ஃப்யூச்சர் ஜெனரலி இந்தியாவின் முன்னணி ரீடைலர்கள் ஃப்யூச்சர் க்ரூப் மற்றும் இத்தாலியை சேர்ந்த முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான ஜெனரலி ஆகிய இரண்டு நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும். இந்த இரண்டு நிறுவனங்களின் சிறப்பம்சங்களையும் கொண்டு தனித்துவமான காப்பீட்டுத் திட்டங்களை வழங்க 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்திய சந்தை பற்றிய அறிவு அத்துடன் சேர்ந்து உலகளாவிய அறிவு ம்ற்றும் காப்பீட்டு துறையில் தேர்ந்த அனுபவம் ஆகிய இரண்டும் ஃப்யூச்சர் ஜெனரலிஇந்நிறுவனத்தின் பெரிய தூண்களாகும்.
ஃப்யூச்சர் ஜெனரலிநிறுவனம் பொது காப்பீட்டுத்துறை வணிகத்திலும், லைஃப் இன்சூரன்ஸ் துறை வணிகத்திலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் பல இடங்களில் மிகவும் பிரபலமான ரீடெயில் திட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அவற்றுள் சில சென்ட்ரல், பிக் பசார், ஹோம் டவுன், ஈசோன் போன்றவை.
இந்தியாவில் பலரும் உடல்நலக் காப்பீட்டு திட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்து இருக்கவில்லை. அறிந்திருக்க வில்லை அதனால் மருத்துவ காப்பீட்டிற்கு எந்தவித முக்கியத்துவமும் அவர்கள் அளிக்காமல் உடல் நலத்தைப் பற்றிய அக்கறையும் இல்லாமல் பலரும் வாழ்ந்து வருகின்றனர். நாம் வாழும் இன்றைய உலகில் செலவுகள் என்பது அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதில் மருத்துவம் மற்றும் மருந்து செலவுகளும் அடக்கம். அதிகரித்துக் கொண்டே வரும் மருத்துவ செலவுகளுக்கு, தரமான சிகிச்சை பெறுவது இன்னும் அதன் செலவை கூட்டும். ஒவ்வொருவரின் நிதி நிலைமை எப்படி இருக்குமென்று என்று சொல்ல இயலாது. எதிர்பாரா நேரத்தில் ஏற்படும் மருத்துவ செலவுக்கு சேமிப்பும் இல்லாது போனால் தரமான சிகிச்சை பெற்று நோயிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினமாகும். இதற்காகவே இந்த நிறுவனங்களுக்கு நோய்களிலிருந்தும் தங்களுக்கான சிகிச்சை பெற தேவையான பாதுகாப்பு அளிக்கவும் பல்வேறு மருத்துவ காப்பீட்டு திட்டங்களை வடிவமைத்து வழங்கி வருகிறது. எமர்ஜென்சி நேரத்தில் தேவைப்படும் அதிக அளவிலான மருத்துவ செலவிற்கு நீங்கள் பணம் இல்லாமல் எங்கும் அலைய வேண்டாம். அந்த நேரத்தில் அரணாக இந்த காப்பீட்டு திட்டங்கள் உதவும்.
ஒரு அடிப்படையான உடல்நலக் காப்பீட்டு திட்டத்தில் பலவிதமான மருத்துவ செலவினங்களுக்கு உங்களுக்கு காப்புறுதி கிடைக்கும். அவற்றில், மருத்துவமனையில் அனுமதிக்கும் போது ஆகும் மருத்துவ செலவுகள், மருத்துவ சிகிச்சைக்கான மொத்த செலவு, பணம் இல்லாமல் மருத்துவ சிகிச்சை பெறும் வசதி, வருமான வரி விலக்கு ஆகியவை அடங்கும். ஃப்யூச்சர் ஜெனரலிநிறுவனத்தில் நீங்கள் உடல்நலக் காப்பீட்டு திட்டத்தை வாங்கினால் நீங்கள் சந்தையில் இருக்கும் மிகச் சிறந்த காப்பீட்டை குறைவான விலையில் வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
ஃப்யூச்சர் ஜெனரலி வழங்கும் இந்த சிறப்பான இன்சூரன்ஸ் பாலிசி, பெரும்பாலும் அனைத்து நோய்களுக்கும் காப்புறுதி அழைத்து நீங்கள் பணம் எதுவும் செலுத்தாமலேயே சிகிச்சை பெற வழி வகுக்கிறது. அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட காலத்தில் மருத்துவ பரிசோதனை பெறவும் மேலும் சில நன்மைகளையும் சேர்த்து இந்தத் திட்டம் வழங்குகிறது. இந்த நிறுவனம் அனைவரின் தேவைக்கு ஏற்ப பலவிதமான மருத்துவ காப்பீடு களை வழங்குவதால் நீங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எது தேவையோ அதை மிகவும் எளிதாக தேர்வு செய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் நீங்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்தால் அது உங்களின் பணம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும். ஆன்லைனில் நீங்கள் தேர்வு செய்யும் பொழுது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நீண்ட வரிசையில் நின்று ஒவ்வொரு காப்பீட்டை பற்றி விளக்கங்கள் பெற்று தேவையான காப்பீட்டை தேர்வு செய்து என்று பல இன்னல்களை தவிர்க்கலாம். ஒரு சில நிமிடங்களிலேயே உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உடல்நல பாதுகாப்பை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிளான்கள் உங்கள் குடும்பத்தின் சேமிப்பை உழைக்காமல் உங்களுக்கு மருத்துவ வசதியை. ஏற்படுத்திக் கொடுக்கிறது. உங்களுடைய பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு நீங்கள் பாலிசியையும் பிரீமியம் தொகையை தெரிவு செய்து கொள்ள வசதி உண்டு.
ஏன் ஃப்யூச்சர் ஜெனரலி நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்
மேலே கூறியது போல மருத்துவ செலவுகள் அதிகரித்து வரும் இன்றைய சூழ்நிலையில் ஏதாவது ஒரு உடல்நலக் காப்பீட்டு திட்டத்தை வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் ஆகும். இன்றைய உடல்நல சுருள்களை கணக்கில் கொண்டு பார்த்தால் ஒவ்வொரு தனிநபருக்கும் இது மிகவும் இன்றியமையாததாக மாறுகிறது. தேவை இருக்கிறது என்பதற்காக ஏதோ ஒரு திட்டத்தை வாங்கிவிட முடியாது. நமக்கு என்ன தேவை என்பதை ஆராய்ந்து சந்தையில் இருக்கும் பல திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து பின்பு நமக்கு மிகவும் பொருத்தமான ஒரு மருத்துவ காப்பீட்டை தேர்வு செய்ய வேண்டும். மிகவும் குறைந்த விலையிலேயே உங்களுக்கு மருத்துவ காப்பீடுகள் இன்று கிடைக்கிறது. ஃப்யூச்சர் ஜெனரலி நிறுவனம் உங்களின் தேவைக்கு ஏற்ப திட்டங்களை பல்வேறு விதமான பலன்களோடும் நன்மைகளோடும் வழங்கி வருகிறது.
மருத்துவ காப்பீடு வாங்கும் பொழுது நாம் எவை எல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும்?
மருத்துவ பரிசோதனை அவசியமானது
வருமுன் காப்பது நல்லது என்பது நம் முன்னோர்கள் கூற்று. அதைப்போலவே நோயை தீவிரமான நிலைக்கு நாம் கொண்டு செல்வதற்கு முன்னரே அதற்கான சிகிச்சையைப் பெற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது. அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொண்டால் நம் உடல்நிலையைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் நோய் இருப்பதை முதல் நிலைகளிலேயே கண்டறிந்தால் அதற்கான சிகிச்சை பெற்று அந்த நோயிலிருந்து முழுவதுமாக விடுபடவும் முடியும்.
அதிக கவரேஜ் மாற்றுகள்
ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் இன்சூரன்ஸ் என்றால் என்ன என்பதே நமக்கு தெரியாமல் இருந்தது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒவ்வொரு நபருக்கும் பல விஷயங்களை சொல்லிக் கொடுத்துள்ளது. அதேபோலதான் காப்பீட்டு துறையின் வளர்ச்சியும். ஒரு பக்கம் காப்பீட்டின் முக்கியத்துவம் பற்றி தெரியாமல் இருந்தாலும் மற்றொரு பக்கம் பலரும் காப்பீட்டு திட்டங்களை பற்றி அறிந்து கொண்டு, பொருத்தமான காப்பீட்டை தேர்ந்தெடுத்து தன்னையும் தங்களின் குடும்பத்தாரையும் பாதுகாத்து வருகின்றனர். தொழில்துறை சந்தையில் பல மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்துமே எதிர்பாராமல் நேரும் மருத்துவ செலவுகளுக்காக உங்களுக்கு உதவுகிறது.
நீங்கள் இணையதளத்தில் சென்று பல நிறுவனங்களின் மருத்துவ காப்பீடு களை ஒப்பிட்டுப் பார்த்து அதன் காப்புறுதி கொள்கைகளையும் ஒப்பிட்டு விரைவாகப் படித்து பார்த்து உங்களுக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதைத் தேர்வு செய்யலாம். மிகச்சிறிய தொகையை காப்பீட்டில் முதலீடு செய்து மிகப் பெரிய நன்மையை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.
குறைந்த செலவு
உங்களின் செலவுகளை குறைக்க கோ-பே சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றால் நீங்கள் கோ-பே ஆப்ஷனை அதிகரித்துக்கொள்ளலாம். இது உங்களுக்கு மாதாந்திர அல்லது குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொகையை குறைக்க உதவும்.
அதிக பலன் அளிக்கும் ஹெல்த் கேர் பிளானை தேர்வு செய்யவும்
குறைந்த செலவில் நீங்கள் மிகவும் எளிதாக அதிக பலனளிக்கும் ஹெல்த் கிளப் பிளானை தேர்வு செய்யலாம். இந்த திட்டம் மிகவும் காஸ்ட்லியான மருத்துவ சிகிச்சைகளில் இருந்து உங்களை மற்றும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும்
ஃப்யூச்சர் ஜெனரலி ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்
தனிநபர் பிளான்
இது ஒரு தனி நபருக்கான காப்பீட்டுத் தேவையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். அதிகமாகும் மருத்துவ செலவுகளை இருந்தும் எதிர்பாராத நோய்களுக்கு தேவைப்படும்போதும் இது காப்புறுதி அளிக்கிறது.
ஃபேமிலி பிளான்
ஃப்யூச்சர் ஜெனரலி வழங்கும் ஹெல்த் சுரக்ஷா ஒரு குடும்ப நலத்திட்டம் ஆகும். ஒரே திட்டத்தின் கீழ் உங்கள் குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் காப்புறுதி வழங்கப்படும்.
பர்சனல் ஆக்சிடென்ட்
இந்த விபத்து காப்பீட்டு திட்டம் விபத்தினால் ஏற்படும் அனைத்து சேதங்களுக்கும் காப்புறுதி அளித்து உங்களை மீட்டெடுக்கும் வரை உங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்.
ஹாஸ்பிட்டல் கேஷ்
இந்த திட்டத்தில், பாலிசிதாரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றால் உங்களுக்கு கேஷ் பெனிஃபிட் கிடைக்கும்.
டாப்-அப்
இந்த ப்ளான் கூடுதலான கவரேஜை உங்களின் உடல்நல காப்பீட்டுத் திட்டத்திற்கு வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் நவீன / உயர்ந்த மருத்தவ வசதியை பெற முடியும்.