பார்தி ஆக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மூத்த உறுப்பினர்)

1

2

கைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

இந்திய நிறுவனமான பார்தி AXA ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி (பார்தி ஆக்ஸா ஜி.ஐ.சி), பார்தி எண்டர்பிரைசஸ் மற்றும் அமெரிக்க நிறுவனமான, காப்பீட்டுத் துறையில் உலகில் முதன்மையில் வகிக்கும் ஆக்ஸா நிறுவனத்துடன் சேர்ந்து உருவான ஒரு கூட்டு நிறுவனமாகும். ஆகஸ்ட் மாதம் 2008 ஆம் ஆண்டு இந்த காப்பீட்டு நிறுவனம் நிறுவப்பட்டது, அதில் பார்தி 51% பங்குகளை வைத்திருக்கிறது, மேலும் ஆக்ஸா 49% பங்குகளை வைத்திருக்கிறது.

பார்தி நிறுவனத்தில், தற்போது இந்தியா முழுவதும் 87 கிளைகள் உள்ளன. பொதுக் காப்பீட்டு துறையில், அனைத்து வகையான காப்பீட்டு சேவையும் வழங்குகிறது. அதன் உடல்நலக் காப்பீட்டு பொருட்கள் இந்தியா முழுவதிலுமுள்ள மக்களுக்கு தேவையான நேரங்களில் மிகவும் தரமான மருத்துவ சேவைகளைப் பெற உதவுகின்றன.

உடல்நலக் காப்பீட்டின் அவசியம்

ஒருவர் எப்பொழுது உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று ஒருவருக்கும் தெரியாது. ஆரோக்கியமாக இருப்பது என்பது வாழ்வின் முக்கிய அம்சமாகும். ஆனால் இது மிகவும் நிச்சயமற்ற தன்மை கொண்டது. மேலும் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகும் போது, அந்த சூழ்நிலைகளில் முன்னேற்பாடுகள் இல்லாமல் இருப்பது,  பெரிதான நிதிப் பற்றாக்குறையையும், அதன் தொடர்பான கஷ்டங்களையும் விளைவிக்கும். ஹெல்த் இன்சூரன்ஸ் கவரில் உங்களுக்கு ப்ரீமியம் என்று நீங்கள் மிகவும் குறைந்த தொகையை மட்டுமே செலவிட வேண்டி இருக்கும். அந்த சிறிய தொகையே தேவை என்று வரும் பொழுது உங்களின் அனைத்து மருத்துவ செலவுகளுக்கும் உதவும்.

பாலிசி வைத்திருப்பவர் மற்றும் அந்த பாலிசியில் உள்ளடங்கிய குடும்ப உறுப்பினர்கள் எவருக்கேனும், பாலிசியில் குறிப்பிட்டுள்ள நோய்களின் பட்டியலில் உள்ள, உடல்நலக் கோளாறுகள் ஏதேனும் வந்தால், பாலிசி நடைமுறையில் இருக்கும்போது எந்த நேரத்திலும் காப்பீட்டாளரின் சிகிச்சைக்கான செலவினங்களை பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.

இந்த ப்ரைமரி நன்மையுடன், கூடுதலாக, வருமான வரி விலக்கும் கிடைக்கும்.

வருமான வரி செலுத்துபவருக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் நன்மைகள் 

வருமான வரிச் சட்டம் 1961, 80D பிரிவின் படி, உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் வாங்கியவர், வரி செலுத்துபவராக இருந்தால் வரிக்குட்பட்ட தொகையை விலக்காக பெறலாம். வரி செலுத்துபவர்கள் இந்த சலுகையை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் ஒரு உடல்நலக் காப்பீட்டை வாங்கினால், ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை வரி விலக்கு பெறுவார்கள். நீங்கள் வாங்கும் காப்பீட்டின் அளவு பொறுத்து, அதன் ப்ரீமியம் அளவு பொறுத்து, உங்களுக்கு விலக்கு கிடைக்கும்.

பார்தி ஆக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ் நன்மைகள்

 • IRDAI நிறுவனத்தின் உரிமம் பெற்றது.
 • வாடிக்கையாளர்களை மையப்படுத்திய, நிரூபிக்கப்பட்ட செயல்திறன்.
 • எந்த நேரமும் அவசர சேவல் மற்றும் அழைக்க, இலவச எண்கள்.
 • இலாபகரமான மற்றும் நிதி நிர்வாகத்தில் சிறந்த மேலாண்மையை பதிவு செய்திருக்கிறது
 • அனைத்து வகையான உடல்நலக் காப்பீட்டுத் திட்டம்
 • 4300க்கும் மேற்பட்ட இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் நெட்வொர்க்.
 • 1.3 மில்லியன் பாலிசிகள் வழங்கப்பட்டுள்ளன (மிக சமீபத்திய கணக்கெடுப்புப் படி).
 • 98.27% க்ளைம் செட்டில்மென்ட் விகிதம்.
 • நாடு முழுதும் தேர்ட்-பார்ட்டி நிர்வாகிகள் உள்ளனர்.
 • நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமல் மருத்துவம் செய்து கொள்ளலாம்.
 • ஆன்லைன் பிரசன்ஸ் மற்றும் ஆன்லைன் செயல்முறைகள்.
 • ஐஎஸ்ஓ 9001: 2008 மற்றும் ஐஎஸ்ஓ 27001: 2005இன் இரட்டை ஐஎஸ்ஓ சான்றிதழ்கள் பெற்றுள்ள நிறுவனம்

காப்பீடுகளின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்

 • தனிப்பட்ட முறையில் ஹெல்த் கவர் ப்ளான்ஸ்
 • தனிமனித மற்றும் குடும்ப காப்புறுதி திட்டங்கள் .
 • பிரத்யேக விருப்பங்கள் கொண்ட காப்புறுதி திட்டங்கள்
 • குறைந்தபட்ச காப்புறுதி தொகை ரூ. 2 லட்சம்.
 • அதிகபட்ச காப்புறுதி தொகை ரூ. 60 லட்சம்.
 • லைஃப்டைம் புதுப்பித்தல் அம்சம்.
 • எமர்ஜன்சி கவர்
 • க்ரிடிக்கல் இல்னஸ் கவர்
 • மருத்துவமனை செலவுகள்
 • டே-கேர் பராமரிப்பு செலவுகள்
 • வீட்டு மருத்துவமனை சிகிச்சை செலவுகள்
 • ஆம்புலன்ஸ் கட்டணம்
 • உறுப்பு தானம் வழங்கும் சிகிச்சை.
 • ப்ரீ மற்றும் போஸ்ட் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகள்
 • க்ளைம் இல்லாத ஆண்டுகளில் போனஸ்
 • ஃப்ரீ லுக் பீரியட்

பார்தி ஆக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி கிட் கன்டென்ட்ஸ்

பார்தி ஆக்ஸா, பாலிசி வாங்குவோர் மற்றும் பாலிசிதாரர்களாக மாறுகிற சந்தாதாரர்களுக்கு முழுமையான உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. அதனுடன் ஒரு பாலிசி கிட்டை வழங்குகிறது. பாலிசி கிட்டின் விவரங்கள் பின்வருமாறு.

பாலிசி ஆவணம் (பத்திரம் / டாக்குமென்ட்)

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி டாக்குமென்ட்டில் பாலிசி சம்மந்தப்பட்ட அனைத்தும் விரிவாக குறிப்பிடப் பட்டிருக்கும். மேலும், பின்வரும் விவரங்களும் அடங்கி உள்ளது.   

 • பாலிசி எண்
 • உறுப்பினர்களின் எண்ணிக்கை
 • ஒவ்வொரு உறுப்பினருக்கும் உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை
 • பாலிசியின் காலம்
 • பாலிசியில் உள்ளடங்கிய நோய்கள் / உடல்நலக் குறைவுகள்
 • பாலிசி ரைடர்ஸ் (ஏதாவது இருந்தால்)
 • உள்ளீடுகள் மற்றும் விலக்குகள்
 • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
 • ஸோனல் வாரியாக நிர்வாகிகளின் பட்டியல்
 • ஸோனல் வாரியாக இலவச அழைப்பு  எண்கள்
 • ஸோனல் வாரியாக நெட்வொர்க் மருத்துவமனைகளின் பட்டியல்

பாலிசி அட்டைகள்

உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களின் கிட்-இல், பாலிசியில் உள்ளடங்கிய எல்லா உறுப்பினர்களின் பாலிசி அட்டைகள் அவர்களின் பெயர்கள், பாலிசி எண்கள் மற்றும் மொத்த இலவச அவசர எண்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

பாரதி AXA உடல்நலக் காப்பீட்டு கோரிக்கை செயல்முறை

காப்புறுதியில் உள்ளடக்கப்பட்ட நோய்களுக்கான சிகிச்சையை, சோனல் தேர்ட்-பார்ட்டி நிர்வாகிகள் மூலம், பணம் செலுத்தாமல் நெட்வொர்க் மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ளலாம், அத்தியாவசியமான வசதிகளை மண்டல நிர்வாகிகளால் பெற்றுத் தர முடியும். சிகிச்சைகள் பெற, பாலிசிதாரர்கள் . சிகிச்சைகள் திட்டமிடப்பட்டிருந்தாலும், எந்தவொரு நெட்வொர்க்கில் உள்ள மருத்துவமனைகளிலிருந்தும், சம்பந்தப்பட்ட தேர்ட்-பார்ட்டில் நிர்வாகியை (டிபிஏ) அணுகினால் சிகிச்சைக்கு உடனேயே முன்னுரிமை வழங்கப்படும். அவசரகால சிகிச்சைக்கு TPA விடம் உடனேயே தெரிவிக்க வேண்டும். பணம் செலுத்தாமல் பெறப்படும் சிகிச்சைகள்,  நேரடியாக TPA மற்றும் நெட்வொர்க் மருத்துவமனையுடன் செயல்படுகிறது.

எங்கள் நெட்வொர்க் மருத்துவமனைகளில் பட்டியலிடப்படாத மருத்துவமனைகளில் பல முறை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அவ்வாறு நடந்தால், பாசிலி விதிப்படி, காப்பீடு பெற்ற நபர்கள் அல்லது உறுப்பினர்கள், தங்கள் சிகிச்சை பெற்றது தொடர்பான அனைத்து பில்களையும் சம்பந்தப்பட்ட TPAக்கு கோரிக்கை படிவத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்ப்பு செய்த பிறகு,. அனைத்தும் சரியாக இருந்தால் 21 நாட்களுக்குள் நீங்கள் க்ளைம் செய்த தொகை உங்களுக்கு தரப்படும். க்ளைம் நிராகரிக்கப்பட்டால், பாலிசிதாரருக்கு அதற்கான விளக்கங்கள் அனுப்பப்படும்.

காப்பீட்டாளர் அல்லது காப்புறுதியில் உள்ளடங்கிய உறுப்பினர்கள், காவல் துறைக்கு தகவல் சொல்லும் சூழ்நிலை ஏற்பட்டால், அதையும் தாமதிக்காமல் மேற்கொண்டு, FIR பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தீவிர / க்ரிட்டிகல் நோய்களுக்கு க்ளைம் ப்ராசஸ்

பாலிசிதாரர் மற்றும் பாசியில் உள்ளடங்கிய உறுப்பினர்கள், இந்த க்ரிடிக்கல் இல்னஸ் ஹெல்த் கவர் ப்ளான் திட்டத்தின் காப்புறுதி பெற்றிருந்தால், அவர்கள் நிறுவனத்திடம் தங்களுடைய நோயின் விவரங்களைப் பற்றி உடனே தெரிவிக்க வேண்டும். இந்த திட்டத்தில் 20 முக்கிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். அதில் குறிப்பிட்டபடி முக்கிய நோய்கள் காப்புறுதியில் இருந்தால், பாலிசியின் படி, விதிமுறைகளும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, காப்பீட்டாளரின் சிகிச்சை செலவுக்கு காப்புறுதியை பெற பெற முடியும். க்ரிடிக்கல் இல்னஸ் சிகிச்சைக்கு க்ளைம் பெறுவதற்கு, பாலிசிதாரர் அதற்கான படிவங்களை நோயாளியின் மருத்துவ சிகிச்சை அறிக்கை, மருத்துவர்களின் சான்றிதழ்களோடும், எந்த தேதிகளில் தேர்ந்தெடுத்த மருத்துவமனையின் விவரங்களோடு வழங்க வேண்டும்.

பார்தி ஆக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியம்

ப்ரீமியங்கள் எல்லாமே ஃபிளாட் ரேட்டில், இணையத்தில் எந்த திட்டம், காப்புறுதி தொகை, காப்பீட்டுக் காலம், பாலிசிதாரரின் வயது, உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டு தேர்ந்தெடுத்து, கணக்கிட்டுக் கொள்ளலாம்.   

பார்தி ஆக்ஸாவை, மின்னஞ்சல், தொலைபேசி, அல்லது வழங்கப்பட்ட தொடர்பு எண்கள் மூலம் தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் பெறலாம்.  

பார்தி ஆக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஃப்ரீ லுக் பீரியட்

எங்கள் சந்தாதாரர்களுக்கு 15 நாட்கள் வரை ஃப்ரீ லுக் பீரியட் வழங்குகிறோம். இந்த காலகட்டத்தில், அவர்கள் பாலிசியின் விதிகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்து, விதிமுறைகளையும் நிபந்தனைகளையும், கொள்கைகள் மற்றும் விதிவிலக்குகளையும் புரிந்து கொள்ளலாம்.

பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளால் சந்தாதாரர் திருப்தி அடையவில்லை என்றால், அவர் பாலிசியை இரத்து செய்து, ஆவணத்தை திருப்பி அனுப்பி விடலாம்.

பார்தி ஆக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ளான்ஸ்

பார்தி ஆக்ஸா ஸ்மார்ட் இன்சூரன்ஸ்

 • காப்புறுதி தொகை ரூ. 3 - 60 லட்சம் வரை  
 • குறைந்தபட்ச நுழைவு வயது 91 நாட்கள்
 • அதிகபட்ச நுழைவு வயது வரம்புகள் இல்லை

பார்தி ஆக்ஸா ஸ்மார்ட் பர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் ப்ளான்

 • காப்புறுதி தொகை ரூ. 2 - 5 லட்சம் வரை  
 • குறைந்தபட்ச நுழைவு வயது 18 வயது
 • அதிகபட்ச நுழைவு வயது 75  வயது
 • இயலாமை மற்றும் ஆக்சிடன்ட் இறப்புக்கு காப்புறுதி

பார்தி ஆக்ஸா ஸ்மார்ட் ஹெல்த் கிருதிகள் இல்னஸ் இன்சூரன்ஸ் ப்ளான்

 • காப்புறுதி தொகை ரூ. 3 - 60 லட்சம் வரை  
 • குறைந்தபட்ச நுழைவு வயது 91 நாட்கள்
 • அதிகபட்ச நுழைவு வயது வரம்புகள் இல்லை
 • 20 விதமான க்ரிடிக்கல் / தீவிர நோய்கள் மருத்துவ சிகிச்சை