எல்ஐசி பீமா பச்சட் திட்டம்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

கைபேசி எண்
பெயர்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

பெரிய பணக்குவியலை நீங்கள் எப்போதாவது பார்திருக்கீர்களா? நீங்கள் லாட்டரியில் வெற்றி பெற்றால் அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த சூதாட்ட விடுதியில் ஜாக்பாட் அடித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்கள் முதல் இயல்புணர்ச்சியின் படி, நீங்கள் போர்ஷ் காரை வாங்க முடியும் (இந்திய சாலைகளில் மற்றும் போக்குவரத்து நெரிசலில் நமது உண்மையான திறமையை நம்மால் வெளிப்படுத்த முடியாது) அல்லது எம் டிவி குழுமத்தின் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ஒருவேளை நீங்கள் வீடு வாங்குவது போல் இருக்கலாம்.   

ஆனால், நடைமுறைக்கு ஒத்து வராத கற்பனை உலகில் இருப்பதை விட நடைமுறை சூழ்நிலையை கருத்தில் கொள்வது புத்திசாலிதானமாக இருக்க வேண்டும் அல்லவா? உதாரணமாக, உங்களை விரும்பும் உங்களது தாய் சிறிது நட்புடன் வேடிக்கையாக பேச தொடங்குகிறார் அல்லது உங்களது  இளைய சகோதரர் யேலிர்க்குச் செல்ல விரும்புவார். ஆனால் அவர் தன்னுடைய வார இறுதி நாட்களை வீண் பேச்சு பேசும் பெண்ணை பார்த்து செலவழிக்கிறார்.

இதனை நினைத்து நாம் சிறிது கவலையாக உணர்கிறோம் அல்லவா? செலவினங்களை விட பாதுகாப்பை விரும்பும் மக்களுக்கு இந்த புதிய எல்.ஐ.சி யின் பீமா பச்சட் திட்டமானது ஏற்றதாகும். இது ஒரு ஒற்றை பிரீமியத்துடன் பங்கேற்கும் என்டௌமெண்ட் திட்டம் ஆகும். அதாவது, நாம் செலுத்தும் மொத்த பிரிமியமும் அதனுடன் கூடுதல் போனஸ் புள்ளிகளையும் சேர்த்து பாலிசி கால முடிவில் திட்டமிடப்பட்டு மரபு சார்ந்த முறையில் பணத்தை திரும்ப வழங்குகிறது.

எல்ஐசி நியூ பீமா பச்சட் திட்டத்தின் தகுதிக்கான வரன்முறைகள்

ஒருவர் இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

10-09-2020 அட்டவணை புதுப்பிக்கப்பட்டது

 

எல்‌ஐ‌சி நியூ பீமா பச்சட் திட்டத்திற்கான - தகுதி வரன்முறைகள்

 
 

குறைந்தபட்சம்

அதிகபட்சம்

வயது

15 ஆண்டுகள்

66 ஆண்டுகள்

வரையறைக்காலம்

9 ஆண்டுகள்

15 ஆண்டுகள்

உறுதி செய்யப்பட்ட காப்பீட்டு தொகை (ரூபாயில்)

35,000

மேல் எல்லை கிடையாது

கட்டணம் செலுத்தும் முறைகள்

வருடாந்திரம், அரை வருடம்,

காலாண்டு மற்றும் மாதாந்திரம்

  (இசிஎஸ் அல்லது எஸ்‌எஸ்‌எஸ்)

 

எல்‌ஐ‌சி நியூ பீமா பச்சட் திட்டத்தின் படி மனதில் இருத்தி கொள்ள வேண்டிய சில கட்டுப்பாடுகள்

அனைத்து பாலிசிதாரர்களும் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:

 • எல்‌ஐ‌சி நியூ பீமா பச்சட் திட்டத்தின் படி முதலீட்டாளர் 75 வயதை அடையும் போது பாலிசியானது முதிர்ச்சி அடைகிறது
 • முதலீட்டாளர்களின் தேவை மற்றும் வயதை அடிப்படையாகக் கொண்டு மூன்று விருப்பத் தேர்வுகள் உள்ளது -  9, 12 மற்றும் 15 ஆண்டுகளை, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் நேரத்தில் தேர்வு செய்ய வேண்டும்.
 • குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட தொகையானது பாலிசியின் கால அளவுகளைப் பொறுத்து மாறுபடும். அதாவது ஒன்பது ஆண்டு காலத்திற்கு, குறைந்தபட்சமாக ரூபாய் 35000 காப்பீடு செய்யப்பட வேண்டும், அதே சமயத்தில், 12 வருடங்கள் மற்றும் 15 வருடங்களுக்கு, ரூபாய் 50000 மற்றும் ரூபாய் 70000 ஆனது குறைந்தபட்சக் காப்பீடு தொகையாக இருக்கும்.
 • மேலும், உறுதி செய்யப்பட்டத் தொகை ஆனது ரூபாய் 5000 த்தின் மடங்காக இருக்க வேண்டும் என்பதை விண்ணப்பதாரர் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
 • நடைமுறைகளை எளிமை படுத்துவதற்காக, எல்.ஐ.சி பீமா பச்சட் திட்டத்திற்கு ஒற்றை பிரீமியம் மட்டுமே தேவைப்படுகிறது.

எல்.ஐ.சி பீமா பச்சட் திட்டத்தின் முக்கிய விவரங்கள்

இந்த பாலிசி ஆனது என்ன ஆதாயத்தை வழங்குகிறது என்று நீங்கள் தெரிந்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அனைத்திற்கும் மேல், அனைத்து ஆயுள் காப்பீட்டு திட்டங்களும் எல்லாருக்கும் ஒத்து போவதில்லை. இந்த திட்டத்தில் உள்ள தனிச்சிறப்புகள் பின்வருமாறு:

 • இது ஒரு ஒற்றை பிரீமிய மணி பேக் திட்டமாகும். அதாவது இறப்பின் மீதான சலுகையாக திரும்ப கிடைக்கும் வகையில் இந்த மொத்தத் தொகையானது முதலீடு செய்யப்படுகிறது.
 • பாலிசியின் முதிர்ச்சியில் அல்லது அதற்கு முன்னர் நிகழும் மரணத்தின் மீது உறுதி அளித்திருக்கும் விசுவாச கூடுதல் ஆனது அளிக்கப்படும்.
 • உயிர் வாழும் சலுகையாக உறுதி அளிக்கப்பட்ட தொகையின் 15% மானது  மூன்று வருடங்கள் கழித்து (பின்னர் விஸ்தரிக்கப்படும்) வழங்கப்படும்.
 • அதிகபட்ச உறுதி செய்யப்பட்ட தொகைக்குத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
 • ஒப்படைவின் நன்மைகள் அல்லது பாலிசியை பாதியில் முடிவு செய்தல்: விண்ணப்பதாரர் பாலிசி துவங்கியதிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் பாலிசியை ஒப்படைக்கும் போது, ஒற்றை பிரிமியத்தின் 70% மானது செலுத்தப்பட்ட வரிகளைத் தவிர்த்து வழங்கப்படும். 2 ஆம் ஆண்டு தொடங்கிய பின்னர் ஒப்படைத்தால் ஒற்றை பிரீமியத்தின் 90% மானது திரும்ப அளிக்கப்படும்.
 • பாலிசியானது உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில், பாலிசி தொடங்கிய நாள் முதல் 15 நாட்களுக்குள் எல்ஐசி பீமா பச்சட் திட்டத்திலிருந்து நீங்கள் விலகி கொள்வதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.     .

எல்.ஐ.சி பீமா பச்சட் திட்டத்தின் நன்மைகள்

இந்த பாலிசியில் என்ன கவர்ச்சி உள்ளது? உங்கள் ஆசைகள் அனைத்தையும் தவிர்த்து உங்களது பணம் அனைத்தையும் ஒரே முறையில் பாலிசிகளில் செலவழித்து மற்றும் முதலீடு செய்து தெளிவற்ற மன நிலையில் இருக்கிறீர்களா? அதை கண்டுப்பிடிக்க நீங்கள் படிக்கவும்.

தொடர்ந்து வாழ்வதற்கான நன்மைகள்

இந்தக் பாலிசியின் முக்கிய அம்சங்கள் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது, அதன்படி, எல்.ஐ.சி பீமா பச்சட் திட்டத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் பாலிசிதாரருக்கு உறுதி செய்யப்பட்டத் தொகையின் 15% மானது வெகுமதியாக வழங்கி பாலிசி மேற்கொண்டு தொடர்வதை உறுதிபடுத்துகிறது.  

பாலிசியின் கால வரையறை ஆனது 9 ஆண்டுகள்:

 • 3 வது ஆண்டின் முடிவின் போது தொகை வழங்கப்படும்.
 • 6 வது ஆண்டின் முடிவின் போது தொகை வழங்கப்படும்..

பாலிசியின் கால வரையறை ஆனது 12 ஆண்டுகள்:

 • 3 வது ஆண்டின் முடிவின் போது தொகை வழங்கப்படும்.
 • 6 வது ஆண்டின் முடிவின் போது தொகை வழங்கப்படும்..
 • 9 வது ஆண்டின் முடிவின் போது தொகை வழங்கப்படும்..

பாலிசியின் கால வரையறை ஆனது 15 ஆண்டுகள்:

 • 3 வது ஆண்டின் முடிவின் போது தொகை வழங்கப்படும்.
 • 6 வது ஆண்டின் முடிவின் போது தொகை வழங்கப்படும்..
 • 9 வது ஆண்டின் முடிவின் போது தொகை வழங்கப்படும்..
 • 12 வது ஆண்டின் முடிவின் போது தொகை வழங்கப்படும்.

விசுவாச கூடுதல்

எல்‌ஐ‌சி பீமா பச்சட் திட்டமானது பாலிசி காலவரையின் துவக்கத்திலிருந்து, 5 ஆண்டுகள் முடிந்த பிறகு விசுவாச சேர்க்கை புள்ளிகளை அறிவிக்கிறது.

முதிற்வுக்கான சலுகைகள்

பாலிசி காலம் முழுமைக்கும் காப்பீட்டாளர் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில், பாலிசியின் ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முழு பிரீமியத்துடன் போனஸ் கூடுதலையும் சேர்த்து வழங்குகிறது.

இறப்பிற்கான சலுகைகள்

எல்.ஐ.சி பிமா பச்சட் திட்டத்தின் கீழ் பாலிசி காலம் முடிவதற்கு முன்னரே  காப்பீட்டு நபர் இறக்க நேரிடும் போது, பின்வரும் நிகழ்வுகளானது நேரிடும்.

 • பாலிசிதாரர் திட்டம் தொடங்கியதிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் காப்பீட்டு காலத்தில் இறந்து விட நேர்ந்தால், உறுதி செய்யப்பட்ட தொகை மட்டுமே நியமனதாரருக்கு வழங்கப்படும்.
 • பாலிசிதாரர் திட்டம் தொடங்கியதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு காப்பீட்டு காலத்தில் இறந்து விட நேர்ந்தால், உறுதி செய்யப்பட்ட தொகையுடன் விசுவாச கூடுதல் தொகையும் (ஏதாவது இருந்தால்) சேர்த்து நியமனதாரருக்கு வழங்கப்படும்.
 • முன்னர் குறிப்பிட்டுள்ள படியே, அதிக காப்பீட்டுத் தொகைக்கு தள்ளுபடி ஆனது அளிக்கப்படும்.
 • வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 சி படி, செலுத்தப்படும் பிரீமியத்திற்கு வருமான வரி விலக்கு கிடைக்கும் மேலும் கோரிக்கைத் தொகைக்கு வருமான வரி உண்டு.

சேர்த்தல் & விலக்குகள்

சேர்த்தல்

ஆயுள் காப்பீட்டு திட்டங்களை நாடி செல்லும் ஒரு நபருக்கு எல்‌ஐ‌சி பீமா பச்சட் திட்டமானது பிரதானமான, மதிப்புமிக்க சில நன்மைகளை குறிப்பிடும்படியாக வழங்குகிறது. இந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்படைவு மதிப்புக்கு எதிராக 60% க்கு கடன் பெறுவதற்கான வசதி உள்ளது.  

விலக்குகள்

பாலிசி கால வரையறையில் முதல் ஒரு வருடத்திற்குள் பாலிசிதாரர் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தால், காப்பீட்டுத் தொகையின் 90% மட்டுமே நியமனதாரருக்கு வழங்கப்படும்.

எல்ஐசி நியூ பீமா பச்சட் திட்டத்தை எங்கே வாங்குவது?

இது ஒரு ஆஃப்லைன் திட்டமாகும், எனவே நீங்கள் நிறுவனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வாங்க முடியும் அல்லது நிறுவனத்தின் கிளைகளுக்கு நேரடியாக சென்று வாங்கலாம். அதுபோலவே, இதனை முகவர்கள், தரகர்கள் அல்லது மற்ற நிறுவன இடையீட்டாளர்கள் மூலமாகவும் வாங்க முடியும்.

தேவையான ஆவணங்கள்

நிறுவனத்திற்கு எந்த ஒரு ஆயுள் காப்பீட்டு திட்ட கோரிக்கைக்காகவும் சில அடையாள சான்றுகள்  இல்லாமல் நீங்கள் செல்ல முடியாது. எனவே எல்ஐசி நியூ பீமா பச்சட் திட்டத்தை வாங்குவதற்காக, நீங்கள் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் சீரான சந்திப்பிற்காக செல்லும் போது இங்கே உள்ள தேவையானவற்றை எடுத்து செல்ல வேண்டும்.  

 1. ஒற்றை பிரீமியத்திற்கான காசோலை
 2. முகவரிகளுக்கு ஆதாரம்
 3. உங்கள் வாடிக்கையாளரை அறியும் ஆவணங்கள்
 4. ஒரு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்
 5. பிறந்த தேதிக்கான ஆதாரம்
 6. அடையாளச் சான்று
 7. வருமானச் சான்று
 8. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் சரிபார்த்து சான்றளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை
 9. மருத்துவ பரிசோதனை (விண்ணப்பதாரரின் வயது மற்றும் உத்தரவாதத் தொகையின் அடிப்படையில் அவசியம் ஏற்பட்டால்)

10-09-2020 புதுப்பிக்கப்பட்டதுு