Sehwag PX
எல்ஐசி அன்மோல் ஜீவன் II
  • term திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்

#Virukipolicy | T&C*

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

தொலைபேசி எண்
பெயர்
பிறந்த தேதி

1

2

வருமான
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சிமற்றும் தனியுரிமைக் கொள்கையைஏற்றுக்கொள்கிறீர்கள்

இது அடிப்படையில் காப்பீட்டு நபரின் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவி வழங்கும் ஒரு பாதுகாப்பு திட்டம் ஆகும். மற்றொரு விதத்தில், நீங்கள் இதனை ஒரு கால காப்புறுதி திட்டம் என்றும் அழைக்கலாம். இந்த திட்டத்தின் கீழ், காப்பீட்டு நபர் காப்பீட்டு காலத்தின் போது இறக்க நேர்ந்தால், பெரும்பாலும் அந்த இறப்பிற்கான பயன் நியமனதாரருக்கு வழங்கப்படும். இதனால் ஒரு கால காப்புறுதி திட்டம் எந்த நிச்சயமற்ற நிகழ்வுகளுக்கும் அல்லது இறப்பிற்கும் சிறந்த பயன் அளிக்கிறது.

அன்மோல் ஜீவன் II, அதே வழியில் செல்கிறது, இது நிதி பாதுகாப்பு வழங்ககூடிய ஒரு கால திட்டமாக உள்ளது. குடும்பத்தின் ஒரு நபர் ஏதேனும் அசாதாரணமான மரணத்தை சந்திக்க நேரிடும் போது அக்குடும்பத்தினர் அதிகமாக நாடி செல்வது பாதுகாப்பாகும். வாழ்க்கை என்பது நிச்சயமற்ற ஒரு பொதி என்பதால், காப்பீட்டு திட்டங்களின் மூலம் பாதுகாப்பது ஓரளவிற்கு சேதத்தை குறைக்கும். இதனால் தனி நபரின் குடும்பமானது நல் முறையில் வாழ்கிறது.

எல்ஐசி அன்மோல் ஜீவன் II - முக்கிய அம்சங்கள்

  • இடையீட்டாளர்களின் ஈடுபாடு இல்லாமல் திட்டங்களை நேரடியாக கொண்டு வருகிறது
  • இது ஒரு முழு நிறைவான வாழ்க்கைத் திட்டமாகும்.
  • பிரிமிய தொகையானது வருடாந்திரம் மற்றும் அரை வருடம் என இரண்டு வகைகளாக உள்ளது
  • செலுத்தப்படும் பிரிமிய தொகையானது ஆண்டுக்கு ஒருமுறை ஏற்று கொள்ளப்படும்.
  • மரணத்தை தவிர வேறு வயது முதிர்ச்சிக்கு என எந்த ஒரு ஒதுக்கீடும் கிடையாது
  • செலுத்தப்பட்ட பணத்தின் மதிப்பில் ஈடுபடுவதில்லை
  • ஒப்படைக்கும் மதிப்பை பெற்றிருக்கவில்லை  
  • விபத்து உள்பட அனைத்து வகை இறப்பிற்கும் பாதுகாப்பு வழங்குகிறது
  • எல்.ஐ.சி. அன்மோல் ஜீவன் II காப்பீட்டிற்கு எதிராக கடன் அல்லது விண்ணப்பம் ஏதும் இல்லை

எல்.ஐ.சி அன்மோல் ஜீவன் II - நன்மைகள்

இறப்பு சலுகைகள்,  காப்பீட்டாளர் காப்பீடு இயங்கி கொண்டிருக்கும் காலப்பகுதியில் துரதிஷ்டவசமாக திடீர் மரணத்தை சந்திக்க நேர்ந்தால், ஒரு குறிப்பிட்ட கூடுதல் தொகையானது காப்பீட்டாளரின் நியமானதாரருக்கு செலுத்தப்படும் என உத்திரவாதம் அளிக்கிறது

வரி சலுகைகள், காப்பீட்டாளர்கள், அவர்கள் செலுத்தக்கூடிய பிரிமிய தொகைக்கான வரி சலுகைகளை வருமான வரி சட்டத்தின் பெரும்பாலான பிரிவுகளின் கீழ் எல்.ஐ.சி. அன்மோல் ஜீவன் II  செலுத்துகிறது.

எல்.ஐ.சி. அன்மோல் ஜீவன் II – தகுதி வரையறை


   வயது

குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் (நிறைவு பெற்றிருக்க வேண்டும்)

அதிகபட்ச வயது 55 ஆண்டுகள் (தொடக்கத்தில் இருந்தால்போதும்)



காப்பீடு காலம்

குறைந்தபட்ச காப்பீட்டு காலம் 5 ஆண்டுகள்

குறைந்தபட்ச காப்பீட்டு காலம் 25 ஆண்டுகள்

அதிகபட்சமாக காப்பீடு நிறுத்தும் வயது 65 ஆண்டுகள்

உத்திரவாத தொகை

குறைந்தபட்ச உத்திரவாத தொகை: 6,00,000 ரூபாய்

அதிகபட்ச உத்திரவாதம் தொகை:  24,00,000 ரூபாய்

பிரிமியம் செலுத்தும்  முறை

வருடாந்திரம், அரை வருடம்

யார் அன்மோல் ஜீவனில் முதலீடு செய்ய முடியும்?

இதற்கு முன்பு கூறியபடி, அவன் அல்லது அவளின் குடும்பத்தில் வருமானம் பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு கால காப்புறுதி திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது. கால காப்புறுதி திட்டங்களுக்கு குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் ஆகும் அது போல எல்.ஐ.சி. அன்மோல் ஜீவன் II திட்டத்தில் நுழைய மக்களுக்கு அதிகபட்ச வயது 55 ஆண்டுகள் ஆகும். அதிகபட்சமாக இருக்ககூடிய முதிர்ச்சியான வயது 65 ஆண்டுகள் ஆகும். இத்தகைய திட்டத்தின் கீழ் தனிநபர் ஒருவர் குறைந்தபட்சம் 6 லட்சம் ரூபாயை பெற முடியும்.

ஒருவரே பல ஆயுள் காப்பீடுகளை வாங்க முடியுமா?

கால காப்புறுதி திட்டங்களை தனிநபர்களால் நிச்சயமாக வாங்கி கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் முடியும். ஆனால் அதற்கு அந்நபர் ஏற்கனவே இருக்கும் வேறு எந்த திட்டங்களிளோ அல்லது கொள்கைகளோ அல்லது ஏற்கனவே இருக்கும் அதிகப்படியான திட்டங்களோ பெற்றிருக்க கூடாது. கூடுதல் கொள்கைகளை எடுத்துக் கொள்வதற்கு,  இருப்பினும்,  முனைம தொகையை செலுத்துவதற்கு அவனுக்கு அல்லது அவளுக்கு என தனியான போதுமான திறன்களை நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். மக்கள்,  தாங்கள் வைத்திருக்கும் திட்டம் முழு ஆதார பாதுகாப்பையும் தங்களுக்கு வழங்கவில்லை என்று நினைப்பவர்களுக்காக கூடுதல் கால திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏனெனில் அப்போதுதான் மக்களால் எல்.ஐ.சி யின் அன்மோல் ஜீவன் II வினால் முழுமையாக நிரூபிப்பதற்கான பாதுகாப்பை அளவிட முடியும்.

கால திட்டங்களை ஆன்லைனில் வாங்க முடியுமா?

தற்காலத்தில் இணையத்தில் மக்களின் விரல் நுனியில் ஒரு சுட்டியை கிளிக் செய்வதன் மூலம் பல வகையான வசதிகளை பெற முடியும்,  இணையத்தில் கால திட்டத்திற்கான வாய்ப்புகளை நீண்ட காலத்திற்கு ஒதுக்கி வைக்க முடியாது. நிறுவனங்கள் அவைகளுடைய திட்டங்களை ஆன்லைனில் வாங்கி கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளன,  இதன் விளைவாக நேரத்தை சேமிக்கும் வசதியை தூண்டுவதற்கு வழிவகை செய்கிறது.

எல்.ஐ.சி. அன்மோல் ஜீவன் II திட்டம் - வகைகள்

எல்.ஐ.சி. அன்மோல் ஜீவன் II  திட்டத்தின் பிரிவுகள் பின்வரும் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் வழியாக நன்கு புரிந்து கொள்ள கூடிய ஒன்றாக உள்ளது. காப்பீட்டாளரின் இறப்பு நிகழ்வினால் 25,00,000 க்கும் அதிகமான தொகை அளிக்கப்படுவதற்கான உத்தரவாதம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த காப்பீடு காலப்பகுதி 35 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அரை வருடம் மற்றும் வருடாந்திர அடிப்படையில் காப்பீட்டின் பிரிமிய தொகையை செலுத்தலாம். ஒப்படைப்பு தொகை கிடையாது மற்றும் கடனுக்காக விண்ணப்பிக்க இயலாது என்பதால்,  புதுப்பிக்கும் காலமானது இரண்டு ஆண்டு கால இடைவெளிக்குள் உள்ளது. எல்.ஐ.சி அன்மோல் ஜீவன் II திட்டம் என்பது ஒரு முற்றிலும் கால காப்புறுதி திட்டமாகும். முன்னர் கூறியது போலவே இத்திட்டம் முதிர்ச்சிக்கான சலுகைகளோ அல்லது வாழ்வதற்கான சலுகைகளோ பெற்றிருக்கவில்லை. இது இறப்பு சலுகைகளை மட்டுமே பெற்றுள்ளது. எந்தவொரு விதத்திலும் இலாப நோக்கம் இல்லாமல் செலுத்தும் நிலையான திட்டம் ஆகும்.

எல்.ஐ.சி அன்மோல் ஜீவன் II திட்டம் வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள்

எல்.ஐ.சி. அன்மோல் ஜீவன் II திட்டத்திற்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கபடும் போது இதை போன்ற பிற கால காப்பீட்டுத் திட்டங்களுக்கு இது வேறுபட்டதல்ல. பொதுவாக இத்திட்டங்கள் ஆர்வமுள்ள நபரின் வயது,  அடையாளம், வருமான ஆதாரம் மற்றும் முகவரி ஆகியவற்றை உள்ளடக்கியது. திட்டத்தை எடுத்துக்கொள்ளும் நேரத்தில் கொடுக்க வேண்டிய ஆவணங்களாவன:

  • வயது ஆதாரத்திற்காக பிறப்புச் சான்றிதழிலிருந்து மெட்ரிக்குலேஷன் வரை நீட்டிக்கும் ஆவணங்கள்
  • அடையாள ஆதாரத்திற்காக ஆதார்,  பான்,  பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகிய பல்வகை ஆவணங்கள்
  • முகவரி ஆதாரத்திற்காக பாஸ்போர்ட், மின்சாரம் அல்லது எரிவாயு கட்டணங்களின் இரசீது போன்ற ஆவணங்கள்
  • வருமான ஆதாரத்திற்கான வருமான சான்றிதழ்
  • ஏதாவது மருத்துவ அடிப்படையிலான சான்றுக்காக ஒரு மருத்துவ சான்றிதழ்

எல்.ஐ.சி அன்மோல் ஜீவன் II திட்டத்தை வாங்குவதற்கு மருத்துவ சோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமா?

எல்.ஐ.சி. அன்மோல் ஜீவன் II போன்ற கால திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பரிசோதனை செய்தல்,  அவனுடைய அல்லது அவளுடைய உடல் நிலை குறித்த தகவல்கள் பாலிசிதாரரால் வழங்கப்பட்டதற்கு முற்றிலும் உட்பட்டவை. பாலிசிகளானது புகை பிடிக்காத வகையின் கீழ் இருக்க வேண்டும், உதாரணமாக,  மருத்துவ தொடர்புடைய சோதனைகளின் கீழ் இருக்க வேண்டும். எனவே மக்கள் அணுக வேண்டும். இது நோயாளியின் மருத்துவ சோதனை அளவீடுகளின் போது சேகரிக்கப்பட்ட இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை கொண்டு முடிவு செய்யப்படும். எனவே, பாலிசிதாரர்கள் தங்கள் உடல்நலத்தைப் பற்றி விவரிக்கும் ஒவ்வொரு துளி விவரங்களையும் சரியான முறையில் வெளிப்படுத்துவது மிக முக்கியம்.

எல்.ஐ.சி. அன்மோல் ஜீவன் II பாலிசியின் விதி விலக்குகள்:

எல்.ஐ.சி. அன்மோல் ஜீவன் II வின் சில கால திட்டங்களின் மூலம்  இறக்கும் நிகழ்வு என்பது,  அது பொதுவாக கணக்கில் எடுத்துக்கொள்ளபடாது அல்லது இத்திட்டத்தை வாங்கிய ஒரு வருடத்திற்குள் அல்லது பாலிசியை புதுப்பிபதற்கு முன் தற்கொலை செய்வதன் மூலம் தன் சொந்த வாழ்க்கையை அழித்துக்கொள்வது போன்ற இயற்கைக்கு மாறான காரணங்களின் மூலம் நிகழ்ந்த எந்த ஒரு மரண நிகழ்விற்காகவும் அதன் வழியை மாற்றி கொள்ளாது.

விதிமுறை புத்தகங்களின் படி, காப்பீட்டாளர் பாலிசியின் ஒரு வருட காலம் முடியும் முன்பே தற்கொலை செய்து கொண்டால், அக்காலத்திற்குள் காப்பீட்டாளர் செலுத்திய மொத்த பிரீமியத்தில் 80% இறந்தவரின் நியமானதாரருக்கு ஒப்படைக்கப்படுகிறது.

எல்ஐசி அன்மோல் ஜீவன் II இதர அம்சங்கள்

  1. குறிப்பிட்ட காலக்கெடு

ஆயுள் காப்பீட்டு பாலிசி திட்டங்களின் எந்தவொரு வகைக்கும் குறிப்பிட்ட காலக்கெடு உள்ளது. சாதாரணமாக இந்த காலக்கெடுவானது ஒரு மாதம் அல்லது 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிசிதாரர்கள் பாலிசி தொடர்பான ஒவ்வொரு ஆவணங்களையும் விவரமாக படிப்பதற்கு மற்றும் அவர்களுடைய சந்தேகங்கள் அல்லது கேள்விகளுக்கு பதில்களை பெறவதற்கும் இந்த காலமானது மிகவும் முக்கியமானது.

பாலிசி சந்தாதாரருக்கு இவை திருப்தி அளிக்கவில்லை என்றால் காப்பீட்டு நிறுவனத்திற்கு பாலிசி தொடர்பான ஆவணங்களை திருப்பி அனுப்ப முடியும். இந்த காலக்கெடுவில் பாலிசிதாரரால் செலுத்தப்பட்ட முதல் பிரீமியத்தை நிறுவனம் திருப்பி அனுப்புகிறது. பாலிசி திட்டத்தின் படி,  பாலிசிதாரரால் நிறுவனத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தால்,  மீண்டும் பாலிசிதாரரால் இதில் பதிவு செய்யப்பட முடியாது.

  1. கருணை காலம்

ஒவ்வொரு பாலிசியும் கிரேஸ் காலத்தை குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம். கிரேஸ் காலம் என்பது பாலிசிதாரர்கள் தங்களது நிலுவையிலுள்ள ப்ரீமியம் கட்டணங்களை செலுத்த அனுமதிக்கப்படும் நீண்ட மாத கால சராசரி கருணை காலம் ஆகும். கட்டண தேதிக்குள் பிரீமியங்களை செலுத்தாவிட்டால் பாலிசியானது செயல் நிலையில் இருக்கும் ஆனால் கருணை காலம் என்பது 30 நாட்களுக்கு மட்டுமே உண்டு.

கடன் - இந்த திட்டத்தில் கடன் வசதி இல்லை.

பயனாளிகள் - இந்த திட்டத்தில் பயனாளிகள் என்று எவரும் இல்லை  

ஒப்படைக்கப்பட்ட மதிப்பு - இந்த திட்டத்தின் மூலம் எந்த நேரத்திலும் எந்த ஒரு ஒப்படைக்கப்பட்ட மதிப்பையும் அடைய இயலாது.

எல்.ஐ.சி அன்மோல் ஜீவன் II பாலிசிக்கான பிரீமியத்தை மாற்ற முடியுமா?

எல்.ஐ.சி. அன்மோல் ஜீவன் II  பாலிசிக்கான பிரீமியத்தை சில காரணங்களால் மாற்றங்களைச் செய்வதன் மூலம் சேவை வரிக் ஒழுங்குமுறையில் இருக்குமேயானால் மாற்றங்களை மேற்கொள்ள முடியும். இது நாட்டின் அரசாங்கத்தால் சிலவற்றை மாற்றியமைத்தல் மற்றும் மாற்றங்கள் செய்வதன் காரணமாக ஏற்படுகிறது.

எல்.ஐ.சி அன்மோல் ஜீவன் II பாலிசியானது உலகம் முழுவதும் செல்லத்தக்கதா?

உலகின் மிகப்பெரிய காப்பீட்டு விற்பனை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி இதுவரை உலகம் முழுவதும் 250 மில்லியன் மக்களைச் சென்றடைந்துள்ளது. எல்.ஐ.சி. அன்மோல் ஜீவன் II ன் ஒரு பகுதியாக இருக்கும் கால திட்டங்களானது உலகளாவிய காப்பீட்டுக் கொள்கையின் பாகங்களில் ஒன்றாக வடிவமைக்கின்றது. கால அட்டவணையைத் தவிர, ULIPS, குழந்தைத் திட்டங்கள்,  பாரம்பரிய சேமிப்புத் திட்டங்கள்,  ஓய்வூதிய திட்டங்கள் போன்ற சில திட்டங்களும் உள்ளன என்பதை குறிப்பிட வேண்டும்.

அன்மோல் ஜீவன் 2 திட்டம் - உதாரணம்

திரு சிங்கானியா இந்த திட்டத்தை பின்வரும் அளவுருவங்களுடன் வாங்கியிருப்பாரேயானால்:

திட்டத்தை வாங்கியபோது அவருக்கு வயது = 35 வருடம்

தொகை உத்திரவாதம்= ரூ. 24 லட்சம்

பாலிசி காலவரை = 25 ஆண்டுகள்

மேலே குறிப்பிடப்பட்ட விவரங்களின்படி, வருடாந்திர பிரீமியம் ரூ. 11,784 + வரிகள். தற்போதைய வரிக் குறைபாட்டின் படி,  வருடாந்திர பிரீமியம் ரூ. 13.905

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில்,  அவர் வருடாந்திர பிரீமியத்தை செலுத்த வேண்டும். அப்போதுதான்,  அவர் ஆண்டு முழுவதும் பாதுகாப்பை பெற முடியும். அவர் 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டின் பாலிசி தொடக்கத்திலும் பிரீமியம் செலுத்த வேண்டும்.

பாலிசி காலத்தின் போது எந்த நேரத்திலும் காப்பீட்டாளர் இறந்துவிட்டால், நியமனதாரர் இறப்புச் சலுகையாக ரூ. 24 லட்சத்தை பெற முடியும்.

இந்த திட்டத்தில் முதிர்வு சலுகைகள் எதுவும் இல்லை.

- / 5 ( Total Rating)