சோழமண்டலம் எம்எஸ் கார் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

சோழமண்டலம் எம்எஸ் கார் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ( சோழா எம்எஸ் ) என்பது ஒரு இந்திய காப்பீட்டு நிறுவனமாகும் . இந்த நிறுவனமானது இந்திய குழுமமான முருகப்பா குரூப் மற்றும் ஜப்பானிய உத்தரவாத நிறுவனமான மிட்சுய் சுமிட்டோமோ இன்சூரன்ஸ் குரூப் ( எம்எஸ்ஐஜி ) ஆகியவற்றிக்கு இடையேயான கூட்டு முயற்சியில் உருவாகியதாகும் . இந்த நிறுவனத்தின் நோக்கமானது , "T3 - நம்பிக்கை , வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பம் " ஆகும் . இந்திய அரசாங்கத்தின் தொழிற்துறை மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மூலம் இயங்கும் " ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா " திட்டத்தில் சரியான நேரத்திற்கு க்ளைம் செட்டில்மெண்ட் செய்வதில் 2011-12   ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனமாக சோழா எம்எஸ் நிறுவனம் விளங்கியது .

மோட்டார் இன்சூரன்ஸ் ஆனது நீங்கள் சாலையில் வாகனத்தில் பயணிக்கும் பொழுது கொண்டு செல்ல வேண்டிய கட்டாய ஆவணமாக இருக்கிறது . ஒரு வாகனமானது உங்களைச் சுற்றி இருக்கும் பயணங்களை எளிதாக்க உதவுகிறது . இருப்பினும் , இந்த வசதியுடன் வாகனத்திற்கான இன்சூரன்ஸ் தேவை என்பதை உணர வைக்கும் பல ஆபத்துகளும் உடன் வருகிறது . உங்கள் வாகனம் திருடப்பட்டால் அல்லது சேதமடைந்தால் அதற்கு எதிராக நிதி சார்ந்த   ஆதரவை வாகன இன்சூரன்ஸ் வழங்குகிறது . மேலும் , இது மூன்றாம் தரப்பு பொறுப்பு கவரேஜையும்   வழங்குகிறது . பாதுகாப்பான பயணத்திற்கு முழு பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தைப் பெற ஒரே வழி   இதுவே .

மோட்டார் இன்சூரன்ஸ் ஆனது தனிப்பட்ட பயன்பாடு மற்றும் வர்த்தக வாகனங்களான கார் மற்றும் மோட்டர் பைக்ஸ் போன்ற நம்முடன் தொடர்புடைய சொத்தின் பாதுகாப்பிற்காக ஒரு நபர் வாங்க வேண்டிய   அடிப்படை பாலிசியாகும் . ஒரு மோட்டார் இன்சூரன்ஸை வைத்திருப்பதின் நன்மை என்னவென்றால் நீங்கள் எந்தவிதமான சேதங்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறீர்கள் என்பதாகும் . மேலும் , இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி , மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்து இருப்பது கட்டாயமாகும் . சரியான மோட்டார் இன்சூரன்ஸ் இல்லாமல் இந்திய சாலைகளில் வாகனத்தை ஓட்டுவது முற்றிலும் சட்டவிரோதமானது .

வாகனத்திற்கு நீங்கள் பெற நினைக்கும் பாதுகாப்பின் அடிப்படையில் மோட்டார் இன்சூரன்ஸ் வகைகள்

 மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருக்க வேண்டும் என எப்பொழுது திட்டமிட்டாலும் , நீங்கள் முதலில் உங்களின் தேவைகளை புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும் .   இந்தியாவில் பல்வேறு வகையான மோட்டார் இன்சூரன்ஸ்கள்   கிடைக்கின்றன . அவற்றில் சிறந்த ஒன்றை நீங்கள் பெற வேண்டும் என்றால் , முதலில் உங்களின் தேவையை புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் அதற்கேற்றவாறு தேட வேண்டும் . குறைந்த விலையில் பரந்த கவரேஜை வழங்கும் திட்டம் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் . அந்த முயற்சியில் , நீங்கள் சோழமண்டல எம்எஸ் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் எளிதாக அதனை பெறலாம் .  

கார் இன்சூரன்ஸ் : சொந்தமாக இருக்கும் ஒரு வீட்டிற்கு பிறகு , கார் ஆனது ஒரு நபருக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த பொருளாக இருக்கிறது . ஒரு சாதாரண சேதம் உங்களுக்கு அதிகமான நிதி சார்ந்த வலி , கவலையை உண்டாக்கும் மற்றும் அதேபோல் வாகனத்தை பழுதுபார்க்கும் கட்டணமும் உயர்ந்ததாக இருக்கலாம் . எனவே , ஒரு சிறந்த கார் இன்சூரன்ஸ் பாலிசியின் உதவி உடன் , பழுதுபார்க்கும் வேலைகளை எளிதாக முடிப்பதை நீங்கள்   பெற முடியும் . ஒரு பயனுள்ள மோட்டார் இன்சூரன்ஸ் ஆனது திருட்டு மற்றும் பல காரணத்தினால் உங்கள் காருக்கு ஏற்படும் சேதத்திற்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது . சோழமண்டலம் நிறுவனம்   குறைந்த விலையில் பயனுள்ள கார் இன்சூரன்ஸ் திட்டத்தை வழங்குகிறது . எனவே , நீங்கள் விரும்பியதை எளிதில் பெறலாம் .

வணிக வாகன இன்சூரன்ஸ் :   வணிக நோக்கத்திற்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் வணிக வாகனங்கள் சிறப்பு மோட்டார் இன்சூரன்ஸ் கவர் பெற பொறுப்பாகிறது . பஸ் , டாக்ஸி மற்றும் பயண தேவைகளுக்காக மக்களுக்காக பயன்படுத்தப்படும் பிற வாகனங்கள் போன்ற வணிக வாகனங்களுக்கு போதுமான மோட்டார் இன்சூரன்ஸ் தேவைப்படுகிறது . ஒரு வணிக வாகன இன்சூரன்ஸ் மூலம் , நீங்கள் பரந்த பாதுகாப்பை பெறலாம் . மேலும் , பல்வேறு மோசமான சந்தர்ப்பங்களை எளிதாக எதிர்கொள்ள முடியும் .

சோழமண்டலம் கார்   இன்சூரன்ஸ் பிளான்ஸ்

கார் இன்சூரன்ஸ்

இது எந்தவொரு எதிர்பாராத விபத்துக்களுக்கு எதிராக உங்கள் வாகனம் பத்திரமாக மற்றும் பாதுகாப்பாக இருப்பதையும் மற்றும் இதுபோன்ற எத்தவொரு சம்பவங்களின் போது உங்களின் செலவுகள் முழுமையாக கவர் செய்யப்பட்டு இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது . இது 24*7 நேர உதவி மற்றும் பணமில்லா சேவை வசதியையும் வழங்குகிறது .

முக்கிய நன்மைகள்

 • மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதங்கள் முற்றிலும் கவர் செய்யப்பட்டு இருக்கும் .
 • விபத்து அல்லது திடீர் பிரேக்டவுன் ஏற்படும் சூழ்நிலையில் உதவிகள் மற்றும் 24*7 நேர உதவி
 • க்ளைம் செட்டில்மெண்ட் செயல்முறை ஆனது எளிதான , மென்மையான மற்றும் தொந்தரவு இல்லாதது .
 • எளிதான க்ளைம்களுக்கு பரந்த பணமில்லா கேரேஜ்களின்   நெட்வொர்க் இருக்கின்றன .
 • உடனடியாக , ஆன்லைனில் பாலிசி வாங்கலாம் மற்றும் புதுப்பித்துக் கொள்ளலாம் .

சோழா ப்ரொடெக்ட்

  ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி நீங்கள் முன்னேறுவதற்காக உங்களின் வாகனத்திற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது .

முக்கிய நன்மைகள்

 • மொத்த நிதியியல் கவரேஜ் , எ . கா , மறுநிதியளிப்பு மதிப்பு / தேய்மானங்கள் இல்லை .
 • காருக்கான அவசர உதவி . எ . கா , எரிபொருள் விநியோகம் / பேட்டரி ஜம்ப் ஸ்டார்ட்
 • கார் பிரேக்டவுன் உதவி .   பிளாட் டயர் , ஆன் - சைட் ரிப்பேர் எ . கா , எரிபொருள் விநியோகம் / பேட்டரி டாப் அப் .
 • விபத்திற்கு பிந்தைய உதவி . எ . கா , தினசரி அலவன்ஸ் / இழுத்து செலுத்தும் சேவை .

சோழா வணிக வாகன இன்சூரன்ஸ்

இது வணிக வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான மோட்டார் இன்சூரன்ஸ் வகையாகும் .

முக்கிய நன்மைகள்

 • பணமில்லா க்ளைம் நெட்வொர்க்
 • இந்தியா முழுவதும் இருக்கும் 600- க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கேரேஜ் நெட்வொர்க் உதவி உடன்   பணமில்லா க்ளைம்
 • தள்ளுபடி
 • ஒவ்வொரு க்ளைம் - க்கு ரூ .10,000 உள்ள தனியுரிமைக்கு ஒப்புதல் வைத்து இருந்தால் ஓ . டீ பிரிமீயத்தில் நீங்கள் தள்ளுபடி பெறலாம் .
 • தனிநபர் விபத்து கவரில் உங்கள் காரில் பயணிக்கும் பயணிக்கு ஏதும் நேர்ந்தால் ரூ .2 லட்சம் வரை அளிக்க மற்றும் விபத்துக்கள் அல்லது பிரேக்டவுன் ஏற்படும் சூழ்நிலையில் 24/7 உதவிக்கும் விருப்ப கவர் உள்ளது .
 • ஆக்சிடெண்டல் கவர் / வாடிக்கையாளர் ஆதரவு

சோழா எம் கார் இன்சூரன்ஸின் நன்மைகள்

நீங்கள் உங்களின் கார் இன்சூரன்ஸிற்கு சோழா எம்எஸ் - ஐ தேர்வு செய்யும் பொழுது நீங்கள் பெறும்   பரந்த அளவிலான நன்மைகளின் பார்வை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன .

 • மூன்றாம் தரப்பினர் பாதுகாப்பு மற்றும் சொந்த சேதங்கள் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கான கவரேஜை வழங்குவதற்கான பொறுப்பை உடைய ஒரு பேக்கேஜ் பாலிசியை வழங்குகிறது .
 • மேலும் , இது மூன்றாம் தரப்பினரின் தனிப்பட்ட பொறுப்பு மற்றும் உடைமைகள் பொறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்றாம் தரப்பினர் பொறுப்பு கவரை வழங்குகிறது .
 • வாகனத்தின் உரிமையாளர் , ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கான தனிநபர் விபத்து கவரை வழங்குகிறது .
 • விபத்து , திருட்டு , கொள்ளை மற்றும் பல்வேறு அபாயங்களில் சிக்கி உங்கள் காருக்கு ஏற்படும் சேதங்களுக்கு எதிரான கவரேஜ்
 • இது தனிநபர் விபத்து கவரில் பயணிக்கு ரூ .2 லட்சம் வரையிலான தொகை அளிக்கும் விருப்ப கவரையும் கூட வழங்குகிறது .
 • நீங்கள் பழுதுபார்ப்பதற்கு நெட்வொர்க் கேரேஜ்களின் உதவியை பயன்படுத்தினால் , நீங்கள் பணமில்லா வசதியை பெறலாம் . இங்கே சோழா எம்எஸ் நெட்வொர்க் கேரேஜ்களின் பட்டியலில் 4500- கும் மேற்பட்ட கேரேஜ்கள் உள்ளன .
 • க்ளைம் செயல்முறை ஆனது தடையற்றது மற்றும் தொந்தரவு இல்லாதது
 • ஆன்லைனில் எளிதாக மற்றும் தொந்தரவு இல்லா செயல்முறை மூலம் கார் இன்சூரன்ஸ் வாங்க வழிவகை செய்கிறது .
 • ஆன்லைனில் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் செயல்முறை எளிதானது மற்றும் விரைவானது .  

இது எதை கவர் செய்யும் ?

சோழா எம்எஸ் கார் இன்சூரன்ஸ் ஆனது உங்கள் வாகனத்திற்கு எதிராக அளிக்கும் பாதுகாப்பு :

மூன்றாம் தரப்பு தனிப்பட்ட பொறுப்பு - இது வரம்பற்ற கவரேஜ் உடன்    இருக்கும் பயனுள்ள மூன்றாம் தரப்பினர் பொறுப்பு கவராகும் . வாகன இன்சூரன்ஸ் பாலிசி கீழ் இழப்பீடு பெறக்கூடிய உங்கள் வாகனத்தின் மூலம் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் விபத்து மரணங்கள் அல்லது காயங்களுக்கான உங்களின் பொறுப்பிற்கான தொகையை   நீதிமன்றம் மூலம் வழங்கப்படும் .

தனிப்பட்ட கார்களின் விஷயத்தில் , மூன்றாம் தரப்பினர் உடைமைகள் சேதங்கள் உடனான அதிகபட்ச கவரானது ரூ .7,50,000 ஆகும் .

சொந்த சேதங்கள் கவர் ஆனது பின்வரும் இழப்புகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது :

 • தீ , மின்னல் , தானாக பற்றிக் கொள்ளுதல் அல்லது வெடித்தல்
 • வேலைநிறுத்தம் அல்லது போராட்டம்
 • கொள்ளை , திருட்டு அல்லது வீட்டை உடைத்தல்
 • நிலநடுக்கம் ( அதிர்ச்சி சேதம் மற்றும் தீ )
 • பயங்கரவாத நடவடிக்கைகள்
 • நிலச்சரிவு மற்றும் பாறைச்சரிவு
 • தீங்கிழைக்கும் செயல்கள்
 • வெளிப்புற வழியாக நிகழும் ஆபத்துகள்
 • வெள்ளம் , வெள்ளப்பெருக்கு , புயல் , தட்பவெப்பம் , சூறாவளி , புயல் மற்றும் பனி மழை
 • கட்டண ஓட்டுனர்களுக்கு எல்எல்
 • ரெயில் , சாலை , உள்நாட்டு நீர்வழி , விமானம் அல்லது லிப்ட் உள்ளிட்டவை மூலம் பயணம் செய்யும் போது
 • உரிமையாளர் உடன் ஓட்டுனருக்கு இழப்பீடுகள் கொண்ட தனிநபர் விபத்து கவர்
 • இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனம் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தில் ஏற்படும் சட்ட பொறுப்புகள் .
 • மனைவி , குழந்தை , பெற்றோர்கள் ஆகியோர் உள்பட , பெயர் குறிப்பிட்ட & பெயர் குறிப்பிடாத பயணிக்கு பிஏ கவர் ( தனிப்பட்ட விபத்து கவர் )

கிடைக்கக்கூடிய பிற கவர்கள்

 • நோ க்ளைம் போனஸ் , ஆட்டோமொபைல் அசோசியேஷன் உறுப்பினர் தள்ளுபடி , ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப்   இந்தியாவின் (ARAI) மூலம் அனுமதிக்கப்பட்ட திருட்டு எதிர்ப்பு சாதனத்தை வாகனத்தில் பொருத்தி இருந்தால் கிடைக்கும் தள்ளுபடி போன்றவை கிடைக்கக்கூடிய தள்ளுபடிகளாகும் .
 • உங்கள் வாகனத்தின் மேம்பட்ட பாதுகாப்பிற்காக உங்களிடம் இருக்கும் இன்சூரன்ஸ் உடன் பரந்த அளவிலான கூடுதல் கவராக தனிப்பட்ட வாகனங்களுக்கான   ஆட் - ஆன் ( சேர்க்கப்படும் கவர்கள் ) கவர்களை வழங்குகிறது .
 • நிலையான தினசரி அலவன்ஸ் - ஒரு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தின் பழுதுபார்த்தலின் போது , ஒரு காரை வாடகைக்கு எடுப்பதற்காக ( பாலிசி காலம் மூலம் அதிகபட்சம் 5 நாட்களுக்கு ) செலவுகளை சந்திக்க ரூ .500 அல்லது ரூ .1000 என தினசரி அலவன்ஸ் தாக்கல் செய்யலாம் .
 • மறுநிதியளிப்பு மதிப்பு - இது அதிகபட்ச க்ளைம் நன்மை பற்றி உறுதி செய்யும் -   வாகன விலைப் பட்டியல் மதிப்பின் அடிப்படையில்   இழப்பீட்டுடன் முழு கார் முதலீட்டு பாதுகாப்பு மற்றும் வாகன பாகங்கள் மாற்றப்படுவதில் பூஜ்ஜிய தேய்மான கட்டணங்கள் .
 • பகுதி இழப்புகளுக்கு தேய்மானத்தில் குறைப்பதில் இருந்து விலக்கு - இதேபோன்ற பகுதி இழப்புகளான வாகனத்தின் பாகங்களை மாற்றிக்கொள்வதற்கு , வாகனத்தின் வயதை அடிப்படையாக கொண்டு கவரை பெறுவதற்கு பொறுப்பாகலாம் .
 • தனிப்பட்ட பொருட்கள் மற்றும் ஆடைகளுக்கான கவர் - அவருக்கான அதிகபட்ச திருப்பி செலுத்தும் ( அளிக்கும் தொகை ) அளவு ஒரு பாலிசி காலத்தின் கீழ் ரூ .10000 அளவிற்கு இருக்கும் .
 • வாகனத்திற்கான நகல் சாவியை வழங்கும் கவருக்கு அதிகபட்சமாக ரூ .1000 என்ற அளவிற்கு திருப்பி அளிக்கும் .
 • லைட் மோட்டார் வாகனத்தின் அசல் ஓட்டுநர் உரிமம் இழந்த நேரத்தில் , நகல் உரிமம் ( நிலையான தொகை ரூ .500) பெறுவதற்கான இழப்பீடு
 • சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களுக்கான கவர்
 • சாலையோர அவசரநிலைக்கு சோழா உதவிகள் - 24*7 நேர சம்பந்தப்பட்ட இடத்திற்கான உதவி கிடைக்கும் , அவை எரிபொருள் விநியோகம் மற்றும் பேட்டரி டாப் - அப் , கார் பிரேக்டவுன் உதவிகளாக பிளாட் டயர் பொருத்துதல் அல்லது ஆன் - சைட் ரிப்பேர் போன்றவை அடங்கும் .

கார் இன்சூரன்ஸ் வாங்க உங்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள்

 • வாகனப் பதிவு விவரங்கள்
 • சேசிஸ் எண்
 • உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு
 • உள்ளூர் அதிகாரிகள்   மூலம் வர்த்தக வாகனத்திற்கு மட்டும் வழங்கப்பட்ட உடற்தகுதி சான்றிதழ் . நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஆன்லைனில் ஒப்பீடுகையில் உங்களுக்கு தேவையான ஆவணங்கள் தயாராக இருக்க வேண்டும் . நீங்கள் இங்கே புதுப்பிக்க போவதாக இருந்தால் , உங்களின் பழைய பாலிசியை கட்டாயம் வைத்து இருக்க வேண்டும் . புதுப்பிக்கும் நேரத்தின் போது , நோ க்ளைம் போனஸ் மற்றும் மேலும் பல்வேறு வகையான தள்ளுபடிகளுக்கு நீங்கள் தகுதி பெற்று இருக்கலாம் .  

கார் இன்சூரன்ஸ் பாலிசியின் விலக்குகள்

பின்வரும் காரணங்களால் விபத்துக்கள் நேர்ந்து எந்தவொரு இழப்புகளும் நிகழக் கூடும் . இவற்றின் மூலம் நிகழும் இழப்புகள் பாலிசியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் .

 1. வாகனத்தின் ஓட்டுநர் ஆல்கஹால் அல்லது போதை பொருட்களை பயன்படுத்தி இருந்தால் .
 2. உங்கள் பாலிசியின் மூலம் வரையறுக்கப்படாத நோக்கங்களுக்கு அல்லது சட்ட விரோத நோக்கங்களுக்காக உங்களின் வாகனம் பயன்படுத்தப்படும் போது .
 3. ஓட்டுநர் சரியான ஓட்டுநர் உரிமம் இன்றி   வாகனத்தை இயக்கும் பொழுது . இந்தியாவில் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதை உடைய நபர் ஓட்டுநர் உரிமம் பெற தகுதி உடையவர் .

சோழமண்டலம் எம் எஸ் கார் இன்சூரன்ஸ் மூலம் வழங்கப்படும் தள்ளுபடிகள்

சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆனது பாலிசிதாருக்கு கிடைக்கக்கூடிய பல கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குகிறது .

நோ க்ளைம் போனஸ் : நோ க்ளைம் போனஸ் அல்லது என்சிபி என்பது அடிப்படையில் கார் இன்சூரன்ஸ்களின் தள்ளுபடியில் பிரபலமான வடிவமாகும் . ஒவ்வொரு க்ளைம் தாக்கல் இல்லாத ஆண்டிற்கு , பாலிசி புதுப்பிக்கும் நேரத்தின் போது பிரீமியத்தில் குறைக்கப்படும் மிகப்பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும் . முதல் க்ளைம் இல்லா ஆண்டிற்கு , உங்களின் இரண்டாம் ஆண்டு பிரீமியத்தில் 20% தள்ளுபடியை பெறுவீர்கள் . இது அதிகரித்து வருகிறது . பின்வரும் அட்டவணையில் விவரங்கள் வழங்கப்பட்டு உள்ளன .

பிற தள்ளுபடிகள் : சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் பல்வேறு பிற தள்ளுபடிகளையும் வழங்கி வருகிறது .

 • நீங்கள் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் அசோசியேஷனின் உறுப்பினராக உள்ளீர்கள் என்றால் .
 • உங்கள் காரில் திருட்டு எதிர்ப்பு சாதனம் ( அன்டி தேஃப்ட் டிவைஸ் ) பொருத்தி இருந்தால் .

க்ளைம் செட்டில்மெண்ட்

 • சோழமண்டலம் எம்எஸ் நிறுவனத்தின் 1800-200-5544 என்ற இலவச சேவை எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் .
 • முறையாக கையெழுத்திட்ட க்ளைம் கோரிக்கை படிவத்துடன் க்ளைம் - ஐ சமர்ப்பிக்கவும் .
 • ஓட்டுநர் உரிமம் , ஆர்சி புக் , பாலிசி ஆவணங்களின் நகல்கள்
 • தேவைப்பட்டால் எஃப் . ஐ . ஆர் பதிவு ( விபத்தில் சம்பந்தபட்ட வாகனத்தின் எண் மற்றும் அந்த நபரின் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை குறித்துக் கொள்ளவும் ).
 • அசல் பழுதுபார்க்கும் மதிப்பீட்டு பில்கள்
 • பணமில்லா சர்வீஸ் சூழ்நிலைகளில் , நீங்கள் விலைப்பட்டியல் ரசீதை வழங்க வேண்டி இருக்கும் .

மறுநிதியளித்தல் ( திருப்பி வழங்கல் ) சந்தர்ப்பத்தில் , மதிப்பீட்டு பில் , அசல் விலைப்பட்டியல் மற்றும் கட்டண ரசீதுகள் போன்றவற்றை சமர்பிக்க வேண்டும் .

- / 5 ( Total Rating)