Sehwag PX
ஹெல்த் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்

#Virukipolicy | T&C*

பிரீமியத்தை ஒப்பிடுக

பெயர்
தொலைபேசி எண்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

பிற தகவல்களை உள்ளிடவும்

கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)
மின்னஞ்சல்
நகரம்

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் என்பது மிகத் திறமையான ஊடகமாகும். இதன் மூலம் உங்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை செயலில் வைத்திருக்க செலுத்த வேண்டி இருக்கும் பிரீமியம் பற்றி நீங்கள் எளிதாக மதிப்பீடு செய்யலாம். பாலிசியை வாங்குவதற்கு முன்பு தொகை குறித்த யோசனையை பெறுவதில் உங்களுக்கு உதவுகின்ற ஒரே ஊடகம் இதுவே ஆகும். உங்களின் பட்ஜெட்டில் சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை பெறுவதற்கு உதவக்கூடிய, ஹெல்த் இன்சூரன்ஸ் ஒப்பிடுதல் நேரத்தில் உங்களுக்கு அதிகளவில் உதவுகிறது. 

ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் முதலீடு செய்யும் பொழுது இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தேவையான இடைவெளியில் பிரீமியம் என அறியப்படும் ஒரு தொகையை செலுத்த வேண்டி இருக்கும் என்பதை பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். ஆனால், இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பிரீமியத்தின் அளவை எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் என்பதையும், இது ஒரே வயதில் உள்ள நபருக்கு நபர் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை பற்றியும் நீங்கள் எப்பொழுதுதாவது யோசித்திருக்கிறீர்களா ? சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒழுங்குமுறை விலைப் பட்டியலை நிர்வகிப்பதாக நீங்கள் நிச்சயம் எண்ணுவீர்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், விருப்பமான முடிவுகளை வழங்குவதற்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் பல்வேறு காரணிகளில் இயங்குகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும், உண்மையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் இன்சூரன்ஸ் பிரீமியத்தை தீர்மானிப்பதற்காக அளவுகோலை (ஐஆர்டிஏ ஒப்புக் கொண்டுள்ள) கொண்டுள்ளன. இத்தகைய அளவுகோலானது, வயது, மருத்துவ வரலாறு, முன்பே இருக்கும் நோய்கள் போன்றவையின் அடிப்படையில் இருக்கும்.

உதாரணமாக: நீங்கள் 25 வயதில் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் முதலீடு செய்யும் பொழுது அதற்கான பிரீமியம் தொகையானது , அதே பிளானை 45 வயதில் வாங்குபவரின் பிரீமியத்துடன் ஒப்பிடும் பொழுது குறைவாக இருக்கும். அதற்கான முக்கியமான காரணம், வயது அதிகரிக்கும் பொழுது நீங்கள் அதிக நோய்களால் பாதிக்கக்கூடும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் தான். ஆகையால் தான், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எப்பொழுதும் நீங்கள் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு, ஒரு நேர்மையான அறிவிப்பை வழங்கக் கேட்டுக் கொள்கிறது. 

  • ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் ஆனது உடனடியாக உங்கள் பிரீமியத்தைக் கணக்கிட அனுமதிக்கிறது. 
  • ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை பரந்தளவில் எளிதில் பெற முடியும். 
  • பட்ஜெட்டில் சிறந்த பிளான்களை தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கிறது. 

PolicyX.com இல் ஹெல்த் இன்சூரன்ஸ் கணக்கீடானது மிகவும் எளிதான மற்றும் இலவச கருவியாகும். சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியத்தை எளிதாக கணக்கிட முடியும். PolicyX.com ஆனது உங்களின் முழு செயல்முறையும் எளிதாக்குகிறது. நீங்கள் விரும்பிய முடிவுகளுக்கு, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் படிவத்தில் சில அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்வது. சில வினாடிகளில், நீங்கள் தேர்ந்தெடுத்த ஹெல்த் இன்சூரன்ஸ் கீழ் பொருந்தக்கூடிய சரியான ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை நீங்கள் பெற முடியும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை ஏன் கணக்கிட வேண்டும்?

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை கணக்கிடுவதன் மூலம், நீங்கள் ஒரு பெரிய அளவிலான பணத்தினை சேமிக்க முடியும். நீங்கள் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்வதாக இருக்கும் தெளிவான பட்ஜெட்டின் சரியான யோசனையை பெற அனுமதிக்கிறது. இருப்பினும், உங்கள் பட்ஜெட்டில் சிறந்த ஒன்றை தேர்வு செய்வதற்கான இன்சூரன்ஸ் ஒப்பிடுதல் நேரத்தில் உதவுகிறது.

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கணக்கீடுதல் ஒரு முக்கியமானதாக இருந்தாலும், சற்று சிக்கலான பணியாகும். உங்களை சுற்றி நடப்பதை கவனித்தீர்கள் என்றால் , ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களில் முதலீடு செய்வதற்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகளை மக்கள் பெரும்பாலும் அப்படியே நம்புவார்கள். இருப்பினும், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு போன்றவற்றால், உங்கள் வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டே கணக்கிடுதல் மற்றும் வாங்கும் செயல்முறையை மேற்கொள்வது மிகவும் எளிதாக மாறியுள்ளது. ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கணக்கிடுதல் எளிமையானதாக  மாறி உள்ளது. இது வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாலிசி பற்றி முன்கூட்டியே அறிந்திருப்பதை உறுதிப்படுகிறது.

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை நீங்கள் முன்கூட்டியே மதிப்பிட்டு இருந்தால், உங்களின் நிதி திட்டமிடல் எளிதானதாக மாறிவிடும். இதனுடன், நீங்கள் வாங்க நினைக்கும் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு ஏற்ற பிரீமியம் தொகை என்னவென்று நீங்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும். சில அடிப்படை தகவல்களை வழங்குவதன் மூலம் உங்கள் தேவைக்கேற்ற பிரீமியம் தொகை பற்றி அறிந்து கொள்ள முடியும். ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கணக்கிடுதலில் பல்வேறு பாராமீட்டர்கள் ஈடுபடுவதால் ஒரு கடினமான பணியாக இருக்கலாம். ஆனால், ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரின் உதவியை எடுத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் கணக்கிடுதலை எளிதாக செய்யலாம். 

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் எப்படி கணக்கிடப்படுகிறது?

நீங்கள் எப்பொழுதாவது கவனித்தது உண்டா இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளின் பிரீமியத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று ? இன்சூரன்ஸ் பிரீமியத்தை முடிவு செய்யும் பல்வேறு காரணிகள் இங்குள்ளன. இருப்பினும், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை கணக்கிடுவதற்காக தங்களின் சொந்த வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளன. உங்களின் வயது மற்றும் தொழில் ஆனது உங்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை தீர்மானி ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வளரும் வயதினை போன்று, உங்களுக்கு ஏற்படும் நோய்களும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால், பிரீமியம் அளவு தானாகவ அதிகரிக்கும். ஆகையால் தான், நிபுணர்கள் ஆரம்பகாலத்திலேயே இன்சூரன்ஸ் பிளான்களில் முதலீடு செய்வதை பரிந்துரை செய்கின்றனர். நீங்கள் செய்யும் தொழில் முறையானது, உங்களுடைய பிரீமியத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய வகிக்கிறது. உங்களின் வேலை அதிக ஆபத்துக்களால் சூழ்ந்து இருந்தால், குறைந்த ஆபத்துக்களை கொண்ட வேலையை விட பிரீமியம் தானாகவே அதிகரிக்கும் .

அடுத்ததாக உங்களின் மருத்துவ வரலாறு. உங்களுக்கான இன்சூரன்ஸ் வழங்குபவரிடம் துல்லியமான விவரங்களை வழங்குவதையே தொழில்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிப்பார்கள் என்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். ஆனால், நீங்கள் எப்போதாவது நினைத்தது உண்டா, ஏன் என்று ? சரி, அதற்கான காரணம் என்னவென்றால், நீங்கள் உங்களிடம் இருக்கும் நோயினை மறைக்கும் பொழுது, பின்னர் நிறுவனத்திற்கு அதைப் பற்றி தெரிய வரும் பொழுது உங்களின் க்ளைம் தாக்கல் நிராகரிக்கப்படலாம் மற்றும் இன்சூரன்ஸ் பிளானின் பயனை பெற முடியாமல் போய்விடும். உங்களின் உடல்நலக் குறிப்புகள் பற்றி துல்லியமான விவரங்களை வழங்கவும், இது உங்கள் பிரீமியத்தை அதிகரிக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் பல நிராகரிப்புகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். 

பெரும்பாலான ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வழங்குவதற்காக நீங்கள் மருத்துவ பரிசோதனையை செய்ய வேண்டி இருக்கும் மற்றும் செய்முறையை தொடர்வதற்கு உங்களின் ஆவணங்களை மட்டுமே நம்புகின்றனர். பொதுவாக, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வழங்குவதற்கு முன்பு உங்களின் உடல்நலம் சார்ந்த வரலாற்றை உறுதிப்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு தேவையான கவர் மற்றும் செலுத்தப்படும் பிரீமியம் கட்டணத்தையும் வழங்குகின்றன. இதன் நேரடியான அர்த்தம் என்னவென்றால், நீங்கள் மோசமான மருத்துவ வரலாற்றைக் கொண்டு இருந்தால் அல்லது மது குடிப்பவர் அல்லது புகைப் பிடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால் பிரீமியத்தில் கூடுதல் கட்டணத்தை நிறுவனம் நிர்ணயிக்கும். 

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கணக்கீடுகளை பாதிக்கும் கூடுதல் காரணிகள்

மேலே விவாதித்தது போன்று, இந்தியாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை கணக்கீடும் பொழுது குறிப்பிட்ட சில வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறது. வயது மற்றும் ஹெல்த் ஹிஸ்ட்ரி போன்றவையை தவிர உங்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கக்கூடிய சில கூடுதல் காரணிகள் உள்ளன. சில காரணிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன : 

மார்க்கெட்டிங் மற்றும் சர்வீசஸ் உடன் தொடர்புடைய செலவுகள்: மார்க்கெட்டிங் மற்றும் சர்வீசஸ் உடன் தொடர்புடைய அனைத்தும் செலவினங்களும் பெரிய எண்ணிக்கையில் இருக்கும். இதனை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பிரீமியம் வடிவத்தில் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கவர் செய்கின்றனர். இந்த செலவினங்களில், மெடிக்கல் இன்சூரன்ஸ் செலவுகள், மார்க்கெட்டிங், கமிஷன், புரோக்கரேஜ், விளம்பரங்கள் மற்றும் பல கூடுதல் செலவுகள் அடங்கும். இத்தகைய செலவுகள் உங்கள் பிரீமியத்தின்  பகுதியாக மாறும். 

சேமிப்பு மற்றும் முதலீடு: நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் மூலதன முதலீடுகளை பொதுத்துறை முதலீடுகளில் பயன்படுத்துகின்றனர். நிறுவனங்கள் தனியார் துறையில் முதலீடு செய்வதில்லை, அதிகப்படியான ஆபத்துக்கள் இருப்பதே அதற்கான காரணமாகும். பின்னால் வரும் இணக்கத்தை தவிர்க்க ஐஆர்டிஏ வழிமுறைகளின் படி அனைத்து வகையான முதலீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நீங்கள் செலுத்தும் பிரீமியம் அத்தகைய மூலதனத்தில் இருந்து பெறப்பட்ட வருமானத்திற்கு உட்பட்டது.

பாலிசி எழுத்தாக்கம்: தனிநபர் ஹெல்த் இன்சூரன்ஸ், குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களான இன்சூரன்ஸ் தயாரிப்புகளுடன் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. அவ்வாறான நிறுவனங்கள் தங்களின் பாலிசிகளை ஒரே நேரத்தில் அவர்களுடைய ஒரு சமநிலை இருப்பதற்கான வடிவில் தங்கள் பாலிசியை கவர் செய்கின்றனர். நிறுவனங்கள் ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய காரணிகளின் பரந்த அளவிலான சாத்தியக்கூறுகளை அனைத்து கோணங்களில் இருந்து பகுப்பாய்வு செய்கின்றனர்.  அத்தகைய அடிப்படையில், தங்களின் பிரீமிய அளவை முடிவு செய்கின்றனர்.

இறப்பு விகிதம்: மருத்துவ அவசரநிலை சந்தர்ப்பங்களில் இன்சூரன்ஸ் செய்தவரின் குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய செலவை இறப்பு விகிதம் குறிக்கிறது. இத்தகைய செலவினங்கள் வயது அடிப்படையில் வேறுபடும், மூத்த வாடிக்கையாளர்கள் விஷயத்தில் இத்தகைய பொறுப்புகள் எழுகின்றன. அதற்கான காரணங்கள் இவை தான் : 

  • முதியவர்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் ஒப்பீட்டளவில் அதிகமாகவே உள்ளது. 
  • வயது முதிர்ந்தவர்கள் பல உடல்நல பிரச்சனைகளால் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் மற்றும் நோய்களால் பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 
  • இன்சூரன்ஸ் தொகை அதிகம். எனவே பிரீமியம் தொகையும் அதிகம். 

பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும்படி உங்களிடம் கேட்டுக் கொள்கிறார்கள், சில உங்கள் இடத்திற்கே அவர்களின் நிபுணர்களை அனுப்பி வைக்கலாம். அவர்கள் உங்களின் தற்போதைய சுகாதார நிலைப்பாட்டை காணலாம் மற்றும் மனதில் உள்ள அனைத்து சாத்தியக்கூறுகளையும் வைத்து பிரீமியம் அளவை நிர்ணயிக்கலாம். ஏற்கனவே எந்தவொரு நோயாலும் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் பிரீமியத்தை செலுத்த வேண்டி இருக்கும். 

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் பயன்பாட்டின் நன்மைகள்

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஒற்றை வரியில் புரிந்து கொள்ள மிகவும் சிக்கலான விஷயம் என கூறுவதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதேபோன்று, இது குறித்து ஒவ்வொரு நிறுவனமும் அதற்கான சொந்த விதிமுறைகள் மற்றும் நிலைமைகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான மக்கள் இன்சூரன்ஸ் பாலிசிகள் விதிமுறைகளை அறிந்து கொள்ளவில்லை என்பது நிதர்சனம். ஆகையால், தங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு  கூடுதலான தொகையை செலுத்தக்கூடும். அவ்வாறான மக்களுக்கு தங்களின் தேவைகள் மற்றும் எவ்வளவு பிரீமியத்தை செலுத்த வேண்டும் என்பது போன்ற பாலிசி தொடர்பான அனைத்தையும் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த ஒன்றாக இது இருக்கும் . ஆமாம், ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் செயல்முறை முழுவதும் எளிதாகிவிடும். ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் வழங்கக்கூடிய சில அடிப்படை நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

  • ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் பயன்படுத்துவதன் மூலம், உங்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் பற்றி முன்கூட்டியே ஒரு யோசனையை அல்லது மதிப்பீட்டைப் பெறுவீர்கள். 
  • அதே நேரத்தில், உங்கள் தேவைகளுக்கு மற்றும் உங்கள் வருமானத்திற்கு எளிதாகப் பொருந்தக்கூடிய சிறந்த பிளானை நீங்கள் தேர்வு செய்வது மிகவும் எளிதாக இருக்கும். 
  • எந்தவொரு கூடுதல் நபரை இணைப்பதை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். 
  • இது நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதை எளிதாக்கி விடும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் மற்றும் வரி நன்மைகள்

உங்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்து இருக்க ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு செலுத்த வேண்டிய நிலையான தொகை அளவே ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியமாகும். நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உடன் பல்வேறு நன்மைகளை பெறுவீர்கள். 

  • ஒரு வாடிக்கையாளருக்கு வரி நன்மைகளைத் தீர்மானிப்பதில் ஒரு முக்கிய பங்கை கொண்டிருப்பதால், வரிக்கு கீழ் விதிக்கப்படும் வருமானத்தில் இருந்து பிரீமியம் பங்களிப்பு இருந்து வந்தால் , வருமான வரிச் சட்டம் பிரிவு 80C -ன் கீழ் உங்களுக்கு வரி நன்மைகள் கிடைக்கும். 
  • ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் செலுத்தப்படும் பிரீமியத்தில்  குடும்ப உறுப்பினர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதில் தனிநபர் , மனைவி , பெற்றோர் மற்றும் உங்களை சார்ந்த குழந்தைகள் ஆகியோருக்கான கட்டணத்தை உள்ளடக்கி உள்ளது. இவர்களை தவிர பிரீமியம் செலுத்தப்படும் பிறர் எவருக்கும் வரி விலக்கில் உரிமை இல்லை. 
  • வரி விலக்குக்கு குறிப்பிட்ட பிரீமியம் விதிக்கப்படும். இது குறிப்பிட்ட வரம்பை கடந்த பிறகு நீங்கள் வரிச் சலுகையை அனுபவிக்க முடியாது என்பதைக் குறிக்கிறது.

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்தி உங்களால் எவ்வளவு சேமிக்க முடியும்?

ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் முதலீடு செய்யும் பொழுது பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு தங்கள் மனதில் எழும் ஒரு கேள்வி என்னவென்றால், அதாவது ஒரு பெரிய தொகையை சேமிப்பதில் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் ஆல் எப்படி உதவ முடியும் ?.  இதனைப் புரிந்து கொள்வதற்கு சில உதாரணங்களை காணலாம். 

நரேஷ் என்பவர் ஒரு பெரு நிறுவனத்தில் கெளரமான சம்பளத்துடன் காலை 9 முதல் மாலை 5 மணி இடையிலான வேலையில் மகிழ்ச்சியாக உள்ளார். குடும்பத்தில் நிகழும் ஒரு திடீர் சம்பவம் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் முதலீடு பற்றி யோசிக்கச் செய்கிறது. அவருக்கான சேவையை வழங்க சந்தையில் பல போட்டியாளர்கள் இருப்பதால் அவர் குழம்பி விடுகிறார், மேலும் அவரால் சரியான முடிவை எடுக்க முடியவில்லை. இன்சூரன்ஸ் பிளான்களுக்கு இடையே இருக்கும் விலையில் வேறுபாடுகள் அவருக்கான சரியான ஒன்று எது என்பதை உறுதி செய்ய முடியாமல் அவரை குழப்பமடையச் செய்கிறது. அவர் இன்சூரன்ஸில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், அவருக்கான தேவை என்ன என்பதையும் உறுதி செய்ய முடியாது. அவர் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் முதலீடு செய்ய இருந்தாலும், அது சரியான ஒன்று அல்லது இல்லை  என்பதை அறிந்து இருக்க வாய்ப்பில்லை.

ஒரு ஏஜென்ட் மூலமாக செல்லும் பொழுது தேவையான உதவியை வழங்கவில்லை. அவருக்காக ஏஜென்ட் அளித்த ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் விலை அவருடைய பட்ஜெட்டை விட அதிகமானதாக இருக்கும். ஆன்லைனில் ஆராய்ந்து பார்க்கையில், அவர் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் பற்றி தெரிந்து கொன்டு, அதனை ஒரு வாய்ப்பாக கருதினார். பின்னர் அவர் சில அடிப்படை விவரங்களை வழங்கி பிரீமியத்தை கணக்கிட்டு உள்ளார். இதன் முடிவுகள் மற்றும் அடிப்படை ஆராய்ச்சி ஆகியவை அவருக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்த நம்பிக்கையை அளித்துள்ளது. அதே பக்கத்தில் உள்ள ஒப்பிடுதல் பக்கத்திற்கு சென்று, இந்தியாவில் உயர் மட்டத்தில் இருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அம்சங்கள் , விலை , நன்மைகள் மற்றும் கூடுதல் பலன்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கிறார். ஒப்பிடுதலுக்கு பிறகு, அவரின் பட்ஜெட்க்கு பொருந்தமான மற்றும் தம் தேவைக்கு சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கிறார். அதே தளத்தில் அவர் பாலிசியை வாங்கி, வீட்டில் இருந்தே சோதனை செய்து, பாலிசி தொடர்புடைய அவசியமான ஆவணங்களையும் விரைவில் பெற்றுக் கொள்கிறார். 

இவ்வாறு செய்வதன் மூலம் ஏஜென்ட் மூலம் வழங்கப்படும் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் 25 சதவீத ரூபாயை சேமிக்க முடிகிறது. இதனால் அவரால் ஹெல்த் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் மற்றும் ஆன்லைன் ஒப்பிடுதலின் உதவியுடன் ஒரு பெரிய தொகையினை சேமித்துக் கொள்ள முடிந்தது. 

நீங்களும் அவரைப் போன்றே சேமித்துக் கொள்ள முடியும், முயற்சி செய்து பாருங்கள் !