எல்.ஐ.சி ஜீவன் தருண் திட்டம்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

கைபேசி எண்
பெயர்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

எல்ஐசி யின் ஜீவன் தருண் என்பது அடிப்படையில் இணைக்கப்படாத  பங்கேற்கும் ஒரு வரையறுக்கப்பட்ட பிரீமியத் திட்டமான இது உங்கள் குழந்தைகளுக்கு சேமிப்பையும் பாதுகாப்பையும் இணைந்து வழங்கக்கூடிய  மிகச் சிறப்பானத் திட்டம் ஆகும். வளரும் உங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் பல இன்றியமையாதவைகளை எளிதில் பூர்த்திசெய்யக் கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டமானது  குழந்தையின் 20 முதல் 24 வயதிலிருந்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சலுகைகளுக்கான தொகையும் மற்றும் 25 வயதில் முதிர்ச்சி சலுகைகளையும் வழங்குகிறது.

மற்றவற்றுடன் ஒப்பிடும் போது, இந்தத் திட்டம் ஒரு இலகுவானத் திட்டம் ஆகும், இந்த திட்டத்தை பாலிசி கால வரையறையின் போது முன்மொழிபவர் தொடர்ந்து வாழ்தலுக்கான சலுகைகளைப் பெறுவதற்கு விகிதப் பொருத்தத்தை தேர்வு செய்ய சில படிநிலைகள் ஆனது கீழே விளக்கபட்டுள்ளது.

விருப்பம்

தொடர்ந்து வாழ்தல் சலுகைகள்

முதிர்ச்சி சலுகைகள்

விருப்பம் 1

தொடர்ந்து வாழ்தல் சலுகைகள் ஆனது கிடையாது  

உறுதி செய்யப்பட்டத்  தொகையின் 100%

விருப்பம் 2

5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் உறுதி செய்யப்பட்டத்  தொகையின் 5%

உறுதி செய்யப்பட்டத்  தொகையின் 75%

விருப்பம் 3

5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் உறுதி செய்யப்பட்டத்  தொகையின் 10%

உறுதி செய்யப்பட்டத்  தொகையின் 50%

விருப்பம் 4

5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் உறுதி செய்யப்பட்டத்  தொகையின் 15%

உறுதி செய்யப்பட்டத்  தொகையின் 25%

இந்த திட்டம் குழந்தையின் பெயரில் ஏற்றுக் கொள்ளப்படும் மேலும் ஆயுள் பாதுகாப்பானது குழந்தைகளுக்கு மட்டுமே கொடுக்கப்படும், பெற்றோர்களுக்குக் கிடையாது.

எல்.ஐ.சி  ஜீவன் தருண் சிறப்பம்சங்கள்

 • இது ஒரு பங்கேற்பு உடைய வரையறைக்கு உட்பட்டு செலுத்தக் கூடிய பாரம்பரியத் திட்டம் ஆகும்.
 • உங்கள் குழந்தையின் 20 வயது வரை நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டும் மேலும் பாலிசியானது உங்கள் குழந்தையின் 25 வயது வரை தொடர்ந்து செயலில் இருக்கும்.
 • பாலிசி துவங்கும் தேதியிலிருந்து 2 வருடங்கள் அல்லது குழந்தைக்கு 8 வயது ஆகும் போது இதில் எது முன்னர் வருகிறதோ அந்த தேதி முதல், அபாய நேர்விற்கான பாதுகாப்பை குழந்தையால் பெற முடியும்.
 • உங்கள் குழந்தைக்கு 20 வயது ஆகும் வரை இத்திட்டத்தின் கீழ் பிரீமியமானது செலுத்த வேண்டும். அதற்குப் பின்னர் செலுத்த வேண்டாம், ஆனால் உங்கள் திட்டமானது அதே போல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயலில் இருக்கும்.
 • எஞ்சியிருக்கும் காப்பீட்டுத் தொகையுடன் போனஸ் சேர்த்து முதிர்ச்சி சலுகையுடன் உங்கள் குழந்தைக்கு வழங்கப்படும்.

எல்.ஐ.சி  ஜீவன் தருண் சலுகைகள்

இறப்பு சலுகைகள் (அபாய நேர்வுக்கான பாதுகாப்பு தொடங்குவதற்கு  முன்பு)

பாலிசி கால வரையின் போதே காப்பீட்டாளரின் இறப்பு நேரிடும் பட்சத்தில் வரிகள், கூடுதல் பிரீமியம், மற்றும் பயன் பெறுவோர் பிரீமியம், ஏதாவது இருந்தால் ஆகியவற்றை தவிர்த்து செலுத்தப்பட்ட பிரீமியத்திற்கு  வட்டி இல்லாமல் திரும்ப வழங்கப்படும். 

பாலிசி காலத்தின் போது மரணம் (அபாய நேர்வுக்கான பாதுகாப்பு தொடங்குவதற்கு பிறகு) 

பாலிசி காலத்தின் போது இறப்பு ஏற்பட்டால் அவர்கள் செலுத்திய அனைத்து பிரீமியங்களும் இறப்பு சலுகைகளாக வழங்கப்படும். இத்தொகை “இறப்பின் மீதான காப்பீட்டுத் தொகை” என வரையறுக்கப்படுகிறது. மேலும் நிலையான எளிய மறுமதிப்பீட்டு போனஸ் மற்றும் கூடுதலான இறுதி போனஸ், ஏதாவது இருந்தால் அவையும் வழங்கப்படும். அதே நேரத்தில், இறப்பின் மீது வரையறை செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகை வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கிற்கு அதிகமாக அல்லது இறப்பின் போது இறப்பின் மீது உறுதி செய்யபட்ட முழுமையான தொகை ஆனது வழங்கப்படும் அதாவது காப்பீட்டுத் தொகையின் 125% ஆகும். 

இத்திட்டத்தில், இறப்பு வரை செலுத்தபட்ட மொத்த பிரீமியத்தில் இறப்பு சலுகையானது 105% குறைவாக இருக்காது. பிரீமியங்களானது, கூடுதலான பிரீமியம் மற்றும் பயன்பெறுவோர் பிரீமியம் ஏதாவது இருந்தால் அவற்றிற்கு வரிகள் கிடையாது. 

வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சலுகைகள் 

முதிர்ச்சி வரை காப்பீடு செய்யப்பட்ட நபர் வாழ்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த சலுகைகளானது கிடைக்கும். அதே நேரத்தில், 20 ஆண்டு நிறைவிலோ அல்லது நிறைவின் நெருக்கத்திலோ அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பாலிசியின் நிலையான ஒரே மாதிரியான உறுதி செய்யப்பட்டத் தொகை ஆனது ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது.

நாம் பாலிசிக்கு விண்ணப்பிக்கும் போது இருக்கும் பல்வேறு தேர்வுகளில் இருந்து நாம் தேர்ந்தெடுத்த விருப்பத்தை சார்ந்து இந்த நிலையான சதவிகிதம் ஆனது இருக்கும். இந்த சதவீதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

பாலிசியின் ஆண்டு நிறைவு  / நிறைவு நெருக்கத்தில்

காப்பீட்டுத் தொகையின் சதவீதம் உயிர் வாழ்தல் சலுகைகளாக வழங்கப்படுகிறது

விருப்பம் 1

விருப்பம் 2

விருப்பம் 3

விருப்பம் 4

20 முதல் 24 ஆண்டுகள்

இல்லை

ஒவ்வொரு ஆண்டும்5%  

ஒவ்வொரு ஆண்டும்10%

ஒவ்வொரு ஆண்டும் 15%

 பாலிசியை விண்ணப்பிக்கும் போதே மேலே குறிப்பிட்டுள்ள விவரங்களில் ஏதாவது ஒன்றை காப்பீடு செய்யப்பட்ட நபர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 முதிர்ச்சி சலுகைகள் 

நிர்ணயிக்கப்பட்ட முதிர்வு தேதி வரை காப்பீடு செய்யப்பட்ட நபர் உயிருடன் இருக்கும் பட்சத்தில் நடைமுறையில் இருக்கும் பாலிசிகளுக்கு காப்பீட்டு தொகையின் ஒரு நிலையான சதவீதத்தை முதிர்ச்சியின் போது வழங்குகிறது. நிலையான சதவீதம் பல்வேறு விருப்பங்களின் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:

முதிர்ச்சி வயது

விருப்பம் 1

விருப்பம் 2

விருப்பம் 3

விருப்பம் 4

25 ஆண்டுகள்

100%

75%

50%

25%

மேலும்,  நிலையான எளிய மறுமதிப்பீட்டு போனஸ் மற்றும் கூடுதலான  இறுதி போனஸ், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால், அதுவும் சேர்த்து வழங்கப்படும். 

லாபத்தில் பங்கேற்பு

நிறுவனத்தின் லாபத்தில் இந்த பாலிசியானது பங்கேற்கிறது. மேலும்  நிறுவனத்தின் அனுபவத்தின் அடிப்படையில் எளிய மறுமதிப்பீட்டு போனஸ் என்ற தலைப்பின் கீழ் போனசை அறிவிக்கிறது. இதற்கு பாலிசி ஆனது  நடைமுறையில் இருக்க வேண்டும். 

எல்.ஐ.சி  ஜீவன் தருண் தகுதி வரம்பு

நுழைவு வயது

90 நாட்கள் முதல் 12 ஆண்டுகள் வரை

பிரீமியம் செலுத்தும் முறை  

வருடாந்திரம், அரையாண்டு, காலாண்டு, மாதாந்திரம் (ஈசிஎஸ் மட்டுமே)

பாலிசி காலம்

நுழைவு வயது – 25 (ஒருவேளை 5 வயது குழந்தையாக இருந்தால் 20 ஆண்டுகள்)

பிரீமியம் செலுத்தும் காலம்   

நுழைவு வயது – 20 (ஒருவேளை 5 வயது குழந்தையாக இருந்தால் 15 ஆண்டுகள்)

காப்பீட்டுத் தொகை

75000 மற்றும் அதற்கு மேல் (10000 இன் மடங்குகளில்)

பிரீமியத்திற்கான தள்ளுபடி முறை   

வருடத்திற்கு 2%, அரை வருடத்திற்கு 1% காலாண்டு & மாதாந்திரத்திற்கு இல்லை

அதிகமான காப்பீட்டு தொகைக்கான தள்ளுபடி (எஸ்ஏ யின் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும்)

 • 75,000 முதல் 1,90,000 வரையிலும் ரூபாய் 0
 • 2,00,000 முதல் 4,90,000 வரையிலும் ரூபாய் 2
 • எஸ் எ ஆனது 5,00,000 மற்றும் அதற்கு மேல் ரூபாய் 3  

கடன் தொகை

10 ஆண்டு காலவரைக்கு குறைவாக இருக்கும் திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகும் & 10 ஆண்டு காலவரைக்கு அதிகமாக இருக்கும் திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகும்  

ஒப்படைவு

10 ஆண்டு காலவரைக்கு குறைவாக இருக்கும் திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகும் & 10 ஆண்டு காலவரைக்கு அதிகமாக இருக்கும் திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகும்  

புதுப்பித்தல்

கெடு தீர்வின் 2 ஆண்டுகளுக்குள்

எல்.ஐ.சி. ஜீவன் தருண் பாலிசி எப்படி வேலை செய்கிறது

காப்பீடு செய்யப்பட்ட நபர் பின்வரும் விதிமுறைகளை எல்.ஐ.சி. ஜீவன் தருண் திட்டத்தில் முதலீடு செய்யும் போது, ஒப்புக்கொள்கிறார்

 1. காப்பீட்டுத் தொகை – அடிப்படையில் இந்த தொகையை நீங்கள் பாலிசி காலத்தின் இறுதியில் பெற முடியும். குறைந்தபட்சமாக ரூபாய். 75,000 த்தை நீங்கள் தேர்வு செய்யலாம். அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை.
 2. பாலிசி காலம் – பாதுகாப்பிற்கான கால வரையறை ஆனது உங்கள் விருப்பத்திற்கேற்ப இருக்கும். இந்த கால வரையானது குழந்தை 25 வயதை அடையும் போது முடிவுக்கு வரும்.
 3. பிரீமியம் செலுத்தும் காலம் – நீங்கள் பிரீமியத்தை குழந்தை 20 வயதை அடையும் வரை செலுத்த வேண்டும்.

சலுகைகள் எவ்வாறு பெற வேண்டும் என்பதை முடிவு செய்ய நீங்கள் பின்வரும் விருப்பங்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்:

விருப்பம்

பணம் திரும்புதல் விருப்பம்

முதிர்ச்சி சலுகைகள்

விருப்பம் 1

பாலிசி காலத்தின் போது பணம் திரும்புதல் கிடையாது

காப்பீட்டுத்  தொகையின் 100%  

விருப்பம் 2

காப்பீட்டுத் தொகையின் 5% தொகையானது குழந்தை 20, 21, 22, 23 & 24 வயதை அடைந்த பிறகு 5 வருடங்களுக்கு வழங்கப்படும்  

காப்பீட்டுத்  தொகையின் 100%

விருப்பம் 3

காப்பீட்டுத் தொகையின் 10% தொகையானது குழந்தை 20, 21, 22, 23 & 24 வயதை அடைந்த பிறகு 5 வருடங்களுக்கு வழங்கப்படும்  

காப்பீட்டுத்  தொகையின் 50%

விருப்பம் 4

காப்பீட்டுத் தொகையின் 15% தொகையானது குழந்தை 20, 21, 22, 23 & 24 வயதை அடைந்த பிறகு 5 வருடங்களுக்கு வழங்கப்படும்  

காப்பீட்டுத் தொகையின்

25%  

ஆண்டுத் தொகை ஆனது பாதுகாப்பின் அளவு, உங்கள் குழந்தைகளின் வயது மற்றும் நீங்கள் பெற விரும்பும் சலுகைகளின் முறைகள் ஆகியவற்றை சார்ந்து இருக்கும். காப்பீட்டு நிறுவனமானது, இது போன்ற சிறப்பியல்புகளுடன் உங்கள் பிரீமியத்தைத் முடிவு செய்கிறது. இது ஒரு பங்கேற்கும் திட்டமாக இருப்பதால், எளிய மறுமதிப்பீட்டு போனஸ் மற்றும் கூடுதலான இறுதி போனஸ்களை எல்ஐசி அறிவிக்கும் போது நீங்கள் பெற முடியும்.

எல்.ஐ.சி ஜீவன் தருண் ரைடர்ஸ்

பாலிசிதாரர் விருப்பத்திற்கு ஏற்ப தற்செயலான மரணம் மற்றும் உடல் ஊனமுற்றோர் சலுகை பயன் பெறுபவர் ஆனது சேர்க்கப்படும். பாலிசிதாரர் வழக்கமான பிரீமியத்துடன் கூடுதல் தொகையை இதற்காக செலுத்த வேண்டும்.

தயாரிப்பு விவரக்குறிப்பு

இறப்பு சலுகைகள்

இந்த சலுகைகளானது, பாலிசிதாரரின் இறப்பிற்கு  வழங்கப்படுகிறது

 1. அபாய நேர்வுக்கான பாதுகாப்பு தொடங்கும் தேதிக்கு முன்பு - இந்நிலையில்,  எந்த வட்டியும் இல்லாமல் ஒற்றை பிரீமியத் தொகை ஆனது  நியமனதாரருக்கு திரும்ப வழங்கப்படும். ஏதாவது கூடுதல் தொகையையோ அல்லது வரியையோ இந்த இறுதி பிரீமியத் தொகையில்  உள்ளடக்கியிருக்காது. 
 2. அபாய நேர்வுக்கான பாதுகாப்பு தொடங்கும் தேதிக்கு பிறகு - இந்நிலையில், இறப்பின் மீதான காப்பீட்டுத் தொகைக்கான ஒற்றை பிரீமியமானது அட்டவணை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இது பிரீமியத்தின் 10 மடங்கு ஆகும். தீர்மானிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள்  செலுத்தும் பிரீமியங்களுக்கு ஏதாவது கூடுதல் வரிகளையும் கொண்டிருக்காது.

  தீர்மானிக்கப்பட்ட காலத்திற்குள் அனைத்து  வழக்கமான பிரீமியங்களும் எந்த வித நிலுவைத் தொகையும் இல்லாமல் தொடர்ந்து செலுத்தப்பட்டால், பின்வரும்   தொகையை சேர்ப்பதன் மூலமாக இறப்பு சலுகைகள் ஆனது  கணக்கிடப்படுகிறது:

 இறப்பு சலுகைகள் = இறப்பிற்கான காப்பீட்டுத் தொகை + நிலையான எளிய மறுமதிப்பீட்டு போனஸ் + இறுதி

கூடுதலான போனஸ்

மேலே கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கைக்கான அபாய நேர்வு விகிதத்துடன் இறப்பிற்கான காப்பீட்டுத் தொகை ஆனது ஒப்பிடப்படுகிறது.

பாலிசி காலம் 10 ஆண்டுகளுக்கு அதிகமாக இருந்தால் பாலிசி கால வரையறை வரை செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களுக்கும் இறுதி இறப்பு சலுகைகளானது 105% க்கும் குறைவாக இருக்காது. தீர்மானிக்கப்படும் கால வரையின் போது செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு எந்த கூடுதலான வரியையும் கொண்டிருக்காது. கூடுதல் தொகையானது பயன்பெறுவோர் பிரீமியத்திற்கு பொருந்தினால் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.   

முதிர்ச்சி சலுகைகள்

தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு பாலிசி கால வரை முடிந்தவுடன் முதிர்ச்சி சலுகைகள் ஆனது வழங்கப்படுகிறது. இங்கே முழு கால வரையறைக்கும் அனைத்து பிரீமியங்களும் செலுத்த வேண்டியது என்பது அவசியமானது. பின்வருமாறு முதிர்வு சலுகைகள் கணக்கிடப்படுகிறது:

முதிர்வு சலுகைகள் = முதிர்விற்கான காப்பீட்டுத் தொகை + நிலையான  எளிய மறுமதிப்பீட்டு போனஸ் + கூடுதலான இறுதி போனஸ். மணி பேக் தொகையை கணக்கிட்ட பிறகு கழிக்கப்பட்ட தொகையே முதிர்ச்சிக்கான காப்பீட்டு தொகையாக இருக்கும். இந்த மொத்த தொகையானது பாலிசியின் முதிர்ச்சியில் வழங்கப்படுகிறது. 

எல்.ஐ.சி ஜீவன் தருண் - கூடுதல் சலுகைகள்

வரி சலுகைகள் : எல்.ஐ.சி. ஜீவன் தருண் பாலிசியானது, மற்ற பாலிசி திட்டங்களைப் போலவே  வரிகளில் சலுகைகளை வழங்குகிறது. பிரீமியத்திற்கு வரி விலக்கானது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி யின் கீழ் வழங்கப்படுகிறது. பாலிசி  காலத்தின் இறுதியில் முதிர்வுத் தொகை வரி இல்லாமல் வழங்கப்படுகிறது. அதனால் எந்த வரியையும் இந்த தொகைக்கு நீங்கள் செலுத்த தேவையில்லை. இது பிரிவு 10 டி யின் கீழ் தீர்மானிக்கப்படும் முதிர்ச்சி தொகையானது உறுதியாக இறுதியில் வழங்கப்படும்.

கடன்தொகை வசதி : ஜீவன் தருன் பாலிசியின் மீது தேவைக்காக கடன் தொகை பெற முடியும். ஆனால் பாலிசியானது இதற்காக சோதனை காலத்தை விட அதிகமாகவும்  அல்லது 3 மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும். கடன் தொகையானது  பாலிசி தொடங்கும் போது இருக்கும், பாலிசிதாரரின் வயதின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

பாலிசி ஒப்படைவு : விருப்பத்திற்கேற்ப பாலிசியை ஒப்படைவதற்கான வசதிகள் உள்ளது. பாலிசி தொடங்கியதிலிருந்து ஒரு ஆண்டிற்குள் பாலிசியானது ஒப்படைக்கப்பட்டால்,  பாலிசிதாரர் செலுத்திய ஒற்றை பிரீமியத்தில் 70% வரை வழங்கப்படும். பாலிசியை ஒரு வருட நிறைவிற்குப் பிறகு ஒப்படைத்தால், அவரால் செலுத்தப்பட்ட ஒற்றை பிரீமியத்தில் 90% வரை திரும்ப வழங்கப்படும். ஆன்லைனில் பல கணக்கீடுகள் பாலிசி ஒப்படைவு மதிப்பை கணக்கிடுவதற்காக உள்ளன.

பாலிசிதாரர் ஐந்து ஆண்டு முடிந்த பிறகு பாலிசியை ஒப்படைத்தால், பிரீமிய வருமானத்துடன் கூடுதலான போனஸ் பெறுவதற்கு தகுதி உண்டு. ஆன்லைனில் பல கணக்கீடுகளை பயன்படுத்திப் பாலிசியின் ஒப்படைவு மதிப்புகளை கணக்கிட முடியும். இந்த பாலிசியானது குழந்தையின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியின் மூலமாக எடுக்க முடியும். உங்கள் குழந்தையின் படிப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் அல்லது அவர்களின் திருமணத்திற்கு உதவி செய்வதற்காக கூட இந்த திட்டத்தை எடுத்து  கொள்ளலாம்.