சோளமண்டலம் எம்எஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)

1

2

தொலைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

சோளமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஆகும். இது ஜப்பானிய நிறுவனமான மிட்ஷூய் சுமிடோமோ இன்ஷூரன்ஸ் குழுமத்துடன் சேர்ந்து அமைக்கப்பட்ட ஒரு கூட்டுக் காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யங்களில் ஒன்று முருகப்பா குழுவின் நிறுவனங்களாகும்.

இந்த காப்பீட்டு நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 150 கிளை அலுவலகங்கள் உள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களிலும் சிற்றூர்களிலும் 9000-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் உள்ளனர். பலவகையான காப்பீடு திட்டங்களை வழங்குவதில் இந்த நிறுவனம் முன்னோடியாக விளங்குகிறது. உதாரணமாக விபத்துக் காப்பீடு, உடல்நலக் காப்பீடு, கடன் சம்பந்தப்பட்ட காப்பீடு, மோட்டார் காப்பீடு, பயணக் காப்பீடு, கிராமத்துக்கான காப்பீடு திட்டங்கள், என்ற பல வகையான காப்பீட்டுத் திட்டங்களை தனிநபருக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது. நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் இந்த நிறுவனத்தின் அடித்தளமாக செயல்பட்டு வருகிறது.

2013-14 நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 1855 கோடி ரூபாய் அளவில் வணிகம் ஈட்டியுள்ளது. அதே ஆண்டில் க்ளைம்ஸ் ஏஷியா அவார்ட்ஸ் வழங்கியஹெல்த் இன்ஷூரர் க்ளைம்ஸ் டீம்ஸ்”  இந்த விருதைப் பெற்றிருக்கிறது. மேலும் காலதாமதமின்றி கிளைம்கள் செட்டில்மென்ட் செய்வதற்கான விருதையும் 2011-12 நிதியாண்டில் பெற்றிருக்கிறது. “இன்னோவேஷன் லீடர் அவார்ட் 2012என்ற விருதையும் இந்த நிறுவனம் புதிய காப்பீட்டு திட்டங்களை வடிவமைப்பதில் பெற்றிருக்கிறது.  

இந்தியாவில் அதிக அளவில் நன்மதிப்பை பெற்று மக்களிடையே அதிகமான மரியாதையையும் பெற்ற நிறுவனமாக இந்த காப்பீட்டு நிறுவனம் விளங்குகிறது. நாட்டில் உள்ள பல்வேறு பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு இடையே தன்னுடைய சேவையை தொடர்ந்து வழங்கிக்கொண்டு மக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தேவையான காப்பீட்டுத் திட்டங்களை எந்த குறைபாடுகளும் இல்லாமல் வழங்குவதில் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

சோளா எம்எஸ்ஹெல்த் இன்ஷூரன்ஸ் சிறப்பு அம்சங்கள்

வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று யாரும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அதே போல தான் எமர்ஜென்ஸி மருத்துவ தேவைகளும். எதிர்பாராத விபத்து அல்லது எதிர்பாராமல் தீவிர நோய்வாய்ப்பட்டு போனால் அது உங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை விளைவிக்கும். மேலும் உங்களுடைய நிதி நிலைமையை நிச்சயமாக மோசமாக்கிவிடும். தற்போதுள்ள மருத்துவ செலவுகள் ஒவ்வொரு நாளும் மிகவும் அதிகமாகி கொண்டே செல்கிறது. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் போது உடல்நலக் காப்பீட்டு திட்டங்களைப் பற்றி தெரிந்து கொண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தேவையான பாதுகாப்பை பெறுவது மிகவும் புத்திசாலித்தனமான செயலாகும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி உங்களுக்கு தேவையான நிதி பாதுகாப்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சமயங்களிலும் மற்ற எமர்ஜென்சி மருத்துவ உதவி தேவைப்படும் நேரங்களிலும் அளிக்கும். உங்களுடைய செலவுகளை எப்படி சமாளிப்பது என்ற எந்த கவலையும் இன்றி நீங்கள் நோயிலிருந்து விடுபடும் வரை அதற்கான சிகிச்சையை தைரியமாக மேற்கொள்ளலாம்.

இந்தியாவில் வசிக்கும் 18 முதல் 65 வயதில் இருப்பவர்கள் அனைவரும் இந்த நிறுவனத்தின் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இந்தியாவில் உள்ள எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இந்த பாலிசிகள் பல்வேறு வகையான காப்புறுதி திட்டங்களை மருத்துவமனையில் அனுமதிக்க படுவதற்கும் டாமிசிலரி செலவினங்களுக்கும் வழங்குகிறது. அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சமயத்தில் இந்த நிறுவன நெட்வொர்க்கில் இணைந்துள்ள ஐயாயிரத்திற்கும் அதிகமான எந்த மருத்துவமனையிலும் நீங்கள் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இந்த உடல் நலக் காப்பீட்டு திட்டத்தில் மிகச்சிறந்த ஒரு அம்சம் என்ன என்றால் நீங்கள் இரட்டை காப்புறுதியை விபத்து காப்பீட்டில் பெற்றுக் கொள்ளலாம். ஒரு சில தேர்ந்தெடுத்த உடல்நலக்குறைவுக்கான காப்புறுதித் திட்டங்களிலும் நீங்கள் இரட்டைக் காப்புறுதியை பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஆயுள்காலம் முழுவதும் உங்களுக்கு புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் ஆயுள்கால காப்புறுதியும் இந்தத் திட்டங்களில் உண்டு.

காப்பீட்டு திட்டத்தில் டாமிசிலரி ஹாஸ்பிட்டலைஸேஷன் முதல்140 வகையான டே கேர் சிகிச்சை முறைகளுக்கும் காப்புறுதி உண்டு. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதற்கு முன்பான 60 நாட்கள் வரையிலும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்பு 90 நாட்கள் வரையிலும் ஆகும் மருத்துவம் செலவினங்களுக்கான காப்புறுதியும் உண்டு. சில தேர்ந்தெடுத்த காப்பீட்டு திட்டங்களில் 20 முக்கியமான தீவிர சிகிச்சைக்கான காப்புறுதி உண்டு. இந்த குறிப்பிட்ட திட்டங்களில் மருத்துவமனையில் தங்கும் அறை வாடகைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

கர்ப்பிணிப் பெண்களுக்கான காப்பீடு, பிறந்த குழந்தைக்கான மருத்துவமனை செலவு, ஆகிய வசதிகளையும் நீங்கள் ஒரு சில காப்பீட்டு திட்டங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் உடல் உறுப்பு தானம் அதற்கான அறுவை சிகிச்சை,  நவீன ப்ராஸ்தட்டிக் டிவைசஸ் பொருத்துவதற்கான செலவினங்கள், அறுவை சிகிச்சைகள் போன்றவையும் சில காப்பீட்டு திட்டங்களில் உள்ளன. இந்த நிறுவனத்தின் உடல்நலக் காப்பீட்டு திட்டத்திற்குச் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு  உங்கள் வருமான வரியில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம். பல விருதுகளும் பாராட்டும் அங்கீகாரமும் பெற்ற இந்த நிறுவனத்தின் திறமை வாய்ந்த ஊழியர்கள் மிகவும் முனைப்பாக செயல்பட்டு க்ளைம்களை உடனடியாக செட்டில்மென்ட் செய்கின்றனர். மேலும் உங்களுக்கு எந்த நேரத்தில் எந்த சந்தேகம் தோன்றினாலும் அல்லது எதற்காகவாவது விளக்கம் தேவைப்பட்டால் நீங்கள் 24 மணி நேர கஸ்டமர் சப்போர்ட்டை தொடர்பு கொள்ளலாம்.

சோளா எம்எஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பலன்கள்

ஆம்புலன்ஸ் கட்டணம்பாலிசியை குறிப்பிட்டுள்ளபடி ஆம்புலன்ஸ் கட்டணம் பாலிசிதாரருக்கு மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் வழங்கப்படும்.

கூட்டு போனஸ் கிளைம் இல்லாத ஒவ்வொரு வருடமும் கூட்டு போனஸ் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பாலிசியைப் புதுப்பிக்கும்போது கிளைம் இல்லாமல் இருந்தால் காப்பீட்டு தொகையில் கூடுதலான தொகை சேர்க்கப்படும்.

இலவச மருத்துவ பரிசோதனைக்ளைம் இல்லாத ஆண்டுகளுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனையும் உண்டு.

வரிச் சலுகைதனக்கும், கணவன் அல்லது மனைவிக்கு மற்றும் தன்னைச் சார்ந்துள்ள குழந்தைகளுக்கு 25 ஆயிரம் வரை வரிச் சலுகையும், பெற்றோருக்கு 60 வயதிற்கு மேல் இருந்தால் 30 ஆயிரம் வரை வரிச் சலுகையும் இந்திய வருமான வரி சட்டத்தின் 80டி பிரிவின் கீழே பெற்றுக் கொள்ளலாம்.

கோ-பேமென்ட் - இந்த வசதி உங்களுடைய ப்ரீமியம் தொகையை குறைப்பதற்காக அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வசதிகள்சோளா எம்எஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப காப்பீட்டை பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் அனைத்து வழிமுறைகளையும் ஆன்லைனிலேயே செய்யுமாறு வழிவகுத்துள்ளது. வாடிக்கையாளர்களும் அல்லது புதுசாக பாலிசியை பெற விரும்பும் நபர்களும் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் தேவையான விவரங்களை இணையதளத்தில் பெற்றுக்கொண்டு பாலிசியை ஆன்லைனில் வாங்கலாம். மேலும் வேறொரு நிறுவனத்தின் காப்பீட்டை சோளா நிறுவனத்திற்கு மாற்றவும் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் உங்களுக்கு தேவையான காப்பீட்டுத் திட்டங்களை பற்றிய அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு காப்பீட்டு திட்டத்திற்கு எவ்வளவு பிரிமியம் செலுத்த வேண்டும் என்ற விவரமும் அதில் உள்ளடங்கும். இது மட்டுமின்றி நீங்கள் பிரீமியம் செலுத்த விரும்பினால் அதையும் ஆன்லைனிலேயே எளிதாக செய்யலாம். இந்த வசதிகள் மட்டுமன்றி ஆன்லைனிலேயே நீங்கள் கிளைம் குறித்த தகவல்களையும் பதிவேற்றலாம்.

சோளா எம்எஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் ஏற்கப்படாதவை

பின்வரும் சூழ்நிலைகளில் அல்லது நிலைமைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு, இந்த நிறுவனத்தின் உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களில் காப்புறுதியோ நிதி உதவியோ கிடையாது.

 1. போர், அதனால் ஏற்படும் பாதிப்பு, சிறைக் கைதியாக இருக்கும் நிலைமை போன்றவை
 2. தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் தற்கொலை முயற்சி
 3. தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் (விலங்குகளினால் ஏற்படும் காயத்திற்கு உண்டான தடுப்பூசிகள் தவிர்த்து)
 4. மருத்துவ காப்பீட்டை பெற்ற 30 நாட்களுக்குள் ஏற்படும் எந்த நோய்க்கும் பாதுகாப்பு கிடையாது, விபத்தை தவிர்த்து
 5. பாலிசியை பெறுவதற்கு முன்னரே எடுக்கும் உடல்நல குறைபாட்டிற்கும், பாலிசியை பெற்ற 48 மாதங்கள் வரை காப்புறுதியும் இல்லை

சோளா எம்எஸ் ஹெல்த் அலர்ட்ஸ்

வேகவேகமாக ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் இன்றைய காலகட்டத்தில், இந்த வாழ்க்கை முறையில் நம்முடைய உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

சோம்பலான வாழ்க்கை மற்றும் முறையற்ற உணவு முறை ஆகியவை தான் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இவற்றிலிருந்து உங்களை பாதுகாக்க சோளா எம்எஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் சோளா வெல்னெஸ் ஹெல்த் அலர்ட்ஸ் சர்வீஸ்களை வழங்குகிறது. இது ஒரு எஸ்எம்எஸ் சேவையாகும். நீங்கள் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வது, உடல் ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் மருத்துவரிடம் அப்பாயின்மென்ட் பெறுவது, போன்ற உடல் நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு உங்களுக்கு ரிமைண்டர்களை வழங்கும்.  இது ஒவ்வொரு பாலிசியிலும் ஒரு நபருக்கு இலவசமாக வழங்கப்படும்.  கூடுதலான கட்டணம் செலுத்தி எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும் இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

சோளமண்டலம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ்

தனிநபர் மற்றும் குடும்பத்தினரின் தேவைக்காக இந்த நிறுவனம் பல்வேறு வகையான காப்பீட்டு திட்டங்களை வழங்குகிறது. ஒரு சில காப்பீடுகளில், ஃபேமிலி ஃப்ளோட்டர் பலன்கள் குடும்ப நபர்களுக்கு வழங்கப்படும்.  இந்த நிறுவனம் வழங்கும் மிகவும் பிரபலமானகாப்பீட்டுத் திட்டங்களில் சோளா ஹெல்த்லைன், சோளா ஸ்வஸ்த் இன்ஷூரன்ஸ் பாலிசி, சோளா எம்எஸ் ஃபேமிலி ஹெல்த்லைன் இன்ஷூரன்ஸ், தனி நபர் ஹெல்த்லைன் இன்ஷூரன்ஸ், சோளா டாப்-அப் ஹெல்த்லைன், ஆகியவை அடங்கும்.

சோளா ஹெல்த்லைன்

சோளா ஹெல்த்லைன் மிகச்சிறந்த காப்புறுதியை தனி நபருக்கும் குடும்பத்தினருக்கும் வழங்குகிறது.  ஃப்ளோட்டர் காப்புறுதியும் பெற்றுக்கொள்ளும் ஆப்ஷன் உள்ளது. இதன் கீழே நான்கு விதமான பாலிசிகள் உள்ளன.

சோளா ஸ்வஸ்த் இன்ஷூரன்ஸ் பாலிசி

இந்த பாலிசியில் ஓ பி டி செலவுகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதி தேவைப்படாமல் இருக்கும் நிலையில் ஆகும் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளும் அடங்கும். இந்தத் திட்டத்தில் நிலையான பிரீமியம் ஆப்ஷன்ஸ் மற்றும் ஃப்ளோட்டர் காப்பீட்டு தொகை ஆப்ஷனும் உள்ளது.  இது பாலிசிதாரர், அவரின் கணவன் அல்லது மனைவி மற்றும் அவரை சார்ந்து இருக்கும் குழந்தைகளுக்கு (மூன்று மாதம் முதல் 35 வயது வரை) பாதுகாப்பு அளிக்கும்.

சோளா எம்எஸ் ஃபேமிலி ஹெல்த்லைன் இன்ஷூரன்ஸ்

15 லட்சம் வரையில் ஃப்ளோட்டர் சம் இன்ஷூர்ட் திட்டத்தை இந்த பாலிசி வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழே நீங்கள் ஆங்கில மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்தத் திட்டத்தின் காப்புறுதிக் கொள்கைகள் கர்ப்பிணிக்கான மருத்துவ பாதுகாப்பு, வெளிப்புற நோயாளியாக டென்டல் சிகிச்சை மற்றும் மருத்துவமனை அனுமதிக்கப்படும் சமயத்தில் ஏற்படும் செலவுகள் ஆகியவற்றையும் வழங்குகிறது.

தனி நபர் ஹெல்த்லைன் இன்ஷூரன்ஸ்

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கிளைம் எதுவும் இல்லாமல் இருந்தால் இந்த பாலிசியில் இலவசமாக மருத்துவ பரிசோதனை வசதி கிடைக்கும். கிளைம் செட்டில்மென்ட் சமயங்களில் எந்த மூன்றாம் நபர் தலையீடும் இருக்காது. காப்பீட்டுத் தொகையை ஒரு நபருக்கு 10 லட்சம் வரையில் பெற்றுக் கொள்ளலாம்.

சோளா டாப்-அப் ஹெல்த்லைன்

அதிகமாக ஆகும் மருத்துவ செலவிற்கு பாதுகாப்பு அளிக்க இந்த காப்பீட்டுத் திட்டத்தை நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதற்கான காலத்தை நீங்கள் ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளலாம். புதுப்பிப்பதற்கு உங்களுக்கு 30 நாட்கள் வரை கூடுதலான கால அவகாசம் உண்டு.

க்ரிட்டிக்கல் ஹெல்த்லைன் இன்ஷூரன்ஸ்

தீவிர நோய் ஏதாவது கண்டுபிடிக்கப்படும் சமயத்தில் இந்த பாலிசி கொள்கையின்படி மொத்தமாக ஒரு பெரிய தொகை வழங்கப்படும். இந்த பாலிசியில் 12 முக்கியமான நோய்களுக்கு காப்புறுதி உள்ளது.

சோளா ஹாஸ்பிடல்கேஷ் ஹெல்த்லைன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சமயத்தில் தினப்படி கேஷ் அலவன்ஸ் என 3௦௦௦ வரை பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டம் இரட்டை நன்மைகளை ஐசியூவில் அனுமதிக்கப்படும் சமயத்திலும் வருகிறது.

சோளா க்ளாஸிக் ஹெல்த் இன்டிவிஜுவல்

இந்த பாலிசியின் கொள்கைப்படி 45 வயது வரை எந்த மருத்துவ பரிசோதனையும் தேவையில்லை. காப்பீட்டு தொகை 50,000 முதல் 10 லட்சம்ரூபாய் வரைஉள்ளது.

சோளா க்ளாஸிக் ஹெல்த் ஃபேமிலி ஃப்ளோட்டர்

ஒரே ஒரு பாலிசி திட்டத்திலேயே உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான உடல் நலக் காப்பீட்டையும் அதற்கான பாதுகாப்பையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். பணமில்லாமல் பெறப்படும் மருத்துவ சிகிச்சையில் மற்றும் பணம் செலுத்திய பிறகு அதற்கான கிளைம் செட்டில்மென்ட்  ஆகியவற்றையும் நிறுவனத்தின் பணியாளர்களிடம் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிறுவனம் வழங்கும்பிற காப்பீட்டு திட்டங்கள்

 • மோட்டார் இன்ஷூரன்ஸ்
 • பயண இன்ஷுரன்ஸ்
 • தனி நபர் விபத்து காப்பீடு
 • வீடு இன்ஷூரன்ஸ்

- / 5 ( Total Rating)