யுனைடெட் இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)

1

2

தொலைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி 1938 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஓஎன்ஜிசி லிமிடெட், ஜி எம் ஆர் ஹைட்ரபாத் இன்டர்னேஷனல் ஏர்போர்ட் லிமிடெட், மும்பை இண்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட், திருமலா திருப்பதி தேவஸ்தானம் போன்ற மிகப்பெரிய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது யூஐஐசி நிறுவனம்.இதனை பெரிய நிறுவனங்களுக்கு காப்பீடு வடிவமைத்துஅதை சரியான முறையில் வழங்குவதிலும் இந்த நிறுவனம் முன்னோடியாக விளங்குகிறது. மேலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை டவுன்களிலும் கிராமங்களிலும் மைக்ரோ ஆபீஸ்கள் பொருத்தப்பட்டுசேவைகளை வழங்கி வருகிறது. யூஐஐசி கிராமப்புறங்களுக்கு பெரிய அளவில் யுனிவர்சல் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரோக்ராம் ஆஃப் கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா மற்றும் விஜயா ராஜி ஜனனி கல்யாண யோஜனா (மத்திய பிரதேச மாநிலத்தில் 45 லட்சம் பெண்களுக்கு இந்த காப்புறுதிஉள்ளது), சுனாமி ஜன் பீம யோஜனா (நான்கு மாநிலங்களில் நான்கரை இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள்), நேஷனல் லைவ்ஸ்டாக் இன்சூரன்ஸ் மற்றும் பல்வேறு வகையான காப்பீடு திட்டங்களை பெரிய அளவில் கொண்டு சென்றிருக்கிறது.

யுனைடெட் இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி

நம்முடைய பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமான காப்பீட்டுத்திட்டம் உடல்நலக் காப்பீடு ஆகும். உங்களிடம் உடல்நலக் காப்பீடு அல்லது மருத்துவ காப்பீடு கைவசம் தயாராக இருந்தால் நீங்கள் எந்த வகையான மருத்துவ அவசர சிகிச்சைகளை பற்றியும் அதற்கு தேவைப்படும் நிதி வசதி பற்றியும் கவலை இல்லாமல் இருக்கலாம். இந்த நிறுவனம் வழங்கும் அனைத்து காப்பீட்டுத் திட்டங்களும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்தேவையான அனைத்து வகையான மருத்துவ அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் நிதி வசதியை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. உங்கள் சாதாரண சேமிப்பிலிருந்து செலவு செய்ய முடியாதவாறு இருக்கும் தீவிர நோய்களுக்கும்உங்கள் உடல் நலக் காப்பீட்டு இருந்து மருத்துவம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மட்டும் செய்யாமல், ஒரு காப்பீட்டாளரின்சூழலையும் அவர் வாழும் நிலையையும், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அவரின் தேவைகளையும் கணக்கில் கொண்டு அதற்கு ஏற்றது போலஹெல்த் சர்வீஸ்களையும், ப்ரிவென்டிவ் கேர் மற்றும் குறைந்த விலையில் தரமான சுகாதார பராமரிப்பும் வழங்குகிறது.

இந்த சிறுக சிறுக சேமித்து வைத்திருக்கும் பணத்தை மொத்தமாக செலவு செய்யாமல் தடுக்க உங்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் மிகவும் உதவிகரமாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தேவையான மருத்துவ பாதுகாப்பை ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கும். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு வகையான காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. உங்களின் தேவைக்கு வைத்தது போல உங்களின் நிதி நிலைக்கு ஏற்றது போல மிகவும் பொருத்தமான காப்பீட்டுத்திட்டத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஒரு சில தீவிரமான நோய்களுக்கு சோஷியல் ப்ளான்ஸ் போன்ற காப்புறுதிகளும்உள்ளது. அதன் மூலம் உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.

இந்தியாவில் பெரும்பாலானஇடங்களில் நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி பேசும்பொழுது இந்த காப்பீடுகள் எல்லாம் ஒன்று அல்லது இரண்டு வருட கால அவகாசம்கொண்டுநாம் தேர்ந்தெடுக்கும்வகையைப் பொறுத்தே அமைகிறது. அடிப்படையான ஹெல்த் கவர் என்பதைத் தாண்டி, வருமான வரி சலுகையும் உண்டு. நீங்கள் அதையும் தவறாமல் கவனிக்க வேண்டும்.

வருமான வரி சட்டத்தின் 80D பிரிவின் படி, ஒரு நபர் தனக்கோ அல்லது தன் குடும்பத்தினருக்கோ மருத்துவ செலவு செய்த வகையில் மருத்துவ காப்பீட்டின் கீழ் ரூபாய் 15,000 வரை விலக்கு பெற்றுக்கொள்ளலாம். வருமான வரி செலுத்துவோரின் பெற்றோர்கள்சீனியர் சிட்டிசன்களாக இருந்தால்ரூபாய் 20 ஆயிரம் வரை விலக்கு கிடைக்கும்.

நீங்கள் வாங்கும் உடல்நலக் காப்பீடுஎன்ன விலை என்பது பல்வேறு காரணிகள் சேர்ந்து நிர்ணயிக்கும். உதாரணமாக உங்கள் வயது, என்ன வகையான பாலிசியை நீங்கள் வாங்கப் போகிறீர்கள், உங்களின் மருத்துவ அறிக்கை – உடல் நலம் குறித்த தகவல்கள், குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, அவர்களின் வயது இன்னும் பல; நீங்கள் இந்தியா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து மிகவும் சுலபமாக உங்களுக்கு பொருந்தும் ஒரு பாலிசியை எளிதாக தேர்வு செய்து கொள்வீர்கள்.

நீங்கள் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் காப்பீடுகள் வாங்கும் பொழுது பல்வேறு வகையான பலன்களுடன் ரைடர்ஸ் என்ற வகையிலும் நீங்கள் பலன் பெறுவீர்கள். உங்களின் பலதரப்பட்ட உடல்நலம் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு ஏற்றது போல இந்த நிறுவனத்தின் ஹெல்த் பிளான்கள் இருக்கும். ஒரு மருத்துவ காப்பீடு அல்லது உடல்நலக் காப்பீடு வாங்கும்போது நீங்கள் பல்வேறு விஷயங்களை எதிர்பார்ப்பீர்கள். உதாரணமாக தீவிர நோய் சிகிச்சை காப்புறுதி, பிறந்த குழந்தையின் பாதுகாப்பு, தினப்படி செலவுக்கான காப்புறுதி போன்றவை. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நீங்கள் எளிதாக உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒரு காப்புறுதியை தேர்வு செய்து கொள்ளலாம். மிகச்சிறந்த உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யும் பொழுது, அந்த காப்புறுதி திட்டத்தில் இவையெல்லாம் உள்ளது மற்றும் எவையெல்லாம் சேர்க்கப்படாதது போன்றவற்றை நன்றாக தெரிந்து கொண்டு பின்பு சிறந்த ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல நெட்வொர்க் மருத்துவமனைகள் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். இது உங்களுக்கு பண பரிமாற்றம் மற்றும் பணமில்லா சிகிச்சை அல்லது கேஷ் பெனிஃபிட்ஸ் போன்றவற்றை பெற்றுக்கொள்ள உதவும்.

யுனைடெட் இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் பற்றி முக்கிய விவரங்கள்

மிகவும் சிறப்பான ஒரு வகையில் உங்களுக்கு நிதி பாதுகாப்பு அளிக்குமாறு ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் யுனைடெட் இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் வளர்ந்திருக்கிறது என்பதை சொல்வதில் எந்த சந்தேகமும் இல்லை. இங்கு பலரும் உடல்நலக் காப்பீட்டு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமலேயே இருக்கின்றனர். ஆனால் இது நமக்கு மிகவும் தேவையான ஒன்று. இந்தியாவில் பலரும் நமக்கு நெருங்கிய ஒருவர் உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் காலகட்டத்தில் காப்பீடு இல்லாமல் எப்படி கஷ்டப்படுகிறார் என்பதை அறிந்து கொண்டதோடு, உடல்நலக் காப்பீட்டு திட்டத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்கின்றனர். நேச்சர் இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு தனிநபரின் தேவையை முழுதாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்றது போல சிறந்த பிளான்களை உருவாக்கியுள்ளது. நாளுக்கு நாள் மருத்துவ செலவினங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. வரை அதிகரிக்கும் செலவினை கட்டுக்குள் கொண்டுவர நீங்கள் சிறந்த காப்புறுதி திட்டத்தை இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து தேர்வுசெய்யலாம். இது அதிகப்படியான மருத்துவ செலவினங்களில் இருந்து உங்களைக் காப்பாற்றும். மேலும் நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணமும் உங்கள் சேமிப்பிலேயே இருக்கும்.

யுனைடெட் இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு என்ன வழங்குகிறது

யுனைட்டட் இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் பல்வேறு தரப்பட்ட காப்புறுதி திட்டங்கள் அனைத்தும் உங்கள் பணத்தை சேமிக்க  உதவும். அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காப்புறுதி திட்டங்கள் உதவியுடன் நீங்கள் எந்த வகையான மருத்துவ அவசர சிகிச்சை காலங்களிலும் எளிதாக மருத்துவம் பெற்றுக்கொள்ளலாம். இந்த நிறுவனம்பணம் செலுத்தாமல் மருத்துவ காப்பீட்டின் கீழ் சிகிச்சை பெறுவதற்குபல்வேறு மருத்துவமனைகளுடன்நெட்வொர்க் தொடர்பில் உள்ளது.

அதனால் இந்த இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களின் அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொண்டு விடும். இதற்காக ஒரே ஒரு ரூபாய் கூட  செலவு செய்ய வேண்டாம்.

மேலும் பலர் காப்பீட்டு திட்டங்கள் reimbursement எனப்படும் சேவையையும் வழங்கி வருகிறது. பர்சனல் ஆக்சிடென்ட் கவர், பர்மனென்ட் டிஸ்-எபிலிட்டி கவர் போன்ற சில சிறப்பு காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளது.

யுனைடெட் இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ளான்ஸ் – யூஐஐசி

ஃபேமிலி மெடிகேர்

இது ஒரு காம்பரிஹென்சிவ் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ளான். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தேவையான பாதுகாப்பை ஒரே ஒரு காப்பீட்டில் பெற்றுக் கொள்ளலாம். உங்களிம் குழந்தைகளும் இந்த காப்புறுதியில் இணைத்துக்கொள்ளலாம்.

பிளாட்டினம்

இந்தியாவில் மருத்துவ வசதி கிடைக்கும் எதாவது உடல்நல குறைவின்மைக்கு, விபத்துக்கு, அல்லது நீண்ட நாள் வியாதிக்கு, அதன் சார்ந்து ஏற்படும் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகள் அனைத்தும் இந்த பாலிசியில் உண்டு. பாலிசி காலத்தில் ஏற்படும் நோய்களுக்கும் விபத்துக்கும் கூட காப்புறுதி உள்ளது. மேலும், குறிப்பிட்ட டே-கேர் சிகிச்சைகளும் இந்த பாலிசியில் கவராகும்.

கோல்ட்:

இந்தியாவில் மருத்துவ வசதி கிடைக்கும் எதாவது உடல்நல குறைவின்மைக்கு, விபத்துக்கு, அல்லது நீண்ட நாள் வியாதிக்கு, அதன் சார்ந்து ஏற்படும் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகள் அனைத்தும் இந்த பாலிசியில் உண்டு. பாலிசி காலத்தில் ஏற்படும் நோய்களுக்கும் விபத்துக்கும் கூட காப்புறுதி உள்ளது. மேலும், குறிப்பிட்ட டே-கேர் சிகிச்சைகளும் இந்த பாலிசியில் கவராகும்.

தனிநபர் மெடிக்ளைம்:

இது ஒரு தனிநபர் மருத்துவ / உடல்நலக் காப்பீட்டுத் திட்டம், உங்களுக்கு தேவையான அனைத்து வகையான உடல்நல பாதுகாப்பும் வழங்கும்.

ஃபேமிலி மெடிகேர் 2014:

இது ஒரு ஃப்ளோட்டர் ப்ளான். இந்த பாலிசியில் உங்கள் பெற்றோருக்கும் உங்கள் கணவர் / மனைவியின் பெற்றோருக்கும் காப்புறுதி கிடைக்கும்.

சீனியர் சிடிசன்:

இது முதியவர்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசி.

சூப்பர் டாப்-அப்:

இந்தியாவில் மருத்துவ வசதி கிடைக்கும் எதாவது உடல்நல குறைவின்மைக்கு, விபத்துக்கு, அல்லது நீண்ட நாள் வியாதிக்கு, அதன் சார்ந்து ஏற்படும் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகள் அனைத்தும் இந்த பாலிசியில் உண்டு. குறிப்பிட்ட அளவு தண்டி செலவுகள் ஏற்பட்டாலும் அதற்கான காப்புறுதி கிடைக்கும்.

டாப்-அப்:

உங்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் லிமிட் தாண்டி விட்டால், கூடுதலான ஹெல்த் கவர் கிடைக்கும்.

யூனி கிரிடிகேர்:

இது க்ரிடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி. பாலிசி இன்சப்ஷன் ஆன நாள் முதல் 90 நாட்கள் வரை வெய்ட்டிங் பீரியட் மற்றும் டியாக்னோசிஸ் ஆன நாள் முதல் 30 நாட்கள் சர்வைவல் பீரியட் உள்ளது.

- / 5 ( Total Rating)