கொரோனா வைரஸ் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மூத்த உறுப்பினர்)

1

2

கைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

வைரஸ்களின் குடும்பத்தால் ஏற்பட்ட நோவல் கொரோனா வைரஸ் உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,64,536-ஐத் தாண்டி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வைரஸ் ஆனது ஓர் தொற்றுநோயாகும் மற்றும் சுவாசப் பிரச்சனைகள், தொண்டை புண், சிறுநீரகப் பிரச்சனை மற்றும் பல உறுப்புகளின் செயலிழப்பு போன்ற அறிகுறிகளைக் காட்டுகிறது.

இன்றைய நிலவரப்படி, இந்த வைரஸ் ஆனது உலகில் 18.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்து 6 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, இந்தியாவில் இன்சூரன்ஸ் சேவை வழங்குநர்கள் வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட பாதுகாப்பு கவரேஜ்களை வழங்கும் திட்டங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

கொரோனா வைரஸ் இன்சூரன்ஸ் பற்றியும் மற்றும் உண்மையிலேயே நமக்கு அது தேவையா, இல்லையா என்பதை பகுப்பாய்வு செய்வதற்காக அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் அறிந்து கொள்வோம் !

கொரோனா இன்சூரன்ஸ் என்றால் என்ன?

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸ் இன்சூரன்ஸைக் கொண்டிருப்பது மிக முக்கியமானது மற்றும் 2020-21 ஆம் ஆண்டிற்கான உங்கள் நிதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம், ஒருவருக்கு கோவிட்-19 சிகிச்சையில் ஏற்படும் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட முடியும். ஆனால் வைரஸ் காரணமாக நோயாளி இறந்தால் மற்றும் அவரது குடும்பம் எவ்வாறு உயிர்வாழ்வார்கள் ? அவ்வாறான சூழ்நிலையில், கொரோனா வைரஸ் லைஃப் இன்சூரன்ஸ் முக்கிய பங்கு வகிக்கும் மற்றும் குடும்பத்தின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்கும்.

லைஃப் இன்சூரன்ஸ் கொரோனா வைரஸை உள்ளடக்குகிறதா?

கொரோனா வைரஸ் காரணமாக பாலிசிதாரரின் மறைவு ஏற்பட்டால் (பாலிசிக் காலத்தில்), பாலிசிதாரரின் தற்போதைய லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆனது பாலிசியின்படி பயனாளிக்கு நன்மைகளைச் செலுத்த பொறுப்பாகும்.

இருப்பினும், புதிய லைஃப் இன்சூரன்ஸ் வாங்கும் போது, ​​பாலிசியை ஏற்றுக்கொள்ளும் செயல்பாட்டில் ஒருவர் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை எனக் கூறி தேவையான அனைத்து மருத்துவ ஆவணங்களையும் ஒருவர் சமர்ப்பிக்க வேண்டும். இது பாலிசியை ஏற்றுக்கொள்ளும் செயல்முறைக்கு உதவும் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் பாலிசியின் பரிந்துரைக்கப்பட்டவருக்கு கவரேஜ் வழங்கும். இது மட்டுமல்லாமல், பாலிசி வாங்குபவரின் உடல்நலம் மற்றும் மருத்துவ வரலாற்றின் அடிப்படையில் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் பிரீமியங்களும் தீர்மானிக்கப்படும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் கொரோனா வைரஸை உள்ளடக்குகிறதா?

ஆம், ஒரு நுகர்வோர் எந்த பாலிசியை வைத்திருந்தாலும் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கோவிட்-19க்கான மருத்துவ கவரை சேர்க்க வேண்டியது கட்டாயமாகும். எனவே, தற்போதுள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் கொரோனா வைரஸிற்கான சிகிச்சை செலவுகளுக்கு எதிராக நிச்சயமாக பாதுகாப்பு வழங்கும்.

இருப்பினும், தற்போதுவரை உங்களிடம் ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லையென்றால், ஸ்டாண்டர்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது குறிப்பிட்ட கோவிட்-19 ஹெல்த் ப்ளான்களைத் தேர்வு செய்யலாம். ஆனால் ஒரு பாலிசியை வாங்குவதற்கு முன், ஒரு நபர் கோவிட்-19க்கு பரிசோதித்து தொற்று இருப்பதாக உறுதியானப் பின்னர் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கினால்,ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சிகிச்சை செலவுகளை ஈடுசெய்ய மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்தியாவில் கோவிட்-19 இன்சூரன்ஸ் திட்டங்கள்

சமீபத்தில், ​​கொரோனா வைரஸ் இன்சூரன்ஸ் திட்டங்கள் வாங்குபவர்களுக்கு சந்தையில் ஒரு சில இன்சூரன்ஸ் சேவை வழங்குநர்களால் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

1. கொரோனா கவாச் பாலிசி

கொரோனா கவாச் பாலிசி என்பது வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கத்தக்க நன்மைகள் இல்லாத ஒற்றை பிரீமியம் செலுத்தக்கூடிய மற்றும் வரையறுக்கப்பட்ட காலத்திற்கான பாலிசியாகும். பெற்றோர், மாமனார்-மாமியார் மற்றும் 25 வயது வரை சார்ந்து இருக்கும் குழந்தைகளை உள்ளடக்கும் ஒரு ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டத்தையும் ஒருவர் தேர்வு செய்யலாம்.

தகுதி

18-65 ஆண்டுகள்

இன்சூரன்ஸ் செய்யப்படும் தொகை

50,000 - 5 லட்சம்

2. கொரோனா ரக்சாக் பாலிசி

கொரோனா ரக்சாக் பாலிசி என்பது ஒற்றை பிரீமியம் செலுத்தும் பாலிசியாகும். இது பாலிசிதாரர் வைரசால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதி செய்தப் பின்னர் 3 நாட்களுக்கு (குறைந்தபட்சம்) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், இன்சூரன்ஸ் செய்யப்பட்ட தொகையில் 100% (மொத்த தொகையாக) செலுத்தும்.

தகுதி

18-65 ஆண்டுகள்

இன்சூரன்ஸ் செய்யப்படும் தொகை

50,000 - 2.5 லட்சம்

3. ஸ்டார் நோவல் கொரோனா வைரஸ் (nCoV) (கோவிட்-19) இன்சூரன்ஸ் பாலிசி (பைலட் ப்ராடெக்ட்)

ஸ்டார் நோவல் கொரோனா வைரஸ் (nCoV) (கோவிட்-19) இன்சூரன்ஸ் பாலிசி ஆனது வைரஸ் தொடர்பாக சோதிக்கப்பட்டு உறுதியாகி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இன்சூரன்ஸ் செய்தவருக்கு உறுதி செய்யப்பட்ட ஒரு பெரிய தொகையை வழங்குகிறது. விண்ணப்பதாரர்கள் இன்சூரன்ஸ் தொகையை கோர எந்தவொரு முன்-ஏற்றுக்கொள்ளும் மருத்துவ பரிசோதனை அல்லது சோதனை மூலம் செல்ல தேவையில்லை. பாலிசி வாங்குபவர்களுக்கு 15 நாட்கள் இலவச பார்வை காலத்துடன் வருகிறது.

தகுதி

18-65 ஆண்டுகள்

காத்திருக்கும் காலம்

16 நாட்கள்

இன்சூரன்ஸ் செய்யப்படும் தொகை

இரண்டு விருப்பங்கள் - ரூ.21,000 & ரூ.42,000

4. ஐசிஐசிஐ லோம்பார்ட் கோவிட்-19 இன்சூரன்ஸ் பாலிசி

இந்த பாலிசி குறிப்பாக கோவிட்-19 நோயால் கண்டறியப்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பாலிசிதாரருக்கு ஒரு மொத்த தொகை நன்மையை உறுதி செய்கிறது.

தகுதி

18-75 ஆண்டுகள்

காத்திருக்கும் காலம்

14 நாட்கள்

இன்சூரன்ஸ் செய்யப்படும் தொகை

ரூ.25,000 

5. டிஜிட் இன்சூரன்ஸ்

டிஜிட் இன்சூரன்ஸ் ஆனது வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு இன்சூரன்ஸ் திட்டத்தையும் வழங்குகிறது. க்ளைம் தாக்கல் செய்யும்போது, வைரஸ் சோதனையில் உறுதி செய்யப்பட்டால் பாலிசிதாரர் 100% க்ளைமைப் பெற தகுதியுடையவர். சோதனை முடிவுகள் எதிர்மறையாக இருக்கும்போது கூட பாலிசிதாரர் இன்சூரன்ஸ் தொகையில் 50% பெற தகுதியுடையவர்.

தகுதி

75 வயது வரை 

காத்திருக்கும் காலம்

15 நாட்கள்

இன்சூரன்ஸ் செய்யப்படும் தொகை

ரூ.25,000- 2 லட்சம்

கொரோனா வைரஸ் இன்சூரன்ஸ் திட்டம் - உள்ளடக்கியவை

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டவர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டங்களில் பொதுவாக உள்ளடக்கியவைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன :

மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள்

கொரோனா வைரஸ்-குறிப்பிட்ட திட்டங்கள் ஆனது சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளைச் செலுத்துகின்றன. மேலும், 24 மணி நேரத்திற்கு மேல் மருத்துவமனையில் சேர்ப்பதற்கான செலவுகள் இன்சூரன்ஸ் சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.

தனிமைப்படுத்துதல் கவர்

நோயறிதலுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக கொரோனா வைரஸ் பிரத்யேக ஹெல்த் இன்சூரன்ஸ் மட்டுமின்றி, அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இன்சூரன்ஸ் செய்த நபர்களுக்கும் பணம் செலுத்துகிறது.

கூடுதல் பாதுகாப்பு

டிஜிட் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் போன்ற கொரோனா வைரஸ்-பிரத்யேக ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை கவர் உடன் மகப்பேறு நன்மை போன்ற கூடுதல் பாதுகாப்பையும் மற்றும் ஹோமியோபதி, ஆயுர்வேதம் அல்லது யுனானி போன்ற மாற்று சிகிச்சைக்கான செலவுகளையும் வழங்குகின்றன.

கொரோனா வைரஸ் இன்சூரன்ஸ் திட்டம் - விலக்குகள்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு செலவிடப்படும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களின் விலக்குகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்கு முந்தைய செலவுகள்

முன் மற்றும் பிந்தைய பிரசவ செலவுகள் தேவை அடிப்படையிலான கவரேஜ் மூலம் அடங்காது. முன்கூட்டிய மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய செலவுகளுக்கு உங்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால், உங்கள் இன்சூரன்ஸ் சேவை வழங்குநர் அல்லது இன்சூரன்ஸ் முகவரிடம் கூடுதல் பாதுகாப்புக்காக (ஆட்-ஆன்ஸ் கவர்) பேசுங்கள்.

முன்பே இருக்கும் நோய்கள்

கொரோனா வைரஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆனது முன்பே இருக்கும் நோய்களுக்கு பாதுகாப்பு அளிக்காது. மேலும், பாலிசி வாங்குவதற்கு ஆறு வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் போன்ற அறிகுறிகளைக் காண்பிக்கும் இன்சூரன்ஸ் நபர்கள் க்ளைம் பெற தகுதியற்றவர்கள்.

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான பாதுகாப்பு

பாலிசிதாரர் ஒரு மருத்துவரின் பரிந்துரை அல்லது அறிவுரை இல்லாமல் ஒரு நிலைமைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மருத்துவமனையில் சேர்க்கும் செலவினங்களுக்கான க்ளைம் தொகையைப் பெற அவர் தகுதியற்றவர்.

கோவிட்-19 கவரேஜ் பாலிசி வாங்குவது எப்படி?

இன்சூரன்ஸ் சந்தையில் புகழ்பெற்ற இன்சூரன்ஸ் சேவை வழங்குநர்களிடமிருந்து உங்களுக்கான கொரோனா வைரஸ்-பிரத்யேகமாக இன்சூரன்ஸைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்:

படி 1: இந்த பக்கத்தின் கீழே நீங்கள் காணும் "இப்போது வாங்க" எனும் விருப்பத்தை கொடுக்கவும்.

படி 2: இதைச் செய்வதன் மூலம், நீங்கள் ஒரு பக்கத்திற்கு நுழைவீர்கள், அங்கு நீங்கள் காணக்கூடிய பல ஹெல்த் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளில் இருந்து ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

படி 3: திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, "இந்த திட்டத்தை வாங்கு" எனும் விருப்பத்தை கொடுக்கவும்.

படி 4: தேவையான விவரங்களை நிரப்பவும். .

படி 5: முதல் பிரீமியத்தை செலுத்துங்கள், உங்கள் பாலிசி தொடர்பான ஆவணம் உங்கள் இமெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

கோவிட்-19 இன்சூரன்ஸ் பாலிசிக்கு எவ்வாறு க்ளைம் தாக்கல் செய்வது?

குறிப்பிடப்பட்ட சோதனை வழிகள் ஒன்றில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால், பாலிசிதாரர் தங்களின் சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்க க்ளைம் தாக்கல் செய்யலாம்:

திருப்பிச் செலுத்தும் க்ளைம்: நீங்கள் திருப்பிச் செலுத்துதல் க்ளைமைத் தேர்வுசெய்தால், முதலில் சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் சேர்ப்பது தொடர்பான செலவுகளை உங்கள் சொந்த பாக்கெட்டிலிருந்து நீங்கள் செலுத்த வேண்டும். பாலிசிதாரர் தரப்பில் பின்னர் மருத்துவமனை பில்கள், கட்டண ரசீதுகள், கோவிட்-19 சோதனை அறிக்கை உள்ளிட்ட நோயறிதல் அறிக்கைகள் மற்றும் க்ளைம் படிவம் போன்ற தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் திருப்பிச் செலுத்தும் க்ளைமைத் தாக்கல் செய்ய வேண்டும்.

பணமில்லா க்ளைம்: பணமில்லா ஹெல்த் இன்சூரன்ஸ் ஆனது நீங்கள் பாக்கெட்டில் இருந்து எந்தவொரு செலவையும் செய்யாமல் நெட்வொர்க் மருத்துவமனைகளின் கீழ் சிகிச்சையைப் பெற உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்கள் இ-ஹெல்த் கார்டை மருத்துவமனையில் காண்பிப்பதுடன், உங்கள் செலவினங்களை நேரடியாக மருத்துவமனையில் செலுத்துவதற்கு உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தேவையான விவரங்களுடன் பணமில்லா க்ளைம் படிவத்தை நிரப்பவும்.

இன்சூரன்ஸ் திட்டத்தின் நன்மைகளைப் பெற, பாலிசிதாரர் க்ளைம் தாக்கல் செய்யும் போது பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் :

 • வைரஸிற்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவ அதிகாரியிடமிருந்து தனிமைப்படுத்துதல் சான்றிதழ்.
 • பாலிசிதாருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால், பாசிட்டிவ் வைராலஜி அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால், பரிந்துரைக்கப்பட்டவர் அந்தந்த இன்சூரன்ஸ் வழங்குநருக்கு விரைவாகத் தெரிவிக்க வேண்டும் மற்றும் க்ளைம் படிவம், இறப்புச் சான்றிதழ், அசல் பாலிசி ஆவணங்கள், பயனாளியின் அடையாளச் சான்று போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவணங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் சோதித்து மற்றும் சரிபார்க்கப்பட்டதும் மற்றும் க்ளைம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்த தொகை பரிந்துரைக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கில் மாற்றப்படும்.

கோவிட்-19 இன்சூரன்ஸின் க்ளைம்களில் ஐஆர்டிஏஐ அப்டேட்கள்

கொரோனா வைரஸ் தொடர்பான க்ளைமைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களை ஐஆர்டிஏஐ (IRDAI) வெளியிட்டுள்ளது. ஐஆர்டிஏஐ ஆல் விநியோகிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன :

 1. அனைத்து இன்சூரன்ஸ் சேவை வழங்குநர்களும் கோவிட்-19 தொடர்பான இன்சூரன்ஸை விரைவாக கையாள வேண்டும்.
 2. ஐஆர்டிஏஐ (ஹெல்த் இன்சூரன்ஸ்) ஒழுங்குமுறைகளின் ஒழுங்குமுறை-26ன் படி, இன்சூரன்ஸ் நிறுவனம் 24 மணிநேர அடிப்படையில் முன் அங்கீகாரங்களை திறம்பட வழங்குவதற்கும், க்ளைமை உடனடியாக தீர்ப்பதற்கும் அமைப்புகள், நடைமுறைகளை நிறுவுவார்கள்.
 3. சிகிச்சையின் போது உருவாக்கப்படும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செலவுகள் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி தீர்க்கப்பட வேண்டும்.
 4. க்ளைம் மறுஆய்வுக் குழு ஆனது கோவிட்-19 தொடர்பான ஒவ்வொரு க்ளைமையும் முழுமையாக மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
 5. ஐஆர்டிஏஐ சட்டத்தின் பிரிவு 14 (2) (இ)ன் கீழ் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும்.
 6. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அந்தந்த மூன்றாம் தரப்பு நிர்வாகிகளுக்கு பொருத்தமான வழிகாட்டுதல்களை வழங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

20-08-2020 புதுப்பிக்கப்பட்டது