நியூ இந்தியா கார் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

நியூ இந்தியா கார் இன்சூரன்ஸ் கம்பெனி 1919 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி இணைக்கப்பட்டு , டாடா குழுமத்தின் நிறுவன உறுப்பினரான சர் டோராப் டாட்டா மூலம் நிறுவப்பட்டது . 1973 ஆம் ஆண்டு இந்திய நிறுவனங்கள் இணைந்ததன் மூலம் இந்த அமைப்பு தேசியமயமாக்கப்பட்டது . வெளிநாட்டு நடவடிக்கைளை உள்ளடக்கிய மொத்த பிரீமியம் சேகரிப்பு அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமாக என்ஐஏ உள்ளது . இது 14304 கோடி மொத்த பிரீமியத்தை சந்தித்த இந்தியாவின் முதல் ஆயுள் அல்லாத நிறுவனம் . இந்நிறுவனம் ஜப்பான் , இங்கிலாந்து , மத்திய கிழக்கு , பிஜி மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் செயல்பட்டு வருகிறது . முன்னதாக , இது ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் துணை நிறுவனமாக இருந்தது .

சாலையில் வாகனத்தை ஓட்டும் பொழுது வாகன உரிமையாளர் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணம் மோட்டார் இன்சூரன்ஸ் ஆகும் . அதேபோல் , இந்திய சட்டப்படி மோட்டார் இன்சூரன்ஸை பெறுவது அவசியமாகிறது . எந்தவொரு நபர் இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் வாகனத்தை ஓட்டும் பொழுது பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும் . இது எந்தவொரு அவசரநிலைக்கு எதிராக வாகனத்திற்கு நிதிசார்ந்த பாதுகாப்பை வழங்குகிறது .

நியூ இந்தியா மோட்டார் இன்சூரன்ஸ் வைத்திருப்பதன் முக்கியத்துவம்

உங்களின் வீட்டிற்கு பிறகு மிகவும் மதிப்புமிக்க மற்றும் விலையுயர்ந்த இரண்டாவது சொத்தாக உங்கள் மோட்டார் வாகனம் விளங்குகிறது . தற்போதைய பணி நிலைமைகள் மற்றும் அலுவகத்திற்கு சென்றடைய தேவைப்படும் பயண நேரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் , நீங்கள் பயணம் செய்வதற்கு அதிகம் நேரத்தை செலவழிக்கும் தங்களுடைய வாகனம் உங்கள் இரண்டாவது வீடு என நிரூபிக்கப்பட்டுள்ளது . ஒரு வாகனமானது உங்களின் அன்றாட வாழக்கையில் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கும் பொழுது , சிறந்த விசயம் நீங்கள் நினைத்து இருக்க முடியாத விதத்தில் உங்கள் வாகனம் திரும்பி வருவதற்கு உங்களால் வழங்க முடியும் என்பதற்காக இன்சூரன்ஸ் - ஐ பெற முடியுமா ? இந்திய வாகன சட்டத்தின் கீழ் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி வைத்து இருப்பது இந்தியாவில் எப்பொழுதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது .

வாகனத்தில் பயணத்தில் ஈடுபடும் பொழுது எது வேண்டுமானாலும் நடக்கலாம் , அவை எந்தவொரு முன் எச்சரிக்கை இன்றியும் , உங்களுக்கான மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது . ஒரு மோட்டார் இன்சூரன்ஸ் உங்களின் நிதியை பாதுகாக்கிறது மற்றும் அதுபோன்ற விபத்துக்கள் சூழ்நிலைகளில் கவரேஜை வழங்குகிறது . ஒரு விரிவான மோட்டார் இன்சூரன்ஸ் ஆனது உங்கள் வாகனத்தை நிதி பொறுப்புகள் அல்லது இழப்புகளில் இருந்து பாதுகாக்க உங்களுக்கு உதவுகிறது .

உங்களுடைய வாகனத்திற்கு இன்சூரன்ஸ் செய்து கொள்வது மற்றும் ஏற்கனவே இருக்கும் பாலிசியை சரியான புதுப்பிப்பது மிகவும் அவசியமாகும் . ஏற்கனவே இருக்கும் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்க வரும் பொழுது , அதணை நீட்டிக்கும் முன்பு இறுதி சேதியை நீங்கள் நினைவில் வைத்து இருப்பது மிக முக்கியம் . ஏனென்றால் அதனை நீங்கள் செய்யாவிட்டால் , புதுப்பித்தலுக்கு பிறகு கிடைக்கக்கூடிய முக்கிய நன்மைகளை நீங்கள் விட்டு விடக் கூடும் . நீங்கள் எந்தவொரு தொந்தரவும் இன்றி உங்கள் வாகனத்தை ஓட்ட விரும்பினால் , ஏற்கனவே இருக்கும் பாலிசியை புதுப்பித்தல் மிக முக்கியம் . புதுப்பித்தல் நேரத்தின் போது சிறந்த ஒப்பந்தத்தை பெற , நீங்கள் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஒப்பிடுதல் செய்யலாம் . அது ஆன்லைனில் மலிவான மோட்டார் இன்சூரன்ஸ் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு உதவுகிறது .

உங்கள் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியின் செயல்பாடுகள் குறிப்பிட்ட காலத்திற்கு தான் என்பதை மறந்துவிடாதீர்கள் . இது உங்கள் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கிய தேதியில் இருந்து சார்ந்துள்ளது . பாலிசியின் காலம் முடிவடைந்த உடன் , உங்கள் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியாவதற்கு முன்பு புதுப்பிக்க வேண்டும் .

நீங்கள் ஏற்கனவே இருக்கும் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பித்துக் கொள்ள நினைத்தால் , அதற்கான சிறந்த ஒப்பந்தத்தை நீங்கள் பார்க்க வேண்டும் . அதே நேரத்தில் , புதுப்பித்தலின் போது மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியின் அடிப்படையான தேவைகளை நிறைவேற்ற முடியாவிட்டால் புதுப்பித்தலுக்கான செலவினம் அதிகரிக்கும் . இது மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியின் புதுப்பித்தல் தேதியை நினைவில் வைக்க வேண்டியது மிக முக்கியம் என எடுத்துரைக்கிறது . அதை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமும் நீங்கள் சரிபார்க்க முடியும் . கிடைக்கும் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஒப்பிடுவதன் மூலம் , நீங்கள் ஆன்லைனில் விலை மலிவான மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை எளிதாக பெற முடியும் .

புதுப்பித்தல் இல்லாததன் காரணமாக ஒருவேளை உங்களின் பாலிசியில் இடைவெளி ஏற்பட்டால் , சட்டத்திற்கு இணங்குவதற்கு ஒரு புதிய மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டி இருக்கும் . அதேபோன்று , உங்கள் வாகனத்திற்கு மோட்டார் இன்சூரன்ஸ் செய்யாத நாட்களின் அடிப்படையில் அபராத தொகையை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும் .

மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி இன்றி வாகனத்தை ஓட்டுவது ஓர் அபாயகரமான விஷயமாக இருக்கலாம் . ஏனென்றால் , சட்டத்தை பின்பற்றாமைக்கு போக்குவரத்து அதிகாரிகள் மூலம் பெறப்படும் அபராதத்தை தவிர, விபத்துகள் காரணமாக ஏற்படும் அனைத்து அபராதங்கள் மற்றும் பாதிப்புக்கான செலவுகளில் நிற்க நேரிடும் .

எனவே , எதிர்காலத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைங்களை தவிர்ப்பதற்காக உங்களின் தற்போதைய மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிப்பது மிகவும் முக்கியம் . மேலும் , நீங்கள் போதுமான பாதுகாப்பை மற்றும் சிறந்த ஒப்பந்தங்களை பெறுவதை உறுதி செய்ய முயற்சி செய்யவும் .

நியூ இந்தியா கார் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

உங்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யும் பரந்த அளவில் பயனுள்ள மற்றும் உதவிகரமாக மோட்டார் இன்சூரன்ஸ் தயாரிப்புகளை நியூ இந்தியா அஸுரன்ஸ் வழங்கி வருகிறது . இது மோட்டார் இன்சூரன்ஸ் பிளானின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது .

கார் இன்சூரன்ஸ்

இந்த திட்டத்தின் கீழ் , பொறுப்பு மற்றும் பேக்கேஜ் கவரேஜ் - இரண்டு வகையான பாதுகாப்பை பெறுவீர்கள் . இந்த இரண்டும் தங்களின் வழியில் உங்களுக்கு உதவுவார்கள் .

 • பொறுப்பு மட்டும் பாலிசி : இது மூன்றாம் தரப்பு நபரின் உடல் காயங்களுக்கான பொறுப்பு மற்றும் / அல்லது இறப்பு மற்றும் உடைமைகள் சேதங்கள் ஆகியவற்றிக்கான மூன்றாம் தரப்பு பொறுப்பிற்கு கவர் செய்கிறது . உரிமையாளர் - ஓட்டுனரின் தனிப்பட்ட விபத்து கவர்களும் சேர்க்கப்பட்டுள்ளன .
 • பேக்கேஜ் பாலிசி : பொறுப்பு கவர் உடன் கூடுதலாக இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்திற்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு கவர் செய்கிறது .

வணிக வாகனம்

இந்த பாலிசி ஆனது பொது சாலையில் பயணிக்கும் அனைத்து வகையான வணிக வாகனங்களையும் உள்ளடக்கி உள்ளது .

 • பொறுப்பு மட்டும் பாலிசி : இது மூன்றாம் தரப்பு நபரின் உடல் காயங்களுக்கான பொறுப்பு மற்றும் / அல்லது இறப்பு மற்றும் உடைமைகள் சேதங்கள் ஆகியவற்றிக்கான மூன்றாம் தரப்பு பொறுப்பிற்கு கவர் செய்கிறது . வணிக வாகனத்தின் உரிமையாளர் - ஓட்டுனரின் தனிப்பட்ட விபத்து கவர்களும் சேர்க்கப்பட்டுள்ளன .
 • பேக்கேஜ் பாலிசி : பொறுப்பு கவர் உடன் கூடுதலாக இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வணிக வாகனத்திற்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு கவர் செய்கிறது .

நியூ இந்தியா இன்சூரன்ஸ் - அம்சங்கள் மற்றும் நன்மைகள்

வாடிக்கையாளர் ஆதரவு குழு - நியூ இந்தியா இன்சூரன்ஸின் சிறந்த அம்சங்களில் ஒன்று நன்கு பயிற்றுவிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை குழு . இந்த குழு எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடையளிக்க தயாராக உள்ளனர் . இது க்ளைம் தாக்கல் , பாலிசிக்கு விண்ணப்பிக்கும் போது அல்லது புதுப்பிக்கும் போது பாலிசிதாரருக்கு உதவி புரிகிறது .

தள்ளுபடிகள் - இந்தியாவின் ஆட்டோமொபைல் அசோசியேஷனின் உறுப்பினராக இருப்பவர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது . இதைத் தவிர , பாலிசிதாரர் நோ க்ளைம் போனஸ் தள்ளுபடியை பெற முடியும் . உங்கள் வாகனத்தில் திருட்டு எதிர்ப்பு சாதனத்தை ( அன்டி தேஃப்ட் டிவைஸ் ) பொருத்தி இருந்தால் கூடுதல் தள்ளுபடியை பெற தகுதி பெறுவீர்கள் .

சொந்தரவு இல்லாத க்ளைம் செட்டில்மெண்ட் - எந்தவித சொந்தரவும் இல்லாமல் வேகமான முறையில் க்ளைம் தாக்கலுக்கு தீர்வு காணப்படும் . அவசரநிலை சூழ்நிலைகளில் ஒரு க்ளைம் தொடங்கும் செயல்முறைக்கு மிகவும் வசதியானதாக இருக்கும் .

நியூ இந்தியா கார் இன்சூரன்ஸின் உள்ளடங்குபவைகள் & விலக்குகள்

உள்ளடங்குபவைகள்

விலக்குகள்

பின்வரும் காரணங்களால் ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்கள் :


 • தீ , வெடித்தல் & தானாக பற்றிக் கொள்ளுதல்
 • வெள்ளம் , புயல் , சூறாவளி , நிலச்சரிவு , நிலநடுக்கம் , பாறைச்சரிவு , மின்னல் போன்ற இயற்கை பேரழிவுகள்

இன்சூரன்ஸ் செய்தவர் கட்டாய அறிவுறுத்தல்களுக்கு எதிர்மறையாக வாகனத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில்

திருட்டு , கொள்ளை , தாக்குதல் , வன்முறை , பயங்கரவாத நடவடிக்கைகள் , வெளிப்புற விபத்து சேதங்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்படுவைகள் மூலமான இழப்புகள்


போதையின் விளைவாக ஏற்படும் விபத்துக்கள்

சாலை , விமானம் , எலிவேட்டர் , உள்நாட்டு நீர்வழிப் பாதைகள் மூலம் கொண்டு செல்லும் பொழுது ஏற்படும் சேதங்கள்

சொந்த அலட்சியம் காரணமாக ஏற்படும் சேதங்கள்

காயம் , இறப்பு அல்லது சேதங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பு பொறுப்பு

மெக்கானிக்கல் அல்லது எலெக்ட்ரிக்கல் பிரேக்டவுன்

தனிப்பட்ட விபத்து கவர்

அணு அபாயங்கள் காரணமாக ஏற்படும் இழப்புகள்

எலெக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரிக்கல் அல்லாத உபரி பாகங்கள் காரணமாக ஏற்படும் இழப்புகள்

போர் தொடர்பான அபாயங்கள்

கட்டணம் செலுத்தாத பயணிக்கும் சட்டப்பூர்வமான பொறுப்பு

தொடர்ச்சியான இழப்புகள்

 

ஒப்பந்த பொறுப்பு

 

பொறுப்புகள் திருட்டு மூலம் உபரி பாகங்கள் இழப்பு

 

புவிமண்டல பகுதிக்கு வெளியே வாகனத்தை இயக்குவது / பயன்படுத்துவது

ஆன்லைனில் நியூ இந்தியா கார் இன்சூரன்ஸ் விண்ணப்பிக்க எளிதான வழிமுறைகள்

 • நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று உள் நுழையவும் ( லாக் - இன் ) மற்றும் மோட்டார் இன்சூரன்ஸ் பிரிவிற்கு செல்க .
 • அனைத்து விவரங்களையும் பெற்று " ஆன்லைன் பைய் " லிங்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் ஆன்லைனில் வாங்குதலை தொடரவும் .
 • கிளிக் செய்வதன் மூலம் , நீங்கள் அனைத்து விவரங்களை நிரப்ப மற்றும் இன்சூரன்ஸ் மேற்கோள்களை பெறுவதற்கு ஒரு பக்கத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவீர்கள் .
 • நீங்கள் மேற்கோள்கள் உடன் சரியென நினைத்தால் , பின்னர் நீங்கள் கட்டணம் செலுத்தலாம் . இது முடிந்த உடன் பாலிசி ஆனது உடனடியாக வாங்குபவருக்கு அனுப்பி வைக்கப்படும் .
 • உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் , நீங்கள் எப்பொழுதும் கட்டணமில்லாத எண்ணை அழைக்கலாம் .

எதனால் நியூ இந்தியா இன்சூரன்ஸை வாங்க வேண்டும்

 • அரசு சொந்தமானது
 • ஆன்லைனில் எளிதாக வாங்கலாம்
 • உடனடி புதுப்பித்தல்
 • தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன
 • நோ க்ளைம் போனஸ்
 • விரிவான ஆட் - ஆன் கவர்ஸ்

நியூ இந்தியா இன்சூரன்ஸ் மீதான ஆட் - ஆன் கவர்ஸ்

நியூ இந்தியா இன்சூரன்ஸ் மூலம் வழங்கப்படும் கூடுதல் இணைப்பு கவர்கள் பற்றி ஆராய்வோம் .

பூஜ்ஜிய தேய்மானம்

ஒரு க்ளைம் தாக்கலின் போது வாகனத்தின் மதிப்பு குறைந்து ( தேய்மானம் ) கொண்டிருப்பதன் காரணமாக ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்கான பாதுகாப்பை பாலிசிதாரர் பெற அனுமதிக்கும் . இது காரில் தொடர்புடைய பாகங்களின் தேய்மானங்களுக்கான பாதுகாப்பாகும் . எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் விபத்துக்கள் போன்ற சூழ்நிலைகளில் , ஒரு பாலிசிதாரர் மதிப்பு குறைவது குறித்த எந்தவொரு யோசனையும் இல்லாமல் முழுமையான செலவினங்களை பெற தகுதி உடையவராக இருப்பார் .

சாலை வரி கவர்

இன்சூரன்ஸ் செய்யும் நபர் 3 ஆண்டுகளுக்கு காரின் நன்மைக்கான பொறுப்பை பெறுவீர்கள் . இது அடிப்படையில் , தயாரிப்பாளர் விலை மற்றும் ஐடிவி இடையே உள்ள தொகை வேறுபாடுகளுக்கு கவர் செய்யும் . கவரின் அதிகபட்ச தொகையாக ஒரு நபர் ரூ . 20 லட்சம் வரை பெற முடியும் .

நோ போனஸ் க்ளைம்

ஒவ்வொரு க்ளைம் தாக்கல் இல்லாத ஆண்டிற்கு நோ க்ளைம் போனஸ் பெறுவீர்கள் . வாடிக்கையாளரின் கார் பழையதாக இல்லாமல் , 7 வயது வரை இருந்தால் இந்த தள்ளுபடி தகுதியை பெறலாம் .

இழுத்து செல்வதற்கு கட்டணங்கள்

அவசரகால சந்தர்ப்பங்களில் வாகனத்தை இழுத்து செல்லும் உதவி தேவைப்பட்டால் , அதற்கான செலவுகள் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் கவனித்துக் கொள்ளப்படும் . இந்த கூடுதல் இணைப்பு கவரை நீங்கள் தேர்வு செய்தால் கிடைக்கும் . இந்த அம்சத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ .10,000 வரை க்ளைம் செய்யலாம் .

உள்ளடக்க பாதுகாப்பு

ஒரு விபத்து அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும் நேரத்தில் காரில் இருக்கும் எந்த வடிவில் இருக்கும் எந்தவொரு பொருட்களுக்கும் இதன் கீழ் க்ளைம் செய்யலாம் . செல்போன் , லேப்டாப் , துணிகள் , நகைகள் , சாவி உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்கள் . இந்த விருப்பத்தின் கீழ் அதிகபட்ச தொகையாக ரூ .20,000 வரை க்ளைம் செய்யலாம் .

நியூ இந்தியா கார் இன்சூரன்ஸின் க்ளைம் செயல்முறை

க்ளைம் ஆனது நீங்கள் தாக்கல் செய்யும் க்ளைம் வடிவத்தை சிறிது சார்ந்துள்ளது . இது விபத்து , திருட்டு , இயற்கை பேரழிவுகள் , மனிதனால் உருவாக்கப்படும் அல்லது மூன்றாம் தரப்பினரின் காரணமாக ஏற்படும் சேதங்களை சார்ந்துள்ளது . பொதுவாக , க்ளைம் தாக்கல் செய்வதற்கு , இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு பாலிசிதாரர் தகவல் தெரிவிப்பதோடு , சில அடிப்படையான ஆவணங்களை வைத்திருக்கவும் வேண்டும் . வாடிக்கையாளர்கள் காரை ஓட்ட அல்லது பழுது பார்க்க காரை இழுத்து செல்வதற்கு , விரிவான பணமில்லாத கேரேஜ் உடன் க்ளைம் உருவாக்கம் இருக்கலாம்.

பணமில்லா கேரேஜ் கீழ் , இன்சூரன்ஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் செய்த நபருக்கு பதிலாக நேரடியாக கேரேஜ்க்கு செலுத்தி விடுகிறது . அதே செலவுகளுக்காக திரும்பப் பெறுதல் தொகைக்கு இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் க்ளைம் தாக்கல் செய்யப்படலாம் . விபத்து , திருட்டு அல்லது உடல் காயங்கள் போன்ற சந்தர்ப்பத்தில் , காவல் நிலையத்திற்கு தகவலை தெரிவிக்க வேண்டும் மற்றும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை ( எஃப் . ஐ . ஆர் ) பதிவு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் . க்ளைம் தாக்கல் செய்யப்படும் நேரங்களில் பின்வரும் ஆவணங்கள் வைத்திருப்பது அவசியம் .

 • ஓட்டுநர் உரிமம்
 • ஆர்சி புக்
 • பாலிசி விவரங்கள்
 • எஃப் . ஐ . ஆர் , தேவைப்பட்டால்

நியூ இந்தியா கார் இன்சூரன்ஸில் பணமில்லா க்ளைம் செயல்முறை

பணமில்லா க்ளைம் தாக்கல் பற்றி ஆராய்வோம் .

 • இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் .
 • அருகில் உள்ள நெட்வொர்க் கேரேஜ் - க்கு காரை ஓட்டி செல்லவும் .
 • பாலிசி விவரங்களை வழங்கவும் .
 • நியூ இந்தியா மூலம் அந்த சேவைக்கான கட்டணம் கேரேஜ் - க்கு அளிக்கப்படும் .

நியூ இந்தியா கார் இன்சூரன்ஸின் ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைம் செயல்முறை

திருப்பி செலுத்துதல் செயல்முறையை பற்றி ஆராய்வோம் .

 • இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கவும் .
 • சமர்பிப்பதற்காக அனைத்து பில்கள் , விலைப்பட்டியல் மற்றும் செலவு ஆவணங்களை தயாராக வைத்து இருக்கவும் .
 • பில்கள் உடன் படிவத்தை சமர்ப்பிக்கவும் .

7 வேலை நாட்களுக்குள் திருப்பித்து செலுத்துதல் நடைபெறும் .

- / 5 ( Total Rating)