எஸ்பிஐ கார் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இன்சூரன்ஸ் ஆஸ்திரேலியன் குரூப்(ஐஏஜி) ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்-ஐ நிறுவினர். எஸ்பிஐ ஆனது இந்தியா முழுவதும் 1,96,000 கிளைகள் மற்றும் அதன் 5 அசோசியேட் வங்கிகளுடன் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியியல் நிறுவனமாக விளங்குகிறது. இந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்கான 74% மூலதனம் எஸ்பிஐ-யிடமும், மீதமுள்ள 26% பங்கு ஐஏஜி நிறுவனத்திடமும் உள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் 77 நகரங்களுக்கு மேலாக பரந்தளவில் தனது சேவைகளை விரிவுப்படுத்தி, அதற்காக பணியில் 2250 ஊழியர்களை பணியமர்த்தி உள்ளது.

இத்தகைய வங்கியானது ஓய்வூதிய நிதி, பொறுப்பு சேவைகள், ஜெனரல் இன்சூரன்ஸ், ஃப்ரைவேட் ஈக்விட்டி போன்றவற்றில் முன்பே திட்டமிட்ட கூட்டு ஒப்பந்தங்களுடன் புதிய வணிக களத்தில் நுழைந்தது. எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் ஐஆர்டிஏ ஒப்புதல் பெற்றது. இதில், 14,178-க்கும் அதிகமான விநியோகஸ்தர்களையும், அதன் அசோசியேட் வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் 6,323 ஏஜென்ட்களை கொண்டிருக்கின்றது. இந்நிறுவனமானது பேங்க் இன்சூரன்ஸ் மாடல்ஸ், ஏஜென்சி, ப்ரோகிங் மற்றும் சில்லறை நேரடி தடங்கள் உள்ளடக்கிய வலுவான பல விநியோக மாதிரிகளை பின்பற்றுகிறது. மோட்டார் , ஹெல்த்  , தனிநபர் விபத்து , தனிநபருக்கான ட்ராவல் மற்றும் ஹோம் இன்சூரன்ஸ் , தீ , மரைன் , பேக்கேஜ் , கட்டுமானம் மற்றும் இன்ஜினீயரிங் பொறுப்பு , குரூப் ஹெல்த் , குரூப் தனிநபர் விபத்து மற்றும் வணிகத்திற்காக இதர இன்சூரன்ஸ் ஆகியவற்றையே எஸ்பிஐ ஜெனரலின் பாலிசிகள் சூழ்ந்துள்ளன.

எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் பெற்ற விருதுகள் மற்றும் சாதனைகள்

எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் ஆனது 2015-ம் ஆண்டின் இந்தியன் இன்சூரன்ஸ் விருதுகளின் 5-வது பதிப்பில் " மார்க்கெட்டிங் இனிசியேடிவ் ஆஃப் தி இயர் " விருதினைப் பெற்றது. 2016-ம் ஆண்டின் பதிப்பில் " அண்டர்-சேர்வ்டு மார்க்கெட் பெனென்ட்ரேசன் " மற்றும் “ கமெர்சியல் லைன்ஸ் க்ரோத் லீடர்ஷிப் " ஆகிய விருதுகளின் அடிப்படையில் இரண்டு பாராட்டுக்களை பெற்றது. இதைத் தவிர, " வருடாந்திர டேட்டா குவாலிட்டி விருது " , " கோல்டன் பீக்காக் நேஷனல் குவாலிட்டி விருது " உள்ளிட்ட அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. 2015-2016 நிதியாண்டில் எஸ்பிஐ ஜெனரல் ஆனது தொழில்துறையின் வளர்ச்சி விகிதம் 9.3% அளவிற்கு குறைந்த போதும் அதிர்ச்சியூட்டும் வகையில் 33% அளவிற்கு வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்து வேகமாக வளர்ந்து வரும் தனியார் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமாக மாறியது. இந்த இன்சூரன்ஸ் நிறுவனமானது தன்னுடைய பல ஆண்டுகள் செயற்பாடுகளின் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் பொறுப்பினை வென்றுள்ளது.

எஸ்பிஐ மோட்டார் இன்சூரன்ஸ்

சாலை பயணங்களில் ஆபத்துகளும், அபாயம் சூழ்ந்த விசயங்களும் எப்பொழுதும்  இருக்கின்றன. சாலைகளில் பயணிக்கக்கூடிய மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்த காரணத்தினால் சாலை விபத்துகள் ஏற்படுமோ என்ற குழப்பமான போக்கு காணப்படுகிறது. உங்கள் வாகனத்திற்கான கவனிப்பு மற்றும் பாதுகாப்பானது எஸ்பிஐ மோட்டார் இன்சூரன்ஸ்க்கு உரியதாகும். நீங்கள் இன்சூரன்ஸ் செய்த வாகனத்திற்கு ஏற்படும் திருட்டு அல்லது சேதங்கள் போன்ற பாலிசியில் வரையறுக்கப்பட்ட இழப்புகளுக்கு எதிரான பாதுகாப்பை பாலிசியானது வழங்குகிறது. இதனுடன் நீங்கள் கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம் ஆட்-ஆன் நன்மைகளையும் பெற முடிகிறது  

உங்கள் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் செய்வது மன அமைதியை அளிப்பதோடு, விபத்துக்கள் குறித்த எந்தவொரு கவலைகளும் இன்றி உங்களின் வாழ்க்கையில் பயணிக்கலாம். எஸ்பிஐ மோட்டார் இன்சூரன்ஸ் விரைவான பாதை , நியாயமான மற்றும் வெளிப்படையான க்ளைம் செயல்முறையை வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் செயல்முறையின் கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது.  நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மற்றும்  அனுபவமிகுந்த க்ளைம் நிபுணர்களின் நோக்கமானது வேறுபட்ட வாடிக்கையாளர் சேவை மற்றும் உங்களின் க்ளைம்-க்கான விரைவான செட்டில்மென்ட் வழங்குவதை கொண்டுள்ளன. அவர்களின் க்ளைம் சேவை வழங்குபவை :

 • அவசரநிலை சூழ்நிலைகளில் உதவி  
 • உங்கள் வாகனத்திற்கான சர்வீஸ் மற்றும் ஒருங்கிணைந்த பழுதுபார்ப்பு மூலம் மன அழுத்தமில்லா க்ளைம்
 • உங்கள் க்ளைம் போக்கு குறித்த புதிய  தகவல்கள்
 • விரும்பிய தேர்வாக உள்ளூர் சேவையை வழங்குபவரை அணுகும் விருப்பம்

இவற்றின் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த க்ளைம் மேலாண்மை குழு ஆனது விரைவான மற்றும் திறமையான க்ளைம் செட்டில்மென்ட்களை வழங்குவதோடு , விரைவில் சாத்தியமான அளவிற்கு நீங்கள் கட்டுப்பாட்டிற்கு திரும்ப வர உங்களுக்கு உதவுகிறது. இது நியாயமான மற்றும் வெளிப்படையான க்ளைம் செட்டில்மென்ட் செயல்முறையை உறுதி செய்கிறது. உங்களின் க்ளைம் செட்டில்மென்ட் உடன் திருப்தி அடையவில்லை என்றால் , உங்களின் கவலைகள் குறித்து ஆன்லைனில் குறைகள் வழிமுறைகள் பிரிவிற்கு  (கிரீவன்ஸ் மெக்கானிசம் விங்) தெரியப்படுத்தலாம். இது உங்களுடன் வேலை நேரமான 72 மணி நேரம் தொடர்பில் இருக்கும் மற்றும் குறைகள் குறித்த விசாரணைகள் முடிந்த உடன் பதில் அளிக்கும். உங்களின் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை என்றால் , நிவர்திக்காக இன்சூரன்ஸ் ஆம்பட்ஸ்மன்-ஐ நீங்கள் அணுகலாம்.

எஸ்பிஐ மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியானது பை-ஃப்யூயல் கிட் , மாற்று சாவிக்கான கூடுதல் கவர் மற்றும் தனிப்பட்ட உடைமைகளின் இழப்புகள் உள்ளிட்ட சில பிரத்யேக அம்சங்களுக்கான பொறுப்புடன் நிற்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் வேளாண்மை முக்கியமான தொழிலாக இருக்கிறது. ஆகையால்,  எஸ்பிஐ-யின் வேளாண் வாகன இன்சூரன்ஸ் தொடக்க முயற்சிகள் விவசாய மக்களுக்கு நிச்சயம் பயன் அளிக்கும்.

1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி கட்டாய மூன்றாம் தரப்பு பொறுப்பு தேவை, இன்சூரன்ஸ் வாகனத்திற்கு ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு கூட கவர் செய்யும் விதத்தில் எஸ்பிஐ மோட்டார் இன்சூரன்ஸ் கட்டமைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தரப்பு பொறுப்பு ஆனது இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தின் பயன்பாட்டின் காரணமாக மூன்றாம் தரப்பினரின் உடைமைகள் தேசங்களுக்கு அல்லது உடல் காயங்கள் / இறப்பு போன்றவைக்கு எழும் சட்டப்பூர்வமான பொறுப்பில் இருந்து இன்சூரன்ஸ் செய்த நபருக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

பின்வரும் சம்பவங்கள் மூலம் இன்சூரன்ஸ் செய்த வாகனத்திற்கு ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும்.

 • வெளிப்புற வழிகள் மூலமான விபத்துக்கள்
 • வாகனத்தின் திருட்டு, உடைப்பு, கொள்ளை
 • தீ, வெடித்தல், தானாக பற்றிக் கொள்ளுதல்
 • சாலை, ரயில், உள்நாட்டு நீர்வழிப் பாதைகள், லிப்ட், எலிவேட்டர் அல்லது விமானம் மூலம் வாகனத்தை கொண்டு செல்லும் பொழுது
 • வெள்ளம், நிலநடுக்கம், புயல், சூறாவளி, நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள்

இந்த பாலிசியானது தனிப்பட்ட உரிமையாளர்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலான தனிநபர் விபத்து கவரை கட்டாயம் வழங்குகிறது. இருப்பினும், இன்சூரன்ஸ் வாகனத்திற்கு பொதுவாக ஏற்படும் இயற்கையான தேய்மானங்கள், மெக்கானிக்கல் மற்றும்/அல்லது எலெக்ட்ரிக்கல் தோல்விகள், சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அல்லது ஆல்கஹால், போதைப் பொருட்களின் விளைவுடன் வாகனத்தை ஓட்டுவது போன்றவை மூலம் ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு இன்சூரன்ஸ் ஆல் பொறுப்பு ஏற்க முடியாது.

எஸ்பிஐ  இன்சூரன்ஸின் முக்கிய நன்மைகள்

பணமில்லாத க்ளைம் நெட்வொர்க்கள்

இந்தியா முழுவதும் உள்ள 1500-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கேரேஜ் நெட்வொர்க்களில் பணமில்லாத க்ளைம் சேவைகள்.

தள்ளுபடிகள்

கட்டாய மிகுதியில் கூடுதலாக தன்னார்வ வழங்கலின் தேர்வு என்றால் பிரீமியம் மீதான தள்ளுபடிகள் உங்களுக்கு கிடைக்கும்.

விபத்து கவர் / வாடிக்கையாளர் ஆதரவு

வாகனத்தின் உரிமையாளர் அதிகபட்ச மூலதன உறுதி தொகையாக

ரூ 2  லட்சம் வரை தனிநபர் விபத்திற்காக கவர் செய்யப்படலாம்.

எஸ்பிஐ  கார் இன்சூரன்ஸின் பிளான்ஸ்

5 வகையான மோட்டார் இன்சூரன்ஸ் பிளான்களை எஸ்பிஐ வழங்குகிறது. அவை தனிப்பட்ட கார் இன்சூரன்ஸ் , மோட்டார் டூவீலர் இன்சூரன்ஸ் , தனிநபர் இன்சூரன்ஸ் கீழ் நீண்டகால டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் ட்ராக்டர் & வேளாண் வாகன இன்சூரன்ஸ் , வணிக இன்சூரன்ஸ் திட்டங்களின் கீழ் கமெர்சியல் மோட்டார் இன்சூரன்ஸ் உள்ளிட்டவையாகும். இந்த பிளான் வழங்கும் ஆட்-ஆன் நன்மைகள் பின்வருமாறு :

 • கட்டண ஓட்டுநர் அல்லது பணியாளருக்கு சட்டரீதியான பொறுப்பு
 • பை - ஃபியூயல் கிட்
 • பூஜ்ஜிய தேய்மானம்
 • என்சிபி பாதுகாப்பு
 • விலைப்பட்டியலுக்கு திருப்பி வழங்கல்
 • மாற்று சாவிக்கான கவர்
 • தனிப்பட்ட உடைமைகளுக்களின் இழப்பு
 • ரைடர் / பயணிக்கு கூடுதல் கவர்

எஸ்பிஐ மோட்டார் இன்சூரன்ஸின் சிறிய அளவிலான பிரீமியம் ஆனது உங்களுக்கு பரந்த அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் உங்களுக்கும், உங்கள் வாகனத்திற்கும் பாதுகாப்பினை உறுதி செய்கிறது.  

மோட்டார் தனிப்பட்ட கார் இன்சூரன்ஸ்

இந்த பிளான்  உங்களின் தனிப்பட்ட காருக்கு திருட்டு அல்லது சேதங்கள் மூலம் ஏற்படும் இழப்புகளுக்கு எதிராக கவர் செய்கிறது. மேலும், மூன்றாம் தரப்பு பொறுப்பிற்கு எதிரான கவர் மற்றும் ரூ.2 லட்சம் வரையிலான தனிநபர் விபத்து கவர் உள்ளிட்டவையையும் அடங்கி உள்ளது. கூடுதல் பிரீமியம் மூலம், தனிப்பட்ட மற்றும் கட்டண ஓட்டுநருக்கான சட்டப்பூர்வமான கவர் கிடைக்கின்றன.

முக்கிய நன்மைகள்

 • தனிநபர் விபத்து
 • கூடுதல் பிரீமியம் மூலம் பின்வருபவை வழங்கப்படும்
 • கட்டண ஓட்டுநர் அல்லது பணியாளருக்கான கூடுதல் சட்டரீதியான பொறுப்புகள்
 • விலைப் பட்டியலுக்கு திருப்பி அளிப்பது
 • தேய்மானங்கள் இல்லை
 • என்சிபி பாதுகாப்பு
 • பை - ஃபியூயல் கிட்
 • தனிப்பட்ட உடைமைகள் இழப்பு
 • மாற்று சாவிக்கான கவர்

வணிக மோட்டார் இன்சூரன்ஸ்

இந்த பாலிசியானது வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்கிறது. இது தனிப்பட்ட விபத்து கவர் உள்ளடக்கி உள்ளது. கூடுதல் பிரீமியம் மூலம் ஊதிய ஊழியருக்கான சட்டப்பூர்வமான பொறுப்பு சேர்க்கப்படலாம்.

எஸ்பிஐ கார் இன்சூரன்ஸில் உள்ளடங்குபவைகள் & விலக்குகள்

உள்ளடங்குபவைகள்

பணம் செலுத்தும் ஓட்டுனர் தவிர வாகனத்தில் பயணி / ஓட்டுனர் போன்ற நபருக்கு கவரேஜ் வழங்குகிறது.

விலக்குகள்

ஒரு நபர் ஆல்கஹால் அல்லது போதை பொருட்களின் விளைவின் கீழ் வாகனத்தை இயக்கி ஏற்படுத்தும் சேதங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட மாட்டாது.

எஸ்பிஐ கார் இன்சூரன்ஸிற்கான ஆட்-ஆன் கவர்ஸ்

தேய்மான கவர்

100% திருப்பி செலுத்துவதற்கு கவர் செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் தரப்பு கவர்

உங்கள் வாகனத்தை பயன்படுத்தி , மூன்றாம் தரப்பு நபருக்கு  உடல்காயங்கள்  / அந்த நபரின் இறப்பு மற்றும் மூன்றாம் தரப்பினரின் உடைமைகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு எதிராக எழும் எந்த சட்டப்பூர்வமான பொறுப்புகளுக்கும் எதிரான கவரேஜை வழங்குகிறது.

தனிப்பட்ட விபத்து கவர்

வாகனத்தின் உரிமையாளர் அதிகபட்ச மூலதன உறுதி தொகையாக

ரூ 2  லட்சம் வரை தனிநபர் விபத்திற்காக கவர் செய்யப்படலாம்.

போனஸ் மற்றும் தள்ளுபடிகள்

நீங்கள் பாலிசி காலத்தில் க்ளைம் தாக்கல் செய்யவில்லை என்றால், பாலிசி புதுப்பித்தல் நேரத்தில் 50% வரையிலான நோ க்ளைம் போனஸ்-ஐ பாலிசியானது வழங்குகிறது. இது உங்களின் நோ க்ளைம் போனஸ்-ஐ மற்றொரு இன்சூரன்ஸ் நபருக்கு மாற்றி கொள்வதற்கான விருப்பத்தையும் உங்களுக்கு வழங்குகிறது. இதைத் தவிர, கூடுதலாக கட்டாய மிகுதிக்கு தன்னார்வ மிகுதி (தாமாகவே முன் வந்து குறிப்பிட்ட தொகையை செலுத்த ஒப்புக் கொள்ளுதல்) விருப்பத்தை தேர்ந்தெடுத்தால் பிரீமியத்தில் கூடுதல் நன்மைகள் வழங்கப்படும். ஆட்டோமொபைல் அசோசியேஷன் உறுப்பினர் தள்ளுபடிகள் , மாற்றுத்திறனாளி நபருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட/ மாற்றப்பட்ட வாகனங்களுக்கான சொந்த சேத பிரீமியத்தில் 50% தள்ளுபடி , டென்யூர் தள்ளுபடி போன்ற கூடுதல் தள்ளுபடிகளும் கிடைக்கின்றன.

ஆன்லைனில் பாலிசி புதுப்பித்தல்

வங்கிகளின் வரிசையில் காத்திருக்கும் சொந்தரவு இல்லாமல் ஆன்லைனில் எஸ்பிஐ மோட்டார் இன்சூரன்ஸ் உடன் உங்களின் பாலிசியை உங்களால் புதுப்பித்துக் கொள்ள முடியும். இது ஏற்கனவே உள்ள பாலிசி / மற்றொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் காலாவதியான பாலிசிகளின் புதுப்பித்தலை வழங்குகிறது. இதன் வாடிக்கையாளர் ஆதரவு பிரதிநிதி உங்களின் வசதியினைப் பொறுத்து வாகனத்தினை பரிசோதிக்கச் செய்வார். அவை முடிந்த பிறகு உங்கள் பாலிசியின் புதுப்பித்தலுக்கான பிரீமியத்தை செலுத்தலாம். அதன் கால்குலேட்டர் அளிக்கும் மேற்கோள்கள் உடன் உங்கள் இன்சூரன்ஸின் பிரீமியத்தின் மதிப்பீட்டை பெறலாம்.  

எந்த வகையான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன?

 • புதுப்பித்தலின் போது ஒவ்வொரு க்ளைம் தாக்கல் இல்லாத ஆண்டிற்கு நோ க்ளைம் போனஸ் வழங்கப்படுகிறது ( பாலிசி காலம் முடிவடையும் 90 நாட்களுக்குள் ) . உங்கள் பிரீமியம் கட்டணத்தில் 50 % வரை.
 • ஒருவரிடம் இருந்து மற்றொரு இன்சூரன்ஸ் நபருக்கு நோ க்ளைம் நன்மைகளை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
 • கட்டாய குறைப்பு தவிர, இந்த பிளான் கீழே தன்னார்வ விலக்கு அளிக்கக்கூடிய விருப்பத்தை தேர்வு செய்தால் பாலிசிதாரர் அதற்கும் செலுத்த வேண்டும்.
 • 30 வயது முதல் 60 வருடங்களுக்கு இடைப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வயது தொடர்பான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
 • சாலையில் அவசரகால நேரத்தில் உதவுகிறது.
 • பழுது மற்றும் மாற்றும் செயல்முறைக்கான வழிகாட்டுதல்கள்
 • வெளிப்படையான க்ளைம் செயல்முறை
 • க்ளைம் நிலை குறித்த உடனடி புதிய தகவல்கள்

- / 5 ( Total Rating)