Sehwag PX
யூனிவர்சல் சோம்ப்போ ஹெல்த் இன்சூரன்ஸ்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்

#Virukipolicy | T&C*

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)

1

2

தொலைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

யுனிவர்சல் சோம்ப்போ ஜெனரல் இன்சூரன்ஸ், இந்தியன் ஜெனெரல் இன்சுரன்ஸ் தொழில் துறையில் உள்ள, தனியார் மற்றும் பொது பார்ட்னர்ஷிப் நிறுவனமாகும். இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அலகாபாத் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மேலும் கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார்த்துறை வங்கி, முன்னணியில் உள்ள FMCG நிறுவனமான டாபர் இன்வஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன், மற்றும் 70 பில்லியன் யென் முதலீடாக கொண்டுள்ள ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான டோக்கியோவில் நிறுவப்பட்ட சோம்ப்போ ஜப்பான் ஆகிய தேசிய வங்கிகளுக்கிடையேயான கூட்டு நிறுவனம்.

யுனிவர்சல் சோம்ப்போ உடல்நலம் மற்றும் தீவிர நோய், விபத்து மற்றும் டிஸ்-எபிலிட்டி, உள்நாட்டு மற்றும் மோட்டார் காப்பீடு ஆகியவற்றை வழங்குகிறது. 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.ஆர்.டி.ஏ ஆணையத்திடமிருந்து உரிமம் மற்றும் பதிவு சான்றிதழை இந்த காப்பீட்டு நிறுவனம் பெற்றது.

யுனிவர்சல் சோம்ப்போ இந்தியாவின் மிகச்சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும். இது பொது காப்பீட்டுத் துறையில் கிட்டத்தட்ட அனைத்துப் பிரிவுகளிலும் திட்டங்கள் வழங்கி மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் பெரும் காப்பீட்டு நிறுவனமாகும். இந்நிறுவனத்திற்கு செம்மையான வரலாறும் பெரிய எதிர்காலமும் உள்ளது. நிறுவனத்தின் கூற்றுக்கள் மற்றும் வரலாற்றைப் பற்றி பேசுகையில், நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு நிறுவனமாக விளங்குகிறது. மேலும், நல்ல க்ளைம் ரிக்கார்ட்ஸ் மற்றும் விமர்சனங்களை கொண்டுள்ளது. நம்பகமான இந்த நிறுவனத்தில் நீங்கள் எந்தக் கவலையும் இன்றி உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.

யூனிவர்சல் சோம்ப்போ ஹெல்த் இன்சூரன்ஸ் முன்னோட்டம்

யூஎஸ்ஜிஐ நிறுவனம் 2007ம் ஆண்டு தன்னுடைய வணிகத்தை துவங்கியது. தொடங்கப்பட்ட நாள் முதல், அதிவேகமான வளர்ச்சியை கண்டுள்ளது. அதற்கான முக்கிய காரணம், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்படும் திட்டங்களே. தனிப்பட்ட தேவைகளைக் கருத்தில் கொண்டு, அதை நிறைவேற்றுவது போல அமைக்கப்படும் திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுகிறது. இந்தியா முழுவதும் 113 கிளைகளுடன் 17 ஸோனல் அலுவலகங்களுடனும் செயல்புரிந்து வருகிறது. மேலும் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையும் ஒன்றையும் நிறுவியுள்ளது.

இந்த நிறுவனத்தில் க்ராஸ் ரிட்டன் ப்ரீமியம் மார்ச் 31, 2016 படி 903.79 கோடியாகும். இதுவரை 1.6 மில்லியன் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட க்ளைம்களை செட்டில் செய்துள்ளது. தனிநபர் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்து வகையான தரப்பினருக்கும் பாலிசிகளை வழங்கி வருகிறது.     

யூனிவர்சல் சோம்ப்போ க்ளைம் டெக்னிக்

  • எமர்ஜன்சி நேரத்தில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்படும் போது, அதற்கான கவரேஜை பணமில்லா மருத்துவ சிகிச்சையின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். நெட்வொர்க் மருத்துவமனைகளில் உங்களின் ஹெல்த் கார்டை கொடுக்க வேண்டும். முன்பணமாக ஒரு சிறிய தொகையை செலுத்த வேண்டும். இதை நீங்கள் பின்னே க்ளைம் மூலம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.  
  • ஒரு சில குறிப்பட்ட நிலைமைகளுக்கு நீங்கள் கவரேஜ் பெற முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
  • மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பத்து நாட்களுக்குள் நீங்கள் அனைத்து ஆவணங்களையும் அனுப்ப வேண்டும்.
  • க்ளைம் ஏற்றுக்கொள்வதும் ரிஜக்ட் செய்வதும் நிறுவனத்தின் முடிவு. அது நீங்கள் அனுப்பும் டாகுமெண்ட்டை ஆய்வு செய்து எடுக்கப்படும் முடிவாகும்.

யூனிவர்சல் சோம்ப்போ ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ்:

உடல்நலக் காப்பீட்டு திட்டங்கள் நம் வாழ்வின் ஒரு முக்கியமான  அங்கமாக வகிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் எதிர்பாராமல் நேரும் மருத்துவ செலவுகள், மேலும் மருத்துவ செலவுகளுக்காக தேவையான நிதி வசதியை, நிதி உதவியை அளிக்கும் உடல்நலக் காப்பீடு திட்டங்கள் மிகவும் இன்றியமையாது ஆகிவிட்டது. காப்புறுதி மற்றும் அதிகப்படியான பயன்களை வழங்கும் காப்பீட்டுத் திட்டங்களின் உதவியோடு மருத்துவ சிகிச்சை பெற உங்களுடைய சேமிப்பை தான் கரைக்க வேண்டும் என்ற நிலை வாராமல் சமாளிக்க முடிகிறது.

உங்களுக்கு மிகவும் பொருத்தமான உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தை நீங்கள் பெறுவதன் மூலம் தேவையான மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்வதில்  கவனம் செலுத்தலாம். இந்த மருத்துவ சிகிச்சைக்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டி இருக்கும் என்ற கவலை உங்களிடம் இல்லாமல் போகும். பல வகையான உடல்நலக் காப்பீட்டு திட்டங்களை அடுக்கடுக்கான நலன்களை பெறும் வகையில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வழங்குகிறது. இந்த நிறுவனம் வழங்கும் அனைத்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்களும் உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்ளுமாறும் மிகவும் குறைந்த விலையிலும் கிடைக்கிறது. காப்புறுதி தொகையை உங்களின் காப்பீட்டு திட்டத்திற்கு ஏற்றவாறு நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி:

இது ஒரு தனிநபருக்கான இன்ஷூரன்ஸ் திட்டம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அதற்கான செலவுகள், டாமிசிலரி செலவுகள், ஆக்சிடண்டல் இன்ஜூரி மற்றும் பல செலவினங்களுக்கு காப்புறுதி அளிக்கிறது.  

க்ரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி:

இது ஒரே திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கான உடல்நலக் காப்பீட்டை வழங்குகிறது. உற்பத்தி மற்றும் வியாபார நிறுவனங்களுக்கான கூட்டு பாலிசியியையும் வழங்குகிறது.

தனிநபர் பர்சனல் ஆக்சிடன்ட் பாலிசி:

விபத்தினால் ஏற்படும் நிதி பற்றாக்குறைக்கு, (பாலிசிதாரர் மற்றும் அவரின் குடும்பத்தினர்) நஷ்டஈடு அளிக்கிறது.  

ஜன்டா பர்சனல் ஆக்சிடன்ட் பாலிசி:

எதிர்பாராத மெடிக்கல் எமர்ஜென்சி செலவுகளுக்கு நிதி பாதுகாப்பு வழங்குகிறது.  

க்ரூப் பெர்சனல் ஆக்சிடன்ட் பாலிசி:

இந்த க்ரூப் பாலிசி, உங்களுக்கும் உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் பணியாளர்களுக்கு ஹெல்த்கவரேஜ் வழங்குகிறது.  

ஆபத் சுரக்ஷா பீமா யோஜ்னா:

தீவிர நோய்களுக்கான செலவுகள் ஏற்படும் போது, அதற்கான பாதுகாப்பாய் மொத்தமாக ஒரு தொகையை காப்பீட்டாளருக்கு / அல்லது அவரின் நாமினிக்கு வழங்குகிறது.

லோன் செக்யூர் இன்ஷூரன்ஸ்:

எதிர்பாராமல் ஏற்படும் எமர்ஜன்சி சமயங்களில், உங்களுடைய கடன்களை ட்ரான்ஸ்ஃபர் செய்ய உதவுகிறது.

ஹாஸ்பிட்டல் கேஷ் இன்ஷூரன்ஸ்:

தனிநபர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினருக்கான காப்பீட்டுத் திட்டம், கூடுதலான பலன்களுடன் வருகிறது.

சரல் சுரக்ஷா பீமா:

இந்தத் திட்டம் எதிர்பாராமல் ஏற்படும் எமர்ஜன்சி மருத்துவ சிகிச்சைக்கு காப்புறுதி அளிக்கிறது.  

ஓவர்சீஸ் ட்ராவல் இன்ஷூரன்ஸ் ப்ளான்:

உங்களுடைய அடிப்படை பயண காப்பீட்டோடு சேர்த்து உடல்நலக் காப்பீட்டையும் வழங்குகிறது.

சம்பூர்ண சுரக்ஷா பீமா யோஜ்னா:

இது ஒரு முழுமையான ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான், அதிகபட்ச கவரேஜ் வழங்கும்.  

சீனியர் சிடிசன் ஹெல்த் ப்ளான்:

இந்த திட்டம், முதியவர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது.

முழுமையான ஹெல்த்கேர் இன்ஷூரன்ஸ் ப்ளான்:

உங்களுக்கு தேவையான அனைத்து ஹெல்த்கேர் தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

ப்ரவசி பார்த்திய பீமா யோஜ்னா:

இந்த திட்டம் உடல்நலக் காப்பீடு வழங்குவதுடன், பயணக் காப்பீடையும் வழங்குகிறது.

சுர்வா வித்யார்த்தி பீமா யோஜ்னா:

மாணவர்களின் உடல்நலம் கருத்தில் கொண்டு, அவர்களின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு அளிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு காப்பீட்டுத் திட்டம் ஆகும்.

ஸ்வர்ண கிராமின் பிமோ யோஜ்னா தனிநபர்:

இது ஒரு காம்ப்ரிஹென்ஸிவ் ஹெல்த் கவரேஜ் திட்டம். விபத்து மற்றும் தீவிர சிகிச்சைக்கு பாதுகாப்பு அளிக்கிறது.   

ஸ்வர்ண கிராமின் பிமோ யோஜ்னா க்ரூப்:

இந்த திட்டம் கிராமப்புறங்களில் உடல்நலக் காப்புறுதி அளிக்கிறது.

- / 5 ( Total Rating)