ஓரியண்டல் கார் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

ஓரியண்டல் கார் இன்சூரன்ஸ் லிமிடெட் ஆனது 1947 ஆம் ஆண்டில் செம்டம்பர் 12- ம் தேதி நிறுவப்பட்டது . 1950 ஆம் ஆண்டில் , முதலாம் ஆண்டு பிரீமியம் ரூ 99.946 உடன் தாழ்மையான தொடக்கத்துடன் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டது . " வாடிக்கையாளருக்கு சேவை " என்பதே ஓரியண்டல் நிறுவனத்தின் நோக்கமாகும் . ஓரியண்டல் நிறுவனத்திற்கு தலைமையகம் புது டெல்லியில் உள்ளது , மேலும் 30 பிராந்திய அலுவலங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் 1800+ அலுவலங்களை கொண்டு உள்ளன . இந்த நிறுவனம் நேபால் , குவைத் , துபாய் உள்ளிட்ட நாடுகளிலும் செயல்படுகிறது . நிறுவனமானது சுமார் 14,000+ ஊழியர்களின் ஓட்டுமொத்த வலிமையைக் கொண்டிருக்குகிறது .

இந்தியாவில் , சரியான மோட்டார் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் . மேலும் , நீங்கள் காவலர்களால் பிடிபட்டால் அபராதமாக ஒரு பெரிய தொகையை செலுத்த வேண்டி இருக்கும் . இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் படி , ஒரு நபர் சரியான மோட்டார் வாகன   இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை இயக்க முடியாது . இந்த கட்டாய அம்சத்தைத் தவிர , பாதுகாப்புடன் வாகனத்தை ஓட்டுவதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும் . நீங்கள் சாலை விபத்துகளில் ஈடுபட்டிருக்கும் போதெல்லாம் இந்த வகையான கவரேஜ் உங்களுக்கு உதவும் .   

இங்கு பல வகையான மோட்டார் இன்சூரன்ஸ் கிடைக்கின்றன . ஆனால் , விரிவான கவர் மற்றும் மூன்றாம் தரப்பு பொறுப்பு கவர் மிகவும் பிரபலமானவை . பொதுவாக மக்களின் இன்சூரன்ஸ் குறித்த தேடுதலுக்கு இவ்விரண்டையே அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் சாதாரண மனிதனின் பட்ஜெட்டிற்குள் அடங்கி விடுகிறது . அடிப்படையில் , மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகள் மிகவும் விலை உயர்ந்தவை அல்ல , நீங்கள் எளிதாக வாங்கலாம் .

ஆன்லைனில் ஓரியண்டல் மோட்டார் இன்சூரன்ஸ் வாங்குவதால் உங்களின்   அதிகளவிலான நேரத்தையும் ,   பணத்தையும் சேமிக்க முடியும் . இது பல பயனுள்ள அம்சங்கள் மற்றும் விரிவான பாதுகாப்பு உடன் உங்களுக்கு தேவையான மற்றும் பயனுள்ள திட்டங்களை வழங்கி சேவையாற்றுகிறது . இதனுடன் , நீங்கள் மன அமைதியுடன் வாகனத்தை இயக்க முடியும் .   பயனுள்ள மோட்டார் இன்சூரன்ஸ் பிளான் கீழ் , சாலையோர உதவி , இழுத்து செல்லும் வசதி , தேவையான விசயத்தில் கவரேஜ் , நோ க்ளைம் போனஸ் மற்றும் பல பயனுள்ள அம்சங்களை பெறுவீர்கள் . ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆனது உங்கள் தேவைகளை புரிந்து கொண்டு உங்கள் வாகனத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் விரிவான மோட்டார் இன்சூரன்ஸ் தயாரிப்புகளை வழங்குகிறது . இது கூடுதலாக மூன்றாம் தரப்பினரின் பொறுப்பு , இறப்பு அல்லது உடைமைகள் சேதங்கள் ஆகியவற்றிக்கு பாதுகாப்பை வழங்குகிறது .

ஓரியண்டல் மோட்டார் இன்சூரன்ஸின் முக்கியத்துவம்

உங்கள் வாகனத்திற்கு ஓரியண்டல் மோட்டார் இன்சூரன்ஸ் மூலம் வழங்கப்படும் சாதாரண விரிவான கவரேஜ் ஆனது பல்வேறு அம்சங்கள் மற்றும் நன்மைகள் ஆகியவற்றுடன் இணைத்து வருகிறது . இருப்பினும் , அத்தகைய உண்மையான அம்சங்கள் பிளானுக்கு பிளான் மாறுபடும் , ஆனால் அனைத்து பிளான்களும் தங்களுக்கான சொந்த பாதையில் பயனுள்ளதாக இருக்கிறது . சிறந்த நன்மைகளை பெறுவதற்கு உங்களின் தேவைகளுக்கு ஏற்ப ஒரு பிளானை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் . ஆன்லைனில் ஓரியண்டல் மோட்டார் இன்சூரன்ஸ் வாங்க அறிவுறுத்தப்படுகிறது , அதற்கு பின்னால் பல கரணங்கள் உள்ளன .  

 • குறைந்த அளவிலான வரையறுக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விரைவான முடிவுகள்
 • பணமில்லா வசதி கிடைக்கும் மற்றும் ஈமெயில் வழியாக உடனடியாக உறுதிப்படுத்தல் கிடைக்கும் .
 • பல்வேறு ஆட் - ஆன் கவரேஜ் உடன் உரிமையாளருக்கு தனிப்பட்ட விபத்து கவரேஜின் நன்மைகள் .
 • ஒவ்வொரு ஆண்டிலும் நோ க்ளைம் போனஸ் நன்மையை பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் அடுத்த ஆண்டிற்கான பிரீமியத்தில் அதிக தொகையை சேமிக்கலாம் .
 • பல தள்ளுபடிகள் உங்கள் தேவைகளுடன் நன்றாக பயணிக்கக்கூடியவை . பரந்த அளவிலான பயனுள்ள கவர்கள் உள்ளதால் உங்களுக்கான சிறந்த ஒன்றை நீங்களே தேர்வு செய்யலாம் .     

இந்தியாவில் , உங்களுக்கு பயனுள்ள மோட்டார் இன்சூரன்ஸ் பிளான்களை வழங்கும் எண்ணற்ற நிறுவனங்கள் உள்ளன . ஓரியண்டல் மோட்டார் இன்சூரன்ஸ் மூலம் ஒவ்வொரு இன்சூரன்ஸ் பிளான்களும் வேறுபட்ட அம்சங்கள் மற்றும் கவரேஜ் தொகுப்பு உடன் உள்ளது . எனவே , உங்களின் தேவைகளுடன் நன்றாக பயணிக்கக்கூடிய   சிறந்ததை தேர்ந்தெடுப்பது எளிதாக இருக்கும் .

பல்வேறு வகையான பாலிசிகள் மற்றும் பல்வேறு கவரேஜ்கள் ஆனது அம்சங்கள் மற்றும் நன்மைகளை ஒப்பிட உங்களை அனுமதிக்கின்றன . சிலர் விரிவான ஒன்றுடனும் அல்லது சிலர் பொறுப்பு மட்டும் கொண்டது உடனும் திருப்தி அடையலாம் . குறைந்த விலையில் பரந்த அளவிலான கவரேஜை வழங்குகிறது என்பதால் ஒரு விரிவான கவரேஜ் பிளானுக்கு செல்வதே சிறந்தது என அறிவுறுத்துகிறது . க்ளைம் செட்டில்மெண்ட் சூழ்நிலையில் நிறுவனமானது நன்மதிப்பை கொண்டுள்ளது . இது சிறந்த க்ளைம் செட்டில்மெண்ட் விகிதத்தை கொண்டிருக்கிறது மற்றும் தினசரி அடிப்படையில் லட்சக்கணக்கான வாடிக்கையாளருக்கு உதவுகிறது .  

மோட்டார் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள் 

நாம் மேலே குறிப்பிட்டபடி , ஓரியண்டல் மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆனது குறைந்த விலையில் பரந்த அளவிலான பயனுள்ள இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்கி வருகிறது . ஒரு நபரின் தேவைகளை மனதில் வைத்து அனைத்து பிளான்களும் நிறுவனத்தால் கவனமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது . உங்களின் பட்ஜெட் மற்றும் தேவைகளுடன் நன்றாகப் பொருந்தக்கூடிய பிளானை நீங்கள் நிச்சயம் தேட வேண்டும் .  

தனிப்பட்ட காருக்கான மோட்டார் பேக்கேஜ் இன்சூரன்ஸ் பாலிசி 

உங்கள் காருக்கு திருட்டு , இயற்கை பேரழிவு அல்லது மனிதனால் உருவாக்கப்படும் ஆபத்துக்களின் காரணமாக ஏற்படும் சேதங்களுக்கு எதிரான கவரேஜை இந்த பிளான் ஆனது வழங்குகிறது .  

கார் இன்சூரன்ஸ் பாலிசி கீழ் எவை கவர் செய்யப்பட்டு இருக்கும்

தனிப்பட்ட கார் பேக்கேஜ் பாலிசி கவர்ஸ்

 1. விபத்து இழப்பு அல்லது சேதம்
 2. உரிமையாளர் - ஓட்டுனருக்கு விபத்து கவர்
 3. கூடுதல் பிரீமியம் உடன் பல்வேறு ஆட் - ஆன் கவர்ஸ்

பின்வருபவை மூலம் ஏற்படும் தனிப்பட்ட காருக்கு இழப்பு அல்லது சேதங்கள் :

 1. கொள்ளை , வீட்டை உடைத்தல் அல்லது திருட்டு
 2. தீ , வெடித்தல் , தானாக பற்றிக் கொள்ளுதல் & மின்னல்
 3. நிலநடுக்கம் , வெள்ளம் , புயல் , சூறாவளி , நிலச்சரிவு அல்லது பாறைச்சரிவு , பயங்கரவாதம் , வன்முறை , போராட்டம் , தீங்கிழைக்கும் செயல்கள்
 4. சாலை , ரயில் , உள்நாட்டு நீர்வழிகள் , விமானம் அல்லது லிப்ட் மூலம் பயணம் .  

இன்சூரன்ஸ் தொகை என்றால் என்ன ?

இன்சூரன்ஸ் தொகையானது வாகனத்தின் இன்ஷுர்டு டிக்லர்டு வல்யூ ( ஐடிவி ) ஆகும் .   வாகனத்தின் ஐடிவி என்பது அடிப்படையில் தயாரிப்பாளரின் விற்பனை தொகை பட்டியலில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு குறைவானது . அவை வாகனத்தின் வயதினை அடிப்படையாக கொண்ட தேய்மானங்களுக்கு சரிகட்டும் . வாகனத்தின் ஐந்து ஆண்டுகள் வயதிற்கு அப்பால் மற்றும் வழக்கற்று போன வாகனங்களுக்கு , ஐடிவி ஆனது பரஸ்பரமாக ஒப்புக்கொண்ட மதிப்பு .  

ஓரியண்டல் கார் இன்சூரன்ஸின் பிரீமியம் எப்படி கணக்கிடப்படுகிறது

பிரீமியம் கணக்கிடுவது அடிப்படையில் பின்வரும் காரணிகளை அடிப்படையாக கொண்டது : வாகனத்திற்கு ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்கள் காரணமாக :

 1. வாகனத்தின் ஐடிவி
 2. வாகனத்தின் கியூபிக் கேபாசிட்டி
 3. பதிவு செய்யும் மண்டலம்
 4. வாகனத்தின் வயது  

கூடுதல் பிரீமியம் செலுத்தப்பட வேண்டியவை

 1. எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக் பொருட்கள்
 2. சிஎன்ஜி / எல்பிஜி எரிபொருள்
 3. ஆட் ஆன் கவர்
 4. கூடுதல் நண்மைகள்  

வணிக வாகனம் 

இந்த இன்சூரன்ஸ் பாலிசி ஆனது அனைத்து வணிக வாகனங்களும் பொருந்தக்கூடியது . இது வாகனத்தை பாதுகாக்கச் செய்கிறது . பல்வேறு தேவையற்ற ஆபத்துகளில் இருந்து இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது .

 1. கொள்ளை , வீட்டை உடைத்தல் அல்லது திருட்டு
 2. தீ , வெடித்தல் , தானாக பற்றிக் கொள்ளுதல் & மின்னல்
 3. நிலநடுக்கம் , வெள்ளம் , புயல் , சூறாவளி , நிலச்சரிவு அல்லது பாறைச்சரிவு , பயங்கரவாதம் , வன்முறை , போராட்டம் , தீங்கிழைக்கும் செயல்கள்
 4. சாலை , ரயில் , உள்நாட்டு நீர்வழிகள் , விமானம் அல்லது லிப்ட் மூலம் பயணம் .

ஓரியண்டல் மோட்டார் இன்சூரன்ஸ் ஏன் தேவைப்படுகிறது ? 

விபத்துக்கள் எந்தவொரு எச்சரிக்கைகள் இன்றியும் நிகழ்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை . நமக்கு அவ்வாறான சூழ்நிலைகள் தேவையில்லை , ஆனால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டியது அவசியம் . அதற்கு , ஒரு பயனுள்ள மோட்டார் இன்சூரன்ஸ் பிளான் உதவி உடன் , மனதளவிலும் , நிதி அளவிலும் இருக்கும் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க முடியும் .

எந்தவிதமான சேதங்கள் , திருட்டு போன்ற சந்தர்ப்பங்களில் உங்களின் வாகனத்திற்கும் மற்றும் உங்களுக்கும் தேவையான நிதி சார்ந்த பாதுகாப்பை மோட்டார் இன்சூரன்ஸ் வழங்குகிறது . ஒரு சிறந்த மோட்டார் இன்சூரன்ஸ் பிளான் உதவியுடன் , இந்திய சாலைகளில் பயணிப்பது எளிதாக மற்றும் பதட்டம் இல்லாததாகவும் இருக்கும் .

க்ளைம் தாக்கல் இல்லாத ஒவ்வொரு ஆண்டிற்கு நோ க்ளைம் போனஸ் - ஐ நீங்கள் பெறுவீர்கள் . அந்த போனஸ் சதவீதமானது அடுத்த ஆண்டிற்கான பிரீமியம் தொகை அல்லது ஆட் - ஆன் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளப்படும் .  

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி ?

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் சிறந்தது , அதன் எளிதான ஆன்லைன் வெளியீட்டு செயல்முறை ஆகும் . ஆமாம் , ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆனது கார் இன்சூரன்ஸ் பாலிசியை பெறுவதற்கு ஆன்லைன் முறையின் வழியை பயன்படுத்திக் கொள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு வழிவகை செய்து அனுமதிக்கிறது . இத்தகைய ஆன்லைன் மூலமாக வாங்கும் செயல்முறை மிகவும் எளிதானது மற்றும் இது பாலிசி உடனடி வெளியீடு , தள்ளுபடிகள் , வசதிகள் போன்ற பல நன்மைகளை உங்களுக்கு வழங்க முடியும் .

ஆன்லைனில்   இன்சூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பிக்க ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் தளத்திற்கு செல்ல வேண்டும் . அந்த தளத்தில்   உங்களின் விவரங்களை அளிக்கவும் மற்றும் பணத்தை செலுத்தலாம் . சில நேரங்களில் உங்களுக்கு குழப்பங்கள் ஏற்படலாம் , அவ்வாறான சந்தர்ப்பங்களில் எங்கள் இணையதளத்தின் உதவியை நீங்கள் பெறலாம் .

உங்களைப் பற்றி மற்றும் உங்கள் வாகனத்தின் பற்றி சில அடிப்படை விவரங்களை நீங்கள் அளிக்க வேண்டும் . பின் உடனடியாக மேற்கோள்களை ( கோட்ஸ் ) பெறுவீர்கள் . அதைத் தொடர்ந்து நீங்கள் பணம் செலுத்தும் செயல்முறைக்கு செல்வீர்கள் . இன்சூரன்ஸ் பாலிசிக்கு பணம் செலுத்துவதற்கு நெட் – பேக்கிங் , க்ரெடிட் கார்டு , டெபிட் கார்டு போன்றவைகள் மூலம் எளிதான மற்றும் பாதுகாப்பான முறையில் செலுத்த முடியும் . பணம் செலுத்திய சில நிமிடங்களில் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியதற்கான உறுதிச்செய்யப்பட்ட குறுந்தகவலை நீங்கள் பெறுவீர்கள் .

- / 5 ( Total Rating)