எச்டிஎஃப்சி எர்கோ கார் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

கார் காப்பீட்டு பிரீமியத்தை ஒப்பிடுக

அல்லது

எச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆனது எச்டிஎஃப்சி லிமிடெட் மற்றும் முனிச் ரீ குரூப் உடைய முக்கிய இன்சூரன்ஸ் பகுதியான எர்கோ இன்டர்நேஷனல் ஏஜி ஆகியவற்றிற்கு இடையே உருவாக்கப்பட்ட கூட்டு முயற்சியாகும். இது பரந்த அளவிலான மோட்டார், ஹெல்த் மற்றும் ட்ராவல் இன்சூரன்ஸ் தயாரிப்புகளை வழங்குகிறது. அதேபோல் பொறுப்பு, மரைன் மற்றும் சொத்து இன்சூரன்ஸ் தயாரிப்புகளையும் கூட வாடிக்கையாளர்கள் வாங்கலாம். ஐசிஆர்ஏ லிமிடெட் நிறுவனத்தால் " ஐஏஏஏ " என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் க்ளைம் சேவைகள், பாலிசி வெளியீடு மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான ஐஎஸ்ஓ சான்றிதழையும் பெற்றுள்ளது. இந்நிறுவனம் தனது கிளைகளை 106-க்கும் மேற்பட்ட நகரங்களில் பரப்பியுள்ளது. இவற்றின் அனைத்து தயாரிப்புகளிலும், கார் இன்சூரன்ஸ் மிகவும் விருப்பமான ஒன்றாகும். இந்நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல கார் இன்சூரன்ஸ் தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

சிறப்பம்சங்கள்

13-08-2020 அட்டவணை புதுப்பிக்கப்பட்டது

க்ளைம் விகிதம்

90.35%

மூன்றாம் தரப்பு பொறுப்பு கவர்

7.5 லட்சம் வரை

நெட்வொர்க் கேரேஜ்கள்

6800+

உங்கள் எச்டிஎஃப்சி எர்கோ கார் இன்சூரன்ஸை எவ்வாறு புதுப்பிப்பது?

பாலிசிஎக்ஸ்.காம் (PolicyX.com) மூலமாகவோ அல்லது எச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்திற்கு செல்வதன் மூலமாகவோ உங்கள் பாலிசியை புதுப்பிக்க (ரினியூவல்) முடியும். அவற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

பாலிசிஎக்ஸ்.காம் வழியாக புதுப்பித்தல்

 • பாலிசிஎக்ஸ்.காம் பக்கத்தின் மேலே பட்டியலிடப்பட்டுள்ள " கார் இன்சூரன்ஸ் மேற்கோள்களை ஆன்லைனில் ஒப்பீடு " பிரிவிற்கு ஸ்க்ரோல் செய்யவும்.
 • உங்கள் வாகனத்தின் விவரங்களை வழங்கிய பின், " மேற்கோள்களைப் பெறு " என்ற டப்பை கிளிக் செய்க. " கார் எண் இல்லாமல் தொடரவும் " என்பதைக் கிளிக் செய்ய மற்றும் மேற்கோள்கள் பகுதியைப் பார்வையிட விவரங்களை நிரப்பவும் உங்களுக்கு விருப்பம் உள்ளது.
 • நீங்கள் புதுப்பிக்க விரும்பும் எச்டிஎஃப்சி எர்கோ கார் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்வுசெய்க.
 • வெவ்வேறு கட்டண முறைகள் வழியாக பணம் செலுத்துங்கள்.
 • நீங்கள் இமெயில் மூலம் பாலிசியின் ஆவணத்தைப் பெறுவீர்கள்.

எச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் இணையதளம் வழியாக புதுப்பித்தல்

 • எச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 • கீழே நகர்ந்து, " புதுப்பித்தல் " டப்பை கிளிக் செய்க.
 • பாலிசி எண், தொலைபேசி எண் அல்லது இமெயில் ஐடி போன்ற அடிப்படை விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
 • " இப்போது புதுப்பிக்கவும் " என்ற டப்பைக் கிளிக் செய்க.
 • உங்கள் திட்டத்தின் விவரங்களை சரிபார்க்கவும்.
 • வெவ்வேறு கட்டண முறைகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்துங்கள்.
 • உங்கள் இமெயில் ஐடி-க்கு பாலிசியின் ஆவணங்களைப் பெறுவீர்கள்.

எச்டிஎஃப்சி எர்கோ கார் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

எச்டிஎஃப்சி எர்கோ ஆனது வாடிக்கையாளர்களுக்கு பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் நன்மையை அளிக்கக்கூடிய தளமாகும். இதன் பல விருப்பங்களால், உங்களுக்காக சிறந்த திட்டத்தைப் பெறுவது உங்களுக்கு எளிதான காரியமாகும். இது மிகப்பெரிய காகித வேலைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும் மற்றும் உங்கள் நிதிப் பாதுகாப்பிற்கு எந்த ஆபத்தும் இல்லாமல் டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / நெட் பேங்கிங் / மற்றவை வழியாக பணம் செலுத்த உங்களுக்கு வழிவகைச் செய்கிறது. இவற்றின் பிற நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன : -

வாடிக்கையாளர் ஆதரவு - வாடிக்கையாளர்களுக்கு தொடக்கத்திலிருந்து இறுதி வரை உதவ, நிறுவனத்தின் ஆதரவு அமைப்பு எப்போதும் அதிக எச்சரிக்கையுடன் இருக்கும். தடையற்ற செயல்முறையை அடைய தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தேவையான உதவிகளை (24*7) வழங்க ஒரு பிரத்யேக நிபுணர் குழுவைக் கொண்டுள்ளது.

பணமில்லா சேவைகள் - இந்நிறுவனம் 6800-க்கும் அதிகமான நெட்வொர்க் கேரேஜ்கள் வழியாக பணமில்லா சேவைகளை வழங்குகிறது. அதேபோல், பழுதுபார்க்க உங்கள் பாக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை.

இன்சூரன்ஸ் பாலிசியின் பரந்த வரம்பு - நிறுவனமானது பட்ஜெட் விலையில் பரந்த அளவிலான கார் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப சிறந்ததை தேர்வு செய்யலாம். மூன்றாம் தரப்பு பொறுப்பு கவர் முதல் விரிவான கவர் வரையிலான அனைத்தையுமே எச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கிடைக்கின்றன.

ஒப்பிடமுடியாத பாதுகாப்பு - ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மிக விரைவானது மற்றும் 100% பாதுகாப்பானது. எனவே, உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்கும் மற்றும் இது கவரேஜ் நேரத்தில் தேவையான பாதுகாப்பையும் வழங்குகிறது.

எளிதான விண்ணப்ப செயல்முறை - பாலிசி செயல்முறை முன்பை விட வேகமாகவும் மற்றும் எளிதாகவும் உள்ளது. நீங்கள் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், பின்னர் உங்கள் பாலிசியை வாங்குவதற்கு நீங்கள் ஒரு படி தூரத்தில் இருக்கிறீர்கள்.

எச்டிஎஃப்சி எர்கோ கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கணக்கீடு

கார் இன்சூரன்ஸ் பாலிசியின் பாதுகாப்பு மற்றும் நன்மைகளை அனுபவிக்க, நீங்கள் தேர்ந்தெடுத்த காலம் வரை உங்கள் பாலிசியை செயலில் வைத்திருக்கும் பிரீமியத்தை செலுத்த வேண்டும். உங்கள் காரை இன்சூரன்ஸ் செய்ய நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை அறிய, நீங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபார்முலாவை பயன்படுத்தியும் நீங்கள் கணக்கிடலாம்.

பிரீமியம் = சொந்த சேத பிரீமியம் - (நோ க்ளைம் போனஸ் + தள்ளுபடி) + ஐஆர்டிஏஐ ஆல் நிர்ணயிக்கப்பட்ட பொறுப்பு பிரீமியம் + கூடுதல் இணைப்புகளுக்கான கட்டணம் (ஆட் ஆன்ஸ்)

பிரீமியம் மாதிரிகள்

13-08-2020 அட்டவணை புதுப்பிக்கப்பட்டது

கார் மாடல் 

விலைகள்

ஐடிவி *

ஜீரோ டெப் கவர் * 

மதிப்பிடப்பட்ட பிரீமியம்*

ஹோண்டா அமேஸ் எஸ் சிவிடி (1199 சிசி)

ரூ.7,71,000

ரூ.4,33,504

ரூ.1,423

ரூ.17,128

மாருதி பலேனோ ஆல்பா 1.2 (1197 சிசி) 

ரூ.9,03,000

ரூ.4,66,165

ரூ.2,098

ரூ.15,765

வோக்ஸ்வாகன் போலோ 1.0 ஹைலைன் (999 சிசி) 

ரூ.8,02,000

ரூ.4,74,240

ரூ.1,483

ரூ.12,362

ஃபியட் 500 லவுஞ்ச் (1248 சிசி) 

ரூ.14,93,000

ரூ.9,23,948

ரூ.3,033

ரூ.23,788

நகரத்தின் (ஹைதராபாத்) மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆண்டு (2020) அடிப்படையில் இந்த மதிப்புகள் கணக்கிடப்படுகின்றன.

கூடுதல் இணைப்பு கவர்கள்: எச்டிஎஃப்சி எர்கோ

இன்று, பாலிசிதாரருக்கும், அவரது வாகனத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் நிறுவனங்களை நோக்கியே மக்கள் செல்கின்றனர். அவற்றில் எச்டிஎஃப்சி-யும் ஒன்றாகும். அவர்கள் கூடுதல் இணைப்பு (ஆட்-ஆன்ஸ்) கவர்கள் வழியாக கூடுதல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை வைத்திருக்கிறார்கள். உங்கள் புரிதலுக்கான பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது :-

பூஜ்ஜிய தேய்மான க்ளைம் : பாலிசியை வாங்குவதற்குப் பின்னால் உள்ள காரணம் முழு க்ளைமைப் பெறுவதாகும். எந்த வெட்டுகளும்(குறைப்பு)) இல்லாமல். இதனைப் பூஜ்ஜிய தேய்மான க்ளைம் சாத்தியமாக்கும். இதன் மூலம், தேய்மான வெட்டுக்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

நோ க்ளைம் போனஸ் பாதுகாப்பு : துரதிர்ஷ்டவசமாக, விபத்துக்கள் குறித்து நமக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால், நீங்கள் ஒரு வாகனத்தை ஓட்டிக் கொண்டு வெளியே செல்லும்போது என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. சில நேரங்களில், அது உங்கள் தவறு அல்ல. ஆனால், நீங்கள் க்ளைம் தாக்கலுக்கு விண்ணப்பிக்கும்போது " நோ க்ளைம் போனஸை " இழக்க நேரிடும். எனினும், இது உங்கள் போனஸைப் பாதுகாக்கும் என்பதால் அது நடக்காது.

கியர்பாக்ஸ் & எஞ்சின் பாதுகாப்பு : காலப்போக்கில், உங்கள் கார் ஆனது அதன் எஞ்சின் / கியர்பாக்ஸின் செயல்திறனைத் தடுக்கக்கூடிய சில தடைகளை சந்திக்கும். இந்த கவரேஜ் ஆனது உங்களுக்கு தலைவலியை தராமல் காரின் உள் சேதங்களை கவனிக்க கவசமாக துணை நிற்கிறது.

அவசர உதவி பாதுகாப்பு : வாழ்க்கை என்பது நிச்சயமற்றது மற்றும் அவசரநிலை ஆனது அறிவிப்பு இல்லாமல் நிகழலாம். இந்த கவரேஜ் ஆனது உங்கள் காரின் டயர் பஞ்சர் ஆவது அல்லது குறைந்த பேட்டரி போன்றவற்றால் உங்கள் கார் ஸ்டார்ட் ஆகாத போன்ற சூழ்நிலைகளில் உதவி வழங்கும்.

மாற்று சாவி க்ளைம் : நாம் பிஸியான வாழ்க்கையை வாழ்கிறோம், மேலும் சில விசயங்களை (உங்கள் கார் சாவிகள் உட்பட) கண்காணிப்பது கடினம். ஆனால் கவலைப்படத் தேவையில்லை. இந்த க்ளைம் அதன் மாற்று சாவிக்கான கட்டணங்களை உள்ளடக்கியது (அவை தொலைந்துவிட்டால் / திருடப்பட்டால்).

டவ்ன்டைம் க்ளைம் : உங்கள் கார் கேரேஜில் இருக்கும்போது, ​​உங்கள் தினசரி பயணத்திற்கான பிற மாற்று வழிகளை நீங்கள் தேட வேண்டும். இந்த க்ளைம் மாற்று போக்குவரத்து முறையின் கட்டணங்களை செலுத்த ஒரு அலவன்ஸ் (பணம்) வழங்கும்.

நுகர்பொருட்களின் விலை : நட், போல்ட் போன்ற மீண்டும்பயன்படுத்த முடியாத நுகர்பொருட்கள் உள்பட காரில் பயன்படுத்தப்படும் அனைத்து நுகர்பொருட்களையும் கவர் செய்கிறது.

எச்டிஎஃப்சி எர்கோ கார் இன்சூரன்ஸின் க்ளைம் செயல்முறை

வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும் கவலை இல்லாத க்ளைம் தாக்கல் செயல்முறையை வழங்குவதில் இந்நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. இது அனைத்து சேவைகளுடனும் (இது ஒரு புதுமையான திட்டம் மற்றும் மென்மையான க்ளைம் செயல்முறையாக இருந்தாலும்) தனது வாடிக்கையாளர்களுக்கு எளிதாக வழங்குகிறது.

பணமில்லா நெட்வொர்க் கேரேஜ்கள் க்ளைம் செயல்முறை

பணமில்லா உரிமைகோரலை தாக்கல் செய்ய எளிதான செயல்முறை உள்ளது. எனவே, பொறுமையாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும் : -

 1. hdfcergo.com எனும் இணையதளத்திற்கு செல்லவும் அல்லது அருகிலுள்ள நெட்வொர்க் கேரேஜைக் கண்டுபிடிக்க கட்டணமில்லா எண்ணை அழைக்கவும்.
 2. உங்கள் காரை நெட்வொர்க் கேரேஜுக்கு எடுத்துச் செல்லுங்கள்.
 3. நிறுவனம் அனைத்து சேதங்களையும். இழப்புகளையும் அளவீடு செய்ய ஒரு சர்வேயரை நியமிக்கும்.
 4. அடிப்படை விவரங்களுடன் க்ளைம் படிவத்தை சமர்ப்பித்து தேவையான ஆவணங்களை வழங்கவும்.
 5. எஸ்எம்எஸ் / இமெயில் மூலம் டெய்லி அப்டேட்களைப் பெறுவீர்கள்.
 6. க்ளைமின் ஒரு பகுதியை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். நெட்வொர்க் கேரேஜ் மீதமுள்ளவற்றை கவனித்துக் கொள்ளும். 
 7. பிரேக் ஆப் ரெக்கார்ட்ஸ் உடன் நீங்கள் க்ளைமின் கணக்கீட்டு தாளைப் பெறுவீர்கள்.

திருப்பிச் செலுத்துதல் / நெட்வொர்க் அல்லாத கேரேஜ்கள் க்ளைம் செயல்முறை

 1. க்ளைம் பதிவு செய்ய எச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 2. கீழே நகர்ந்து " க்ளைம் " என்பதைக் கிளிக் செய்க.
 3. " கார் இன்சூரன்ஸ் " என்ற டப்பைக் கிளிக் செய்க.
 4. " க்ளைம் பதிவு " (ரிஜிஸ்டர் க்ளைம்) என்பதைக் கிளிக் செய்க
 5. பாலிசி எண் / தொலைபேசி எண் அல்லது இமெயில் ஐடியை சமர்ப்பிக்கவும்.
 6. " செல் " என்ற டப்பைக் கிளிக் செய்க.
 7. பதிவுசெய்யப்பட்ட இமெயில் முகவரி / தொலைபேசி எண்ணில் சரிபார்ப்பதற்கான OTP ஐப் பெறுவீர்கள்.
 8. சர்வேயர் அனைத்து சேதங்களையும் அளவீடுவார்.
 9. முறையாக கையொப்பமிடப்பட்ட க்ளைம் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும்.
 10. அனைத்து ஆவணங்களையும் பெறும்போது, ​​க்ளைம் ஆனது செயல்படுத்தப்படும்.
 11. க்ளைமின் ஒவ்வொரு கட்டத்திலும் எஸ்எம்எஸ் / இமெயில் மூலம் அப்டேட் பெறுவீர்கள்.
 12. NEFT அல்லது காசோலை மூலம் பணம் செலுத்தப்படும்.

குறிப்பு - நீங்கள் எஸ்எம்எஸ் அல்லது போன் மூலமாகவும் ஒரு க்ளைமைப் பதிவு செய்யலாம்.

எச்டிஎஃப்சி எர்கோ கார் இன்சூரன்ஸின் க்ளைம் தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள் யாவை?

 • க்ளைம் படிவம்
 • காரின் ஆர்.சி மற்றும் ஒரிஜினல் சாவி 
 • ஓட்டுநர் உரிமத்தின் நகல்
 • பாலிசி ஆவணங்கள் ( ஒரிஜினல்)
 • எஃப்.ஐ.ஆர் (திருட்டு வழக்கில்)
 • பான் கார்டு, பதிவு சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம்

தொடர்பு விவரங்கள் : 

எச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

கட்டணமில்லா எண் : 022 6234 6234 / 0120 6234 6234

இமெயில் ஐடி : preauth[at]hdfcergo[dot]com

பதிவு செய்யப்பட்ட முகவரி : முதல் மாடி, எச்டிஎஃப்சி ஹவுஸ், பேக்பே ரெக்ளாமேஷன், எச்.டி.ப்ரேக் மர்க், சர்ச்கேட், மும்பை- 400020

பாலிசிஎக்ஸ்.காம் இன்சூரன்ஸ் வெப் அக்ரிகேட்டர்

தொடர்பு எண் : 1800-4200-269/1800-4203-180

இமெயில் ஐடி : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

பதிவு செய்யப்பட்ட முகவரி : பாலிசிஎக்ஸ்.காம் இன்சூரன்ஸ் வெப் அக்ரிகேட்டர் லிமிடெட், 

முதல் மாடி, லேண்ட்மார்க் டவர், புளொட் எண்-2, சவுத்சிட்டி-1 ,சி-113 எதிர்புறம், அசோக் மர்க், செக்ட்டோர்-41, குருகிராம், ஹரியானா - 122001, இந்தியா.

13-08-2020 புதுப்பிக்கப்பட்டதுு