மேக்ஸ் பூப்பா ஹெல்த் இன்ஷூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)

1

2

தொலைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

மேக்ஸ் பூப்பா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த காப்பீட்டு நிறுவனம் உடல்நலக் காப்பீட்டு திட்டங்கள் வழங்குவதில் மட்டுமே தன்னுடைய சேவையை தொடர்ந்து செய்து வருகிறது. மேக்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் பூபா ஃபினான்ஸ் பிஎல்சி என்ற‌ யூ.கே நிறுவனத்தின் கூட்டு நிறுவனம் ஆகும்.

இந்த கூட்டு வணிகம் இந்தியாவில் உள்ள உடல் நல காப்பீடு தேவைகளை நிறைவேற்றுவதற்காக துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் 11 இடங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன. நிறுவனம் வழங்கும் சேவைகள் தனிநபர் மற்றும் அலுவலகங்களுக்கு குழுக்களுக்கும் கிடைக்கப் பெறுகிறது.

தி ப்ரிட்டிஷ் யுனைடெட் ப்ராவிடன்ட் அசோசியேஷன் என்ற நிறுவனத்தின் சப்ஸிடரி நிறுவனம் தான் பூப்பா குழுமம். இது யூகேவில் தனியார் தொழில் துறையில் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்திற்கு 150 நாடுகளில் மருத்துவக் காப்பீட்டை வழங்கி வருகிறது. இதுவரையில் 10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

மேக்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் உள்ள காப்பீட்டுத் துறையில், தனியார் காப்பீட்டு வணிகத்தில் பலவகையான காப்பீடுகளில் முத்திரையை பதித்து இருக்கும் ஒரு நிறுவனமாகும். ஜப்பானில் உள்ள மிக பிரமாண்டமான உடல்நலக் காப்பீட்டு நிறுவனமான மிட்ஷூய் சுமிடோமோ இன்ஷூரன்ஸ் குழுமத்துடன் இணைந்து சமீபகாலமாக மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் என்ற பெயரில் ஒரு கிளை நிறுவனமும் உள்ளது. இது லைஃப் இன்சூரன்ஸ் திட்டங்களை மட்டும் வழங்கி வரும் ஒரு நிறுவனமாகும்.

90 சதவீதத்திற்கும் அதிகமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைகொண்டுள்ள இந்த காப்பீட்டு நிறுவனம் ஹெல்த்கேர் துறையில், மிகச் சிறந்த சேவையை வழங்குவதில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துள்ளது.

8562 கோடிகள் மதிப்புள்ள மேக்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 300 நகரங்களில் 500க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன. இன்னும் தெளிவாக சொல்வதானால், 57 ஆயிரம் பணியாளர்களுடன் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது.

வாழ்த்துக ளும்விருதுகளும் - மேக்ஸ் இந்தியா லிமிடெட்

 1. கன்ஸ்யூமர் சூப்பர்பிராண்ட்ஸ் 2008ம் ஆண்டு, 3வது எடிஷனில், மேக்ஸ் நியூ யார்க் லைஃப் நிறுவனத்தை, இந்தியாவின் “சூப்பர் ப்ராண்ட்” என்று அங்கீகரித்தது.
 2. சிஐஐ-எக்ஸிம் வங்கி கமன்டேஷன் சிறப்பான வணிகத்திற்க்கான பாராட்டு சான்றிதழ் வழங்கியது
 3. சிஐஓ 100 விருது, தொழில்நுட்பத்தை திறம்பட உபயோகிப்பதற்காக

அமசங்கள்

குறிப்புகள்

நெட்வொர்க் மருத்துவமனைகள்

3500+

முன்பே இருக்கும் நோய்களுக்கு வெய்ட்டிங் பீரியட்

4 வருடங்கள்

இன்கர்ட் க்ளைம்ஸ் ரேஷியோ

51.96%

இதுவரை வழங்கிய பாலிசிகளின் எண்ணிக்கை

307007

தீர்க்கப்பட்ட குறைகள்

100.00%

புதுப்பிக்கப்படும் காலம்

லைஃப்டைம்

ஏன் மேக்ஸ் பூப்பா ஹெல்த்கேர் நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்?

உடல் நலக் காப்பீட்டு திட்டங்களின் முக்கியத்துவம் பற்றிஇங்கு பலரும் அறியவில்லை. எமர்ஜென்சி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நேரத்திலும் அவசரகால மருத்துவ செலவு ஏற்படும் காலத்திலும் உங்களுக்கு உடல் நலக் காப்பீட்டு திட்டம் மிகப்பெரிய பாதுகாப்பை வழங்கும்.

மேக்ஸ் பூப்பா காப்பீட்டு திட்டங்கள் அனைத்து தரப்பினர் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு வரம்பில் வருமானம் ஈட்டும் மக்களுக்காகவும் அவர்களின் வருமானத்திற்கு உட்பட்டதாக இருக்குமாறும் உடல்நலக் காப்பீட்டு திட்டங்கள் மூன்று வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதிகள்

உடல்நலக் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய அனைத்து விவரங்களும் இணையத்தில் உள்ளன. உடல் நலக் காப்பீட்டு திட்டம் பற்றிய விவரங்கள் தெரிய விரும்புவோர் மற்றும் காப்பீட்டை வாங்க விரும்புவோர் தங்களின் சௌகரியமான இடத்திலிருந்தே அந்த விவரத்தை பெற்றுக்கொண்டு ஆன்லைனிலேயே பணம் செலுத்தி காப்புறுதியை பெற்றுக் கொள்ளலாம். எளிதாக மிகவும் சுலபமாக அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளதால் உங்களுக்கு காப்பீட்டு திட்டங்களை பெறுவதில் எந்தவித சிக்கலும் இருக்காது. மேலும் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தின் காப்பீட்டுத் திட்டங்களை பிற நிறுவனத்தோடு ஒப்பிட்டு பார்த்து தங்களின் தேவைகள் மற்றும் பட்ஜெட் ஆகியவற்றை கணக்கில் கொண்டு மிகச்சிறந்த உடல்நலக் காப்பீட்டு திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இது நிறுவனத்தில் நீங்கள் வாங்கிய காப்பீடு திட்டத்தின் கிளைம்களை அதன் ஸ்டேட்டஸ்ஸையும் இணையத்திலேயே தெரிந்துகொள்ளலாம். காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையையும் நீங்கள் இணையத்திலேயே செலுத்தலாம்.

மேக்ஸ் பூப்பா ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ்

இந்த காப்பீட்டு திட்டங்களைமேக்ஸ்பூப்பா நிறுவனம் தனிநபர் குடும்பம் பிற குடும்ப உறுப்பினர் மற்றும் ஃபிக்ஸட் பலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கியுள்ளது.

வரிசை எண்

மேக்ஸ் பூப்பா ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ்

1

கோ ஆக்டிவ் டிஎம்

2

ஹெல்த் கம்பானியன்

3

ஹார்ட்பீட் இன்ஷூரன்ஸ் பாலிசி ஃபார் இன்டிவிஜுவல்

4

ஹார்ட்பீட் – ஃபேமிலி ஃபர்ஸ்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி

5

ஹார்ட்பீட் – ஃபேமிலி ஃப்ளோட்டர்  இன்ஷூரன்ஸ் பாலிசி

6

க்ரிட்டிகேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்

7

பர்சனல் ஆக்சிடென்ட் – ஹெல்த் அஷ்யூரன்ஸ் இன்ஷூரன்ஸ் பாலிசி

மேக்ஸ் பூப்பா கோ ஆக்டிவ் டிஎம்

கோ ஆக்டிவ் டிஎம் - மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் செலவினங்களுக்கான காப்புறுதியை வழங்குகிறது. உங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு நீங்கள் இந்த பாலிசியை தேர்வு செய்வதற்கு பல்வேறு ஆப்ஷன்களை வழங்குகிறது. உங்களின் தேவைக்கேற்றவாறு பலவகையான பலன்களை பட்டியலிட்டுள்ளது. மேலும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த காப்பீட்டு திட்டம் உங்களுக்கு பரிசுகளையும் வழங்குகிறது.

கோ ஆக்டிவ் டிஎம் உங்கள்உடல்நலத்திற்கு மட்டும் பாதுகாப்பு வழங்கவில்லை. சேமிப்பிற்கும் பாதுகாப்பு வழங்குகிறது. இந்தத் திட்டம் மிகக் குறைந்த செலவில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் (கணவன் / மனைவி மற்றும் 4 குழந்தைகள் வரை) தேவையான காப்புறுதியைவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் அம்சங்கள்

 1. காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவசெலவுகளுக்கான காப்புறுதியும், சிகிச்சைக்கான காப்புறுதியும் வழங்குகிறது.
 2. ஐந்து இலட்சத்திற்கும் மேலாக காப்புறுதி தொகை இருந்தால் அறை வாடகையின் மேல் எந்த கேப்பிங் தொகையும் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சமயத்தில் அங்கு தங்குவதற்கான அனைத்து செலவுகளுக்கான காப்புறுதியையும் வழங்குகிறது. (சூட்ரூம் அல்லது அதற்கும் மேலான வசதிகளை கொண்ட மருத்துவ தங்கும் அறைகளுக்கு காப்புறுதி இல்லை)
 3. குறிப்பிட்ட ஏதாவது ஒரு நோய்க்காக அல்லது மருத்துவ சிகிச்சைக்காகமருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முன்பு மற்றும் அதற்கு பிறகான செலவினங்கள் ஆகியவற்றிற்கு ரீ-இம்பர்ஸ்மன்ட் உள்ளது. சிகிச்சைக்கான காலம் நீங்கள் மருத்துவமனையில் அழிக்கப்பட்ட 90 நாட்கள் முன்பு வரையிலும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன 180 நாட்கள் வரையிலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். உட்புற நோயாளிகள் மருத்துவ கண்காணிப்பு, டே கேர் சிகிச்சை மற்றும் டாமிசிலரி ஹாஸ்பிட்டலைஸேஷன் ஆகியவை இந்த நிறுவனத்தின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு இருந்தால் காப்புறுதிக் கொள்கையில் இணைக்கப்படும்.
 4. உடல் உறுப்பு தானம் வழங்குபவரின் மருத்துவ செலவும், தானம் வழங்குபவரின் உட்புறநோயாளி சிகிச்சை மற்றும் தங்கும் நாட்களுக்கான செலவுகளும் காப்பீட்டு திட்டத்தில் அடங்கும்.
 5. ஒரு சில குறிப்பிட்ட நோய்களுக்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்கும் நீங்கள் வேறு மருத்துவர்களிடம் இருந்துஇரண்டாவது மதிப்புரையை பெற்றுக் கொள்ளலாம்.
 6. தொலைபேசி வழியாக உங்களுக்கு ஆலோசனையை எந்த சமயத்திலும் பெற்றுக் கொள்ளலாம். உளவியலாளர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் உங்களுக்கு திருமணத்திற்கு முன்பான ஆலோசனை, நியூட்ரிசன் சம்பந்தப்பட்ட ஆலோசனை, மன அழுத்தத்தில் இருந்து எப்படி விடுபடுவது, குழந்தைகளை வளர்ப்பது ஆகியவற்றை பற்றி நீங்கள் எந்த சமயத்திலும் கவுன்சிலிங் பெற்றுக் கொள்ளலாம்.

மேக்ஸ் பூப்பா ஹெல்த் கம்பானியன்

ஹெல்த் கம்பானியன் என்பது குறைந்த செலவில் பல்வேறு வகையான காப்பீட்டு நன்மைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட,சிறியகுடும்பத்திற்கு பொருத்தமாகஇருக்கும் ஒரு உடல் நலக் காப்பீட்டு திட்டம் ஆகும். நேரடியான கிளைம் செட்டில்மெண்ட், பணமில்லாமருத்துவ வசதி, மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ப்ளான் ரின்யூவல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கியமான அம்சங்களாகும்.

வேரியன்ட் 1

காப்புறுதி தொகைக்கான ஆப்ஷன்கள் 3 லட்சம் மற்றும் 4 லட்சம்.

இந்த காப்பீட்டு திட்டத்தை நீங்கள் வருடாந்திர கணக்காக ஒவ்வொரு ஆண்டுக்கும் டாப் அப் செய்து கொள்ளலாம். அதன் கணக்கு ஆன்யுவல் அக்ரிகேட் டிடக்டபிள் ஆப்ஷன் ஒரு இலட்சம் 2 இலட்சம் 3 இலட்சம் 4 லட்சம் 5 லட்சம் மற்றும் 10 லட்சம்.

அம்சங்கள்

 1. அனைத்து வகையான மருத்துவ சிகிச்சைகளையும் இந்த காப்புறுதியில் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட வகையான மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமே பயணிக்க கூடிய காப்பீட்டுத் திட்டம் இது இல்லை. டேகேர் சிகிச்சைகளும் இதில் அடங்கும்.  வெளிப்புற நோயாளியாக பெற்றுக்கொள்ளும் சிகிச்சைக்கு காப்புறுதி கிடையாது.
 2. உங்களுடைய பேஸ் காப்பீட்டுத் தொகை தீர்ந்து விட்டால், அதற்காக ஏற்கனவே க்ளைம் செய்திருந்தால், காப்பீட்டு திட்டத்தின் கீழ் கூடுதலான காப்புறுதி தொகையை உயர்த்தி கொள்ளலாம். இந்தத் தொகைக்கு நீங்கள் காப்பீடு பெற்றுள்ளீர்கள் அதை சமமான தொகையை கூடுதலாக தொகையாககாப்பீட்டில் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இது ஏற்கனவே காப்புறுதி பெற்ற கான சிகிச்சையாக அல்லாமல் அதற்கு தொடர்பில்லாத ஏதாவது ஒரு உடல் நலக்கோளாறு ஆக இருக்க வேண்டும்.
 3. உடல் உறுப்பு தானம் வழங்குபவரின் மருத்துவ செலவும், தானம் வழங்குபவரின் உட்புறநோயாளி சிகிச்சை மற்றும் தங்கும் நாட்களுக்கான செலவுகளும் காப்பீட்டு திட்டத்தில் அடங்கும்.

வேரியன்ட் 2

காப்புறுதி தொகைக்கான ஆப்ஷன்கள் 5 லட்சம், 7.5 லட்சம், 10 லட்சம் மற்றும்12.5 லட்சம்.

இந்த காப்பீட்டு திட்டத்தை நீங்கள் வருடாந்திர கணக்காக ஒவ்வொரு ஆண்டுக்கும் டாப் அப் செய்து கொள்ளலாம். அதன் கணக்கு ஆன்யுவல் அக்ரிகேட் டிடக்டபிள் ஆப்ஷன் ஒரு இலட்சம், 2 இலட்சம், 3 இலட்சம், 4 லட்சம், 5 லட்சம் மற்றும் 10 லட்சம்.

அம்சங்கள்

 1. அறை வாடகையின் மேல் எந்த கேப்பிங் தொகையும் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சமயத்தில் அங்கு தங்குவதற்கான அனைத்து செலவுகளுக்கான காப்பு உறுதியையும் வழங்குகிறது. (சூட்ரூம் அல்லது அதற்கும் மேலான வசதிகளை கொண்ட மருத்துவ தங்கும் அறைகளுக்கு காப்புறுதி இல்லை)
 2. அனைத்து வகையான மருத்துவ சிகிச்சைகளையும் இந்த காப்புறுதியில் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட வகையான மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமே பயனளிக்க கூடிய காப்பீட்டுத் திட்டம் இது இல்லை. டேகேர் சிகிச்சைகளும்இதில் அடங்கும்.  வெளிப்புற நோயாளியாக பெற்றுக்கொள்ளும் சிகிச்சைக்கு காப்புறுதி கிடையாது.
 3. ஆயுஷ் திட்டத்தின்கீழ் உட்புற நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறலாம் (AYUSH –ஆயுர்வேதம் யுனானி சித்தா மற்றும் ஹோமியோபதி)
 4. உடல் உறுப்பு தானம் வழங்குபவரின் மருத்துவ செலவும், தானம் வழங்குபவரின் உட்புற நோயாளி சிகிச்சை மற்றும் தங்கும் நாட்களுக்கான செலவுகளும் காப்பீட்டு திட்டத்தில் அடங்கும்.
 5. வருமான வரி சட்டத்தின் படி 80D பிரிவில் உங்களுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும்.

வேரியன்ட் 3

காப்புறுதி தொகைக்கான ஆப்ஷன்கள் 15 லட்சம், 2௦ லட்சம், 30 லட்சம், 50 லட்சம் மற்றும்1 கோடி.

இந்த காப்பீட்டு திட்டத்தை நீங்கள் வருடாந்திர கணக்காக ஒவ்வொரு ஆண்டுக்கும் டாப் அப் செய்து கொள்ளலாம். அதன் கணக்கு ஆன்யுவல் அக்ரிகேட் டிடக்டபிள் ஆப்ஷன் ஒரு இலட்சம், 2 இலட்சம், 3 இலட்சம், 4 லட்சம், 5 லட்சம் மற்றும் 10 லட்சம்.

அம்சங்கள்

 1. அறை வாடகையின் மேல் எந்த கேப்பிங் தொகையும் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சமயத்தில் அங்கு தங்குவதற்கான அனைத்து செலவுகளுக்கான காப்பு உறுதியையும் வழங்குகிறது. (சூட்ரூம் அல்லது அதற்கும் மேலான வசதிகளை கொண்ட மருத்துவ தங்கும் அறைகளுக்கு காப்புறுதி இல்லை)
 2. காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவசெலவுகளுக்கான காப்புறுதியும், சிகிச்சைக்கான காப்புறுதியும் வழங்குகிறது.
 3. ஆயுஷ் திட்டத்தின்கீழ் உட்புற நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறலாம் (AYUSH –ஆயுர்வேதம் யுனானி சித்தா மற்றும் ஹோமியோபதி)
 4. இரண்டு வருடங்களுக்கு பாலிசி எடுத்தால் காப்பீட்டு ப்ரீமியம் தொகையில் 12.5% தள்ளுபடி உண்டு.

ஹார்ட்பீட் ஃபேமிலி பிளாட்டினம் ப்ளான்

 1. இந்தத் திட்டத்தின் கீழ் காப்புறுதி தொகை 2 இலட்சம் 3 இலட்சம் மற்றும் 4 லட்சம் என்று உள்ளது.
 2. மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பாக 30 நாட்கள் வரையிலும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்த பிறகு 60 நாட்கள் வரையிலுமான மருத்துவ செலவுகளுக்கு காப்புறுதி அளிக்கிறது.
 3. டாமிசிலரி செலவினங்களுக்கும் கூடுதலான பலன்களை வழங்குகிறது. இதில் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறுவதற்கான காப்புறுதியும் உள்ளது.
 4. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பகால சிகிச்சைகளுக்கான செலவு இரண்டு குழந்தைகள் வரை, இந்த திட்டத்தில் அனுமதி உண்டு. இந்த சலுகை பெறுவதற்கு கணவன் மனைவி இருவரும் இந்தத் திட்டத்தில் குறைந்தது இரண்டு வருடங்களாவது பாலிசிதாரர் ஆக இருக்க வேண்டும்.
 5. காப்பீட்டாளர் குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பொழுது அதற்கான செலவுகளும் இந்த காப்பீட்டு திட்டத்தில் அடங்கும்.
 6. மேக்ஸ் பூப்பா ஹெல்த் இன்சூரன்ஸ் மருத்துவமனை லிஸ்ட்டில் உள்ள ஏதேனும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை மேற்க்கொண்டால், பணமில்லா சிகிச்சையைப் பெற நான்கு மணி நேரத்திற்குள் உங்களுக்கு அப்ரூவல் வழங்கப்படும்.

ஹார்ட்பீட் – ஃபேமிலி ஃபர்ஸ்ட்இன்ஷூரன்ஸ் பாலிசி

 1. . இந்தத் திட்டத்தில் சேருவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை
 2. மருத்துவமனையில் அனுமதிக்கும்பொழுது ஏற்படும் செலவுகளுக்கு உண்டு.
 3. பாலிசியின் காலம் ஒன்று முதல் இரண்டு வருடங்கள் வரை.
 4. கூடுதலான பிரீமியம் எதுவும் செலுத்தாமல் எனவே பிறந்த குழந்தைக்கு காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் உள்ளது.

ஹார்ட்பீட் –  ஃபேமிலி ஃப்ளோட்டர் இன்ஷூரன்ஸ் பாலிசி

 1. 3500 க்கும் அதிகமான நெட்வொர்க் மருத்துவமனைகள் பணமில்லா சிகிச்சை பெற வசதி உள்ளது.
 2. காப்புறுதி தொகை இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை இருக்க வேண்டும்.
 3. மற்ற காப்பீட்டு திட்டங்களில் உள்ள அம்சங்கள் இந்தப் பாலிசியிலும் உள்ளது.

க்ரிட்டிகேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்

மேக்ஸ் பூப்பா க்ரிட்டி கேர்ப்ளான் எதிர்பாராத சமயத்தில் கண்டறியப்படும் தீவிரமான உயிர்கொல்லி நோய்களுக்கு,அதன் பொருட்டு ஏற்படும் எதிர்பாராத மருத்துவ செலவினங்களுக்கும் சிகிச்சைக்கும் காப்புறுதி அளிக்கிறது.

 1. காப்பீட்டாளருக்கு தீவிர நோய் இருப்பது கண்டறியப்பட்டால் ஒரு குறிப்பிட்ட பெரிய அளவிளான தொகையை நிறுவனம் வழங்கும். ஆனால் நோய் கண்டறியப்பட்ட நாள் முதல் குறைந்தபட்சம் 30 நாட்களுக்காவது காப்பீட்டாளர் உயிருடன் இருக்க வேண்டும்.
 2. மாரடைப்பு, கேன்சர், கிட்னி செயல் இழப்பு, ஏதோ ஒரு முக்கிய உறுப்பு செயலிழப்பு, மாற்று சிகிச்சை, காதுகேளாமை பார்வை இழப்பு, பக்கவாதம், போன்ற பல தீவிர நோய்களுக்கான காப்புறுதியை இந்தத் திட்டம் வழங்குகிறது.
 3. 18 வயது முதல் 65 வயதுவரையில் இருப்பவர்களுக்கு இந்த காப்பீட்டுத் திட்டத்தினை பெற்று பயன்பெறலாம்.
 4. இந்த பாலிசியின் காலம் 2 முதல் 3 ஆண்டுகள் வரை.
 5. நேரடியான க்ளைம் செட்டில்மென்ட் செய்யப்படும்.

பர்சனல் ஆக்சிடென்ட் – ஹெல்த் அஷ்யூரன்ஸ் இன்ஷூரன்ஸ் பாலிசி

விபத்தினால் ஏற்படும் மரணத்திற்கான காப்பீடு தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், விபத்தினால் ஏற்படும் தற்காலிக முடக்கம் அல்லது நிரந்தரமானமுடக்கம் ஆகியவற்றுக்கும் அவருடன் சேர்ந்து பலவகையான நன்மைகளையும் இந்த காப்பீட்டு திட்டம் வழங்குகிறது.

 1. 18 வயது முதல் 65 வயது வரையில் இருக்கும் எவரும் இந்த காப்பீட்டுத் திட்டத்தினை பெற்று பயன்பெறலாம். புலிகளைப் பொறுத்தவரை 5 வயது முதல் 21 வயது வரைஇது பொருந்தும்.
 2. இந்த பாலிசியின் காலம் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை
 3. இதன் காரணமாக இறப்பு ஏற்பட்டாலோ அல்லது வேறு சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் 100 சதவிகித காப்புறுதி தொகை வழங்கப்படும்.
 4. நிரந்தரமாக செயலற்றுப் போகும் தன்மை இருந்தால் காப்புறுதி தொகையில்125% நஷ்ட ஈடாக வழங்கப்படும். இவை அன்றி பார்லியில் டிஸ்எபிலிட்டிக்கு நூறு சதவிகிதம் காப்புறுதி தொகை வழங்கப்படும்.
 5. இந்த காப்பீட்டு திட்டத்தின் பலன் உலகம் முழுவதிலும் பெற்றுக்கொள்ளலாம்.
 6. காலம் முழுவதும் இதை புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
 7. இதற்கென்று தனியாகஅமைக்கப்பட்டிருக்கும் கஸ்டமர் சர்வீஸ் குழுவின் உதவியோடு நீங்கள் நேரடியாக க்ளைம் செட்டில்மென்ட்வைத்துக் கொள்ளலாம்.
 8. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாலிசிதாரர் இந்த பாலிசியை வைத்துக் கொண்டிருந்தால் அதற்கு அடுத்த ஆண்டுகள் புதுப்பிக்கும்போதுபிரீமியத்தில் தள்ளுபடி வழங்கப்படும்.

மேக்ஸ் பூப்பா ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஏன் வாங்க வேண்டும்?

ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கும் பொழுது மேக்ஸ் பூப்பா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஏன் தேர்வு செய்யவேண்டும் என்பதற்கான காரணங்கள் பின்வருமாறு.

பணமில்லா மருத்துவ சிகிச்சை: நாடு முழுவதிலும் உள்ள மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நெட்வொர்க் மருத்துவமனைகளில் எந்த நேரத்திலும் பணமில்லா மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளலாம். மருத்துவமனையில் இருந்து தகவல் அளிக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள்ளேயே உங்களுக்கு இந்த பலன் கிடைக்கப் பெறும்.

முழுகாப்புறுதி: அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரையிலும் உடல்நலக் காப்பீடு திட்டத்தைஇந்த மருத்துவ வழங்குகிறது.

சர்வதேச இன்ஷூரன்ஸ்: மேக்ஸ்பூப்பா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம்ஒரு சர்வதேச நிறுவனம் ஆகும். குறிப்பிட்ட பிளான்களின் கீழே, உதாரணமாக மேக்ஸ் பூப்பா பிளாட்டினம் பிளான் என்னும் திட்டத்தின் கீழ், பாலிசிதாரருக்கு சர்வதேச அளவில், நெட்வொர்க்கில் இணைந்துள்ள நாடுகளில், ஒன்பது முக்கியமான தீவிர நோய்களுக்கான சிகிச்சையை பணம் இல்லாமல் மேற்கொள்ளலாம். இதில் மொத்தம் 190 நாடுகளில் உள்ள மருத்துவமனைகள் உள்ளன. கேன்சருக்கான சிகிச்சை, உறுப்பு மாற்றம், போன்ற தீவிர சிகிச்சைகளுக்கு இந்த திட்டம் காப்புறுதி அளிக்கிறது.

கர்ப்ப கால பலன்கள்: பாலிசி வாங்கிய பின்னே ஒரு வருட காலத்திற்குப் பின், இந்த நன்மை கிடைக்கப் பெறும். அக்கால மருத்துவ செலவினங்களுக்கு இந்தத் திட்டம் உறுதி அளிக்கும். இந்த திட்டத்தின்படி கிளைகள் செட்டில் ஆவதற்கு முன்பே குழந்தை பிறந்து விட்டால், அது தானாகவே க்ளைம் செட்டில்மென்ட்டில் இணைத்துக் கொள்ளப்படும்.

குடும்பங்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள்: மேக்ஸ் பூப்பா நிறுவனம் பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்கும் தேவைப்படும் வகையில் பல குடும்பங்களுக்கான காப்பீட்டு திட்டத்தை வழங்கி வருகிறது.

காலம் முழுவதும் புதுப்பித்துக் கொள்ள வசதி: ஒவ்வொரு பாலிசியும் குறிப்பிட்ட காலம் வரையும் செல்லுபடியாகும் என்று அமைக்கப்பட்டிருந்தாலும், வாழ்நாள் காலம் முழுவதும் நீங்கள் இதை புதுப்பித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

மேக்ஸ் பூப்பா மருத்துவ காப்பீட்டின் நன்மைகள்

டெய்லி கேஷ் கெயின் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் 45 நாட்களுக்கு வரை மருத்துவமனையில் தினமும் ஏற்படும் சிறுசிறு செலவுகளுக்கான தொகையை டெய்லிஅலவன்ஸாக ரூபாய் 4 ஆயிரம் வரையிலும் பெற்றுக் கொள்ளலாம்.

டைரக்ட் ‌க்ளைம் அக்ரிமென்ட் - டிபிஏ-வின் எந்த தலையீடும் இல்லை. உங்களுக்கு கிளைம் செட்டில்மென்ட் மிகவும் சுலபமாகஇருக்கும்.

க்ளோபல் எக்ஸ்டென்ஸிவ் இன்ஷூரன்ஸ் – இந்த நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டு உலகம் முழுவதிலும் உள்ள 190நாடுகளில் பல்வேறு சிகிச்சைகளை பணமில்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.

காலம் முழுவதும் புதுப்பித்துக்கொள்ள வசதி - ஒவ்வொரு பாலிசியும் குறிப்பிட்ட காலம் வரையும் செல்லுபடியாகும் என்று அமைக்கப்பட்டிருந்தாலும், வாழ்நாள் காலம் முழுவதும் நீங்கள் இதை புதுப்பித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

கட்-ப்ரைஸ் - இரண்டு மாதம் முதல் 12 மாதங்கள் வரையிலான பாலிசிகளுக்கு நீங்கள் தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்.

க்ரூஷியல் இல்னஸ் ப்ளான் - காப்பீட்டாளருக்கு தீவிர நோய் இருப்பது கண்டறியப்பட்டால் ஒரு குறிப்பிட்ட பெரிய அளவிளான தொகையை நிறுவனம் வழங்கும். ஆனால் நோய் கண்டறியப்பட்ட நாள் முதல் குறைந்தபட்சம் 30 நாட்களுக்காவது காப்பீட்டாளர் உயிருடன் இருக்க வேண்டும்.

பர்சனல் ஆக்சிடென்ட் ப்ளான் - இந்த பாலிசியில் இணைக்கப்படும் ரைடரை பொருத்து, காப்புறுதி தொகை மொத்தமாக, விபத்தினால் ஏற்படும் இறப்பிற்கும் அல்லது செயலிழந்து போனாலோ வழங்கப்படும்.

வரிச்சலுகை – வருமான வரி சட்டம் 1961-ன்படி, நீங்கள் இந்த நிறுவனத்தில் வாங்கும் மருத்துவ காப்பீடுகளின் ப்ரீமியம் தொகையை வருமான வரி விலக்காக 80d இன் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம்.

மேக்ஸ் பூப்பா ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பித்தல்

தொடர்ந்து காப்புறுதி பெற்றோரும் அனைத்து உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களையும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு சில பாலிசிகள் 2 முதல் 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அனைத்து பாலிசியை மே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காலாவதியாகிவிடும். எனவே அந்த தேதிக்குள் பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை காலாவதியாகும் தேதியை தவறவிட்டாலும் அதற்குப் பின்பும் 30 நாட்கள் கூடுதலான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 30 நாட்களுக்குள் அதிகப்படியான பிரீமியம் எதுவும் செலுத்த அவசியம் இல்லாமல் நீங்கள் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். அந்த குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பிரீமியத்தைச் செலுத்தி பாலிசியை புதுப்பித்துக் கொள்ள தவறினால்காப்பீட்டுக் கொள்கையின்படி உள்ள எந்த நன்மைகளும் பலன்களும் கிடைக்காது. பாலிசியை நிறுவனத்தின் இணையதளத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம். அதேபோல பாலிசியின் விவரங்களை பதிவிட்ட பின்னே பிரீமியம் தொகையை இணையதளத்தில் ஆன்லைன் பேமென்ட்கள் வழியாகவே செலுத்தலாம்.

- / 5 ( Total Rating)