Sehwag PX
டாட்டா ஏஐஜி ஹெல்த் இன்ஷூரன்ஸ்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்

#Virukipolicy | T&C*

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)

1

2

தொலைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

டாட்டா ஏசி ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி, டாட்டா குழுமம் மற்றும் அமெரிக்கன் இன்டர்நேஷனல் குரூப் (ஏஐஜி) ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையேஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டு நிறுவனம் ஆகும்.டாட்டா குழுமம்உலக அளவில் வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதன் தலைமையிடம் இந்தியாவில் உள்ளது.

இந்த காப்பீட்டு நிறுவனம் 2001ஆம் ஆண்டு தன்னுடைய வணிக செயற்பாடுகளை தொடங்கியது. இந்த தொழில் துறையில் 16 ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்து வருவதோடு மட்டுமல்லாமல் தனக்கு எந்த தனியே ஒரு முத்திரை பதித்துள்ளது, இந்த நிறுவனம். தனிநபர் முதல் வணிக காப்பீடு வரையிலான அனைத்து பிரிவினரின் தேவைக்கேற்ப பலதரப்பட்ட காப்பீடுகளை வழங்குகிறது. உதாரணமாக, மோட்டார் இன்ஷூரன்ஸ், பயண இன்ஷுரன்ஸ், உடல்நலக் காப்பீடு, பெர்சனல் இன்ஷூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் ரூரல் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ். வணிக நிறுவனத்திற்கான காப்பீடுகளில் தொழில் என்று பல வகையான சார்ந்த காப்பீடு திட்டங்களை வழங்குகிறது.  உதாரணமாக பிசினஸ் மற்றும் ப்ராப்பர்ட்டி இன்ட்டரப்ஷன் இன்சூரன்ஸ், ஜெனரல் மற்றும் ப்ரோஃபஷனல் லையபிலிட்டி என்விரான்மென்டல் இன்சூரன்ஸ் போன்றவை.

90க்கும் அதிகமான அலுவலகங்களில் 400 நபர்களுக்கு மேற்பட்ட திறமையான ஊழியர்கள் உதவியுடன் க்ளைம்கள் மிகவும் சுலபமாக எந்த பிரச்சினைகளும் இன்றி பெற்றுக் கொள்ளலாம். இந்தியா முழுவதிலும் உள்ள 152 கிளை அலுவலகங்களில் 2800 க்கும் அதிகமான பணியாளர்கள் உள்ளனர். மே மாதம் 2014 ஆம் ஆண்டு டாடா ஏசி அகெடமி நிறுவப்பட்டது. இதன் குறிக்கோள் ஜெனரல் இன்சூரன்ஸ் பற்றி அதன் விநியோகிஸ்தர்களுக்கு தேவையான தகவல்களையும் அதன் குறித்த பல்வேறு அம்சங்களையும் விலக்கி சொல்வதாகும்.

டாட்டா ஏசி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் பெற்ற விருதுகள் மற்றும் பாராட்டுக்கள்

பல வருடமாக இன்சூரன்ஸ் தொழில் துறையில் இயங்கி வரும் இந்த நிறுவனம்தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சேவைகளுக்காகவும் பல்வேறு வகையான காப்பீட்டு திட்டங்களுக்காகவும் 20 விருதுகளை பெற்றுள்ளது. க்ளைம்ஸ் ஏசியா அவார்ட்ஸ் 2013 இந்த நிறுவனத்திற்கு ஜெனரல் இன்சூரன்ஸ் டீம் ஆப் தி இயர் என்ற அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த விருது டாட்டா ஏசி நிறுவனத்தின்க்ளைம்டீம், தொடர்ந்து சிறப்பானபணியாற்றி வருவதற்காக வழங்கப்பட்டது. இந்தியா இன்சூரன்ஸ் அவார்ட்ஸ், “பெஸ்ட் ப்ராடக்ட் இன்னோவேஷன் அவார்ட்” என்ற விருதையும் வழங்கியுள்ளது. இன்னும் சிலர் குறிப்பிட வேண்டிய விருதுகளில் முக்கியமானது சிஎன்பிசி ஆவாஸ் ட்ராவல் அவார்ட்ஸ் 2013, 50 மோஸ்ட் டேலண்டட் சி எம் ஓ அவார்ட், சிஇஓ வித் எக்ஸலன்ஸ் இன் ஃபினான்ஸ் அவார்ட் மற்றும் ஏசியா இன்சூரன்ஸ் ரிவ்யூ வழங்கிய பெஸ்ட் எம்ப்ளாயர் ஆஃப் தி இயர் அவார்ட்.

டாட்டா ஏசி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கோர் வேல்யூ

இந்த நிறுவனத்தின் குறிக்கோளை அடைய அதற்கான பயணத்தில் சரியான இலக்குகளை தேர்ந்தெடுக்க 6 கோர்வேல்யூக்களை நிறுவியுள்ளது.

செயல்திறன்: டாட்டா ஏஐஜி நிறுவனம், இலக்காக நிறுவப்பட்ட உயர்ந்த தரத்தை அடைய உயர்தர சேவையை வழங்கி வருகிறது.

வாடிக்கையாளருக்கே முன்னுரிமை: இந்த நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் தேவையையும் பூர்த்தி செய்வதையே முதன்மையாக குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

நேர்மை: வெளிப்படையான மற்றும் நேர்மையான வணிகத்தைவழங்குகிறது. பொதுமக்கள் தங்களைஎளிதாக ஆய்வு செய்ய, முன்னிலையில் வெளிப்படுத்திக்கொண்டு உள்ளது.

மக்கள்: இந்த நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுடனும் வாடிக்கையாளர்களோடும், சகிப்புத்தன்மை புரிதல் மற்றும் ஒத்துழைப்பு ஆகிய தளங்களில் மிகவும் வலுவான உறவை வளர்க்க எதிர்பாக்கிறது.

பேஷன்: வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் முழு கவனமும் அர்ப்பணிப்பும் கொண்டு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

மனநிறைவு: இந்த கம்யூனிட்டி க்கு தேவையான பாதுகாப்பு மரியாதை மற்றும் கம்பேஷன் உடன் சேவை செய்து வருகிறது.

நோய்வாய்ப்படுதல் மற்றும் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது ஆகியவை அனைத்து வயதினரிலும் பொதுவாகக் காணப்படுகிறது. ஆரோக்கியம் இல்லாத உணவு பழக்கங்கள் தேவையான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் பலவகையான மாசு, சுற்றுப்புற சூழலின்மை, மற்றும் கலப்படங்கள் ஆகியவை பலவகையான நோய்களுக்கு காரணமாக அமைகிறது. எதிர்பாராமல் ஏற்படும் அவசர மருத்துவமனை செலவுகள் நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தி விடுகிறது. மருத்துவச் செலவு என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் நிலையில் எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளைஈடுகட்டுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது.

உங்களிடம் இன்சூரன்ஸ் பிளான் இருந்தால் இப்படி எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளையும் அதன் கடினமான சூழல்களையும் எதிர்கொள்ள உங்களுக்கு துணையாக இருக்கும் ‌. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு தேவையான நிதி உதவியை, அவசர காலத்தில்ஏற்படும் மருத்துவமனை செலவுகளுக்கும் கேஷ்லெஸ் ஹாஸ்ப்பிட்டலைஸேஷனுக்கும் வழங்கும். டாட்டா ஏஐஜி இன்சூரன்ஸ் பலவகையான மேம்பட்ட நன்மைகளை வழங்குகிறது. உதாரணமாக இலவச பரிசோதனை, ஆக்சிடென்ட் கவர் ஆகியவை. ஒவ்வொரு தனிநபரின் மற்றும் குறைவாக இருப்பவர்களின் காப்புறுதி தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு வகையான ஹெல்த் பிளான்களை வழங்குகிறது ‌.  

டாட்டா ஏஐஜி ஹெல்த் இன்சூரன்ஸ் இன் அம்சங்கள் மற்றும் நன்மைகள்

ஒரு சில தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் அம்சங்களை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது டாட்டா ஏஐஜி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் மிகவும் மேம்பட்டதாக தன்னை தனித்துவமாக நிலை நிறுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் காப்பீட்டு திட்டங்கள்பல்வேறு வகையான அம்சங்களை கொண்டு பல மருத்துவ செலவுகளுக்கு காப்புறுதி அளிக்கிறது. உதாரணமாக 30 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான அறை வாடகை, ஐசியு செலவுகள், டே-கேர் செலவுகள் மற்றும் போஸ்ட் ஹாஸ்ப்பிட்டலைசெஷன் போன்றவை.

நாடு முழுவதும் இருக்கும் மூவாயிரத்திற்கும் அதிகமான நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணமில்லா மருத்துவ வசதியை பெற்றுக் கொள்ளலாம். வருமான வரி சட்டத்தின் 80ஜி பிரிவின் படி நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொகையை வருமான வரிவிலக்காக பெற்றுக்கொள்ளலாம். ஒரு சில குறிப்பிட்டகாப்பீட்டுத் திட்டங்களில்தீவிர நோய்களுக்கும் சிகிச்சை உள்ளது. நீங்கள் வாங்கும் காப்புறுதி திட்டங்களின் பிரீமியத்தை தவறாமல் காலாவதியாகும் காலத்திற்கு முன்பு செலுத்தி வந்தால் உங்களுக்கு காலம் முழுவதும் ரின்யூவல் வசதி கிடைக்கும் ‌.

24/7 வாடிக்கையாளர் சேவை வசதி உண்டு. கிளைம் செட்டில்மென்ட் குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு நீங்கள் எந்த நேரத்திலும் அவர்களை தொடர்பு கொள்ளலாம். வெல்ஷூரன்ஸ்ப்ளான்களின்படி,  ஹெல்ப் லைன் உதவியுடன்உங்களுக்கு தேவையான ஆரோக்ய தகவல்கள், ஹெல்த் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் ஒரு ஹெல்த் போர்ட்டலும் உள்ளது. உடல் நல மேம்பாடு சேவைகள் சம்பந்தப்பட்ட இடங்களான உடற்பயிற்சி கூடம், நோயறிதல் மையங்கள் ஆகியவற்றில் தள்ளுபடி வழங்குகிறது. தேர்ந்த பயிற்சி அளிக்கப்பட்ட டெடிகேட்டட் க்ளைம் ஹாண்ட்லிங் குழு உங்களின் க்ளைம்களை செட்டில் செய்ய மிகவும் வேகமாகவும் முனைப்போடும் நேர்மையான முறையிலும் செயல்படுகிறது.

டாட்டா ஏசி ஹெல்த் இன்சூரன்ஸ் காப்பீடு கைவிட ஆன்லைனில் வாங்கலாம்

டாட்டா ஏசி நிறுவனத்தின் ஆன்லைன் சேவைகளின் மூலமாக நீங்கள் சுலபமான முறையில் காப்பீடுகளை வாங்கவும் மற்றும் புதுப்பிக்கவும் வசதிகள் உள்ளது. இந்த இணையதளத்தில் உங்களின் காப்பீட்டு பிரீமியம் எவ்வளவு என்று கணக்கிட்டு பார்க்கலாம். வேறு நிறுவனங்களில் நீங்கள் வாங்கிய காப்பீட்டுத் திட்டங்களையும் டாட்டா ஏஐஜி-இன் மூலமாக புதுப்பித்துக்  கொள்ளலாம். நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பல்வேறு வகையான உடல்நலக் காப்பீட்டு திட்டங்களை பிரவுஸ் செய்து உங்களுக்கு பொருத்தமான ஒன்றைத் தேர்வுசெய்யவும். ஒரு சில நிமிடங்களில் உங்களுக்கு மிகவும் பொருத்தமான பாலிசியை நீங்கள் ஆன்லைனிலேயே வாங்கி ஆன்லைனிலேயே பிரீமியம் செலுத்தி, பாலிசி ஆவணத்தை பெற்றுக்கொள்ளலாம். உங்களின் நேரத்தை இது மிச்சப்படுத்துகிறது. பிரீமியம் செலுத்தவோ பாலிசியை புதுப்பித்துக் கொள்ளவவோ நீங்கள் நிறுவனத்திற்கு வருகை தர வேண்டும் என்ற அவசியம் இல்லை.

டாட்டா ஏஐஜி ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்ஸ்

டாட்டா ஏஐஜி ஹெல்த் இன்சூரன்ஸ் பல்வேறு வகையான காப்பீட்டு திட்டங்களை தனிநபர் முதல், குடும்ப காப்பீடு, சீனியர் சிட்டிசன்,  எக்ஸிக்யூட்டிவ் மற்றும் க்ரிட்டிக்கல் இல்னஸ் நோயாளிகளுக்கு தேவையான பல்வேறு வகையான காப்பீடுகளை வழங்குகிறது. ஒவ்வொரு பாலிசி எடுக்கும்போது நீங்கள் கட்ட வேண்டிய பிரீமியம் தொகை மிகவும் மலிவான தொகையிலே வழங்கப்படுகிறது. உங்கள் குடும்பத்தின் உடல்நலத்தை பாதுகாக்க மிகவும் குறைந்த செலவில் டாட்டா ஏசி ஹெல்த் இன்சூரன்ஸ் உடல்நலக் காப்பீட்டு திட்டத்தை பெற்று பலன் அடையலாம். உங்களின் மருத்துவ செலவுக்கான நிதித் தேவைகளை காப்பீட்டின் மூலமாகப் பெற்றுக்கொண்டு நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.

மெடிப்ரைம்பாலிசி:  கேஷ்லெஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ்

5 லட்சம் ரூபாய் வரை காப்புறுதி. 50 வயது வரை மருத்துவ பரிசோதனை தேவையில்லை. கேஷ்லெஸ்க்ளைம்நான்கு மணி நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். 55 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு உண்டு.

வெல்ஷூரன்ஸ் எக்ஸிக்யூட்டிவ் பாலிசி

உங்கள் உடல்நிலையை கவனிக்க முடியாத அளவிற்கு நீங்கள் மிகவும் பிசியான ஒரு எக்ஸிக்யூட்டிவ் ஆக வேலைபளுஉங்களுக்கு அதிகமாக இருந்தால் இந்த பாலிசியை உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த காப்புறுதியில் உங்களுக்கு 9 தீவிர நோய்களுக்கானகவரேஜ்உள்ளது.  ஐசியூஅட்மிஷன் மற்றும் குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகளுக்கும் மொத்தமாக ஒரு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

வெல்ஷூரன்ஸ் ஃபேமிலி பாலிசி – ஃபேமிலி ஃபிக்ஸட்பெனி ஃபிட் ப்ளான்

குடும்பம் என்பது உங்களுக்கு மிகவும் இன்றியமையாதது. இந்த குடும்ப காப்புறுதி திட்டத்தின் வழியாக நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பை காப்பீட்டின் மூலமாக அளிக்கமுடியும். ஐசியூவில் அட்மிட் செய்ய இந்த பாலிசிகவரேஜ்வழங்குகிறது. மேலும் டெய்லி கேஷ் அலவன்ஸ்மற்றும்குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த உதவிகளையும் வழங்குகிறது.

வெல்ஷூரன்ஸ் விமன் பாலிசி –பெண்களுக்கான உடல்நலக் காப்பீடு

பெண்கள்  ஒவ்வொருவரின் வாழ்வில்மிகப்பெரிய பலமாகஇருக்கிறார்கள். இந்த பாலிசியில் அம்சங்கள் மற்றும் நன்மைகள் பெண்களுக்கு மிகவும் பொருத்தமான உடல்நலக் காப்பீடாக விளங்கும். விபத்தால் ஏற்பட்ட காயங்களுக்கு காஸ்மெட்டிக்அறுவை சிகிச்சைகளும் மற்றும் புற்றுநோய்க்கு அதிக காப்புறுதி தொகையையும் வழங்குகிறது.

க்ரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி

தீவிர நோய்கள் உடலையும் மனதையும் மற்றும் நம்முடைய நிதி வளத்தையும் கூட குலைத்துவிடும். 11 விதமான தீவிர நோய்களுக்கான காப்புறுதி இந்த பாலிசியில் உள்ளது அதை கொண்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். தீவிர நோயை கண்டறியும் பட்சத்தில் உங்களுக்கு காப்புறுதி தொகை மொத்தமாக வழங்கப்படும்.

தனிநபர் ஆக்ஸிடன்ட் மற்றும் சிக்னஸ் ஹாஸ்பிட்டல் கேஷ் பாலிசி

விபத்தால் ஏற்படும் காயங்களுக்கும் உடல்நலக்குறைவு க்கும் இந்த பாலத்தின் வழியாக நீங்கள் மருத்துவ செலவுகளை மேற்கொண்டு உங்களுக்கு ஏற்படும் நிதி சிக்கலை தவிர்க்கலாம். 180 நாட்கள் வரை உள்நோயாளிகளாக (அனுமதிக்க பட்டிருந்தால்) காப்பீட்டு கொள்கைகளின் படிதினப்படி நலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த பாலிசியில் 6 மாத குழந்தை முதல் 65 வயது முதியவர் வரை இணைந்து கொள்ளலாம்.

மெடிப்ளஸ் டாப்அப்:

உங்கள் காப்பீட்டு திட்டத்தில் கவரேஜ் அதிகப்படுத்துவதற்காக இந்த top-up பிளான் வழங்கப்படுகிறது. உங்களின் அடிப்படையான உடல்நல காப்புறுதிக்குஇது ஒரு சப்ளிமென்ட் ஆக வழங்கப்படுகிறது. இந்த காப்புறுதி திட்டத்தின்படி நீங்கள் ஆம்புலன்ஸ் செலவுகள், தினசரி மருத்துவ செலவுகள் (மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில்) டேகேர், ஆகிய செலவினங்களுக்கான தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

மெடிசீனியர்: சீனியர் சிட்டிசன் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்

வயது முதிர்ந்தவர்களுக்கான மருத்துவ செலவுகள் என்பதுதொடர்சங்கிலி. ஓய்வு பெற்ற பிறகு தொடர்ச்சியாக வருமானம் வர வழி இல்லை என்றால்மருத்துவ செலவுகள் முதியவர்களுக்கு ஒரு பெரிய பாரமாக இருக்கும். முதியவர்களின் அனைத்து சேமிப்பையும் நொடியில் காணாமல் போகச் செய்துவிடும். இந்தப் பாலிசி உங்களின் சேமிப்பை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்கு தேவையானஅப்பொழுது தொகையையும் வழங்குகிறது.

- / 5 ( Total Rating)