ராயல் சுந்தரம் கார் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

ராயல் சுந்தரம் அலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆனது இந்தியாவில் 2001 ஆம் ஆண்டில் உரிமம் பெற்று இயங்கி வரும் முதல் தனியார் துறை ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமாகும் . இந்நிறுவனம் மோட்டார் , ஹெல்த் , தனிநபர் , விபத்து , ஹோம் , ட்ராவல் இன்சூரன்ஸ் ஆகியவற்றை தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தற்போது வழங்கி வருகிறது . ராயல் சுந்தரம் 5 மில்லியன் வாடிக்கையாளர்கள் , 1700- க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டிருக்கிறது . இதன் தயாரிப்புகள் இந்தியாவில் உள்ள 180- க்கும் மேற்பட்ட நகரங்களில்   ஏஜென்ட்கள் , விநியோக பங்குதாரர்கள் மற்றும் தரகர்கள் மூலமாக வழங்கப்படுகின்றன .  

முதல் இன்சூரன்ஸ் நிறுவனமாக ஹெல்த் க்ளைம் - க்கு பணமில்லா   செட்டில்மெண்ட் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் மற்றும்   ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவமனை கட்டணம் போன்ற புதுமையாக உடல்நல தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமும் இவர்களே . சில்லறை தயாரிப்புகளை தங்களின் வாடிக்கையாளர் வட்டாரத்தில் விற்பனை செய்வதற்கு வங்கிகளுடன் இணைந்த ( இணைக்கான பங்குதாரர்கள் ) முதல் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமாகும் .

நீங்கள் சொந்தமாக இருசக்கர வாகனம் அல்லது கார் வைத்து இருந்தால் , இந்தியாவில் மோட்டார் இன்சூரன்ஸ் பெறுவது   கட்டாயமாகிறது . கட்டாயமாக இருப்பதை தவிர , இன்றைய தினங்களில் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது மற்றும் விபத்துக்கள் எப்பொழுது நிகழும் என்று யாருக்கும் தெரியாது என்பதால் இன்சூரன்ஸ் போன்றவற்றை வைத்து இருப்பது உதவிகரமாக இருக்கும் . அதிக செலவினங்களை ஏற்படுத்தக்கூடிய எதிர்பாராத சூழ்நிலைகளின் போது உங்களின் வாகனத்திற்கான முழுமையான பாதுகாப்பை மோட்டார் இன்சூரன்ஸ் வழங்குகிறது .

இந்திய மோட்டார் வாகன சட்டம் 1988- ன் படி , இந்தியாவில் உள்ள அனைத்து வாகன உரிமையாளர்களும் வாகனத்தில் பயணிக்கும் போது சரியான மோட்டார் இன்சூரன்ஸ் பிளான் - ஐ வைத்து இருப்பது கட்டாயமாகிறது . நான்கு சக்கர வாகனம் அல்லது இருசக்கர வாகனம் என ஏதுவாக இருந்தாலும் , மோட்டார் இன்சூரன்ஸ் ஆனது கட்டாயம் வைத்து இருக்க வேண்டிய விசயம் மற்றும் அது பயனுள்ளதாகவும் இருக்கும் . மோட்டார் வாகன சட்டத்தின் படி , இந்திய சாலைகளில் பயணிக்கும் பொழுது சரியான மூன்றாம் தரப்பு பொறுப்பு இன்சூரன்ஸ் இல்லாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் . இந்தியாவில் ஒரு சரியான மூன்றாம் தரப்பு மோட்டார் இன்சூரன்ஸ் - ஐ வைத்திருப்பது ஒரு சட்டபூர்வமான தேவையாகும் .

இன்சூரன்ஸ் என்பது அடிப்படையில் ஒரு ஒப்பந்தமாகும் . இதில் , தேவை அல்லது விபத்து போன்ற சூழ்நிலைகளில் இன்சூரன்ஸ் செய்தவருக்கு பணத்தினை செலுத்த வேண்டிய பொறுப்பினை இன்சூரன்ஸ் நிறுவனம் கொண்டிருக்கிறது . அடிப்படையில் , மோட்டார் இன்சூரன்ஸ் ஆனது வாகனத்தின் உரிமையாளருக்கும் மற்றும் பல்வேறு வகையான சேதங்கள் மற்றும் விபத்துகளில் இருந்து வாகனத்திற்கும் பாதுகாப்பினை அளிக்கிறது . சட்டத்தின்படி , இது உரிமையாளரின் மூலம் உள்ளடக்கும் பொறுப்பிற்கும்   பாதுகாப்பு வழங்குகிறது . வாகனத்தின் மூலம் ஒருவருக்கு ஏற்படும் எந்தவொரு காயங்கள் அல்லது உயிர் சேதங்கள் மற்றும் உடைமைகள் சேதங்களுக்கான சட்டபூர்மான பொறுப்பினை வாகனத்தின் உரிமையாளர் பெறுகிறார் .

ராயல் இன்சூரன்ஸ் மோட்டார் கவர் என்னவெல்லாம் செய்கிறது ?

இந்தியாவில் , இரண்டு விதமான மோட்டார் இன்சூரன்ஸ் உள்ளன . முதலில் இருப்பது மூன்றாம் தரப்பு பொறுப்பு மற்றும் இரண்டாவது ஒரு விரிவான இன்சூரன்ஸ் பிளான் ஆகும் . மூன்றாம் தரப்பு பொறுப்பு   பிளான் வைத்திருப்பது இந்தியாவில் ஒரு சட்டபூர்வமான தேவையாகும் . இது பாதிக்கப்பட்ட நபரின் வாகனத்திற்கான சேதங்களை மற்றும் பொறுப்பினை கவர் செய்து உள்ளது . இது ஒரு ஓடி ( சொந்த சேதம் ) கவரை விட மிகவும் பிரபலமானது . இவை பின்வரும் சேதங்களை உள்ளடக்கி உள்ளது .

 • தீ , தானாக - பற்றிக் கொள்ளுதல் , வெடித்தல்
 • கலவரங்கள் , தாக்குதல்கள்
 • நிலநடுக்கம் , வெள்ளம் , புயல் , சூறாவளி , தட்பவெப்பம் , வெள்ளப்பெருக்கு , பனிமழை , நிலச்சரிவு , பாறைச்சரிவு ,
 • கொள்ளை , வீட்டை உடைத்தல் , திருட்டு
 • தீங்கிழைக்கும் செயல்கள்
 • ஆபத்தான வெளிப்புற வழியில்
 • வாகனத்தை கொண்டு செல்ல பயணிக்கும் போது
 • பயங்கரவாத செயல்கள்

உங்களின் காரினை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தவில்லை என்றால் ,   கேரேஜ் அல்லது பார்க்கிங் பகுதியில் வெறுமென நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தால் , மோட்டார் இன்சூரன்ஸ் வைத்து இருப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர முடியாது . இருப்பினும் , இது இன்னும் கட்டாயமாகவும் , பயனுள்ளதாவும் உள்ளது . இது முழுமையான கவரேஜ் மற்றும் விரிவான கவரேஜை வழங்குகிறது .  

திருட்டு : இந்தியாவில் வாகனங்கள் தொடர்பான திருட்டுகள் பொதுவானவை என்பதில் சந்தேகமே இல்லை . அதுபோன்ற சூழ்நிலைகளில் உங்களின் வாகனத்தினை பாதுகாக்க மோட்டார் இன்சூரன்ஸ் பிளான் அவசியமாகிறது . திருட்டில் புதிய மற்றும் ஆடம்பர கார்களை மட்டுமே திருடர்களின் இலக்காக இருப்பதாக நினைப்பது   தவறான கருத்தாகும் , ஏனெனில் திருட்டில் அத்தகைய பாகுபாடுகள் ஏதுமில்லை . ஒவ்வொரு வாகனத்தின் பாகங்களும் மதிப்புடையவை மற்றும் விலையுயர்ந்தவை என்பதால் திருடர்கள் எந்தவொரு வாகனத்தையும் இலக்காக கொள்ளலாம் . உங்களை வாகனத்தை உண்மையில் அவர்களிடம் இருந்து பாதுகாக்க விரும்பினால் , ராயல் சுந்தரம் மூலம் வழங்கப்படும் பயனுள்ள மோட்டார் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கலாம் .

உடல் சேதங்கள் : வெள்ளம் , தீ , நிலநடுக்கம் போன்ற எண்ணற்ற காரணங்கள் வாகனங்களின் சேதங்களுக்கு பின்னால் உள்ளன . உங்கள் வாகனத்தை பழுது பார்ப்பதற்கு நீங்கள்   ஒரு பெரும் தொகையை செலுத்த வேண்டிய பல சூழ்நிலைகள் உள்ளன . இருப்பினும் , அவற்றில் இருந்து மோட்டார் இன்சூரன்ஸ் பிளான் உங்களை பாதுகாக்கிறது . அடிப்படையில் , பழுது பார்ப்பதற்கு செலவாகும் தொகையை மோட்டார் இன்சூரன்ஸ் பிளான் உள்ளடக்கி இருக்கும் .

இயற்கை பேரழிவுகளான நிலநடுக்கம் , வெள்ளம் , புயல் , சூறாவளி மற்றும் பலவற்றின் காரணமாக ஏற்படும் அனைத்து சேதங்களுக்கான பாதுகாப்பை பெறலாம் . தாக்குதல் , வன்முறை , பயங்கரவாதம் , கொள்ளை , திருட்டு , தீங்கிழைக்கும் செயல்கள் , மற்றும் பிற மனிதனால் ஏற்படும் ஆபத்துகளின் காரணமாக ஏற்படும் சேதங்களும் கவர் செய்யப்படும் .

மற்றவர்களால் பயன்படுத்தவும் : நீங்கள் உங்களின் காரினை அதிகம் பயன்படுத்தாவிட்டால் மற்றும் சுயமாக ஓட்டுவதற்கு பதிலாக அதை வாடகைக்கு விட்டு இருந்தால் அல்லது பிற நோக்கித்திற்கு பயன்படுத்தி வந்தால் , பயனுள்ள மோட்டார் இன்சூரன்ஸ் ஆனது அந்த மோட்டார் வாகனம் மூலம் டெனன்ட் ( குத்தகைத்தாரர் )- க்கு ஏற்படும் இறப்பு அல்லது காயங்கள் எழும் சூழ்நிலைக்கு எதிரான தேவைப்படும் பாதுகாப்பை   வழங்கிறது .

உங்கள் வாகனத்தை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லது வர்த்தகப் பயன்பாட்டிற்காக என எதுவாக இருந்தாலும் மோட்டார் இன்சூரன்ஸ் பெறுவது ஏற்புடையதாக இருக்கும் . மோட்டார் இன்சூரன்ஸ் பிளான் ஆனது எண்ணற்ற வழிகளில் உரிமையாளர்களை பாதுகாக்கிறது மற்றும் அவர்களின் தேவைக்கேற்ப நிதி   சார்ந்த நிவாரணத்தை வழங்குகிறது .

ராயல் சுந்தரம் கார் இன்சூரன்ஸின் முக்கிய நன்மைகள்

பணமில்லா க்ளைம் நெட்வொர்க்

இந்தியா முழுவதிலும் உள்ள 3300- க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கேரேஜ்களின் நெட்வொர்க்களுடன் பணமில்லா சேவையை பெறலாம் .

தள்ளுப்படிகள்  

நீங்கள் ஒரு தன்னார்வ விலக்கு ( தாமே செழுத்திக் கொள்வது )- ல்   ரூ .15,000- க்கு செலவிட முடியும் . இதனால் நீங்கள் எளிதாக 35% தள்ளுபடியை உங்களின் சொந்த சேதங்கள் பிரீமியத்தில் பெறலாம் . அவை அதிகபட்சமாக ரூ .2,500 ஆக இருக்கும் .

விபத்து கவர் / வாடிக்கையாளர் ஆதரவு

உங்களுக்கு விபத்து ஏற்பட்டால் மற்றும் க்ளைம் செய்முறைக்கு உங்களை அழைத்து சென்று உங்களுக்கு உதவி செய்ய, ரிலேஷன்ஷிப்   மேனேஜரின் உதவி உடன் தனிப்பட்ட கவனிப்பை நீங்கள் பெறலாம் .

ராயல் சுந்தரம் மோட்டார் இன்சூரன்ஸ் பிளான்கள்

ராயல் சுந்தரம் மோட்டார் இன்சூரன்ஸ் ஆனது பல்வேறு வகையான பயனுள்ள திட்டங்களை வழங்குகிறது . அதில் , உங்களுக்கான சிறந்த ஒன்றை நீங்களாகவே எடுக்க வேண்டும் .   இந்த பரந்த அளவிலான தயாரிப்புகள் கவர்ச்சிகரமான நன்மைகள் உடன் சேர்ந்து பெரும் பாதுகாப்பை அளிக்கிறது .

கார் ஷீல்டு

கார் ஷீல்டு ஆனது உங்களுக்கான சிறந்த இன்சூரன்ஸ் ஒப்பந்தம் ஒன்றை வழங்குகிறது . இது சட்டத்தால் உங்களை காப்பற்றுவது மட்டுமல்ல , உங்களுக்கும் , உங்கள் காருக்குமான பாதுகாப்பு கவசமாக இருக்கிறது . இந்த இன்சூரன்ஸ் பிளான் ஆனது உங்கள் காருக்கு அல்லது மற்றொரு காருக்கு அல்லது மூன்றாம் தரப்பினருக்கு காயங்கள் அல்லது இழப்புகள் மூலம் ஏற்படும் விபத்து சேதங்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பை அளிக்கிறது . திருட்டு அல்லது தீ உள்ளிட்டவை மூலம் உங்கள் காருக்கு ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்களும் இந்த பிளான் மூலம் கவர் செய்யப்பட்டு இருக்கும் .  

ராயல் சுந்தரம் கார் இன்சூரன்ஸ்க்கான ஆட் - ஆன் கவர்ஸ்

தேய்மான கவர்

பகுதி இழப்பு / க்ளைம் சந்தர்ப்பங்களில் பிளாஸ்டிக் அல்லது உலோக பாகங்கள் மீதான தேய்மான விலக்கு / தள்ளுப்படி

மூன்றாம் தரப்பு கவர்

மூன்றாம் தரப்பு நபர்களிடம் இருந்து எழும் இறப்பு அல்லது காயத்திற்கான   க்ளைம் - களை சமாளிப்பதற்கு ஒரு தேவையான கவர் .

தனிப்பட்ட விபத்து கவர்

நீங்கள் ஒரு தன்னார்வ விலக்கு ( தாமே செழுத்திக் கொள்வது )- ல்   ரூ .15,000- க்கு செலவிட முடியும் . இதனால் நீங்கள் எளிதாக 35% தள்ளுபடியை உங்களின் சொந்த சேதங்கள் பிரீமியத்தில் பெறலாம் . அவை அதிகபட்சமாக ரூ .2,500 ஆக இருக்கும் .

தேய்மான விலக்கு கவர்இது அடிப்படையில் நீங்கள் முழு க்ளைம் தொகையை பெறுவீர்கள் மற்றும் அதை தேய்மான மதிப்பை கழிக்காமல் பெற முடியும் என்பதை உறுதி செய்கிறது .

காற்றுத்தடுப்பு கண்ணாடி கவர்

அதேபோன்று , முன் அல்லது / மற்றும் பின் பக்க கண்ணாடியை பழுது பார்க்க அல்லது மாற்றிக் கொள்வதற்கு நீங்கள் பொறுப்பு உடையவராக இருப்பீர்கள் . இருப்பினும் , இது அடுத்த ஆண்டிற்கான " நோ க்ளைம் போனஸ் " - ஐ பாதிக்காது .

தன்னார்வ விலக்கு கவர்

இது இன்சூரன்ஸ் ப்ரீமியங்களில் பெரும் அளவிலான பணத்தை சேமிக்க உதவுகிறது . இது உங்கள் கார் இன்சூரன்ஸின் பிரீமியத்தில் 15 - 35 % குறைக்கும் .

முழு விலைப்பட்டியல் விலை இன்சூரன்ஸ் கவர்

இந்த கூடுதல் சேர்க்கையானது , 100% பட்டியலிடப்பட்ட விலையில் உங்கள் காரை இன்சூரன்ஸ் செய்ய அனுமதிக்கிறது .

உடைமைகள் இழப்பு கவர்

உங்கள் காரில் வைத்து இருக்கும் பேக்கேஜ் / உடைமைகளுக்கு ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு ஈடுசெய்ய கொடுக்கும் தொகைக்கு தாக்கல் செய்யலாம் .

மாற்று கார் வசதி

உங்களின் வாகனம் பிரேக்டவுன் அல்லது பழுது ஆகி இருக்கும் பொழுது வேறொரு வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு தினசரி அடிப்படையில்   பயணப்படி அலவன்ஸ் உடன் இருக்கும் .

எஞ்சின் ( மோசமாகிறது ) ப்ரோடெக்டர்

இதன் உடன் , மழைக் கால கவலைகள் இருக்காது . மேலும் , உங்கள் கார் எஞ்சினின் பல்வேறு சேதங்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது .

என்சிபி ப்ரோடெக்டர்  

இது கடந்த ஆண்டில் பூஜ்ஜிய இன்சூரன்ஸ் க்ளைம் - க்காக 20-50 % தள்ளுப்படி ( பாலிசி காலத்தின் போது ) உடன் இருக்கும் .

சாவி ப்ரோடெக்டர் கவர்

இதனுடன் , உங்கள் காரின் சாவியை நீங்கள் தவறாக மறந்து வைத்து விட்டதால் , இழந்து விட்டால் அல்லது திருடப்பட்டு இருந்தால் அதற்கு எதிராக நீங்கள் இன்சூரன்ஸ் செய்ய முடியும் .

ராயல் சுந்தரம் கார் இன்சூரன்ஸின் உள்ளடக்கங்கள் & விலக்குகள்

உள்ளடக்கங்கள்

இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தில் விபத்தில் இருந்து பாலிசிதாரரின் உடைமைகளுக்கு சேதங்கள் அல்லது அழிந்து போவது அல்லது உடைமையை ( பொருட்கள் ) இழப்பு , காரில் விபத்து அல்லாத போது அல்லது பாலிசிதாரரின் உடைமைகள் திருடப்படும் போதும் ஏற்றுக் கொள்ளப்படும் .

விலக்குகள்

இயற்கையான தேய்மானங்கள் , தேய்மானம் அல்லது தொடர்ச்சியான இழப்பு .

ராயல் சுந்தரம் கார் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும் ?

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துடன் , பாலிசியை வாங்குவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய ஆன்லைன் தளம் இருக்கும் பொழுது நீங்கள் ராயல் சுந்தரம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை . ஆன்லைனில் வாங்கும் பொழுது , உங்கள் வாகனத்துடன் தொடர்புடைய அடிப்படை விவரங்களுடன் ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் . உங்களுக்கான பிரீமியத்தை கணக்கிடவும் மற்றும் வல்லெட் , நெட் - பேங்கிங் , டெபிட் / கிரெடிட் கார்டு   போன்றவை மூலம் பணம் செலுத்தவும் . பணம் செலுத்திய பின் , பாலிசி ஆவணங்களை நீங்கள் பெறுவீர்கள் . இத்தகைய எளிதான வாங்கும் முறையை தவிர , நீங்கள் அதே டொமைன் இல் பல நன்மைகள் பெறுவீர்கள் .

முக்கிய நன்மைகள்

 • இது மொத்தமாக 3300- க்கு மேற்பட்ட கேரேஜ்களில் உள்ள அனைத்து கேரேஜ்களிலும் வழங்கும் பணமில்லா சேவைக்கான அணுகலை வழங்குகிறது .
 • அதேபோன்று , விபத்துகள் அல்லது பிரேக்டவுன்களை கொண்டிருக்கும் அவசரகால நிலை ஒப்பந்தம் உடன்  24*7 சாலையோர உதவியை பெற நீங்கள் பொறுப்புடையவராக இருப்பீர்கள் .
 • தேவையற்ற பல்வேறு அவசரநிலை உடனான ஒப்பந்தத்தில் இழுத்து செல்லும் வசதியும் இடம்பெறும் .
 • விபத்து மற்றும் க்ளைம் செயல்முறை நேரத்தின் போது தனிப்பட்ட கவனிப்பு பெற நீங்கள் பொறுப்புடையவராக இருப்பீர்கள் .
 • க்ளைம் செட்டிமெண்ட்களுக்கு ராயல் இன்சூரன்ஸ் மூலம்  24*7 உதவி கிடைக்கும் .

ஆன்லைனில் ராயல் சுந்தரம் கார் இன்சூரன்ஸிற்கு விண்ணப்பிப்பதால் பெறும்   முக்கிய நன்மைகள்

நீங்கள் ராயல் சுந்தரம் கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொது பல நன்மைகளை பெற முடியும் .

 • நேரத்தை சேமிக்கிறது - பாலிசியை ஆன்லைனில் வாங்குவதன் மூலம் , நீங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு செல்ல மற்றும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நேரத்தை நீங்கள் சேமிக்கலாம் . உங்கள்   வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டு ஆன்லைனில் வாங்குவதன் மூலம் அந்த நேரத்தை எளிதாக சேமிக்கலாம் .
 • எளிய செயல்முறை - நீங்கள் ராயல் சுந்தரம் மூலம் விரும்பும் பிளான் - ஐ பெற சில நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் . அந்த வழிமுறைகள் , ஆன்லைன் படிவத்தை நிரப்புவது , பிரீமியம்   தொகையை கணக்கிடுவது மற்றும் ஆன்லைனில் பணத்தை செலுத்துவது உள்ளிட்டவையாகும் .
 • குறைந்த ஆவணமாக்கல் -   நீங்கள் ராயல் சுந்தரம் கார் இன்சூரன்ஸிற்கு ஆன்லைனில்   விண்ணப்பித்து இருந்தால் மட்டுமே அதிக ஆவணங்கள் அல்லது காகித வேலைகளை சமாளிக்க தேவை இருக்காது . ஆன்லைனில்   பாலிசி பெறுவதற்கு தேவையான தகவலை நீங்கள் வழங்க வேண்டும் .
 • நெகிழ்வான கட்டண விருப்பங்கள் - உங்களின் டெபிட் அல்லது க்ரெடிட் கார்டு மூலம் கட்டணத்தை நீங்கள் செலுத்த முடியும் . இது பாலிசிக்கு செலுத்துவதற்கு ஏடிஎம் இல் இருந்து பணத்தை எடுத்து   அலையும் தொந்தரவில் இருந்து உங்களை பாதுகாக்கும் .  
 • ஆன்லைன்   உதவி - நீங்கள் ஆன்லைனில் பாலிசிக்கு விண்ணப்பிக்கும் பொழுது , ராயல் இன்சூரன்ஸ் மூலம் ஆன்லைன்   உதவி சேவை ( சாட்   சர்வீஸ் )- ஐ   பெறுவீர்கள் . மேலும் , உங்களின் அனைத்து கேள்விகளுக்கான பதில்களை பெறுவீர்கள் .
 • தள்ளுபடிகள் - உங்களின் வாகனம் மற்றும் தேர்வு செய்த இன்சூரன்ஸ் பிளான் அடிப்படையில் சிறப்பு தள்ளுபடிகளை பெறுவதற்கு பொறுப்பு உடையவராக இருப்பீர்கள் .

ராயல் சுந்தரம் கார் இன்சூரன்ஸில் க்ளைம் பெறுவது எப்படி?

உங்களின் ராயல் சுந்தரம் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் க்ளைம் தாக்கல் செய்யப்படும் போது , அடிப்படை நடைமுறையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . அந்த அடிப்படை படிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன :

 • நீங்கள் க்ளைம் தாக்கல் செய்ய விரும்பினால் , எவ்வளவு விரைவாக முடியுமோ இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் .
 • ராயல் சுந்தரம் இல் இருந்து அங்கீகாரம் இல்லாமல் பழுது / மாற்றுவது போன்ற எதையும் சுயமாக தொடங்க வேண்டாம் .
 • வெற்றிகரமாக க்ளைம் - ஐ பதிவு செய்த பிறகு , இன்சூரன்ஸ் நிறுவனம் வாகன சேதத்தை ஆய்வு செய்ய ஒரு சர்வேயர் உடன் ஓர் கண்காணிப்பு ( ட்ராக்கிங் ) என்னையும் வழங்கும் .
 • சர்வேயர் வாகனத்தின் ஆய்வு   செய்வார் மற்றும் கேரேஜ் இல் இருந்து பழுது பார்த்தலுக்கான மதிப்பீட்டை சமர்ப்பிப்பார் . அந்த கட்டத்தில் , பதிவு சான்றிதழ் , ஓட்டுநர் உரிமம் மற்றும் அது தொடர்புடைய ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் .
 • க்ளைம் - ஐ வெற்றிகரமாக பதிவு செய்த பிறகு , பிரதிநிதிகள் கண்காணிப்பு எண்ணை வழங்குவதோடு , சேதங்கள் பங்கை கணக்கிட ஒரு சர்வேயரை ஏற்பாடு செய்வார்கள் .
 • மீதமுள்ள செயல்முறைக்கு சர்வேயரிடம் க்ளைம் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் . மூன்றாம் தரப்பு நபருக்கு / உடைமைக்கு சேதங்கள் / காயங்கள் ஏற்படும் சூழ்நிலைகளில் கட்டாயமாக எஃப் . ஐ . ஆர் பதிவு நகல் தேவைப்படும் .
 • அங்கீகாரத்தின் காரணமாக , திருப்பி அளிப்பதற்கான செயல்முறை நிச்சயம் பாலிசிதாரர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது .
 • கிடைக்கக்கூடிய பணமில்லா விருப்பம் பற்றி பிரதிநிதிகளால் அறிவிக்கப்படும் .
 • க்ளைம் பணத்தை பெறுவதற்கான செயல்முறையில் ராயல் சுந்தரம் இல் இருந்து சரிபார்க்க பில்கள் , முன்மாதிரிகள் & மதிப்பீடுகள் நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டும் .

ராயல் சுந்தரம் கார் இன்சூரன்ஸின் க்ளைம்க்கு தேவையான ஆவணங்கள்

கார் இன்சூரன்ஸ் செயல்முறைக்கு பல ஆவணங்கள் அவசியம் தேவைப்படுகிறது . உங்களுக்கு தேவைப்படும் ஆவணங்களின் பட்டியல் கீழே உள்ளது .

 • பாலிசி ஆவணங்கள்
 • சரியாக கையொப்பமிட்ட க்ளைம் படிவம்
 • பதிவு சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை சரிபார்ப்பதற்காக சர்வேயர் / பிரதிநிதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் .
 • எஃப் . ஐ . ஆர் நகல் ( ஒருவேளை மூன்றாம் தரப்பு நபர் / உடைமை சம்பந்தப்பட்டு இருந்தால் )
 • அசல் விலைப்பட்டியல் மற்றும் பணம் செலுத்தியதற்கான ஆதாரம் தேவைப்படும்
 • க்ளைம் செயல்முறையின் போது  POC உடன் தொடர்பில் இருப்பது மிக முக்கியம் . மேலும் , உண்மையாக மற்றும் வெற்றிகரமாக செயலில் இருக்க வேண்டும் .
 • உரிமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி அறிந்து கொள்ள பாலிசி ஆவணத்தை சரிபார்க்க வேண்டும் .

- / 5 ( Total Rating)