எல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம்
  • term திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

கைபேசி எண்
பெயர்
பிறந்த தேதி

1

2

வருமான
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சிமற்றும் தனியுரிமைக் கொள்கையைஏற்றுக்கொள்கிறீர்கள்

இந்த எல்.ஐ.சி கொள்கை வாங்குவதற்கு கிடைக்கவில்லை. இது நிறுவனத்தால் விற்பனைக்கு மூடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்திற்கு இந்த இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி) ஆனது சொந்தமானதாகும். எல்.ஐ.சியானது இந்திய காப்பீட்டு நிறுவனங்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்து வருகிறது. இந்தியாவின் நாடாளுமன்றத்தினால் 1956-ல் ஆயுள் காப்பீட்டு கழகத்தை உருவாக்குவதற்கான மசோதா எற்றப்பட்டது. இக்கழகத்தின் கீழ் 245 க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு நபருக்கும் பொருந்தக்கூடிய பல திட்டங்களை வெவ்வேறான வகைகளின் கீழ் அளிக்கிறது. ஒவ்வொரு தனி நபரின் தேவைகளையும் அவர்கள் மனதில் வைத்துள்ளார்கள்.
இதில் ஒன்று தான் எல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம் ஆகும். மூத்த குடிமக்களுக்கான ஒரு துல்லியமான ஓய்வூதிய திட்டமாக இந்த பாலிசி விளங்குகிறது. இத்தயாரிப்பானது ஆண்டுத்தொகை வகையின் கீழ் வருகிறது. ஆண்டுத்தொகையின் கீழ், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக மக்கள் ஓய்வூதியத்தை பெறுகின்றனர். ஓய்வூதியம் பெறும் முறையை நீங்களே தேர்வு செயலாம். இது ஒரு சிறந்த ஓய்வூதிய முதலீட்டு திட்டம் ஆகும்.

எல்.ஐ.சி. ஜீவன் அக்ஷய் திட்டம் எப்படி செயல்படுகிறது

பாலிசியின் பிரீமிய காலம் என்பது ஒற்றை பிரீமியம் ஆகும். திட்டத்தின் தொடக்கத்தில், உங்களின் விருப்பத்திற்கிணங்க பிரீமியத்தை செலுத்த வேண்டும். இதனை முடிவு செய்த பின் நீங்கள் தொடர்ச்சியான ஓய்வூதியத்திற்கான தகுதியை பெறுவீர்கள். இத்திட்டத்தின் கீழ் வாழ்க்கைக்கான அபாய நேர்வுக்கான பாதுகாப்பு எதுவும் கிடையாது, இது ஒரு துல்லியமான ஆண்டுத்தொகை திட்டமாக உள்ளது மற்றும் நீங்கள் எவற்றை முதலீடாக செய்தாலும், அவற்றை நீங்கள் ஓய்வூதியமாக பெறலாம். இதற்கான அவசரகாலச் சட்டம் ஜனவரி மாதம் 2017-ல் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சரவை குழுவினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இது உடனடியான ஓய்வூதிய திட்டமாக உள்ளது. எனவே, உங்கள் விருப்பத்திற்கிணங்க ஒற்றை பிரீமியத்தை செலுத்தியிருந்தால், அந்நேரத்திலிருந்து ஆண்டுத் தொகையானது தொடங்கிவிடும். நீங்கள் மருத்துவ சான்றிதழ் எதையும் இத்திட்டத்திற்காக ஒப்படைக்க வேண்டியதில்லை, ஏனென்றால் இது மருத்துவ கோரிக்கைகள் அல்லது வாழ்க்கைக்கான அபாய நேர்வுக்கான பாதுகாப்பு எதுவும் இல்லை.

இத்திட்டத்தின் ஆண்டுத்தொகைக்கான வெவ்வேறான 7 தேர்வுகள் கீழே உள்ளவாறு நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது:

இவை ஒவ்வொன்றும் ஒரு நிலையான எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளது.
ஒற்றை பிரீமியம்: 5, 00, 000 ரூபாய்
ஓய்வூதிய முறை: ஆண்டுகளாக பெறுதல்
ஆண்டுத்தொகை பெறுவோரின் வயது: 60 ஆண்டுகள்.

1. வாழ்க்கைக்கான ஆண்டுத்தொகை: இத்திட்டத்தின் கீழ், ஆண்டுத்தொகை பெறுவோர் அவரின் வாழ்நாள் வரை ஓய்வூதியத்தை பெறலாம். அதன் பிறகு, இந்த திட்டம் தகுதியற்றதாகும். மேலே கூறியுள்ளபடி, ஆண்டுத்தொகை பெறுவோர் 48,750 ரூபாயை வருடாந்திர ஓய்வூதியமாக பெறுவதற்கு பொறுப்புடையவராவார்.

2. குறிப்பிட்ட காலத்திற்கான ஆண்டுத்தொகை உத்திரவாதம்: இந்த தேர்வின் கீழ், 4 துணை வாய்ப்புகள் உள்ளன. நாம் இத்திட்டத்தை 5, 10, 15 அல்லது 20 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்க முடியும். திட்டத்தை தேர்ந்தெடுத்தபின், ஆண்டுத்தொகையானது அதை பெறுவோர் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அல்லது இல்லாவிடினும் அவருக்கு செலுத்தப்படும். இதன் 4 தேர்வுகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டு உள்ளது:

a. 5 ஆண்டுகள்: ஆண்டுத்தொகை பெறுவோர் அல்லது நியமனதாரர் 48,300 ரூபாயை 5 ஆண்டுகளுக்கான ஓய்வூதியமாக பெற இயலும். ஆண்டுத்தொகை பெறுவோர் வாழ்ந்து கொண்டிருந்தால், அவரது வாழ்வின் இறுதி காலம் வரையிலும் அதே தொகையைப் பெறுவார்.

b. 10 ஆண்டுகள்: ஆண்டுத்தொகை பெறுவோர் அல்லது நியமனதாரர் 47,300 ரூபாயை 10 ஆண்டுகளுக்கான ஓய்வூதியமாக பெற இயலும். ஆண்டுத்தொகை பெறுவோர் வாழ்ந்து கொண்டிருந்தால், அவரது வாழ்வின் இறுதி காலம் வரையிலும் அதே தொகையைப் பெறுவார்.

c. 15 ஆண்டுகள்: ஆண்டுத்தொகை பெறுவோர் அல்லது நியமனதாரர் 45,950 ரூபாயை 15 ஆண்டுகளுக்கான ஓய்வூதியமாக பெற இயலும். ஆண்டுத்தொகை பெறுவோர் வாழ்ந்து கொண்டிருந்தால், அவரது வாழ்வின் இறுதி காலம் வரையிலும் அதே தொகையைப் பெறுவார்.

d. 20 ஆண்டுகள்: ஆண்டுத்தொகை பெறுவோர் அல்லது நியமனதாரர் 44,300 ரூபாயை 5 ஆண்டுகளுக்கான ஓய்வூதியமாக பெற இயலும். ஆண்டுத்தொகை பெறுவோர் வாழ்ந்து கொண்டிருந்தால், அவரது வாழ்வின் இறுதி காலம் வரையிலும் அதே தொகையைப் பெறுவார்.

3. வாங்கிய விலையினை திரும்ப பெறும் தொகையுடன் கூடிய இறப்பிற்கான ஆண்டுத்தொகை: இத்தேர்வின் கீழ், ஆண்டுத்தொகை பெறுவோர் அவர் / அவள் வாழும் வரை இச்சலுகைகளை பெறுகிறார். ஆண்டுத்தொகை பெறுவோரின் இறப்பிற்கு பிறகு, செலுத்தப்பட்ட ஒற்றை பிரீமியத்தின் முழு நிதியையும் நியமனதாரர் பெறுகிறார். மேலே கூறிய உதாரணத்தின் படி, ஆண்டுத்தொகை பெறுவோர் அவர் / அவளின் வாழ்நாள் வரை வருடாந்திர ஓய்வூதியமாக 37, 550 ரூபாயை பெறுவார். ஆண்டுத்தொகை பெறுவோரின் இறப்பிற்கு பிறகு, 5,00,000 ரூபாயை நியமனதாரர் பெறுகிறார்.
முதலீடு செய்யப்பட்ட தொகையுடன் சேர்த்து ஓய்வூதிய சலுகையையும் உங்களுக்கு கொடுக்கின்ற போது இந்த தேர்வானது நிலையான வைப்புத் தொகைக்கு ஒத்ததாயிருக்கும்.

4. ஆண்டுத்தொகை அதிகரிப்பு: இந்த தேர்வின் கீழ், ஆண்டுத்தொகை பெறுவோர் அவர் / அவளின் வாழ்நாள் வரை இச்சலுகையை பெறுகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியத் தொகையானது 3% ஆக அதிகரிக்கும். மேலே கூறிய உதாரணத்தின் படி, ஆண்டுத்தொகை பெறுவோர் அவர் / அவளின் வாழ்நாள் வரை வருடாந்திர ஓய்வூதியமாக 39,650 ரூபாயை பெறுவார். ஓய்வூதியமானது 3% அதாவது 1,190 ரூபாயாக ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து, இது 39, 650 ரூபாயாக உள்ளது.

5. கூட்டு வாழ்க்கையில் கடைசியாக வாழ்பவரின் வாழ்க்கை துணைக்கான 50% கூடிய ஆண்டுத்தொகை: இந்த தேர்வின் கீழ், ஆண்டுத்தொகை பெறுவோர் அவர் / அவளின் வாழ்நாள் வரை இச்சலுகையை பெறுகிறார். ஆண்டுத்தொகை பெறுவோரின் இறப்பிற்கு பிறகு, நியமனதாரர் ஆண்டுத்தொகையின் 50%த்தை ஓய்வூதியமாக பெறுகிறார். மேலே கூறிய உதாரணத்தின் படி, ஆண்டுத்தொகை பெறுவோர் அவர் / அவளின் வாழ்நாள் வரை வருடாந்திர ஓய்வூதியமாக 45,200 ரூபாயை பெறுவார். ஆண்டுத்தொகை பெறுவோரின் இறப்பிற்கு பிறகு, 22,600 ரூபாயை ஒவ்வொரு ஆண்டும் நியமனதாரர் பெறுகிறார்.

6. கூட்டு வாழ்க்கையில் கடைசியாக வாழ்பவரின் வாழ்க்கை துணைக்கான 100% கூடிய ஆண்டுத்தொகை: இந்த தேர்வின் கீழ், ஆண்டுத்தொகை பெறுவோர் அவர் / அவளின் வாழ்நாள் வரை இச்சலுகையை பெறுகிறார். ஆண்டுத்தொகை பெறுவோரின் இறப்பிற்கு பிறகு, நியமனதாரர் ஆண்டுத்தொகையின் 100% த்தை ஓய்வூதியமாக பெறுகிறார். மேலே கூறிய உதாரணத்தின் படி, ஆண்டுத்தொகை பெறுவோர் அவர் / அவளின் வாழ்நாள் வரை வருடாந்திர ஓய்வூதியமாக 42,150 ரூபாயை பெறுவார். ஆண்டுத்தொகை பெறுவோரின் இறப்பிற்கு பிறகு, 42,150 ரூபாயை ஒவ்வொரு ஆண்டும் நியமனதாரர் பெறுகிறார்.

7. கூட்டு வாழ்க்கையில் வாங்கிய விலையினை திரும்ப பெறுவதன் மூலம் கடைசியாக வாழ்பவர்: இத்தேர்வின் கீழ், ஆண்டுத்தொகை பெறுவோர் அவர் / அவளின் வாழ்நாள் வரை இச்சலுகையை பெறுகிறார். ஆண்டுத்தொகை பெறுவோரின் இறப்பிற்கு பிறகு, நியமனதாரர் முழு ஓய்வூதியத்தை ஒவ்வொரு ஆண்டும் பெறுகிறார். ஆண்டுத்தொகை பெறுவோர் மற்றும் அவரின் வாழ்க்கை துணை ஆகியோர் இறக்க நேர்ந்தால் உண்மையான தொகையானது திருப்பியளிக்கப்படும். மேலே கூறிய உதாரணத்தின் படி, ஆண்டுத்தொகை பெறுவோர் அவர் / அவளின் வாழ்நாள் வரை வருடாந்திர ஓய்வூதியமாக 37,050 ரூபாயை பெறுவார். ஆண்டுத்தொகை பெறுவோரின் இறப்பிற்கு பிறகு, 37,050 ரூபாயை நியமனதாரர் பெறுகிறார். வாழ்க்கை துணையார் இறக்க நேர்ந்தால், 5,00,000 ரூபாயை உடைய உண்மையான தொகையானது திருப்பியளிக்கப்படும்.

இத்திட்டதிலிருந்து நீங்கள் பெறும் சலுகைகள்

இறப்பு சலுகை: பிற எல்.ஐ.சி திட்டங்களைப் போல, நீங்கள் எந்தவொரு இறப்புச் சலுகையையும் இத்திட்டத்தின் கீழ் பெற இயலாது. ஏனெனில் நீங்கள் ஒருமுறை பிரீமியத்தை செலுத்தியவுடன் உங்களுடைய மணி பேக்கானது ஓய்வூதியமாக மாற தொடங்கி விடும். உங்கள் இறப்பிற்கு பிறகும் கூட தொகை பெறும் நிலையை தேர்வு செய்திருந்தால், உங்கள் வாழ்க்கை துணைவர் இதன் பயனை அடைவார். உங்களுக்கு பிறகு மீதமுள்ள ஓய்வூதியங்களை உங்களுடைய வாழ்க்கைத் துணைவர் பெறுவார்.

முதிர்ச்சி சலுகை: மற்ற எல்.ஐ.சி திட்டங்களைப் போல, நீங்கள் எந்தவொரு முதிர்ச்சி சலுகையையும் இத்திட்டத்தின் கீழ் பெற இயலாது. ஏனெனில் நீங்கள் ஒருமுறை பிரீமியத்தை செலுத்தியவுடன் உங்களுடைய மணி பேக்கானது ஓய்வூதியமாக மாற தொடங்கி விடும். உங்கள் இறப்பிற்கு பிறகும் கூட தொகை பெறும் நிலையை தேர்வு செய்திருந்தால், உங்கள் வாழ்க்கை துணையர் இதன் பயனை அடைவார். உங்களுக்கு பிறகு மீதமுள்ள ஓய்வூதியங்களை உங்களுடைய வாழ்க்கைத் துணைவர் பெறுவார்.

ஓய்வூதிய விகிதம்: ஆண்டுத்தொகை பெறுவோர் அல்லது பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுத்தொகையின் வகையை சார்ந்து விகிதமானது இருக்கும். ஆண்டுத்தொகையின் கீழ் 7 வகையான செயல்திட்டங்கள் உள்ளன. ஆனால் ஒருமுறை செலுத்த வேண்டிய பிரீமியத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து விட்டால், திட்டத்தை மாற்ற இயலாது, இவை ஒரு முறை செலுத்துதலாக இருக்கும் மற்றும் இவற்றின் சலுகைகளும் உடனடியாக தொடங்கி விடும்.

இலாபத்தில் பங்கெடுத்தல்: பாலிசியானது தகுதியுடையதாகவும், நிறுவனத்திற்கு இலாபத்தை பெற்றுத் தருவதாகவும் இருக்க வேண்டும். அது எளிய மறுமதிப்பீட்டு போனசுக்கான தகுதியை உடையதாக உள்ளது. இதற்காக, பாலிசியானது நடைமுறையில் மற்றும் செயல் முறையிலும் இருக்க வேண்டும். மறுமதிப்பீட்டு போனஸானது செலுத்தப்பட்ட பிரீமியத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.

பயனாளி சலுகை: எந்தவொரு பயனாளி சலுகையும் இத்திட்டத்தின் கீழ் இல்லை, ஆண்டுத்தொகை திட்டத்தை அடிப்படையாக கொண்ட தூய ஓய்வூதிய திட்டமாக இருக்கிறது.

எல்.ஐ.சி. ஜீவன் அக்ஷய் பாலிசிக்கான தகுதி வரையறை என்ன?

பாலிசி பிரீமியத்தை நீண்ட காலத்திற்கு நீங்கள் விரும்பும் வரை 30 வயதிலிருந்து 85 வயது வரையில் தொடங்கலாம். இது ஒற்றை பிரீமிய கால திட்டமாக உள்ளது. பாலிசி முதிர்ச்சிக்கென்று வயது ஏதும் இல்லை. சலுகைகளை மணி பேக்காக நீங்கள் பெறலாம். உங்களின் இறப்பிற்கு பிறகும் கூட உங்கள் விருப்பத்திற்கேற்ப பாலிசியை தொடரலாம். இதன் பயனை உங்கள் வாழ்க்கைத்துணைவர் பெறுவார். குறைந்தபட்சமான பிரீமியம் 1,00,000 ரூபாய் ஆகும் மற்றும் அதிகபட்சமாக உங்களின் விருப்பத்திற்கேற்ப செலுத்தலாம்.

ஓய்வூதிய சலுகை அல்லது ஆண்டுத்தொகை சலுகை

ஓய்வூதியமானது ஒரு முறை பிரீமியம் செலுத்தியவுடன் தொடங்கி விடுகிறது. ஓய்வூதியத்தை செலுத்தும் முறை நீங்கள் எதை தேர்ந்தெடுகிறீர்களோ அதை சார்ந்திருக்கும்.. உங்களால் வருடாந்திர ஓய்வூதியம், அரை வருடாந்திர ஓய்வூதியம், காலாண்டு ஓய்வூதியம் அல்லது மாதாந்திர ஓய்வூதியம் என்று தேர்வு செய்ய முடியும். குறைந்தபட்சமான ஓய்வூதிய தொகை அல்லது ஆண்டுத்தொகையானது 6000 ரூபாயாக இருக்கும், அதிகபட்சமாக 60,000 ரூபாய் வரை செல்லும். இந்த தொகையானது இதற்கு பொருத்தமான வரிகளை சார்ந்து மாறுபடும்.

வரி சலுகை

மற்ற பாலிசி திட்டங்களை போன்றே, வருமான வரிகளில் சலுகைகளை எல்.ஐ.சி. ஜீவன் அக்ஷய் பாலிசியானது அளிக்கிறது. பிரீமியங்களுக்கான வரி என்பது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C யின் கீழ் விலக்கபட்டுள்ளது. நீங்கள் பெறும் ஓய்வூதியம் மட்டுமே வரிக்குட்பட்டிருக்கும். அதனால் எவ்வரியையும் உங்கள் பிரீமியத்திற்காக நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.

கடன் வசதி

இது கடன் பாலிசிக்கான திட்டம் கிடையாது.

ஒப்படைவு பாலிசி
உங்களால் பாலிசிகளை இந்த திட்டத்தின் கீழ் ஒப்படைக்க இயலாது. இதற்கு அனுமதி கிடையாது.

உதாரணத்துடன் எல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம்

திரு. ஆஷிஷ் ஜீவன் அக்ஷய் பாலிசியை பின்வரும் விவரங்களுடன் வாங்குகிறார்

- உறுதியளிக்கப்பட்ட தொகை - 5,00,000 ரூபாய்
- பாலிசி வாங்கிய ஆண்டு – 2017
- வயது: 60 ஆண்டுகள்
- ஓய்வூதிய முறை: வருடாந்திரம்
- சலுகை பற்றிய விவரங்களை பிரீமிய கால்குலேட்டரை பயன்படுத்தி கணக்கிட முடியும்.

வாங்கும் விவரங்கள் பின்வருமாறு:
- வாங்கிய விலை: 5, 00,000 ரூபாய்.
- சேவை வரி: 15, 450 ரூபாய்.
- செலுத்த வேண்டிய மொத்த பிரீமியம்: 5,15,450 ரூபாய்

வாங்கும் விவரங்கள் பின்வருமாறு

- ஓய்வூதிய முறை: வருடாந்திரம்
- வட்டி விகிதம்: 9.38 சதவீதம்
- ஓய்வூதிய தொகை: 46, 903 ரூபாய்

5,00,000 ரூபாய் உடைய பாலிசியின் வட்டி விகிதம் 9.38 சதவீதமாக இருக்கும். இதை அடிப்படையாக கொண்டு பாலிசிதாரர் அல்லது ஆண்டுத்தொகை பெறுபவர் வருடாந்திர ஓய்வூதியமாக 46,903 ரூபாயை பெறுவார்.

இந்த திட்டம் முதலீட்டிற்கான சிறந்த திட்டமாகும். இறப்பிற்கு பிறகும் கூட ஓய்வூதிய சலுகைகளை உங்களுக்கு வழங்குகிறது. மேலும், உங்களின் இறப்பிற்கு பிறகும் கூட உங்களுடைய மணி பேக்கினை உங்களுக்கு விருப்பமான ஒருவர் பெறுவதற்கான வாய்ப்பை நல்குகிறது.