பஜாஜ் அல்லியன்ஸ் கார் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

பஜாஜ் அல்லியன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆனது 2001 ஆம் ஆண்டு அல்லியன்ஸ் ஸ் ஈ மற்றும் பஜாஜ் பின்செர்வ் லிமிடெட்டின் கூட்டு முயற்சியால் இந்தியாவில் முதன்மையான காப்பீடு நிறுவனங்களில் ஒன்றாக தொடங்கப்பட்டது . நாளடைவில் தன் வளர்ச்சியால் 200 கும் மேற்பட்ட இந்திய சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் தன் கிளைகளை நிறுவியது. பஜாஜ் நிறுவனம் தனது டிஜிட்டல் வெளியீட்டினால் காப்பீடு ஊடுருவல் சேவையை செயல்படுத்தியது மட்டும் இன்றி பரவலான மற்றும் பல சேவைகளையும் தயாரிப்புகளையும் வழங்குகிறது. 

மைய அணுகுமுறையை கொண்டு , உயர்தர சேவையை வழங்குவதிலும் , தன்  வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிலா அனுபவத்தை ஏற்படுத்துவதையும் முக்கிய குறிக்கோளாக கொண்டு பணியாற்றுகிறது. 

பஜாஜ் தன் நிகரில்லா வளர்ச்சியை பெரும் அளவில் நிரூபித்து அதனை பறை சாடும் முறையில் புகழ்பெற்ற பத்திரிகை நிறுவனங்களான எகனாமிக் டைம்ஸ் இடமிருந்து பெஸ்ட் கார்பொரேட் பிராண்ட் 2016 என்ற அங்கீகாரத்தையும் தி பெஸ்ட் மோட்டார் இன்சூரன்ஸ் ப்ரொவிடேர் என்ற அங்கீகாரத்தையும் வென்றது. அது மட்டும் அன்றி எ இ ன் பெஸ்ட் எம்ப்ளயேர் 2016, பார்மா பவர் லீடர்ஸ் பிராண்ட் அவார்ட்ஸ் 2015, ஆசியா இன்சூரன்ஸ் இண்டஸ்ட்ரி அவார்ட்ஸ் , மனி டுடே FPCIL அவார்ட்ஸ், விஜயவனி BFSI எக்ஸலன்ஸ் அவார்ட்ஸ் என பல அங்கீகார வெற்றியை தடம் பாதித்துள்ளது.

பெரும்பாலான மக்களிடையில் புது வாகனம் வாங்குவதற்கு அதிகபட்ச நிதி தொகை தேவை என்று சொல்வதில் சந்தேகம் இல்லை மேலும் அது பல மக்களிடையில் பெரிய முதலீட்டிற்கான சின்னமாக திகழ்கிறது. முக்கிய முதலீடாக பங்குவகிர்ப்பதால் அதனை நாம் காப்பீடு செய்வது முதன்மையான செயல். அதனை உறுதி படுத்தும் முறையில் நம் இந்திய அரசு மூன்றாம் தரப்பு தவறுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் தனியார் மற்றும் வணிக வங்கங்களுக்கு முறையான காப்பீடு திட்டத்தை கட்டாயமாகியுள்ளது . கார் காப்பீடு திட்டமானது வாகனம் திருடு போனாலோ , மனிதனால் அல்லது இயற்கையினால் உருவாக்கப்பட்ட பேரழிவு ஏற்பட்டாலோ அதற்கான காப்பீடு நிதி உதவியை வழங்கும். 

பஜாஜ் கார் காப்பீடு திட்டம் மூன்றாம் தரப்பு தவறுகள் நிகழும் தருவாயில் தேவையான பாதுகாப்பு வழங்கும் வகையில் உருவாக்கப்படுள்ளது . எளிய மொழியில் கூறப்பட்டால் பஜாஜ் காப்பீடு திட்டம் உடனடி ஆன்லைன் காப்பீடு வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் சேவைகளை அளித்து வருகிறது . காப்பீடுப்பட்ட வாகனம் விபத்துக்கு உள்ளானால் ரூபாய் 4000  வரை அணைத்து இந்திய அங்கீகாரம் பெற்ற கார் சேவை செய்யுமிடங்களில் பணமில்லா கூற்று பெறுவதற்கு தகுதி செய்யப்படும் . மேலும் பஜாஜ் 20% முதல் 25% வரை மற்ற காப்பீடு நிறுவனகளிடமிருந்து கூற்று தொகையை அளிக்கிறது. 

பஜாஜ் அல்லியன்ஸ் மோட்டார் காப்பீடு தேவையான மோட்டார் கூற்று நிலையை 24 மணி நேரம் இயங்கும் வாடிக்கையாளர் சேவை மூலமாகவும் எஸ்எம்எஸ் மூலமாகயும் உடனுக்குடன் தெரியப்படுத்துகிறது . மேலும் தொந்தரவு இல்லாத இலவச ஆய்வை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற உயர்தரமான சிறந்த விதத்தில் அளிக்கிறது.

பஜாஜ் அல்லியன்ஸ் கார் இன்சூரன்ஸ் வழங்கும் சேவைகள்

காப்பீடு பட்ட வாகனம் பின்வரும் நிகழ்விகளால் பாதிக்கப்பட்டால் பஜாஜ் அல்லியன்ஸ் மோட்டார் இன்சூரன்ஸ்தன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும். 

 1. இயற்கை பேரழிவுகளான புயல், வெடிப்பு, பூகம்பம், நிலச்சரிவு, சூறாவளி, வெள்ளப்பெருக்கு, வெள்ளம், சூறாவளி,  சுய பற்றவைப்பு, உறைபனி , தீ விபத்து , வெடி விபத்து மற்றும் பாறைச்சரிவு. 
 2. மனிதனால் ஏற்படுத்தப்படும் பேரழிவுகளான திருட்டு , கலவரத்தினால் ஏற்படும் இழப்பு , தீவிரவாத பயங்கரத்தினால் ஏற்படும் விபத்து , சாலை ரயில் நீர்வழிகள் லிப்ட் மற்றும் விமானத்தினால் ஏற்படும் இழப்புகள் . 
 3. அடிப்படையான காப்பீடு மட்டுமின்றி பஜாஜ் அல்லியன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி தனிப்பட்ட விபத்து காப்பீடான ரூபாய் 2 லட்சம் தொகையை வாகன  இயக்குனர் / உரிமையாளர்களுக்கு அளிக்கிறது . மேலும் பயணிகள் / தர்களிக வாகன இயக்குனர் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்றவாறு காப்பீடு வசதிகளும் அளிக்கிறது . 
 4. மூன்றாம் நபரின் அதிகாரபூர்வ பொறுப்பினால் நிகழ்த்த விபத்தினால் ஏற்பட்ட பொருள் சேதம், உயிர் சேதம் மற்றும் நிரந்தர காயங்களுக்கு காப்பீடு அளிக்கிறது.

காப்பீட்டிற்கு அப்பாற்பட்ட சேவைகள் 

'ரிலேஷன்ஷிப் பீயாண்ட இன்சூரன்ஸ்' என்னும் பொன்மொழியை தனது முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது பஜாஜ் அலிபியான்ஸே ஜெனரல் இன்சூரன்ஸ் . மேலும் சில அற்புதமான சேவைகளான ஸ்மார்ட் டிரைவ் சேவை என்னும் வாகன கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது . தினசரி வாகன கண்காணிப்பு , பேட்டரி மற்றும் என்ஜின் தற்காலிக நிலை பற்றின தகவல்களை அளிப்பதன் மூலம் தேவையற்ற வாகன முறிவை தடுக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி வாகன சேவை , காப்பீடு புதுப்பித்தல் ஓட்டுநர் உரிமம் அறிவிப்புபுதுப்பித்தலுக்கான முன்னோடி அறிவிப்பு எச்சரிக்கை சேவைகளையும் வழங்குகிறது.

பஜாஜ் அல்லியன்ஸ் கார் இன்சூரன்ஸ் திட்டங்கள் 

இந்த கால கட்டத்தில் சாலை விபத்து என்பது மிக அதிகமான விகிதத்தில் நிகழ்ந்து வருகிறது அதனை தடுத்து பாதுகாப்பதற்கு நம் வாங்கனத்தை பஜாஜ் அல்லியன்ஸ் மோட்டார் இன்சூரன்ஸ் மூலம் காப்பீடு செய்வது மிகவும் முக்கியமான செயல். இதன் மூலம் நாம் வாகனத்திரு ஏற்படும் இழப்புகளை சிறிய பிரீமியம் தொகையை செலுத்துவதின்மூலம் ஈடு செய்ய முடியும் . வாகன காப்பீடு ஆவணங்கள் மிக முக்கியமாக நாம் வாகனம் ஓட்டும் பொழுது நம்முடன் வைத்து கொள்ள வேண்டும் . பஜாஜ் அல்லியன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி தனிப்பட்ட விபத்து காப்பீடான ரூபாய் 2 லட்சம் தொகையை வாகன  இயக்குனர் / உரிமையாளர்களுக்கு அளிக்கிறது . திறமையான உரிமைகோரல் மேலாண்மை மூலம் உடனடியாக கூறல் தொகையை பெற உதவுகிறது . 

கார் காப்பீடு திட்டம் , இரு சக்கர காப்பீடு திட்டம் , மோட்டார் இன்சூரன்ஸ் மற்றும் வணிக வாகன காப்பீடு திட்டம் என்னும்  நான்கு வகையான காப்பீடு திட்டத்தை பஜாஜ் வழங்குகிறது.

கார் இன்சூரன்ஸ் 

பஜாஜ் அல்லியன்ஸ் கார் இன்சூரன்ஸ் திட்டம் குறிப்பாக தனியார் கார்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது . வாகன சேதங்களை பழுபார்கவும் மேலும் விலையுயர்ந்த உதிரி பாகங்களுக்கும் தேவையான பாதுகாப்பு சேவையை அளிக்கிறது . கிட்டத்தட்ட 4000 பனமற்ற கோரிக்கை தீர்க்கும் சேவை மையங்களை நிறுவியுள்ளது . 24/7 சாலை உதவி சேவை , டிரைவ் ஸ்மார்ட் டெலிமென்டஸிஸ் சேவை மற்றும் டோவியிங் சேவைகளை தனது சிறப்பம்சங்களாக கொண்டுள்ளது . 

முக்கிய செயல்பாடுகள் 

டிரைவ் ஸ்மார்ட்

வாகன கனக்கணிப்பு சாதனம் டிரைவ் ஸ்மார்ட் சேவையில் கீழ் அளிக்கப்படுகிறது

பனமற்ற கோரிக்கை வசதி

000 பனமற்ற கோரிக்கை தீர்க்கும் சேவை மையங்களை மையங்கள் நிறுவப்பட்டுள்ளது

சாலை உதவி சேவை

24/7 சாலை உதவி சேவை அளிக்கப்படுகிறது

டோவியிங் சேவை

வாகன முறிவின் பொழுது டோவியிங் சேவை அளிக்கப்படுகிறது  

தேய்மான பாதுகாப்பு

செலவற்ற தேய்மான பாதுகாப்பு வசதி புது சேர்கையாக தேர்வு செய்யும் வாய்ப்பளிக்கிறது

பொறுப்பு ஒன்லி - மோட்டார் இன்சூரன்ஸ் 

மூன்றாம் நபரின் அதிகாரபூர்வ பொறுப்பினால் நிகழ்த்த விபத்தினால் ஏற்பட்ட பொருள் சேதம், உயிர் சேதம் மற்றும் நிரந்தர காயங்களுக்கு காப்பீடு அளிக்கிறது . வாகன காப்பீடு இந்தியாவில் கட்டாயமாக வைத்துக்கொள்ளவேண்டிய ஆவணமாக இருக்கிறது. 

முக்கிய செயல்பாடுகள் 

உடல் காயங்கள்/சேதங்கள் காப்பீடு

உயிர் இழப்பு மற்றும் உடல் காயங்களுக்கான பாதுகாப்பு

மூன்றாம் நபரின் வாகன பழுது காப்பீடு

மூன்றாம் நபரின் அதிகாரபூர்வ பொறுப்பினால் நிகழ்த்த விபத்திற்கு பாதுகாப்பு

விபத்து பாதுகாப்பு சேவை காப்பீடு

விபத்தால் ஏற்படும் உயிரிழப்பிற்கு காப்பீடு  

இயலாமை காப்பீடு

விபத்தால் ஏற்படும் இயலாமைக்கு காப்பீடு  

வணிக வாகன காப்பீடு 

இந்த காப்பீடு திட்டம் குறிப்பாக வணிக வாகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது .இந்த காப்பீடு திட்டமானது தனியார் மற்றும் பொது பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் அதனை கொண்டுசெல்லும் வாகன இயக்குனர்களுக்கும் காப்பீடு வழங்குகிறது. அது மட்டும்மின்றி சிறப்பு சேவைகள் வாங்கனத்தில் கொண்டு செல்லப்படும் பொருள்களுக்கும் வாகன இயக்குனர்களும் பாதுகாப்பு வசதி அளிக்கப்படுகிறது .  

இழப்பு காப்பீடு

நிதி இழப்பு மற்றும் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட பொருளிழப்பிற்கு பாதுகாப்பு

உரிமை கூற்று தீர்வு  

சுலபமான கூற்று தீர்வு

சுலபமான சேவை

சுலபமான காப்பீடு பெறுதல் வசதி

விபத்தினால் ஏற்படும் சேதம்

மூன்றாம் நபரின் அதிகாரபூர்வ பொறுப்பினால் நிகழ்த்த சேதத்திற்கு பாதுகாப்பு

பஜாஜ் அல்லியன்ஸ் கார் காப்பீடு திட்டத்தின் கூடுதல் வசதிகள் 

அடிப்படையான வாகன காப்பீடு திட்டத்தின் சிறப்பம்சங்களை அதிகரிக்கும் பல விதமான கூடுதல் வசதிகளை அளிப்பதே பஜாஜ் அல்லியன்ஸ் கார் இன்சூரன்சின் சிறப்பம்சமாக திகழ்கிறது. கீழ் கண்டவை முக முக்கியமான கூடுதல் வசதிகளில் மேல் தர பட்டியலில் உள்ளவை . 

நுகர்பொருட்கள் 

இந்த காப்பீடின் முறைப்படி பின்வரும் பொருட்களான கியர் பாக்ஸ் ஆயில் , எ சி ரெபிரிட்ஜெரென்ட் , நட்ஸ் , ஸ்க்ரீவ்ஸ் , ரேடியேட்டர் லீகுய்டு , பியூயல் பில்டர் , பேரிங் , பேட்டரி ஏலேக்ட்ரோலைட் மற்றும் இது போல மற்ற ஒத்த இயல்புள்ள பொறுட்கள் விபத்தின் பின் செய்யப்படும் பழுதுபார்ப்பின்போது , புதிதாக மாற்றப்பட்டு அல்லது மீண்டும் நிரப்பட்டு தரப்படும் . 

போக்குவரத்து வசதி நன்மைகள் 

இந்த சலுகையில் கீழ் காப்பீடு செய்யப்பட்ட வாகனத்திற்கு விபத்திற்கான பழுது செய்யப்படும் கூற்று ஏற்றுக்கொள்ளப்படும் இதன் கீழ் குறிப்பிட்ட தொகை பெற்றுத்தரப்படும் . இந்த தொகையானது நீங்கள் தேர்வு செய்யப்பட்ட திட்டத்தை பொறுத்தே முடிவுசெய்யப்படும் .

 விபத்து பாதுகாப்பு கவசம் 

காப்பீடு செய்யப்பட்ட வாகனம் விபத்திற்கு உள்ளாகி உடல் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்பட்டால் அதற்க்கான இழப்பை ஈடு செய்யும் சேவைகள் அளிக்கிறது. 

பஜாஜ் அல்லியன்ஸ் கார் இன்சூரன்ஸ் ஆன்லைன் புதுப்பித்தல்

காப்பீடு திட்டங்களை அதறகான சரியான நேரத்தில் புதுப்பிப்பது மிக முக்கியமான செயல் . பஜாஜ் அல்லியன்ஸ் கார் இன்சூரன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு திட்டத்தின் புதுப்பித்தல் தேதியை நினைவு படுத்தும் வகையில் அதற்கான அறிவிப்புகளை உடனுக்குடன் சரியான நேரத்தில் தெரியப்படுத்துகிறது . வாடிக்கையாளர்கள் புதுப்பித்தல் வேலையை கடினமாக உணர்த்தால் பஜாஜ் நிறுவனம் மிகச்சிறந்த உதவியை அளிக்கிறது. மேலும் சுலபமாக கப்பணியின் ஆன்லைன் சேவை மூலம் காப்பீடை புதுப்பிக்கும் வசதி அளிக்கிறது கூடுதலாக policyX.com மூலமாகவும் அதே வசதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் வசதி மூலம் வாடிக்கையாளர்கள் தனது அடிப்படை தகவல்களையும் தற்போது காலாவதியான போகும் கார் இன்சூரன்ஸ் தகவலையும் நிரப்பி அதற்கான தொகையை செலுத்தினால் பஜாஜ் கம்பெனி மற்ற அனைத்து வேலைகளையும் நொடியில் செய்து காப்பீடு திட்டத்தை புதுப்பித்து வழங்கிவிடும் . 

சேர்ப்பு மற்றும் விளக்கு அளவு நிர்ணயங்கள் 

தனி நபர் விபத்து சலுகை : மனிதனால் ஏற்படுத்தப்படும் பேரழிவுகளான திருட்டு , கலவரத்தினால் ஏற்படும் இழப்பு , தீவிரவாத பயங்கரத்தினால் ஏற்படும் விபத்து , சாலை ரயில் நீர்வழிகள் லிப்ட் மற்றும் விமானத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீடு அளிக்கிறது. 

மூன்றாம் நபரின் பொறுப்பினால் நிகழ்ந்த விபத்தின் சலுகை : மூன்றாம் நபரின் அதிகாரபூர்வ பொறுப்பினால் நிகழ்த்த விபத்தினால் ஏற்பட்ட பொருள் சேதம், உயிர் சேதம் மற்றும் நிரந்தர காயங்களுக்கு காப்பீடு அளிக்கிறது .

திடீர் விபத்து பாதுகாப்பு சலுகை : தனிப்பட்ட விபத்து காப்பீட்டிற்கான தொகையை வாகன  இயக்குனர் / உரிமையாளர்களுக்கு சம்மந்தப்பட்ட சட்டப்படியான வாரிசிற்கு அளிக்கிறது. 

காப்பீடு திட்டத்தின் கீழ் வராதவை

 1. குறிப்பிடப்பட்ட இடத்திற்கு வெளிய நிகழும் இழப்புகள் அல்லது விபத்துகள்
 2. ஒப்பந்த பொறுப்பிற்கு அப்பாற்பட்ட இடத்தில் ஏற்படும் இழப்புகள்
 3. காப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்திற்கு எதிராக வாகனத்தை பயன்படுத்தும் பொழுது ஏற்படும் இழப்புகள். 

பஜாஜ் அல்லியன்ஸ் - புதிய சேவைகள் 

மகளீர் கிளைகள் பஜாஜ் அல்லியன்சின் மற்றொரு புதிய முயற்சி. இது தனது குடும்ப நல்லதிற்காகவும் மேலும் சில காரணங்களுக்காகவும் சிறிய இடைவேளைக்கு பிறகு பணியில் சேர நினைக்கும் பெண்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இதை முயற்சி ஆரோக்கியமான பணி வாழக்கை சமநிலையை நிறைவேற்றும் வண்ணம் நெகிழ்வான வேலை நேரங்கள் , வீட்டில் இருந்து பணி புரியும் சலுகை , சமமாக கூடி பணி புரியும் சூழல் , குழந்தைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருள்களை பணி இடத்தில் பெரும் வசதிகளை அளிக்கிறது  . பெண்கள் தனது உழைப்பை விட்டு கொடுக்காமல் பணி புரிந்து தன் குடும்பத்தை உயர்த்தும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . தற்போது இந்த சேவை 19 இந்திய நகரங்களில் தொடங்கப்படுள்ளது .

விர்ச்சுவல் ஆபீஸ் இந்தியவின் காப்பீடு ஊடுருவலை மேம்படுத்தவும் பரப்பவும் எடுக்கப்பட்ட ஒரு புதிய முயற்சியாகும் . இந்தியாவில் மொத்தம்  28 கும் மேற்பட்ட காப்பீடு நிறுவனங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் பெருநகரங்கில் மீது தான் கவனம் செலுத்தும்வண்ணம் உள்ளது. ஆனால் பஜாஜ் இன்சூரன்ஸ் தனது தொழில்நுட்ப உதவியுடன் நாட்டில் உள்ள சிறிய கிராமங்களிலும் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தனது முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. இந்த செயல்பாடு ஒரு அலுவலகத்தை சிறிய இடத்தில் முழு அம்சத்துடன் கொண்டு வந்து தனது வாடிக்கையாளர்களின் கொள்கை பற்றிய தகவல்கள் , கொள்கை வழங்குதல் அதற்கான பணம் செலுத்தும் வசதிகள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திலேயே கொண்டுவந்துள்ளது. தாங்கள் இப்பொழுது காப்பீடு சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் அதற்கான தொகையை காப்பீடு வழங்கும் நேரத்தில் வீட்டில் இருந்த படியே செலுத்தலாம். 

ஆன்லைன் சேவைகள் 

பஜாஜ் இன்சூரன்ஸ் கம்பெனி ஒருவரின் காப்பீட்டை ஆன்லைன் மூலம் வாங்க வசதி அளிக்கிறது. வாகனத்தை ஆய்வு செய்த பிறகு ஆன்லைன் மூலம் பிரீமியம் செலுத்தி காப்பீட்டிற்கு தகுந்த ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம். தற்போதுள்ள மற்றும் காலாவதியான காப்பீடை புதுப்பித்தல் கூட ஆன்லைன் மூலம் செய்ய வழி வகுத்துள்ளது. மேலும் தங்கள் காப்பீடு வகையை தேர்ந்த்தெடுக்கவும் அதன் பிரீமியம் தொகையை நிமிடத்தில் கணக்கிடவும் பிரீமியம் கால்குலேட்டர் என்னும் வசதியை அளிக்கிறது. 

வாடிக்கையாளர் சேவைகள் 

தனது வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ள பஜாஜ் அல்லியன்ஸ் எண்ணற்ற தளத்தை வழங்குகிறது. அவற்றுள் #ட்வீட்இன்சூரன்ஸ் , ஆன்லைன் க்ரீய்வன்ஸ் மெக்கானிசம் , பாலிசி இஸ்ஸுன்ஸ் ட்ராக்கர் , கிளைம் ஸ்டேட்டஸ் எய்னகுரி , லைவ் சேட் என்னும் சேவைகள் மூலம் தனது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துகிறது. 

பஜாஜ் அல்லியன்ஸ் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள் 

மக்கள் பொதுவாக சிறந்த கார் காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுக்க அதனை சம்மந்தப்பட்ட கொள்முதல்கள் , சேவைகள் , அம்சங்கள் மற்றும் அதன் நன்மைகளை வைத்து தான் முடிவு செய்வார்கள். அது அனைத்தையும் நிறைவேற்றும் வண்ணம் பஜாஜ் மோட்டார் காப்பீடு இருக்கிறது.

 • பணமற்ற கூற்று பெற்று தரும் எண்ணற்ற இந்திய சேவை மையங்கள்.
 • 75% பழுதுபார்க்கும் செலவு தொகை கூற்று தொகையாக வழங்கப்படும்.
 • எளிதான கூற்று தீர்வு.
 • உடனடியான எளிதான காப்பீடு வாங்கும் வசதி.
 • தற்போதய பாலிசி திட்டத்தை பஜாஜ் அல்லியன்ஸ் நிறுவனத்திற்கு பரிமாற்றம் செய்தால் 50% NSB   நன்மை பெறலாம்
 • 24/7 வாடிக்கையாளர் சேவை இவை வார இறுதியிலும் செயல்படும்
 • மிக எளிதான இன்சூரன்ஸ் புதுப்பித்தல் சேவை. 

மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் 

கீழ் கொடுக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை பஜாஜ் தனது வாடிக்கையாளர்களுக்கு வழக்குகிறது. 

24/7 உடனடி உதவி : காப்பீடு செய்யப்பட்டவர்களுக்கு சாலை உதவி தேவைப்படும் நேரத்தில் பாதுகாப்பு ஆலோசனை அளிக்கப்படும். அவசர சேவைகளான வாகன பழுது, டயர், கார் பேட்டரி, விபத்து இன்னும் பல சட்ட ஆலோசனை அளிக்கப்படும். 

பூட்டு மற்றும் சாவி மாற்றும் சேவை : மீட்டெடுக்க முடியாத அளவிலான இழப்பு மற்றும் செயலிழப்பு ஆபத்து நிகழும் தருணத்தில்  புதிய பூட்டுகள் அல்லது மாற்று வாகன காப்பீட்டு சாவிகள் வாங்கும் செலவுகளுக்கு ஈட்டுரிமை வழங்கப்படும் .  

விபத்து பாதுகாப்பு கவசம் : காப்பீடு செய்யப்பட்ட வாகனம் விபத்திற்கு உள்ளாகி உடல் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்பட்டால் அதற்க்கான இழப்பை ஈடு செய்யும் சேவைகள் அளிக்கிறது. 

நுகர்பொருட்கள் செலவுகள் : இந்த காப்பீடின் முறைப்படி பின்வரும் பொருட்களான கியர் பாக்ஸ் ஆயில் , எ சி கேஸ் ஆயில், பவர் ஸ்ட்ரெயரிங் ஆயில், குலன்ட் மற்றும் ப்ரேக் ஆயில் இது போல மற்ற ஒத்த இயல்புள்ள பொறுட்கள் விபத்தின் பின் செய்யப்படும் பழுதுபார்ப்பின்போது , புதிதாக மாற்றப்பட்டு அல்லது மீண்டும் நிரப்பட்டு தரப்படும் . 

தனிப்பட்ட சாமான் இழப்பு : மோட்டார் காப்பீட்டின் கொள்கையின் கீழ் காப்பீட்டாளரின் வாகனத்தில் இருந்து அவரது தனிப்பட்ட சாமான்களுக்கு இழப்போ அல்லது ஆபத்தோ ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் . 

பஜாஜ் அல்லியன்ஸ் கார் இன்சூரன்ஸ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 

 1. கையெழுத்து மற்றும் புகைப்படம் உள்ளடங்கிய விண்ணப்ப படிவம்
 2. ஓட்டுநர் உரிமம் நகல்
 3. வாகனம் பதிவு செய்யப்பட்ட பதிவின் நகல்
 4. வாகன காப்பீடின் தற்போதய நிலையின் நகல்
 5. வரி பணம் செலுத்தப்பட்ட நகல்
 6. முகவரி மற்றும் வயதிற்கான KYC நகல் ஆவணம்
 7. மேலும் தேவைப்படும் இதர ஆவணங்கள்

மாறாக ஆன்லைன் மூலம் காப்பீடு விண்ணப்பித்தால் கொடுப்பட்டுள்ள ஆவணங்கள் உடனடியாக கேட்கப்பட மாட்டாது கூற்று தேவை எழுப்பும் போதே கோரப்படும். மேலும் விண்ணப்பித்திற்கான கடின நகல் 7 நாட்களில் வழங்கப்படும். மென்மை நகல் பஜாஜ் அல்லியன்ஸ் கார் இன்சூரன்ஸ் இணையதளத்தில் வாடிக்கையாளர் ஆய்விற்காக பதிவேற்றப்பட்டிருக்கும் .

- / 5 ( Total Rating)