எல்‌ஐ‌சி  ஜீவன் லாப் திட்டம்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

கைபேசி எண்
பெயர்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

எல்.ஐ.சி. ஜீவன் லாப் என்பது இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் மூலம் செயலாக்கம் அளிக்கக்கூடிய ஆயுள் காப்பீடு திட்டங்களில் ஒன்றாகும். இது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளுடன் சேவையாற்றுவதற்காக என்டௌமெண்ட் திட்டத்துடன் இணைக்கப்படாமல் வெளி வரும் வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் திட்டமாகும். பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் இணைந்து வழங்குகிறது. அதாவது பாதுகாப்பாக வாழ்வதற்கும் அத்துடன் நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை பயனுள்ள வகையில் சேமித்து வைக்கவும் முடியும். இத்துடன் கூட காப்பீட்டாளர் இறக்க நேரிடும் போது குடும்பத்திற்கு தேவைப்படும் நிதி ஆதரவையும் இது வழங்குகிறது.  8-59 வயதுக்குள் இருக்கும் மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள முடியும்.

இது ஒரு அடிப்படை என்டௌமெண்ட் திட்டமாகும். அதாவது நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பிரீமியம் செலுத்தும் போது,  பாலிசி கால வரையின் முடிவில், முதிர்ச்சி சலுகைகளை பெற முடியும். பாலிசி கால வரையின் போது எந்த நேரத்திலும் பாலிசிதாரரின் இறப்பு ஏற்பட்டால், நியமனதாரருக்கு இறப்பு சலுகைகளானது வழங்கப்படும்.

எல்.ஐ.சி  ஜீவன் லாப் - முக்கிய அம்சங்கள்

 • இந்த திட்டம் 16 ஆண்டுகள், 21 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் போன்ற பல்வேறு விருப்பங்களுடன் காப்பீட்டு உரிமையை தேர்வு செய்ய உங்களுக்கு அனுமதி கொடுக்கிறது.
 • இது அடிப்படையில் ஒரு இணைப்பில் அல்லாத,  வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் காலமாகும்.
 • இது தனிப்பட்ட முதலீட்டாளர்களை அடிப்படையாக கொண்டு  வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் அல்லது 16 ஆண்டுகள் அடங்கிய பிரீமியம் செலுத்தும் காலத்திற்கான விருப்பத் தேர்வை நீங்கள் பெற முடியும்.
 • வருடாந்திர,  அரை வருடாந்திர,  காலாண்டு,  மாதாந்திரத்தைப் போலவே  சம்பள சேமிப்பு திட்டத்தின் மூலமாகவும் பிரீமியம் செலுத்தும் நிகழ்வெண்களுடன் வருகிறது.
 • இது கடன் தொகை வசதியுடன் வருகிறது. பாலிசிதாரர் தொடர்ந்து 3 ஆண்டுகள் பிரீமியங்களை செலுத்தியும் மேலும் பாலிசி ஆனது  ஒப்படைவு மதிப்பையும் அடைந்தால்,  காப்பீட்டாளர் கடன் தொகை வசதிகளை பயன்படுத்திக் கொள்வதற்கான அனுகூலத்தைப் பெற முடியும்.
 • பாலிசி வெளியீட்டு தேதியிலிருந்து முதல் 15 நாட்களை சோதனை காலமாக வழங்குகிறது.
 • பாலிசிதாரரால் செலுத்தப்படாத பிரீமியத்தின் முதல் தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்கு புதுப்பித்தல் காலத்தை வழங்குகிறது. நிலுவை தொகை,  வட்டி போல் பிற செலவினங்களையும் செலுத்துவதன் மூலம் பாலிசியை புதுப்பிக்க முடியும்.

திட்டத்தின் வகை

வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் காலத்துடன் இணைக்கப்படாத என்டௌமென்ட் திட்டம்

திட்டத்தின் அடிப்படை

தனிப்பட்டது

பாலிசியின் பாதுகாப்பு

முதிர்ச்சி சலுகை, இறப்பு சலுகை, எளிய மறுமதிப்பீட்டு போனஸ் மற்றும் இறுதி (கூடுதல்) போனஸ்  (ஏதாவது இருந்தால்)

காப்பீட்டு காலம்

16 ஆண்டுகள் (10 ஆண்டுகள் பிபிடி)

21 ஆண்டுகள் (15 ஆண்டுகள் பிபிடி)

25 ஆண்டுகள் (16 ஆண்டுகள் பிபிடி)

பிரீமியம் செலுத்தும் கால அளவுகள்  (பிபிடி)

10 ஆண்டுகள்

15 ஆண்டுகள்

16 ஆண்டுகள்

கடன் தொகை

இந்த பாலிசிக்கு எதிராக கடன் பெறுவதற்கான வசதி உள்ளது.  குறைந்தபட்சம் 3  முழு ஆண்டுகளுக்கு  பிரீமியத் தொகை செலுத்தப்பட்டிருந்தால் மேலும்   காப்பீடு ஒப்படைவு மதிப்பை பெற்றிருந்தால் கடன் தொகை ஆனது  கிடைக்கும்.

சோதனை காலம்

காப்பீட்டு ஆவணங்களைப் பெறும் தேதியிலிருந்து 15 நாட்கள் ஆகும். ஏற்கெனவே செலுத்திய பிரீமியத் தொகையானது  பாதுகாப்பு காலதித்திற்கான இடர் விகிதம்,  மருத்துவ பரிசோதனை செலவுகள், அறிக்கைகள்,  முத்திரை வரி முதலியவற்றிற்கான விகிதாசாரம் கழித்த பிறகு வழங்கப்படும்.

நியமனங்கள்

காப்புறுதி சட்டத்தின் படி வழங்கப்படும் நியமன வசதி

உறுதியளிக்கப்பட்ட அடிப்படை தொகை

குறைந்தபட்சம் – ரூபாய். 2 லட்சம்

அதிகபட்சம் - வரம்பு இல்லை

உறுதியளிக்கப்பட்ட அடிப்படை தொகை ரூபாய் 10,000 த்தின் மடங்குகளில் மட்டுமே இருக்கும்.

பிரீமியம் செலுத்தும் நிகழ்வெண்

வருடாந்திரம்

அரையாண்டு

காலாண்டு

மாதாந்திரம் (ஈசிஎஸ் முறையின் மூலம்  மட்டுமே பணம் செலுத்த வேண்டும்)

எஸ்எஸ்எஸ் (சம்பள சேமிப்பு திட்டம்) முறை


புதுப்பித்தல்

பாலிசிதாரரால் செலுத்தப்படாத பிரீமியத்தின் முதல் தேதியிலிருந்து வட்டி மற்றும் பிற செலவினங்களுடன் அனைத்து பிரீமியயங்களின் நிலுவைத் தொகையும் செலுத்துவதன் மூலம் 2 ஆண்டுகளுக்குள் எந்த நேரத்திலும் காப்பீட்டை புதுப்பிக்க முடியும்.

 எல்.ஐ.சி  ஜீவன் லாப் சலுகைகள்

எல்.ஐ.சி. ஜீவன் லாப் திட்டம் வழங்கும் சலுகைகளின் தொகுப்புகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:

இறப்பு சலுகைகள்:

காப்பீட்டாளர் இறக்க நேரிடும் போது,  உறுதி செய்யப்பட்ட தொகையிலிருந்து சலுகைகளை பெறுவதற்கு நியமனதாரருக்கு உத்திரவாதமானது கிடைக்கும். இது அல்லாமல்,  எளிய அடிப்படை மறு மதிப்பீட்டு போனஸ் மற்றும் இறுதி கூடுதல் போனஸ் இதில் ஏதாவது ஒன்று நியமனதாரருக்கு வழங்கப்படும்.

முதிர்ச்சி சலுகைகள்:

பாலிசிதாரர் பாலிசி காலத்தை தொடர்ந்தும் இருக்கும் சூழ்நிலையில், காப்பீடு செய்யப்பட்ட உறுதியளிக்கப்பட்ட தொகையானது முதிர்ச்சி தொகை வடிவில் வழங்கப்படும். அத்துடன் எளிய மறுமதிப்பீட்டு போனசும் அதேபோல் இறுதி கூடுதல் போனசும் பெற முடியும்.

தள்ளுபடி:

வருடாந்திர பிரீமியத்திற்கு 2% மற்றும் அரை வருட பிரீமியத்திற்கு  கட்டணங்களின் மீது 1% தள்ளுபடியை வழங்குகிறது. மேலும், உறுதியளிக்கப்பட்ட தொகையானது ரூபாய் 5 லட்சத்திலிருந்து 9.9 லட்சம் வரைக்கும் இருக்கும் போது 1.25% தள்ளுபடியை வழங்குகிறது. உறுதியளிக்கப்பட்ட தொகையானது ரூபாய். 10 லட்சத்திலிருந்து ரூபாய். 14 லட்சம் வரைக்கும் இருந்தால் 1.50% தள்ளுபடியை வழங்குகிறது. உறுதியளிக்கப்பட்ட தொகை 15 லட்சம் மற்றும் அதற்கு மேலே இருந்தால் 1.75% தள்ளுபடியை வழங்குகிறது

கடன் தொகை:

பாலிசி காலம் ஆரம்பித்து முதல் 3 ஆண்டுகள் நிறைவடைந்து மற்றும் பிரீமியம் வழக்கமாக செலுத்தப்பட்டிருந்தால் உங்களுக்கு கடன் பெரும் வசதியானது கிடைக்கும். கடன் தொகை வசதிக்கு தகுதியுடைய ஒப்படைவு மதிப்பையும் பாலிசியானது பெற்றிருக்க வேண்டும்.

இலாப பங்களிப்பு:

பாலிசியானது முழுவதும் செயல் முறையில் இருக்கும் போது,  ஒரு எளிய மறுமதிப்பீட்டு போனசானது வழங்கப்படும். ஏனெனில் இத்திட்டம்  இயற்கையிலேயே தானாகவே பங்கேற்கும் பாலிசி திட்டமாகும்.

சிறந்த திட்டம்:

எல்.ஐ.சி. ஜீவன் லாப் திட்டம் என்பது உங்கள் குழந்தையின் கல்வி அல்லது திருமணத்தை திட்டமிட விரும்புகிறீர்களானால்,  ஒரு சிறந்த திட்டமாகும்.

வரி சலுகைகள்:

எல்.ஐ.சி. ஜீவன் லாப் காப்பீட்டுக்கு செலுத்தப்படும் பிரீமியங்கள் வருமான வரிச் சட்டம், 1961 ன் பிரிவு 80 சி இன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், பெறப்பட்ட முதிர்வு தொகை 10 (10டி) ன் கீழ் வரி இல்லாததாகவும் உள்ளது.            

ஜீவன் லாப்  பாதுகாப்பு

இறப்பு சலுகைகள்

 • இந்த திட்டத்தின் மிகச் சிறந்த அம்சங்களில் ஒன்றான இறப்புச் சலுகைகளானது உங்களுக்கு பிறகு உங்களுடைய குடும்பம் ஒரு நிலையான வாழ்க்கையை வாழ்வதற்காக உதவுகிறது. ஒருவேளை பாலிசி காலத்தின் போது காப்பீட்டாளரின் இறப்பு ஏற்பட்டால்,  அனைத்து நிலுவையில் உள்ள பிரீமியங்களும் வழங்கப்படும். இறப்பு சலுகையானது மரணத்தின் மீது உறுதிப்படுத்தப்பட்ட காப்பீட்டு தொகையானது வரையறுக்கப்பட்டதாக இருக்கும், வழங்கப்பட்ட எளிய மறுமதிப்பீட்டு ஊக்கத்தொகை மற்றும் இறுதி கூடுதல் ஊக்கத்தொகை, ஏதாவது இருந்தால், வழங்கப்பட வேண்டும். "மரணத்தின் மீதான காப்பீட்டு தொகை" வருடாந்தர பிரீமியத்தில் 10 மடங்காக வரையறுக்கப்படுகிறது அல்லது உறுதிப்படுத்தப்பட்ட தொகை முழுவதையும் அதாவது உறுதியளிக்கப்பட்ட அடிப்படை காப்பீட்டு தொகையை வழங்குகிறது. இறப்பு தேதி வரையிலும் செலுத்திய அனைத்து பிரீமியங்களின் மொத்த மதிப்பில் 105% க்கும் குறைவாக இருக்கக் கூடாது.
 • மேலே குறிப்பிட்ட பிரிமியத் தொகையில் ஏதாவது வரி, எழுத்தாவனத்திர்க்கான கூடுதல் கட்டணங்கள், பயனாளி கட்டணங்கள் உள்ளிட்டவைகள் கிடையாது.

முதிர்ச்சி சலுகைகள் 

 • முதிர்வின் போது உறுதிபடுத்தப்பட்ட தொகையானது அடிப்படை உறுதிபடுத்தப்பட்ட தொகைக்கு சமமாக இருக்கும், அதைப்போல எளிய மறுமதிப்பீட்டு போனஸ் மற்றும் இறுதி கூடுதல் போனஸ் இதில் ஏதாவது ஒன்று பாலிசி காலம் முடிந்த பிறகும் வாழும் பாலிசிதாரருக்கு அனைத்து நிலுவை பிரிமியங்களும் செலுத்திய பட்சத்தில் மொத்தத் தொகையுடன் சேர்த்து வழங்கப்படும் 

லாபத்தில் பங்கெடுத்தல்

 • பாலிசியானது நிறுவனத்தின் லாபத்தில் பங்கெடுக்கும் மற்றும் பாலிசி முழுவதும் நடைமுறையுடன் இருக்கும் போது நிறுவனத்தின் அனுபவத்தின் படி அறிவிக்கப்பட்ட எளிய மறுமதிப்பீடு போனஸ் என்ற தலைப்பின் கீழ் லாபத்தை பெறுவதற்கான தகுதியை பெறுகிறது.
 • இறப்பு அல்லது முதிர்ச்சியின் கோரிக்கையை பாலிசி வழங்கும் போது இறுதியான (கூடுதல்) போனஸ் ஆனது இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கப்படலாம்.

எல். ஐ. சி ஜீவன் லாப் - தகுதி வரன்முறை

 

குறைந்தபட்சம்

அதிகபட்சம்

உறுதியளிக்கப்பட்ட தொகை

ரூபாய். 2,00,000

வரம்பு இல்லை

பாலிசி காலம் (ஆண்டுகளில்)


பாலிசி செலுத்தும் காலம்(ஆண்டுகளில்)


நுழைவின் போது வயதுஅதிகபட்ச முதிர்ச்சி வயது


பிரீமியம் செலுத்தும் நிகழ்வெண்

16,21,25

 

16 ஆண்டுகளுக்கான பாலிசி திட்டத்தில் 10 ஆண்டுகள்  

21 ஆண்டுகளுக்கான பாலிசி திட்டத்தில் 15 ஆண்டுகள்  

25 ஆண்டுகளுக்கான பாலிசி திட்டத்தில் 16 ஆண்டுகள்  

8 ஆண்டுகள் (நிறைவு)

16 ஆண்டுகள் பாலிசி காலத்திற்கு 59 வயது  

21  ஆண்டுகள் பாலிசி காலத்திற்கு 54 வயது  

25 ஆண்டுகள் பாலிசி காலத்திற்கு 50 வயது  

75 ஆண்டுகள்

வருடாந்திரம், அரையாண்டு, காலாண்டு, மாதாந்திரம்  

எல்.ஐ.சி. ஜீவன் லாப் எவ்வாறு வேலை செய்கிறது?

வாடிக்கையாளர்களாகிய நீங்கள் எல்.ஐ.சி. ஜீவன் லாப் திட்டத்தில் முதலீடு செய்யும் போது, பின்வருவனவற்றை நிர்ணயிக்க வேண்டும்:

 • உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை (இது நீங்கள் விரும்பும் காப்பீடுகளின் அளவு ஆகும்)
 • பாலிசி காலம் (காப்பீட்டாளர் காப்பீடு வைத்திருக்க விரும்பும் காலம் வரை). பிரீமியம் செலுத்துதல் காலம் பின்வருமாறு தானாகவே பாலிசி கால அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது:

16 ஆண்டுகள் பாலிசி காலத்தை தேர்ந்தெடுத்தால்,  நீங்கள் 10 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும்

21 ஆண்டுகள் பாலிசி காலத்தை தேர்ந்தெடுத்தால்,  நீங்கள் 15 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும்

25 ஆண்டுகள் பாலிசி காலத்தை தேர்ந்தெடுத்தால்,  நீங்கள் 16 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும்

இந்த திட்டத்திற்கான உங்கள் வருடாந்திர பிரீமியமானது,  நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டம் மற்றும் உங்கள் வயது போன்ற 2 காரணிகளைச் சார்ந்திருக்கும்.

இது ஒரு பங்கேற்பு திட்டமாக இருப்பதால், பாலிசி திட்டத்தின் வாயிலாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் செய்திகூற்றிற்கு நீங்கள் கடமைப்பட்டவர்களாக இருப்பீர்கள். இவை அனைத்தும் உத்தரவாதமளிக்கப்படவில்லை மற்றும் எல்ஐசி யின் மூலம் அறிவிக்கப்படும் கூற்றிற்க்கான மதிப்பை பற்றி நீங்கள் அறிவீர்கள்.

 • எளிய மறுமதிப்பீட்டு ஊக்கத்தொகை
 • இறுதி கூடுதல் ஊக்கத்தொகை

எல்.ஐ.சி. ஜீவன் லாப் பயனாளிகள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பயனாளிகளானது எல்.ஐ.சி. ஜீவன் லாப் பாலிசி மூலம்  வழங்கப்படுகிறது: 

எல்.ஐ.சி. இன் தற்செயலான இறப்பு மற்றும் உடல்ஊனமுற்றோர் பயனாளிகள்

பாலிசி காலத்தின் போது காப்பீட்டாளர் தற்செயலாக பாதிக்கப்படுகிற சந்தர்ப்பத்தில்,  கூடுதலான உறுதிப்படுத்தப்பட்ட தொகை நியமனதாரருக்கு வழங்கப்படும். இருப்பினும்,  பாலிசிதாரர் ஏதேனும் ஒரு வகை உடல் ஊனத்தால் பாதிக்கப்படுவார்களானால், 10 ஆண்டுகளுக்கு மேல் 10 சமமான தவணைகளில் நியமனதாரருக்கு உறுதியளிக்கப்பட்ட விபத்து காப்பீட்டு  தொகையை பெற முடியும். அடிப்படை பிரீமியத்தின் மீது ஒரு கூடுதல் பிரீமியத்தை செலுத்துவதன் மூலம் இந்த பயன்பெறுவோர் சலுகையை பெற முடியும்.

எல்.ஐ.சி யின் புதிய கால காப்புறுதி உத்தரவாதம்:

ஒருவேளை இறப்பு நிகழ்ந்தால்,  இங்கே பயன்பெறுவோர் சலுகைகள் அதிகரிக்கிறது. நீங்கள் ஒரு கூடுதல் தொகையை செலுத்துவதன் மூலம் பாலிசியின் இந்த வகையான பயனுக்கு செல்லலாம்.

ஜீவன் லாப் எளிமையான பிரீமியம் விளக்கங்கள்

இங்கே பிரீமியம் விகிதங்களின் மாதிரி அட்டவணை (வரிகள் உட்பட) செலுத்துவதன் மூலம் புகையிலை பழக்கம் இல்லாத ஒரு ஆரோக்கியமான ஆண் பயன்பாட்டாளருக்கு வயது வித்தியாசம், உறுதியளிக்கப்பட்ட தொகை, மற்றும் பாலிசி காலம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊறுதியளிக்கப்பட்ட தொகை: ரூபாய். 2,00,000

பாலிசி காலம்: 16,21,25 (ஆண்டுகள்)

பிரீமியம் செலுத்தும் காலம்: 10,15,16 (ஆண்டுகள்)

வயது: 20,30,40 (ஆண்டுகள்)

வயது

20 ஆண்டுகள்

30 ஆண்டுகள்

40 ஆண்டுகள்

ஆண்டு பிரீமியம்

ரூபாய். 17450

ரூபாய். 17,512

ரூபாய். 17,779

ஆண்டு பிரீமியம்

ரூபாய். 11,163

ரூபாய். 11,255

ரூபாய். 11634

ஆண்டு பிரீமியம்

ரூபாய். 9411

ரூபாய். 9545

ரூபாய். 10,015

ஜீவன் லாப் சரணன் மதிப்பு

எல்.ஐ.சி ஜீவன் லாப் பாலிசி திட்டமானது குறைந்தபட்சம் அடுத்தடுத்த மூன்று ஆண்டுகளுக்கான பிரீமியத்தை செலுத்திய பிறகு ஓப்படைவு செய்ய பாலிசியானது அனுமதி அளிக்கிறது. உத்திரவாத ஒப்படைவு மதிப்பு தொகை ஆனது செலுத்தப்பட்ட பிரீமியத்தின் மொத்த தொகைக்கு சமமாக இருக்கும் (ஏதாவது கூடுதல் கட்டணங்கள் அதாவது எழுத்தாவன கட்டணம் அல்லது பயன்பெறுவோர் பிரீமியங்கள் போன்றவை கழிக்கப்படும்) உத்திரவாத ஒப்படைவு மதிப்பு தொகையின் பெருக்குத் தொகையாக இருக்கும்.

பாலிசி காலத்திற்கான வெவ்வேறு புள்ளிகளுக்கான உத்திரவாத ஒப்படைவு மதிப்பு காரணி பின்வருமாறு

 

உத்தரவாத ஒப்படைவு மதிப்பு காரணி

   

பாலிசி காலம்

பி‌பி‌டி16 ஆண்டுகள்

பி‌பி‌டி 21 ஆண்டுகள்

பி‌பி‌டி 25 ஆண்டுகள்

3

30%

30%

30%

4

50%

50%

50%

5

50%

50%

50%

6

50%

50%

50%

7

50%

50%

50%

8

53.75%

52.30%

51.80%

9

57.50%

54.60%

53.50%

10

61.25%

56.90%

55.30%

11

66.00%

59.20%

57.10%

12

68.75%

61.50%

58.80%

13

72.50%

63.80%

60.60%

14

76.25%

66.20%

62.40%

15

80.00%

68.50%

64.10%

16

80.00%

70.80%

65.90%

18

 

73.10%

67.60%

19

 

75.40%

69.40%

20

 

77.70%

71.20%

21

 

80.00%

72.90%

22

 

80.00%

74.70%

23

   

76.50%

24

   

78.20%

25

   

80.00%

     

80.00%

எல்.ஐ.சி ஜீவன் லாப் தள்ளுபடிகள்

எல்‌ஐ‌சி அதன் பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடியின் வடிவில் பல நன்கொடைகளை வழங்கி அதன் மூலம் பிரபலமாக உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பின்வரும் வழிகளில் தள்ளுபடியை வழங்குகிறது.

 பிரீமியம் செலுத்தும் முறை மீதான தள்ளுபடி

பிரீமியம் செலுத்தும் முறையில் தள்ளுபடியை பெறுவதற்கு பாலிசிதாரர்களுக்கு பின்வரும் இரு வழிகள் உள்ளது

 • அட்டவணை படி வருடாந்திர பிரீமியம் செலுத்தும் முறையின் மீது  2% வழங்கப்படுகிறது.
 • அட்டவணை படி அரை வருடாந்திர பிரீமியம் செலுத்தும் முறையின் மீது 1% வழங்கப்படுகிறது.

உறுதிப்படுத்தப்பட்ட தொகைக்கான தள்ளுபடி

பின்வரும் படிநிலைகளில் இந்த பாலிசியானது உறுதிப்படுத்தப்பட்ட தொகைக்கு தள்ளுபடியை வழங்குகிறது

 • 50000 இருந்து 990000 வரையில் திட்டத்தின் உறுதியளிக்கப்பட்ட தொகையுடன் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை தொகையின் ஒவ்வொரு 10000 ரூபாய்க்கும் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை தொகையின் 1.25% ஐ வழங்குகிறது.
 • 50000 இருந்து 990000 வரையில் திட்டத்தின் உறுதியளிக்கப்பட்ட தொகையுடன் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை தொகையின் ஒவ்வொரு 10000 ரூபாய்க்கும் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை தொகையின் 1.50% ஐ வழங்குகிறது.
 • 1500000 மற்றும் அதற்கு மேல் வரை திட்டத்தின் உறுதியளிக்கப்பட்ட தொகையுடன் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை தொகையின் ஒவ்வொரு 10000 ரூபாய்க்கும் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை தொகையின் 1.75% ஐ வழங்குகிறது.

வருமான வரி சலுகைகள்:

மற்ற ஆயுள் காப்பீட்டு திட்டங்களைப் போலவே இந்த திட்டத்திலும் சில கூடுதல் சலுகைகள் கிடைக்கப் பெறுகிறது. அதில் ஒன்று வருமான வரி சலுகை ஆகும். இந்த வருமான வரி சலுகையானது உங்களுக்கான சேமிப்பை அதிகரிக்கவும் மற்றும் வரி சுமையை குறைக்கவும் வழி வகுக்கிறது. மேலும் உங்களின் வரி பொறுப்புகளை குறைக்கவும் பயன்படுகிறது.  

சோதனை காலம்

சில நிலைமைகளின் போது பாலிசிதாரர் இந்த திட்டத்தில் மகிழ்ச்சியாக இல்லாத நிலையில் இருக்கலாம். இது போன்ற சூழ்நிலையில், அவர் பாலிசி தொடங்கிய 15 நாட்களுக்குள் பாலிசியை ரத்து செய்ய நிறுவனம் அனுமதி அளிக்கிறது. இந்த காலமானது சோதனைகாலம் என்று அழைக்கப்படுகிறது. பாலிசி ரத்து செய்யப்பட்டால் செலுத்தப்பட்ட நிகர பிரீமியத்தில் ஏதாவது பொருந்தக்கூடிய செலவினங்கள் இருந்தால் அவை திரும்ப பெறப்படும்.

கருணை காலம்

ஒரு வேளை பிரீமியம் செலுத்தும் முறையானது வருடாந்திர, அரை வருடாந்திர மற்றும் காலாண்டுகளாக இருந்தால் பிரீமியம் செலுத்தும் தேதியிலிருந்து 30 நாட்களை கருணை காலமாக நீங்கள் பெறுவீர்கள்.

ஒரு வேளை பிரீமியம் செலுத்தும் முறையானது மாதாந்திரமாக இருந்தால், கருணை காலம் 15 நாட்கள் ஆகும்.

விதிவிலக்குகள்

தற்கொலை: பாலிசிதாரர் பாலிசி காலத்தின் ஒரு வருடத்திற்குள் தற்கொலை செய்து கொண்டால், காப்பீட்டு நிறுவனமானது நியமனதாரருக்கு உறுதியளித்த  எந்தவொரு தொகையையும் வழங்காது. இருப்பினும்,  ஒரு வேளை பாலிசி காலத்தின் ஒரு வருடத்திற்கு அப்பால் தற்கொலை நிகழ்ந்தால், பிரீமியத்தின் 80%  மானது எந்தவொரு வட்டியுமின்றி நியமனதாரருக்கு வழங்கப்படும்.