நியூ இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)

1

2

தொலைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த  காப்பீட்டு நிறுவனம் ஆகும். இது 1919ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தனக்கென்று மிகப்பெரிய தளத்தை வைத்துக்கொண்டு செயல் புரிந்து வருகிறது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஏறக்குறைய 160 காப்பீட்டு திட்டங்களுடன் பல்வேறு வகையான காப்புறுதிகளை வழங்கி வருகிறது. தனி நபர் காப்பீட்டு திட்டங்கள் மட்டுமல்லாமல் இந்த நிறுவனம் குழுக்களுக்கும் சிறு மற்றும் மீடியம் பிசினஸ், கிராமப்புற நிறுவனங்கள், மைக்ரோஃபினான்ஸ்இன்று பல்வேறு வகையான குழுக்களுக்கும் காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் 20 நாடுகளில் கால் பதித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளது. CRISIL நிறுவனத்தால் AAA ரேட்டிங் பெறப்பட்ட ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்த ரேட்டிங் நிதித் தன்மையின்எந்த குறையில்லாத செயல்பாடுகளும், மேம்பட்ட நிதி வசதிமற்றும்ஸ்திரத் தன்மையுடன் செயல்பட்டு வருவதை குறிப்பதாகும். வியாபம் இந்த நிறுவனம்தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவசியமான பயனுள்ள காப்பீட்டு திட்டங்களை வழங்குவதில் திறம்பட செயல்பட்டு வருகிறது என்பதை குறிக்கும்.

நியூ இந்தியா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட சிறப்புகள்

இந்தியாவின் பப்ளிக் செக்டார் நிறுவனங்களில் உள்ள மிகப்பெரிய ஒரு காப்பீட்டு நிறுவனமாகும். முழு நிறுவனமும் இந்திய அரசாங்கத்தின் ஸப்ஸிடியாக செயல்பட்டு வருகிறது.

பப்ளிக் செக்டார் நிறுவனமாக இருப்பதால் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தநிறுவனமாக செயல் புரிந்து வருகிறது.

ஏற்கனவே மேற்கூறியபடி அதிகபட்ச ரெட்டியுடன் சிறப்பான நிதிநிலைமைமற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை தீர்த்து வைப்பதில் முதலிடத்திலும் வகித்து வருகிறது.

மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இல்லாத அளவுக்கு இந்தியா முழுவதும் மூவாயிரத்திற்கும் அதிகமான அலுவலகங்களை கொண்டு மிகப் பெரிய நெட்வொர்க் உடன் சிறந்த சேவைகளை அளித்து வருகிறது நியூ இந்தியா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம்.

நியூ இந்தியா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் க்ளைம்ஸ் ப்ராசஸ்

நீங்கள் இந்த நிறுவனத்தில் காப்பீட்டாளர் ஆக இருந்தால்,உடல்நலக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கிளைம் செய்ய வேண்டும் என்றால் பின்வரும் விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

இதற்கு முன்பு நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஏதாவது காயம் அல்லது நோய் இருந்து இருந்தால் அதைப் பற்றி உங்களின் கவரேஜ் அளிக்கும் ஆபீஸில் அல்லது டிபிஏ விடமோ உடனே தெரியப்படுத்தவும்.

அவசரகால மருத்துவ சிகிச்சையின் போது நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பின்வரும் விபரங்களை தெரியப்படுத்த வேண்டும்.

  • பில், பணம் செலுத்திய ரசீதுகள் மற்றும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட விவரங்கள்
  • மருத்துவமனை அல்லது பரிசோதனையாளர்கள் அளித்த மெமோஸ்
  • பேதாலஜிஸ்ட்அளித்தமருத்துவ பரிசோதனையின் விவரங்கள் மற்றும் அதற்கு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன், அதற்கு பணம் செலுத்தப்பட்ட ரசீது மற்றும் மருத்துவ அறிக்கை.
  • எந்த விதமான சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்ற விவரங்கள் அடங்கிய மருத்துவச் சான்று அதனுடன் கூடிய பணம் செலுத்திய ரசீது
  • மருத்துவர் , ஆலோசகர் அல்லது விஜய் சம்பந்தப்பட்ட மருத்துவ பரிந்துரைக்கான விவரங்கள், பில்கள், பணம் செலுத்தப்பட்டரசீதுகள் மற்றும் விரிவான மருத்துவ அறிக்கை.
  • சிகிச்சையைஅளித்த மருத்துவர் அளித்த இறுதி சான்று.
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்ததும் விசா செய்த பிறகும் மருத்துவ உதவி தேவைப்படும் சமயத்தில், கிளைம்செட்டில்மென்ட்பெறசிகிச்சை முடிந்த ஏழு நாட்களுக்குள் அனைத்து விவரங்களையும் அனுப்ப வேண்டும்.

நியூ இந்தியா ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த  காப்பீட்டு நிறுவனம், இந்தியாவில் உள்ள பல காப்பீட்டு நிறுவனங்களை விட அதிகமான நம்பகத்தன்மை வாய்ந்தது.

யூனிவர்சல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஸ்கீம் ஃபார் பிபிஎல் ஃபேமிலீஸ்

இந்த நிறுவனம் வழங்கும் மிகவும் அதிக பலனுள்ள காப்பீட்டு திட்டம் ஆகும். இந்த காப்பீடு திட்டத்தில் தீவிரமான நோய்களுக்கும் சாதாரணமான உடல்நலக் கோளாறுகளுக்கும் என அனைத்திற்கும் ரீஇம்பர்ஸ்மென்ட் உண்டு.

நியூ இந்தியா ஃப்ளோட்டார் மெடிக்ளைம் பாலிசி

இன்ஷூரன்ஸ் ப்ளான் காப்பீட்டாளருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் குறைந்த செலவில் முழுமையான மருத்துவ பாதுகாப்பை அளிக்கிறது. கூடுதலான எந்த செலவும் இல்லாமல் காப்பீட்டு தொகையை அதிகரித்துக் கொள்ளலாம் . மேலும் ஆண்டு முழுவதும் இலவசமாக மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளலாம்.

நியூ இந்தியா ஆஷா கிரண் பாலிசி

நியூ இந்தியா நிறுவனம் வழங்கும் இந்த திட்டம், குடும்ப மருத்துவமனை செலவுகளையும், பெற்றோர்களுக்கு நடக்கும் விபத்து செலவுகளையும் காப்பீட்டில் சேர்த்துள்ளது.

ஜன் ஆரோக்ய பீமா பாலிசி

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் குறைந்த செலவில் மருத்துவ காப்பீடு வழங்குகிறது.

மெடிக்ளைம் 2௦௦௦ பாலிசி

இன்ஷூரன்ஸ் ப்ளான் காப்பீட்டாளருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் குறைந்த செலவில் முழுமையான ஹாஸ்ப்பிட்டலைசேஷன் செலவுக்கு காப்புறுதி அளிக்கிறது.

ஃபேமிலி ஃப்ளோட்டர் மெடிக்ளைம் பாலிசி

24  ஹாஸ்ப்பிட்டலைசேஷன் செய்யப்பட்டால், அதற்கு கவரேஜ் வழங்குகிறது.

ஜனதா மெடிக்ளைம் பாலிசி

நோய்களில் இருந்து மீண்டு வருவதற்கு நிதி பாதுகாப்பு அளிக்கிறது.  

சீனியர் சிடிசன் மெடிக்ளைம் பாலிசி

சீனியர் சிடிசன்களுக்கு வழங்கப்படும் மருத்துவ காப்பீடு

க்ரூப் மெடிக்ளைம் பாலிசி

குழுக்களுக்கு வழங்கப்படும் பாலிசியாகும். (குடும்பம் மற்றும் அலுவலகம்).

நியூ இந்தியா டாப்-அப் மெடிக்ளைம்

ஏற்கனேவே இருக்கும் பாலிசியில் கூடுதலான பலன், அதிக நன்மைகள் பெற இந்த பாலிசியை பெறலாம்.  

மெடிக்ளைம் 2012 பாலிசி

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் குறைந்த செலவில் முழுமையான காப்புறுதி அளிக்கும் திட்டம் இது.

- / 5 ( Total Rating)