இப்கோ டோக்யோ கார் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

கார் காப்பீட்டு பிரீமியத்தை ஒப்பிடுக

அல்லது

இஃப்கோ டோக்கியோ இந்தியாவின் முன்னணி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனமானது டோக்கியோ மரைன், இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு (இஃப்கோ) மற்றும் நிச்சிடோ ஃபயர் குழுமம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும். நியாயமான வணிகம், வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான பதில் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர் திருப்தியில் முன்னணியில் இருப்பதற்கான தொலைநோக்குடன் இந்நிறுவனம் டிசம்பர் 4, 2000 அன்று நிறுவப்பட்டது. அதன் தொடக்கத்தில் இருந்து நிறுவனம் ஒருபோதும் தங்களின் நிலையை திரும்பிப் பார்க்கவில்லை மற்றும் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சிறந்த கார் இன்சூரன்ஸ் தீர்வுகளை வழங்கி முன்னோக்கி செல்கிறது.

இஃப்கோ டோக்கியோ கார் இன்சூரன்ஸின் சிறப்பம்சங்கள்

18-08-2020 அட்டவணை புதுப்பிக்கப்பட்டது

க்ளைம் செட்டில்மென்ட் விகிதம்

79.19%

நெட்வொர்க் கேரேஜ்கள்

4300+

மூன்றாம் தரப்பு பொறுப்பு கவர்

7.5 லட்சம் வரை

உங்கள் இஃப்கோ டோக்கியோ கார் இன்சூரன்ஸை எவ்வாறு புதுப்பிப்பது?

உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை சரியான நேரத்தில் புதுப்பிப்பது முக்கியமானது மட்டுமல்ல, இந்தியா போன்ற நாட்டில் கட்டாயமான விசயமாகும். இஃப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆனது எளிய மற்றும் தொந்தரவில்லாத ஆன்லைன் செயல்முறையை வழங்குகிறது. அதனுடன், நீங்கள் ஏற்கனவே வைத்து இருக்கும் இன்சூரன்ஸ் பாலிசியை எளிதாக புதுப்பிக்க முடியும். மேலும், பாலிசிஎக்ஸ்.காம் மூலம் கூட உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியையும் புதுப்பிக்கலாம். அது தொடர்பான விருப்பங்களை கீழே விரிவாக விவாதிப்போம்.

பாலிசிஎக்ஸ்.காம் வழியாக புதுப்பித்தல்

 • இந்தப் பக்கத்தின் மேலே உள்ள படிவத்தைப் பார்க்க மேலே செல்லவும்.
 • உங்கள் காரைப் பற்றிய விவரங்களைச் சமர்ப்பித்து, " மேற்கோள்களைப் பெறு " என்ற டப்பைக் கிளிக் செய்க. " கார் எண் இல்லாமல் தொடரவும் " என்பதைக் கிளிக் செய்து மேற்கோள்கள் பகுதிக்குச் செல்ல விவரங்களை நிரப்பும் வகையில் உங்களுக்கு விருப்பமும் உள்ளது.
 • மேற்கோள்களை சரிபார்த்து, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
 • கட்டணத்தைச் செலுத்துங்கள். பாலிசியின் நகலை இமெயில் வழியாகப் பெறுவீர்கள்.
 • ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், எங்கள் நிபுணர்களின் குழுவைத் தொடர்பு கொள்ளவும்.

இஃப்கோ டோக்கியோ கார் இன்சூரன்ஸ் வழியாக புதுப்பித்தல்

 • இஃப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 • " புதுப்பித்தல் " டப்பைக் கிளிக் செய்க.
 • " கார் இன்சூரன்ஸ் " என்ற டப்பைக் கிளிக் செய்க.
 • வாகன பதிவு எண் மற்றும் பாலிசி எண் போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும்.
 • " தொடரவும் " டப்பைக் கிளிக் செய்க.
 • பிரீமியம் விவரங்களைச் சரிபார்த்து, வெவ்வேறு கட்டண முறைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துங்கள்.

இஃப்கோ டோக்கியோ கார் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

இஃப்கோ டோக்கியோ கார் இன்சூரன்ஸ் தன் வசம் சிறந்த அம்சங்களையும், நன்மைகளையும் கொண்டுள்ளது. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகப் பார்ப்போம்.

24*7 நேர உதவி : வாடிக்கையாளரின் கேள்விகளுக்கு தீர்வுகளை வழங்குவதே முக்கிய பணியாக இருக்கும் என்பதால் ஆதரவு நிர்வாகிகளின் குழுவை இந்நிறுவனம் நியமித்துள்ளது. தேவையான சேவைகளுக்கு உங்களுக்கு உதவ அவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

வாங்குவதற்கு எளிமை : இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை அடைய தகவல்தொடர்புக்கு (ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன்) இரு சேனல்களையும் திறன்படப் பயன்படுத்துகிறது. நிறுவனத்தின் அலுவலகத்தைப் பார்வையிட விரும்புகிறீர்களா அல்லது ஆன்லைனில் பாலிசியை வாங்க / புதுப்பிக்க விரும்புகிறீர்களா என்பது மக்களின் விருப்பமாகும்.

உடனடி ஒப்புதல் : நேரம் என்பது பணமாகும் மற்றும் ஒரு பாலிசியை வாங்க நிறுவனத்தின் அலுவலகத்தில் காத்திருக்கும் போது " சம்பாதிக்கும் நேரத்தை " யாரும் வீணாக்க விரும்பவில்லை. இஃப்கோ டோக்கியோ இந்த காரணியைக் கவனிக்க போதுமான புத்திசாலியாகும் மற்றும் கார் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்க / புதுப்பிக்க உடனடி ஒப்புதலை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறைந்த மற்றும் எளிதான ஆவணங்கள் : இப்போது, ​​குறைந்தபட்ச ஆவணங்கள் பயன்படுத்துவது நகரத்தில் பிரபலமான போக்காக உள்ளது. முக்கியமான விவரங்களை நிரப்பவும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், பின்னர் இன்சூரன்ஸ் உங்களுடையது.

விரிவான பாதுகாப்பு : மனிதனால் உருவாக்கப்பட்ட / இயற்கை பேரழிவு போன்றவை உங்கள் காரைத் தாக்கினால் பரவாயில்லை, சேதத்திற்கான செலவு ஆனது நிறுவனத்தால் செலுத்தப்படும். உங்கள் பணப்பைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும்.

இஃப்கோ டோக்கியோ கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கணக்கீடு

தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசியின் காலத்தில் உங்கள் பாலிசியை செயலில் வைத்திருக்க, நீங்கள் ஒரு நிலையான பிரீமியத்தை செலுத்த வேண்டும். கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தைக் கணக்கிட, நீங்கள் எங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம்.

இஃப்கோ டோக்கியோ கார் இன்சூரன்ஸ் பிரீமியம் பல காரணிகளைப் பொறுத்தது. அவை பின்வருமாறு :-

 • சொந்த சேத பிரீமியம் வீதம் : இது சதவீதத்தில் கணக்கிடப்படும். இது முற்றிலும் காரின் மாடல், ஐடிவி மற்றும் காரின் வயதைப் பொறுத்தது.
 • தேவைப்படும் பாதுகாப்பு : உங்கள் காருக்கு தேவைப்படும் கவரேஜ் அளவைப் பொறுத்து, உங்கள் கார் இன்சூரன்ஸிற்கானப் பிரீமியம் கணக்கிடப்படுகிறது.
 • க்ளைம்களின் தாக்கம் : அதிக எண்ணிக்கையிலான க்ளைம் தாக்கல் அதிக அளவு பிரீமியத்திற்கு வழிவகுக்கிறது.

தள்ளுபடிகள் - பின்வரும் சூழ்நிலைகளில் செலுத்தப்படும் பிரீமியத்தில் தள்ளுபடி பெற நீங்கள் பொறுப்பாவீர்கள் :-

 • வாகனத்தில் திருட்டு எதிர்ப்பு சாதனத்தை நிறுவும்போது.
 • உங்களிடம் ஆட்டோமொபைல் அசோசியேஷன் உறுப்பினர் அட்டை இருந்தால்.
 • உங்கள் தன்னார்வ அணுகல் என்சிபி தொகையை விட குறைவாக இருந்தால்.
 • நோ க்ளைம் போனஸ்.

பிரீமியம் மாதிரிகள்

18-08-2020 அட்டவணை புதுப்பிக்கப்பட்டது

கார் மாடல் 

விலைகள்

ஐடிவி* 

ஜீரோ டெப் கவர் 

மதிப்பிடப்பட்ட பிரீமியம்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் - 1.5 ஜஎல்எஸ் (1499 சிசி)

ரூ.5,98,000

ரூ.4,44,125

ரூ.2,164

ரூ.13,087

ரெனால்ட் டஸ்டர் ஆர்எக்ஸ்எஸ் (1498 சிசி) 

ரூ.9,29,000

ரூ.7,90,789

ரூ.4,152

ரூ.18,620

டாடா நெக்ஸன்- எக்ஸ்எம் (1198 சிசி) 

ரூ.7,84,208

ரூ.4,02,496

ரூ.1,321

ரூ.14,459

மஹிந்திரா பொலெரோ இஎக்ஸ் (2523 சிசி) 

ரூ.7,60,000

ரூ.6,55,785

ரூ.2,951

ரூ.29,946

* மதிப்புகள் நகரம் (மும்பை) மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆண்டு (2020) ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.

இஃப்கோ டோக்கியோ கார் இன்சூரன்ஸின் வெவ்வேறு கூடுதல் இணைப்பு (ஆட்-ஆன்ஸ்) கவர்கள் என்னென்ன?

இஃப்கோ டோக்கியோ கார் இன்சூரன்ஸ் பல கூடுதல் இணைப்பு (ஆட்-ஆன்ஸ்) கவர்கள் உடன் வருகிறது. இது அடிப்படை திட்டத்தைப் பரந்த பாதுகாப்பானதாக மேம்படுத்த உதவுகிறது.

பூஜ்ஜிய தேய்மானம் கவர் : கார் வாங்கி ஒரு வருடம் பழையதானால் கூட அது க்ளைம் செட்டில்மென்ட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வாகனத்தின் இந்த தேய்மான மதிப்பு ஆனது க்ளைம்களை தாக்கல் செய்யும் போது கழிக்கப்படும். இருப்பினும், நீங்கள் பூஜ்ஜிய தேய்மானம் கவரைத் தேர்வுசெய்தால், முழு க்ளைம் தொகையையும் பெற நீங்கள் பொறுப்பாவீர்கள்.

நோ க்ளைம் போனஸ் : இது உங்கள் காலண்டரில் சேர்க்கப்படும் ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் நீங்கள் பெறும் தள்ளுபடி / போனஸ் ஆகும். ஆனால், நீங்கள் ஒரு விசயத்தை நினைவில் கொள்ள வேண்டும் - நீங்கள் க்ளைம் தாக்கல் செய்தால் (2 முறைக்கு மேல்), இந்த அம்சத்தின் பயனை நீங்கள் பெற முடியாது.

எஞ்சின் பாதுகாப்பு : உங்கள் எஞ்சின் பழுதாகிப் போனால், அதன் பழுதுபார்ப்புக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், உங்களுக்கு இருக்கும் எஞ்சின் பாதுகாப்பு எனும் கூடுதல் இணைப்பு கவர் (ஆட்-ஆன்ஸ்) மூலம் அதற்கு எதிராக பாதுகாப்பு பெற நீங்கள் பொறுப்பாவீர்கள்.

சாலையோர உதவி கவர் : இது பாலிசிதாரர் எந்த உதவியும் இல்லாமல் நெடுஞ்சாலையின் நடுவில் சிக்கித் தவிப்பது போன்ற அவசரநிலைகளுக்கான கூடுதல் கவர். இந்த கூடுதல் இணைப்பு கவரில் நீங்கள் முதலீடு செய்தால், அவசரநிலையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தொலைபேசி அழைப்பு மட்டுமே. உங்களுக்குத் தேவையான போதெல்லாம் / எங்கு வேண்டுமானாலும் தேவையான உதவியைப் பெறுவதை இந்த கவர் உறுதி செய்யும்.

விலைப்பட்டியலுக்கு மீள்வது : இதன் சிறப்பு என்ன தெரியுமா ? இது வாகனத்தின் உண்மையான மதிப்பை (சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்கள் உட்பட) வழங்கும். அதிக திருட்டுக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உண்மையில் இதைப் பயன்படுத்தலாம்.

துணைக்கருவிகள் கவர் : இது கார்களுக்கான பொதுவான கூடுதல் இணைப்புகளில் ஒன்றாகும். தேவையற்ற நிகழ்வின் காரணமாக திருட்டு மற்றும் சேதங்களுக்கு எதிரான விலையுயர்ந்த வாகன பாகங்களுக்கு இது பாதுகாப்பு அளிக்கிறது.

தனிப்பட்ட உடமைகளின் இழப்பு : உங்கள் வாகனத்திலிருந்து எந்தவொரு தனிப்பட்ட உடமைகளையும் இழந்தால் அல்லது திருடப்பட்டால் இந்த கூடுதல் இணைப்பு கவர் (ஆட்-ஆன்ஸ்) உதவியைக் கொடுக்கும்.

இஃப்கோ டோக்கியோ கார் இன்சூரன்ஸ் க்ளைம் செயல்முறை

விபத்து, திருட்டு அல்லது வேறு ஏதேனும் சம்பவமாக இருந்தாலும், இஃப்கோ டோக்கியோ கார் இன்சூரன்ஸ் நிறுவனம் குறைந்த நேரத்தை எடுத்துக்கொள்ளும் க்ளைம் தாக்கல் செயல்முறையை வழங்குகிறது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்வதன் மூலம் உங்கள் கார் இன்சூரன்ஸ் க்ளைமைப் பதிவு செய்யலாம். மேலும், க்ளைமைப் பதிவு செய்யும்போது, ​​பாலிசி எண், திருட்டு/தீ/விபத்து நடந்த தேதி, திருட்டு/தீ/விபத்து நடந்த இடம் மற்றும் போலீஸ் புகார் எண் போன்ற அடிப்படை தகவல்களை உங்களுடன் தயார் நிலையில் வைக்க மறக்காதீர்கள்.

ஆன்லைன் க்ளைம் செயல்முறை

ஆன்லைனில் க்ளைம் தாக்கல் செய்ய, கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.

 • இஃப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 • இணையதளத்தின் மெனு பட்டியில் இருக்கும் " க்ளைம் " டப்பைக் கிளிக் செய்க
 • " ரிஜிஸ்டர் க்ளைம் " என்பதைக் கிளிக் செய்க
 • " மோட்டார் க்ளைம் தகவல் " என்பதைக் கிளிக் செய்க
 • உங்கள் இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வழங்கவும் (நீங்கள் பதிவுசெய்த பயனராக இருந்தால்). நீங்கள் பதிவுசெய்த பயனராக இல்லாவிட்டால் உங்களை பதிவு (ரிஜிஸ்டர்) செய்யுங்கள்.
 • உங்கள் கணக்கின் மூலம், நீங்கள் எளிதாக ஒரு க்ளைமைப் பதிவு செய்யலாம். நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
 • பாலிசிதாரரின் க்ளைம் கோரிக்கையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இன்சூரன்ஸ் நிறுவனம் வாகனத்தை பகுப்பாய்வு செய்யும். பெரிய தொகைக்கு க்ளைம் இருக்கும் சந்தர்ப்பங்களில், நிபுணர்-உரிமம் பெற்ற சர்வேயர் நியமிக்கப்படுவார்.
 • இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் பாலிசிதாரருக்கும் இடையேயான " க்ளைம் தொகை " ஒப்பந்தத்தின் அடிப்படையில் க்ளைம் வழக்கமாக தீர்க்கப்படும்.
 • உங்களின் க்ளைம் தாக்கலுக்கு ஒப்புதல் அல்லது நிராகரிப்பு குறித்து நிறுவனம் உங்களுடன் தொடர்பு கொள்ளும்.

இஃப்கோ டோக்கியோ கார் இன்சூரன்ஸ் க்ளைம் தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள் யாவை?

 • முறையாக கையொப்பமிடப்பட்ட க்ளைம் படிவம்
 • அசல் சாவி உடன் காரின் ஆர்.சி.
 • உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் நகல்
 • பாலிசி ஆவணங்கள் (அசல்)
 • எஃப்.ஐ.ஆர்
 • பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ்கள்

இஃப்கோ டோக்கியோ கார் இன்சூரன்ஸ் தொடர்பு விவரங்கள்

இஃப்கோ டோக்கியோ ஜெனரல் காப்பீட்டு கம்பெனி

கட்டணமில்லா எண் : 1800-103-5499 | (0124) 428 5499

இமெயில்ஐடி : support[at]iffcotokio[dot]co[dot]in

பதிவு செய்யப்பட்ட முகவரி : இஃப்கோ டவர், ப்ளாட் எண் 3, பிரிவு 29, குருகிராம்- 122001, ஹரியானா, இந்தியா.

பாலிசிஎக்ஸ்.காம் இன்சூரன்ஸ் வெப் அக்ரிகேட்டர்

தொடர்பு எண் : 1800-4200-269 / 1800-4203-180

இமெயில் ஐடி : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

பதிவுசெய்யப்பட்ட முகவரி : பாலிசிஎக்ஸ்.காம் இன்சூரன்ஸ் வெப் அக்ரிகேட்டர் பிரைவேட் லிமிடெட், 1 வது மாடி, லேண்ட்மார்க் டவர், ப்ளாட் எண்-2, சவுத்சிட்டி-1, சி-113க்கு எதிரே, அசோக் மார்க், பிரிவு-41, குருகிராம், ஹரியானா - 122001 இந்தியா.

18-08-2020 புதுப்பிக்கப்பட்டதுு