ராயல் சுந்தரம் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)

1

2

தொலைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

ராயல் சுந்தரம் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாகும். இது இந்தியாவின் முதல் தனியார் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் மற்றும் அதற்கான லைசன்ஸ் பெற்றுள்ளது. அக்டோபர் 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஐ ஆர் டி ஏ அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு நிறுவனமாகும். மேலும் வங்கிகளுடன் வணிகத் தொடர்பு வைத்துக் கொண்டு வாடிக்கையாளருக்கு ரீடைல் ப்ராடக்ட்ஸ் விற்பனை செய்ய ஆரம்பித்த முதல் தனியார் காப்பீட்டு நிறுவனம் ஆகும். தற்பொழுது ராயல் சுந்தரம் காப்பீட்டு நிறுவனத்தில் 6.25 மில்லியன் வாடிக்கையாளர்கள்மற்றும் ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தியா முழுவதும் உள்ள 180 நகரங்களில் ஏஜென்ட்கள், பார்ட்னர்கள் மற்றும் புரோக்கர்கள் வழியாக பல்வேறு விதமான காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகிறது.

ராயல் சுந்தரம் பல வகையான உடல்நலக் காப்பீட்டு திட்டங்களை அடுக்கடுக்கான நலன்களை பெறும் வகையில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வழங்குகிறது. ராயல் சுந்தரம் வழங்கும் அனைத்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்களும் உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்ளுமாறும் மிகவும் குறைந்த விலையிலும் கிடைக்கிறது. காப்புறுதி தொகையை உங்களின் காப்பீட்டு திட்டத்திற்கு ஏற்றவாறு நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆரம்பநிலை உடல் நலக் காப்பீட்டு திட்டம் முதல் சிறப்பு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் வரை கர்ப்பிணி காப்பீடு திட்டங்கள் உட்பட ராயல் சுந்தரம் நிறுவனம் அனைத்து வகையான சுகாதார காப்பீடு திட்டங்களையும் உங்களுக்காக வழங்குகிறது. இந்த காப்பீடு திட்டங்களில் காப்பீட்டுத்தொகை ஒவ்வொரு ஆண்டும் தானாகவே உயரும் வகையில் அமைந்திருக்கிறது. நீங்கள் கிளைம் கோரினாலும் இல்லை என்றாலும் இந்த சலுகை உங்களுக்கு உண்டு. கேஷ் பெனிஃபிட் திட்டம்மூலம், உங்களை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு நிலை ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை உரிய தொகையை நீங்கள் பணம் செலுத்தாமல் பெற்றுக் கொள்ளலாம். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அதற்காகும் தினசரி செலவுகள் உட்பட போக்குவரத்து செலவு களும் அடங்கும். விரிவான விவரங்கள் ஒவ்வொரு பாலிசியிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்தியாவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் முக்கியத்துவம்

உடல்நலக் காப்பீட்டு திட்டங்கள் நம் வாழ்வின் ஒரு முக்கியமான  அங்கமாக வகிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் எதிர்பாராமல் நேரும் மருத்துவ செலவுகள், மேலும் மருத்துவ செலவுகளுக்காக தேவையான நிதி வசதியை, நிதி உதவியை அளிக்கும் உடல்நலக் காப்பீடு திட்டங்கள் மிகவும் இன்றியமையாது ஆகிவிட்டது. காப்புறுதி மற்றும் அதிகப்படியான பயன்களை வழங்கும் காப்பீட்டுத் திட்டங்களின் உதவியோடு மருத்துவ சிகிச்சை பெற உங்களுடைய சேமிப்பை தான் கரைக்க வேண்டும் என்ற நிலை வாராமல் சமாளிக்க முடிகிறது.

உங்களுக்கு மிகவும் பொருத்தமான உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தை நீங்கள் பெறுவதன் மூலம் தேவையான மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்வதில்  கவனம் செலுத்தலாம். இந்த மருத்துவ சிகிச்சைக்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டி இருக்கும் என்ற கவலை உங்களிடம் இல்லாமல் போகும்.  நிறுவனம் வழங்கும் அடிப்படையான இன்ஷூரன்ஸ் திட்டத்தில் உங்களுக்கு மருத்துவமை செலவுகள் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் போக்குவரத்துக்கான செலவும் அடங்கும். நீங்கள் மிகவும் கடினமாக உழைத்து சேர்த்த பணத்தை மருத்துவமனைக்கு மட்டுமே செலவு செய்வதில் இருந்து உங்களை காப்பாற்ற இந்த காப்பீட்டுத் திட்டங்கள் பெருமளவில் உதவி செய்யும். உங்கள் தேவைக்கு ஏற்றவாறு ஒரு காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது. இளவயதிலேயே உங்களுக்கு தேவையான ஒரு மருத்துவ காப்பீட்டை பெற்றுக்கொண்டால் அதற்கான பிரீமியம் தொகை குறைவாக இருக்கும்

ஏன் ராயல் சுந்தரம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்

இந்தியா முழுவதிலும் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் பல வகையான உடல்நலக் காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருவதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்களின் தேவைக்கேற்றவாறு ஒரு காப்பீட்டுத் திட்டத்தை நீங்கள் மிகவும் எளிதாக பெற்றுக்கொள்ளலாம். அப்படி இருக்கும் பொழுது நீங்கள் ஏன் ராயல் சுந்தரம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்? ராயல் சுந்தரம்  நிறுவனம் இந்தியாவில் முன்னிலை வகிக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்த நிறுவனம் வழங்கும் பல வகையான காப்பீட்டு திட்டங்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்க வேண்டும் மிகவும் குறைவான விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் பல சிறந்த உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் அளிக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இருப்பதினால் பெரும்பாலான மக்கள் காப்பீட்டு திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். நீங்கள் ஏன் ராயல் சுந்தரம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் காப்பீட்டுத் திட்டத்தில் வாங்க வேண்டும் என்பதை பின் வருமாறு தெரிந்து கொள்ளவும்.

பலவகையான ஹெல்த் இன்ஷூரன்ஸ் காப்பீடுகள்

நீங்கள் ராயல் சுந்தரம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பலவிதமான காப்பீட்டு திட்டங்களை காணலாம். உங்களின் வெவ்வேறு விதமான தேவைகளை நிறைவேற்று மாறு பல்வேறு விதமான காப்பீடுகளை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே கூறியது போல உங்களின் தேவை உள்ளதோ அதற்கு ஏற்றவாறு காப்பீடுகளை நீங்கள் பெற்றுக் கொள்ளவும். இது உங்களின் பணத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு தேவையான விஷயங்களில்காப்புறுதி அளிக்கும்.

இணையத்தில் பாசிட்டிவான பரிந்துரைகள்

மற்ற காப்பீட்டு நிறுவனங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த நிறுவனத்திற்கு அதிக அளவில் பாசிட்டிவான விமர்சனங்கள் உள்ளது. மேலும் அதிக அளவிலான திருப்தியான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. நிறுவனம் வழங்கும் சேவைகளின் மட்டுமல்லாமல் கிளைம் செட்டில்மென்ட் செய்வதிலும் வாடிக்கையாளர்கள் திருப்தியாக உள்ளனர். நிறுவனத்தின் பழைய கிளைம் செட்டில்மென்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் எளிதாக முடிவெடுக்கலாம்.

கிளைம் செட்டில்மென்ட் விகிதம்

மேலே கூறியது போல கிளைம் செட்டில்மென்ட் மிகவும் நல்ல முறையில் நடந்து வருகிறது ‌. பெரும்பாலான க்ளைம்களை நிறுவனம் உடனுக்குடனே செட்டில் செய்து கொண்டு வருகிறது. எனவே உங்களின் கிளை விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது என்பது மிகவும் குறைந்த பட்ச அளவிலேயே சாத்தியக்கூறு உள்ளது. ஆன்லைனில் நீங்கள் இதை பரிசோதித்து பார்த்து சரியான முடிவை எடுக்கலாம்.

சேவையின் தரம்

நாம் சேவையின் தரத்தை பற்றி பேசும்பொழுது ராயல் சுந்தரம் நிறுவனம் அதிக பட்ச மரியாதையை பெற்றுள்ளது. மிகச்சிறந்த முறையில் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் மிகவும் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர் சேவை மைய டிபார்ட்மென்ட் உங்களுக்கு உதவுவதற்கு எப்பொழுதும் காத்துக் கொண்டிருக்கிறது.

குறைந்த விலை

பலவகையான காப்பீட்டு திட்டங்கள் வழங்கினாலும், இந்த திட்டங்கள் அனைத்தும் உங்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்தும், அனைத்து காப்பீடுகளையும் மிகவும் குறைந்த செலவிலேயே நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். நிறுவனத்தின் காப்பீட்டுத் திட்டம் பெறுவதற்கு நீங்கள் உங்களின் சேமிப்பை செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கூடுதல் பலன்கள் மற்றும் தள்ளுபடி

பொதுவாக உடல் நலக் காப்பீட்டு திட்டம் என்று வரும்பொழுது காப்புறுதி நிறுவனங்களில் இருந்து நீங்கள் பல்வேறு வகையான நலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். ராயல் சுந்தரம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு தேவையான காப்பீட்டு திட்டங்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல் பல வகையான கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. உதாரணமாக பணம் இல்லாமல் நீங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்;

ராயல் சுந்தரம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிளான்ஸ்

லைஃப்லைன் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்

லைஃப்லைன் என்பது ராயல் சுந்தரம் இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும் ஹோலிஸ்டிக் இன்டெம்னிடி ப்ளான். இந்தக் காப்பீட்டுத் திட்டம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தேவையான அடிப்படை காப்புறுதிகளை வழங்குகிறது. ஐந்து வருடங்கள் வரை க்ளைம் எதுவும் இல்லாமல் இருந்தால் காப்பீட்டுத் தொகை இரு மடங்காகும்.

ஃபேமிலி குட் ஹெல்த்

ஃபேமிலி குட் ஹெல்த்என்பது ஒரு முழுமையான உடல் நலக் காப்பீட்டு திட்டம் ஆகும். அடிப்படையான உடல் நலக் காப்புறுதி பலன்களோடு மருத்துவமனையில் பணம் இல்லாமல் சிகிச்சை பெறும் கூடுதல் பலம் கொண்டு வருகிறது.

ஹாஸ்பிடல் கேஷ்

இது உங்களுக்கு மருத்துவமனையில் ஏற்படும் செலவினங்களுக்குகாப்புறுதி அளிக்கும். காரணமாக நோயாளியின் உணவுக்கான செலவு, நோயாளியை கவனித்துக் கொள்பவர்களுக்கு ஆகும் தங்கம் இடத்திற்கான செலவு, போக்குவரத்து செலவு ஆகியவைகளுக்காக கூடுதல் பலனாக ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது.

- / 5 ( Total Rating)