எல் ஐ சி ஆன்லைன் உள்நுழைவதற்கான
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

கைபேசி எண்
பெயர்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

ஆயுள் காப்பீட்டு கழகம் – இந்தியாவில் உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் பழமையான மற்றும் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவின் ஒற்றை அரசாங்க ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இது உள்ளது. இது உதவியாகவுள்ள காப்பீட்டுப் பொருட்களைப் பரவலாக  வழங்குகிறது, இப்பொருட்கள் ஆனது வாடிக்கையாளரின் வெவ்வேறான தேவைகளுக்கு எளிதாக கொண்டு செல்லும் வகையில் உள்ளது. சரியான ஒன்றை உங்களின் விருப்பத்திற்கேற்றவாறு கிடைக்கின்ற அனைத்து விருப்பங்களுக்கிடையே  தேர்ந்தெடுக்க வேண்டும்.

பொருட்களின் பரவல்களிலும், சந்தையிலும் மிகுந்த நன்மதிப்பை பெற்றுள்ளது, எல்ஐசியானது பல நுகர்வோர்களை ஏற்கனவே இதன் பக்கம் ஈர்த்துள்ளது. ஆயுள் காப்பீடு என்று வருகின்ற போது நுகர்வோருக்கு இன்றளவும் இதுவே முதல் தேர்வாக உள்ளது. இந்நிறுவனத்தின் நோக்கம் என்பது, பரவலாக ஆயுள் காப்பீட்டைப் பரவ செய்வதாகும், அதிலும் குறிப்பாக நாட்டுப்புற பகுதிகளிலும் மற்றும் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின் தங்கியுள்ள வகுப்பினர்களிடமும் பரவச் செய்வதோடு, நாட்டில் காப்பீடு செய்யக் கூடிய ‌அனைத்து நபர்களையும் சென்றடையும் வீதம் இறப்பிற்கு எதிராக போதுமான நிதி பாதுகாப்பை ஏற்புடைய செலவில் அவர்களுக்கு அளிப்பது போன்றவையே இதன் நோக்கமாகும்.

நிறுவனமானது மும்பையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் 113 பகுதி அலுவலகங்கள் ஆகியவற்றுடன் சேர்த்துக் கிட்டத்தட்ட 2048 கிளைகளை பெற்றுள்ளது. தினந்தோறும் பல நுகர்வோர்களை ஆன்லைன் மூலம் கவர்கிறது மற்றும் ஏற்கனவே இருக்கும் நுகர்வோர்கள் புதியவற்றை வாங்குவது,  ஏற்கனவே உள்ள பாலிசிக்கு செலுத்த வேண்டிய தொகை, நிறுவனம் மற்றும் அதனுடைய பாலிசிகள் பற்றிய எந்தவொரு கேள்விகள் ஆகியவை எளிதாக அளிக்கப்படுகிறது

அதுபோல, எல்ஐசி அலுவலகங்களுக்கு முன் இன்னும் எல்ஐசியினுடைய பல நுகர்வோர்கள் நீண்ட வரிசையில் நிற்பதோ அல்லது அவர்களுடைய பாலிசி, அதனின் நிலைமை, பிரீமியம் சம்பந்தமான வினாக்கள் மற்றும் பல  தொடர்பான தகவல்கள் சிலவற்றைப் பெறுவதற்காக நுகர்வோர்களின் ஊழியர்களைத் தொலைத் தொடர்பு எண்ணின் வழியாகத் தொடர்பு கொள்ள முயற்சி செய்வதோ அதிர்ச்சி தரக் கூடிய ஒரு விஷயமாக உள்ளது. ஆனால் நீண்ட வரிசையில் ஏன் உங்களுடைய நேரத்தைச் செலவழிக்க வேண்டும்,  அவர்களை ஏன் திரும்ப திரும்ப அழைக்கிறீர்கள், எப்பொழுது வேண்டுமானாலும் உங்களுக்குத் தேவையான தகவல்களை எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் உள்நுழைவதன் மூலம் எளிதாகப் பெற முடியும்.

ஆன்லைன் சேவையை ஏன் உபயோகப்படுத்த வேண்டும்?

எல்ஐசியின் ஆன்லைன் வலைவாசல் என்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தினால் தொடங்கப்பட்ட உபயோகமுள்ள முயற்சியாகும். இவை  உங்களுடைய வேண்டுகோளுக்கான சேவையை சில க்ளிக்குகளிலேயே அளிக்கிறது. நீங்கள் கிளை அலுவலகத்தை பார்வையிடுவதற்கு பெறக் கூடிய தகவல்களை இப்போது இது போன்ற ஆன்லைன் சேவைகளை மூலமாகப் பெற முடியும். இந்த சேவைகளின் மூலம்  உங்களுடைய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கிளை அலுவலகத்தைப் பார்வையிடவோ அல்லது நீண்ட வரிசைகளில் நிற்கவோ வேண்டியதில்லை.

தேவையான சேவைகள் அனைத்தையும் உங்கள் வீட்டிலிருந்தே வசதியாகப் பெறுவதற்கு ஆன்லைன் வலைவாசலானது அனுமதிக்கிறது. இத்தகைய நல்ல சேவைகளைக் கையில் வைத்துக் கொண்டு நீண்ட வரிசையில் நின்று ஏன் நேரத்தை செலவழிக்க வேண்டும். இது அதிக அளவில் உங்களின் பணம் மற்றும் நேரம் போனவற்றைச் சேமிப்பதற்கு உதவுகிறது.

மேலும், நீங்கள் நிறுவனம் மற்றும் கொள்கைகள் தொடர்பான கூடுதலான பல சலுகைகளையும், மேம்பாடுகளையும் பெறலாம். ஆனால் இதற்கு, முதலில் எல்ஐசியின் ஆன்லைன் வலைவாசலில் நீங்கள் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் வலைவாசலில் பதிவு செய்வது நீங்கள் ஆன்லைன் சேவைகளை அணுகுவதற்கு அவசியமானதாகும். ஆன்லைன் வலைவாசலை எல்ஐசியிலிருந்து பெறும் நுகர்வோர்கள் பின்வருகின்ற ஆன்லைன் வசதிகளைப் பெற முடியும்:

 • கோரிக்கை நிலைமை
 • திட்ட அறிக்கை மற்றும் பாலிசியின் படிமங்கள்  
 • ஆன்லைனில் தொகை செலுத்துதல்  
 • சலுகைகளின் விளக்கங்கள்
 • நிர்ணயம் மற்றும் நியமன தாரர் நிலைமை
 • முறையீட்டின் பதிவு
 • பாலிசியின் நிலைமை
 • கடன் நிலைமை
 • புதுப்பிப்பதற்கான மேற்கோள்கள்
 • பாலிசியின் நிபந்தனைகள் மற்றும் இதர சிறப்பம்சங்கள்

எல்ஐசியின் ஆன்லைன் வலைவாசலை யாரால் பதிவு செய்ய முடியும்?

இந்தியாவில் ஏற்கனவே உள்ள அனைத்து எல்ஐசி பாலிசிதாரர்களும் எல்ஐசி வலைவாசலின் கீழ் அவர்களாகவே எளிதாகப் பதிவு செய்ய முடியும் மற்றும் நீங்கள் எந்த தொகையையும் இதைப் பயன்படுத்துவதற்காகச் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும், காப்பீட்டாளர் அவருடைய வாழ்க்கைத் துணையின் பெயரையும் இணைத்துப் பதிவு செய்வதை எல்ஐசி அனுமதிக்காது. உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கென்று தனியான ஒன்றை நீங்கள் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் இந்த பதிவினை நிறுவனத்தின் வலைத்தளமான licindia(dot)in என்பதில் பதிவேற்ற வேண்டும்

அதுபோல, பதிவு செய்யும் அனுமதியானது தனிநபர்களின் சொந்த பெயரில் அல்லது அவர்களுடைய சிறிய குழந்தைகளின் பெயரில் வாங்கப்பட்ட பாலிசிகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன், தனிப்பட்ட பயனர் அடையாளங்களானது அவர்களுடைய பெயரிலே வாங்கப்பட்ட பாலிசிகளுக்கான இ-சேவைகளைத் தொடர்ச்சியாக பெறுவதற்கு விரும்பினால் மட்டுமே உருவாக்கப்படும்.

திருமண தம்பதிகளான இருவரும் ஒரே கணக்கில் பதிவு செய்ய அனுமதியில்லை. எனவே தனித் தனியாக அவர்களுடைய பாலிசிகளை பதிவு செய்ய வேண்டும். எல்ஐசி வலைவாசலில் பதிவு செய்த எந்தவொரு நபரும், அவருடைய / அவளுடைய தனிப்பட்ட அதே பயனர் ஐடியையும், கடவுச் சொல்லையும் பயன்படுத்தி உள்நுழைய முடியும்.

எல்ஐசியின் பதிவு புதிய பயனர் உள் நுழையும் முறை

ஆன்லைனில் உங்களுடைய பாலிசியின் நிலைமையைச் சரிபார்ப்பதற்காக      ஒரு புதிய பயனராகப் பதிவு செய்யும் செயல் முறையும், உள்நுழையும் செயல் முறையும் ஒவ்வொரு படிநிலையாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படிநிலை 1: வலைத் தளத்தை (www[dot]licindia[dot]in) முதலில் உள்நுழைவு செய்து மற்றும் ‘ஆன்லைன் சேவைகள்’ என்பதற்குக் கீழ் இருக்கும் ‘கஸ்டமர் போர்டல்’ என்ற தாவலைத் தேர்வு செய்யவும்.  

lic-login

படிநிலை 2: எல்ஐசி யினுடைய தனிப்பட்ட பக்கமான இ-சேவைகள்’ என்ற பக்கத்தில் ‘நியூ யூசர்’ என்ற பட்டனை கிளிக் செய்யவும்

lic-login-box

படிநிலை 3: இந்த படிநிலையை அடைகின்ற போது, உங்களுடைய தகவல்களான பிரீமியத்தின் தொகை, பாலிசி நம்பர், பிறந்த தேதி போன்றவற்றைப் பதிவேற்ற செயல் முறைகளை முடிப்பதற்காகப் பூர்த்தி செய்ய வேண்டும், இதன் பிறகு “தொடர்ந்து செயலாற்று” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

lic-register

படிநிலை 4: எல்ஐசியின் ஆன்லைன் பதிவேற்றச் செயல் முறையை நிறைவு  செய்வதற்கு ‘பயனர் பெயர்’ மற்றும் ‘கடவுச்சொல்’ ஆகியவற்றை உருவாக்க வேண்டும்

படிநிலை 5: இப்போது, புதிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லுடன் நீங்கள் உள்நுழைய வேண்டும். “சமர்ப்பி” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

lic-username

படிநிலை 6: உங்கள் பாலிசியை பதிவு செய்து, திரைக்கு இடது பக்கத்தில் இருக்கும் “பாலிசிகளின் பதிவு” என்ற தாவலிலிருந்து தேவையான தகவல்களைப் பெறலாம். “பதிவு செய்யப்பட்ட பாலிசிகளின் காட்சி” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட உங்கள் பாலிசியின் நிலைமையைச் சரிபார்க்க “கேப்சா” என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பதிவு மூலம் ஆன்லைன் பிரீமியம் கட்டணம் செலுத்த எல்.ஐ.சி உள்நுழைக

படிநிலை 1: எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வலைவாசலில் (www[dot]licindia[dot]in) எளிதாக உள்நுழையலாம், மேலும் ஆன்லைன் சேவைகள் என்பதின் கீழ் உள்ள ‘வாடிக்கையாளர் வலைவாசலை’ கிளிக் செய்யவும்.

lic-login

படிநிலை 2: மேற்கூறிய படிநிலை உங்களை எல்ஐசியின் ஈ சேவைகள் என்ற பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும், அங்கு நீங்கள் ‘பதிவு செய்யப்பட்ட பயனர்’ என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

lic-login-box

படிநிலை 3: உங்கள் பங்கிற்கேற்ற நுகர்வோரைத் தேர்ந்தெடுத்து, ஐடி / இ-மெயில் / செல்ஃபோன், கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை உள்நுழைவதற்காக பூர்த்தி செய்ய வேண்டும்.  

lic-username

படிநிலை 4: நுகர்வோர் வலைவாசலில், தகவல்களைச் சரிபார்க்க சுய / பாலிசிகள் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

குறிப்பு: உங்கள் பிரீமியம் தவணை முறையாக இருந்தால், நிச்சயமாக ‘பிரீமியம் செலுத்துதல்’ என்ற விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் உங்களுடைய பிரீமிய தவணை தேதியை நீங்கள் காண முடியும்.

lic-after-login

படிநிலை 5: தேவையான தகவல்களைச் சமர்ப்பிப்பதற்கும், மேற்பட்ட செயல்முறையைத் தொடர்வதற்கும் பிரீமியம் செலுத்துதல் என்ற விருப்பத்தை அழுத்தவும்.

படிநிலை 6: பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுடைய தேர்வை வரவு அட்டை, பற்று அட்டை அல்லது ஆன்லைன் பணம் செலுத்தும் முறை ஆகியவற்றிலிருந்து செய்து கொள்ளலாம்.

எல்ஐசியின் ஒளி அலைவரிசைகளும் மற்றும் பிரீமிய சேகரிப்பின் முறைகளும்

எல்ஐசியின் வலைத்தளம்

ஆன்லைன் பணம் செலுத்தும் முறை

வரவு அட்டை

பற்று அட்டை

 

அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள்

ஆக்ஸிஸ் வங்கி

அரசு வங்கி

-------

-------

முகவர்கள்

ஏபி ஆன்லைன்

எம்பி ஆன்லைன்

சுவிதா இன்ஃபோசெர்வ்

எளிமையாகப் பணத்தைச் செலுத்துதல்

வியாபாரி

பிரீமிய புள்ளி (அதிகாரம் பெற்ற முகவர்கள்)

கூடுதலான ஆயுள்(எஸ்பிஏ)

ஓய்வு பெற்ற எல்ஐசி ஊழியரின் சேகரிப்பு

------

மேற்கூறிய படிநிலைகளை ஆன்லைனில் பதிவு செய்வதின் மூலம் ஆன்லைனில் பிரீமிய தொகையைச் செலுத்தும் செயல் முறைகளானது மிகத் தெளிவானது. பதிவுகள் ஏதும் இல்லாமல் தொகையை எவ்வாறு நீங்கள் செலுத்தலாம் என இப்போது பார்க்கலாம்.  

எல்ஐசியின் பதிவில்லாமல் புதிய பயனர் உள்நுழையும் முறை

படிநிலை 1: எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (www[dot]licindia[dot]in) உள்நுழைந்து அல்லது அதனுள் சென்று ‘ஆன்லைன்னில் பிரீமியம் செலுத்துதல்’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

lic-after-login

படிநிலை 2: மேலும் செயல்முறையைத் தொடர்வதற்குத் தேவையான ‘வாடிக்கையாளரின் வலைவாசலின் வழியாக’ மற்றும் ‘நேரடியாகச் செலுத்துதல்’ என்ற இரு வாய்ப்புகள் உள்ள பக்கத்திற்கு அது உங்களை அழைத்துச் செல்லும் – இந்த நிலையில், ‘நேரடியாகச் செலுத்துதல்’ என்ற பட்டனை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

lic-paydirect

படிநிலை 3: இப்போது, பதிவு செய்யும் செயல் முறையை நிறைவு செய்யக் கூடிய ‘பயனர் பெயர்’ மற்றும் ‘கடவுச்சொல்’ ஆகியவற்றை நீங்கள் உருவாக்க வேண்டும்.

படிநிலை 4: புதிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழைய வேண்டும். அதன் பின் சமர்ப்பி என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

படிநிலை 5: நீங்கள் உங்கள் கொள்கையைப் பதிவு செய்து, உங்கள் கொள்கையின் தேவையான விவரங்களை 'பதிவு நடைமுறைகள்' என்ற தாவலில் இருந்து பெற முடியும். 'பார்க்கப்பட்ட கொள்கைகள்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். செயல்முறை முடிக்க மற்றும் நிலையைப் பார்க்க, நீங்கள் 'கேப்ட்சாவை' உறுதி செய்ய வேண்டும்.

எல்ஐசியின் உள்நுழைவு செயல்பாடு – கடவுச்சொல்லை நீங்கள் மறந்துவிட்ட நிலையில்

நாம் நினைவில் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன, எனவே எல்ஐசி கணக்கின் பயனாளர் ஐடி மற்றும் கடவுச் சொல்லை மறந்துவிடுவது என்பது நாம் அனைவரும் செய்யக் கூடிய ஒரு சாதாரண தவறாகும். ஆனால் எல்.ஐ.சியின் இணையத்தளத்தில் உள்நுழைய பல சிக்கல்களை நீங்கள் சந்திக்க வேண்டாம் என்பதில்லை. உங்கள் எல்‌ஐ‌சி கணக்கிற்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை மீட்டெடுத்தல் என்கிற செயல்முறையானது மிகவும் எளிமையானது மற்றும் தொந்தரவு இல்லாதது ஆகும்.

படிநிலை 1: எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு (www[dot]licindia[dot]in) சென்று, ‘ஆன்லைன் சேவைகள்’ என்பதின் கீழ் உள்ள ‘வாடிக்கையாளர் வலைவாசலை’ கிளிக் செய்யவும்.

lic-login

படிநிலை 2: எல்ஐசியின் இ- சேவைகள் என்ற பக்கத்தில் காணப்படும் பதிவு செய்யப்பட்ட பயனர் என்ற பக்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

lic-login-box

படிநிலை 3: உள்நுழைவு விண்ணப்பத்தில், 'பயனர் ஐடி / கடவுச்சொல்லை மறந்தீர்களா?' என்ற இணைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

lic-username

படிநிலை 4: தேர்ந்தெடுக்கப்பட்ட கடவுச்சொல் விருப்பத்துடன், பயனர் ஐடியையும், பிறந்த தேதியையும் பதிவு செய்ய வேண்டும்.

lic-forgot-psswrd

படிநிலை 5: சரியான கேப்ட்சாவை பூர்த்தி செய்ய வேண்டும், அதன் பிறகு செயல்முறையை நிறைவு செய்யச் சமர்ப்பி என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

நீங்கள் பயனர் ஐடியை மறந்த நிலையில் எல்ஐசியின் உள்நுழைவு செயல்பாடு

படிநிலை 1: எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு (www[dot]licindia[dot]in) சென்று, ‘ஆன்லைன் சேவைகள்’ என்பதின் கீழ் உள்ள ‘வாடிக்கையாளர் வலைவாசலை’ கிளிக் செய்யவும்.

படிநிலை 2: வாடிக்கையாளர் வலைவாசல் என்பதை கிளிக் செய்வதின் மூலம், எல்ஐசியின் இ-சேவைகள் என்ற பக்கத்தை நீங்கள் சென்றடையலாம், அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட பயனர் என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

படிநிலை 3: உள்நுழைவு விண்ணப்பத்தில், 'பயனர் ஐடி / கடவுச்சொல்லை மறந்தீர்களா?' என்ற இணைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பயனர் ஐடி என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பாலிசியின் எண், பிரீமியம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

படிநிலை 4: ‘பயனர் ஐடி’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்களுடைய ‘பாலிசி எண்’, ‘பிரீமியம்’ மற்றும் ‘பிறந்த தேதி’ ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும்  

படிநிலை 5: சரியான கேப்சாவைப் பூர்த்தி செய்ய வேண்டும், அதன் பிறகு செயல்முறையை நிறைவு செய்ய ‘சமர்ப்பி’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய எல்ஐசியின் உள்நுழைவு மற்றும் பதிவேற்றச் செயல்முறை முழுவதிலும் காணப்படும் பயனுள்ள தகவல்கள் அனைத்தையும் கொண்டு ஆன்லினில் உங்களுடைய பாலிசியின் நிலைமையை சரிபார்த்துக்கொள்ளலாம், வரவு அட்டை அல்லது பற்று அட்டை மூலம் பிரீமியத் தொகையைச் செலுத்தலாம். இந்த பயனுள்ள தகவல்களைக் கொண்டு, உங்களுடைய வீட்டிலிருந்தே எல்ஐசியின் சேவைகளை உங்களால் பயன்படுத்த இயலும்.