ஹெல்த் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மூத்த உறுப்பினர்)

1

2

கைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

ஹெல்த் இன்சூரன்ஸ் என்றால் என்ன ?

ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது விபத்து, நோய் அல்லது எந்தவொரு தீவிர நோயையும் கண்டறிதல் காரணமாக ஏற்படும் மருத்துவ செலவுகளில் இருந்து பாலிசிதாரரையும், அவரது குடும்பத்தினரையும் பாதுகாக்கிற- இன்சூரன்ஸ் பாலிசியாகும். இன்று, பல நிறுவனங்கள் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்குகின்றன. அவை நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை, வரி சலுகைகள் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகின்றது.

ஹெல்த் இன்சூரன்ஸ் ஏன் முக்கியமானது?

இன்று, தரமான மருத்துவ சிகிச்சையின் விலை அதிகமாக உள்ளது. ஒரு சரியான மருத்துவமனை உங்கள் சேமிப்பை ஒரு சில நாட்களிலேயே முடிக்கும் திறனைக் கொண்டுள்ளது. அந்நிலையில், மருத்துவமனை பில்களைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, உங்கள் முழு சக்தியையும் மீண்டு வருவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அந்நேரத்தில், ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு உதவக்கூடும். உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநருடன் தொடர்பைக் கொண்டுள்ள எந்தவொரு நெட்வொர்க் மருத்துவமனைகளையும் நீங்கள் அணுகலாம் மற்றும் அமைதியாக மீண்டு வரலாம்.

இந்தியாவில் சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள்

07-07-2020 அட்டவணை புதுப்பிக்கப்பட்டது

திட்டத்தின் பெயர்

நுழைவு வயது

புதுப்பிக்கத்தக்க

உறுதிப்படுத்தப்பட்ட தொகை

தொடர்புடைய மருத்துவமனைகள்

ரெலிகேர் கேர் 

குறைந்தபட்சம் - 91 நாட்கள் அதிகபட்சம் - வரம்பு இல்லை

வாழ்நாள்

6 கோடி வரை 

5420+

ஸ்டார் ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா 

குறைந்தபட்சம் - 16 நாட்கள் அதிகபட்சம் - 65 வருடங்கள்

வாழ்நாள்

(ரூ.12லட்சம் - ரூ.25லட்சம்)

9800+

மை ஹெல்த் சுரக்சா சில்வர் ஸ்மார்ட்

குறைந்தபட்சம் - வரம்பு இல்லை அதிகபட்சம் - வரம்பு இல்லை

-

(ரூ.3லட்சம் - ரூ.1கோடி)

10000+

ஆதித்ய பிர்லா ஆக்டிவ் டைமண்ட்

குறைந்தபட்சம் - 91 நாட்கள் அதிகபட்சம் - வரம்பு இல்லை

வாழ்நாள்

(ரூ.3லட்சம் - ரூ.50லட்சம்)

5700+

எச்டிஎப்சி எர்கோ ஹெல்த் ஆப்டிமா ரீஸ்டோர் ( அப்போலோ முனிச் ஆப்டிமா ரீஸ்டோர் என பொதுவாக அறியப்படும் )

குறைந்தபட்சம் - 91 நாட்கள் அதிகபட்சம் - 65 வருடங்கள்

வாழ்நாள்

(ரூ.3லட்சம் - ரூ.50லட்சம்)

5700+

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் நன்மைகள்

பணமில்லா சிகிச்சை

இது இன்சூரன்ஸ் எடுத்துக் கொண்டவரை மருத்துவமனையில் சேர்க்கும்போது உறுதிப்படுத்தப்பட்ட தொகை வரம்பிற்குள் எந்தவொரு கட்டணம் கூட செலுத்தாமல் தொடர்புடைய மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சையைப் பெற அனுமதிக்கிறது. இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கான கட்டணத்தை செலுத்துகிறது மற்றும் உங்களின் சிகிச்சையில் நீங்கள் முழு கவனம் செலுத்த வழிவகை செய்கிறது.

முன் மற்றும் பிந்தைய மருத்துவமனை செலவுகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பும், மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்னரும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உண்டாகும் செலவுகள் ஆனது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே நோயுடனான செலவினங்கள் அனைத்தும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் கவர் செய்யப்படும்.

வரி நன்மைகள் 

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்கும்போது, ​​வருமான வரிச் சட்டம் 1961-ன் பிரிவு 80 டி-ன் கீழ் செலுத்துகிற பிரீமியங்களுக்கான வரி நன்மைகளைப் பெற நீங்கள் தகுதி உடையவர்கள். பாலிசிதாரர் மற்றும் அவன் / அவள் பெற்றோரின் வயதைப் பொறுத்து (ஏதேனும் இருந்தால்) ஒருவர் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை வரி சலுகைகளைப் பெற முடியும். 

தினசரி மருத்துவமனை பணம்

மருத்துவமனையில் சேர்க்கும்போது இந்த நன்மை மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு தினசரி அடிப்படையில் பணத்தை வழங்கக்கூடியது. இதன் மூலம் மருத்துவமனையில் உணவு, பயணம் போன்ற கூடுதல் செலவுகளை கவனித்துக் கொள்ளலாம். பொதுவாக, இந்த

தொகை ஒரு நாளைக்கு ரூ 2,000 வரை இருக்கும். ஆனால் விபத்துக்கள் மற்றும் ஐ.சி.யூ உள்ளிட்டவைக்கு மாறுபடலாம்.

உறுப்பு மாற்று சிகிச்சை செலவுகள்

உடல் உறுப்பை மாற்றுவதற்கான செலவுகள் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் தாங்கக்கூடியவையே. உறுப்பு தானம் தொடர்பான அறுவை சிகிச்சை செலவுகளை ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளடக்கியது. இருப்பினும், அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் சிக்கல்கள், உறுப்பு தானம் வழங்குபவரின் செலவுகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் ஆகியவை கவர் செய்யப்படாது.

நோ க்ளைம் போனஸ் (NCB)

இது ஒவ்வொரு க்ளைம் ஆண்டிற்கும் இன்சூரன்ஸ் வழங்குபவரிடம் இருந்து நீங்கள் பெறும் தள்ளுபடி. பாலிசியைப் புதுப்பிக்கும் போது அல்லது உறுதிப்படுத்தப்பட்ட தொகையில் அதிகரிக்க நீங்கள் விரும்பும் போதெல்லாம் செலுத்த வேண்டிய பிரீமியத்தில் தள்ளுபடி ஆக என்சிபி வரும். பாலிசியை புதுப்பிக்கும் நேரத்தில் நோ க்ளைம் போனஸ் நன்மையை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

இலவச ஹெல்த் செக்-அப்

பாலிசிதாரர்களை ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி ஊக்குவிக்க, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அவ்வப்போது இலவசமாக ஹெல்த் செக்-அப்களை வழங்குகின்றன. நிறுவனம் மற்றும் பாலிசியின் வகையைப் பொறுத்து, நீங்கள் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்-அப்க்கு தகுதி பெறுவீர்கள்.

வாழ்நாள் புதுப்பித்தல்

இது உங்களுக்கு நீண்ட காலத்திற்கு பாதுகாப்பு வழங்குகிறது. நம்மில் பெரும்பாலோர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற முயற்சிக்கிறோம். எனினும், நோய் அல்லது விபத்துக்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்யலாம். எனவே, ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது கடினமான காலங்களில் ஒரு நன்மையாக செயல்படும்.

மறுசீரமைப்பு நன்மை

இன்சூரன்ஸ் தொகை முழுவதுமாகப் பயன்படுத்தப்பட்டவுடன், இன்சூரன்ஸ் நிறுவனம் அந்தத் தொகையை தானாகவே மீட்டெடுக்கும் மற்றும் நன்மைக்காக கூடுதல் செலவை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. மறுசீரமைப்பு சலுகைகள் கொண்ட திட்டங்கள் சாதாரண ஹெல்த் / மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் ஒப்பிடும்போது விலை உயர்ந்தவை மற்றும் அவை பாலிசியின் உட்பிரிவுகளின்படி பொருந்தும்.

ெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள்

வாடிக்கையாளர்களின் வெவ்வேறு தேவைகளைச் சமாளிக்க, பல வகையான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. இத்தகைய திட்டங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன : -

1. சிக்கலான நோய் திட்டம்

பாலிசியின் கீழ் குறிப்பிடப்பட்ட ஏதேனும் சிக்கலான நோய்கள் ஏற்பட்டால் ஒரு நிலையான நன்மை / தொகை செலுத்துதலை சிக்கலான நோய் திட்டம் வழங்குகிறது. மொத்த தொகை நன்மையுடன், நீங்கள் மருத்துவமனையில் ஏற்படும் மிகப்பெரிய செலவுகளைச் செலுத்த முடியும் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெற முடியும்.

2. சீனியர் சிட்டிசன் ஹெல்த் பிளான்

சீனியர் சிட்டிசன் ஹெல்த் பிளான் ஆனது குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வயதான காலத்தில் அனைத்து மருத்துவ தற்செயல்களுக்கும் எதிராக போராடுவதாக இருக்கும். இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆர்டிஏ) விதிமுறைகளின்படி, ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனமும் 65 வயது வரை மக்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.

3. மகப்பேறு ஹெல்த் இன்சூரன்ஸ்

 மகப்பேறு ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒவ்வொரு ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனமும் முன் மற்றும் பிந்தைய மகப்பேறு கவனிப்பு, குழந்தை பிரசவங்கள் மற்றும் சில சமயங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தடுப்பூசி செலவுகளை உள்ளடக்கியது.

4. தனிநபர் ஹெல்த் இன்சூரன்ஸ்

 தனிநபர் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒரு தனி நபரின் அல்லது ஒரு நபரின் சுகாதார செலவினங்களை உள்ளடக்கியது. ஆனால் உறுதிசெய்யப்பட்ட பெரிய தொகையைப் பெறுவதில் நெகிழ்வுத்தன்மை எப்போதும் இருக்கும். நாம் ஆண்டுதோறும் செலுத்தும் பிரீமியம் உறுதி செய்யப்பட்ட தொகையைப் பொறுத்தது.

5. பேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸ்

பேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் ஒரே பாலிசியின் கீழ் இன்சூரன்ஸ் செய்ய அனுமதிக்கிறது. அனைத்து குடும்ப உறுப்பினர்களும் முழு தொகையின் பயனை அனுபவிக்க முடியும். இதில் தனிநபர் திட்டங்களுடன் ஒப்பிடும்போது செலுத்தப்பட்ட பிரீமியத்தின் அளவு குறைவாக உள்ளது. பாலிசிதாரர் உடன் அவரின் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோரை திட்டத்தில் சேர்க்கப்படலாம்.

6. யூனிட் லிங்கிடு ஹெல்த் இன்சூரன்ஸ் (யு.எல்.எச்.பி)

 யூனிட் லிங்கிடு ஹெல்த் இன்சூரன்ஸ் (யு.எல்.எச்.பி) என்பது ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் முதலீட்டின் கலவையாகும். சுகாதாரப் பாதுகாப்புடன், ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களின் கீழ் வராத செலவினங்களைச் சந்திக்க முதலீட்டாளரால் பயன்படுத்தக்கூடிய ஒரு கார்பஸை உருவாக்க யுஎல்எச்பி உங்களுக்கு உதவும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

 சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்வு செய்யும் போது உங்கள் முடிவை இறுதி செய்வதற்கு முன் சில காரணிகளை மனதில் கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு :

வழங்கப்படும் பாதுகாப்பு

பாலிசிதாரருக்கு பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல்வேறு வசதிகளையும், பாதுகாப்பு நன்மையையும் வழங்குகிறார்கள். சிகிச்சையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அனைத்து வசதிகளையும், வழங்கப்பட்ட கவரேஜையும் சரிபார்க்க வேண்டியது அவசியம். பாலிசிகளை ஒப்பிட்டு, உங்கள் தேவைகள் என்னவென்று ஒரு சரிபார்ப்பு பட்டியலை உருவாக்கி அதற்கேற்ப சிறந்த திட்டத்தைத் தேர்வுசெய்க.

நிறுவனத்தின் நம்பகத்தன்மை

பாலிசிதாரர் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வலைதளம் மற்றும் அதன் விவரங்களை அறிந்து அதன் வழியாக செல்ல வேண்டும். சரியான ஒன்றை தேர்வு செய்ய வாடிக்கையாளர் மதிப்புரைகளுடன் (ரிவீஸ்) நிறுவனத்தின் சுயவிவரம் மற்றும் முந்தைய வரலாற்றைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.

 உறுதி செய்யப்பட்ட தொகை

 ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ஆனது பாலிசிதாரருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்படும் உறுதி செய்யப்பட்ட தொகை ஆகும். நீங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எதிர்கால சுகாதார செலவினங்களுக்காக தேர்வு செய்யப்பட வேண்டிய தொகை குறித்து உங்களுக்கு நியாயமான யோசனை இருக்கலாம். எனவே, உறுதி செய்யப்பட்ட தொகையை புத்திசாலித்தனமாக தேர்வு செய்வது முக்கியம்.

 இணைக் கட்டணம் மற்றும் விலக்கு

 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய சில திட்டங்களில் இணைக்கும் இணைக் கட்டணம் மற்றும் விலக்கு விதிமுறைகள் மீது நீங்கள் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். தெளிவாக இருக்கவும், இது ஒரு முன் வரையறுக்கப்பட்ட தொகை (% இல்) பாலிசிதாரர் மருத்துவ சேவைகளுக்கு பணம் செலுத்த ஒப்புக்கொள்கிறார். எடுத்துக்காட்டாக, இணைக் கட்டணம் 10% மற்றும் க்ளைம் தொகை ரூ.2 லட்சம் என்றால், ரூ.20,000 பாலிசிதாரரால் செலுத்தப்படும், மீதமுள்ளவை நிறுவனத்தால் செலுத்தப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 மறுபுறம், விலக்கு என்பது பாலிசிதாரர் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் (அவன்/அவள்) திட்டத்தை உள்ளடக்கிய செலவுகளுக்கு செலுத்தத் தொடங்குவதற்கு முன் செலுத்த வேண்டிய நிலையான தொகை ஆகும். உதாரணமாக, ஒரு நபரின் விலக்கு ரூ.1,00,000 என வைத்துக் கொள்வோம். மார்ச் மாதத்தில், அந்த நபருக்கு வைரஸ் தொற்று உள்ளது மற்றும் மருத்துவரின் பில் ரூ.10,000 ஆக வருகிறது. இது ஆண்டின் முதல் கட்டணம் என்பதால், முழுத் தொகையும் நபரால் செலுத்தப்படும் (இன்சூரன்ஸ் செய்யப்பட்டவர்). ஜூன் மாதத்தில், அந்த நபர் விபத்துக்குள்ளாகி சிறிய அறுவை சிகிச்சை செய்கிறார். மொத்த பில் ரூ.1,50,000 ஆக வருகிறது. இங்கே அந்த நபர் ரூ.90,000 செலுத்துவார், மீதமுள்ளதை அந்நிறுவனம் செலுத்துகிறது. அக்டோபரில், நபருக்கு 2 எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது மற்றும் மருத்துவ பில் ரூ.40,000 ஆக வருகிறது என வைத்துக் கொள்வோம். அந்த நபர் வருடாந்திர விலக்கு செலுத்தியுள்ளதால், முழு செலவும் நிறுவனத்தால் செலுத்தப்படும்.

 கூடுதல் நன்மைகள் & திட்டங்கள்

 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏராளமான ரைடர்ஸ் மற்றும் கூடுதல் சலுகைகளை வாடிக்கையாளருக்கு வழங்குகின்றன. அவை உண்மையில் பாலிசியின் கவரேஜ், நோக்கம் மற்றும் நன்மையை அதிகரித்ததன் விளைவாக முழுமையான ஹெல்த் கவரேஜ் பாதுகாப்புக் கவசத்தினை அளிக்கும். கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம் அந்தந்த கவரேஜுடன் ஒரு டாப்-அப் திட்டத்தையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

பணமில்லா க்ளைம்க்கான விருப்பம்

இன்சூரன்ஸ் நிறுவனம் பணமில்லா க்ளைம் வசதியை வழங்குகிறதா என்பதைச் சரிபார்க்கவும், ஏனெனில் இது அவசரகால மருத்துவமனையில் அனுமதிக்கும் பாலிசியின் முக்கிய அம்சமாகும்.

பாலிசிஎக்ஸ்.காம் உடன் ஹெல்த் இன்சூரன்சை ஏன் ஒப்பிட வேண்டும் ?

பாலிசிஎக்ஸ்.காம் (PolicyX.com) என்பது உங்களின் இன்சூரன்ஸ் தொடர்பான அனைத்து தேவைகளும் ஒருசேரக் கிடைக்கக்கூடிய ஒரே தளமாகும். பாலிசிஎக்ஸ் என்பது இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஐஐ) ஆல் சான்றளிக்கப்பட்ட வெப் இன்சூரன்ஸ் அக்கிரிக்கெட்டர் நிறுவனம் ( உரிம எண்: ஐஆர்டிஏ / டபிள்யூபிஏ 17/14 ).

சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை பாலிசிஎக்ஸ் உதவியுடன் ஒப்பிட்டு, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கலாம். பாலிசிஎக்ஸ் குழுவானது போலியான வாக்குறுதிகள் மற்றும் தயாரிப்புகளிலிருந்து விலகி இருந்து உங்கள் பட்ஜெட்டில் சிறந்த ஒப்பந்தத்தை நீங்கள் பெறுவீர்கள் என்பதை உறுதி செய்கிறது. எளிதான முறையில் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் செயல்முறையை வழங்க முயற்சிக்கிறோம். தொடங்கம் முதல் இறுதி வரை வாங்கும் நடைமுறைக்காக உங்களுக்கு உதவ எங்கள் அமைப்புகள் மற்றும் குழு நன்கு இணைக்கப்பட்டுள்ளன. பாலிசிஎக்ஸ் பற்றிய பின்வரும் முக்கிய சிறப்பம்சங்களைப் பார்ப்போம் :

 • பாலிசிஎக்ஸ்.காம் பக்கச்சார்பற்ற மேற்கோள்களுடன் இலவச ஒப்பீட்டு சேவையை வழங்குகிறது.
 • பாலிசி பெற விரும்புவோருக்கு 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை 30 விநாடிகளுக்குள் ஒப்பிட அனுமதிக்கிறது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப 5 நிமிடங்களில் சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கலாம்.
 • உங்களின் அடிப்படை தகவல்களை வழங்குவதன் மூலம், நாங்கள் உங்களுக்காக மிகவும் பொருத்தமான ஹெல்த் ப்ளான்களை தேடுவோம் மற்றும் அம்சங்கள், செலவு, ரைடர்ஸ், விலக்குகள், நன்மைகள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் பொருத்தமான மேற்கோள்களை வழங்குவோம்.
 • இதில் ஆன்லைன் முன்மொழிவு படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் சில நிமிடங்களில் வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டே வாடிக்கையாளர் விரும்பிய திட்டத்தை வாங்க அனுமதிக்கிறது. தற்போது, ​​அனைத்து ஹெல்த் ப்ளான்களும் ஆன்லைனில் கிடைக்கின்றன. மேலும் ஆன்லைனில் பணம் செலுத்துவதன் மூலம் உங்கள் பாலிசியை உடனடியாகப் பெறலாம்.
 • பாலிஎக்ஸ்.காம் முன்னணி பிராண்டுகளான ரெலிகேர் ஹெல்த், மேக்ஸ் பூபா, பாரதி ஆக்சா, டாடா ஏஐஏ, அப்போலோ முனிச், ஸ்டார் ஹெல்த் போன்றவற்றிலிருந்து திட்ட ஒப்பீட்டை வழங்குகிறது.

பாலிசிஎக்ஸ் தளத்தில் இருந்து ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்குவதற்கான படிகள்

 • படி 1: பாலிசிஎக்ஸ் தளத்தின் பக்கத்தின் கீழ்-வலது பக்கத்தில் உள்ள " மேற்கோள்களைப் பெறு " என்கிற பிரிவில் கிளிக் செய்க.
 • படி 2: பெயர், செல்போன் எண் போன்ற அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்து " தொடரவும் " என்பதைக் கிளிக் செய்க.
 • படி 3: " கவர் தேர்வு " என்பதைக் காட்டும் டவுன் டப்-ல் இருந்து விரும்பிய விருப்பத்தைத் தேர்வு செய்க, அதாவது 1 பெரியவர், 2 பெரியவர்கள் மற்றும் 1 குழந்தை போன்றவை.
 • படி 4: மேற்கொண்டு தொடர உங்கள் " பிறந்த தேதி ", " மின்னஞ்சல் முகவரி ", " ஊர் " ஆகியவற்றை நிரப்பி, "மேற்கோள்களைக் காண்க " என்பதைக் கிளிக் செய்க.
 • படி 5: பாலிசி ப்ளான்களை ஒப்பிட்டு விரும்பிய திட்டத்தை தேர்ந்தெடுத்து " இந்த திட்டத்தை வாங்க " என்பதைக் கிளிக் செய்க.
 • படி 6: உங்கள் முந்தைய மருத்துவ வரலாறு, அடையாளச் சான்று மற்றும் தேவையான ஆவணங்களுடன் படிவத்தை நிரப்பி, " சேமி மற்றும் தொடரவும் " என்பதைக் கிளிக் செய்க.
 • படி 7: கிடைக்கக்கூடிய வெவ்வேறு ஆன்லைன் கட்டண செலுத்தும் முறைகள் மூலம் பணம் செலுத்துங்கள்.
 • படி 8: வெற்றிகரமாக முடிந்தது ! நீங்கள் இப்போது இன்சூரன்ஸ் செய்துள்ளீர்கள்.

பாலிசிஎக்ஸ்.காமின் குழு உடனடியாக மின்னஞ்சல் மூலம் பாலிசி ஆவணங்களை அனுப்பி வைக்கும். (* குறிப்பு : பாலிசி அம்சங்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் ).

சரியான ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி?

சந்தையில் கிடைக்கக்கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்க நிறைய ஆராய்ச்சி மற்றும் தேடல் தேவைப்படுகிறது. அந்த ஆராய்ச்சி ஆனது முக்கியமாக கீழே பட்டியலிடப்பட்டுள்ள சில காரணிகளைப் பொறுத்தது :

நிறுவனத்தின் நற்பெயர் : ஒரு ஹெல்த் இன்சூரன்சைத் தேர்ந்தெடுப்பதில் நிறுவனத்தின் நற்பெயர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நல்ல பிராண்ட் பிம்பத்தைக் கொண்டிருக்கும் நிறுவனத்திற்குச் செல்வது சிறந்தது. சரியான ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குபரைத் தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் வகையில் ஒலி ஆராய்ச்சி தேவைப்படும்.

நிதி ஸ்திரத்தன்மை : அந்த நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மையை நீங்கள் சரிபார்க்க வேண்டும். கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (CRISIL) உடைய மதிப்பீட்டை நீங்கள் சரிபார்க்கலாம். AAA மதிப்பீட்டைக் கொண்ட ஒரு நிறுவனத்திற்குச் செல்லுங்கள், ஏனெனில் அந்நிறுவனம் தன் கடமைகளை நிறைவேற்ற அதிக நிதி வலிமை கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

தயாரிப்பு தொகுப்பு : இன்சூரன்ஸ் என்பது ஒரு பரந்த தொழில் என்பதை மறந்துவிடாதீர்கள், மேலும் அது காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கும். இது அனைத்து நேரத்திலும் ஒரே மாதிரியாக இருக்காது, உங்களுடைய தேவைகளும் அவ்வாறே இருக்கும். அதனால்தான் பரந்த அளவிலான பயனுள்ள இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்கும் ஒரு நிறுவனத்திற்குச் சென்றால் வாடிக்கையாளர்களின் வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. 

மிதமான மற்றும் விரைவான க்ளைம் தீர்வு செயல்முறை : எளிய மற்றும் எளிதான க்ளைம் தீர்வு செயல்முறையைப் பின்பற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேடுவது நல்லது. அவசர காலங்களில், சரியான சுகாதார வசதிகளைத் கிடைப்பதற்கு உகந்த நேரத்தில் க்ளைம் கிடைப்பது மிக முக்கியம். 

வாடிக்கையாளர் ஆதரவு சேவை : இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைகளின் தரத்தில் கவனம் செலுத்துங்கள். அதற்காக நீங்கள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சேவைகளுக்கான வாடிக்கையாளர்களின் மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகளை (ரிவீஸ்) ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஆன்லைன் சாட், மின்னஞ்சல் உதவி மற்றும் தொலைபேசி உதவியை வழங்கும் நிறுவனத்தைத் தேர்வு செய்க.

இன்சூரன்ஸ் ஆலோசகர் : இன்சூரன்ஸ் என்பதை ஒரு சாதாரண நபரால் புரிந்து கொள்வது கடினம். ஆனால் இப்போது பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்வு செய்ய உதவும் வகையில் இன்சூரன்ஸ் ஆலோசகர்களை நியமித்து உள்ளன.

கருத்து மற்றும் மதிப்புரைகள் : இன்சூரன்ஸ் தேடலில் மிக முக்கியமான மற்றும் பொதுவான அம்சங்களில் ஒன்று இன்சூரன்ஸ் நிறுவனத்தால் பெறப்பட்ட வாடிக்கையாளர் மதிப்பீடுகள் மற்றும் கருத்துகள். இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு எதிரான புகார்கள் மற்றும் தீர்மானங்களின் எண்ணிக்கையை சரிபார்க்க நீங்கள் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ( ஐஆர்டிஐ ) வலைதளத்தை சோதித்து பார்க்க வேண்டும்.

ஹெல்த் / மெடிக்கல் இன்சூரன்ஸின் க்ளைம் செட்டில்மென்ட் செயல்முறை

இன்சூரன்ஸ் பாலிசியின் மிக முக்கியமான பகுதியானது க்ளைம் செட்டில்மென்ட் செயல்முறை ஆகும். க்ளைம் செட்டில்மென்ட் பற்றியே மக்கள் பெரும்பாலும் கவலை அடைகின்றனர். சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நேரடி க்ளைம் செட்டில்மென்ட் செயல்முறையை வழங்குகின்றன. மேலும் சில க்ளைம் செட்டில்மென்ட்களுக்கு டிபிஏ-களின் ( மூன்றாம் தரப்பு நிர்வாகிகள் ) உதவியைப் பெறுகின்றன. க்ளைம் செட்டில்மென்ட் செயல்முறை ஆனது கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வடிவங்களில் நடைபெறுகிறது :

1. பணமில்லா க்ளைம்

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனைகளில் மட்டுமே நீங்கள் பணமில்லா சிகிச்சை வசதிகளைப் பெற முடியும். திட்டமிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அல்லது அவசர காலங்களில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் டிபிஏ (TPA)-க்கு முன்பே அறிவிக்க வேண்டும். மருத்துவமனையில் இருக்கும் இன்சூரன்ஸ் பிரிவு அனைத்து ஆவண வேலைகளுக்கும் உதவுகிறது. டிபிஏ மருந்து க்ளைம் தொகையை அங்கீகரிக்கும் மற்றும் அதை மருத்துவமனை இன்சூரன்ஸ் செய்தவருக்கு செட்டில்மென்ட் செய்யும். சில நேரங்களில் விலக்குகள் இருக்க வாய்ப்புள்ளது. அதாவது, டிபிஏ (TPA) செலுத்த இயலாத செலவுகள் இருக்கும். இத்தகைய செலவுகளை நோயாளியை சார்ந்தவர்களே நேரடியாக மருத்துவமனையின் பில் கவுண்டரில் செலுத்த வேண்டி இருக்கும்.

பின்பற்ற வேண்டிய படிகள்

 • இன்சூரன்ஸ் வழங்குநருக்கு போன் அழைப்பிலோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தெரிவிக்கவும்.
 • எந்தவொரு தகவல்தொடர்பு முறையிலும் நிறுவனம் பதிலளிக்காத நிலையில், பாலிசிஎக்ஸைத் (PolicyX.com) தொடர்பு கொள்ளவும். இதற்காக கட்டணமில்லா எண்ணான 1800-4200-269 என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.க்கு மின்னஞ்சல் செய்யவும்.
 • எந்தவொரு சிக்கலையும் எதிர்கொள்ளாமல் உங்கள் க்ளைம் செட்டில்மென்ட்-க்கு பாலிசிஎக்ஸ் உங்களுக்கு உதவும் மற்றும் வழிகாட்டும்.
 • அடையாள அட்டையோடு உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிய ஹெல்த் கார்டை காட்டவும்.
 • பாலிசிதாரரின் அடையாளத்தை மருத்துவமனை பரிசோதித்து மற்றும் முன் அங்கீகார படிவத்தை ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சமர்ப்பிக்கும்.
 • இன்சூரன்ஸ் நிறுவனம் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்யும் மற்றும் அவற்றின் விதிமுறைகளின்படி அனைத்தும் சரியாக இருந்தால், அவர்கள் க்ளைம் செட்டில்மென்ட்-ஐ செயல்படுத்துவார்கள்.
 • ஒரு சில ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழு நடைமுறைக்கும் உங்களுக்கு உதவ ஒரு கள மருத்துவரை வழங்குகின்றன.
 • அனைத்து நடைமுறைகளும் முடிந்தபின், நிறுவனத்தின் விதிமுறைகளின்படி க்ளைம் வழங்கப்படுகிறது.

2. திருப்பிச் செலுத்தும் க்ளைம்

 நெட்வொர்க் மற்றும் நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளில் கூட பாலிசிதாரர் திருப்பிச் செலுத்தும் வசதியைப் பெறலாம். இங்கே, முதலில் நீங்கள் சிகிச்சை வசதிகளைப் பெறலாம் மற்றும் நீங்கள் சிகிச்சைக்கான பில்களை நேரடியாக மருத்துவமனையில் செலுத்தி விட வேண்டும். பின்னர் சிகிச்சையுடன் தொடர்புடைய பில்கள் மற்றும் சிகிச்சையின் ரசீதுகளை சமர்ப்பிப்பதன் மூலம் டிபிஏ(TPA)-யிடம் இருந்து செலவு செய்த தொகைக்கான திருப்பிச் செலுத்தும் க்ளைம் (Reimbursement Claim) மூலம் செட்டில்மென்ட் செய்துக் கொள்ளலாம்.

திருப்பிச் செலுத்துதல் க்ளைம் - பின்பற்ற வேண்டிய படிகள் -

 • உங்களின் மருத்துவமனை சேர்க்கைக் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விரைவாக தகவல் தெரிவிக்கவும்.
 • எந்தவொரு தகவல்தொடர்பு முறையிலும் நிறுவனம் பதிலளிக்காத நிலையில், பாலிசிஎக்ஸைத் (PolicyX.com) தொடர்பு கொள்ளவும். இதற்காக கட்டணமில்லா எண்ணான 1800-4200-269 என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.க்கு மின்னஞ்சல் செய்யவும்.
 • எந்தவொரு சிக்கலையும் எதிர்கொள்ளாமல் உங்கள் க்ளைம் செட்டில்மென்ட்-க்கு பாலிசிஎக்ஸ் உங்களுக்கு உதவும் மற்றும் வழிகாட்டும்.
 • மருத்துவமனைகளின் பில்களுடன் உங்கள் அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்திருங்கள்.
 • க்ளைம் படிவங்களுடன் ஆவணங்களை சமர்ப்பிக்கவும். அதனுடன் மருத்துவமனைகளின் பில்களை இணைக்க மறக்காதீர்கள்.
 • இன்சூரன்ஸ் நிறுவனம் நீங்கள் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப க்ளைம் கோரிக்கையை செயல்படுத்தும்.
 • அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்னர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகளின்படி க்ளைம் வழங்கப்படுகிறது.

ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் க்ளைம் செட்டில்மென்ட் விகிதம்

க்ளைம் செட்டில்மென்ட் விகிதம் (சி.எஸ்.ஆர்) என்பது இன்சூரன்ஸ் நிறுவனத்தால் பெறப்பட்ட மொத்த இறப்பு க்ளைம்களின் எண்ணிக்கை மற்றும் மொத்த க்ளைம்களின் எண்ணிக்கையின் விகிதமாகும்.

இது ஒரு முக்கியமான காரணியாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது நிராகரிக்கப்பட்டவற்றுக்கு எதிராக பாலிசிதாரர் செட்டில்மென்ட் கண்டுள்ள க்ளைம்களின் எண்ணிக்கையை காட்டுகிறது. இந்த விகிதத்தின் மூலம், உங்கள் சுகாதார திட்டத்திற்கு சரியான இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தெளிவாக இருப்பீர்கள்.

2018-19-ம் ஆண்டின் க்ளைம் செட்டில்மென்ட் விகிதம்

07-07-2020 அட்டவணை புதுப்பிக்கப்பட்டது

இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

க்ளைம் விகிதம் (2018-2019)

எச்.டி.எஃப்.சி எர்கோ ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி ( அப்போலோ முனிச் ஹெல்த் இன்சூரன்ஸ் என்று அழைக்கப்பட்டது

நிறுவனம் ) 

63%

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட்

85%

பாரதி ஆக்ஸா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம

89%

சோழமண்டலம் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம்

35%

மணிபால்சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம்

62%

ஃபியூச்சர் ஜெனரலி இன்சூரன்ஸ் நிறுவனம்

73%

எச்.டி.எஃப்.சி எர்கோ ஹெல்த் இன்சூரன்ஸ் 

62%

இஃப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

102%

லிபர்ட்டி வீடியோகான் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

82%

மாக்மா எச்.டி.ஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

90%

மேக்ஸ் பூபா ஹெல்த் இன்சூரன்ஸ்

54%

நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம்

107.64%

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்

103.74%

ஓரியண்டல் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

108.80%

ரஹேஜா கியூபிஇ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

33%

ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

94%

ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம்

55%

ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

61%

எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

52%

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

53%

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம்

63%

டாடா ஏ.ஐ.ஜி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

78%

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம்

110.51%

யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

92%

அட்டவணை தரவு 22-06-2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.

*தரவ- ஐ.ஆர்.டி.ஏ.ஐ ( இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் )

திருப்பிச் செலுத்துதல் க்ளைம்-க்கு தேவையான ஆவணங்கள்

 • வயது சான்று : பான் கார்டு, பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை.
 • புகைப்படம் அடையாள சான்று : ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை.
 • முகவரி சான்று : ரேஷன் கார்டு, வங்கி கணக்கு அறிக்கை, மின் கட்டண பில், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, தொலைபேசி பில் போன்றவை.
 • வருமான சான்று : முதலாளியின் சான்றிதழ், சம்பள ஸ்லீப், படிவம் 16 போன்றவை.
 •  மருத்துவ பரிசோதனை : ஒருவேளை இன்சூரன்ஸ் நிறுவனம் கேட்டால் அளிக்க வேண்டும்.
 •  புகைப்பட ஆதாரம் : பாலிசிதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

 ஹெல்த் இன்சூரன்ஸ் செய்திகள்

ஐ.ஆர்.டி.ஏ ஆனது இன்சூரன்ஸ் வழங்குபவர்களை ஜூலை 10 முதல் " கொரோனா கவாச் பாலிசி மற்றும் கொரோனா ராக்சாக் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை " வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. - 29 ஜூன் 2020

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் மத்தியில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஐ) ஆனது ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குபவர்களை ஜூலை 10-ம் தேதி முதல் தனிநபர்களுக்கு " கொரோனா ராக்சாக் " மற்றும் "கொரோனா கவாச் பாலிசி " என பெயரிடப்பட்டுள்ள ஜெனரல் மற்றும் ஹெல்த் பாலிசியை வழங்க கேட்டுக் கொண்டது. 

கொரோனா கவாச் (Corona Kavach) என்பது வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கக்கூடிய நன்மைகள் இல்லாத ஒற்றை பிரீமியம் மற்றும் வரையறுக்கப்பட்ட காலத்திற்கான பாலிசியாகும். 18-65 வயதுக்குட்பட்ட நபர்கள் இந்த பாலிசியை வாங்கலாம். அவர்கள் உங்களுக்கு பெற்றோர்கள், மாமனார்-மாமியார் மற்றும் 25 வயது வரை உள்ள குழந்தைகளை உள்ளடக்கும் ஒரு ஃபேமிலி ப்ளோட்டர் திட்டத்தை (family floater plan) செய்யலாம். இந்த பாலிசியின் இன்சூரன்ஸ் தொகை ரூ. 50,000 முதல் தொடங்குகிறது.

இந்த பாலிசியின் கீழ், பாலிசிதாரர்கள் COVID-19 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நோயறிதல் மையத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நோய் உறுதி செய்யப்பட்ட பின்னர், 14 நாட்கள் வரை மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள் அனைத்திற்கும் க்ளைம் கோரலாம்.

இருப்பினும், " கொரோனா ராக்சாக் " (Corona Rakshak) பாலிசியில், இன்சூரன்ஸ் தொகை ரூ.50,000 முதல் 2.5 லட்சம் வரை இருக்கலாம். இது ஒரு பிரீமியம் பாலிசியாகும், இது பாலிசிதாரரை பரிசோதித்து உறுதி செய்த பின்னர் குறைந்தது 3 நாட்களுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் மொத்த தொகையில் 100% செலுத்தும்.

நீங்கள் மருத்துவ செலவுகள் பற்றி கவலைப்படுகிறீர்கள் மற்றும் இந்த தொற்றுநோயைக் குறைக்க மலிவான கவரைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த பாலிசிகள் உங்களுக்கு ஒரு நல்ல தொடக்க புள்ளியாக இருக்கும்.

கோவிட் -19 இந்தியாவில் 4%-க்கும் குறைவான நோயாளிகளுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளது - 09 ஜூன் 2020

இந்த தொற்றுநோய்களின் போது, ​​இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கோவிட் -19 ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளைம் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படுகின்றன. இந்தியாவில், க்ளைம் தொகை ரூ.135 கோடி கொண்ட ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளைம் எண்ணிக்கை சுமார் 8,500 மட்டுமே. ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளைம்களின் எண்ணிக்கையும், அளவும் மொத்தம் உள்ள 2.17 லட்சம் வழக்குகளுக்கு எதிரானது - இது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4% பேருக்கு மட்டுமே ஹெல்த் இன்சூரன்ஸ் இருப்பதைக் காட்டுகிறது ( யூனிகான் நிதி மற்றும் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி 2020 ஜூன் 4 அன்று சமர்ப்பிக்கப்பட்டது ). இது இந்தியாவில் ஊடுருவல் (penetration) வீதத்தைக் காட்டுகிறது.

இன்சூரன்ஸ் ஊடுருவல் ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக சேகரிக்கப்பட்ட பிரீமியமாக அளவிடப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி இன்சூரன்ஸ் ஊடுருவல் 4.6% ஆகவும், ஆயுள் அல்லாத ஊடுருவல் 2.74% ஆகவும் உள்ளது.

தற்போது அதிகரித்து வரும் கோவிட்-19 வழக்குகள் மூலம், தேவையற்ற அவசரநிலைகளைச் சமாளிக்க சரியான இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை இந்தியாவில் உள்ள மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

இப்பொழுதெல்லாம், இந்தியர்கள் பிற இன்சூரன்ஸ் விருப்பங்களுடன் ஒப்பிடும்போது மாநில ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் அல்லது நிறுவனத்தின் இன்சூரன்ஸ், ஆயுஷ்மான் பாரத் போன்ற தேசிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் வருவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என ​​ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, 2 - 4 % க்கு இடையில் இருக்கும் ஹெல்த் மற்றும் லைப் க்ளைம் உடைய அனுபவம் இன்சூரன்ஸ் ஊடுருவலின் கீழ் கடுமையானதைக் காட்டுகிறது. மேலும் தொற்றுநோய்களின் போது நிதிப் பாதுகாப்பின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும், முன்னிலைப்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துபவர் கடுமையாக உழைத்து வருகிறார்.

ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் வழிகாட்டுதல்களை ஒருங்கிணைக்கிறது - மே 18, 2020

2020-ம் ஆண்டு மே 12 வரை திருத்தப்பட்ட அனைத்து ஹெல்த் இன்சூரன்ஸ் வழிகாட்டுதல்களின் ஒருங்கிணைந்த பட்டியலை ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) வெளியிட்டுள்ளது.

 • ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் புதுப்பிக்கும் நேரத்தில் திட்டத்தை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு விருப்பத்தை வழங்க வேண்டும்.
 •  பாலிசியை போர்ட்டிங் செய்வதற்கு எந்த கட்டணமும் இருக்கக் கூடாது.
 • இரண்டு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளைக் கொண்டவர்களுக்கு சிறந்த க்ளைம் விதிகள்.

இந்த தொற்றுநோய்க்கு முன்னும் பின்னும், ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை அதிக வாடிக்கையாளர்கள் மையமாகக் கொள்ள ஐ.ஆர்.டி.ஏ.ஐ பல மாற்றங்களையும், வழிகாட்டுதல்களையும் கொண்டு வந்துள்ளது. சமீபத்திய வழிகாட்டுலின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த பட்டியலாகும் மற்றும் முன்னர் அறிவிக்கப்பட்ட அனைத்து மாற்றங்களுக்கும் எந்தவிதமான குழப்பத்தைத் தவிர்க்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து திருத்தங்களைக் கொண்ட ஒரு பட்டியலை வழங்குவதன் மூலம், இதை ஐ.ஆர்.டி.ஏ.ஐ அனைவருக்கும் எளிதாக பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் தெளிவை வழங்கும். இந்த ஒருங்கிணைந்த பட்டியலை எதிர்கால பயன்பாட்டிற்கான குறிப்பு ஆவணமாகவும் நாம் கருதலாம். இது உண்மையில் ஐ.ஆர்.டி.ஐ-யின் ஒரு அற்புதமான நடவடிக்கையாகும். மேலும் இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் துறையை மாற்ற ஒழுங்குமுறை அமைப்பு பெரும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த பட்டியல் அத்தகைய சிறந்த படிகளின் தொகுப்பாகும். 

நவல் கோயல்- (பாலிசிஎக்ஸ்.காமின் தலைமை நிர்வாக அதிகாரி & நிறுவனர்), "சமீபத்தில் திருத்தப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் வழிகாட்டுதல்களின் ஒருங்கிணைந்த பட்டியலைக் கொண்டுவந்ததற்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ-வினைப் பாராட்டுகிறேன். இது வாடிக்கையாளர்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பல கேள்விகளைத் தெளிவுபடுத்தியுள்ளது. இப்போது வாடிக்கையாளர்கள் தாங்கள் விடுபட்டதையும் எளிதாக ஒப்பிடலாம். இந்த நடவடிக்கையின் மூலம், ஹெல்த் இன்சூரன்ஸ் தயாரிப்புகள் எவ்வாறு வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டுள்ளது என்பதை ஐ.ஆர்.டி.ஏ.ஐ தெளிவுபடுத்தியுள்ளது. "

கொண்டு வந்த திருத்தங்களின் ஒரு பகுதியாக, சீனியர் சிட்டிசன்களுக்கான ஏற்பாடுகளை வழங்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஐ.ஆர்.டி.ஏ.ஐ கேட்டுள்ளது. ஐ.ஆர்.டி.ஏ.ஐ படி, லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் டிபிஏ-க்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தொடர்பான க்ளைம்களை நிவர்த்தி செய்ய ஒரு தனி சேனலை உருவாக்க வேண்டும். சீனியர் சிட்டிசன்களின் குறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

கோவிட்-19 : ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் தேதிகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நீட்டித்துள்ளன - ஏப்ரல் 17, 2020

 கோவிட்-19 பெரும் தொற்று பாதிப்பால் உண்டான நாடு தழுவிய பொதுமுடக்கத்தால் நாட்டை ஒரு இடைவெளியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்களும் ஈ.எம்.ஐ மற்றும் பிற பில்களின் தேதிகளை மாற்றியமைப்பதன் மூலம் செலவுகளை சரி செய்துகொள்ள மக்களுக்கு உதவும் வகையில் மிகுந்த நிவாரணத்துடன் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இந்த பெருந்தொற்று பாதிப்பின் போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் தேதிகளை நீட்டிப்பதன் மூலம் ஆதரிக்க திட்டமிட்டுள்ளன.

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கான புதுப்பித்தல் காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசு முழு விஷயத்தையும் திட்டமிட்டுள்ளது. பொதுமுடக்கத்தின் காரணமாக புதுப்பிக்கப்பட வேண்டிய தற்போதைய அனைத்து பாலிசிகளை அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் புதுப்பித்துக் கொள்ளலாம். மார்ச் 25 முதல் மே 3 வரை வரும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியுடன் தொடர்புடைய புதுப்பித்தல் தேதிகள் இப்போது மே 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சர் உறுதிப்படுத்தினார்.

பொதுவாக ஹெல்த் இன்சூரன்ஸ் கீழ், நீங்கள் சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்தத் தவறினால், இன்சூரன்ஸ் ப்ளான் நடைமுறையில் இருப்பது நிறுத்தப்படுகிறது. ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் புதுப்பிக்க வேண்டிய தேதியிலிருந்து ஒரு மாதம் கூடுதல் காலத்தை பிரீமியம் தொகையை செலுத்த வழங்குகின்றன. வழங்கப்படும் கூடுதல் காலத்தில் நீங்கள் பிரீமியம் செலுத்தினால் திட்டத்தை புதுப்பிக்க முடியும், ஆனால் பாலிசிதாரர் இந்த கூடுதல் காலத்தில் கவர் செய்யப்படமாட்டார்.

இப்போது, ​​பாலிசிதாரர் மே 15 அல்லது அதற்கு முன்னர் பணம் செலுத்தி இருந்தால் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசித் தொடர்ந்து செயல்பட்டு வரும்.

இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்களுக்கு தேவையான உதவிகளை சரியான நேரத்தில் பெற முடியும் என்பதால் அவர்களுக்கு நிறைய நிம்மதியைத் தருகிறது. இப்போது மக்கள் நிதானமாக இருக்க முடியும் மற்றும் பொதுமுடக்கத்தின் விதிகளை பின்பற்றலாம். இது இந்த கொடிய வைரஸில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்கிறது - நவல் கோயல் (பாலிசிஎக்ஸ்.காமின் தலைமை நிர்வாக அதிகாரி & நிறுவனர்).

கொரோனா வைரஸ் : ஐ.ஆர்.டி.ஏ.ஐ க்ளைம் அமைப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது - மார்ச் 6, 2020

கொரோனா வைரஸ் உலகளவில் மிக வேகமாக பரவி வருகிறது, மேலும் இந்தியாவிலும் பல வழக்குகள் பதிவாகியுள்ளன. ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ்இன்சூரன்ஸ் செய்யப்பட்டவர்களுக்கு ஒரு கேள்வி உள்ளது - அதாவது கொரோனா வைரஸ் தொடர்பான அவர்களின் க்ளைம்கள் தீர்க்கப்படுமா அல்லது இல்லையா ? கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து வழக்குகளும் வேறு எந்த நோய்க்கும் என்கிற பிரிவில் சிகிச்சையளிக்கப்படும் / கவர் செய்யப்படும் என்பதை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய க்ளைம்கள் வழக்கமான விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.

சமீபத்தில், கொரோனா வைரஸுடன் தொடர்புடைய க்ளைம்களைக் கையாளும் போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை ஐ.ஆர்.டி.ஏ.ஐ வெளியிட்டுள்ளது. 

 • ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொரோனா வைரஸ் வழக்குகளை விரைவாக கையாள உறுதி செய்ய வேண்டும் .
 • சிகிச்சை செய்யப்பட்ட காலம் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட காலக்கட்டத்தில் மருத்துவ சிகிச்சையுடன் தொடர்புடைய செலவு பாலிசி ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி மட்டுமே தீர்க்கப்பட வேண்டும்.
 • எந்தவொரு க்ளைம்யையும் நிராகரிப்பதற்கு முன் கோவிட்-19 தொடர்பான அனைத்து வழக்குகளும் க்ளைம் மறுஆய்வுக் குழுவால் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.

ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஆனது இன்சூரன்ஸ் நிறுவனங்களை கொரோனா வைரஸ் மற்றும் திசையன் மூலம் பரவும் நோய்களை உள்ளடக்கிய பல குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சையை பிரத்தியேகமாக உள்ளடக்கும் ஒரு தயாரிப்பை(ப்ரொடெக்ட்) கொண்டு வருமாறுக் கேட்டுக் கொண்டுள்ளது. பல ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் ஒரு பெரும் தொற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதில்லை. இருப்பினும், இன்றுவரை WHO கொரோனா வைரஸை தொற்றுநோயாக அறிவிக்கவில்லை, ஆனால் அபாயங்கள் உள்ளன. தற்போது, ​​கொரோனா வைரஸ் முன்பே இருக்கும் நோயாக் கருதப்படாததால் முழுமையான கவரைப் பெற முடியும். எனவே, இதுபோன்ற நோய்களில் காத்திருப்பு காலம் இல்லை.

07-07-2020 புதுப்பிக்கப்பட்டது