இப்கோ டோக்கியோ ஹெல்த் இன்ஷூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)

1

2

தொலைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

எப்பொழுது மருத்துவ செலவு வரும் என்று கூறவே முடியாது. எதிர்பாராத சமயத்தில் ஏற்படும் உடல்நலக்குறைபாடு மொத்த குடும்பத்தையும் நிலைகுலைய செய்துவிடும். அதுமட்டுமல்ல, பல நேரத்தில் எமர்ஜன்சி மருத்துவ சிகிச்சை தேவை என்ற நிலையை கொண்டு வரும். இந்தியாவில் இப்பொழுது அதிநவீன மருத்துவ முறைகள் இருக்கின்றன. ஆனால் அவையாவும் அதிகமாக செலவு வைக்கும் என்ற நிலையே உள்ளது.

அதுமட்டுமின்றி, மொத்த மருத்துவ செலவுகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உங்களுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் உடல் அளவில், மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சிகிச்சைக்கு பணத்திற்காக தேடி அலைவதும் பெரும் சிரமமாக இருக்கும். பல மருத்துவமனைகள், ஒரு தொகையை முன்கூட்டியே செலுத்தினால் மட்டுமே சிகிச்சையை ஆரம்பிப்பார்கள்.

மெடிக்ளைம் பாலிசி இருந்தால் இந்த பிரச்சனைகள் எதுவும் இல்லை. உங்களையும் உங்களின் அன்புக்கு உரியவர்களையும் இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்ஷூரன்ஸ் வாங்கி அவசர காலங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.  

இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பனி

இந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம், இந்தியன் ஃபார்மர்ஸ் ஃபெர்ட்டிலைசர்ஸ் கோ-ஆப்பரேட்டிவ் மற்றும் ஜப்பானை சேர்ந்த டோக்யோ மெரைன் & நிச்சிடோ ஃஃபையர் க்ரூப் ஆகிய நிறுவனங்களின் கூட்டு வணிகமாகும். இது 2௦௦௦ ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும். வெளிப்படையான தன்மை, விரைவான வேலை செய்து முடிக்கும் திறன், மற்றும் கஸ்டமர் திருப்தி ஆகியவை இந்த நிறுவனத்திற்கு நல்ல பெயரையும் நம்பகத்தன்மையும் கொடுத்திருக்கிறது.

78 வணிக யூனிட்களையும், 171 இரண்டாம் நிலை சென்டர்களையும் மற்றும் 4௦௦ பீமா கேன்ட்ராசையும் நிறுவியுள்ளது. க்ராஸ்ப்ரீமியம் ரூ. 3537.2 கோடிகளாக 2015-16 ஆம் ஆண்டு பதிவானது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களில், இப்கோ டோக்கியோ சிறந்து விளங்குகிறது.

வாடிக்கையாளர்கள் திருப்தியே முக்கியம் என்று கருதும் இந்த நிறுவனம், ஆண்டுக்கு இரண்டு முறைகள், தனி ஏஜென்சிகளை சர்வே எடுக்க செய்கிறது. இதன் மூலம், நிறுவனத்தில் மேல் இருக்கும் மதிப்பும், நம்பிக்கையும் மற்றும் திருப்தியும் பதிவாகிறது. தொடர்ந்து 16 ஆண்டுகளாக வணிகத்தில் இருக்கும் இந்த நிறுவனம், அனைவரின் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. க்ளைம்கள், மற்ற குறைகள் அல்லது சந்தேகங்கள் அனைத்துமே விரைவாக தீர்த்து வைக்கப்படும். செட்டில்மென்ட் ப்ராசஸ் மிகவும் விரைவானது.

இப்கோ டோக்கியோ ஜெனெரல் இன்ஷூரன்ஸ் பெற்ற பாராட்டுகள்

இப்கோ டோக்கியோ நிறுவனம் அதன் மேம்பட்ட தொழில்நுட்ப இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சருக்கும், மிக வரைவாக க்ளைம்கள் செட்டில் செய்வதற்கும் பெயர் பெற்றது. இந்திய அரசாங்கம், ஆர்எஸ்பிஒய் வெற்றிகராமான நிறைவேற்றியதற்காக, 2014ம் ஆண்டு தேசிய விருதை வழங்கி, நிறுவனத்தை அங்கீகரித்துள்ளது. இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் அவார்ட் ஃபார் எக்சலன்ஸ் இன் ஃபினான்ஷியல் ரிப்போர்ட், அமிட்டி எச்ஆர் எக்ஸலன்ஸ் அவார்ட், டாப் சிஸ்கோ அவார்ட்ஸ் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளது.

இப்கோ டோக்கியோ ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்களின் நன்மைகள்

டெக்னாலஜி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பார்த்தால், நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் அதை சார்ந்தே இருக்கிறோம். இப்கோ டோக்கியோ நிறுவனம் ஆன்லைன் வழியாகவே அனைத்து சேவைகளையும் வழங்குகிறது. இதற்கென்று ஒரு பிரத்யேக இணையதளம் உள்ளது. பாலிசி விவரங்களைப் பார்க்க, புதுப்பிக்க, ப்ரீமியம் செக் செய்ய, க்ளைம்கள் செய்ய என்று பல சேவைகள் உள்ளது.

மேலும், இப்கோ டோக்கியோ வழங்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் அனைத்துமே பல நன்மைகளுடன் வருகிறது. நீங்கள் செலுத்தும் ப்ரீமியம் தொகையை, வருமான வரி விலக்காக பெற்றுக்கொள்ளலாம். இணையத்தில் பெறப்படும் பாலிசிகள், நிறுவனத்தின் டிஜிட்டல் கையெழுத்தோடு வருகிறது.

உடல் நலத்தை குறித்து உங்களுடைய சேமிப்பு குறித்தும் எந்த ஒரு கவலையும் இன்றி எந்த ஒரு மன அழுத்தமும் இன்றி உங்களின் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மருத்துவ காப்பீடு திட்டம் பெரிய உதவியாக இருக்கும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நீங்கள் பெற்று இருந்தால் உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கும் ஏதாவது அவசர மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள நேரும் பொழுது காப்பீட்டில் நீங்கள் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். தீவிர சிகிச்சைக்கும் கவரேஜ் இருக்கிறது. மேலும் இதை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. இந்த காப்பீட்டு திட்டம் மருத்துவமனையில் அனுமதிக்கும் பொழுது ஏற்படும் செலவுகள் தவிர்த்து ஆம்புலன்ஸ் செலவுகள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு ஆகும் மருத்துவ செலவுகள் ஆகியவற்றுக்கும் காப்புறுதி அளிக்கிறது. 

இப்கோ டோக்கியோ நிறுவனத்தின் திட்டங்களில், தனிநபர் மற்றும் குழு உடல்நல காப்பீட்டுத் திட்டங்களுக்காக பதிவு செய்யலாம். வரி செலுத்தும் தனிநபர்கள் இப்கோ டோக்கியோ உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து வரிச்சலுகைப் பெறலாம். அவை காப்பீட்டு வரி விதிப்பு பிரிவின் பிரிவு 80 D இன் கீழ் வரி விலக்குகள் மற்றும் நலன்கள் ஆகியவற்றிற்கு தகுதி கொண்டது.

3000க்கும் அதிகமான நெட்வொர்க் மருத்துவமனைகளில், பாலிசிதாரர்களும் உறுப்பினர்களும் மருத்துவ அவசர தேவைக் காலங்களில், எந்தவொரு மருத்துவமனைவிலும் இருந்து பணமில்லா மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ளலாம். மருத்துவ சிகிச்சை வெளிநாட்டில் அல்லது வேறு எந்த நெட்வொர்க் மருத்துவமனையிலும் பயன்படுத்தப்பட்டிருந்தால், காப்பீடு வைத்திருப்பவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பூர்த்தி செய்யப்பட்ட க்ளைம் படிவத்துடன், அதற்குத் தேவையான பில்கள் மற்றும் ஆவணங்களை சேர்த்து சமர்ப்பித்தால், கம்பெனி க்ளைம்களை பரிசீலித்து உங்கள் கணக்கில் ரீஇம்பர்ஸ் செய்யப்படும்.

பாலிசியில் குறிப்பிட்டுள்ளபடி 24 மணி நேரத்திற்குள் தேர்ட் பார்ட்டி அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் வழியாக (டிபிஏ) உடனே தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட TPA / ஹெல்ப்லைன் வழியாக் தகவல் அளிப்பதன் மூலம், நெட்வொர்க் மருத்துவமனையில் உடனடியாக மருத்துவ உதவி பெற பெறலாம்

இப்கோ டோக்கியோ குறைந்த ப்ரீமியம் தொகையில் அதிக நன்மைகள் வழங்கும் காப்பீடுகளை தருகிறது. இதில், பின்வரும் செலவுகள் கவேரஜில் உள்ளது,

 • அறை வாடகை (போர்டிங் மற்றும் நர்சிங் செலவுகளும் சேர்த்து)
 • அனஸ்தீசியா, மருத்துவரின் ஆலோசனை சார்ஜஸ்
 • அறுவை சிகிச்சை செலவு, ஆக்சிஜன், ரத்த மாற்றுதல் செலவு, ஆப்பரேஷன் தியேட்டர் செலவுகள், மருந்து, நவீன சிகிச்சை கருவிகள், போன்றவை
 • மருந்துகளுக்கு ஆகும் செலவு
 • ஆயுர்வேதா, யூனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில், அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்றால் காப்புறுதி உண்டு.
 • ஒவ்வொரு க்ளைமிற்கும் ரூ. 3000 வரையில் ஆம்புலன்ஸ் சார்ஜஸ்
 • தினப்படி கேஷ் அல்வன்ஸ் – காப்பீட்டுத் தொகையில் 0.10%      
 • டாமிசிலரி ஹாஸ்ப்பிட்டலைசேஷன் செலவுகள் - காப்பீட்டுத் தொகையில் 20%      
 • ப்ரீ மற்றும் போஸ்ட் ஹாஸ்ப்பிட்டலைசேஷன் செலவுகள்
 • எமர்ஜன்சி மெடிக்கல் செலவுகள்

பாலிசிதாரர் பாலிசியின் கவரேஜை அதிகரிக்க கூடுதலான ப்ரீமியம் தொகையை செலுத்தலாம். இந்த ஆட்-ஆன் கவர்கள்;

 1. க்ளைம் இல்லாத ஒவ்வொரு ஆண்டும் 5% வரை கூட்டு போன்ஸ்
 2. டே கேர் அறுவை சிகிச்சை
 3. மருத்துவ பரிசோதனைக்கு ஆனா தொகை
 4. தடுப்பு மருந்து / தடுப்பு ஊசி

இந்த கூடுதலான கவரேஜ்கள் அனைத்தும் உங்களின் தேவைக்கு ஏற்ப, பாலிசிக்கு ஏற்ப நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இப்கோ டோக்கியோ ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிளான்ஸ்

இப்கோ டோக்கியோ பாலிசிகளை இரண்டு தளங்களில் வழங்குகிறது.

 1. தனிநபர் காப்பீடு
 2. குழு காப்பீடு

இது தனிநபர் மட்டுமில்லாமல் குடும்ப நலத்திற்காகவும் காப்புறுதி அளிக்கிறது. ஸ்வாஸ்த்யா கவச் ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ், இன்டிவிஜுவல் மெடிஷீல்ட் பாலிசி, க்ரிடிக்கல் இல்ல்னஸ் இன்ஷூரன்ஸ் பாலிசி, ஃபேமிலி ப்ரொட்டக்டர் பாலிசி, ஹெல்த் ப்ரொட்டக்டர் பாலிசி மற்றும் இப்கோ டோக்கியோ பர்சனல் ஆக்சிடன்ட் பாலிசி ஆகியவை ஆகும்.

ஸ்வாஸ்த்யா கவச் ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ்

இந்த பாலிசியின் தொகை 2 முதல் 5 லட்சம் வரை. இதைப்பெற வயது வரம்பு இல்லை. ஆம்புலன்ஸ் செலவு, டெய்லி கேஷ் அல்லவன்ஸ், டாமிசிலரி ஹாஸ்ப்பிடலைசெஷன் செலவுகள், ப்ரீ மற்றும் போஸ்ட் ஹாஸ்ப்பிட்டலைசெஷன் செலவுகள் போன்றவற்றிக்கு காப்புறுதி உள்ளது.

இன்டிவிஜுவல் மெடிஷீல்ட் பாலிசி

இந்த பாலிசி தனிநபரில் உடல்நலக் காப்பீட்டுத் தேவையை நிறைவேற்றுகிறது. 3 மாத குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை இந்த பாலிசியை பெற்றுக்கொள்ளலாம். இந்த பாலிசியின் தொகை 1 முதல் 5 லட்சம் வரை

க்ரிடிக்கல் இல்ல்னஸ் இன்ஷூரன்ஸ் பாலிசி

இந்த பாலிசி தீவிர நோய் சிகிச்சைக்கு வழங்கப்படுகிறது. இதற்கு எந்த வயது வரம்பும் இல்லை. தீவிர நோய்களான கேன்சர், இதயம் தொடர்பான வியாதிகள், கிட்னி செயல் இழப்பு, உறுப்பு மற்று சிகிச்சை போன்றவை அடக்கம்.

ஃபேமிலி ப்ரொட்டக்டர் பாலிசி

ஃபேமிலி ப்ரொட்டக்டர் பாலிசியில், பாசிலிதாரர், அவரின் கணவன் / மனைவி, 23 வயது வரை குழந்தைகள் மற்றும் சார்ந்திருக்கும் பெற்றோர்கள் ஆகியவர்களுக்கு காப்புறுதி நன்மைகள் கிடைக்கும். காப்பீடு தொகை 7 லட்சம் வரை.  

ஹெல்த் ப்ரொட்டக்டர் பாலிசி

அதிக செலவாகும் மருத்துவ செலவிற்கு இந்த பாலிசி உதவும். பாலிசி தொகை 5 லட்சம் முதல் தொடங்கும். இது 1௦ தீவிர நோய்களுக்கு கவரேஜ் அளிக்கிறது.

இப்கோ டோக்கியோ பர்சனல் ஆக்சிடன்ட் பாலிசி

விபத்துகள் எப்போதுமே எதிர்பாராமல் நடப்பது. அதே போல், அதற்க்கு ஆகும் மருத்துவ செலவுகளும். விபத்து காப்பீடு இருந்தால் பெருமளவில் உதவும். இந்த திட்டம், விபத்தினால் ஏற்படும் காயங்கள் அல்லது இறப்பிற்கு காப்புறுதி அளிக்கும்.

இப்கோ டோக்கியோ வழங்கும் பிற ப்ளான்களின் விவரங்கள்

 • ப்ரவசி பாரதிய பீமா யோஜனா
 • ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி
 • ஹெல்த் ப்ரொடக்டர் இன்ஷூரன்ஸ் பாலிசி
 • ஹெல்த் ப்ரொடக்டர் ப்ளஸ் பாலிசி
 • ஹோம் இன்ஷூரன்ஸ்
 • இன்டிவிஜுவல் மெடிஷீல்ட் பாலிசி
 • க்ரிடிக்கல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி
 • ட்ரேட் ப்ரொடக்டர் பாலிசி
 • ட்ராவல் இன்ஷூரன்ஸ்
 • இன்டிவிஜுவல் ஆக்சிடன்ட் பாலிசி
 • மோட்டார் இன்ஷூரன்ஸ்
 • ட்ரேட் சுவிதா பாலிசி

- / 5 ( Total Rating)