Sehwag PX
பஜாஜ் அலையன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்

#Virukipolicy | T&C*

பிரீமியத்தை ஒப்பிடுக

பெயர்
தொலைபேசி எண்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

பிற தகவல்களை உள்ளிடவும்

கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)
மின்னஞ்சல்
நகரம்

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி, பஜாஜ் ஃபின்ஸெர்வ் லிமிடெட் மற்றும் அலையன்ஸ் எஸ்.ஐ நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும். பஜாஜ் ஃபின்ஸெர்வ் லிமிடெட் 74% பங்கும் மீதமுள்ள 26%  பங்கு அலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. மே 2, 2001 இல் இந்த காப்பீடு நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ சான்றிதழ் பெற்றது. பொது காப்பீடு, உடல்நலம், மோட்டார், பயணம் போன்ற காப்பீடுகளை வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பெய்ட்-அப் மூலதனம் சுமார் ரூ 1.10 பில்லியன் ஆகும்.

மார்ச் 31, 2010 அன்று, பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம், அதன் வரிக்கு முந்தைய இலாபமாக ரூபாய் 1.80 பில்லியன் பதிவு செய்துள்ளது. நான்கே ஆண்டுகளில், வரிக்கு முந்தைய இலாபம் 1 பில்லியனைக் கடந்த ஒரே தனியார் காப்பீட்டு நிறுவனமாக மாறியது. வரிக்குப் பிந்தைய இலாபம் ரூ .1.21 பில்லியனாக இருந்தது, கடந்த ஆண்டை விட 27% அதிகம். நிறுவன தலைமையகம் புனேயில் உள்ளது மற்றும் இந்தியா முழுவதிலும் 200 க்கும் மேற்பட்ட நகரங்களில் அலுவலகங்கள் உள்ளது.

பஜாஜ் அலையன்ஸ் வழங்கும் உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்கள் எப்போதுமே, என்றாவது உங்களுக்கு ஏற்படும் மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும்,  உயர்ந்து கொண்டே செல்லும் செலவினங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். தற்செயலான கண்டறியப்படும் நோய்க்கு தேவையான அதிகமாக செலவாகும் அவசர சிகிச்சை கட்டணங்கள் மற்றும் ஆக்சிடன்ட்டல் எமர்ஜன்சி மருத்துவ செலவுகள், ஆகியவற்றில் இருந்து இந்த காப்பீடு திட்டங்கள் உங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் நிதி பாதுகாப்பு வழங்கும்.

உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மருத்துவ நெருக்கடிகளில் இந்த காப்பீடு திட்டங்கள் நிதியுதவி அளிக்கிறது. பஜாஜ் அலையன்ஸ் வழங்கும் பல திட்டங்களில் சிறந்த ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் குறிப்பிட்ட தேவைகள் பொருந்தும் திட்டங்களையும் எளிதாக பெற முடியும்.

ஹெல்த் இன்சூரன்சின் முக்கியத்துவம்

இன்றைய காலகட்டத்தில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் காப்பீடு திட்டங்கள் மிகவும் அவசியம். உடல்நலக் காப்பீட்டைப் பெறுவது ஏன் முக்கியம், உடல்நலக் கப்பீட்டைப் பற்றி கேள்விப்பட்டாலும் உங்கள் மனதில் தோன்றும் சில அடிப்படை கேள்விகளைக் கேட்க வேண்டும். இந்திய மக்கள் இதற்கான முக்கியத்துவத்தை புரிந்துகொள்கிறார்கள். இன்றைய உலகில் இது மிகவும் தேவையாகிவிட்டது. இதுவரை நீங்கள் எந்தவொரு காப்பீட்டு திட்டமும் வாகி இருக்காவிட்டால், உங்கள் வருமானத்தில் அதற்கான சிறிது தொகையை முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்.

உடல் ஆரோக்கியம், உடல்நல பராமரிப்பு செலவு, மருத்துவ சிகிச்சைகள் என  எல்லாமும் தினம் தினம் உயர்ந்து வருகிறது என்று உங்களுக்குத் தெரியும். விலை உயர்ந்த சிகிச்சை தேவைப்படும் எந்தவொரு கடுமையான நோய்க்கு சிகிச்சை பெறுவது என்பது உங்கள் சேமிப்பிலிருந்து மட்டுமே செலவு செய்ய முடியும் என்று வரும் போது கடினமாக இருக்கும். உங்கள் சேமிப்பில் இது பெரிய பாதிப்பை உருவாக்கும். பாதுகாப்பாய் இருப்பதற்கும், அதிக செலவாகும் சிகிச்சையிலிருந்து நீங்களே உங்களைப் காத்துக் கொள்வதற்கும், ஆரோக்கியமான உடல்நலக் காப்பீட்டு திட்டத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். எந்தவொரு மருத்துவ அவசரத்திற்கும் உங்களை தயார் செய்ய இதுவே சிறந்த வழி. எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்கு அவசர சிகிச்சை அல்லது தீவிர நோய் கண்டிருந்த நிலைக்கு, அந்த சூழ்நிலைக்கு உங்களை நாங்கள் தயார் செய்ய உதவுவோம். அதற்கு உடல்நலக் காப்பீடு சிறந்த வழிகளில் ஒன்றாகும். எந்தவொரு மருத்துவ அவசரத்திலும் உங்களுக்கு ஆதரவளிக்க இது இருக்கும். மருத்துவக் காப்பீடு அடிப்படையில் ஒரு ஆடம்பரமே அல்ல.

மெடிக்ளைம் என்ற பெயரில், இந்தியாவில் உடல்நலக் காப்பீடு பிரபலமாக உள்ளது. இது சிகிச்சையின் அனைத்து செலவினங்களையும் உள்ளடக்கும் அவசியமான, தேவையான பாதுகாப்பு வழங்குவதற்கான ஒரு சிறந்த வழி இதுவேயாகும். நீங்கள் மருத்துவமனையின் செலவுகள், எதிர்பாராமல் ஏற்பட்ட காயம் அல்லது ஏதேனும் நோய்கள் / வியாதிகளுக்கு சிகிச்சை செலவுக்காக இதை உபயோகப் படுத்தலாம். மருத்துவ காப்பீடுகளில், உங்கள் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள், மருத்துவ பரிசோதனைகள், இரத்த பரிசோதனைகள், டாக்டர் கட்டணம் போன்றவை உள்ளடங்கும்.

  • ஆம்புலன்ஸ் செலவு.
  • போஸ்ட் மருத்துவமனை செலவுகள் - டாக்டர் வருகைகள், நோய் கண்டறிதல் சோதனைகள், மருத்துவமனையில் பெறப்படும் மருந்துகள்.
  • மருத்துவமனையில் செலவுகள் - அறை கட்டணங்கள், அறுவை சிகிச்சை கட்டணங்கள், மருந்துகள், நோய் கண்டறிதல் சோதனைகள் போன்றவை.

சரியான உடல்நல காப்பீட்டுத் திட்டத்தை தேர்வு செய்வது எப்படி

எந்தவொரு மருத்துவ உடல்நல காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவதற்கும் முன்னர், உங்களுடைய தேவையைப் புரிந்து கொள்வது அவசியம். உங்கள் தேவைக்கேற்ப சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் வாங்க, நீங்கள் எந்தவொரு வியாதியும் கண்டறியப்படுவதற்கு காத்திருக்க வேண்டாம். இன்றே காப்பீடு வாங்கி புத்திசாலித்தனமாக செயல்படவும். உங்கள் உடல்நிலை நன்றாக இருந்தால் ப்ரீமியம் குறைவாக இருக்கும்.

நீங்கள் ஒரு உடல்நல காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவதற்கு முன்னர், நீங்கள் பணவீக்க வீதத்தை கருத்தில் கொள்ள வேண்டும். இது உங்களின் எதிர்கால தேவைகளுக்கு துல்லியமாக இருக்கும், மேலும் சிறந்தத் திட்டத்தை தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு மிகவும் உதவும். வாய்மொழித் தகவலை எப்போதும் நம்பாதீர்கள். மொத்த பாலிசியின் அம்சங்கள், உள்ளடக்கம், விலக்குகள் மற்றும் மற்ற தகவல்களையும் பாருங்கள். பாளிசியிப் ஆவணங்களை முழுமையாக வாசிப்பது நல்லது.

பஜாஜ் அலையன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்ஸ்

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி பல்வேறு வகையான உடல்நலக் காப்பீடுகளை  வழங்கி வருகிறது. நீங்கள் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப சரியான காப்பீட்டை தேர்வு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு, உங்களுக்கு ஏற்ற,  உடல்நலக் காப்பீட்டு திட்டத்தை பெறுவது மிகவும் நல்லது.

ஹெல்த் கார்ட் இன்சூரன்ஸ் பாலிசி

இது தனிப்பட்ட நபருக்கு முழுமையான உடல்நல பாதுகாப்பை வழங்குவதற்கான வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். இது உங்களது மருத்துவ, உடல்நலம் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நோய் அல்லது விபத்து ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் உட்பட அனைத்து செலவினங்களையும் உள்ளடக்கி காப்புறுதி அளிக்கும். மேலும் இதற்கு வரி விலக்கு சலுகையும் உண்டு.

ஹெல்த் கார்ட் ஃபாமிலி ஃப்ளோட்டர் ஆப்ஷன்

ஒரே ஒரு காப்பிட்டுத் திட்டத்தின் கீழ், நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கு  தேவையான அனைத்து ஹெல்த்கேர் தேவைகளையும் இந்த திட்டம் வழங்கும். இது, அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் காலங்களில் கூட கிட்டத்தட்ட அனைத்து மருத்துவ செலவினங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது.

பிரீமியம் பர்சனல் கார்ட் பாலிசி

பிரீமியம் பர்சனல் கார்ட் பாலிசி உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கு,  விபத்து காரணமாக ஏற்படும் உடல் காயம் அல்லது இறப்புக்கு, 10 லட்சம் முதல் 25 இலட்சம் வரை காப்பீட்டுத் தொகையை அளிக்கிறது.

ஹெல்த் இன்சூரன்ஸ் க்ரிடிக்கல் இல்னஸ்

மாரடைப்பு, புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு போன்ற பல நோய்களுக்கு காப்புறுதி வழங்குகிறது.

கூடுதல் கவனிப்பு

அடிப்படையில், இது ஒரு டாப்-அப் ப்ளான் போல. உங்கள் அடிப்படை காப்பீட்டுத் திட்டத்துடன் சேர்த்து, கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது.