Sehwag PX
எல்.ஐ.சி  ஜீவன் பிரகதி திட்டம்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்

#Virukipolicy | T&C*

பிரீமியத்தை ஒப்பிடுக

பெயர்
தொலைபேசி எண்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

பிற தகவல்களை உள்ளிடவும்

பிறந்த தேதி
வருமான
மின்னஞ்சல்
நகரம்

எல்.ஐ.சி ஜீவன் பிரகதி திட்டமானது இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி) மூலமாக புதிதாக தொடங்கியுள்ள ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களிலேயே எல்‌ஐ‌சி தான் முதலிடத்தில் உள்ளது. எல்‌ஐ‌சி ஆனது  1956 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 245க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இணைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஒவ்வெரு தனி மனிதனின் தேவைகளை மனதில் கொண்டு தனியொரு நபரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 20க்கும் மேற்பட்ட பொருத்தமான திட்டங்களை வழங்குகிறார்கள்.

எல்‌ஐ‌சி பிரகதி திட்டமானது ஒரு என்டௌமெண்ட் திட்டத்தை போலவே   சேமிப்பு மற்றும் பாதுகாப்பினை வழங்குகிறது; இவை இரண்டுமே இந்த திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் வழங்கப்படுகிறது.

ஜீவன் பிரகதி திட்டமானது எப்படி இயங்குகிறது

இந்த திட்டத்தில் பல நன்மைகள் இணைந்து இருந்தாலும், வாடிக்கையாளர் இந்த திட்டத்தை வாங்குவதற்கு முன்னர் திட்டத்தில் உள்ள ஒரு சில அம்சங்களை நிச்சயமாக தெரிந்துகொள்ள வேண்டும்.

பாலிசி பிரீமியமானது உங்களின் விருப்பத்தின் படியும் மற்றும் உங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறும் இருக்கிறது. இந்த திட்டத்தை நீங்கள் எடுத்துக்கொண்ட பிறகு, ஒவ்வொரு பிரீமியமும் தவறாமல் செலுத்தபட வேண்டும். அப்போது தான் ஆயுள் பாதுகாப்பு என அழைக்கப்படும் "அடிப்படை உறுதி செய்யப்பட்ட தொகை" க்கு நீங்கள் தகுதியுடையவர்களாக இருப்பீர்கள். அதாவது 0-5 ஆண்டுக்கான திட்ட காலத்தில், அபாய நேர்வுக்கான பாதுகாப்பு அடிப்படை உறுதி செய்யப்பட்ட  தொகையின் 100% வழங்கப்படும். 6-10 ஆண்டுக்கான திட்ட காலத்தில், அபாய நேர்வுக்கான பாதுகாப்பு அடிப்படை உறுதி செய்யப்பட்ட தொகையின் 125% வழங்கப்படும்.11-15 ஆண்டுக்கான திட்ட காலத்தில், அபாய நேர்வுக்கான பாதுகாப்பு அடிப்படை உறுதிசெய்யப்பட்ட தொகையின் 150% வழங்கப்படும்.

16-20 ஆண்டுக்கான திட்ட காலத்தில், அபாய நேர்வுக்கான பாதுகாப்பு அடிப்படை உறுதிசெய்யப்பட்ட தொகையின் 200% வழங்கப்படும். சுருக்கமாக,  இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் அபாய நேர்வுக்கான பாதுகாப்பு தொகை ஆனது அதிகரிக்கும். இந்த திட்டமானது 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த தயாரிப்புகளானது போனஸ் வழங்குகிறது. இதனுடன் கூட, “தற்செயலாக ஏற்படும் இறப்புகள் மற்றும் உடல் ஊனத்திற்கான பயன்பெறுவோர்" க்காக நீங்கள் கூடுதல் தொகைகளை பெறமுடியும்.

நீங்கள் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறுவதற்கான சலுகைகள்

எல்.ஐ.சி. ஜீவன் லாப் திட்டத்தில் மொத்தமாக மூன்று பயன்பெறுவோர் திட்டங்கள் உள்ளது, ஆனால் அந்த திட்டத்தின் முதலிரண்டு திட்டங்களை ஒருங்கிணைந்து ஒன்றாக இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.

இறப்பு சலுகைகள்: பாலிசிதாரர் இறக்க நேரிடும் போது, இந்த சலுகையானது வழங்கப்படுகிறது. அனைத்து வழக்கமான முடிவு செய்யப்பட்ட பிரிமியத் தொகையானது குறிப்பிட்ட காலத்திற்குள், எந்தவித நிலுவையும் இல்லாமல் பிரீமியங்கள் செலுத்தப்பட்டு இருந்தால், இறப்பிற்கான சலுகைகள் கீழ்கண்டவாறு கணக்கிடப்பட்டு தொகையானது சேர்க்கப்படும்.

இறப்பு சலுகை = இறப்பின் மீது உறுதி  செய்யப்பட்ட தொகை + நிலையான எளிய மறுமதிப்பீட்டு போனஸ் + இறுதி கூடுதல் போனஸ்.

இறப்பின் மீது உறுதிசெய்யப்பட்ட தொகையானது மேற்கண்ட வாழ்நாள் அபாய நேர்வுக்காக வழங்கப்படும் தொகையுடன் தொடர்புடையது. இறுதியான இறப்பு சலுகைகளானது பாலிசி காலத்தில் காலத்தை பொருட்படுத்தாமல் செலுத்திய அனைத்து பிரிமியங்களின் மதிப்பில் 105% க்கும் குறையாமல் இருக்கும். வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் செலுத்தப்படும் பிரிமியங்களுக்கு எந்தவித கூடுதல் வரியும் கிடையாது. பயன்பெறுவோர் பிரிமியம் தேவைபடுவோருக்கு மட்டுமே கூடுதல் தொகையானது பொருந்தும்.     

முதிர்வுக்கான சலுகை: இந்த திட்ட காலத்தை அனைத்து பிரீமியங்களையும்  செலுத்தி நிறைவு செய்திருந்தால் மட்டுமே, முதிர்வு சலுகையானது வாழ்ந்து கொண்டிருக்கும் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும். முதிர்வுக்கான சலுகைகள் பின்வருமாறு:

முதிர்வு சலுகை = முதிர்வு மீதான உறுதிபடுத்தப்பட்ட தொகை + நிலையான எளிய மறுமதிப்பீட்டு போனஸ் + இறுதி கூடுதல் போனஸ்: முதிர்வு மீதான உறுதி செய்யப்பட்ட அடிப்படை தொகை என்பது வேறொன்றுமில்லை, அடிப்படை உறுதிசெய்யப்பட்ட தொகைதான். இந்த மொத்த தொகையானது பாலிசி முதிர்வின் போது வழங்கப்படும்.  

பங்கேற்பு இலாபங்கள்: உங்கள் பாலிசியானது தகுதியுடையதாக இருந்து மேலும் நிறுவனத்திற்கு இலாபத்தை ஈட்டி தரக்கூடியதாக இருக்க வேண்டும். பின்னர் பாலிசியின் எளிய மறுமதிப்பிட்டு போனஸ் என்ற தலைப்பின் கீழ் நிறுவனமானது தொகையை  வழங்குகிறது. அதாவது இதற்கு, பாலிசி செயலில் மற்றும் நடைமுறையில் இருக்க வேண்டும். மறுமதிப்பீட்டு போனசானது அடிப்படை உறுதிசெய்யப்பட்ட தொகையின் மீது கணக்கிடப்படும்.

இறுதி கூடுதல் போனசானது பாலிசியின் முதிர்ச்சி ஆண்டை பொருத்தது அல்லது பாலிசிதாரரின் இறப்பிற்கான கோரிக்கை வருடத்தை சார்ந்திருக்கிறது.

பயன் பெறுவோருக்கான சலுகை: தற்செயலாக ஏற்படும் இறப்பிற்கு மற்றும் ஊனமுற்றோர் சலுகைக்காக பயன்பெறுவோர் பாலிசிதாரரின் விருப்பத்தின் பேரில் சேர்க்க முடியும். இதற்கு, பாலிசிதாரர் வழக்கமான செலுத்தும்   கட்டணத்துடன் கூடுதலாக பீரியம் செலுத்த வேண்டும்.

எல்.ஐ.சி. ஜீவன் பிரகதி பாலிசிக்கான வரன்முறை தகுதிகள் என்ன?

நீங்கள் 12 வயது முதல் 45 வயது வரையிலும் இந்த பாலிசிக்கான  பிரீமியங்களை தொடங்க முடியும். பாலிசிதாரரின் வயதை பொருத்து இந்த திட்டத்திற்கான காலவரையறைகள் மாறுபடும். பாலிசி முதிர்ச்சி வயதானது 12 முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கும். எனவே பாலிசிதாரருக்கு   அதிகபட்சமாக 65 வயதாகும் போது, திட்டமானது முதிர்வு அடையும். பாலிசி திட்டத்தின் மூலம் ரூபாய் 1,50,000 முதல் அதிகபட்ச தொகை வரையிலும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

வரிக்கான சலுகை: மற்ற பாலிசி திட்டங்கள் போலவே, எல்.ஐ.சி ஜீவன் பிரகதி பாலிசியானது வருமான வரி சலுகைகளை வழங்குகிறது. அதாவது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி கீழ் பிரீமியத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பாலிசி காலத்தின் இறுதியில் வழங்கப்படும்  முதிர்ச்சிக்கான தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படும். எனவே நாம் அந்த தொகையின் மீது எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. சட்ட பிரிவு 10 டி யின் கீழ் உறுதிசெய்யப்பட்ட தொகையை போலவே முடிவு செய்யப்பட்ட தொகை முதிர்ச்சியின் போது கொடுக்கப்படும்.

பாலிசி ஒப்படைவு : நீங்கள் பாலிசியின் பிரீமியத்தை தொடர்ந்து 3 வருடங்கள் செலுத்திய பிறகு  பாலிசியை ஒப்படைவு செய்வதற்கான உடன்பாடு உள்ளது. ஒப்படைவின் தோராய மதிப்பை கணக்கிட ஆன்லைனில் பல கணக்கீட்டு கருவிகள் உள்ளது.   

எல்.ஐ.சி. ஜீவன் பிரகதி திட்டத்துடனான எடுத்துக்காட்டு

திரு, ஆஷிஷ் ஜீவன் பிரகதி பாலிசியை உறுதிசெய்யப்பட்ட தொகை ரூபாய் 10,00,000 க்கு வாங்குகிறார். பாலிசி காலமானது 20 ஆண்டுகள் ஆகும், மற்றும் அதனை அவர் 2017ஆம் ஆண்டு தன்னுடைய 27 வது வயதில் வாங்குகிறார்.

ஒரு பிரீமியம் கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் ஆண்டுதோறும் உள்ள பிரீமியத்தை ரூபாய் 48.864 ஆக கணக்கிட முடியும்.

இதற்கு இரண்டு வழிமுறைகள் சத்தியமானதாக இருக்கும். ஒன்று திரு. ஆஷீஷ் 20 ஆண்டுக்கான பாலிசி காலத்திற்குப் பிறகு உயிர் வாழ்வதற்கான  சலுகைகளை பெறுகிறார். அல்லது துரதிஷ்டவசமாக, அவருடைய நியமனதாரர் இறப்பிற்கான சலுகைகளை பெறுகிறார்.

1. முதல் வழக்கில், திரு. ஆஷிஷ் முதிர்ச்சிக்கு பிறகு உயிர்வாழ்வதற்கான பின்வரும் சலுகைகளை பெறுவார்.

முதிர்வுக்கான சலுகை = முதிர்வுக்கான உறுதிசெய்யப்பட்ட தொகை + நிலையான எளிய மறுமதிப்பீட்டு போனஸ் + இறுதி கூடுதல் போனஸ்:

2037 ஆம் வருடம் முதிர்வடைகிறது.

47 வது வயதில் முதிர்வடையும்..

மொத்தமாக 978151 ரூபாயை பிரீமியமாக செலுத்தி இருப்பார்.  

தோராயமாக முதிர்வு தொகை ரூபாய் 1940000 ஆக இருக்கும்.

2. தற்செயலாக நிகழும் இறப்பின் போது, இறந்த வருடத்தை சார்ந்து  மொத்த தொகையானது வேறுபடும்.

A. 2017 ஆம் ஆண்டில் எனும்போது, 27 வயது ஆகிறது

  • இறப்ப்பின் மீது உறுதிசெய்யப்பட்ட தொகையானது ரூபாய் 1000000 ஆகும்.
  • சாதாரணமாக ஆயுள் காப்பீட்டு தொகையானது ரூபாய் 1042000 ஆகும்.    
  • தற்செயலாக ஏற்படும் விபத்துக்கான ஆயுள் காப்பீட்டு தொகையானது ரூபாய் 2042000 ஆகும்.

மேலும் தோராயமாக முதிர்வுக்கான தொகையானது 1940000  ரூபாயாக இருக்கும்.

B. 2018 ஆம் ஆண்டில் எனும்போது, 28 வயது ஆகிறது,

  • இறப்பின் மீது உறுதிசெய்யப்பட்ட தொகையானது ரூபாய் 1000000 ஆகும்.
  • சாதாரணமாக ஆயுள் காப்பீட்டு தொகையானது ரூபாய் 1084000 ஆகும்.    
  • தற்செயலாக ஏற்படும் விபத்துக்கான ஆயுள் காப்பீட்டு தொகையானது ரூபாய் 2084000 ஆகும்

C. 2019 ஆம் ஆண்டில் எனும்போது, 29 வயது ஆகிறது

  • இறப்பின் மீது உறுதி செய்யப்பட்ட தொகையானது ரூபாய் 1000000 ஆகும்
  • சாதாரணமாக ஆயுள் காப்பீட்டு தொகையானது ரூபாய் 1126000 ஆகும்.   
  • தற்செயலாக ஏற்படும் விபத்துக்கான ஆயுள் காப்பீட்டு தொகையானது ரூபாய் 2126000 ஆகும்

D. 2020 ஆம் ஆண்டில் எனும்போது, 30 வயது ஆகிறது,

  • இறப்ப்பின் மீது உறுதிசெய்யப்பட்ட தொகையானது ரூபாய்   1000000 ஆகும்
  • சாதாரணமாக ஆயுள் காப்பீட்டு தொகையானது ரூபாய் 1168000 ஆகும்
  • தற்செயலாக ஏற்படும் விபத்துக்கான ஆயுள் காப்பீட்டு தொகையானது ரூபாய் 2168000 ஆகும்

பல ஆண்டுகளாக எல்‌ஐ‌சி யானது காப்பீட்டு நிறுவனங்களிலேயே மிகவும் நம்ப தகுந்த காப்பீட்டு நிறுவனமாக இருக்கிறது. அதாவது  இந்த எல்‌ஐ‌சி திட்டமானது தாத்தா பாட்டி மற்றும் இன்றைய இளைய தலைமுறையினர்களாலும் நம்பப்படுகிறது. இந்த என்டோமெண்ட் திட்டமானது, நிச்சயமாக, ஒரு நல்ல சிறந்த சாத்தியமான முதலீட்டு திட்டத்துடன் கூட பாதுகாப்பையும் லாபத்தையும் வழங்குகிறது.