ரிலையன்ஸ் கார் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமனது அடிப்படையில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாகும் . இது மோட்டார் இன்சூரன்ஸ் , ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற ஒவ்வொரு ஜெனரல் இன்சூரன்ஸ் தயாரிப்புகளையும் பூர்த்திக் செய்யக்கூடிய சிறந்த ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமாக இருப்பதை குறிக்கிறது . அடிப்படையில் மிகப்பெரிய நிதி சார்ந்த அடித்தளம் மற்றும் புகழ்பெற்ற அமைப்பான ரிலையன்ஸ் குழுவின் ஒரு பகுதியாக இருந்து பல ஆண்டுகளாக   தனது வணிகத்தை தொடர்கிறது . இந்த அமைப்பானது நாடு முழுவதிலும் 139 அலுவலங்கள் மற்றும் கிட்டத்தட்ட 12,000 இடைத்தரகர்களை கொண்டிருக்கிறது .

தொழில்துறையில் நன்கு அறியப்பட்ட உலகளாவிய தரநிலை தணிக்கை நிறுவனமான  - டேட் நொர்ஸ்கே வெரிடஸ் ( டி . என் . வி ) மூலம் குவாலிட்டி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் - க்கு நன்மதிப்பு வழங்கப்பட்டது . இந்தியா முழுவதிலும் தயாரிப்புகளை வழங்குவது மற்றும்   அனைத்திலும் பணியாற்றுவது போன்றவற்றிற்கு ISO 9001:2008 தர சான்றிதழ் பெற்ற முதல் இந்திய நிறுவனமாக விளங்குகிறது .   இதைத் தவிர , நிறுவனமானது சிஎம்ஓ ஆசியா சோசியல் மீடியா மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ல்லென்ஸ் விருது 2015, ஹெல்த்கேர் லீடர்ஷிப்   விருது 2014, லோக்மட் பிஎஃப்எஸ்ஐ விருது 2014 உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது .

இன்றைய நாட்களில் ஒரு காரினை வாங்குவது பெரிதான காரியமாக இருப்பதில்லை . காரணம் , கடன்கள் மற்றும் நிதி சார்ந்த உதவிகள் எளிதாக கிடைக்கும் விதத்தில் மாறியுள்ளது . எளிதாக காரினை வாங்கி விடலாம் என்றாலும் , அந்த காரினை நீண்ட காலத்திற்கு சரியாக பராமரித்து வர சற்று கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டி இருக்கும் . இந்நிலையில் , மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியானது உண்மையில் காரினை சரியான முறையில் பராமரிக்க உங்களுக்கு உதவக் கூடியதாக இருக்கும் . பாலிசியானது காருக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதோடு சாலைகளில் சுமூகமாக பயணிக்க உங்களுக்கு உதவும் . அனைத்து விதமான மோட்டார் சார்ந்த சூழ்நிலைகள் மற்றும் பிரச்சனைகளை மன அழுத்தம் இன்றி உங்களை கையாள செய்கிறது .

மோட்டார் வாகன சட்டத்தின் படி இந்தியாவில் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி வைத்து இருக்க வேண்டியது கட்டாயம் என்பதை தவிர்த்து பார்த்தால் உண்மையில் , வெறுமன ஒரு மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்து இருப்பது போதுமானதாக இருக்காது . வாகன உரிமையாளரின் கடமை அதோடு முடிவுக்கு வரவில்லை . உண்மையில் , இது ஆரம்பமாக மட்டுமே இருக்கும் ! உங்கள் பாலிசியின் வழக்கமான பிரீமியத்திற்கு பணம் செலுத்துவது மாற்றும் சரியான நேரத்தில் அல்லது எப்பொழுது தேவையோ அப்பொழுது உங்களின் பாலிசியை புதுப்பிப்பது போன்றவற்றின் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் . இது உங்களுக்கும் உங்கள் வாகனத்திற்கும் முழுமையான பாதுகாப்பை அளிக்கிறது .

நிறுவனமானது மிகவும் பயனுள்ள மற்றும் சிறந்ததாக இருக்கும் பரந்த அளவிலான மோட்டார் இன்சூரன்ஸ் தயாரிப்புகளை வழங்குகிறது . ரிலையன்ஸ் மோட்டார் இன்சூரன்ஸ் மூலம் வழங்கப்படும் அனைத்து தயாரிப்புகளும் விரிவான பாதுகாப்பை வழங்குகிறது . உங்களின் தேவைகளுக்கு சரியாகப் பொருந்தக்கூடிய ஒன்றினை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் . இந்தியாவில் ஒரு வாகனத்தை தனிப்பட்ட முறையில் சொந்தமாகவோ அல்லது வணிக ரீதியான பயன்பாட்டிற்காக கொண்டு இருந்தாலும் மோட்டார் இன்சூரன்ஸ் பெற வேண்டியது கட்டாயம் என்பதில் சந்தேகமில்லை . மேலும் , ஒரு பாதுகாப்பு அம்சமாக இருப்பதனாலும் மோட்டார் இன்சூரன்ஸ் வைத்து இருப்பது நல்ல விசயமாக இருக்கிறது . உங்களுக்கு குறைந்த பிரீமியத்தில் முழுமையான பாதுகாப்பை வழங்கும் ஒன்றை நோக்கி நீங்கள் செல்ல வேண்டும் .  

ரிலையன்ஸ் கார் இன்சூரன்ஸின் முக்கிய நன்மைகள்

பணமில்லா க்ளைம் நெட்வொர்க்

இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 3800- க்கும் மேலான கேரேஜ்களின் நெட்வொர்க்களில் பணமில்லா க்ளைம் சர்வீஸ் .

தள்ளுபடி

அன்டி தேஃப்ட் டிவைஸ் மற்றும் ஸ்பெசிஃபிக் லோகேஷன் பயன்படுத்தினால்  தள்ளுபடிகள் கிடைக்கும் .

விபத்து கவர் / வாடிக்கையாளர் ஆதரவு

நீங்கள் வாகனத்தை ஓட்டும் பொழுது ஏற்படக்கூடிய எந்தவொரு விபத்திற்கு எதிராகவும் பாலிசிதாரருக்கான பாதுகாப்பினை பாலிசி வழங்குகிறது .  

கார் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

கார் இன்சூரன்ஸ்

ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் மூலம் வழங்கப்படும் கார் இன்சூரன்ஸ் ஆனது பல ஆண்டுகளாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள தயாரிப்புகளுடன் பணியாற்றி வருகிறது . மேலும் , அதிக நேரத்தையும் , பணத்தையும் சேமிக்க உதவுகிறது . அதே சமயத்தில் , பாலிசியில் மூன்றாம் தரப்பு பொறுப்புக்கு எதிரான கவரேஜ் மற்றும் விரிவான இன்சூரன்ஸ் பிளான் ஆகியவற்றை நீங்கள் பெறலாம் . சாலையோர உதவி , பணமில்லா வசதி , ஆட் - ஆன் கவர்ஸ் உள்ளிட்டவையை வழங்குவதால் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . உங்கள் தேவைகளுக்கு ஏற்றபடி திட்டமிடப்பட்ட பிளான்களை நீங்கள் பெறுவீர்கள் .

ரிலையன்ஸ் கார் இன்சூரன்ஸிற்கான ஆட் - ஆன் கவர்ஸ்

தேய்மான கவர்

வாகனத்தின் மதிப்பை குறைக்கும் தேய்மானங்களில் இருந்து வானத்திற்கான பாதுகாப்பை வழங்குகிறது . ஸ்பெசிஃபிக் லோகேஷன் தள்ளுபடி & அன்டி தேஃப்ட் டிவைஸ் தள்ளுபடி .

மூன்றாம் தரப்பு கவர்

நீங்கள் வாகனத்தை ஓட்டும் பொழுது ஏற்படக்கூடிய எந்தவொரு விபத்தித்திற்கு எதிராகவும் பாலிசிதாரருக்கான பாதுகாப்பினை பாலிசி வழங்குகிறது . கூடுதலாக மூன்றாம் தரப்புக்கு ரூ .10 லட்சம் வரையிலான கவர் .

தனிப்பட்ட விபத்து கவர்

5 லட்சம் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட உறுதித் தொகையில் 100%

தனிப்பட்ட விபத்தில் தொகுப்பு கவர்

இந்த பயனுள்ள கூடுதல் இணைப்பு கவர் ஆனது விபத்துக்கள் , எவரேனும் தவறாக வாகனத்தை இயக்கி பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலையில் உங்களுக்கு உதவிட செய்கிறது . விபத்தில் மொத்தமாக செயலிழப்பு மற்றும் இறப்பு போன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்காக துணை நிற்கும் .

மோட்டார் செக்யூர் ப்ளஸ் கவர்

இந்த ஆட் - ஆன் கவர் ஆனது தேய்மானம் இல்லா கவர் , நுகர்வோர் கவர் மற்றும் எஞ்சின் கவர் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது .

தேய்மானம் இல்லா கவர்

காரின் தேய்மானம் மதிப்பில் இருந்து உங்கள் கார் மற்றும் அதன் பாகங்கள் மதிப்பு குறைப்படுவதில் இருந்து பாதுகாக்கிறது .

மோட்டார் செக்யூர் பிரீமியம் கவர்

இந்த ஆட் - ஆன் அடிப்படை கவரில் கூடுதலாக தேய்மானம் இல்லா கவர் , எஞ்சின் கவர் மற்றும் நுகர்வோர் கவர் உடன் தனிப்பட்ட காருக்கு சாவி பாதுகாப்பு கவரையும் வழங்குகிறது .

அடிப்படை பண்புகள்

சிறந்த விலையில் விரிவான பாதுகாப்பு பெறுவதை ரிலையன்ஸ் மோட்டார் பிரைவேட் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி அனுமதிக்கிறது . சாத்தியமான முறையில் தங்களின் வாகனத்திற்கு பாதுகாப்பு தேவை என நினைக்கும் ஒவ்வொரு வாகன உரிமையாளருக்கும் பயனுள்ள இன்சூரன்ஸ் பாலிசியாக அமைந்துள்ளது .

சேதங்களுக்கு எதிரான கவர் : வாகனத்தில் பயணிக்கும் பொழுது காரில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு சாத்தியமான சேதத்திற்கும் கவரேஜை வழங்க நிறுவனம் முயன்று வருகிறது . விபத்துக்கள் , தீ , மின்னல் , தானாக பற்றிக் கொள்ளுதல் , வெடித்தல் , திருட்டு , வன்முறை & கலவரம் மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள் , பயங்கரவாதம் , நிலநடுக்கம் , வெள்ளம் , சூறாவளி , வெள்ளப்பெருக்கு , நிலச்சரிவு , புயல் , மேலும் சாலை , ரயில் , விமானம் , எலிவேட்டர் உள்ளிட்டவைகள் மூலம் பயணிக்கும் பொழுது ஏற்படும் சேதங்களுக்கு எதிரான பாதுகாப்பை பாலிசி வழங்குகிறது .

சாலையோர உதவி : இந்த பாலிசி சாலையோர உதவியையும் வழங்குகிறது . சாலையோரத்தில் உதவி தேவைப்படும் சூழ்நிலையில் , இழுத்து செல்ல தேவைப்படும் உதவி , பேட்டரி ஜம்ப்ஸ்டார்ட் , மைனர் ரிப்பேர்கள் , டயர் பஞ்சர் , அவசர எரிபொருள் உதவி , பேக்அப் கீ டெலிவரி , டாக்ஸி ஏற்பாடு செய்தல் , ஹோட்டலில் இடவசதி ஏற்பாடு செய்தல் , வெளியே செல்லும் செய்திகளை அனுப்புதல் மற்றும் பல உதவிகளை வழங்குகிறது .

மூன்றாம் தரப்பு பொறுப்பு : அடிப்படை கவரை தவிர்த்து , நிறுவனமானது மூன்றாம் தரப்பு பொறுப்பு ( தர்டு பார்ட்டி லியபிலிட்டி ) கவரேஜை வழங்குகிறது . இது மோட்டார் வாகன சட்டத்தின் படி   இப்பொழுதும் அவசியாகும் . இது மூன்றாம் தரப்பினரின் உடைமைகள் சேதங்களுக்காக இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது . இவை , எந்தவொரு விபத்து சந்தர்ப்பத்திலும் மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்பை வழங்குகிறது .  

எதனால் ரிலையன்ஸ் கார் இன்சூரன்ஸ் பாலிசி வாங்க வேண்டும் ?

விரிவான கவர் : இந்த பிளான் ஆனது உங்களுக்கும் , உங்கள் வாகனத்திற்கு விரிவான பாதுகாப்பை அளிக்கிறது . இந்த பாலிசியின் கீழ் , மூன்றாம் தரப்பு பொறுப்பு கவர் மற்றும் தனிப்பட்ட மோட்டார் கவர் ஆகிய இரண்டிற்குமான பாதுகாப்பை பெறுவீர்கள் .

ஆட் - ஆன் கவர்ஸ் : அடிப்படை கவர் உடன் சேர்த்து ஆட் - ஆன் கவரேஜ் மற்றும் தள்ளுபடிகளை நீங்கள் பெற முடியும் . என்சிபி - ஐ வைத்திருப்பதால் தொடர்ந்து வழக்கமாக பல தள்ளுபடிகளை பெறலாம் .

சாலையோர உதவி : இது இன்சூரன்ஸ் பாலிசியின் சிறந்த நன்மைகளில் ஒன்றாகும் . இந்த உதவிகரமான நன்மை உடன் , வாகனம் ஓட்டும் பொழுது வாடிக்கையாளர் பல நன்மைகள் மற்றும் தேவையான பாதுகாப்பை பெறலாம் .

விலக்குகள்

சாதாரண இயற்கை தேய்மானங்கள்

இந்த பிளான் ஆனது இயற்கையாக நிகழும் வாகனத்தின் தேய்மானங்களுக்கு , மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் பிரேக்டவுன் போன்றவற்றிக்கு கவரேஜ் வழங்காது .

தொடர்ச்சியான இழப்புகள்

சேதங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் , அவை தொடர்ந்து சேதங்கள் / இழப்புகளை ஏற்படுத்துகிறது . அசல் சேதங்கள் மட்டுமே கவர் செய்யப்பட்டு இருக்கும் .

கட்டாய குறைத்தல்

க்ளைம் செய்யப்படும் நேரத்தில் ஒரு நிலையான தொகை குறைத்துக் கொள்ளப்படும் .

நிபுணர் பார்வை

இந்த பாலிசியானது தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் இருந்து உங்கள் வாகனம் பாதுகாப்பாக இயங்க பல நன்மைகளையும் , அம்சங்களையும் வழங்குகிறது . விபத்து ஏற்படும் சூழ்நிலையில் உங்கள் வாகனத்தில் ஏற்படும் அனைத்து சாத்தியமான சேதங்களுக்கும் பெருந்திரளான பாதுகாப்பை வழங்குகிறது .

ரிலையன்ஸ் கார் இன்சூரன்ஸின் வசதிகள்

ரிலையஸ் கார் நிறுவனத்துடன் பெருந்திரளான வசதிகள் இணைந்து உள்ளன .

 • விபத்து அல்லது பிரேக்டவுன் ஏற்படும் சூழ்நிலையில் சாலையோர வசதியை   இலவசமாக வழங்கும் .
 • 3800- க்கும் அதிகமான நெட்வொர்க் சர்வீஸ் நிலையங்களுடன் பணமில்லா வசதியை வழங்குகிறது .
 • இழுத்து செல்லும் சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது . திருப்பி செலுத்துதல் ரூ .1500 வரை .
 • உடனடியாக பாலிசி வழங்கலை கொண்டுள்ளது
 • ஆவணமாக்கல் இல்லை
 • 24*7 நேர வாடிக்கையாளர் சேவை
 • சொந்தரவு இல்லாத மற்றும் எளிதான அணுகுமுறை
 • சிறந்த தள்ளுபடிகளை வழங்குதல்
 • பாலிசியை வழங்குதல் தொடர்பாக பல்வேறு விருப்பங்கள்
 • உடனடியான உதவியை வழங்குகிறது .

ரிலையன்ஸ் கார் இன்சூரன்ஸ் கவர்

ஒரே இடத்தில் அனைத்து தேவைகள் மற்றும் கட்டாயங்களுக்கும் பாதுகாப்பை வழங்கும் கவராகும் .

சொந்த பொறுப்பு கவர் : இது சேதம் தொடர்புடைய இழப்பீடுகளின் வடிவத்தில் வழங்கப்படுகிறது . இது பின்வரும் காரணங்களால் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு பொருந்தும் .

 • மனிதனால் உருவாகும் ஆபத்துகள் : தீ , வெடித்தல் , வன்முறை , தாக்குதல் , திருட்டும் கொள்ளை போன்றவற்றை உள்ளடக்கி உள்ளது .
 • இயற்கை பேரழிவுகள் : வெள்ளம் , புயல் , நிலநடுக்கம் , சூறாவளி , நிலச்சரிவு போன்றவற்றை உள்ளடக்கி உள்ளது .
 • பயணங்கள் : உங்கள் வாகனத்தை சாலை , ரயில் , விமானம் , லிப்ட் அல்லது எலிவேட்டர் மூலம் கொண்டு செல்லும் பொழுது ஏற்படும் சேதங்களுக்கு வழங்கப்படுகிறது .

மூன்றாம் தரப்பு பொறுப்பு : விபத்தால் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் பெரிய காயங்கள் அல்லது அவர்களின் உடைமைகளுக்கு ஏற்படும் சேதங்கள் அல்லது அவர்களின் இறப்பு போன்ற மூன்றாம் தரப்பினருக்கு உங்கள் வாகனத்தால் ஏற்படும் சேதங்கள் / இழப்புகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் . உங்களின் இன்சூரன்ஸ் நிறுவனமானது சட்டபூர்வமான செட்டில்மென்ட் , க்ளைம்ஸ் மற்றும் தேவைப்படும் செலவினங்கள் ஆகியவற்றையும் வழங்குகிறது .

ஆட் - ஆன் கவர்ஸ் : அடிப்படை கவரைத் தவிர்த்து , இது கூடுதல் ப்ரீமியத்துடன் கூடுதல் பாதுகாப்பையும் வழங்குகிறது . இந்த ஆட் - ஆன் கவர்ஸ் ,

 • தனிப்பட்ட விபத்து கவர் , ஓட்டுநர் , பெயர் குறிப்பிடப்பட்ட பயணி அல்லது பெயர் குறிப்பிடாத பயணி
 • எலெக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரிக்கல் அல்லாத பாகங்களுக்கான கவரேஜ்
 • " தேய்மானம் இல்லாத " கவர்
 • " நோ க்ளைம் போனஸ் " வைத்திருத்தல் கவர்

மேலே கூறப்பட்ட காரணமாக வாகனத்திற்கு ஏற்படும் அனைத்து சேதங்களுக்கும் தேவையானவற்றை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் .

உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள்

இன்ஷூர்டு டிக்ளர்டு வல்யூ   என்பது அடிப்படையில் காரின் பட்டியலிடப்பட்ட மதிப்பில் இருந்து தேய்மானங்களை கழித்த பின்னான   உறுதி செய்யப்பட்ட தொகை . இந்த தேய்மான சதவீதம் உங்கள் பிரீமியத்தை பாதிக்கும் .

 • கியூபிக் கேபாசிட்டி ( சிசி ) பிரீமியத்தை பாதிக்கும் .
 • வாகனத்தின் மாதிரி
 • வாகனத்தின் வயது
 • புவியியல் மண்டலம்
 • நோ க்ளைம் போனஸ் பிரீமியத்தை பாதிக்கலாம்
 • சில தள்ளுப்படிகள் கூட பிரீமியத்தை பாதிக்கலாம் .  

ரிலையன்ஸ் கார் இன்சூரன்ஸ் தள்ளுபடிகள்

இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியத்தை குறைப்பதற்காக உங்களுக்கு உதவக்கூடிய பல்வேறு நன்மைகள் இங்குள்ளன . உங்கள் பிரீமிய தொகையில் மூன்று விதமான தள்ளுபடிகளை ரிலையன்ஸ் வழங்குகிறது .

நோக்ளைம் போனஸ் : நீங்கள் கடந்த ஆண்டில் க்ளைம் தாக்கல் செய்யவில்லை என்றால் நோ க்ளைம் போனஸை பெறலாம் . அதேபோன்று , நீங்கள் 50% வரையிலான தள்ளுபடியை பெற முடியும் .

தன்னார்வ கழித்தல் : உங்கள் க்ளைம் தாக்கலில் அதிக அளவில் தன்னார்வ தொகையை ( நீங்களே செலுத்திக் கொள்ளும் தொகை ) தேர்ந்தெடுத்தால் , நிச்சயம் நீங்கள் பெரும் தள்ளுபடியை பெறுவீர்கள் .

ஆட்டோமொபைல் அசோசியேஷன் : நீங்கள் ஏதாவதொரு ஆட்டோமொபைல் அசோசியேஷனில் உறுப்பினராக இருந்தால் , உங்களின் கட்டணத்தில் கூடுதல் பணத்தை சேமிப்பீர்கள் .

ரிலையன்ஸ் கார் இன்சூரன்ஸின் விலக்குகள்

உங்கள் வாகனத்திற்கு ஏற்படும் சில சேதங்கள் நிறுவனத்தால் கவர் செய்யப்படாமல் இருக்கும் . அவை ,

 • இயற்கையாவே வாகனத்திற்கு ஏற்படும் தேய்மானங்கள்
 • மெக்கானிக்கல் அல்லது எலெட்ரிக்கல் வகையான சேதங்கள்
 • புவியியல் அமைப்பிற்கு ( பாலிசி கவர்   செய்யும் இடத்திற்கு வெளியே )   வெளியே ஏற்படும் விபத்துக்கள்
 • போர் அபாயங்கள் , அணு அபாயங்கள் அல்லது உள்நாட்டு கலகங்கள் போன்றவை காரணமாக ஏற்படும் சேதங்கள் .
 • ஆல்கஹால் அல்லது போதை மருந்துகளின் விளைவின் கீழ் வாகனத்தை   இயக்கி ஏற்படும் சேதங்கள்
 • தொடர்ச்சியான இழப்புகள்

ரிலையன்ஸ் கார் இன்சூரன்ஸ் க்ளைம் செயல்முறை

ரிலையன்ஸ் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு வசதியான மற்றும் விரைவான க்ளைம் செட்டில்மென்ட் செயல்முறையை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்குகிறது . பாலிசிதாரர்கள் , அவசர நிலையின் வகையைப் பொறுத்து பணமில்லா க்ளைம் அல்லது திருப்பி செலுத்துதல் க்ளைம் ( ரீஇம்பெர்ஸ்மென்ட் ) ஆகிய விருப்பங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம் . வாடிக்கையாளர்கள் தங்கள் ரிலையன்ஸ் கார் இன்சூரன்ஸ் க்ளைம் பற்றிய நிலையை இன்சூரன்ஸ் செய்யும் நிறுவனத்தின் இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ள முடியும் . க்ளைம் செட்டில்மென்ட் நேரத்தில் எந்தவொரு பிரச்சனைக்கும் கூடுதல் ஆதரவாக அவர்களின் 24*7 மணி நேர வாடிக்கையாளர் சேவை உதவியை பெறலாம் .

ரிலையன்ஸ் கார் இன்சூரன்ஸ் ஆனது சில நொடிகளில் நீங்கள் க்ளைம் தாக்கல் செய்வதை அனுமதிக்கிறது .

 1. பாலிசிதாரர் தொலைபேசி   அழைப்பின் வழியாக தொடர்பு கொண்டு இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பதன் மூலம் க்ளைம் தாக்கல் செய்யலாம் . பின்னர் அவர்கள் கேட்கக்கூடிய சில ஆவணங்கள் பின்வருமாறு ,
 • பாலிசி எண்
 • தொடர்பு கொள்ளும் விவரம்
 • பாலிசிதாரரின் பெயர்
 • விபத்து நிகந்த நாள் மற்றும் நேரம்
 • வாகனத்தின் எண்
 • வாகனத்தின் மாடல்
 • விபத்து குறித்த விளக்கம்
 • கேரேஜ் பெயர்
 1.   பின்னர் வாகனத்தை பழுது பார்க்க அங்கீகரிக்கப்பட்ட ஒரு கேரேஜ் - க்கு கொண்டு செல்ல வேண்டும் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் .
 2. ஆய்விற்கு பிறகு , ரிலையன்ஸ் க்ளைம் தாக்கலுக்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம் . பின்னர் செயல்முறையை தொடரவும் .
 3. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பணமில்லா செட்டில்மென்ட் விருப்பதின் மூலம் நெட்வொர்க் கேரேஜ்களின் மூலம் தங்கள் வாகனத்தை பழுது பார்த்து கொள்ள முடியும் . பழுது பார்த்தற்கான தொகை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் மூலம் நேரடியாக கேரேஜ்களுக்கு வழங்கப்பட்டு உங்களின் பில்கள் சரி செய்யப்படும் . இதற்கு நீங்கள் பூர்த்தி செய்யப்பட்ட க்ளைம் படிவத்துடன் கையெழுத்திட்ட ஆர்சி புக் நகல் மற்றும் ஓட்டுனர் உரிமத்தின் நகலையும் இணைத்து வழங்க வேண்டும் .
 4. ஒருவேளை பாலிசிதாரர் திருப்பி செலுத்தும் விருப்பத்தை தேர்ந்தெடுத்து இருந்தால் , பாலிசிதாரர் அனைத்து கட்டணங்களையும் முதலில் செலுத்த வேண்டி இருக்கும் . பின்னர் அதே தொகைக்கான ரசீதுகளை சர்வேயருக்கு சமர்ப்பிக்க வேண்டும் . இதன் பின் இன்சூரன்ஸ் நிறுவனம் அவை இருக்கிறதா என்று பகுப்பாய்வு செய்து அதற்கான பணத்தை செலுத்துகிறது .

ரிலையன்ஸ் தனிப்பட்ட விபத்து க்ளைம் செயல்முறை

தனிப்பட்ட விபத்துக்கள் நிகழும் சூழ்நிலைகளில் இலவச உதவி எண்ணிற்கு தகவல் தெரிவித்து க்ளைம் தாக்கல் செய்யலாம் .

க்ளைம் விண்ணப்பிக்க பின்வரும் விவரங்களை வாடிக்கையாளர் அளிக்க வேண்டி இருக்கும் .

 • இன்சூரன்ஸ் செய்தவரின் தொடர்பு கொள்ளும் விவரம்
 • பாலிசி எண்
 • காயமடைந்த பாலிசிதாரரின் பெயர்
 • விபத்து நடந்த நேரம் மற்றும் நாள்
 • விபத்து நிகந்த இடம் மற்றும் இழப்பின் அளவு
 • விபத்து நடந்தது பற்றிய விரிவான விளக்கம்
 • ஒருவேளை சாலை விபத்து நடந்து இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் .  

விபத்திற்கான க்ளைம் - க்கு தேவைப்படும் ஆவணங்கள்

 1. பாலிசி சான்று
 2. ஆர்சி புக் மற்றும் வரி ரசீதுகள்
 3. ஓட்டுனரின் அசல் ஓட்டுனர் உரிமம் மற்றும் நகல்
 4. மூன்றாம் தரப்பினரின் உடைமைகள் சேதம் , இறப்பு மற்றும் உடல் காயங்களுக்கு காவல்துறையின் பஞ்சநாமா அல்லது எஃப் . ஐ . ஆர் பதிவு
 5. பழுது பார்ப்பதற்கான மதிப்பீடு
 6. பழுது பார்த்த பில்கள் மற்றும் கட்டண ரிசிப்ட்கள்
 7. க்ளைம் செயல்முறையில் பழுது பார்த்தவர்களுக்கு கட்டணம் வழங்கப்பட வேண்டுமென்றால் , ரெவின்யூ ஸ்டாம்ப் உடன் கையெழுத்திட்ட க்ளைம் டிஸ்சார்ஜ்   ரசீது தேவைப்படும் .

திருட்டிற்கான க்ளைம்

 1. பாலிசி ஆவணங்கள்
 2. பதிவு புத்தகம் ( ஆர்சி புக் ) உடன் திருடப்பட்டதற்கான   ஆர் . டி . ஓ ஒப்புதல்
 3. வரி கட்டணம் ரெசீப்ட்
 4. முந்தைய பாலிசி விவரங்கள் - பாலிசி எண் / இன்சூரன்ஸ் செய்தவர் பெயர் / இன்சூரன்ஸ் காலம்
 5. வாகனத்தின் சாவி / சர்வீஸ் புக்லெட் / வாரண்டி கார்டு
 6. போலீஸ் பஞ்சநாமா / எஃப் . ஐ . ஆர் / இறுதி விசாரணை அறிக்கை / ஜேஎம்எஃப்சி அறிக்கை .
 7. திருட்டு மற்றும் வாகனத்தை " பயன்படுத்தாமல் " இருக்க செய்ய ஆர் . டி . ஓ அறிவிப்பு கடிதத்தின் நகல்

பொறுப்பிற்கான ஒப்புதல்

 1. முறையாக கையெழுத்திட்ட படிவம் 28, 29 மற்றும் 30
 2. பைனான்சியரால் கையெழுத்திட்ட படிவம் 35
 3. ஒப்புதலுக்காக கடிதம்
 4. ஏற்றுக் கொண்ட க்ளைம் செட்டில்மென்ட் மதிப்புக்கான ஒப்புதல்
 5. ரெவின்யூ ஸ்டாம்ப் உடன் கையெழுத்திட்ட க்ளைம் டிஸ்சார்ஜ் ரசீது

பைனான்சியரின் என்ஓசி சான்றிதழ்

- / 5 ( Total Rating)