எல்.ஐ.சி  ஜீவன் சங்கம் திட்டம்
  • term திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

தொலைபேசி எண்
பெயர்
பிறந்த தேதி

1

2

வருமான
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சிமற்றும் தனியுரிமைக் கொள்கையைஏற்றுக்கொள்கிறீர்கள்

இந்த எல்.ஐ.சி கொள்கை வாங்குவதற்கு கிடைக்கவில்லை. இது நிறுவனத்தால் விற்பனைக்கு மூடப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி ஜீவன் சங்கம் திட்டமானது இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி) மூலமாக புதிதாக தொடங்கியுள்ள ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களிலேயே எல்‌ஐ‌சி தான் முதலிடத்தில் உள்ளது. எல்‌ஐ‌சி ஆனது  1956 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 245 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இணைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஒவ்வெரு தனி மனிதனின் தேவைகளை மனதில் கொண்டு தனியொரு நபரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 20 க்கும் மேற்பட்ட பொருத்தமான திட்டங்களை வழங்குகிறார்கள்.

எல்‌ஐ‌சி ஜீவன் சங்கம் திட்டமானது ஒரு என்டௌமெண்ட் திட்டத்தை போலவே சேமிப்பு மற்றும் பாதுகாப்பினை வழங்குகிறது; இவை இரண்டுமே இந்த திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் வழங்கப்படுகிறது.

எல்.ஐ.சி  ஜீவன் சங்கம் திட்டமானது எப்படி இயங்குகிறது

பாலிசி பிரீமியமானது அனைவருக்கும் 12 ஆண்டுகள் ஆகும். நீங்களே உங்களுக்கு தேவையான முதிர்வு தொகையை தீர்மானிக்க வேண்டும். இது வேறொன்றும் இல்லை உறுதி செய்யப்பட தொகை தான். தீர்மானித்த பிறகு, பாலிசிதாரர் தேர்ந்தெடுத்த முதிர்ச்சி தொகை மற்றும் வயதின் அடிப்படையில் முடிவு செய்யபட்ட பிரிமியங்களை ஒவ்வொரு காலத்திற்கும் தவறாமல் செலுத்த வேண்டும். அதிலிருந்து "உறுதி செய்யப்பட்ட முதிர்வு தொகை" என்றழைக்கப்படும் பாதுகாப்பிற்கு நீங்கள் தகுதியுடையவர்களாக இருப்பீர்கள். இந்த திட்டம் உங்கள் வருமானத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது எல்‌ஐ‌சி ஜீவன் சங்கம் திட்டமானது எல்‌ஐசி ஈட்டும் இலாபத்தில் பங்கேற்ப்பதால் எல்‌ஐ‌சியில் நீங்கள் கூடுதல் போனஸ் வாங்க தகுதியுடைவராக இருப்பீர்கள். இந்த திட்டத்தின் கீழ் அபாய நேர்வு பாதுகாப்புக்கு வழங்கப்படும் தொகையானது நீங்கள் செலுத்தும் ஒற்றை பிரீமியத்தின் மடங்காக இருக்கும். இந்த திட்டமானது 2015 மார்ச் 1 ஆம் தேதியில் தொடங்கப்பட்டு, 2015 ஜூன் 1 ஆம் தேதி மூடப்பட்டது. இந்த திட்டமானது 90 நாட்கள் மட்டும் தான் திறந்திருந்தது,  இந்த திட்டத்தில் வருமானமானது அதிக அளவு கிடைக்கிறது.

எல்‌ஐ‌சி ஜீவன் சங்கம் திட்டத்தின் அம்சங்கள்

இந்த பாலிசி பிரீமியத்தில் உள்ள சில அம்சங்கள்:

- இந்த பிரீமியமானது மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திரமாக செலுத்துவதாக உள்ளது. இதனை பாலிசிதரார் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்யலாம்.

- இந்த பாலிசியில் குறைந்தபட்ச முதிர்ச்சி தொகையானது ரூபாய் 300000 ஆகவும் அதிகபட்ச தொகைக்கு வரையறை கிடையாது.

- தற்செயலாக ஏற்படும் இறப்பின் சலுகையானது குறைந்தபட்சம் 100000  ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் வரைக்கும் இருக்கும்.

- 12 வருட பிரீமிய பாலிசி காலத்திற்கான பாதுகாப்பு அதிகபட்ச வயது 69 ஆண்டுகள் மற்றவர்களுக்கு 70 வதாக இருக்கும்

- தாமதிக்கபட்ட பிரீமியங்களுக்கு கொடுக்கபடும் கருணை காலம் அல்லது மிகை காலம் என்பது மாதாந்திரமாக செலுத்துபவர்களுக்கு 15 நாட்களாகவும் மற்றும் மற்ற பிரீமியம் செலுத்தும் முறைகளுக்கு 30 நாட்களாகவும் இருக்கும்.

இந்த திட்டத்தில் இருந்து நீங்கள் வெளியேறுவதற்கான சலுகைகள்

  • இறப்பு சலுகை: பாலிசிதாரரின் இறப்பு ஏற்படும் போது இந்த சலுகையானது வழங்கப்படுகிறது. அனைத்து பிரீமியங்களையும் தொடர்ச்சியாக வரையறை காலத்துடன் நிலுவை தொகை இல்லாமல் செலுத்தப்பட்டு இருந்தால், இந்த சலுகையானது இறப்பிற்கு  வழங்கப்படுகிறது.

பாலிசி தொடங்கிய பிறகு ஐந்து வருடத்திற்குள் பாலிசிதாரர் இறந்து விட்டால் இறப்பின் மீதான காப்பீட்டு தொகையானது பின்வருமாறு தீர்மானிக்கப்படுகிறது.

- ஆபத்துக்கான நேர்வு தொடங்கப்பட்ட தேதிக்கு முன்: இந்த வழக்கில், ஒற்றை பிரீமியமானது எந்த ஒரு வட்டியும் இல்லாமல் நியமனதாரருக்கு   கொடுக்கப்படுகிறது. இறுதி பிரீமியத்திற்கு அதிகபடியான கூடுதல் தொகையோ அல்லது வரிகளோ கிடையாது.

- ஆபத்துக்கான நேர்வு தொடங்கப்பட்ட தேதிக்கு பின்: இந்த வழக்கில், மரணத்தின் மீது காப்பீடு செய்யப்படும் தொகையானது அட்டவணை  பிரீமியத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இது பிரீமியத்தைப்  போலவே 10 மடங்கு ஆகும். அதாவது இதில் தீர்மானிக்கபட்ட காலத்தில் செலுத்தப்படும் பிரீமியத்திற்கு அதிகபடியான வரிகள் சேர்க்கப்படாது.

பாலிசி தொடங்கியதிலிருந்து 5 வருடங்களுக்குள் ஆனால் முதிர்ச்சி காலத்திற்கு முன்பே, பாலிசிதாரர் இறந்து விட்டால் உறுதி செய்யப்பட்ட காப்பீட்டு தொகையானது,  ஒற்றை பிரீமியத்தின் அட்டவணை போலவே 10 மடங்காகும். இதனுடன் கூட கூடுதல் போனஸ் வழக்கப்படுகிறது.

  • முதிர்வு சலுகை: பாலிசி காலம் முடிந்த பிறகு இருக்கும் பாலிசிதாரர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதில் முக்கியமானது அனைத்து காலத்திற்குமான பிரீமியங்களை செலுத்தி இருக்க வேண்டும். பின்வருமாறு இந்த முதிர்வு சலுகையானது கணக்கிடப்படுகிறது.

முதிர்வு சலுகை = உறுதியளிக்கப்பட்ட முதிர்வு தொகை + கூடுதல் போனஸ்: இங்கே முதிர்வு தொகை என்பது வேறொன்றும் இல்லை உறுதியளிக்கப்பட்ட தொகை தான். இந்த மொத்த தொகையானது முதிர்வின் போது வழங்கப்படுகிறது.

  • கூடுதல் போனஸ்: நிறுவனத்திற்கு பாலிசியானது தகுதியுடையதாகவும் மற்றும் இலாபம் அடைவதாகவும் இருக்கம் பட்சத்தில், எளிய மறுமதிப்பீடு போனஸ் என்ற தலைப்பின் கீழ் வழங்கப்படுகிறது. இதில், இந்த பாலிசியானது குறைந்தது ஐந்து வருடங்களுக்கு செயலிலும் மற்றும் நடைமுறையில் இருக்க வேண்டும்  இது உறுதியளிக்கப்பட்ட அடிப்படை தொகைகளிருந்து இந்த மறுமதிபீட்டு போனஸ் கணக்கிடப்படுகிறது.

எல்‌ஐ‌சி ஜீவன் சங்கம் பாலிசியில் தகுதிகளுக்கான வரன்முறைகள் என்ன?

நீங்கள் பாலிசி பிரீமியத்தை 6 வயது முதல் 50 ஆண்டுகள் வரை தொடங்கலாம். பாலிசி முதிர்ச்சியானது 12 ஆண்டுகள் ஆகும். எனவே அதிகபட்சமாக, பாலிசிதாரருக்கு 62 வயதில் பாலிசியானது நிறைவடைகிறது. இந்த பாலிசியின் மூலம் பாதுகாப்பிற்கு வழங்கப்படும் தொகையானது ரூபாய் 75,000 தொடங்கி அதிகபட்சமாக உயரும். இந்த முதிர்ச்சியின் தொகையானது ரூபாய் 10,000 ன் மடங்காக இருக்கும்.

ஒரு வேளை பாலிசிதாரர் 8 வயது அல்லது 8 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கும் போது பாலிசியை தொடங்கிய முதல் நாளில் இருந்தே இந்த அபாய நேர்வுக்கான கணக்கிடுகள் தொடங்கப்படுகிறது. இந்த வழக்கில்,  பாலிசிதாரர் 8 வயதுக்கு குறைவாக இருந்தால், அந்த அபாய நேர்வு கணக்கீடு ஆனது 1 வருடம் முடிந்த பிறகு அல்லது பாலிசிதாரருக்கு 8 வயது நிறைவடைந்த பிறகு தொடங்கும்.

வரி சலுகை:

மற்ற பாலிசி போலவே, எல்‌ஐ‌சி ஜீவன் சங்கம் திட்டத்தில் வருமான வரிகளுக்கு சலுகைகளை வழங்குகிறது. வருமான வரி சட்டப் பிரிவு 80 சி யின் கீழ் பிரீமியத்திற்கு வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது. பாலிசி கால முதிர்வில் வழங்கும் முதிர்வு தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. நீங்கள் செலுத்தும் தொகைகளுக்கு எந்த ஒரு வரியும் செலுத்த தேவையில்லை. இந்த பாலிசியின் முடிவின் போது பிரிவு 10 டி பிரிவின் கீழ்  உறுதியளிக்கப்பட்ட முதிர்ச்சி தொகையானது கொடுக்கப்படும்.

கடன் வசதி: உங்களுக்கு கடன் தேவைப்பட்டால் இந்த ஜீவன் சங்கம் பாலிசி திட்டத்தில் கடன் வாங்கலாம். ஆனால், இந்த பாலிசி வாங்கி 3 மாதங்களுக்கு பிறகு அல்லது சோதனை காலம் முடிந்த பிறகு தான் கடன் பெற முடியும். இந்த பாலிசிதாரர் பாலிசி தொடங்கும் வயதினை அடிப்படையாக கொண்டு இந்த கடன் தொகையானது தீர்மானிக்கப்படுகிறது.

பிரீமியத்தின் மீது தள்ளுபடி:

நீங்கள் முடிவு செய்யப்பட்ட பிரீமியத்திற்கு தள்ளுபடி பெறுவீர்கள். இது ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் பொருந்தும். முதிர்வு தொகையானது 2 லட்சம் முதல் 4.8 லட்சம் வரை இருக்கும் போது நீங்கள் 15 ரூபாய்க்கான தள்ளுபடி பெறலாம். உறுதியளிக்கப்பட்ட முதிர்வு தொகையானது 5 லட்சம் முதல் 9 லட்சம் வரை இருக்கும் போது நீங்கள் ஒவ்வொரு 20 ரூபாய்க்கான தள்ளுபடி பெறலாம். உறுதியளிக்கப்பட்ட முதிர்வு தொகையானது 10 லட்சத்திற்கு மேலாக இருக்கும் போது நீங்கள் ஒவ்வொரு 25 ரூபாய்க்கான தள்ளுபடியை  பெறலாம்.

பாலிசி ஒப்படைவு:

தேவைப்படும் போது பாலிசியை ஒப்படைக்கலாம். பாலிசியை தொடங்கிய ஒரு வருட காலத்திற்குள் ஒப்படைக்கும் போது ஒற்றை பிரீமியத்தின் 70% பெற முடியும். ஒரு வருடம் முடிந்த பிறகு பாலிசியை ஒப்படைத்தால், அவருக்கு ஒற்றை பிரீமியத்தின் 90% கிடைக்கும். தோராய ஒப்படைவு மதிப்பை கண்டறிய பல கணக்கீட்டு கருவிகள் ஆன்லைனில் உள்ளது. பாலிசி தொடங்கிய 5 வருடங்களுக்கு பிறகு ஒப்படைவு செய்தால், கூடுதல் போனஸ் உடன் பிரீமியமும் சேர்த்து கிடைக்க கூடிய தகுதியை பாலிசிதாரர் பெறுகிறார். இவை அனைத்தும் ஆன்லைன்‌ கணக்கீட்டு கருவி மூலம் கணக்கிட முடியும்.  

குறைந்த அளவு அபாய நேர்வை எடுத்து கொள்வதற்கான ஒரு சிறந்த தேர்வாக இந்த திட்டம் உள்ளது. உங்களுக்கு அதிகபட்ச வருமானத்துடன் கூடுதல் போனஸும் கிடைக்கும்.

- / 5 ( Total Rating)