தயாரிக்கப்பட்ட ஆண்டு : இது காரின் வயதினை தீர்மானிக்கிறது. பழைய வாகனத்தின் இன்சூரன்ஸ் விகிதம் ஆனது ஆட்டோமொபைல்களுக்கு குறிப்பாக புதிய வாகனங்களை விட முரணாக குறைகிறது.

ஆட்டோமொபைல் பதிவு செய்வதற்கு அருகாமை : உங்களின் வாழ்விடம் மற்றும் அருகில் உள்ள பகுதியில் இருந்து உங்கள் வாகனத்தை பதிவு செய்வது கூட உங்களின் மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். கவரேஜ் குரூப் உங்களுக்கு “ இன்சூரன்ஸ் மண்டலம் “ கருத்தின் அடிப்படையில் வழங்குகின்றன. அந்த பகுதியில் செயல்படும் போது இழப்பு அல்லது தீங்கு என காருக்கு ஏற்படும் பாதிப்பை முதன்மை அடிப்படையாக கொண்டது. கிராமப்புற அல்லது சிறிய நகர்ப்புற வாகன உரிமையாளர்களை விட பெருநகர ஓட்டுனர்கள் வழக்கமாக தங்கள் வாகனத்தின் கவரேஜ்க்கு கூடுதல் பணத்தை செலுத்த வேண்டி இருக்கும். நகர்ப்புறங்களில் திருட்டு, வன்முறை, காயங்கள் ஆகியவை நிகழ அதிக வாய்ப்புகள் உருவாகும் என்பதே அதற்கு காரணம்.

சமகால ஷோரூம் விலை : நீங்கள் செலுத்தும் பிரீமியம் அளவானது, பெரிய அளவில் இன்ஷூர்டு டிக்லர்டு வல்யூ-வின்(IDV) அடிப்படையில் நம்பியிருக்கிறது. இது காரின் சந்தை மதிப்பை அடிப்படையாகக் கொண்டது. இதன் அடிப்படையில், வாகனத்தின் மதிப்பு அதிகமாக இருந்தால், கவரேஜ் பிரீமியம் கூட சிறந்த அம்சமாக இருக்கும்.

ஆட்டோவின் மாடல் : இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் ஹை-குய்ட் சீடன்ஸ் மற்றும் எஸ்யுவி-ஸ் உள்ளடக்கிய வாகனங்களுக்கு ஹட்ச்பக்ஸ் விட கூடுதல் பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. மேலும், டீசல் கார்களுக்கு, உயர் மட்டம் ஆனது பெட்ரோல் வாகனத்தை விட அதிகமாக உள்ளது. ஒரு ஆட்டோமொபைல் செங்குத்தான விலை- அசாதாரணமான உதிரி பாகங்களை கொண்டிருப்பதால், காரின் உயர் மட்ட கவரேஜ் அதிகமாகவே இருக்கும்.

ஆட்டோவின் நோக்கம் : ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ் ஆனது தனிப்பட்ட மற்றும் வணிக பாதுகாப்பு விதிகளை வழங்குகிறது. வாகனங்கள் வணிக செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டால், அது அதிக கவரேஜ் விலையை ஈர்க்கும்.

பாதுகாப்பு சாதனங்கள் : இன்றைய நாட்களில் மோட்டார் வாகனங்கள், ஏர்பேக்குகள், வலிமையான பூட்டுகள், சுப்பீரியர் ப்ரேகிங் சிஸ்டம் மற்றும் திருட்டு எதிர்ப்பு சாதனம் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பு திறன்களை கொண்டிருக்கின்றன. சேதங்கள், கொள்ளை மற்றும் வாழ்பவர் தீங்கு போன்ற கூடுதல் பாதிப்படையக்கூடிய கார்களின் விலையை அதிகரிக்க கவரேஜ் நிறுவனங்கள் முனைகின்றனர். உங்களின் வாகனம் பாதுகாப்பாக இருந்தால் பிரீமியம் தொகையில் 25% வரை தள்ளுபடி பெறுவீர்கள். இருப்பினும், அதில் உள்ளடக்கிய அம்சங்கள் இந்திய ஆட்டோமொபைல் ஆய்வுகள் சங்கத்தின்(ARAI) மூலம் அனுமதிக்கப்பட வேண்டும். இதன் விளைவாக,  நீங்கள் சரியாக ஆராய்ந்து மற்றும் குறைந்த பிரீமியத்தில் நம் காருக்கு பாதுகாப்பு திறன்களை கொடுக்க வேண்டும்.

க்ளைம் ரெக்கார்ட்ஸ் : உங்கள் வாகன இன்சூரன்ஸ்கு எதிராக ஒரு க்ளைம் தாக்கலை எழுப்பினால், அடுத்து வரும் ஆண்டுகளில் வரும் பிரீமியம் தொகை தலைகீழாக இருக்கலாம். ஒருவேளை க்ளைம் கோரிக்கையில் இருந்து விலகி இருந்தால், அடுத்து வரும் ஆண்டுகளில் பிரீமியம் குறைப்பை வெளிப்படுத்தும் நோ க்ளைம் போனஸ்-ஐ வெகுமதியாக பெறலாம். 

கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் சேமிப்பது எப்படி? 

சரியான ஐடிவி தேர்ந்தெடு : குறைந்த ஐடிவி என்றால் குறைந்த பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கும். (ஆனால், விவேகமாக கணக்கிடலாம், ஏனெனில் ஐடிவி இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு ஈடுசெய்யும் மிக உயர்ந்து மதிப்பு ஆகும்).

நோ க்ளைம் போனஸ் : உங்களின் பொறுப்பான ஓட்டுனர் திறன் மூலம் ஒவ்வொரு ஆண்டிலும் க்ளைம் தாக்கல் இல்லையென்றால் பிரீமியத்தின் மீது 50%  வரை போனஸ்-ஐ வெகுமதியாக பெறலாம். இப்பொழுது இது ஒரு உபசரிப்பு அல்லவா ?

செக்யூரிட்டி டிவைஸ்: இந்தியாவின் ஆட்டோமொபைல் ரிசர்ச் அசோசியேஷன் (ARAI)  ஆனது உங்கள் வாகனத்தில் திருட்டு எதிர்ப்பு சாதனத்தை பொருத்துவதன் மூலம் உங்களின் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் 25% வரை தள்ளுபடி பெறுவதை அனுமதிக்கிறது.

ஏஏஐ உறுப்பினராக ஆவது : ஐஆர்டிஏஐ மூலம் இயங்கும் அமைப்பான இந்தியாவின் ஆட்டோமொபைல் அசோசியேஷன் இல் உறுப்பினர் பதவி, உங்களின் சொந்த சேதம் பிரீமியம் மீது சலுகைகளை பெற்று தருகிறது. 

கார் இன்சூரன்ஸ் க்ளைம் செட்டில்மெண்ட்

ஒரு நபர் கார் இன்சூரன்ஸ் ப்ளான்-ல் முதலீடு செய்வது என்பது எளிதாக அவர்களுக்கு தேவையான நிதி ரீதியான பாதுகாப்பை பெறுவது என்பதில் எந்த சந்தேகமே இல்லை. ஆனால், க்ளைம் தொகை எளிதாக பெற முடியவில்லை என்றால் எப்படி உதவியாக இருக்கும்? ஆகவே, அதிகமான க்ளைம் செட்டல்மெண்ட் விகிதம் உடன் சரியான ஒன்றை தேர்வு செய்வது எவ்வளவு முக்கியம் என்பது அறிவீர்கள் .

ஆனால், நீங்கள் க்ளைம் தாக்கல் செய்வது எப்படி மற்றும் முழு க்ளைம் செட்டில்மெண்ட் செயல்முறையும் செயல்படுகிறது எப்படி என்பதையும் புரிந்துக் கொள்வதும் முக்கியமாகும்.

க்ளைம் தாக்கல் செய்வது எப்படி? 

ஒருவேளை விபத்தோ அல்லது அவசர நிலையான சூழ்நிலையில், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ உடனடியாக உங்களின் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிப்பது மிக முக்கியமாகும்.

தேவையான அனைத்து விவரங்களுடன் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிக்கு நீங்கள் கட்டாயம் அறிக்கை செய்ய வேண்டும்.

சேதத்தின் நிலையை மதிப்பீடு செய்யுங்கள். அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும்  கணக்கிடுங்கள். 

2018 ஆம் ஆண்டில் சிறந்த கார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் க்ளைம் செட்டில்மெண்ட் விகிதம்

கார் இன்சூரன்ஸ் பகுதியில் பல போட்டியாளர்கள் இருந்தாலும், சிலரே சிறந்த க்ளைம் செட்டில்மெண்ட் விகிதத்தை வழங்குகின்றனர் மற்றும் அவர்களின் அடையாளத்தை அப்பகுதியில் நிலை நிறுத்துகின்றனர். இங்கே, சிறந்த செட்டில்மெண்ட் விகிதம் உடன் கார் இன்சூரன்ஸ் ப்ளான்ஸ் வழங்கும் நிறுவனங்களின் முழுமையான பட்டியல் உள்ளன.

வ.எண்

இன்சூரன்ஸ் நிறுவனம்

க்ளைம் விகிதம்

(2016-2017)

க்ளைம் விகிதம்

(2017-2018)

1.

பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் கோ லிமிட்

78.50%

77.61%

2.

பாரதி அக்சா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

76.88%

98.50%

3.

சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிறுவனம்

40.07%

39.96%

4.

ஃபியூச்சர் ஜெனரலி .இன்சூரன்ஸ் நிறுவனம்

78.93%

87.41%

5.

எச்டிஎஃப்சி எர்கோ ஹெல்த்  இன்சூரன்ஸ் நிறுவனம்

50.76%

52.58%

6.

இப்கோ டோக்யோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

104.30%

90.69%

7.

லிபர்ட்டி வீடியோகான் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

74.37%

74.58%

8.

மக்மா எச்டிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

181.20%

34.93&

9.

நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம்

126.98%

115.55%

10.

நியூ இந்தியா அசுரன்ஸ் நிறுவனம்

102.94%

103.19%

11.

ஓரியண்டல் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

118.23%

113.86%

12.

ரஹேஜா கியூபிஇ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

126.70%

18.19%

13.

ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

91.39%

106.54%

14.

ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்


62.09%

61.41%

15.

எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

53.43%

52.93%

16.

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

38.57%

50.83%

17.

ஸ்டார் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

60.51%

61.76%

18.

டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

57.20%

60.68%

19.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம்

138.51%

110.95%

20.

யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

86.14%

104.17%

கார் இன்சூரன்ஸ் க்ளைம் நிராகரிக்கப்பட காரணங்கள் 

 • சரியான ஓட்டுனர் உரிமம் இல்லாமல்
 • இரண்டாம் முறையாக(செக்கன்ட்-ஹன்ட்) வாங்கிய கார், ஆனால் இன்சூரன்ஸ் இல்லை
 • இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தாமதமாக தெரிவித்தால்
 • மது அல்லது போதை மருந்துகள் விளைவுடன் இயக்கும் பொழுது
 • அதன் விளைவாக ஏற்படும் சேதங்கள்
 • உங்கள் கார் மிகவும் பழையதாகி பழுதாகி இருந்தால்
 • இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரிவிக்காமல் காரை பழுதுப்பார்த்தால்
 • பதிவு செய்யப்படாத சிஎன்ஜி கிட் பொருத்தி இருந்தால்
 • குறிப்பிட்ட வரம்புகளுக்கு மேல் பயன்படுத்தும் போது.