டாடா ஏஐஜி கார் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

கார் காப்பீட்டு பிரீமியத்தை ஒப்பிடுக

அல்லது

2001 ஆம் ஆண்டு ஜனவரி 22- ல் டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் கூட்டு முயற்சியில் தொடங்கி பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது . இந்த கூட்டு முயற்சி ஆனது சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனமான ஏஐஜி எனும் ஒரு அமெரிக்க கூட்டு நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது .

நுகர்வோர் மற்றும் வர்த்தக பிரிவுகளின் கீழ் அதன் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான இன்சூரன்ஸ் சேவையை வழங்குவதற்காக, தொடங்கியது முதல் டாடா ஏஐஜி புதுமையான இன்சூரன்ஸ் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது .

இன்றைய நிலையில் நிறுவனமானது 2833 தொழிலாளர்களின் பலத்துடன், நாடு முழுவதும் 152 கிளைகளாக பரவி உள்ளது . இந்த நிறுவனமானது வங்கிகள் , வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும்   ஹவுசிங் மற்றும் நிதி நிறுவனங்கள் உடன் பங்குதாரர்களாக   இணைந்து உள்ளது . இதன் தயாரிப்புகள் முகவர்கள் மற்றும் தரகர்கள் மூலமும் கிடைக்கப்பெறுகின்றன . இது 10,300- க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட   முகவர்கள் மற்றும் 345 அங்கீகாரம் பெற்ற தரகர்கள் மற்றும் 400- க்கும் மேற்பட்ட தயாரிப்பு வல்லுநர்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை குழுவில் 450 வாடிக்கையாளர் சேவை ஊழியர்களை உள்ளடக்கி உள்ளது . 

எதற்காக டாடா ஏஐஜி ?

உங்களின் இன்சூரன்ஸ் வழங்குபவரை த் தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் . டாடா ஏஐஜி பாலிசிதாரர்கள் , அவசரகால சூழ்நிலைகளில் உடனடியான உதவியை பெற முடியும் மற்றும் தங்கள் மனதை அமைதியாக வைத்து இருக்க முடியும் என்பதை டாடா ஏஐஜி உறுதிப்படுத்துகிறது .

நிறுவனம் உள்ளடக்கிய முக்கிய நன்மைகள் :

 • புகழ்பெற்ற , அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்
 • இந்தியா முழுவதும் இருத்தல்
 • நிதி ஆதாரத்தில் சிறந்த நிறுவனம்
 • பல ஆண்டுகளாக நம்பகமான செயல்திறன்
 • க்ளைம் செட்டில்மென்ட் முன்னுரிமை
 • கடிகார சுழற்சியில் அவசரகால உதவியை வழங்குவது
 • இதனால் ஏற்படுத்தப்படும் க்ளைம் விகிதம் 75.63 %
 • க்ளைம் செட்டில்மென்ட் காலம் ஒரு வாரம்
 • பணமில்லா க்ளைம் செட்டில்மென்ட் செயல்முறை
 • ஆன்லைன் , மாற்றிக் கொள்ளும் வசதி
 • வெளிப்படுத்துதல் வெளிப்படையானவை

டாடா ஏஐஜி மோட்டார் இன்சூரன்ஸ்

டாடா ஏஐஜி மோட்டார் இன்சூரன்ஸ் பிளான் ஆனது ஆட்டோமொபைல்கள் உடன் வழக்கமான இடர்பாடுகள் மற்றும் வழக்கமான இடர்பாடுகள் அல்லாத அபாயங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்படுகிறது .

இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் படி , வாகன உரிமையாளர் குறைந்தபட்சம் மூன்றாம் தரப்பு பொறுப்பு இன்சூரன்ஸ் பாதுகாப்பை பெறுவது கட்டாயமாகிறது .

பெரும்பாலான மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் கவர்கள் மொத்தமாக மோட்டார் இன்சூரன்ஸ் கவர் - ஐ வழங்குவதில்லை . மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் கவர் , மூன்றாம் தரப்பினரின் உடல் மற்றும் சொத்து சேதங்களுக்கு எதிராக மட்டும் இன்சூரன்ஸ் செய்கிறது . ஆனால் , தனிப்பட்ட மற்றும் வாகன இன்சூரன்ஸ் ஆனது மூன்றாம் தரப்பு பொறுப்பு கவரில் வழங்கப்படமாட்டாது . எனவே , இந்நிறுவனமானது ஒரு கவரின் கீழ் அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்ளும் ஒரு விரிவான மோட்டார் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது .

விரிவான மோட்டார் கவரின் அம்சங்கள் மற்றும் நன்மைகள்

 • விரிவான தனிநபர் கவர்
 • விரிவான மூன்றாம் தரப்பு கவர்
 • 12 கூடுதல் அபாய கவர்களில் இருந்து தேர்வு செய்யும் வசதி
 • நெட்வொர்க் கேரேஜ்களில் பணமில்லா க்ளைம் செட்டில்மென்ட்
 • ஒரு வாரத்திற்குள் திருப்பி செலுத்துதல் க்ளைம் செட்டில்மென்ட்
 • க்ளைம் செட்டில்மென்ட் இல்லாத பாலிசி காலத்தில் நோ க்ளைம் போனஸ் நன்மையை திரட்டும்
 • சாலையோர அவசரநிலை தேவைக்கான கவர்
 • ஆறு மாத காலத்திற்குள் வாகனத்திற்கு விபத்துக்கள் காரணமாக ஏற்படும் பழுதுகளுக்கான கவர்
 • ரூ .7.5 லட்சம் வரை மூன்றாம் தரப்பு கவர்
 • தனிப்பட்ட கவர்
 • ஓட்டுநர் மற்றும் பயணி கவர்
 • வாகன கவர்
 • தனிநபர் / வணிக கார்களை அழைத்து செல்வதற்கு கட்டண ஏதுமில்லை .
 • கவர் மதிப்புக்கான பிரீமியம் கணக்கிடுகையில் , சல்வேஜ் மதிப்பு கழிக்கப்படாது .
 • கண்ணாடி / பைபர் / பிளாஸ்டிக் / ரப்பர் பாகங்களின் பழுதுக்கான க்ளைம் ஆல் நோ க்ளைம் நன்மையை குறைக்க முடியாது .  

டாடா ஏஐஜி மோட்டார் இன்சூரன்ஸ் கீழ் விரிவான மோட்டார் கவர்

பின்வரும் அபாயங்களுக்கு வாகனத்திற்கான பாதுகாப்பை நிறுவனம் வழங்குகிறது :

 • தீப் பிடித்து கொள்ளும் பொழுது ஏற்படும் சேதங்கள்
 • வெடிக்கும் பொழுது ஏற்படும் சேதங்கள்
 • தீப் பற்றவைப்பு காரணமாக ஏற்படும் சேதங்கள்
 • மின்னல் தாக்கியதால் ஏற்படும் சேதங்கள்
 • வாகனம் திருடப்பட்டால்
 • வன்முறை / கலவரம் காரணமாக ஏற்படும் சேதம்
 • வெளிப்புற காரணங்களால் ஏற்படும் விபத்து சேதங்கள்
 • மற்றொரு வாகனத்தின் ( நீர்வழிப்பாதை , சாலை , விமானம் வழி , லிப்ட் ) மூலம் வாகனத்தை எடுத்து செலுத்தும் பொழுது ஏற்படும் சேதங்கள்
 • நிலச்சரிவு / சாலைச்சரிவு காரணமாக ஏற்படும் சேதங்கள்

இன்சூரன்ஸ் டிக்லர்டு வல்யூ ( ஐடிவி )

இன்சூரன்ஸ் டிக்லர்டு வல்யூ என்பது எங்கள் மோட்டார் பாலிசியில் அறிவிக்கப்பட்ட வாகனத்தின் மதிப்பாகும் . இது வாகனத்தின் பாதுகாப்பிற்காக உத்தரவாதமாக கருதப்படுகிறது . ஐடிவி ஆனது இன்சூரன்ஸ் பாலிசி தொடங்கும் நேரத்தில் தயாரிப்பாளரால் வழங்கப்பட்ட வாகனத்தின் பட்டியலிடப்பட்ட விலையை அடிப்படையாக கொண்டது அல்லது பொருந்தக்கூடிய தேய்மானத்திற்கான மாற்றங்களைச் செய்தபின் பாலிசி புதுப்பித்தலின் நேரத்தில் வழங்கப்படுகிறது .

விரிவான மூன்றாம் தரப்பு கவர்

டாடா ஏஐஜி மோட்டார் இன்சூரன்ஸ் பிளான் கீழ் மூன்றாம் தரப்பு காயங்கள் அல்லது இழப்புகள்   ஆனது இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தின் பயன்பாட்டினால் விளைந்தால் , காயங்கள் மற்றும் இழப்புகள் ஆகியவை பாலிசியின் கீழ் வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்குள்ளே கவர் செய்யப்பட்டுள்ளன . அவை பின்வருமாறு ,

 • மூன்றாம் தரப்பு நபருக்கு உடல் காயங்கள் அல்லது இறப்பு
 • மூன்றாம் தரப்பினரின்   உடைமைகளுக்கான சேதங்கள்

டாடா ஏஐஜி மோட்டார் இன்சூரன்ஸ் பிளான் கீழ் விரிவான தனிநபர் கவர்

பாலிசியின் கீழ் உள்ள நிபந்தனைகளுக்கு ஏற்ப வாகன விபத்து அல்லது சேதங்கள் காரணமாக பாலிசிதார் காயங்கள் அல்லது இறப்புக்கு உள்ளானால் , பின்வரும் சூழ்நிலைகளை உள்ளடக்கி நிறுவனமானது பாலிசிதாரருக்கு மற்றும் ஓட்டுனருக்கு தனிநபர் பாதுகாப்பை வழங்குகிறது .

 • நிரந்தர மற்றும் பகுதி இயலாமைக்கான தனிநபர் கவர்
 • இறப்பிற்கான தனிநபர் கவர்

டாடா ஏஐஜி க்ளைம் செயல்முறை

டாடா ஏஐஜி ஆனது பணமில்லா செட்டில்மென்ட் மற்றும் திருப்பி செலுத்துதலுக்கான க்ளைம்ஸ் செயல்முறையை கொண்டிருக்கிறது . பாலிசிதாரரின் வாகனமானது எந்த நெட்வொர்க் கேரேஜ்களில் பழுது பார்த்து இருந்தாலும் , க்ளைம் ஆனது நேரடியாக கேரேஜ் அதிகாரிகளுக்கு சென்றடையும் . ஒருவேளை பாலிசிதாரர் வாகனத்தை பிற இடங்களில் பழுது பார்த்து இருந்தால் , அந்நேரத்தில் பழுது பார்த்ததற்கான பில்கள் மற்றும் க்ளைம் படிவம் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிப்பதன் மூலம் பாலிசிக்கு உட்பட்ட செலவினங்களை பாலிசிதாரர் க்ளைம் செய்யலாம் .

பாலிசிதாரர் அவசரநிலை மற்றும் விபத்து குறித்த தகவலை உடனடியாக அறிவிக்க வேண்டும் அல்லது தங்களை அல்லது மற்றவர்களை கவனித்துக் கொண்ட பிறகு விரைவாக தெரிவிக்க வேண்டும் . நடந்த சம்பவங்கள் தொடர்பாக தேவையற்ற அல்லது விவரிக்கப்படாத தாமதங்கள் ஆனது க்ளைம் தாக்கலை நிராகரிக்க வழிவகை செய்யும் .

சரியான நேரத்தில் உதவி பெறுவதை பொறுத்தமட்டில் , எப்பொழுதும் பின்வருவனவற்றுடன் தயாராக இருப்பதை பாலிசிதாரர் நிச்சயம் உறுதி செய்ய வேண்டும் .

 • பாலிசியின் நகல் எப்பொழுதும் வாகனத்தின் உள்ளேயே வைத்து இருக்க வேண்டும் .
 • க்ளைம் தாக்கல் செய்யும் பொழுது சம்பவம் பற்றிய எஃப் . ஐ . ஆர் பதிவின் நகல்
 • வாகனத்தின் பதிவு எண்
 • தனிப்பட்ட அடையாள சான்றுகள்
 • எங்களின் அலுவலகத்தின் எண்களை தொடர்பு கொள்ளுங்கள் / எங்கள் இலவச தொடர்பு எண்களை தொடர்பு கொள்ளவும் .

டாடா ஏஐஜி மோட்டார் இன்சூரன்ஸ் பிளான்ஸ்

தனிப்பட்ட கார் இன்சூரன்ஸ்

இது பாலிசியின் கீழ் நீங்கள் பெறக்கூடிய சேதங்களுக்கு எதிரான கவரேஜ் மற்றும் திருட்டு உள்ளிட்ட அடிப்படை கவரேஜை தவிர , உங்களுக்கு கூடுதல் உத்தரவாதம் மற்றும் மன அமைதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . அது மட்டுமல்ல , எங்களின் 12 பிரத்யேக ஆட் - ஆன் கவர்ஸ் வழியாக , உங்களின் நிலையான இன்சூரன்ஸ் கொள்கையை மேம்படுத்த முடியும் .

டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி

டாடா ஏஐஜி உங்களுக்கு ஒரு விரிவான டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி கவரை வழங்குகிறது . இது மூன்றாம் தரப்பினருக்கு எதிரான மற்றும் உங்களுக்கு சொந்தமான டூவீலரில் ஏற்படும் சேதங்கள் அல்லது இழப்புகளுக்கு எதிரான பொறுப்பிற்கு   கவரை கொண்டிருக்கிறது .

செகண்ட் - ஹண்டேடு கார் இன்சூரன்ஸ்

இந்த பிளான் ஆனது செகண்ட் ஹண்ட் கார் பயனர்கள் கூட கார் இன்சூரன்ஸ் நன்மைகளை எளிதாக பெற அனுமதிக்கிறது . அடிப்படை கார் இன்சூரன்ஸ் பிளானில் நிறுவனம் வழங்கும் அனைத்து பாதுகாப்புகளையும் அவர்கள் பெறுவார்கள் .

வணிக வாகன இன்சூரன்ஸ்

விபத்து , தீ தொடர்பான அபாயங்கள் , கொள்ளை , திருட்டு , வன்முறை , தாக்குதல்கள் , வாகனத்தை விமானம் , சாலை , ரயில் , கடல் வழியாக எடுத்துச் செல்லும் பொழுது ஏற்படும் சேதங்கள் ஆகியவற்றிக்கு எதிரான முழுமையான பாதுகாப்பை பிளான் ஆனது வழங்குகிறது .