எல்ஐசி கோமல் ஜீவன்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பெயர்
கவர்
பிறந்த தேதி (மூத்த உறுப்பினர்)

1

2

கைபேசி எண்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

இந்த எல்.ஐ.சி கொள்கை வாங்குவதற்கு கிடைக்கவில்லை. இது நிறுவனத்தால் விற்பனைக்கு மூடப்பட்டுள்ளது.

தனிநபர்கள்  தேவைகளுக்கு மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பல்வேறு விதமான காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்துவதில், எல்.ஐ.சி-க்கு நிகர் இல்லை. எல்.ஐ.சியின் கோமல் ஜீவன் திட்டம் 0 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்காக, மிகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில், புதிதாக ஒரு குழந்தையின் வரவு அக்குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பெற்றோர்கள் ஒரு புறம் உற்சாகமாக இருந்தாலும்,  மற்றொருபுறம் மகிழ்ச்சியுடன் சேர்ந்து சிறிய அளவில் கலவையான ஒரு கவலை உணர்வு உண்டாகும். குழந்தையின் கல்வி, உடல்நலம், ஆரோக்கியம், மேலும் திருமணம் போன்ற பொறுப்புகளில் லேசாய் தடுமாற்றம் வரலாம். வருங்காலம் மற்றும் பலவருடங்களுக்கு பிறகு நடக்க போகிறது என்றாலும், உங்கள் குழந்தையின் எதிர்கால படிப்பு மற்றும்   மற்றும் திருமணத்திற்காக நீங்கள் சேமிக்கத் தொடங்கும் போது, உங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து, நிச்சயமற்ற தன்மையில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

எல்.ஐ.சி கோமல் ஜீவன் திட்டம் முதிர்வு பெறும்போது அல்லது உங்கள் குழந்தை 18 வயது அடையும் போது,  காப்பீட்டுத் தொகையுடன் சேர்த்து வருவாய் ஈட்டித் தரும்.

காப்பீட்டுத் திட்டத்தின் அம்சங்கள்

குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச நுழைவு வயது 0 முதல் 10 ஆண்டுகள், முறையே
காப்பீட்டுத் தொகை 1 லட்சம் முதல் 25 லட்சம் வரை (1000 ரூபாய்களால் பெருக்கிக் கொண்டு காப்பீட்டுத் தொகை கட்டலாம்)
ப்ரீமியம் செலுத்தும் வகைகள் சம்பளத்தில் இருந்து நேரடியாக பிடித்தம் / காலாண்டு ப்ரீமியம் கட்டணம் / அரையாண்டு ப்ரீமியம் கட்டணம் / வருடாந்திர ப்ரீமியம் கட்டணம்
ஆபத்து துவங்கும் காலம் காப்பீடு பெற்ற தேதி முதல் இரண்டு வருடங்கள் வரை அல்லது குழந்தைக்கு ஏழு வயது ஆகும் வரை   
காப்பீடு காலம் 26 ஆண்டுகள் (அதிகபட்சம்)
பிரீமியம் செலுத்தும் காலம் உ காப்பீடு எடுக்கப்பட்டவர் 18 வயது ஆகும் வரை அல்லது இறப்பு, எது முதலில் வருகிறதோ அது.  
மருத்துவ பரிசோதனை  அவசியம் இல்லை

காப்பீட்டு தொகையின் கூடுதல் அம்சங்கள்

உத்தரவாதமான கூடுதல் அம்சங்கள்: ஒவ்வொரு ஆண்டு முடியும் போதும், காப்பீட்டிற்கு உறுதி செய்யப்பட்ட தொகையை விட குறிப்பிட்ட தொகை கூடுதலாக வழங்கப்படும். 1000 ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு கூடுதலாக 75 ரூபாய் வழங்கப்படும். சேர்ந்த தொகை முதிர்வு தேதி அல்லது உத்தரவாதியின் இறப்புக்கு பின் கொடுக்கப்படும்.

லாயல்டி அம்சங்கள்: எல்.ஐ.சி கோமல் ஜீவன் திட்டம், நிறுவனத்தின் ஆயுள் காப்பீடு வியாபாரத்தில் ஈடுபட்டு, உங்களுக்கு கணிசமான இலாபத்தை அளிக்கிறது. இந்த போனஸ் தொகைகள், காப்பீடு காலம் வரையிலோ அல்லது இறப்பின் பொழுது கொடுக்கப்படும்.

இதன் நன்மைகள் என்ன?

சர்வைவல் நன்மைகள்

பாலிசி சர்வைவல் ஆனால், காப்பீட்டுத் தொகையில் ஒரு குறிப்பிட்டத் சதவிகிதத்தை எல்.ஐ.சி கொடுக்கும். உறுதி செய்யப்பட்ட சதவிகிதம் காப்பீடு எடுக்கப்பட்ட வயது பொறுத்து அமையும்.

காப்பீடு ஆனிவர்சரி பாலிசிதாரரின் வயது காப்பீட்டுத் தொகையின் சதவிகிதம்
18 ஆண்டுகள் 20%
20 ஆண்டுகள் 20%
22 ஆண்டுகள் 30%
24 ஆண்டுகள் 30%

இறப்பு தொடர்பான நன்மைகள்

சந்தர்ப்ப சூழ்நிலைகளால், ரிஸ்க் காலம் தொடங்கவதற்கு முன்பே இறந்து போனால், செலுத்தப்பட்ட பிரீமியம் தொகை திரும்பப் அளிக்கப்படும். மற்றும் காப்பீடு ரத்து செய்யப்படும். ரிஸ்க் காலம் துவங்கிய பின் இறப்பு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை முழுவதும் உத்தரவாதமாகவும் மற்றும் கூடுதல் லாயல்டி தொகை ஏதாவது இருந்தாலும் தரப்படும்.

முதிர்வு பயன்கள்

பாலிசியின் முதிர்வின் போது, உறுதியளிக்கப்பட்ட தொகை மற்றும் லாயல்டி தொகை சேர்த்து வழங்கப்படும்.

பிரீமியம் குறித்த விளக்கம்

லக்ஷை தன்னுடைய ஆறு மாத குழந்தைக்காக LIC கோமல் ஜீவன் காப்பீடு திட்டத்தை வாங்கினார். இதில் அவர் ஒற்றை ப்ரீமியம் முறைப்படி, லம்ப்-சம் ப்ரீமியம் தொகையை, 26 ஆண்டு கால காப்பீடுக்கு செலுத்தினார். ஒரு லட்ச ரூபாய் இன்ஷூர்ட் தொகைக்கு ப்ரீமியம் தொகை – ரூ. 73980/- ( ஒரே தவணையில் கட்டுவது).

காப்பீடு முதிர்ச்சி அடைந்த பிறகு, அவருடைய குழந்தைக்கு உத்தரவாதமான பயன்கள் என்னனென்ன கிடைக்கப்பெறும் என்பதைப் பார்க்கலாம். 

ஒவ்வொரு வருடம் பூர்த்தி ஆகும்போதும், காப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு 7.5% என்ற கணக்கில், 1,00,000 ரூபாய்க்கு 7500 ரூபாய், லக்ஷைக்கு கூடுதலாக கிடைக்கும். ஒரு வருடத்திற்கு பின் காப்பீட்டு தொகை 1,07,500 ரூபாயாக உயரும். இது காப்பீடு காலம் முடியும் வரை நீடிக்கும். 10 ஆண்டுகள் கழித்து, காப்பீட்டுத் தொகை 1,75,000 ரூபாய் ஆக ஆகும். (உத்தரவாதமான பயன்களுக்கு பிறகு) காப்பீட்டின் வயது 18 வருடங்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலமகா இருந்தால் காப்பீட்டில் சர்வைவல் பெனிஃபிட் வழங்கப்படும். காப்பீடு முதிர்வு காலத்தில்,  நிலையில், லக்ஷைக்கு,

 • குழந்தைக்கு 18 அல்லது 20 வயது ஆகும் போது ரூ. 1,00,000-இல் 20% என ரூ.20000.
 • குழந்தைக்கு 22 அல்லது 24 வயது ஆகும் போது ரூ. 1,00,000-இல் 30% என ரூ.30000.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

 1. இந்தத் காப்பீட்டுத் திட்டத்தில் வரி சலுகைகள் உள்ளதா?

ஆமாம்! இந்த பாலிசியின் கீழ் ஒரு பிரீமியம் செலுத்துபவர் யாராக இருந்தாலும், வருவமான வரிச் சட்டம் 80D பிரிவின் கீழ் வரி விலக்கு பெறுவார் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 10D (D) பிரிவின் கீழ் முதிர்வு நன்மைகளைப் பெறுவார்.

 1. காப்பீட்டை சரண்டர் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன?
 • அசல் எல்.ஐ.சி காப்பீடு பத்திரங்கள்
 • LIC-யில் கிடைக்கும் NEFT படிவம்.  
 • அசல் மற்றும் நகல் எடுத்த அடையாள அட்டை.
 • காப்பீடு வாங்கியவரின் பெயரில் உள்ள, ரத்து செய்யப்பட்ட ஒரு காசோலை.
 1. சரண்டர் க்ளைமில் என்னென்ன வழிமுறைகள் உள்ளன?
 • வீட்டுக்கு அருகில் இருக்கும் எல்.ஐ.சியின் கிளை அலுவலகத்தில் சரண்டர் செய்யலாம்.
 • சரண்டர் படிவத்தை வாங்கவும்
 • படிவத்தை நிரப்பி அதில் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் சேர்த்து சமர்ப்பிக்கவும்.
 • எல்.ஐ..சி உங்கள் படிவத்தை ஆராய்ந்து கோரிக்கையை மதிப்பாய்வு செய்து, 5 முதல் 20 வேலை நாட்களுக்குள் கிளைம் ப்ராசஸ் செய்யப்படும்.
 1. ஃபோன் பேங்கிங் அல்லது ஆன்லைன் பேங்கிங் மூலமாக –ஆன்லைனில் ப்ரீமியம் கட்டணத்தை செலுத்த முடியுமா?

இந்த குழந்தை காப்பீட்டு திட்டம், ஃபோன் மற்றும் ஆன்லைன் பேங்கிங் மூலம் பணம் செலுத்த உங்களை அனுமதிக்கிறது. இந்த வசதி பாலிசிதாரர்களின் நேரம், மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது.

 1. எந்த நிறுவனங்கள் தொலைபேசி அல்லது வங்கி மூலம் ப்ரீமியம்களை செலுத்த எல்.ஐ.சியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?
 • அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள்: ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, யுடிஐ வங்கி, பஞ்சாப் வங்கி, ஃபெடரல் வங்கி, சிட்டி பேங்க் மற்றும் கார்ப்பரேஷன் வங்கி
 • அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் ப்ரொவைடர்(குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே): Timesofmoney.com (மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர்;) BillsJunction.com (மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே) மற்றும் BillDesk.com ( கொல்கத்தா, சென்னை, பெங்களூர், அகமதாபாத், பரோடா, சூரத் & புனே)
 1. காப்பீடு முதிர்வின் பயன்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?

காப்பீடு முதிர்ச்சியுறும் பயன்கள் மூன்று காரணிகளைக் கொண்டு கணக்கிடப்படும். அதாவது காப்பீட்டு தொகை, கூடுதல் போனஸ் மற்றும் இறுதியான கூடுதல் போனஸ். கூடுதல் போனஸ் என்பது ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் போனஸ் கொடுக்கப்படுவது ஆகும். இது காப்பீடு முதிர்ச்சியின் போது ஒன்றாக சேர்க்கப்பட்டு மொத்தமாக வழங்கப்படும். ஃபைனல் கூடுதல் போனஸ் என்பது பாலிசி காலத்தில் ஒரே ஒரு முறை தரப்படும் கூடுதல் தொகையாக இருக்கும். காப்பீடு முதிர்வு பயன்கள் மேற்குறிய இந்த 3 காரணிகளின் கூட்டு ஆகும். .