2018-19 இல் முதலீடு செய்ய சிறந்த எல்‌ஐ‌சி திட்டங்கள்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

கைபேசி எண்
பெயர்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

நல்வாழ்விற்கு துணையாகவும் பாதுகாப்பான வாழ்க்கையை  கொண்டிருப்பதற்கும் ஆயுள் காப்பீடு என்பது முக்கியமானதாகும். ஒரு ஆயுள் காப்பீடு வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை யாருமே பெரிதாக நினைப்பதில்லை. உங்களுடைய இறப்பு நிகழும் சமயத்தில் உங்கள் குடும்பம் மற்றும் அல்லது அன்புக்குரியோர்க்கு வேண்டிய நிதி பாதுகாப்பை இது அளிக்கிறது. இந்தியாவில், சில மக்கள் இதைச் செலவாக எண்ணுகிறார்கள். நீங்கள் மட்டுமே உங்களுடைய குடும்பத்தில் வருவாய் ஈட்டுபவராக இருக்கிறீர்கள் எனில், ஒருவேளை நீங்கள் இறக்கும் பட்சத்தில் உங்களுடைய குடும்பம் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்கள் தங்களுடைய வாழ்க்கையை எப்படிச் சமாளிப்பார்கள் என்று நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இது தொடர்பாக நீங்கள் தடுமாற்றம் அடைந்தால் அதற்கான விடை ஆயுள் காப்பீட்டு பாலிசி ஆகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆயுள் காப்பீடு என்று வரும் போது, நம் மனதிற்கு வரும் முதல் நிறுவனம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் உற்பத்தி என்பது பரந்த அளவிலான மிகவும் நம்பிக்கைக்குரிய வர்த்தகமாகும். கிடைக்கக்கூடிய எல்லா தேர்வுகளிலிருந்தும், மிகச்சிறந்த ஒன்றை எடுப்பது மிகவும் கடினமாகும். உங்களுக்குச் சுலபமாக இருப்பதற்காக, எல்‌ஐ‌சியின் 6 மேலான காப்பீட்டுத் திட்டங்களின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த எல்‌ஐ‌சி திட்டங்களும் அதன் விவரங்களும்

எல்‌ஐ‌சியின் திட்டங்கள்

திட்டத்தின் வகைகள்

நுழைவு வயது

பாலிசி காலவரையறை

அதிகபட்ச முதிர்வு வயது

காப்பீட்டு தொகை (குறைந்த பட்சம்- அதிக பட்சம்)

எல்‌ஐ‌சியின் நியூ என்டௌன்மென்ட் பிளான்

இணைக்கப்படாத-என்டௌன்மென்ட் திட்டம்

8-50 ஆண்டுகள்

12-35 ஆண்டுகள்

75 ஆண்டுகள்

1, 00, 000-வரம்பு இல்லை

எல்‌ஐ‌சி இ-டேர்ம்

மாசற்ற கால காப்பீட்டுத் திட்டம்

18-60 ஆண்டுகள்

10-35 ஆண்டுகள்

75 ஆண்டுகள்

25,00,000-வரம்பு இல்லை

எல்‌ஐ‌சி ஜீவன் ஆனந்த்

பங்குபெறும்

  பாரம்பரிய என்டோமென்ட் திட்டம்

18-50 ஆண்டுகள்

15-30 ஆண்டுகள்

75 ஆண்டுகள்

15-30 ஆண்டுகள்

எல்‌ஐ‌சி நியூ சில்ட்ரன் மணி பேக் பிளான்

பாரம்பரிய பணம் திரும்பப் பெறும் குழந்தைகளுக்கானத் திட்டம்

பாரம்பரிய பணம் திரும்பப்

பெறும் குழந்தைகளுக்கானத் திட்டம்

25 ஆண்டுகள்

25 ஆண்டுகள்

ரூபாய் .1,00,000 / - வரம்பு இல்லை

எல்‌ஐ‌சி ஜீவன் சரல்

என்டோமென்ட் திட்டம்

12-60 ஆண்டுகள்

70 ஆண்டுகள்

70 ஆண்டுகள்

மாதாந்திர பிரீமியத்தின் 250 மடங்கு

-வரம்பு இல்லை

எல்‌ஐ‌சி ஜீவன் சாந்தி

ஆண்டுச் சந்தாத்  திட்டம்

30-85 ஆண்டுகள்

திட்டத்தின் விதங்கள் படி மாறக்கூடியது

திட்டத்தின் விதங்கள் படி மாறக்கூடியது

திட்டத்தின் விதங்கள் படி மாறக்கூடியது

எல்‌ஐ‌சி நியூ என்டௌன்மென்ட் பிளான் 

எல்‌ஐ‌சி நியூ என்டௌன்மென்ட் பிளான்- எல்‌ஐ‌சி வழங்கக்கூடிய மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு இணைக்கப்படாத திட்டமான இது நுகர்வோர்களுக்குப்  பாதுகாப்பு மற்றும் சேமிப்பிற்கான இணைப்பை அளிக்கிறது. இந்த உபயோகமுள்ள காப்பீட்டுக் பாலிசியானது பெரும்பாலான நுகர்வோரின் தினசரி அடிப்படையிலான தொழிலாளர்களையும் ஈர்க்கிறது மற்றும் அதற்கான காரணம் என்னவென்றால் இந்தத் திட்டமானது முதிர்ச்சிக்கு முன் எந்த சமயத்திலும் காப்பீடு செய்தவரின் குடும்பத்திற்கு வேண்டிய நிதி உதவி வழங்குகிறது. அதே சமயம், தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பாலிசிதாரருக்கு முதிர்ச்சியின் சமயத்தில் ஒரு நல்ல மொத்த தொகையை வழங்குகிறது. இந்தத் திட்டமானது அதன் கடன் வசதி மூலம் நுகர்வோரின் பணப்புழக்க தேவைகளைக் கவனித்துக் கொள்கிறது.

பாலிசி 3 வருடங்கள் முடிந்த பின் எந்தச் சமயத்திலும் இந்தப் பாலிசியை நீங்கள் ஒப்படைக்க முடியும். பாலிசிதாரர் செலுத்திய பிரீமியத்தின்  அடிப்படையிலேயே அதன் ஒப்படைவு மதிப்பு ஆனது இருக்கும் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும் ஆனால் இது விருப்ப சலுகைகளுக்காக நீங்கள் செலுத்திய பிரீமியத்தை உள்ளடக்குவதில்லை.

காப்பீட்டு செய்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய குறிப்பு என்னவெனில் காப்பீடுச் செய்யப்பட்ட நபர் ஒரு வருடத்திற்குள் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தால், உறுதி செய்யப் பட்ட காப்பீட்டு சலுகைகளை வழங்குவதற்குக் காப்பீட்டு நிறுவனம் ஆனது பொறுப்பாகாது. அதே சமயத்தில், பாலிசிதாரர் இறப்பு வரை செலுத்தப்பட்ட பிரிமியத்தின் 80 சதவிகிதம் மட்டுமே நியமனதாரருக்கு வழங்கப்படும்.    

முதிர்ச்சி தேதி வரையிலும் வாழ்ந்து கொண்டிருக்காமல் காப்பீடு செய்யப்பட்ட நபரின் இறப்பு நேர்ந்தால், இறப்பு சலுகையாக "இறப்பு மீதான காப்பீட்டுத் தொகை" மற்றும் நிலையான போனஸ் மற்றும் இறுதி கூடுதல் போனஸ் ஆகியவை, ஏதாவது இருந்தால் இறப்பு சலுகையாக வழங்கப்படும். அதிகபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை அல்லது வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கு, இவற்றில் எது அதிகமானதோ அவை "மரணத்தின் மீதான காப்பீட்டுத் தொகை" என வரையறுக்கப்படுகிறது. அதுபோலவே, குறைந்தபட்ச தொகை என்பது இறப்பு வரை செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களின் 105% க்கு குறையாமல் இருக்கும். நீங்கள் சிறந்த முதிர்வு சலுகைகளைப் பெறுவீர்கள்.

எல்ஐசி என்டௌன்மென்ட் பிளான்

-பாலிசி வகை

இணைக்கப்படாத என்டௌன்மென்ட் பிளான்

நுழைவு வயது

8-50 ஆண்டுகள்

செலுத்தும் முறைகள்

மாதம், காலாண்டு, அரையாண்டு, வருடாந்திரம்

வரிச் சலுகைகள்

செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு பிரிவு 80 சின் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், நீங்கள் பெறும் ஓய்வூதியம் ஆனது வரிக்கு உட்பட்டதாக இருக்கும்.

காப்பீட்டுத் தொகை

பாலிசியின் குறைந்த பட்ச காப்பீட்டுத் தொகை ரூபாய் 1,00,000 ஆகும் மற்றும் அதிக பட்ச காப்பீட்டு தொகைக்கு வரம்புகள் கிடையாது.

விருப்ப சலுகைகள்

உடல் ஊனமுற்றோர் சலுகைக்கான பயன்பெறுபவர், எல்‌ஐ‌சியின்

தற்செயலான மரணம்

எல்‌ஐ‌சியின் இ-டேர்ம்

எல்.ஐ.சியின் இ-டேர்ம் பாலிசியானது, துரதிருஷ்டவசமான அல்லது எதிர்பாராத விதமாக ஏதாவது நடக்க நேர்ந்தால், காப்பீடு செய்யப் பட்ட நபரின் குடும்பத்திற்கு வேண்டிய முழுமையான நிதியுதவியை அளிக்கக் கூடிய ஒரு தூய்மையான வாழ்க்கைப் பாதுகாப்புப் பாலிசியாகும். இந்தக் காலவரையறை திட்டத்தை ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வழியாக மட்டுமே வாங்க முடியும் மேலும் இதற்கு முகவர்கள் கிடையாது. 

இறப்பு சலுகைகள்- பாலிசி கால வரையறையின் போது பாலிசிதாரருக்கு எதிர்பாராத விதமாக மரணம் நேரிடுகிறது எனில் உறுதி செய்யப்பட்ட ஆயுள் காப்பீடு தொகை ஆனது வழங்கப்படும். 

முதிர்வு சலுகைகள் - பாலிசி காலவரையின் இறுதி வரையிலும் தொடர்ந்து வாழும் போது, எதுவும் கொடுக்கப்படமாட்டாது. 

தகுதி - ஒரு நபருக்கு சுய வருமானத்தைக் கொண்டிருப்பது முக்கியம். 

ஒருவர் தன்னைத் தவிர வேறு யாரையும் முன்மொழிய முடியாது. முக்கிய மனித காப்பீடு / பங்குதாரர் / வேலையளிப்பவர்-பணியாளர் பாதுகாப்பு ஆகியவை அனுமதிக்கப்படாது. 

எல்‌ஐ‌சி இ – டேர்ம்

முழுவதுமான காலக் காப்பீடு

நுழைவு வயது

18-60 ஆண்டுகள்

பாலிசி கால வரையறை

பாலிசியின் குறைந்த பட்ச கால வரையறை 10 ஆண்டுகள் அதிக பட்ச கால வரையறை 35 ஆண்டுகள் ஆகும்.

செலுத்தும் முறைகள்

ஆண்டுதோறும் பிரீமியங்கள் செலுத்தப்பட வேண்டும்.

காப்பீட்டுத் தொகை

மொத்த விதத்துக்குக் குறைத்த பட்ச காப்பீட்டுத் தொகை ரூபாய்        25,00,000, புகைப் பழக்கம் அல்லாதவர்களுக்கு ரூபாய் 50,00,000/- மற்றும் அதிக பட்சத்திற்கு வரம்புகள் இல்லை.

மருத்துவ சோதனை

தேவைக்கு ஏற்ப

எல்‌ஐ‌சியின் ஜீவன் ஆனந்த் திட்டம்

எல்.ஐ.சி. ஜீவன் ஆனந்த் திட்டமானது ஒரு பங்கேற்பாளருடன் இணைக்கப்படாத திட்டமான இது கவரத் தக்க பாதுகாப்பு மற்றும் சேமிப்புகளை அளிக்கிறது. நீங்கள் புள்ளி விவரங்களை ஆராய்ந்து பார்த்தால், இந்த திட்டமானது எல்‌ஐ‌சியில் மிக அதிகமாக விற்பனையான காப்பீட்டு பாலிசிகளில் ஒன்று என்பதை நீங்கள் தெளிவாக உணரலாம். ஏனெனில் வாழ்நாள் முதிர்ச்சிக்குப் பிறகும் கூட மிகவும் தேவையான அபாய நேர்வுக்கான பாதுகாப்பை உள்ளடக்கிய பல சலுகைகளை இது வழங்குகிறது. எல்ஐசி ஜீவன் ஆனந்த் என்பது முழுமையான என்டௌன்மென்ட் திட்டத்துடன் கூடிய போனஸ் வசதியுடன் இணைந்து வழங்குகிறது. அதே சமயத்தில், தொடர்ந்து வாழக் கூடிய நிலையில் இரட்டை இறப்பு சலுகைகள் ஆனது கிடைக்கும். இந்தத் திட்டம் ஆனது சராசரி பிரீமியம், உயர் போனஸ் விகிதம் பெரும் பணப்புழக்கம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

  1. வாடிக்கையாளர் முதிர்ச்சியின் சமயத்தில் மொத்த தொகையைப் பெற்று மகிழலாம்.
  2. பாலிசிதாரரின் இறப்புக்கு மாறாக நிதி பாதுகாப்பிற்கு ஒரு நல்ல தொகையை அளிக்கிறது.
  3. இந்தப் பாலிசி பற்றிச் சிறந்த விஷயம் என்பது முதிர்ச்சிக்கு பிறகும் கூடக்  காப்பீட்டாளர் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் போதும் பிரீமியம் தொகைகளைச் செலுத்துவதன் மூலம் காப்பீட்டின் பாதுகாப்பு தொடர்ந்து நீடிக்கும். இந்தத் திட்டமானது வாழ்க்கையில் ஒருகாலமும் தங்களுடைய கடமையில் தவறாத பெண்களுக்கு மிகவும் சிறந்தது திட்டத்தின் முதிர்வு காலத்திற்கு பிறகும் கூட இதன் பொறுப்புகள் ஆனது இருக்கும். 

எல்‌ஐ‌சி ஜீவன் ஆனந்த் பிளான்

பாரம்பரிய எண்டௌமெண்ட்  திட்டம்

நுழைவு வயது

18-50 ஆண்டுகள்

காப்பீட்டுத் தொகை

ரூபாய் 1,00,000/- வரம்புகள் இல்லை

கடன் வசதி

கிடைக்கும்

விருப்ப சலுகைகள்

எல்.ஐ.சி தற்செயலான இறப்பு சலுகைகள் அல்லது உடல் ஊனமுற்றோர் சலுகைகள்.- எல்.ஐ.சியின் நியூ டேர்ம் அஸ்சுரன்ஸ் ரைடர்

வரிச் சலுகைகள்

பிரிவு 80சியின் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும்

எல்‌ஐ‌சியின் நியூ சில்ட்ரன் மணி பேக் பிளான் 

எல்‌ஐ‌சியின் நியூ சில்ட்ரன் மணி பேக் பிளான் என்பது ஒரு பங்கேற்பாளர் இணைக்கப்படாத பணம் திரும்ப பெறும் திட்டம் ஆகும். இது வளர்ந்து வரும் குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் பிற தேவைகளை நிறைவு செய்வதற்குத் தொடர்ந்து வாழ்தலுக்கான சலுகைகள் வாயிலாக வழங்குகிறது. அதே சமயத்தில், பாலிசி கால வரையறையின் போது குழந்தையின் வாழ்கையில் அபாய நேர்வுக்கான பாதுகாப்பு மற்றும் குறிப்பிட்ட கால முடிவில் உயிர் வாழ்வதற்கான பல சலுகைகளைக் கொண்டுள்ளது. வருடாந்திரம், அரை ஆண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர முறையில் மட்டுமே இ‌சி‌எஸ் மூலமாக அல்லது எஸ்எஸ்எஸ் மூலமாக நீங்கள் பிரீமியம் செலுத்தலாம். பாலிசியை தொடங்கிய முதல் மூன்று வருடங்களுக்குப் பிரீமியம் தொகையைத் தொடர்ந்து செலுத்தியிருந்தால், பாலிசி கால வரையறையின் போது எந்தச் சமயத்திலும் பாலிசியை ஒப்படைக்கலாம்.

எல்‌ஐ‌சியின் நியூ சில்ட்ரன் மணி பேக்  பிளான்

பாரம்பரிய மணி பேக் சைல்ட் பிளான்

நுழைவு வயது

0 - 12 ஆண்டுகள்

பிரீமியம் செலுத்தும் முறைகள்

வருடாந்திரம், அரை ஆண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர முறையில் இ‌சி‌எஸ் மூலமாக அல்லது எஸ்எஸ்எஸ் மூலமாக பிரீமியம் செலுத்தலாம்

பாலிசி கால வரையறை

25 ஆண்டுகள்

மருத்துவ பரிசோதனை

தேவையில்லை

குறைந்தபட்ச கொள்முதல் விலை

ரூபாய் 24,000/-

எல்ஐசி ஜீவன் சரல் 

மிகவும் உதவியளிக்கக் கூடியதாக இருக்கும் இந்தக் காப்பீட்டுப் பாலிசி ஆனது எல்.ஐ.சி யின் சிறப்புத் திட்டங்கள் பிரிவின் கீழ் வருகிறது. இது எண்டௌமெண்ட் பாலிசியான இது மிகவும் நெகிழ்தன்மையை அளிக்கிறது, இது பொதுவாக யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் (ULIPs) வருகிறது. பாரம்பரிய திட்டங்கள் மற்றும் யுலிப் திட்டங்களின் நெகிழ்வுத் தன்மையுடன், முதன்மையான சிறப்பு அம்சங்களுடன் கூடிய ஜீவன் சரல் காப்பீட்டுத் திட்டம் ஆனது காப்பீட்டுத் தொகையுடன் இரண்டு மடங்கு இறப்பு சலுகைகள் மற்றும் கூடுதலாகச் செலுத்திய பிரீமியங்களை திரும்ப வழங்கக்கூடிய பயன்களை அளிக்கிறது.

பிரீமியம்: பிரீமியம் ஆனது வருடாந்திரம், அரை வருடம், காலாண்டாகவோ அல்லது மாதாந்திரத்திற்கு சம்பளத்தில் பிடித்தம் செய்வதன் மூலமாகவோ பாலிசியின் கால வரையறை முழுமைக்கும் அல்லது இறப்புக்கு முன்பு வரையும் நீங்கள் தேர்ந்தெடுத்தபடி செலுத்த முடியும்.

கூடுதல் போனஸ்: இது ஒரு இலாப நோக்க திட்டம் ஆகும் மேலும் ஆயுள் காப்பீட்டு வணிகமானது நிறுவனத்தின் இலாபத்தில் பங்கேற்கிறது. இறப்பு நன்மை அல்லது முதிர்ச்சியின் சலுகைகளுடன் கூடிய கூடுதல் போனசை பருவகால போனஸ் என்ற பெயரில் வழங்கித் தன்னுடைய இலாபத்தைப் பகிர்ந்தளிக்கிறது. கார்ப்பரேஷன் அனுபவத்தைச் சார்ந்து 10 வது ஆண்டு முதல் போனஸ் கூடுதல் வழங்கப்படலாம்.

எல்‌ஐ‌சி ஜீவன் சரல்

என்டௌன்மென்ட் பாலிசி

நுழைவு வயது

12-60 ஆண்டுகள்

குறைந்தபட்ச பிரீமியம் / கொள்முதல் விலை

ரூபாய் 250 / - (50 வயதிற்குக் குறைவாக) - ரூபாய்.400 /- (50 வயத்திற்கு மேலாக)

மருத்துவ பரிசோதனை

என்/ஏ

அதிகபட்ச முதிர்வு வயது

75 ஆண்டுகள்

வரி சலுகைகள்

பிரிவு 80 சின் கீழ் வரி சலுகைகள் கிடைக்கும்.

எல்.ஐ.சி யின் ஜீவன் சாந்தி

இது அடிப்படையில் உடனடி மற்றும் காலம் தாழ்த்தி ஆண்டுத் தொகை பெறக் கூடிய இரண்டு விருப்பங்களுடன் வெளிவரக் கூடிய ஒரு ஆண்டுத் திட்டம் ஆகும். ஒரு மொத்த தொகையைச் செலுத்துவதன் மூலம் நீங்கள் அதற்கான சலுகைகளை எடுத்துக் கொள்ளலாம். காப்பீட்டாளரின் வாழ்நாள் முழுவதும் திட்டம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டுதோறும் கொடுக்கிறது.

ஒற்றை பிரீமியம்

பணம் - ஒருமுறை - மகிழ்ச்சி - எப்போதும்

கொள்முதல் வரம்புகள்

குறைந்த பட்ச வாங்குதல் விலை: ரூ.1,50,000 /- அதிகபட்ச கொள்முதல் விலை, ஆண்டுச்சந்தா போன்றவற்றிற்கு  வரம்புகள் இல்லை

உயர் கொள்முதல் விலைக்கான ஊக்கத்தொகை

உங்கள் கொள்முதல் விலை ரூ. 5,00,000 /- அல்லது அதற்கு மேல் இருந்தால், கிடைக்கக் கூடிய ஊக்கத்தொகை மூலமாக அதிகமான ஆண்டுச் சந்தாவை பெறுவீர்கள்.

வயது வரம்புகள்

குறைந்த பட்ச நுழைவு வயது : 30 ஆண்டுகள் அதிக பட்ச நுழைவு வயது 85 ஆண்டுகள் மேலும் காலம் தாழ்த்தி ஆண்டு சந்தாவுக்கு 79 வயது ஆகும் இதற்கு  வயதுக்கான ஆதாரம் அவசியம்

மருத்துவம்

மருத்துவ பரிசோதனை எதுவும் தேவையில்லை

ஆண்டுச் சந்தா முறை

மாதாந்திரம், காலாண்டு, அரை ஆண்டு அல்லது ஆண்டு இடைவெளியில் ஆண்டு சந்தா தொகை செலுத்தப்படலாம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில், சிறந்த ஒரு எல்‌ஐ‌சி திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான முழுமையான செயல்முறையும் கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலன் உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப நீங்கள் எளிதில் இதனைப் பெறலாம். உங்களுடைய ஆயுள் காப்பீட்டு தேவைகளைக் கருத்தில் கொள்ளும் போது எல்ஐசி ஒரு சிறந்த நிறுவனம் ஆகும்.