ரிலையன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)

1

2

தொலைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

இந்தியாவில் முதன்மையாக விளங்கும் தனிநபர் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களில், ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனமும் ஒன்று. ஒரு குடையின் கீழ் அனைத்து வசதிகளும் கிடைப்பது போல இந்த நிறுவனத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து வகையான காப்பீட்டுத் திட்டங்களும் இருக்கிறது.

மோட்டார் இன்சூரன்ஸ், உடல்நலக் காப்பீட்டு திட்டங்கள், பயண இன்ஷுரன்ஸ், போன்ற பலவகையான, தேவைக்கு ஏற்றார் போல மாற்றக்கூடிய 94 வகை காப்பீட்டுத் திட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் முதல் தனிநபர் மற்றும் குடும்பத்திற்குத் தேவைப்படும் காப்பீடாக வழங்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளரின் மகிழ்ச்சியும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக புத்தம் புதிதாக பல்வேறு விதமான உடல் நலம் மற்றும் வீட்டு காப்பீட்டு திட்டங்களை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

ரிலையன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ளான்களின் முக்கியத்துவம் 

இன்சூரன்ஸ் தொழில் துறையைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் உடல்நலக் காப்பீட்டு திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அறிந்திருப்பார்கள். உடல் நலக் காப்பீட்டுத் திட்டம் என்பது அவசர மருத்துவ சிகிச்சையின் போது தேவையான நிதி வசதியை வழங்குவது தான். ஒரு தனி நபரின் வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் மருத்துவ அவசர உதவி தேவைப்படலாம். மாதிரியான சூழ்நிலைகளில் அவர் மன ரீதியாகவும் பண ரீதியாகவும் பாதிப்பு அடையலாம். உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு மருத்துவ உதவி தேவைப்படும் போது நீங்கள் உடனே அதற்கான பணத்தை ஏற்பாடு செய்து சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

எமர்ஜென்சி மருத்துவ உதவி என்பது எந்த குடும்பத்திலும் மன அழுத்தத்தை உண்டாக்கும். குடும்பத் தலைவருக்கு ஏதாவது ஒரு தீவிரமான நோய் வந்தால் அதன் விளைவு, குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதிக்கும். குடும்ப நண்பர்கள் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலைகள் ஒவ்வொரு குடும்பத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். இதற்கான முக்கிய காரணம் எமர்ஜென்சி தேவைகளின் போது உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை தயார் செய்ய முடியாமல் போவதுதான். இந்தியாவில் பல காப்பீட்டு நிறுவனங்கள் மிகச்சிறப்பான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை வழங்கி வருகிறது. அவற்றில் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும்.

மருத்துவ செலவு அதிகரித்துக் கொண்டே வரும் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய வருமானத்தில் இருந்தோ சேமிப்பிலிருந்தோ இந்த செலவை மேற்கொள்வது என்பது கடினமான ஒன்றாகும். உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மாத வருமான பட்ஜெட்டில் மருத்துவச் செலவு என்பது கட்டுக்கடங்காமல் இருக்கும் செலவாகும். இதற்கு உங்களுக்கு ஒரு பாதுகாவலனாக வருவது உடல் நலக் காப்பீட்டு திட்டங்கள் மட்டுமே. எதிர்பாராத மருத்துவ செலவுகளை ஈடுகட்டுவதோடு உங்களின் சேமிப்பையும் பாதுகாத்து உதவுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அதற்கான செலவுகள், டாமிசிலரி ஹாஸ்பிட்டலைஸேஷன், டேகேர்‌ செலவுகள் போன்ற செலவுகளுக்கு காப்புறுதி திட்டத்தில் கவரேஜ் உள்ளது.

ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு ஒருவருக்கு பல காரணங்கள் இருக்கலாம். நீங்கள் எந்த காரணத்திற்காக இதை வாங்க வேண்டும் என்பதில் நன்றாக சிந்தித்து செயல்பட வேண்டும். ஜெனரல் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்காக பலவகையான காப்பீடு திட்டங்களை வழங்குகிறது. இதில் உங்களுக்கு மிகப் பொருத்தமான ஒன்றை நீங்கள் எளிதாக தேர்வு செய்து கொள்ளலாம்.

என்ன காரணங்களுக்காக உடல்நலக் காப்பீட்டு திட்டங்களை வாங்க வேண்டும்?

  1. தற்போதுள்ள காலகட்டத்தில் மருத்துவச் செலவு என்பது மிகவும் அதிகமான செலவு வைக்கும் ஒன்றாக மாறிவிட்டது. ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் இல்லாமல் உங்களால் மருத்துவ செலவை ஈடு கட்டுவது என்பது மிகவும் கடினமாக இருக்கும்.
  2. பணமில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் நன்மையை, நெட்வொர்க் மருத்துவமனைகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த குறிப்பிட்ட நன்மையை நீங்கள் பெரும்பொழுது உங்களுக்கான மருத்துவ செலவு மற்றும் பில்களை காப்பீட்டு நிறுவனம் பார்த்துக் கொள்ளும்.
  3. பாலிசிகள் காலாவதியாகாமல் இருக்கும் வரை தொடர்ந்து மருத்துவர் உதவிகளை, சேவைகளை, நன்மைகளை ஹெல்த் இன்ஷூரன்ஸ் கவனித்துக் கொள்ளும். அதிகப்படியான மருத்துவ செலவு வரும்பொழுது நீங்கள் பாலிசியை டாப் அப் செய்து கொள்ளலாம் ‌.
  4. உங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது உங்களை சார்ந்து வாழ்பவர்கள் இருந்தாலோ நீங்கள் குடும்ப உடல்நலக் காப்பீட்டு திட்டத்தை வாங்கிக் கொள்ளலாம். இந்த பாலிசியின் கொள்கைப்படி உங்களின் மொத்த குடும்பமும் ஒரே உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தில் பலன் பெறலாம்.
  5. உடல்நலக் காப்பீட்டு திட்டத்தை வாங்கும் பொழுது உங்களுக்கு வருமான வரிச் சலுகையும் உண்டு. வருமான வரி சட்டத்தின் கீழ் நீங்கள் வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உடல்நலக் காப்பீட்டு திட்டம் என்பது மிகவும் முக்கியமான தேவையாக மாறிவிட்டது. உங்கள் உடல் நலத்தையும் உங்கள் குடும்பத்தினரின் உடல் நலத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது உங்கள் கடமை. காப்பீட்டுத் திட்டங்களை நீங்கள் வாங்கி பாதுகாப்பை உறுதி செய்தால் உங்களை காப்பாற்றிக் கொள்ளலாம். மருத்துவமனை சம்பந்தப்பட்ட பல்வேறு கலகலப்பு உங்களுக்கு காப்புறுதி அளிக்கின்றது. அடிப்படையான உடல் நலக் காப்பீட்டு திட்டத்தில் நன்மைகளை தவிர்த்து நீங்கள் அதிகப்படியான பலன்களையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெற்றுக் கொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ்

உங்களுடைய முதலீடுகளில் உடல்நலக் காப்பீட்டு திட்டத்திற்காக நீங்கள் செலவு செய்வது மிகச்சிறந்த, மிகவும் பயனுள்ள ஒரு முதலீடாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இனி எப்பொழுதெல்லாம் முதலீடுகளைப் பற்றி சிந்திக்கிறீர்களோ அப்போதெல்லாம் உடல்நலக் காப்பீட்டு திட்டங்களை பற்றியும் யோசித்து பார்க்க வேண்டும். உங்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்றவாறு பல வகையான பயனுள்ள ஹெல்த் இன்ஷூரன்ஸ்  ப்ளான்களை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த காப்பீடு திட்டங்களை நீங்கள் ஒருமுறை படித்துப் பார்த்தால் உங்களுக்கு தேவையான திட்டம் ஒன்றை நீங்கள் சுலபமாக பெற்றுக் கொள்ளலாம். பலவகையான நன்மைகளை அளிப்பதோடு மட்டுமில்லாமல் ரிலையன்ஸ் வழங்கும் காப்பீட்டு திட்டங்கள் எல்லாம் குறைந்த விலையிலேயே கிடைக்கிறது.

ஹெல்த் கெய்ன்‌ பாலிசி

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் காப்புறுதி அளிக்கும் திட்டம் ஆகும். பணமில்லா சிகிச்சை மற்றும் கூடுதலான சேவைகளையும் இந்த திட்டம் வழங்குகிறது. ப்ரீ மற்றும் போஸ்ட் ஹாஸ்பிட்டலைஸேஷன் செலவுகள், டாமிசிலரி ஹாஸ்பிட்டலைஸேஷன், டோனர் செலவுகள் ஆகியவற்றிற்கு காப்புறுதி அளிக்கிறது. நீங்கள் இந்த திட்டத்தை உங்களுக்கு தனிநபர் திட்டமாகவோ அல்லது குடும்ப திட்டமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

வெல்னஸ்

இந்தத் திட்டம் மூன்று விதமான பேராமீட்டரை சுற்றி அமைந்துள்ளது

எவாலுவேட்–  கஸ்டமைஸ்ட் இன்வால்வ்மென்ட் ப்ரோக்ராம், முன்னேற்பாடாக உங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க

என்கேஜ் - வீடியோக்கள் மற்றும் சாட் வசதியின் மூலம் உங்களுக்கு தேவையான தகவல்களை பரிமாறிக் கொள்வது

ஏர்ன் - 1500க்கும் மேற்பட்ட உடல் நல பராமரிப்பு மையங்களில் தள்ளுபடி மற்றும் இலவச சேவைகள்

- / 5 ( Total Rating)