அப்பல்லோ ம்யூனிச் ஹெல்த் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)

1

2

தொலைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

உலகத்தரமான ஹெல்த்கேர் சேவைகளை வழங்கும் நோக்கத்தில் அப்போலோ மருத்துவ குழுமம் ம்யூனிச் நிறுவனத்துடன் கை கோர்த்து உடல்நலக் காப்பீட்டுத் துறையில் கால் பதித்துள்ளது. இந்த கூட்டு நிறுவனம் இந்தியாவில் உள்ள உடல்நல காப்பீட்டுக்கான பங்குச் சந்தையில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. 

அப்பல்லோ ம்யூனிச் ஐஎஸ்ஓ 9001 2008 சான்றிதழ் பெற்று, ஹைதராபாத்தில் பதிவு செய்த நிறுவனம் ஆகும். இதன் கார்ப்பரேட் அலுவலகம் டெல்லியில் உள்ளது. இந்த நிறுவனம் பல வங்கிகளுடன் மிகவும் ஸ்ட்ராங்கான நெட்வொர்க்கை அமைத்துள்ளது. (கனரா வங்கி சிட்டி வங்கி இந்தியன் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி)

நம் வாழ்வின் ஒவ்வொரு நாளுமே உடல் ஆரோக்கியம் கெடுவதற்கான பல சாத்தியக்கூறுகளுக்கு நடுவிலேயே வாழ்ந்து வருகிறோம். எந்த நேரத்திலும் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவருக்கு உடல் நலம் குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு நிலைமை ஏற்படலாம்.

பிரீமியம் செலுத்தியதற்கான ஒரு குறைந்த தொகையை ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கி வைத்தால், எதிர்பாராமல் நேரும் மருத்துவ செலவை எளிதாக எதிர் கொள்ளலாம். 

மருத்துவ காப்பீடு நாம் ஏன் பெற வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது கிடைக்கும் வருமான வரி விலக்கு. உடல்நலக் காப்பீட்டு திட்டங்கள் அனைத்துமே வருமான வரி சட்டத்தின் 80டி பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்படும். வருமான வரிக்கு என்று செலுத்தப்படும் தொகையில், நாம் முன்கூட்டியே பிளான் செய்தால் ஒரு பெரும் தொகையை உடல்நலக் காப்பீட்டு திட்டத்தில் செலுத்தி நம்முடைய முதலீடாக்கி, வருமான வரி தொகையை குறைத்து விடலாம். உடல்நலக் காப்பீட்டு திட்டங்களை பெறுவதன் வழியாக நமக்கு இரட்டைப் பயன்கள் கிடைக்கிறது. ப்ரீமியத்திற்கான  செலுத்தும் சிறிய தொகையில் மிகப்பெரிய காப்புறுதி தொகை மருத்துவ சிகிச்சைக்கு நமக்கு உதவுகிறது. மேலும் பிரீமியம் தொகையை  வருமான வரி விலக்காக பெற்றுக் கொள்ளலாம். 

இந்த நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் மொத்தம் 50 கிளை அலுவலகங்கள் உள்ளன. நீங்கள் நிறுவனத்தின் ஏஜெண்ட் வழியாகவோ அல்லது நிறுவனத்தின் இணைய தளத்தின் வழியாக ஹெல்த் இன்சூரன்ஸ் பெற்றுக் கொள்ளலாம். காப்பீட்டுத் திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு தேவையான மருத்துவ செலவுக்கான பாதுகாப்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் கேர் சிகிச்சைக்கும் காப்புறுதி வழங்குகிறது. 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இதுவரை ரூபாய் 2913 கோடிகளை க்ளைமாக செட்டில்மென்ட் செய்துள்ளது. 

பல்வேறு வகையான அப்பல்லோ ம்யூனிச்  ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ்

அப்பல்லோ  ம்யூனிச் ஹெல்த் வாலெட்

இந்த நிறுவனம் வழங்கும் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அதிக பலனுள்ள ஒரு காப்பீட்டு திட்டம் ஆகும். இந்த காப்பீடு திட்டத்தில் தீவிரமான நோய்களுக்கும் சாதாரணமான உடல்நலக் கோளாறுகளுக்கும் என அனைத்திற்கும் காப்புறுதி உண்டு. 

சிறப்பு அம்சங்கள்

 • காப்பீட்டு நன்மைகள் அனைத்தையும் உபயோகித்து விட்டாலும் காப்புறுதி தொகை 100 சதவிகிதம் என்ற அளவுக்கு ரெஸ்டோர் செய்யப்படுகிறது. 
 • ஓ பி டி செலவுகளுக்கும், க்ளைம்கள் இல்லாத ஆண்டுகளுக்கும், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத பிற செலவுகளுக்கும் இந்த திட்டத்தில் காப்புறுதி உண்டு. அல்லது உங்களின் பிரீமியத்தை புதுப்பிக்கும் போது அதில் 50 சதவிகிதம் தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம்.
 • ஆங்கில மருத்துவம் மட்டுமன்றி மாற்று மருத்துவங்கள் – ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, மற்றும் உனானி மருத்துவத்தில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்றால் அதற்கான தொகையை காப்பீட்டில் பெற்றுக் கொள்ளலாம்.
 • அருகில் இருக்கும், நிறுவனத்தின் நெட்வொர்க்கில் உள்ள மருத்துவமனையில் அவசர நேர ஆம்புலன்ஸ் செலவிற்கு ரூபாய் 2000 வரை பெற்றுக் கொள்ளலாம். 
 • பாலிசிதாரர் தன்னுடைய பாலிசி அட்டையை காண்பித்தாலே நெட்வொர்க்கில் உள்ள எந்த மருத்துவமனையிலும் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். 
 • மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைக்கு ஆகும் மாற்று உறுப்பு வழங்குபவரின் மருத்துவ செலவை காப்பீட்டில் பெற்றுக் கொள்ளலாம்.
 • வேர்ல்டு வைட் எமர்ஜென்சி கேர் படி உங்கள் காப்பீட்டு தொகையில் 50% வரையோ அல்லது அதிகபட்சமாக ரூபாய் 20 லட்சம் வரையும் நீங்கள் மருத்துவ காப்பீட்டின் வழியாக மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவினை பெற்றுக் கொள்ளலாம். 
 • காப்பீட்டுத் தொகை 10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் கூடுதலாக பின் வரும் நோய்களுக்கு தீவிர சிகிச்சைக்கான ரைடரை  குறைந்த பிரீமியம் தொகையை பெற்றுக்கொள்ளலாம். 
 • புற்றுநோய்க்கான சிகிச்சை
 • கொரானரி ஆர்டரி பைபாஸ் அறுவை சிகிச்சை
 • இதயத்தின் வாழ்வு பழுதானால் அதை சரிசெய்ய அறுவை சிகிச்சை
 • நரம்பு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள்
 • மாற்று உறுப்புக்கான சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை
 • எலும்பு மஜ்ஜை  ட்ரான்ஸ்ப்ளான்ட் 
 • ஆவோர்டா க்ராஃப்ட் சர்ஜரி
 • பல்மனரி ஆர்ட்டரி க்ராஃப்ட் சர்ஜரி 

அப்பல்லோ ம்யூனிச் ஆப்டிமா ரெஸ்டோர்

இந்த திட்டம் தனித்துவமான ஒரு ரெஸ்டோர் பலனை வழங்குகிறது. உங்கள் பாலிசி காலம் ஒருவேளை முடிவடைந்துவிட்டால் இந்தத் திட்டத்தின் கீழ் ஆட்டோமேட்டிக்காக அது ரீ-இன்ஸ்டேட் ஆகிவிடும். மேலும் இதில் கூடுதலான பல ரைடர்கள் உடன் வருகிறது. அனைத்தும் உங்களுக்கு நீண்ட காலத்திற்கு பாதுகாப்பைக் கொடுக்கும். 

இந்த காப்பீடு தனிநபர் காப்பீடாகவும் குடும்பநல காப்பீடாகவும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 

சிறப்பு அம்சங்கள்

 • நாலாயிரத்துக்கும் அதிகமான நெட்வொர்க் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு நீங்கள் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்
 • காப்பீட்டு தொகை 5 லட்சம் அல்லது அதற்கு மேலாக இருந்தால் மருத்துவ பரிசோதனைக்கு ரூபாய் 5000 காப்புறுதி வழங்கப்படும்
 • ஒரே ஆண்டில் இரண்டு முறை கிளைம்கள் இல்லாமல் இருந்தாள், காப்பீட்டுத் தொகை நூறு சதவிகிதம் வரை அதிகமாகும் வசதி உள்ளது
 • பாலிசிதாரர் நோய்வாய்ப்பட்டிருக்கும் காரணமாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க முடியாமல் போனால், மருத்துவரின் ஆலோசனையின் படி வீட்டிலேயே வைத்து மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்யும் பட்சத்தில் அந்த செலவுகளுக்கு காப்புறுதியில் கவரேஜ் உள்ளது
 • ஒவ்வொரு முறை புதுப்பிக்கும் பொழுது 8% வரை தள்ளுபடி வழங்கப்படும்

ஆப்ஷனல் கவரேஜ் 

 • புற்றுநோய்க்கான சிகிச்சை
 • கொரானரி ஆர்டரி பைபாஸ் அறுவை சிகிச்சை
 • இதயத்தின் வாழ்வு பழுதானால் அதை சரிசெய்ய அறுவை சிகிச்சை
 • நரம்பு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள்
 • மாற்று உறுப்புக்கான சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை
 • எலும்பு மஜ்ஜை  ட்ரான்ஸ்ப்ளான்ட் 
 • ஆவோர்டா க்ராஃப்ட் சர்ஜரி
 • பல்மனரி ஆர்ட்டரி க்ராஃப்ட் சர்ஜரி 
 • மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பாக ஆகும் மருத்துவ செலவுகள் மற்றும் மருத்துவமனை இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு மருத்துவ செலவுகள், ஆம்புலன்ஸ் செலவுகள் போன்றவற்றில் காப்புறுதி உண்டு. 
 • ஒருவேளை உங்கள் மருத்துவரின் ரிப்போர்ட்டில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் குறிப்பிட்ட நோய்க்கான சிறப்பு மருத்துவரை ஆலோசித்து உங்கள் மீண்டும் ஒரு முறை டயாக்னோஸிஸ் செய்து கொள்ளலாம். 
 • 24 மணி நேரத்திற்குள் பெறப்படும் அனைத்து டே கேர் சிகிச்சைகளுக்கும் காப்புறுதி உள்ளது.
 • எமர்ஜென்சி ஆம்புலன்ஸ் கவர் - காப்பீட்டு தொகை 10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் இந்த கவரேஜ் இப்படி இரண்டரை லட்சம் வரை நீங்கள் க்ளைமாக ஒவ்வொரு முறை மருத்துவ சிகிச்சையின் போதும் பெற்றுக் கொள்ளலாம். 

அப்பல்லோ ம்யூனிச் ஈஸி ஹெல்த்

இந்த காப்பீட்டு நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு நோய்க்கான சிகிச்சையாக இருந்தாலும்  அதன் சிகிச்சைக்கு ஆகும் மொத்த தொகையும் காப்புறுதியில் பெற்றுக்கொள்ளலாம். 

சிறப்பு அம்சங்கள்

 • 24 மணி நேரத்திற்குள் முடிக்கப்படும் 144 சிகிச்சைகளுக்கு காப்புறுதி உள்ளது. இந்த சிகிச்சைகள் பெரும்பாலும் தொழில்நுட்ப கருவியின் உதவியுடன் மிக விரைவாக வழங்கப்படும். உதாரணம் கேட்டராக்ட், ஆஞ்சியோகிராபி மற்றும் டான்சில். 
 • நீங்கள் உங்களின் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் பணமில்லாமல் மருத்துவ சிகிச்சையை மேற் கொள்வதற்கு அனைத்து வசதிகளையும் இந்த நிறுவனம் உங்களுக்காக வழங்கியிருக்கிறது. 
 • எந்த ஒரு நோய்க்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு நெட்வொர்க் மருத்துவமனைகளில் நீங்க சிகிச்சை எடுத்து இருந்தாலும் அதன் சம்பந்தப்பட்ட அனைத்து செலவுகளுக்கும் பணமில்லாமல் மருத்துவ வசதியை இந்த நிறுவனம் உங்களுக்காக வழங்குகிறது.
 • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கு முன்பு 60 நாட்கள் வரை ஆகும் மருத்துவ செலவுகளும், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்த பிறகு 90 நாட்களுக்கு ஆகும் மருத்துவச் செலவுகளுக்கும் காப்புறுதியில் கவரேஜ் உண்டு. இந்த செலவுகளை நீங்கள் க்ளைம் செய்து ரீஇம்பர்ஸ்மென்ட் ஆக பெற்றுக் கொள்ளலாம். 
 • ப்ரீமியம் செலுத்துவதில் எந்த பின்னடைவும் இல்லாமல் நீங்கள் ஒழுங்காக செலுத்தி வந்தால் அதற்கான பல சலுகைகள் உண்டு.
 • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவுகளில், மாற்று உறுப்பை தருபவருக்கு ஆகும் மருத்துவச் செலவுக்கும் காப்புறுதி உண்டு. 
 • உங்களுக்கு அருகில் இருக்கும் நெட்வொர்க் மருத்துவமனைக்கோ அல்லது நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனைக்கோ நீங்கள் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சென்றதற்கு ஆகும் செலவுக்கும் காப்புறுதி உண்டு.

அப்பல்லோ ம்யூனிச் தனி நபர் காப்பீட்டு திட்டங்கள்

அதிகரித்துக் கொண்டு வரும் மருத்துவ செலவுகளில் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்க, தகுந்த சமயத்தில் முறையான சிகிச்சை பெற இந்த காப்பீட்டு திட்டம் உதவும்.நாடு முழுவதும் 800 நகரங்களில் உள்ள 4,500 நெட்வொர்க் மருத்துவமனைகளில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். 

எந்த மாதிரியான மருத்துவ செலவுகள் காப்புறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது?

 • தினமும் 3 ஆயிரம் ரூபாய் வரை கேஷ் 
 • குழந்தை பிறந்தால் குழந்தை பிறப்பிற்கு ஆகும் செலவை ரீஇம்பர்ஸ்மென்ட்டாக பெற்றுக்கொள்ளலாம். 
 • மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு ஏழு நாட்கள் தாண்டினால் அதற்கான சிறப்பு காப்புறுதி பணமாக பெற்றுக் கொள்ளலாம். 
 • பல்வேறு வகையான மருத்துவ செலவுகளுக்கு தினமும் குறிப்பிட்ட அளவு தொகையை இந்த காப்பீடு திட்டத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 
 • தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் தேவை ஏற்பட்டால் அதற்கான பணம் உங்களுக்கு இந்த காப்பீட்டில் கிடைக்கப்படும். இந்த சலுகை 15 நாட்கள் வரை அனுமதிக்கப்பட்டால் மட்டுமே உண்டு. அதற்கு மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் அதற்கு நீங்கள்தான் பணம் செலுத்த வேண்டும். 
 • 24 மணி நேரத்தை தாண்டாத எந்தவிதமான டே கேர் சிகிச்சை களை, அதிகபட்சமாக ஆறு வகை சிகிச்சைகளுக்கு பணமாக காம்பன்சேஷன் உண்டு. 
 • டெய்லி கேஷ் ஒரு வருடத்தில் 90 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் (மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சமயத்தில்)
 • ஒருவேளை ஒருவருக்கு மேலாக விபத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சை தொகை பத்து நாட்கள் வரை சிகிச்சைக்கு வழங்கப்படும். 

அப்பல்லோ ம்யூனிச் ஆப்டிமா ப்ளஸ்

இந்த திட்டம் அனைத்து வகையான மருத்துவ செலவுகளுக்கும் காப்புறுதி அளிக்கிறது. இது பாலிசிதாரர் ஓய்வு பெறும் நேரத்தில் ஆக்டிவ் ஆகிறது! 

எந்த மாதிரியான மருத்துவ செலவுகள் காப்புறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது?

 • இந்த காப்பீடு திட்டம் பாலிசிதாரர் ஓய்வு பெறும் வயதை நெருங்கும் பொழுது, அனைத்து வகையான தீவிர நோய்களுக்கான காப்புறுதியை வழங்குகிறது.
 • இதற்கு வெயிட்டிங் பீரியட் என்று எதுவுமே இல்லை. இந்த தீவிர சிகிச்சைக்கும் பாலிசிதாரருக்கு மருத்துவர் சிகிச்சையோ அல்லது மொத்தமாக காப்பீடு தொகையை நோய் கண்டறியும் சமயத்தில் வழங்கப்படும்.
 • குழந்தை பிறந்த 91 நாட்கள் முதல் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியை பெற்றுக் கொள்ளலாம். 
 • மருத்துவ சிகிச்சை பெறும் சமயத்தில் அறை தேர்வு செய்ய எந்த கட்டுப்பாடும் இல்லை. 
 • 24 மணி நேரத்திற்குள் முடிக்கப்படும் 144 சிகிச்சைகளுக்கு காப்புறுதி உள்ளது. இந்த சிகிச்சைகள் பெரும்பாலும் தொழில்நுட்ப கருவியின் உதவியுடன் மிக விரைவாக வழங்கப்படும். உதாரணம் கேட்டராக்ட், ஆஞ்சியோகிராபி மற்றும் டான்சில். 
 • நீங்கள் காப்பீட்டுத்திட்டத்தில் இரண்டு நபரோ அல்லது அதற்கு மேலாகவோ சேர்த்தால் உங்களுக்கு 10 சதவிகித தள்ளுபடி வழங்கப்படும். 
 • தொடர்ந்து பாலிசியை புதுப்பித்துக் கொண்டே வந்தால் முழு காப்புறுதியும் நூறு வயது வரை கிடைக்கும். 

அப்பல்லோ ம்யூனிச் ஆப்டிமா வைட்டல்

இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் மிகவும் பிரத்தியேகமாக, தீவிர நோய்களுக்கான காப்புறுதியை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில உடல்நல குறைபாடுகள் மற்றும் நோய்கள் உங்களின் மொத்த சேமிப்பையும் இழக்க வைத்து சொத்துக்களையும் இழக்க வைக்கும் நிலைக்கு கொண்டு வந்து விடும். அந்த அளவுக்கு உங்களுக்கு சிகிச்சைக்கு பணம் தேவைப்படும். மாதிரியான சிக்கலான நோய்களுக்கு அதிகமாக பணம் செலவிட வேண்டி நேரும் நிலைமைக்கு இந்த காப்பீட்டு திட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. எளிதாக சொல்வதென்றால் கூடுதலாக ஆகும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான காப்புறுதியினை நீங்கள் இந்த காப்பீடு திட்டம் வழியாக பெற்றுக் கொள்ளலாம். 

எந்த மாதிரியான மருத்துவ செலவுகள் காப்புறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது? 

 • அல்சைமர் நோய், இறுதிநிலை நுரையீரல் வியாதி, மூளை சர்ஜரி, நிரந்தரமான பக்கவாதம், கேன்சர், கிட்னி செயல் இழப்பு, கோமா ஆகிய தீவிர நோய்களுக்கான காப்புறுதியை உங்களுக்கு இந்த திட்டம் வழங்குகிறது. 
 • உங்களுக்கு தீவிர நோய் இருப்பது கண்டறியப்பட்டால் உங்களுக்கு எந்த ஒரு நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தாமல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த மருத்துவ காப்பீடு நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. 
 • ஒருவேளை உங்களுக்கு குறிப்பிட்ட நோய்க்கான சிறப்பு மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டால் அதையும் இந்த காப்பீட்டின் கீழ் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 
 • ஒரு வருடத்திற்கு அல்லது தொடர்ந்து சில வருடங்களுக்கு முன் நீங்கள் கிளைம் எதுவும் செய்யாமல் இருந்தால் உங்களுக்கான காப்பீட்டு தொகை அதிகரிக்கும். நன்மையை பெற நீங்கள் ஒவ்வொரு வருடமும் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். 
 • 4500 நெட்வொர்க் மருத்துவமனைகளில் எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் பணம் இல்லாமல் இந்த சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

அப்பல்லோ ம்யூனிச் எனர்ஜி ப்ளான்

இந்தியா இந்த நோய்க்கு தலைநகர் என்று குறிப்பிடும் வண்ணம் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நீரிழிவு நோய்க்கு இந்த காப்பீட்டு திட்டம் காப்புறுதி அளிக்கிறது. நீரிழிவு நோய் பல்வேறு வகையான துன்பங்களையும் சரியாக கவனிக்காமல் விட்டால் பல உடல்நலம் குறைபாடுகளையும் வர வைக்கும். அதற்கான மருத்துவ சிகிச்சைக்கான காப்புறுதியை நீங்கள் இந்த திட்டத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 

எந்த மாதிரியான மருத்துவ செலவுகள் காப்புறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது? 

 • இந்த பிரத்தியேகமான காப்பீட்டு திட்டம் நீரிழிவு மற்றும் அதன் சம்பந்தமாக ஏற்படும் நோய்களுக்கான காப்பீடு அளிக்கிறது
 • ஒரு குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சை பெறுவதில் வெயிட்டிங் பீரியட் எதுவும் இல்லை
 • இந்த நிறுவனம் வழங்கும் உடல் நல மேம்பாட்டு ப்ரொக்ராமில்  சேர்ந்து கொண்டால் உங்களுடைய பிரீமியம் தொகையில் 25% தள்ளுபடி செய்யப்படும். நீங்கள் ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உங்களுடைய உடல் நிலையை மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டே வந்தால் உங்களுக்கு அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்படும். இது உங்களுடைய பாலிசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு பிரீமியம் தொகையில் தள்ளுபடி ஆகவோ அல்லது வேறு வகையில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு இருக்கும்.
 • மருத்துவ பரிசோதனைக்காக நீங்கள் செலுத்திய பணத்தை உங்களுக்கு நடத்தப்பட்ட டெஸ்டிற்கு பிறகு நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 

இந்த திட்டம் இரண்டு வகையில் வழங்கப்படுகிறது

o சில்வர் பிளான் - இந்த திட்டத்தில் உங்களுடைய மருத்துவ பரிசோதனைக்கு ஆகும் செலவுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

o கோல்ட் பிளான் – திட்டத்தில் உங்களுடைய உடல் மருத்துவ பரிசோதனைக்கு ஆகும் செலவுகளை காப்பீட்டில் பெற்றுக்கொள்ளலாம். 

 • மருத்துவ ஆலோசனைக்கான சார்ஜஸ் மருந்துகள் பல் சிகிச்சை மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட் சம்பந்தப்பட்ட செலவுகள் மற்றும் பல இதர மருத்துவ செலவுகளுக்கு நீங்கள் காப்புறுதியில் பெற்றுக் கொள்ளலாம். 
 • உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் உடல்நலக் குறைபாடுகளுக்கு தொடர்ந்து காப்பீடு வழங்கும். இந்த காப்பீடு திட்டத்தில் மருத்துவமனையை தங்கும் சமயத்தில் அறை வாடகை, நர்சிங் செலவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவு செலவுகள், சிறப்பு மருத்துவருக்கான ஆலோசனை செலவுகள், அனஸ்தீசியா செலவுகள், ரத்தம், ஆக்சிஜன், அறுவை சிகிச்சைக்கான செலவுகள் ஆகிய அனைத்தும் காப்புறுதியில் சேர்த்துக் கொள்ளப்படும். 
 • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கு முன்பாக 30 நாட்கள் வரையில் ஆகும் மருத்துவ சிகிச்சைக்கும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 60 நாட்கள் வரையில் ஆகும் மருத்துவ சிகிச்சைக்கும் ஆன செலவுகளை காப்புறுதியில் பெற்றுக் கொள்ளலாம். 
 • 182 டே கேர் சிகிச்சைகளுக்கு காப்புறுதி உண்டு. 
 • அவசரகால ஆம்புலன்ஸ் செலவு, மாற்று உறுப்பு வழங்குபவருக்கு ஆகும் மருத்துவ செலவு, பல இதர மருத்துவம் செலவுகளுக்கான காப்புறுதி உண்டு. 

அப்பல்லோ ம்யூனிச் மேக்ஸிமா ப்ளான்

ஒரு சில உடல்நலக் குறைபாடுகளுக்கு அல்லது மைனரான நோய்களுக்கு சில மருத்துவ காப்பீடுகள் காப்புறுதி அளிக்காது. அதைப்போன்ற நோய்களுக்கு இந்தத் திட்டம் காப்புறுதி வழங்குகிறது. உதாரணமாக ஒவ்வாமை, கண் பார்வை குறைபாடு பல் சிகிச்சை, வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் போன்றவை

எந்த மாதிரியான மருத்துவ செலவுகள் காப்புறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது? 

 • உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் போது ஏற்படும் மருத்துவச் செலவுகள் காப்புறுதி 
 • உங்களுடைய அனைத்து மருந்து பில்களுக்கு செட்டில் செய்கிறது
 • ஏதாவது ஒரு குறிப்பிட்ட நோயை கண்டறிந்தால் அதற்குரிய மருத்துவ பரிசோதனை அளிக்கப்படுகிறது
 • காப்பீட்டு திட்டத்தில் பலன்களை பெற எந்த கட்டுப்பாடும் இல்லை. 
 • பாலிசி பெறுவதற்கு முன்பாகவே உங்களுக்கு ஏதேனும் உடல் நலக்குறைபாடு அல்லது நோய் இருந்தால், பாலிசி வாங்கிய முதல் நாளிலிருந்தே அதற்கான காப்பீடு வழங்கப்படும். அதாவது உங்களுக்கு முன்னரே இருக்கும் உடல்நல குறைபாட்டிற்கும் நீங்கள் காப்பீட்டில் கவரேஜ் பெற்றுக் கொள்ளலாம். 
 • 18 வயதில் இருந்து 44 வயதுவரை இருக்கும் பாலிசிதாரர் வருடாந்திர மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளும் வசதி உள்ளது. பாலிசிதாரருக்கு 45 வயதுக்கு மேற்பட்டு இருந்தால் பாலிசி வாங்கிய முதல் வருடத்திற்கு பிறகு இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம்.
 • வெளிப்புற நோயாளியாக இருந்து சிகிச்சை பெறும் எந்த ஒரு உடல்நல குறைபாட்டிற்கும் காப்பீட்டில் கவரேஜ் உள்ளது
 • வெளிப்புற நோயாளியாக இருந்து பெறப்படும் சிகிச்சையோ அல்லது மருத்துவ ஆலோசனையும் அதிகபட்சமாக ஆறு முறை வரை நீங்கள் காப்பீட்டில் கவரேஜ் பெற்றுக் கொள்ளலாம்.
 • நார்மல் டெலிவரி மற்றும் சிசேரியன் டெலிவரி ஆகிய இரண்டிற்குமே உங்களுக்கு காப்பீட்டில் கவரேஜ் உள்ளது. மேலும் குழந்தை பிறந்த 90 நாட்களுக்குள் குழந்தைக்கு ஏதாவது உடல் நலக் கோளாறு ஏற்பட்டால் அதற்காக ஆகும் மருத்துவ சிகிச்சையும் நீங்கள் காப்பீட்டில் பெற்றுக்கொள்ளலாம். பிறந்த குழந்தைக்கு நீங்கள் முழுவதுமாக காப்பீட்டு சேர்த்துக் கொள்வது என்பது உங்களின் விருப்பம். 
 • கூடுதலான தீவிர நோய்களுக்கான காப்புறுதி, ஆரம்ப நிலையிலிருக்கும் நோய்களுக்கும் தீவிர நோய்களுக்கும் வழங்கப்படுகிறது. 

அப்பல்லோ ம்யூனிச் ஐகேன் கேன்சர் இன்ஷூரன்ஸ்

இந்த காப்பீட்டின் திட்டத்தின் பெயரே இது எந்த உடல்நல குறைபாட்டிற்கும் வழங்கப்படுகிறது என்பதை கூறி விடும். உயிர்க்கொல்லி நோயான கேன்சருக்கு, கூடுதலான மருத்துவக் காப்பீட்டை அதிகபட்ச பலன்களும் நன்மைகள் ஓடும் இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனை முழுமையாக பெற நீங்கள் முழு காப்பீட்டையும் எந்த கட்டுப்பாடும் இல்லாதவாறு பார்த்து பெற்றுக் கொள்ளுங்கள். இந்த திட்டம் உங்களை கேன்சரில் இருந்து மீட்டெடுக்க உதவும். 

இந்த பிளான் இரண்டு வகையாக வழங்கப்படுகிறது 

ஐகேன் எஸன்ஷியல்: இது கேன்சர் நோய்க்கு சிகிச்சை எடுக்கும் பொழுது ஏற்படும் மருத்துவச் செலவு அனைத்தையும் காப்புறுதியில் கவர் செய்கிறது. 

ஐகேன்‌ என்ஹான்ஸ்: இந்தத் திட்டத்தின் மேலே கூறியிருக்கும் படி அனைத்து வகையான காப்புறுதியும் அதனுடன் கூடுதலான பலன்களையும் வழங்குகிறது. (அதிகபட்சமாக இரண்டு முறை வரை மொத்தமாக ஒரு தொகை வழங்கப்படும், க்ரிட்டிக்கேர் பென்ஃபிட், ஃபேமிலி கேர் பெனிஃபிட்) 

எந்த விதமான பலன்களை இந்த காப்பீடு கவரேஜ் செய்கிறது?

 • மேலே கூறியுள்ள இரண்டு வகை திட்டங்களிலுமே அனைத்து வகையான கேன்சருக்கும் காப்புறுதி உள்ளது
 • முன்கூட்டியே அனுமதி பெற்றுக் கொண்டு, நெட்வொர்க் மருத்துவமனைகளில் எதில் வேண்டுமானாலும் பணம் செலுத்தாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். 
 • அட்வான்ஸ்ட் கவர் கீமோதெரபி ரேடியோ தெரபி மாற்று உறுப்பு சிகிச்சை (கேன்சர் சம்பந்தப்பட்டது) மற்ற அறுவை சிகிச்சைகள் (தசை உறுப்பு நீக்கம்) ஆகியவற்றிற்கு காப்புறுதி அளிக்கிறது. 
 • அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளுக்கும், டே கேர் சிகிச்சைகளுக்கும் மற்றும் உள்நோயாளிகளாகவும் புராணங்களாகவும் இருந்து கொண்டு பெரும் சிகிச்சைகளுக்கும் உங்களின் காப்பீட்டு தொகையின் அடிப்படையில் காப்புறுதி கிடைக்கும். 
 • அவசர காலத்தில் ஏற்படும் ஆம்புலன்ஸ் செலவுகளுக்கு அதற்கான காம்பன்சேஷன் வழங்கப்படும். 
 • ஒருவேளை மருத்துவர்களின் பரிசோதனைப்படி பாலிசிதாரருக்கு கேன்சர் இல்லை என்ற ரிப்போர்ட் வந்தால் அதற்காக ஆகும் அனைத்து மருத்துவ பரிசோதனை செலவுகளுக்கும் காப்புறுதியில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். பாலிசிதாரர் ஆண்டுக்கு இருமுறை ரூபாய் ஆயிரம் வரையில்  காம்பன்சேஷன் பெற்றுக் கொள்ளலாம். 

என்ஹான்ஸ் ப்ளானுக்கு மட்டும்:

 • அடிப்படை பாலிசி கவரேஜ் உடன் இந்த கூடுதலான காப்புறுதி அட்வான்ஸ்ட் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவுகிறது. இம்யூனோ தெரபி, டார்கெட்டட்‌ தெரபி, ஹார்மோனல் தெரபி போன்றவை.
 • குடும்ப நல நன்மைகள் திட்டத்தின் கீழ் காப்பீட்டு தொகை 100 சதவிகிதம் முழுமையாக பாலிசிதாரருக்கு வழங்கப்படும். அவ்வாறு மொத்தமாக தொகையை வழங்குவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டில் ஏதாவது ஒன்றால் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.
  • கேன்சர் முற்றிய நிலை
  • கேன்சர் இரண்டாம் முறையாக கண்டறியப்பட்டு இருக்கும் நிலை
 • காப்பீட்டு தொகையில் 60% மொத்தத் தொகையாக வழங்கப்படும். பாலிசிதாரருக்கு கேன்சர் இருப்பது கண்டறியப் பட்டாலும் அல்லது கேன்சல் சம்மந்தப்பட்ட ஏதாவது தீவிரமான ஒரு நோய் கண்டறியப்பட்டால் இந்த ஆப்ஷன் கொடுக்கப்படும். 

அப்பல்லோ ம்யூனிச் ஐகேன் கேன்சர் ஃபார் விமென்

பல்வேறு புற்றுநோய் பலதரப்பட்ட மக்களை பாதிப்பு அடையச் செய்தாலும் பெரும்பாலும் பெண்களே புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்காகவே பாதிக்கப்படும் பெண்களுக்காக இந்த பிரத்தியேகமான காப்புறுதி திட்டம் கேன்சர் சிகிச்சைக்கு உதவுகிறது.

இந்த திட்டம் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 1.  ஸ்டாண்டர்ட் பிளான் - இந்த திட்டம் கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டால் அதை நீக்குவதற்கு ஆகும் அனைத்து சிகிச்சைக்கும் மருந்துகள் உட்பட காப்புறுதி அளிக்கிறது.
 2. அட்வான்ஸ்ட் ப்ளான் - அடிப்படையான டான்சர் சிகிச்சைக்கான காப்புறுதியை தவிர்த்து கூடுதலாக அட்வான்ஸ்ட் சிகிச்சைக்கான காப்புறுதியை அளிக்கிறது. 

எந்த மாதிரியான மருத்துவ செலவுகளுக்கு இந்த திட்டத்தில் அனுமதி உண்டு? 

 • பாலிசிதாரருக்கு தனக்கு கேன்சர் இருப்பதில் சந்தேகம் இருந்தால் காப்பீட்டின் உதவியுடன் கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் சந்தித்து இரண்டாம் முறையாக பரிசோதனை செய்து நோய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இதற்காகவே இருக்கும் சிறப்பு மருத்துவர்கள் அட்வான்ஸ்ட் பரிசோதனை முறைகளை உபயோகப்படுத்தி கேன்சர் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்வார்கள்.
 • வழக்கமாக கேன்சர் கண்டறியப்பட்டால் அதற்கு கொடுக்கப்படும் சிகிச்சைகளான கீமோதெரபி ரேடியேஷன் அறுவை சிகிச்சை செய்து கேன்சர் கட்டியை நீக்குதல் போன்றவற்றிற்கு காப்புறுதி உண்டு
 • மருத்துவமனையில் கேன்சர் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் முன்பாகவே இந்த சிகிச்சைக்காக ஆகும் செலவுகளுக்கு (30 நாட்கள் வரை) காப்புறுதியில் கவரேஜ் உண்டு.
 • மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்த பிறகு 60 நாட்கள் வரை ஆகும் மருத்துவ செலவுகளுக்கு காப்புறுதி.
 • ரூபாய் 2000 வரை ஒவ்வொரு முறையும், வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு செல்ல அவசரகால ஆம்புலன்ஸ் செலவுக்கு வழங்கப்படும். 
 • காப்புறுதி காலம் இம்முறை ஒவ்வொரு ஆண்டும் வருடத்திற்கு இரண்டு முறை யாக முழுவதுமான உடல்நல பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்த பரிசோதனை கேன்சர் நோய் முற்றிலும் உடலில் இருந்து நீங்கி விட்டதா அல்லது மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை கண்டறிவதற்காக. 

அட்வான்ஸ்ட் ப்ளான்

 • தற்போது கேன்சருக்கு என்று வடிவமைக்கப்பட்டிருக்கும் அனைத்து வகையான நவீன சிகிச்சைகளை இந்த திட்டத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
 • அடிப்படையான கேன்சருக்கு வழங்கப்படும் காப்புறுதி தவிர்த்து கூடுதலான சிகிச்சையும் இந்த பிளானில் உண்டு 

o ப்ரோட்டான் பீம் தெரபி 

o இம்யூனோ தெரபி

o பர்சனலைஸ்ட் டார்கெட்டட் தெரபி 

o ஹார்மோன் தெரபி / என்டோக்ரைன் மேனிபுலேஷன்

o போன் மேரோ ட்ரான்ஸ்ப்ளான்டேஷன் 

அப்பல்லோ ம்யூனிச் டெங்கு கேர்

டெங்கு காய்ச்சல் அவ்வப்போது குறிப்பிட்ட இடங்களில் பரவி நூற்றுக் கணக்கான மக்களின் உயிரை கொன்று விட்டு போகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான பிரத்தியேகமான காப்பீடாக இந்த பாலிசியை அப்பல்லோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி டெங்கு காய்ச்சலுக்கு தேவையான மருத்துவத்தை உள் நோயாளியாகவோ அல்லது வெளி நோயாளியாக இருந்துகொண்டு காப்பீட்டு கொள்கைகளின்படி பெற்றுக்கொள்ளலாம்.

எந்த மருத்துவ செலவுகள் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்?

 • இந்த பாலிசியை நீங்கள் வாங்க மருத்துவப் பரிசோதனைகள் தேவையில்லை
 • கோ பேமென்ட் ஆப்ஷன் உள்ளது. 
 • பாலிசியின் பலன்களை முழுவதுமாக பெறுவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை
 • மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுது அரை வாடகையும் காப்புறுதியில் சேர்க்கப்பட்டுள்ளதால் உயர்தர வசதியுள்ள தனி சிகிச்சை அறையை கூட பாலிசிதாரர் தேர்வு செய்யலாம். 
 • டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் ஓபிடி செலவுக்காக ரூபாய் 10000 வழங்கப்படும். 
 • வீட்டிலிருந்தபடியே டெங்கு இங்கு காய்ச்சலுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டாலும் அதற்கு ஆகும் அனைத்து செலவுகளையும் நீங்கள் காப்பீட்டில் பெற்றுக்கொள்ளலாம்.
 • இத்திட்டத்தின்படி அதற்கான பலன்களை பெற உங்களுக்கு எந்த வெயிட்டிங் பீரியட்டும் தேவையில்லை. 
 • மருந்து வாங்கியதற்கான பெண்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான விழிகள் மட்டும் ரிப்போர்ட்கள் மருத்துவரின் ஆலோசனை ஆகியவற்றிற்கு ஆகும் செலவுகளுக்கும், வெளி நோயாளியாக இருந்து பெறப்படும் மருத்துவ சிகிச்சைக்கும் காப்பீட்டில் அவரைச் உள்ளது. 
 • அனைத்து வயதினருக்கும் ஒரே பிரீமியம் தொகை. காப்பீட்டு தொகை ரூபாய் 50000 ஆக இருந்தால் பிரீமியம் தொகை ரூபாய் 444. காப்பீட்டு தொகை ரூபாய் ஒரு 100000 ஆக இருந்தால் இனியும் தொகை ரூபாய் 578. 
 • மருத்துவமனையில் தங்கும் அறையை பகிர்ந்து கொண்டு தங்கினாலும் அதற்கும் காப்புறுதி உண்டு.
 • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கு முன்பும் பின்பும் 15 நாட்கள் வரை ஆகும் மருத்துவ செலவிற்கு காப்புறுதி உண்டு. 

அப்பல்லோ ம்யூனிச் ஆப்டிமா சீனியர்

இது ஒரு முழு உடல் நலக் காப்பீட்டு திட்டம். இதில் அடிப்படையான அனைத்து நோய்களுக்கும் காப்புறுதி வழங்கப்படும். 64 வயதுக்கு மேல் இருக்கும் அனைவரும் இந்த காப்பீட்டு திட்டத்தை வாங்கி வாழ்நாள் முழுவதும் எந்தவிதக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.

எந்த மாதிரியான மருத்துவ செலவுகள் காப்புறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது? 

 • நிறுவனத்தின் குறிப்பிடப்பட்டுள்ள நெட்வொர்க் மருத்துவமனையில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் அந்த சிகிச்சைக்கு பணமும் செலுத்த தேவையில்லை.
 • நோய் கண்டறிவதில் பாலிசிதாரருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் இரண்டாம் முறையாக சிறப்பு மருத்துவர்களின் உதவியோடு மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு நோய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இதற்கு உதவ  பிரத்தியேகமான சிறப்பு மருத்துவ குழு உள்ளது.
 • மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்பு தானம் செய்பவருக்கான செலவுகள், டாமிசிலரி செலவுகள் மற்றும் அவசரகால ஆம்புலன்ஸ் செலவுகள். 
 • 140 டே கேர் சிகிச்சைகள் – காடராக்ட், பல் மருத்துவம், ஆன்ஜியோ போன்ற ஒரு சில மணி நேரங்கள் தேவைப்படும் சிகிச்சைகளுக்கும் காப்புறுதி உண்டு.
 • மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அதற்கு முன்பாக 30 நாட்கள் வரை ஆகும் மருத்துவ சிகிச்சையும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு 60 நாட்கள் வரை ஆகும் மருத்துவ சிகிச்சையும் காப்புறுதியில் கவரேஜ் பெற்றுக்கொள்ளலாம். 
 • க்ளைம் இல்லாத ஒவ்வொரு ஆண்டும் 5 சதவிகிதம் தள்ளுபடி இந்த பலனை பெற பாலிசிதாரர் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். 

அப்பல்லோ ம்யூனிச் காப்பீட்டுத் திட்டத்திற்கான எலிஜிபிலிட்டி சார்ட்

             

திட்டத்தின் பெயர்

குறைந்தபட்ச நுழைவு வயது

அதிகபட்ச நுழைவு வயது

காப்பீட்டு தொகை / டெய்லி கேஷ்

உறுப்பினர்களின் எண்ணிக்கை

ப்ரீமியம் செலுத்தும் விதங்கள்

ப்ரீமியம் செலுத்தும் காலம்

தனி நபர் மற்றும் குடும்ப காப்பீடு

ஹெல்த் வேலட்

5 வருடங்கள்/ 91 நாட்கள் (for குழந்தைகள்)

65 வருடங்கள்

ரூ 3 லட்சங்கள் to ரூ 50 லட்சங்கள்

தனிநபர்s மற்றும் குடும்ப ஃப்ளோட்டர்: 6 உறுப்பினர்

வருடம்/ மாதம்

ஒரு வருடம்/ இரண்டு வருடங்கள்

ஆப்டிமா ரெஸ்டோர்

5 வருடங்கள்/ 91 நாட்கள் (for குழந்தைகள்)

65 வருடங்கள்

ரூ 3 லட்சங்கள் to ரூ 50 லட்சங்கள்

தனிநபர்: 6 உறுப்பினர் குடும்ப ஃப்ளோட்டர்: 6 உறுப்பினர் (2 பெரியவர்கள் & 5 குழந்தைகள்)

வருடம்/ மாதம்

ஒரு வருடம்/ இரண்டு வருடங்கள்

ஈசி ஹெல்த்

5 வருடங்கள்/ 91 நாட்கள் (for குழந்தைகள்)

65 வருடங்கள்

For தனிநபர்: ரூ 1 to 15 லட்சங்கள் For குடும்ப: ரூ 3 லட்சங்கள் to ரூ 50 லட்சங்கள்

தனிநபர்: 6 உறுப்பினர் (4 பெரியவர்கள் & 5 குழந்தைகள்) குடும்ப ஃப்ளோட்டர்: 6 உறுப்பினர் (maximum of 5 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள்)

வருடம்/ மாதம்

ஒரு வருடம்/ இரண்டு வருடங்கள்

டே 2 டே கேர் - சில்வர்

For குழந்தைகள்: 91 நாட்கள் to 25 வருடங்கள் For பெரியவர்கள்: 18 வருடங்கள்

65 வருடங்கள்

Not Specified

தனிநபர்: 6 உறுப்பினர் குடும்ப ஃப்ளோட்டர்: 4 உறுப்பினர்

வருடம்/ மாதம்

ஒரு வருடம்/ இரண்டு வருடங்கள்

ஆப்டிமா சூப்பர்

5 வருடங்கள்/ 91 நாட்கள் (For குழந்தைகள்)

65 வருடங்கள்

ரூ 5 லட்சங்கள்/ 7 லட்சங்கள்/ 10 லட்சங்கள்

தனிநபர்: 6 உறுப்பினர் குடும்ப ஃப்ளோட்டர்: 4 உறுப்பினர் (maximum of 2 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள்)

வருடம்/ மாதம்

ஒரு வருடம்/ இரண்டு வருடங்கள்

தனிநபர் மட்டும்

ஆப்டிமா கேஷ்

5 வருடங்கள்/ 91 நாட்கள் (for குழந்தைகள்)

65 வருடங்கள்

ரூ 1000/ 2000/ 3000

கிடையாது

வருடம்/ மாதம்

ஒரு வருடம்/ இரண்டு வருடங்கள்

ஆப்டிமா ப்ளஸ்

5 வருடங்கள்/ 91 நாட்கள் (for குழந்தைகள்)

65 வருடங்கள்

ரூ 5 லட்சங்கள்

6 உறுப்பினர் (maximum of 4 பெரியவர்கள் மற்றும் 5 குழந்தைகள்)

வருடம்/ மாதம்

ஒரு வருடம்/ இரண்டு வருடங்கள்

ஆப்டிமா வைட்டல்

18 வருடங்கள்

65 வருடங்கள்

ரூ 1 லட்சங்கள் to ரூ 50 லட்சங்கள்

6 உறுப்பினர் (maximum of 4 பெரியவர்கள் மற்றும் 5 குழந்தைகள்)

வருடம்/ மாதம்

ஒரு வருடம்/ இரண்டு வருடங்கள்

எனர்ஜி ப்ளான்

18 வருடங்கள்

65 வருடங்கள்

ரூ 2/ 3/ 5/ 10. 15/ 20/ 25/ 50 லட்சங்கள்

ஒருவருக்கு மட்டுமே உறுப்பினர்

வருடம்/ மாதம்

ஒரு வருடம்/ இரண்டு வருடங்கள்

மேக்சிமா ப்ளான்

5 வருடங்கள்/ 90 நாட்கள் (for குழந்தைகள்)

65 வருடங்கள்

ரூ 3 லட்சங்கள்

ஒருவருக்கு மட்டுமே தனிநபர்

வருடம்/ மாதம்

ஒரு வருடம்/ இரண்டு வருடங்கள்

ஐகேன் கேன்சர் இன்ஷூரன்ஸ்

5 வருடங்கள்

வாழ்நாள் முழுவதும்

ரூ 5/ 10. 15/ 20/ 25/ 50 லட்சங்கள்

ஒருவருக்கு மட்டுமே தனிநபர்

வருடம்/ மாதம்

ஒரு வருடம்/ இரண்டு வருடங்கள்

ஐகேன் கேன்சர் இன்ஷூரன்ஸ் ஃபார் விமன்

18 வருடங்கள்

வாழ்நாள் முழுவதும்

ரூ 5/ 10. 15/ 20 லட்சங்கள்

ஒருவருக்கு மட்டுமே - பெண் தனிநபர்

வருடம்/ மாதம்

ஒரு வருடம்/ இரண்டு வருடங்கள்

டெங்கு ப்ளான்

91 நாட்கள் to 25 வருடங்கள் (for குழந்தைகள் 18 வருடங்கள் (for பெரியவர்கள்)

65 வருடங்கள்

ரூ 50,000 to 1 lakh

6 உறுப்பினர் (அதிகபட்சமாக of 4 பெரியவர்கள் மற்றும் a அதிகபட்சம் of 5 குழந்தைகள்)

வருடம்/ மாதம்

ஒரு வருடம்/ இரண்டு வருடங்கள்

சீனியர் சிட்டிசன்களுக்கு மட்டும்

ஆப்டிமா ரெஸ்டோர்

61 வருடங்கள்

வயது வரம்பு இல்லை

ரூ 2/ 3/ 5 லட்சங்கள்

 

 

 

ஆப்ஷனல் ரைடர்ஸ் ஆஃப் அப்பல்லோ ம்யூனிச் ஹெல்த் இன்சூரன்ஸ் 

அப்பல்லோ ம்யூனிச் க்ரிட்டிக்கல் அட்வான்டேஜ் ரைடர்

இந்த கூடுதலான கவரேஜை தேர்வு செய்யும் பொழுது பாலிசிதாரர் பல்வேறு நன்மைகளை பெறலாம். உலகம் முழுவதிலும் உள்ள எந்த நெட்வொர்க் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு ஆகும் செலவுகள், மருத்துவ சிகிச்சைக்கு இன்று நேரும் பயண செலவுகள் மருந்து செலவுகள் அட்டெண்டர் செலவுகள் மற்றும் சிறப்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவதற்கு ஆகும் செலவு ஆகிய அனைத்திற்கும் காப்புறுதி உண்டு. 

இந்த ரைட்டரில் பின்வரும் நோய்கள் காப்புறுதியில் உண்டு 

 • கேன்சர்
 • இதய வால்வு பழுதானால் அதற்கு மாற்று சிகிச்சை
 • ஆவோர்டா க்ராஃப்ட் சர்ஜரி 
 • போன் மேரோ ட்ரான்ஸ்ப்ளான்டேஷன்
 • கல்லீரல் வழங்குபவரின்  டோனர் செலவுகள்
 • நரம்பியல் அறுவை சிகிச்சை
 • பல்மனரி ஆர்ட்டரி 
 • கொரானரி ஆர்ட்டரி பைபாஸ் சர்ஜரி 

இதன் நன்மைகள்: 

 • அதிகபட்சமாக 5 நாட்களுக்கு வரை உள்நோயாளியாக வைத்து பெறப்படும் சிகிச்சைகளுக்கு காப்புறுதி உள்ளது. இதில் ஐசியு செலவுகள், மருந்து செலவு, நர்சிங், அனஸ்தீசியா,  அறை வாடகை, ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர், ஆபரேஷன் தியேட்டர் சார்ஜ், அறுவை சிகிச்சை சார்ஜ், மருந்து,  என்று அனைத்து மருத்துவ சிகிச்சையை சார்ந்த செலவுக்கும் காப்புறுதி உண்டு.
 • பாலிசிதாரர் நோயிலிருந்து முழுமையாக விடுபட மருத்துவ சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு ஆகும் மருத்துவச் செலவுகளுக்கும் காப்புறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நேரத்தில் ஆகும் பயண செலவுகளுக்கான காப்புறுதி
 • நோய் கண்டறியப்பட்ட விதத்திலோ அல்லது நோய் இருக்கிறதா இல்லையா என்று சந்தேகம் இருந்தாலோ சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நோய்க்கு என்ற ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரிடம் மீண்டும் ஒருமுறை அஞ்சல் செய்து நோய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியலாம்.
 • மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின்போது நோயாளிக்கு மட்டுமல்லாமல் அவருடன் வரும் அவரை கவனித்துக் அவருக்கு ஆகும் செலவுகளுக்கு காப்புறுதி. 

அப்பல்லோ ம்யூனிச் க்ரிட்டிக்கல் இல்னஸ் பெனிஃபிட் ரைடர்

இந்த கூடுதல் கவரேஜ் உங்களின் அடிப்படை திட்டத்துடன் சேர்க்கப்படும். இந்தத் திட்டம் எட்டு வகையான தீவிரமான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சையும் காப்புறுதியும் வழங்கும்.

இந்த ரைட்டரில் பின்வரும் நோய்கள் காப்புறுதியில் உண்டு 

 • கேன்சர்
 • இதய வால்வு பழுதானால் அதற்கு மாற்று சிகிச்சை
 • ஆவோர்டா க்ராஃப்ட் சர்ஜரி 
 • போன் மேரோ ட்ரான்ஸ்ப்ளான்டேஷன்
 • கல்லீரல் வழங்குபவரின்  டோனர் செலவுகள்
 • நரம்பியல் அறுவை சிகிச்சை
 • பல்மனரி ஆர்ட்டரி 
 • கொரானரி ஆர்ட்டரி பைபாஸ் சர்ஜரி 

இதன் நன்மைகள்

 • அதிகபட்சமாக 30 நாட்களுக்கு உள்நோயாளியாக வைத்து பெறப்படும் சிகிச்சைகளுக்கு காப்புறுதி உள்ளது. இதில் ஐசியு செலவுகள், மருந்து செலவு, நர்சிங், அனஸ்தீசியா,  அறை வாடகை, ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர், ஆபரேஷன் தியேட்டர் சார்ஜ், அறுவை சிகிச்சை சார்ஜ், மருந்து,  என்று அனைத்து மருத்துவ சிகிச்சையை சார்ந்த செலவுக்கும் காப்புறுதி உண்டு.
 • பாலிசிதாரர் நோயிலிருந்து முழுமையாக விடுபட மருத்துவ சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு ஆகும் மருத்துவச் செலவுகளுக்கும் காப்புறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நேரத்தில் ஆகும் பயண செலவுகளுக்கான காப்புறுதி
 • நோய் கண்டறியப்பட்ட விதத்திலோ அல்லது நோய் இருக்கிறதா இல்லையா என்று சந்தேகம் இருந்தாலோ சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நோய்க்கு என்ற ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரிடம் மீண்டும் ஒருமுறை அஞ்சல் செய்து நோய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியலாம்.
 • மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின்போது நோயாளிக்கு மட்டுமல்லாமல் அவருடன் வரும் அவரை கவனித்துக் அவருக்கு ஆகும் செலவுகளுக்கு காப்புறுதி. வெளிநாட்டில் மேற்கொள்ளப்படும் உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்கும் இந்த நன்மை உண்டு.
 • அப்பல்லோ ம்யூனிச் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் எவையெல்லாம் சேர்க்கப்படாதது
 • எய்ட்ஸ் அல்லது ஹெச்ஐவியால் உருவாகும் நோய்கள்
 • பிறப்பின் பொழுதே இருக்கும் குறைபாடுகள், மனநிலை சரியில்லாமல் போவதால் ஏற்படும் குறைபாடுகள், அழுக்கு படுத்துவதற்கான அறுவை சிகிச்சைகள், கொஞ்சம் உடல் எடை குறைப்பதற்கு சம்பந்தமான அனைத்து சிகிச்சைகளும்
 • போர் வெடிகுண்டு விபத்து கெமிக்கல் விபத்து ஆகியவற்றினால் ஏற்படும் காயங்களுக்கும் உடல்நலக் குறைபாட்டுக்கும் காப்புறுதி கிடையாது
 • மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஏதாவது ஒரு மருந்து எடுத்துக்கொண்டு அதன் பக்கவிளைவாக வேறு ஏதாவது ஒரு நோயையோ உடல்நல குறைபாட்டையோ வரவழைத்துக் கொண்டால் அதற்கு காப்புறுதி கிடையாது.
 • சிகரெட் மது மற்றும்போதைப் பொருட்கள் பயன்படுத்தி அதனால் ஏற்படும் நோய்களுக்கு உடல்நலக் குறைபாடுகளுக்கு காப்புறுதி இல்லை. 

மேல் கூறியஅனைத்துமே அப்பல்லோ நிறுவனம் வழங்கும் அனைத்து வகையான மருத்துவ காப்பீட்டில் சேர்க்கப்படாத நோய்கள் மற்றும் உடல் நலக் கோளாறுகள் ஆகும். ஒரு சில நிலைமைகளுக்கும் ஒரு சில நோய்களுக்கும் சிறப்பு பாலிசிகளை இந்த நிறுவனம் வடிவமைத்து இருக்கிறது அதைப் பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள நீங்கள் நிறுவனத்தின் பணியாளர்களை அணுகலாம் அல்லது இணையதளத்தை பார்க்கலாம்.  

அப்பல்லோ ம்யூனிச் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்களின் பலன்கள் 

 • க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோ 

எப்பொழுதுமே ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாங்குவதற்கு முன்பு, நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோவை செக் செய்ய வேண்டும். இது நிறுவனத்தின் நம்பகத்தன்மையை தெரியப்படுத்தும். அப்பல்லோ ம்யூனிச் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் 95% க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோவை மெயின்டெயின் செய்து, மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனமாக இருக்கிறது. 

 • திருப்திகரமான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 

அப்பல்லோ ம்யூனிச்சின் மிகப்பெரிய வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் இரண்டாவது மிகப்பெரிய காரணம் – வாடிக்கையாளர்களின் திருப்தி தான். ஏறக்குறைய 85% வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் சேவைகளிலும் காப்பீட்டு திட்டங்களின் பயன்களிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பாலிசிகள் புதுப்பிக்கபடுகிறது. தற்போது, அப்பல்லோ ம்யூனிச், இந்தியா முழுவதும் உள்ள லட்சகணக்கான வாடிக்கையாளர்கள்களுக்கு பல்வேறு மருத்துவ காப்பீடுகளை வழங்கி செயல்பட்டு வருகிறது.  

 • பிராண்ட் பலம் மற்றும் மார்கெட் வேல்யூ

அப்பல்லோ ம்யூனிச் நிறுவனம், சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டு, இரண்டு பெரிய வணிக நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக உடல்நலக் காப்பீட்டு தொழிற்துறையில் கால் பதித்து இருக்கிறது. இந்த துறையில், உலக அளவில் முன்னோடியாக விளங்கி வருகிறது. நீங்கள் பாலிசியை வாங்கினால், இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டில் சிகிச்சை தேவைப்பட்டாலும்  பெற்றுக்கொள்ளலாம். 

 • சுறுசுறுப்பான கஸ்டமர் சர்வீஸ் 

நீங்கள் எந்த மருத்துவ காப்பீடை வாங்கினாலும், கஸ்டமர் சர்வேசை கணக்கில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். அப்பல்லோ ம்யூனிச் நிறுவனம், இதை கருத்தில் எடுத்து பாலிசிதாரர்களுக்கு ஒவ்வொரு க்ளைமையும் அதிகபட்சமாக முப்பது நிமிடத்திற்குள் செட்டில் செய்ய முனைப்பாக செயல்பட்டு வருகிறது. 

 • பணம் செலுத்தாமல் மருத்துவ சிகிச்சைக்கு 2 மணி நேரத்துக்குள் அப்ரூவல் 

நிறுவனத்தில் உள்ள நெட்வொர்க் மருத்துவமனைகளில் எங்கு வேண்டுமானாலும், பணம் எதுவும் செலுத்தாமல் பாலிசிதாரர் தேவையான சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். இது மிகப்பெரிய நன்மையாகும். அப்பல்லோ ம்யூனிச் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கணக்குகள் படி, கிட்டத்தட்ட 90% கிளைம்கள் பணமில்லா கிளைம்களாக (மருத்துவ சிகிச்சையாக) செட்டில் செய்யப்படுகிறது. நீங்கள் குறிப்பிட்ட மருத்துவமனையில் தேவையான தகவல்கள் தந்த பிறகு, அதிகபட்சமான இரண்டு மணி நேரத்திற்குள் உங்கள் சிகிச்சைக்கு அப்ரூவல் வழங்கப்பட்டுவிடும். 

 • ஆரோக்யமாக இருந்தால் போனஸ் வழங்கப்படும் 

உடல் அரோக்கியத்தின் முக்கியத்துவத்தை இதை விட விளக்கி விட முடியாது. மருத்துவ பாலிசிகள் உதவினாலும், உடல்நலம் நன்றகா இருப்பது அவசியம். அப்பல்லோ ம்யூனிச் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் நீங்கள் ஆரோக்யமாக இருந்தால் அதற்கான வெகுமதிகளை பணமாக வழங்குகிறது. மது அருந்தாமல், புகையிலை உட்கொள்ளாமல் இருந்தால், உங்களுக்கு இந்த பலன்கள் கிடைக்கும். மேலும் ப்ரீமியம் செலுத்துவதிலும் உங்களுக்கு தள்ளுபடிகள் உண்டு.   

 • கூடுதலான காப்புறுதிக்கு ரைடர் வசதிகள் உண்டு 

அப்பல்லோ ம்யூனிச் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும் ஒவ்வொரு காப்பீடு திட்டத்திலும், கூடுதலான பலன்களை நன்மைகளை பெற ரைடர் வசதிகள் உண்டு, இது உங்களுக்கும் உங்களுக்கும் மேம்பட்ட பாதுகாப்பாய் அளிக்கிறது. 

 • வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக்கொள்ளும் வசதி   

அப்பல்லோ ம்யூனிச் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும் ஒவ்வொரு காப்பீடு திட்டத்திலும், சிறப்பு அம்சமாக நீங்கள் வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக்கொள்ளும் வசதி இருக்கு. ஒவ்வொரு ஆண்டின் பலன்களும் அடுத்த வருடத்தில் சேர்க்கப்படும்.  

 • வரி விலக்கு 

பாலிசிதாரர் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 25,000 வரை வருமான வரி விலக்கு பெறலாம். இது வணிகம் செய்பவர் மற்றும் ஒரு நிறுவனத்தில் பணியாளராக இருப்பவர் ஆகிய இருவருக்கும் பொருந்தும். 

 • போர்ட்டபிலிட்டி 

நீங்கள் வேறு நிறுவனத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாங்கியிருந்தாலும் அதை அப்பல்லோ ம்யூனிச் நிறுவனத்தின் பாலிசியாக மாற்றும் வசதி உள்ளது. பாலிசி ரின்யூவலுக்கு முப்பது நாட்களுக்கு முன்பு இதற்கான விண்ணப்பத்தை வங்கி ஃபில் செய்து அனுப்ப வேண்டும். நிறுவனம் உங்கள் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து 7 – 15 நாட்களுக்குள் உங்களுக்கு பதில் அளிக்கும்.

அப்பல்லோ ம்யூனிச் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் கேல்குலேஷன்

 • பாலிசிதாரரின் வயது: ஒரு பாலிசியின் ப்ரீமியம் தொகையை பாலிசி எடுப்பவரின் வயதே தீர்மானிக்கிறது. அப்பல்லோ ம்யூனிச் நிறுவனம் குறைந்த அளவிலேயே ப்ரீமியம் தொகையை ஃபிக்ஸ் செய்துள்ளது. இது ஒவ்வொரு ஏஜ் க்ரூப்பிற்கும் பொருந்தும். ஆனால் டெங்கு பாலிசிக்கு மட்டும் அனைவருக்கும் ஒரே ப்ரீமியம் தொகை.
 • புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர் / மருத்துவ ஹிஸ்டரி – ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னே, பாலிசி வாங்கும் அனைவரும் தங்களுடைய உடல்நிலையை விளக்கி சொல்ல வேண்டும். அப்பலோ ம்யூனிச் நிறுவனம் எந்த ஒளிவுமறைவும் இன்றி அனைத்து விவரங்களையும் பெற்றுக்கொள்ளும். இது பின்னாளில் சிகிச்சையோ அல்லது க்ளைமோ மேற்கொள்ளும் போது எந்த சிக்கலும் இல்லாமல் இருக்க உதவும். புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்க்கு ப்ரீமியம் தொகையில் அதிக அளவில் தள்ளுபடி கிடைக்கும்.
 • பாலிசியில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை - ஒரு பாலிசியில் நீங்கள் எத்தனை குடும்ப உறுப்பினர்களை சேர்க்கிறீர்களோ அதன் பொருட்டே பிரீமியம் தொகை உறுதிப்படுத்தப்படும். அப்பல்லோ ம்யூனிச் உடல்நலக் காப்பீட்டு திட்டங்களில் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது வரவேற்கிறது.  அதற்காக ஒவ்வொரு பாலிசியிலும் குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்களோ அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் பிரீமியம் தொகையில் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
 • காப்புறுதி தொகை -  ஒரு லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை உங்களுக்கு தேவையான அளவுக்கு நீங்கள் காப்புறுதி தொகையை முடிவு செய்யலாம்.  அனைத்து வகையான திட்டத்திற்கும் அப்பல்லோ மியூனிச் நிறுவனம் உங்களின் தேவைக்கு ஏற்ப பல ரேஞ்சுகளில் காப்புறுதி தொகையை பல திட்டங்களில் வழங்குகிறது.  காப்புறுதி தொகையை நீங்கள் அதிகமாக இருக்குமாறு தேர்ந்தெடுத்தால் பிரீமியம் தொகையும் அதற்கேற்றவாறு அதிகமாகும்.  ஆனால் நீங்கள் தேர்வு செய்யும் பாலிசியின் காப்புறுதி தொகையும் பாலிசியின் அம்சங்களும் உங்களுக்கான நன்மைகளை  அதிகரிக்கும். அதிகப்படியான காப்புறுதி தொகையை நீங்கள் தேர்வு செய்தால் பெருகிக் கொண்டே வரும் மருத்துவ செலவை மிகவும் எளிதாக எதிர்கொள்ளலாம்.
 • ஆண் / பெண்:  நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொகை பாலிசிதாரர் ஆண் அல்லது பெண் என்ற அடிப்படையிலும் மாறுபடும்.  ஒரு சில குறிப்பு காலத்தில் பாலிசி பெண்ணாக இருந்தால் பிரீமியம் தொகை குறைவாக இருக்கும்.  இந்த வசதி பெண்களுக்கான உடல் நலத்தை பாதுகாப்பதற்காகவும் அவர்கள் நோய்வாய்ப்பட்டால் தேவையான மருத்துவத்தை வழங்குவதற்காகவுமே உருவாக்கப்பட்டிருக்கிறது.  மேலும் பெண்களுக்கான உடல்நல காப்பீடு திட்டங்கள் மிகவும் குறைவான அளவிலேயே பெற்றுக்கொள்ளலாம்.  இது பெண்களின் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன நலத்தையும் மேம்படுத்துவதற்காக பாதுகாப்பதற்காக வழங்கப்படுகிறது.
 • அப்பல்லோ ஹெல்த் பிளான்கள் வகைகள் -  அப்பல்லோ மியூனிச் பல்வேறு விதமான உடல் நலக் காப்பீட்டு திட்டங்களை தனிநபர் முதல் சீனியர் சிட்டிசன்கள் வரை அனைவருக்கும் பொருந்துமாறு வடிவமைத்து வழங்கிக் கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு திட்டத்திற்கும் பிரீமியம் தொகை வேறுபடும்.  உதாரணமாக 34 வயதுடைய ஒரு ஆண் ஒரு மருத்துவ காப்பீட்டை பெற்றுக் கொண்டால், (அப்பல்லோ ம்யூனிச் ஆப்டிமா ரெஸ்டோர்) அதில் அவரின் மனைவியையும் இணைத்தால் , ரூபாய் 5 லட்சத்துக்கான காப்புறுதி தொகைக்கு  பிரீமியம் ரூபாய் 1 5 6 7 6 ஆகும். இதே தொகைக்கு இதே திட்டத்தை குடும்பநல திட்டமாக மாற்றினால் அதற்கான பிரீமியம் ரூபாய் 11,802/- ஆகும்.

அப்பல்லோ மியூனிச் ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளைம் ப்ராசஸ்

 • உங்களின் கையொப்பமிட்ட கிளைம் விண்ணப்ப படிவத்தை அனைத்து விவரங்களையும் நிரப்பி அனைத்து மருத்துவ ரிப்போர்ட் கைகளையும் இணைத்து ட்ரீட்மெண்ட் முடிந்த 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
 • ஒருவேளை நீங்கள் அனைத்து டாக்குமென்ட்களையும் அனுப்ப தவறினால் உங்களுக்கு கிளையும் கிடைத்த ஏழு நாட்களுக்குள் ஒரு டிஃஷியன்சி லெட்டர் அனுப்பப்படும்.
 • நீங்கள் கிளைம் பெறுவதற்கு அனைத்து டாக்குமென்ட்களையும் அனுப்பிய பிறகு நிறுவனம் அனைத்தையும் சரிபார்த்த பிறகு உங்களுக்கு 30 நாட்களுக்குள் கிளைம் செய்யப்படும்.
 • அதுமட்டுமின்றி ஒரு செட்டில்மென்ட் கடிதமும் அனுப்பப்படும்.

பணமில்லாமல் கிளைம் ப்ராசஸ் செய்யும் முறை

 • எமர்ஜென்ஸி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் சமயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நீங்கள் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பி விட வேண்டும்.  ஒருவேளை முன்கூட்டியே மருத்துவ சிகிச்சை பெற  முடிவு செய்திருந்தால் அதற்கு 48 மணி நேரத்திற்குள் நீங்கள் விவரங்களை நிறுவனத்திற்கு அனுப்பிவிட வேண்டும்.
 • நீங்கள் அனுப்பிய கிளைம்யின் வேண்டுகோள் உடனே சரி பார்க்கப்பட்டு உங்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை அளிக்க நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் வழங்கப்படும்.  அந்த கடிதத்தை வைத்துக் கொண்டு நீங்கள் நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமல் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
 • போதிய அளவு டாக்குமெண்டுகள் அனுப்பாமல் இருந்தால் அதையும் மருத்துவமனை மேனேஜ்மென்ட் இடம் தெரிவிக்க வேண்டும்.

எந்த டாகுமென்டுகள் எல்லாம் கிளைம் செட்டில்மென்ட் செய்வதற்கு  கட்டாயமாக அனுப்ப வேண்டும்

 1. க்ளைம் இன்டிமேஷன் விண்ணப்பம் -  முழுவதுமாக நிரப்பப்பட்டு உங்கள் கையெழுத்திடப்பட்டது
 2. அனைத்து ஒரிஜினல் பில்கள் மற்றும் ரசீதுகள் மருத்துவ விவரங்கள் -  மருத்துவ பரிசோதனை பில்கள் டாக்டரின் மருந்துகள் ப்ரிஸ்க்ரிப்ஷன் போன்றவை
 3. நோயாளியின் முழு மருத்துவ அறிக்கைகள்,  மருத்துவ ஹிஸ்டரி சம்பந்தப்பட்ட விவரங்கள்,  மருத்துவரின் குறிப்புகள் மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட விவரங்கள்
 4. மருத்துவமனையில் அனுமதி பெறுவதற்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை பற்றிய குறிப்புகள் பரிசோதனைகள் போன்ற விவரங்கள்
 5. பாலிசிதாரரின் அடையாள அட்டை மற்றும்  தங்கம் இடத்திற்கான சான்றிதழ்
 6. டி பி ஏ வழங்கும் செட்டில்மென்ட் லெட்டர் அல்லது காப்பீட்டு நிறுவனம் வழங்கும் பணமில்லா மருத்துவ சிகிச்சை
 7.  விபத்துக்கான க்ளைம் என்றால் அதற்கான போலீஸ் ரிப்போர்ட்டையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.

அப்பல்லோ ஹெல்த் ம்யூனிச் ரின்யூவல் ப்ராசஸ்

ஆன்லைன் அப்பல்லோ ஹெல்த் ம்யூனிச் ரின்யூவல் ப்ராசஸ்

 • பாலிசியில் பெற்ற பிறகு நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் பாலிசி தேதி அந்தச் சின்ன  முடிவுறும் சமயத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம்.
 • பாலிசியை புதுப்பிக்க பாலிசிதாரர் அப்பல்லோ மியூனிச் இணையதளத்தில் சென்று பத்து இலக்க எண்ணை பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
 • தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வரும் பாலிசிகளுக்கு 12 இலக்க பாலிசி எண் வழங்கப்படும்.

நீங்கள் பின்பற்ற வேண்டிய கண்டிஷன்ஸ்

 • இந்த நிறுவனம் பாலிசியை புதுப்பித்து அழகாக உங்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கும்.
 • அனைத்து அப்பல்லோ நிறுவன உடல்நலக் காப்பீட்டு திட்டங்களிலும்,  பிரீமியம் தொகை புதுப்பிக்கும்போது பாலிசிதாரர்களின் வயது மற்றும் உடல் நலனை கணக்கில் எடுத்துக் கொண்டு மாறுபடும்.
 • இதை தவிர்த்து கூடுதலான எந்த ஒரு லோடிங்கும் இல்லை
 • குறிப்பிட்ட தேதிக்குள் உங்களால் காப்பீடை புதுப்பிக்க முடியவில்லை என்றால் அப்பல்லோ நிறுவனம் உங்களுக்கு முப்பது நாட்கள் வரை க்ரேஸ் நாட்களாக வழங்கும்.

அப்பல்லோ ஹெல்த் இன்ஷூரன்ஸ் ரிவ்யூ

மருத்துவ செலவுகளுக்கு நிதி பாதுகாப்பு வழங்குவதிலும், எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ சிகிச்சைக்கும், நோய் உண்டானால் அதற்கு மருத்துவ பாதுகாப்பும்  வழங்குவதில் முதன்மையாக இருக்கிறது, அப்பல்லோ ம்யூனிச் ஹெல்த் இன்ஷூரன்ஸ்.  அதிகரித்து கொண்டு வரும் மருத்துவ செலவுகளில் இருந்து உங்களை இந்த பாலிசிகள் காப்பாற்றும்.

நாடு முழுவதும் உள்ள 4,650 மருத்துவமனைகளில், அனைத்து இடங்களிலும் விரைவாக க்ளைம்கள் செட்டில் செய்யப்பட்டு கஸ்டமர்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்கிறது.  

- / 5 ( Total Rating)