ரெலிகேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)

1

2

தொலைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மிகவும் புகழ்பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்திற்குபல்வேறு வகையான உடல்நலக் காப்பீட்டு திட்டங்களை மிகவும் சிறப்பான நெட்வர்க் கட்டமைப்பு வழங்கி வருகிறது. இது 3 வணிக நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும். யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ரெலிகேர் என்டர்ப்ரைஸ் லிமிடெட் மற்றும் கார்ப்பரேஷன் பேங்க். ஃபோர்ட்டிஸ் ஹெல்த் கேர் லிமிட்டட், இந்தியாவின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் நெட்வொர்க், அதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் காப்பீட்டு திட்டங்களில் சந்தைப்படுத்துகிறார்கள். இந்தியா முழுவதும் 1700க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன. மேலும் இது வரையிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான திருப்தியான வாடிக்கையாளர்களும் உள்ளனர். 

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டே வரும் மருத்துவ செலவினங்களில், தொழில்நுட்பத் துறையிலும் முன்னேறி வரும் மருத்துவ சிகிச்சை முறைகளும் எதிர்பாராத மருத்துவ அவசர செலவுகளுக்கு உடல்நலக் காப்பீட்டு திட்டங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். மருத்துவக் காப்பீடு ஒவ்வொரு நபரும் வைத்துக்கொள்வது பாதுகாப்பு அளிக்கும். 

இவை மட்டுமின்றி இன்றைய சமுதாயத்தில் வாழ்க்கை முறை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. உணவு பழக்கவழக்கமும் தினசரி பழக்கவழக்கங்களும் பல்வேறு விதமான நோய்களுக்கு அவர்களை இழுத்துச் செல்கிறது. ஒரு சில உடல்நல கோளாறுகள் தீவிர நோய்களை வரவழைக்கிறது. ஏற்கனவே அதிகரித்துக் கொண்டே வரும் மருத்துவச் செலவுகளில் இந்த மாதிரி நோய்களுக்கு ஏற்கனவே பணச்சிக்கலில் இருக்கும் நபர்களுக்கு உதவுவது மருத்துவக் காப்பீடு மட்டுமே. எனவே அவசர மருத்துவ சிகிச்சைக்கு உங்களை பாதுகாத்துக் கொள்ள உங்களுக்கு தேவையான உடல் நலக் காப்பீட்டு திட்டத்தை ஏற்றுக் கொள்வது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

ரெலிகேர் காப்பீட்டுத் திட்டங்களும் சேவைகளும்

ரெலிகேர் ஹெல்த் உங்களுக்கு பல்வேறு வகையான சிறப்பு அம்சங்களை கொண்ட காப்பீட்டு திட்டங்களை உருவாக்கி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் பொருத்தமான மற்றும் தேவையான காப்பீடுகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளரின் ஒவ்வொரு தேவையையும் கணக்கில் கொண்டு இத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ரெலிகேர் இன்சூரன்ஸ் கம்பெனியின் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ்

எதிர்பாராத நேரத்தில் எதிர்கொள்ள வேண்டி வரும் மருத்துவ சிகிச்சை நேரத்தில் உங்களுடைய குடும்பத்தின் நிதி நிலைமையை பாதுகாப்பாக வைக்க இந்த உடல் நலக் காப்பீட்டு திட்டங்கள் உங்களுக்கு உதவுகிறது. பெருகிக் கொண்டே வரும் நோய்களும் அதற்கேற்றார்போல அதிகரித்துக்கொண்டே வரும் மருத்துவ செலவுகளும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடல் நலக் காப்பீட்டு திட்டம் மிகவும் முக்கியமானது என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. ஏதாவது ஒரு உடல்நல குறைபாடு ஒரு தனிமனிதனை மட்டும் அல்லாமல் அவரின் குடும்பத்தினரையும் பாதிக்கும். தீவிர நோய் சிகிச்சைகளுக்கு உங்களிடம் எத்தனை சேமிப்பு இருந்தாலும் அவை சிகிச்சையை மேற்கொள்ள போதுமானதாக இருக்காது. இது உங்கள் குடும்பத்தின் சேமிப்பை, நிதி பாதுகாப்பை உடைப்பதோடு ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கும் பெரும் மன உளைச்சலைக் கொடுக்கும். எனவே உடல் நலக் காப்பீட்டு திட்டத்தை இத்தனை சீக்கிரம் வாங்குகிறோமோ அந்த அளவுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகிறார்கள். 

ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மிகவும் பவர்ஃபுல்லான நெட்வொர்க் மருத்துவமனைகளை கொண்டுள்ளது. எந்தவித பயமுமின்றி நீங்கள் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு உறுதி அளிக்கிறது. பிரீமியம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை இணையதளத்தில் உள்ள பிரீமியம் கால்குலேட்டர் வசதி உபயோகப்படுத்தி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். பின்வரும் காப்பீட்டு திட்டங்கள் ரெலிகேர் இன்சூரன்ஸ் கம்பெனி வழங்கும் உடல்நலக் காப்பீட்டு திட்டங்கள் ஆகும். 

  • ரெலிகேர் கேர் 
  • ரெலிகேர் கேர் ஃப்ரீடம்

இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் இன்கர்ட் க்ளைம் ரேஷியோ கம்பேரிசன்

வரிசை எண்

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்

நெட் ப்ரீமியம் (லட்சங்களில்)

க்ளைம்ஸ் (லட்சங்களில்)

இன்கர்ட் ரேஷியோ (%)

ஐசிஆர் 2013-2014(%)

1

நேஷனல் இன்ஷூரன்ஸ்

332965

366344

110.02%

104.29%

2

நியூ இந்தியா இன்ஷூரன்ஸ்

368785

364302

98.78%

96.85%

3

ஓரியண்டல் இன்ஷூரன்ஸ்

200410

234517

117.02%

115.23%

4

யுனைடட் இந்தியா இன்ஷூரன்ஸ்

299246

356057

118.98%

114.26%

 

மொத்தம்

1201406

1321220

109.97%

106.19%

 

தனியார் நிறுவனங்கள்

 

 

 

 

5

பஜாஜ் அல்லையன்ஸ்

69512

51152

73.59%

86.60%

6

பார்த்தி ஆக்ஸா

19117

18636

97.48%

86.32%

7

சோளமண்டலம்

19635

10295

52.43%

61.71%

8

ஃப்யூச்சர் ஜெனெரல்

14192

11345

79.94%

84.85%

9

எச்டிஎஃப்சி

58145

32843

56.48%

92.91%

10

ஐஸிஐஸிஐ லோம்பார்ட்

106110

92720

87.38%

93.02%

11

இஃப்ப்கோ டோக்கியோ

29989

27714

92.41%

87.17%

12

எல்&டி

3502

1819

51.94%

90.64%

13

லிபர்ட்டி அண்ட் விடியோகான்

3747

3843

102.56%

88.29%

14

மேகமா எச்டிஐ

66

61

92.42%

NA

15

ரஹேஜா க்யூபிஐ

35

41

117.14%

96.45%

16

ரிலையன்ஸ்

44927

48291

107.49%

97.78%

17

ராயல் சுந்தரம்

22577

11942

52.89%

57.09%

18

எஸ்பிஐ

24252

19492

80.37%

48.63%

19

ஸ்ரீராம்

214

152

71.03%

90%

20

டாடா ஏஐஜி

35591

24892

69.94%

86.28%

21

யூனிவர்சல் சோம்ப்போ

9955

10176

102.22%

108.94%

 

மொத்தம்

461566

365414

79.17%

87.62%

 

வரிசை எண்

தனிப்பட்ட இன்ஷூரன்ஸ்

நெட் ப்ரீமியம் (லட்சங்களில்)

க்ளைம்ஸ் (லட்சங்களில்)

இன்கர்ட் ரேஷியோ (%)

ஐசிஆர் 2013-2014(%)

1

அப்போலோ ம்யூனிச்

65588

41343

63.03%

65.59%

2

சிக்னா டிடிகே

667

429

64.32%

59.68%

3

மேக்ஸ் பூப்பா

31524

17388

55.16%

59.07%

4

ரெலிகேர்

15372

9397

61.13%

79.92%

5

ஸ்டார் ஹெல்த்

101793

65106

63.96%

67.21%

 

மொத்தம்

214944

133663

62.18%

66.06%

ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ளான்ஸ்

ரெலிகேர் செக்யூர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ்

எதிர்பாராத நேரத்தில் விபத்தோ காயங்களோ ஏற்பட்டால் அல்லது நோய்வாய்ப்பட்டாலோ இந்த பாலிசியை உபயோகித்து அல்லது உடனடியாக மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளலாம். சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை என்ற கவலை எப்பொழுதும் ஏற்படாது. பிறப்பினாலோ அல்லது செயல்திறன் பிறப்பினாலோ ஒரு தனிநபர் பாதிக்கப்பட்டால் அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஏற்படும் நஷ்டத்தை பல்வேறு வகையான காப்புறுதி அம்சங்களுடன் இந்த நிறுவனம் உங்களுக்கு காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 

ரெலிகேர் என்ஹான்ஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ்

உங்களுடைய அடிப்படையான ஹெல்த்கேர் பாலிசியுடன் இந்தத் திட்டத்தை டாப்-அப் திட்டமாக நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. சில சமயங்களில் அடிப்படையான உடல் நலக் காப்பீட்டு திட்டம் உங்களுக்கு போதுமான காப்புறுதியை அளிக்காமல் செல்லலாம். மேலும் காப்பீட்டாளர் வேறொரு காப்பீட்டை வாங்குவதில் விருப்பம் இல்லாமலும் இருக்கலாம். இந்நிலையில் இந்த கூடுதலான காப்புறுதித் திட்டம், கூடுதல் பாதுகாப்புடன் உங்கள் நிதி வசதி கெடாதவாறு தேவையான பாதுகாப்பை வழங்குகிறது. 

ரெலிகேர் அஷ்யூர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மற்றொரு வேரியண்ட் இந்த காப்புறுதி திட்டம். அடிப்படை உடல்நலக் காப்பீட்டு திட்டத்தில் மறுக்கப்படும் ஒருசில காப்புறுதி கொள்கைகளுக்கு இந்த காப்பீடு கூடுதலான கவரேஜை வழங்குகிறது. உதாரணமாக தீவிரமான நோய்களுக்கு உங்களுடைய அடிப்படையான மருத்துவ காப்பீட்டில் கவரேஜ் அளிக்க முடியாது. அந்த நேரத்தில் உங்களுடைய மருத்துவச் செலவும் அதிகரித்து கொண்டே இருக்கும். உங்களுடைய மருத்துவ காப்பீட்டு தொகை முழுவதையும் கடந்து மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். மாதிரியான சூழ்நிலைகளில் சிகிச்சை என்பது மிகவும் விலை உயர்ந்ததாக மாறும் பொழுது இந்த கூடுதலான சிறப்பு கவரேஜ் தீவிர நோய்களுக்கான சிகிச்சையை பெறுவதில் சிக்கல் இல்லாமல் இருக்க வழி வகுக்கும். 

ரெலிகேர் கேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ்

இது மருத்துவ காப்பீட்டு செலவினங்களை சந்திக்க பாலிசிதாரருக்கு ஒரு தாராள அணுகுமுறை வழங்கும் அத்தியாவசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகும். இது மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஒரு வாழ்க்கைத் தரத்தை வழங்குகிறது.

ரெலிகேர் ஜாய் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ்

கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பற்றி நாம் பார்க்கும் பொழுது இந்த நிறுவனத்தின் பிரத்தியேகமான ஒரு திட்டம் மகப்பேறு காலத்தில் பாதுகாப்பு அளிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. மகப்பேறு காலம் முழுவதிலும் ஆகும் மருத்துவமனை செலவுகள் மற்றும் கர்ப்ப காலத்தில் முழுவதும் கர்ப்பிணியின் உடல் நலம் குறித்து ஆகும் மருத்துவ சிகிச்சைகள் அனைத்திற்கும் காப்புறுதி அளிக்கிறது. மேலும் இது பிறக்கும் குழந்தைக்கும் பிறந்த தேதி முதல் 90 நாட்கள் வரை காப்புறுதி அளிக்கிறது. 

ரெலிகேர் கேர் ஃப்ரீடம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்

உடல் நலத்தை குறித்து உங்களுடைய சேமிப்பு குறித்தும் எந்த ஒரு கவலையும் இன்றி எந்த ஒரு மன அழுத்தமும் இன்றி உங்களின் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மருத்துவ காப்பீடு திட்டம் பெரிய உதவியாக இருக்கும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நீங்கள் பெற்று இருந்தால் உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கும் ஏதாவது அவசர மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள நேரும் பொழுது காப்பீட்டில் நீங்கள் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் எந்தவித மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தீவிர சிகிச்சைக்கும் இந்த காப்பீட்டில் கவரேஜ் இருக்கிறது. ஆனால் அதற்கான காப்புரிமையைப் பெற காப்பீட்டை வாங்கிய இரண்டு வருடங்களுக்கு வரை காத்திருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. இந்த காப்பீட்டு திட்டம் மருத்துவமனையில் அனுமதிக்கும் பொழுது ஏற்படும் செலவுகள் தவிர்த்து ஆம்புலன்ஸ் செலவுகள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு ஆகும் மருத்துவ செலவுகள் ஆகியவற்றுக்கும் காப்புறுதி அளிக்கிறது. 

- / 5 ( Total Rating)