ஃபியூச்சர் ஜெனரலி கார் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

ஃபியூச்சர் ஜெனரலி இந்திய இன்சூரன்ஸ் ஆனது அடிப்படையில் ஃபியூச்சர் குரூப் மற்றும் 184 ஆண்டுகள் வயதைக் கடந்த உலகத்தின் 50 மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் உலகளாவிய இன்சூரன்ஸ் நிறுவனமான ஜெனரலி குரூப் இடையே ஒரு கூட்டு முயற்சியில் உருவானதாகும். 2007 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் இந்நிறுவனமானது செலவினங்கள் வெடிக்கும் விளிம்பில் இருந்த நாட்டிற்கு பரிமாறுதலை நோக்கமாக கொண்டு நிறுவப்பட்டது. இந்திய நிபுணத்துவம் மற்றும் ஃபியூச்சர் குரூப் நெட்வொர்க் மற்றும் பல்வேறு தயாரிப்புகளில் இருந்து சர்வதேச இன்சூரன்ஸ் நுண்ணறிவு ஆகியவற்றால் ஃபியூச்சர் ஜெனரலி இந்தியா பொருத்தமான ஆதாயத்தைக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் பார்வையானது, தீவிரமாக பாதுகாப்பதோடு, மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதாகும்.

இந்தியாவில் கட்டாயமாக்கப்படும் மிக முக்கியமான இன்சூரன்ஸில் மோட்டார் இன்சூரன்சும் ஒன்றாகும். நீங்கள் சொந்தமாக வாகனத்தை வைத்து இருந்தால், இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஓர் மோட்டார் இன்சூரன்ஸ் வைத்து இருப்பது இந்தியாவில் கட்டாயமாகிறது. ஃபியூச்சர் ஜெனரலி ஆனது விரைவான க்ளைம் சர்வீஸ், 900 வசதியான கேரேஜ்களில் பணமில்லா வசதியை வழங்குகிறது. சிறந்த வாகன இன்சூரன்ஸ் உடன், நீங்கள் சாலையோர உதவியை கூட பெற முடியும். இது விபத்து , திருட்டு அல்லது எதிர்பாராத சூழ்நிலையில் ஏற்படக்கூடிய எந்தவொரு சேதங்களுக்கு எதிராக உங்கள் வாகனத்திற்கு நிதி சார்ந்த பாதுகாப்பினை வழங்கி உதவி செய்கிறது .

இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் படி, வாகன இன்சூரன்ஸ் பெற வேண்டியது கட்டாயமாகும். உங்களின் கார் திருட்டு போனால் அல்லது சேதமடையும் சந்தர்ப்பங்களில் நிதி ஆதரவு வழங்கும் ஒரு பயனுள்ள விசயமாக இருக்கும். மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை கொண்டிருக்கும் பொழுது, ஃபியூச்சர் ஜெனரலி ஆனது சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் பரந்த அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது. ஆகையால், நீங்கள் மற்றும் உங்களின் வாகனம் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்கும்.

கார் இன்சூரன்ஸின் முக்கியத்துவம்

 • நீங்கள் கார் இன்சூரன்ஸின் முக்கியத்துவம் பற்றி அறிந்து இருக்க வேண்டும். அதேபோல், வாங்குவதற்கான பல காரணங்களும் உள்ளன.
 • நீங்கள் வாகன இன்சூரன்ஸ் வைத்து இல்லாததை காவல் அதிகாரிகள் கண்டால், அவர்களால் உங்கள் வாகனத்தை பறிமுதல் செய்து கொள்ள முடியும் மற்றும் அதற்காக பெரிய அளவில் அபராதங்களை விதிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 • வாகன இன்சூரன்ஸ் அவசியம் தேவைப்படக்கூடிய மிக முக்கியமான விசயம், உங்களின் கார் ஆனது விபத்து, திருட்டு அல்லது பல எதிர்பாராத சந்தர்பங்களில் சேதமடையும் பொழுது அதற்கு எதிரான நிதியியல் பாதுகாப்பை வழங்குகிறது என்பதாகும்.
 • இதைத் தவிர, மாற்றி கொள்தல், பூட்டப்பட்ட காரில் இருந்து தனிப்பட்ட உடமைகள் இழப்பு, மூன்றாம் தரப்பினர் பொறுப்பு கவரேஜ், ஒரு மோசமான சூழ்நிலையில் இருந்து உங்களையும், உங்கள் காரையும் பாதுகாக்கும் என்ற விரிவான கவரேஜ் உள்ளிட்ட பல விசயங்களை உள்ளடக்கி உள்ளது.  

ஃபியூச்சர் ஜெனரலி கார் இன்சூரன்ஸ் - முக்கிய நன்மைகள்

நாம் மேலே விவாதித்த மூன்றாம் தரப்பினர்  பொறுப்பு கவரேஜ் மற்றும் விரிவான கவரேஜ் ஆகியவற்றைத் தவிர்த்து, இது பின்வரும் பல விசயங்களை உள்ளடக்கி கவர் செய்து உள்ளது.

 • தேய்மான கவர்
 • இந்த கவர் ஆனது மாற்றப்பட்ட வாகனத்தின் பாகத்திற்கான மதிப்பில் தேய்மானத்திற்கான எந்தவொரு தொகை குறைப்பும் இல்லாமல் முழுமையான க்ளைம்-ஐ வழங்குகிறது.
 • மூன்றாம் தரப்பினர் கவர்
 • மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் காயங்கள்/இறப்புகளுக்கான பொறுப்பு, மூன்றாம் தரப்பினரின் உடைமைகள் மற்றும் சட்டபூர்வ செலவுகள் ஆகியவற்றிற்கு அதிகபட்சமாக 7,50,000 க்ளைம் கொண்டு பாதுகாத்துக் கொள்ள முடியும்.
 • தனிப்பட்ட விபத்து கவர்
 • ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் தொகை வரை அதிகபட்ச மூலதன உறுதி தொகை உடன் வாகனத்தில் பயணிக்கும் பயணிக்கு(பெயர் குறிப்பிட்ட அல்லது குறிப்பிடாத) தனிப்பட்ட விபத்து கவர்.

மோட்டார் இன்சூரன்ஸ் கீழ் முக்கியமாக இரண்டு வகையான கவரேஜ்கள் உள்ளன.

மூன்றாம் தரப்பு பொறுப்பு கவரேஜ் : இந்தியாவில் மூன்றாம் தரப்பினர் பொறுப்பு கவரேஜ் கட்டாயமாகும். இது உங்களின் மூலம் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்களை உள்ளடக்கி உள்ளது. இந்த கவர் ஆனது வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களை உள்ளடக்கி இருக்காது.

விரிவான கவரேஜ் : வாகனமானது திருடப்படுவது, வெளிப்புற சேதங்கள், இயற்கை பேரழிவுகள், மற்றவை மூலம் பயணிக்கும் பொழுது ஏற்படும் சேதங்கள் முதலிய வாகன சேதமடையும் சந்தர்ப்பங்களில் உங்களுக்கு நிதி சார்ந்த ஆதரவை வழங்குவதற்கான கவரேஜ் ஆகும்.

பிரீமியம், கூடுதல் நன்மைகள், தள்ளுபடிகள் மற்றும் பல போன்ற பல விசயங்களை உங்களின் கார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கும் பொழுது நிச்சயம் சரிபார்க்க வேண்டி இருக்கும். PolicyX.com இல், பாலிசி குறித்த முழு தகவலையும் நாங்கள் உங்களுக்கு வழங்குவோம் . மேலும், நீங்கள் ஆன்லைனில் கார் இன்சூரன்ஸ் மேற்கோள்களை ஒப்பிட அனுமதிக்கிறோம். இத்தகைய ஒப்பிடுதல் , டாப் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து சிறந்த கார் இன்சூரன்ஸ் பெற உங்களுக்கு உதவி புரியும்.

ஃபியூச்சர் ஜெனரலி இந்தியா கார் இன்சூரன்ஸ் பிளான்

இது உங்கள் வாகனத்துடன் தொடர்புடைய எந்தவொரு அவசரநிலை சந்தர்ப்பங்களில் திருட்டு அல்லது சேதங்கள் என இரண்டில் ஏதுவாக இருப்பினும் கிட்டத்தட்ட ஒவ்வொரு செலவையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டமானது உங்கள் சேமிப்பைக் குறைக்காமல் உங்கள் வாகனம் முழுவதற்கும் பாதுகாப்பை வழங்குகிறது.

கார் இன்சூரன்ஸ் வாங்குவதனால் நண்மைகள் :   

ஒரு கார் இன்சூரன்ஸ் வைத்து இருக்கும் பொழுது பின்வருபவை போன்ற பல்வேறு நண்மைகள் உள்ளன.

 • இது 24/7 மணி நேர விபத்து உதவியை வழங்குகிறது.
 • சாலையோர உதவி
 • தனிப்பட்ட உடைமைகள் இழப்பு
 • எஞ்சின் மற்றும் எலெக்ட்ரானிக் சர்க்யூட் கவர்
 • பழுதுபார்த்தல் உத்தரவாதம்
 • கூடுதல் தள்ளுபடிகள்
 • மாற்றிக்கொள்ளும் கவர்கள்
 • பூஜ்ஜிய தேய்மானங்கள் கவர்

ஃபியூச்சர் ஜெனரலி இன்சூரன்ஸ் வழங்கும் பிற திட்டங்கள்

 • டூவீலர் இன்சூரன்ஸ்
 • ட்ராவல் இன்சூரன்ஸ்
 • ஹெல்த் இன்சூரன்ஸ்
 • ஹோம் இன்சூரன்ஸ்
 • கமெர்சியல் இன்சூரன்ஸ்
 • கிராமப்புற/சோசியல் இன்சூரன்ஸ்

ஃபியூச்சர் ஜெனரலி கார் இன்சூரன்ஸ்-ஆட்-ஆன் கவர்ஸ்

க்ளைம் செயல்முறையை எளிதாக்கும் விதத்தில், ஃபியூச்சர் ஜெனரலி மோட்டார் இன்சூரன்ஸ் ஆனது ஃபியூச்சர் எக்ஸ்பிரஸ் மற்றும் ஃபியூச்சர் எக்ஸ்பிரஸ்+ ஆகியவற்றை வழங்கி வருகிறது. ஃபியூச்சர் எக்ஸ்பிரஸ் என்பது பழுது சேவைகள், குறைக்கப்பட்ட செலவுகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் ஆகியவற்றிக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு மிகவும் சிறந்ததாகும். ஃபியூச்சர் எக்ஸ்பிரஸ்+ என்பது உடனடி இழப்பு மதிப்பீடுகள் மற்றும் க்ளைம் இறுதி முடிவு ஆகியவற்றை தேடுபவர்களுக்காக உள்ளது. அதே சமயத்தில், வாகனத்தை பழுதுபார்க்கும் ஒர்க்சாப்  தேர்ந்தெடுக்கும் விருப்பத்தையும் உங்களுக்கு அளிக்கப்படுகிறது.

ஃபியூச்சர் ஜெனரலி இந்தியா ஆனது 3 வெவ்வேறு முன் வரையறுக்கப்பட்ட தொகுப்புகளுடன் பல்வேறு கூடுதல் இணைப்பு கவர்களை(ஆட்-ஆன் கவர்) வழங்குகிறது. அந்த தொகுப்புகள் :

 • சில்வர் - இது தேய்மான மூடல், ஐடிவி மற்றும் நுகர்வோர் கூடுதல்-இணைப்பு(ஆட்-ஆன்) கவர்களை வழங்குகிறது.
 • கோல்டு - இது சில்வர் தொகுப்பு உடன் கூடுதல் ஆட்-ஆன் கவர்களை சேர்த்து வழங்குகிறது. கோல்டு தொகுப்பு ஆனது தனிப்பட்ட விபத்து, தனிப்பட்ட உடைமைகள் இழப்புகள் மற்றும் சாவி இழப்பு உள்ளிட்ட கூடுதல் இணைப்பு கவர்களை வழங்குகிறது.
 • பிளாட்டினம் - இது கோல்டு தொகுப்பு உடன் கூடுதல் ஆட்-ஆன் கவர்களை சேர்த்து வழங்குகிறது. இந்த பிளாட்டினம் தொகுப்பு ஆனது சிரமத்திற்கான அலவன்ஸ் மற்றும் தனிநபர் பொறுப்பு ஆட்-ஆன் கவர் போன்றவற்றை வழங்குகிறது. அவை
 • தேய்மான மூடல் - இது அடிப்படையில் அளிக்கும் கூடுதல் நன்மைகளை, உங்கள் வாகனத்தின் பாகங்களின் தேய்மான மதிப்பிற்கு எதிராக உங்களுக்கு அளிக்கிறது மற்றும் நீங்கள் முழு அளவு க்ளைம்-ஐ பெற உறுதி செய்கிறது.
 • இந்த கூடுதல் இணைப்பு உங்கள் வாகனப் பகுதியின் தேய்மான மதிப்பிற்கு எதிரான பாதுகாப்பாகும் மற்றும் நீங்கள் முழு அளவிலான க்ளைம் தொகையை பெறவதையும் உறுதி செய்கிறது.
 • ஐடிவி - அதே போன்று, நீங்கள் ஐடிவி ( விலைப்பட்டியல் மதிப்பு + பதிவு + வாகனத்தின் சாலை வரி) -ஐ அணுகவும் முடியும்.
 • நுகர்பொருட்கள் - நீங்கள் வாகனத்திற்கு வாங்கும் நுகர்பொருட்களுக்கான வழங்கப்படும் செலவினங்களின் தொகை (அதிகபட்ச தொகை ரூ.3000) திரும்ப பெறுவீர்கள்.
 • தனிநபர் விபத்து - இந்த நன்மைகள் பாலிசியின் உரிமையாளருக்கு  ரூ.50 லட்சம் வரை கவர் செய்து வழங்கப்படுகிறது.
 • தனிப்பட்ட உடைமைகள் இழப்பு - இது உங்கள் வாகனத்தில் வைத்து இருக்கும் தனிப்பட்ட உடைமைகள் போன்றவற்றிக்கு ஏற்படும் இழப்புகளுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. இதற்கான அதிகபட்ச தொகை வரம்பு ரூ.50,000 வரை இருக்கும்.
 • சாவி இழப்பு - அதே போன்று, நீங்கள் 50,000 ரூபாய் வரையிலான கவரை பெறுவீர்கள் .  
 • சிரமத்திற்கான அலவன்ஸ் - வாகனத்தில் பிரேக்டவுன் போன்ற சூழ்நிலையில், நீங்கள் போக்குவரத்து குறித்து கவலைக் கொள்ள தேவையில்லை. 15 நாட்களுக்கு தினசரி அடிப்படையில் ரூ.3000-த்தை  தினசரி அலவன்ஸ் ஆக பெறுவீர்கள்.
 • தனிநபர் பொறுப்பு - இது பாலிசி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் பொறுப்பை வழங்குகிறது.

ஃபியூச்சர் ஜெனரலி கார் இன்சூரன்ஸ் - தள்ளுபடி

 • ஒவ்வொரு க்ளைம் தாக்கல் இல்லாத ஆண்டிற்கு, உங்களின் சொந்த சேதங்கள் பிரீமியத்தை மீது 50 சதவீத தள்ளுபடியை வழங்கும் நோ க்ளைம் போனஸ்-ஐ நீங்கள் பெறுவீர்கள். ஆனால், அதே நேரத்தில் உங்களின் பாலிசி காலாவதியாகும் தேதியின் 90 நாட்களுக்குள் மீண்டும் புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
 • நீங்கள் அங்கீகாரம் பெற்ற ஆட்டோமொபைல் அசோசியேஷனின் உறுப்பினராக இருந்தால், உங்கள் பிரீமியம் தொகையில் சில நல்ல தள்ளுபடிகளை நீங்கள் பெறுவீர்கள்.
 • உங்கள் வாகனத்தில் ARAI (ஆட்டோமொபைல் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப்  இந்தியா) மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திருட்டு எதிர்ப்பு சாதனத்தை (அன்டி தேஃப்ட் டிவைஸ்) உங்கள் வாகனத்தில் பொருத்தி இருந்தால், உங்கள் சொந்த சேதங்கள் பிரீமியத்தில்  2.5% அளவிற்கு தள்ளுபடியை பெறுவீர்கள், அந்த தொகை அதிகபட்சம் ரூ.500 ஆக இருக்கும்.
 • மறுபடியும் அறிவுறுத்துகிறோம், இந்திய அரசாங்கத்தால் குறிப்பிட்டவாறு, இந்தியாவில் கார் இன்சூரன்ஸில் முதலீடு செய்வது அவசியம் என்பதை உங்களின் நினைவில் வையுங்கள். எனவே, தயவு செய்து சட்டத்தை பின்பற்றி, உங்களின் காருக்கு உடனடியாக இன்சூரன்ஸ் செய்து கொள்ளுங்கள்.

ஃபியூச்சர் ஜெனரலி இன்சூரன்ஸிற்கு தேவையான ஆவணங்கள்

 • புதிய கார் இன்சூரன்ஸிற்கு தேவையான ஆவணங்கள்
 • வாகன பதிவு சான்றிதழின் அசல்/நகல்
 • விலைப்பட்டியலின் நகல் மற்றும் கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரம் (புதிய கார் வாங்குவதற்கு)
 • சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தின்  அசல்/நகல்
 • இருப்பிடம் மற்றும் தொடர்பு விவரங்களுக்கான சான்றுகள். பான் மற்றும்/அல்லது அடையாள  சான்றின் நகல்

க்ளைம் விண்ணப்பிக்கும் காலத்தில் தேவையான விண்ணப்பங்கள்

 • ஃபியூச்சர் ஜெனரலி உடன் ஒரு க்ளைம்-ஐ தாக்கல் செய்வதற்கு முன்பு, க்ளைம் நடைமுறை குறித்து சில விசயங்களை நினைவில் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
 • நீங்கள் க்ளைம் தாக்கல் செய்யும் பொழுது தேவையான ஆவணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 • கார் இன்சூரன்ஸ் பாலிசியின் நகல்
 • கையெழுத்திட்டு பூர்த்தி செய்யப்பட்ட க்ளைம் படிவம் மற்றும் க்ளைம்  அறிவிப்பு கடிதம்
 • ஓட்டுநர் உரிமத்தின் நகல்
 • வாகனத்தின் பதிவு சான்றிதழின் அசல்/நகல்
 • பணம் திரும்பப் பெறுவதற்கான மற்றும் பணமில்லா க்ளைம்களுக்கான  ஆகிய இரண்டிற்கான விலைப்பட்டியல் உடன் கட்டண ரசீதுகளின் ஆதாரங்கள் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
 • மூன்றாம் தரப்பினரின் உடைமைகள்/சொத்துகளுக்கு சேதங்கள் ஏற்பட்டால் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் இன் நகல்
 • அங்கீகரிக்கப்பட்ட சர்வேயர் மூலம் வழங்கப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை.
 • கேரேஜ்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் பழுது குறித்த மதிப்பீடு.

ஒரு கார் இன்சூரன்ஸ் பாலிசி கவரில் என்ன இருக்கும்

மூன்றாம் தரப்பினர் பொறுப்பு கவரேஜ் மற்றும் விரிவான கவரேஜ் ஆகியவற்றை தவிர்த்து, ஃபியூச்சர் ஜெனரலி பின்வருமாறு உள்ள பல்வேறு பிற நன்மைகளையும் கொண்டு உள்ளன.

 • பூஜ்ஜிய தேய்மான கவர் : உங்கள் வாகனத்தில் எந்தவொரு பாகத்தையும் மாற்றிக் கொள்ள விரும்பும் பொழுது  இது உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதனுடன் தொடர்புடைய முழு செலவையும் இன்சூரன்ஸ் கவரில் பெற பொறுப்பாக இருக்க முடியும் . ஆனால், நீங்கள் பூஜ்ஜிய தேய்மான கவரை தேர்ந்தெடுக்கவில்லை என்றால், நீங்கள் அடிப்படை விரிவான  கவர் கீழ் குறைக்கப்பட்ட தேய்மான மதிப்பை பெறுவீர்கள்.
 • சாலையோர உதவி : கார் இன்சூரன்ஸ் ஆனது நீங்கள் காரில் பயணித்துக் கொண்டு இருக்கும் பொழுது ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகளில் உங்களுக்கு காரினை இழுத்து செல்லுதல் உள்ளிட்ட பல நண்மைகளை வழங்கி உதவி புரிகிறது.
 • மாற்றுவதற்கான கவர்கள் : பழுது பார்க்கும் சேவை மற்றும் உங்கள் காரை மாற்றிக் கொள்ளுதல் உள்ளிட்டவையை கவனித்துக் கொள்ளும் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. ஆனால், இது ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து மற்றொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மாறுபடும்.
 • விலைப்பட்டியலுக்கு திருப்பி அளித்தல் : அதேபோல், சேதமடைந்த காருக்கு முழு மதிப்பையும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் . ஒரு இன்சூரன்ஸ் செய்த நபர், இந்த அம்சத்தின் நன்மையை உங்கள் பாலிசியின் முதலாம் ஆண்டில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 • தனிப்பட்ட உடமைகளின் இழப்புகள் : இதன் கீழ், பூட்டப்பட்ட காரில் இருந்து எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட தனிப்பட்ட உடைமைகளின் இழப்புகளுக்கான கூடுதல் நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள்.
 • எஞ்சின் & எலக்ட்ரானிக் சர்க்யூட் கவர் : குறிப்பாக, வெள்ளம் போன்ற சூழ்நிலைகளில் வாகனத்தின் எஞ்சின் & எலக்ட்ரானிக் சர்க்யூட் ஆகியவற்றிற்கான முழுமையான பாதுகாப்பை அளிக்கிறது.

க்ளைம் செயல்முறை

ஃபியூச்சர் ஜெனரலிக்கு

தகவல்

தெரிவிக்கவும்

க்ளைம் விண்ணப்பிக்கும் செயல்முறையின் முதல் படிநிலை, நடந்த சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நீங்கள் எஸ்எம்எஸ் வழியாகவும் கூட தகவலை தெரிவிக்கலாம். நீங்கள் க்ளைம் விண்ணப்பிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருந்தால், இணையதளத்தில் இருந்து க்ளைம் படிவத்தை பதிவிறக்கம்(டவுன்லோடு) செய்து கொள்ளவும்.

உங்களின் விவரங்களை தயாராக வைத்து இருங்கள்

நீங்கள் ஃபியூச்சர் ஜெனரலிக்கு தகவல் தெரிவித்த பிறகு, பின்வரும் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.


 • பாலிசி எண்
 • உங்களின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ளும் எண்
 • விபத்து நிகழ்ந்த நேரத்தில் வாகனத்தை இயக்கியவரின் பெயர்
 • விபத்து குறித்த விளக்கம் மற்றும் விபத்து நடந்த பகுதி
 • விபத்து நடந்த நாள் மற்றும் நேரம்
 • உங்கள் வாகனம் இருக்கும் இடத்தின் விவரம்

உங்களின் ஆவணங்களை சமர்ப்பிக்கவும்

அடுத்த நிலையாக நீங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். பின்வரும் ஆவணங்களை உள்ளடக்கி சமர்ப்பிக்க வேண்டும்.


 • வாகனத்தின் புகைப்படங்கள்
 • சேதத்தின் மதிப்பீடு
 • சர்வே கட்டணத்தின் பில்கள்
 • சர்வே அறிக்கை
 • மறு-சோதனை அறிக்கை மற்றும் துணை அறிக்கை
 • இறுதி பழுது பார்த்தலின் விலைப்பட்டியல்

ஃபியூச்சர் ஜெனரலி இன்சூரன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளருக்கு எளிதாக வழங்குவதாக நம்பிக்கை கொள்கிறது. ஆகையால், க்ளைம் விண்ணப்பிப்பதை மிக எளிதாக வைத்து உள்ளனர்.

- / 5 ( Total Rating)