யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

கார் காப்பீட்டு பிரீமியத்தை ஒப்பிடுக

அல்லது

யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் என்பது ஜெனரல் இன்சூரன்ஸ் துறையில் மிகச் சிறந்த இன்சூரன்ஸ் வழங்குநர்களில் ஒருவர். இது இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் (அலகாபாத் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி), ஒரு தனியார் துறை வங்கி (கர்நாடக வங்கி), ஒரு முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனமான டாபர் இன்வெஸ்ட்மென்ட் கார்ப் & டோக்கியோவில் நிறுவப்பட்ட சோம்போ ஜப்பான் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும். உயர்ந்த மதிப்புகளின் உதவியுடன் வாடிக்கையாளரின் நம்பிக்கையை வென்றதன் மூலம் இந்நிறுவனம் சந்தைத் தலைவராக வெளிவந்துள்ளது. ஒரு நிறுவனமாக, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மூலம் வளர்ச்சியை அடைவதை உறுதி செய்கிறது. இந்நிறுவனம் வாடிக்கையாளர்களின் வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய பல இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்குகிறது. அவற்றில் கார் இன்சூரன்ஸ் ஒன்றாகும். இந்நிறுவனம் இரண்டு மோட்டார் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்குகிறது - " பிரைவேட் கார் பாலிசி " மற்றும் " வணிக வாகன பாலிசி ".

யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸின் சிறப்பம்சங்கள் 

24-08-2020 அட்டவணை புதுப்பிக்கப்பட்டது

மூன்றாம் தரப்பு பொறுப்பு

7.5 லட்சம் வரை

நெட்வொர்க் கேரேஜ்கள்

3600+

க்ளைம் செட்டில்மென்ட் விகிதம்

78.89%

உரிமம் பெற்ற முகவர்களின் எண்ணிக்கை

10,328

உங்கள் யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸை எவ்வாறு புதுப்பிப்பது?

அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியை வழங்க, யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸ் அதன் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கார்களை எளிதில் இன்சூரன்ஸ் செய்ய அனுமதிக்கிறது மற்றும் ஆன்லைனில் தங்களின் திட்டங்களை விரைவாக புதுப்பிக்க அனுமதிக்கிறது. பாலிசிஎக்ஸ்.காம் மூலம் அல்லது யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் இணையதளத்திற்கு செல்வதன் மூலம் என இரண்டு வழிகளில் உங்கள் கார் இன்சூரன்ஸைப் புதுப்பிக்கலாம். அதையே விரிவாக காண்போம்.

1. பாலிசிஎக்ஸ்.காம் வழியாக புதுப்பித்தல்

 • இந்தப் பக்கத்தின் மேலே உள்ள " கார் இன்சூரஸ் மேற்கோள்களை ஒப்பிடுக " பகுதியைப் பார்வையிடவும்.
 • கார் எண்ணைச் சமர்ப்பித்து, " மேற்கோள்களைப் பெறு " என்ற டப்பைக் கிளிக் செய்க. நீங்கள் " கார் எண் இல்லாமல் தொடரவும் " (உங்களிடம் கார் எண் தயாராக இல்லாவிட்டால்) தொடரலாம் மற்றும் மேற்கோள்கள் பகுதியைப் பார்வையிட விவரங்களை நிரப்பவும்.
 • ஏற்கனவே உள்ள திட்டத்தை புதுப்பிக்கவும் அல்லது உங்கள் வசதிக்கு ஏற்ப பட்டியலிலிருந்து ஒன்றை வாங்கவும்.
 • வெவ்வேறு கட்டண முறைகள் வழியாக பணம் செலுத்துங்கள்.
 • உங்கள் இமெயில் ஐடி-க்கு பாலிசியின் ஆவணத்தைப் பெறுவீர்கள்.

2. யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் வழியாக புதுப்பித்தல்

 • யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
 • "உடனடி புதுப்பித்தல்" இன் பாப் அப் காண்பீர்கள். மோட்டார் பிரிவின் கீழ் "இப்போது புதுப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்க.
 • நீங்கள் எந்த பாப்-அப் பெறவில்லை எனில், உங்கள் கர்சரை "மோட்டார்" க்கு அழைத்துச் சென்று டூவீலர் / பிரைவேட் காரின் கீழ் "புதுப்பித்தல்" என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
 • இரண்டு படிகளிலும், நீங்கள் "மோட்டார் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் பக்கத்தில்" செல்வீர்கள்.
 • பிரைவேட் கார் / வணிக வாகன பிரிவின் கீழ் "இப்போது புதுப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்க.
 • உங்கள் பாலிசி எண்ணை வழங்கவும், "இப்போது புதுப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.
 • திட்டம் மற்றும் பிரீமியத்தின் விவரங்களை பகுப்பாய்வு செய்யுங்கள். கட்டணம் செலுத்துங்கள்.
 • பாலிசி ஆவணங்கள் உங்கள் இமெயில் ஐடி-க்கு பகிரப்படும்.

யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸின் வெவ்வேறு நன்மைகள் மற்றும் அம்சங்கள் யாவை?

யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸ் ஆனது பல அம்சங்கள் மற்றும் நன்மைகளுடன் வெளிவந்துள்ளது. இது கார் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த தளங்களில் ஒன்றாகும்.

நெட்வொர்க் கேரேஜ்கள்: 3600-க்கும் மேற்பட்ட பணமில்லா கேரேஜ்களின் பட்டியலை நெட்வொர்க்கில் சேர்ப்பதன் மூலம், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணமில்லா க்ளைம் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது. இதன் மூலம், உங்கள் பாக்கெட்டிலிருந்து பழுதுபார்ப்பதற்கு ஒரு ரூபாய் கூட நீங்கள் செலவழிக்க வேண்டியதில்லை.

சரியான நேரத்தில் உதவி: யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸ் சரியான நேரத்தில் கிடைக்கும் உதவியின் மதிப்பைப் புரிந்து வைத்துள்ளது. எனவே நிபுணர் ஆலோசகர்களின் குழுக்கள் உங்களுக்கு உதவ 24*7 நேரமும் செயலில் உள்ளன. அவர்களை தொடர்பு கொள்வதற்கு முன்பு உங்கள் கைக்கடிகாரத்தைத் சோதிக்க வேண்டியதில்லை.

தொந்தரவில்லாத க்ளைம் செயல்முறை : நீங்கள் கஷ்டப்படுவதை ஒருபோதும் நிறுவனம் விரும்புவதில்லை. எனவே, இது தொந்தரவில்லாத க்ளைம் செயல்முறையை வழங்குகிறது. அதனுடன், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் க்ளைம் தாக்கல் செய்யலாம் மற்றும் தேவையான பதிலை சரியான நேரத்தில் பெறலாம். இது 78.89% என்ற பெரிய க்ளைம் தீர்வு விகிதத்தைக் கொண்டுள்ளது, இது அதன் சரியான நேரத்தில் தீர்வுக்கு சான்றாகும்.

பாதுகாப்பானது: யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸ் உடன், உங்கள் தனிப்பட்ட தரவைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. புதுப்பிக்கப்பட்ட மென்பொருள் மற்றும் நுட்பங்களின் உதவியுடன் உங்கள் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதை இன்சூரன்ஸ் வழங்குநர் உறுதிசெய்கிறார்.

தள்ளுபடிகள்: அடிப்படை தள்ளுபடிகள் தவிர (ஏஆர்ஏஐ ஆல் அங்கீகரிக்கப்பட்ட திருட்டு எதிர்ப்பு சாதனங்களை காரில் நிறுவுவதில் நோ க்ளைம் போனஸ் மற்றும் தள்ளுபடி), பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் ஊனமுற்றோருக்காக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு நிறுவனம் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.

யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸ் பிரீமியம்

கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் கணக்கீடு பல காரணிகளைப் பொறுத்தது. அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன

 • காரின் மாடல் மற்றும் வயது
 • ஐடிவி
 • அமைவிடம்
 • கார் வைத்திருப்பதன் நோக்கம்
 • தள்ளுபடிகள், ஏதேனும் இருந்தால்

உங்கள் குறிப்புக்கு சில பிரீமியம் மாதிரிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

24-08-2020 அட்டவணை புதுப்பிக்கப்பட்டது

கார் வகைகள்

காரின் விலை

ஐடிவி*

பூஜ்ஜிய தேய்மானம் (ஆட்-ஆன்ஸ்)*

மதிப்பிடப்பட்ட பிரீமியம் 

ஹூண்டாய் வெர்னா 1.0 டர்போ ஜிடிஐ டீசிடி (ஓ) 

ரூ.14,00,000

ரூ.8,46,093

ரூ.3,807

ரூ.29,963

மாருதி சுசுகி சியாஸ்- ஆல்பா (1462 சிசி) 

ரூ.9,98,000

ரூ.8,85,588

ரூ.4,428

ரூ.25,603

ஹோண்டா சிவிக் விஎக்ஸ் (1799 சிசி) 

ரூ.21,24,000

ரூ.14,59,200

ரூ.4,878

ரூ.41,378

மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ் 5 

ரூ.12,46,000

ரூ.6,16,455

ரூ.2,774

ரூ.29,458

யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸின் கீழ் கிடைக்கும் வெவ்வேறு கூடுதல் இணைப்புகள்(ஆட்-ஆன்ஸ்) என்ன?

யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸ் பல கூடுதல் இணைப்புகளை (ஆட்-ஆன்ஸ்) வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் கூடுதல் இணைப்புகளை குறைந்த செலவில் பெறலாம். கீழே அவற்றை விரிவாகப் பார்ப்போம்

தேய்மானமில்லா கவர்: உங்கள் வாகனம் இந்த கூடுதல் இணைப்பின் கீழ் இருந்தால், உங்கள் காரின் தேய்மானம் அடைந்த பகுதிகளான ரப்பர், நைலான், உலோகம் மற்றும் பலவற்றை நிறுவனம் மகிழ்ச்சியுடன் ஈடுசெய்யும்.

விலைப்பட்டியலுக்கு மீள்வது: இது உங்கள் காரைப் பதிவுசெய்த நாளிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிடைக்கக்கூடிய ஒரு ஆட்-ஆன்ஸ் கவர் ஆகும். இதன் கீழ், கார் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால் பாலிசியில் முதலீடு செய்யும் போது நீங்கள் செலுத்திய வாகனத்தின் விலைப்பட்டியலுக்கு சமமான தொகையைப் பெறுவீர்கள்.

மாற்று சாவி: உங்கள் கார் சாவியை இழந்தால் அல்லது அது திருடப்பட்டால், யுனிவர்சல் சோம்போ இன்சூரன்ஸ் அதை மாற்றுவதற்கு கட்டணம் செலுத்தும்.

சாலையோர உதவி: பல்வேறு எதிர்பாராத சூழ்நிலைகளில் மக்கள் சாலையில் சிக்கித் தவிக்கும் சம்பவங்கள் பல ஏற்படுகின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நிறுவனம் ஆனது வாகனத்தை கயிறு மூலம் இழுத்து செல்லும் வசதியை ஏற்பாடு செய்யும் அல்லது அதற்கான செலவை திருப்பிச் செலுத்தும்.

எஞ்சின் பாதுகாப்பு: நீர் அல்லது எண்ணெய் கசிவு காரணமாக வாகனத்தின் எஞ்சின் / கியர்பாக்ஸ் / டிரான்ஸ்மிஷன் சேதமடைந்தால், அதை மாற்றுவதற்கு இன்சூரன்ஸ் வழங்குநர் பணம் செலுத்துவார்.

யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் க்ளைம் எவ்வாறு தாக்கல் செய்வது?

ஒரு பெரிய அல்லது சிறிய பிரேக்டவுன் என்றாலும், யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸ் ஆனது ஒரு எளிய க்ளைம் செட்டில்மென்ட் அவசியத்தை புரிந்துகொள்கிறது. எனவே, இது ஒரு தொந்தரவில்லாத செயல்முறையைக் கொண்டுள்ளது மற்றும் சில நிமிடங்களில் க்ளைமைப் பதிவுசெய்து தேவையான உதவியைப் பெற உங்களை அனுமதிக்கிறது.

க்ளைம் செயல்முறை

நிறுவனத்தின் கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது அருகிலுள்ள கிளைக்கு நேரில் செல்வதன் மூலமோ நீங்கள் க்ளைம் தாக்கல் செய்யலாம். க்ளைம் தாக்கல் செய்ய தேவையான செயல்முறை கீழே.

சொந்த சேதம் / திருட்டு கவர்

 • இன்சூரன்ஸ் வழங்குநருக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்கவும். தேவையான அனைத்து தகவல்கள் மற்றும் ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்.
 • எந்தவொரு கேரேஜில் இருந்து வாகனத்தின் அனைத்து பழுதுபார்ப்புகளின் விரிவான மதிப்பீட்டை சமர்ப்பிக்கவும். பொதுவாக, ஒரு இன்சூரன்ஸ் வழங்குநர் அதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் வேறொரு கேரேஜிலிருந்தும் மதிப்பீட்டைப் பெற அவர்கள் உங்களிடம் கேட்கலாம்.
 • திருட்டு ஏற்பட்டால், தயவுசெய்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்க.
 • பின்னர், வாகனத்தின் தொடர்புடைய இழப்பை மதிப்பிடுவதற்கு ஒரு சர்வேயரை இன்சூரன்ஸ் வழங்குநர் நியமிக்கிறார். அவர் வாகன சேதத்தை ஆய்வு செய்வார் மற்றும் பழுதுபார்ப்பதற்கான செலவு அல்லது மாற்றுவது குறித்து பழுதுபார்ப்பவர்களுடன் விவாதிப்பார்.
 • நீங்களே பில்லைச் செலுத்தியிருந்தால், கேரேஜிலிருந்து ஒரு ரசீது / பில் சமர்ப்பிதல் மூலம் தொகையை திருப்பிப் பெறுவீர்கள்.

மூன்றாம் தரப்பு பொறுப்பு கவர்

 • மூன்றாம் தரப்பினருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து இன்சூரன்ஸ் வழங்குநருக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை சமர்ப்பிக்கவும்.
 • க்ளைம் படிவத்துடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.
 • வழங்கப்பட்ட தரவு மற்றும் முழு சூழ்நிலையையும் பகுப்பாய்வு செய்ய நிறுவனம் ஒரு சர்வேயரை நியமிக்கிறது.
 • நீதிமன்றம் அல்லது எம்ஏசிடி க்ளைம் பதிவு உடைய ரசீது கிடைத்ததும், ஒரு திறமையான வழக்கறிஞர் நியமிக்கப்படுவார், மேலும் அவருடன் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
 • கூடுதல் விவரங்களுக்கு, நீங்கள் யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் குழுவைத் தொடர்பு கொள்ளலாம். 

தேவையான தகவல் & ஆவணங்கள்

 • உங்கள் தொடர்பு எண் (கள்)
 • பாலிசி எண்
 • இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நபரின் பெயர்
 • விபத்து நடந்த தேதி & நேரம்
 • இழப்பின் பபகுதி
 • விபத்து பற்றிய சுருக்கமான விளக்கம்
 • இழப்பின் நீளம்
 • இன்சூரன்ஸ் செய்தவரின் முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் (ஒருவேளை க்ளைம் கோருபவர் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நபரைத் தவிர வேறொருவராக இருந்தால்)

யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸின் தொடர்பு விவரங்கள்

யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

கட்டணமில்லா எண் : 1800 22 4030 / 1800 200 5142

இமெயில் ஐடி : contactus [at] Universityalsompo [dot] com

பதிவு செய்யப்பட்ட முகவரி : யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ப்ளாட் எண்- இஎல் -94, கே.எல்.எஸ் டவர், டிடிசி இண்டஸ்ட்ரியல் ஏரியா, எம்ஐடிசி, மஹாபே, நவி மும்பை 400710.

பாலிசிஎக்ஸ்.காம் இன்சூரன்ஸ் வெப் அக்ரிகேட்டர்

தொடர்பு எண் : 1800-4200-269 / 1800-4203-180

இமெயில் ஐடி : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

பதிவுசெய்யப்பட்ட முகவரி : பாலிசிஎக்ஸ்.காம் இன்சூரன்ஸ் வெப் அக்ரிகேட்டர் பிரைவேட் லிமிடெட், 1 வது மாடி, லேண்ட்மார்க் டவர், ப்ளாட் எண்-2, சவுத்சிட்டி-1, சி-113 க்கு எதிரே, அசோக் மார்க், பிரிவு-41, குருகிராம்-ஹரியானா-122001 இந்தியா.

24-08-2020 புதுப்பிக்கப்பட்டதுு