எல்ஐசி மூத்த குடிமக்களுக்கான திட்டம்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

கைபேசி எண்
பெயர்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

அரசாங்கமானது இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காகப் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பல தனிச்சிறப்புரிமைகளை பெறும் தகுதியுடையவர்கள் ஆகின்றனர். வயதான காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அரசாங்கமானது நம்முடைய நாட்டில் உள்ள மூத்த குடிமக்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு இச்சலுகைகளை வழங்குவது சில நேரங்களில் மிகச்சிறந்ததாகும். ஏனெனில் பல காரணங்களால் இது நிகழ்கிறது. அவற்றில் சில பின்வருமாறு: 

 1. ஓய்வு வயது:- அறுபது வயதைக் கடந்தவர்களில் பெரும்பான்மையானோர் ஓய்வு அடைந்திருப்பர் அல்லது ஒரு செயலைச் செய்ய இயலாத நிலையில் அவர்கள் ஓய்வை தாங்களாகவே பெற்று கொண்டிருப்பர். தங்களுடைய மாதாந்திர செலவினங்களை எவ்வாறு சமாளிப்பது என்பது இத்தகைய வயதைக் கடந்த அல்லது எதிர் காலத்தில் மூத்த குடிமக்களாக ஆகப் போகும் பலரின் மிகப்பெரிய கவலைகளுள் ஒன்றாக இருக்கும். இதனை மனதில் கொண்டு சில திட்டங்களை கொண்டு வரும் அனுமதியை இந்திய அரசாங்கமானது எல்ஐசி போன்ற காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இந்தியாவின் எல்ஐசியானது மூத்த குடிமக்களுக்காக அவர்கள் வசதிக்கு ஏற்ப திருத்தியமைக்கப்பட்ட பல திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. நாம் இதனைப் பற்றிக் கீழுள்ள தகவல்களில் கலந்துரையாடலாம்.
 2. முதிர்வு வயது:- நமது நாட்டில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களும் எதிர்கொள்கின்ற மற்றொரு சவால் என்பது அதிகரித்து வரும் அவர்களின் வயதைச் சமாளிப்பதே ஆகும். மக்கள் தங்களின் இளமை வயதில் செயல்பட்டது போலத் தங்களின் வயதான காலத்தில் சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடையவர்களாகவும் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய இளம் வயதில் அவர்கள் செயலாற்றிய ஆற்றலுடன் ஒப்பிடும் போது, வயதான காலத்தில் அதே ஆற்றலுடன் அவர்களால் செயலாற்றுவது மிகக் கடினம். 
 3. நோய்:- மூத்த குடிமக்கள் அனைவரும் நோயினால் அதிகமாக தாக்கப்படுகின்றனர். ஏனெனில் குறிப்பிட்ட வயதிற்குப் பின் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியானது வலுவிழந்துவிடும். இதனால் சில ஓய்வூதிய திட்டங்களிலிருந்து கிடைக்கக் கூடிய உறுதியளிக்கப்பட்ட வருவாயை அவர்கள் பெற வேண்டியது அவசியமாகும். 
 4. உதவி அமைப்பின் பற்றாக்குறை:- அவர்களுடைய பிள்ளைகளிடமிருந்து அவர்கள் விரும்பும் சில விதமான உதவியைச் சிலரால் பெற இயலாது. அவர்களுடைய குழந்தைகள் வேறு நகரங்களில் வேலை செய்து கொண்டிருக்கலாம், மேலும் அவர்கள் தங்களுக்கெனத் தனி பொறுப்புகளைப் பெற்றிருக்கலாம். அவர்களுக்கு தேவை ஏற்படும் நேரத்தில், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்கள் சில நிதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் தங்களைக் காப்பாற்றும் வகையில் சில முதலீடுகளைப் பெற்றிருந்தால் மட்டுமே இவை சாத்தியமாகும். 
 5. நிதி சுதந்திரம்:- வயதான காலத்திற்குப் பிறகு நமக்கு நிதி சுதந்திரம் என்பது அவசியமாகும். ஒரு குறிப்பிட்ட வயதைக் கடக்கும் நேரத்தில் நிதி சுதந்திரத்தின் தேவை அதிகரிக்கும். குறிப்பாக 60 வயதைக் கடக்கும் போது இதன் தேவையானது இன்னும் அதிகமாகும். ஏனெனில் அச்சமயத்தில் நம்முடைய வருவாய் குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருப்பதே அதற்குக் காரணம் ஆகும்.
 6. கூடுதல் வருவாய்: ஒரு நபரின் நிதி தேவையானது மற்றொரு நபரின் நிதி தேவையிலிருந்து வேறுபட்டுக் காணப்படும். சிலர் வருமான ஆதாரத்தைக் கொண்டிருந்தாலும் கூட, அவர்களின் தற்காலிக செலவினங்களை எதிர்கொள்வதற்குக் கூடுதல் வருவாயானது அவர்களுக்குத் தேவைப்படலாம். இவை அவரவருடைய செலவினங்களைப் பொறுத்தது அமையும். பேரக்குழந்தைகள் அல்லது உறவினர்கள் மற்றும் பலருக்கு இது மிகப்பெரிய அன்பளிப்பாக இருக்கும்.
 7. சிறந்த வாழ்க்கைமுறை:- எவரும் தங்களுடைய நடைமுறையில் இருக்கும் வாழ்க்கை முறையை விட்டுத்தரத் தயாராக இருக்க மாட்டார்கள். ஓய்வு பெறும் காலத்தில், இதே நிலையைத் தக்க வைத்துக் கொள்ள நாம் நன்கு திட்டமிட வேண்டும். நம்முடைய வாழ்க்கைக்கு ஏற்ற நிலையான மாதாந்திர வருமானத்தை நாம் நிச்சயம் பெற்றிருக்க வேண்டும். இது கூடுதலான வருமானத்தைக் கொண்டிருப்பதால் மட்டுமே சாத்தியமாகும். எல்ஐசியின் மூத்த குடிமக்களுக்கான திட்டம் என்பது நல்ல முதலீட்டு திட்டமாகும், இது நாம் விரும்பிய வாழ்க்கையை நமக்குத் தர உதவியாய் இருக்கும்.
 8. கண்ணியமான வாழ்க்கையை வழிநடத்தும்:- நிதி தேவைகளுக்காக எவரின் முன்பும் பணத் தேவைக்காக கைகளை நீட்டாமல் இருப்பதன் மூலம் அவரவருடைய சுய மரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். எல்ஐசியால் அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் ஈர்ப்புடைய இந்தத் திட்டமானது இது எளிதில் சாத்தியமாகும். 

மூத்த குடிமக்கள் திட்டங்களின் வகைகள்

மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்களை உருவாக்க எல்ஐசிக்கு அரசாங்கத்தால் ஐஆர்டிஏ வின் விதிமுறைகளின் கீழ் முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளது. அவைகளுள் சில திட்டங்கள் ஓய்வூதிய தொகுப்பை ஒன்றிணைக்க ஆரம்பக் காலத்திலேயே எடுக்கப்படக் கூடியதாக இருக்கும். அதுபோலச் சில திட்டங்கள் 60 வயதை அடைந்த பிறகே அறிமுகப்படுத்தப்படுவதாக இருக்கும். மூத்த குடிமக்களுக்குப் பயனளிக்கக் கூடிய அனைத்து திட்டங்களும் பின்வருவனவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது. 

வரிசை எண்

மூத்த குடிமக்களின் காப்பீட்டுத் திட்டங்கள்

1

பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா (பிஎம்விவிஒய்)

2

வர்ஷிதா பென்ஷன் பீமா யோஜனா (விபிபிஒய்)

மூத்த குடிமக்களைப் பாதுகாக்கும் திட்டங்கள்

4

புதிய ஜீவன் நிதி

5

ஜீவன் அக்ஷய் VI

அனைத்து இந்தத் திட்டங்களும் ஒரு சிறப்பம்சத்தை அல்லது மூத்த குடிமக்களுக்கு அதிக பயன்களை நல்கும் பிறவற்றையோ கொண்டிருக்கிறது. மிகச் சிறந்த 2 தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்கள் 2014 & 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவை வர்ஷிதா ஓய்வூதிய பீமா யோஜனா,  அதாவது விபிபிஒய் மற்றும் பிரதான் மந்திரி வயா வந்தன யோஜனா (பிஎம்விவிஒய்).  

மூத்த குடிமக்களின் தேவைகளைக் குறித்து மற்ற திட்டங்களும் அதற்கான கவனம் செலுத்துகின்றன. அவற்றைப் பற்றி விரிவாக விவாதிப்போம்.

 • பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா (பிஎம்விவிஒய்) – மே 2017-18  

இந்தத் திட்டமானது மே 2017 இல் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்காக ஒரு வருட காலத்திற்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். மூத்த குடிமக்களால் இந்தத் திட்டத்தின் படி முதலீட்டிலிருந்து 8% த்தை பெற இயலாம்.  பாலிசியின் காலவரையறை 10 வருடங்களாகும். முதிர்ச்சிக்குப் பிறகு பாலிசிதாரர் மாதாந்திர வருவாயைப் பெறலாம். பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால், அந்தத் தொகையை அவருடைய வாழ்க்கைத் துணை அல்லது நியமனதாரர் பெறலாம். அதே சமயம், சிக்கலான நோய்கள் ஏற்படும் காலத்தில், அவர்கள் பாலிசியை ஒப்படைத்து விடலாம். மேலும் பாலிசிதாரர் முதலீடு செய்யப்பட்ட தொகையில் 98% த்தை பெற இயலும். இது மட்டுமல்லாமல், அவர்கள் கடன் வாங்குவதற்கும் உரிமை உண்டு. எனினும், இது 3 வருடங்களுக்கு பிறகு உள்ள காலத்திற்கு மட்டுமே பெற முடியும். உங்களுடைய கடன் தொகை 75 சதவிகிதம் கடன் தொகைக்குச் சமமானது ஆகும். மேலும் பொதுவாக மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இடைவெளிகளில் முதலீடானது செய்ய முடியும். கால அளவுகளைப் பொறுத்து தொகை ஆனது மாறுபடும். கால அளவுகளின் விவரங்களானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

முதலீடுகள் செலுத்தும் காலம்

குறைந்த பட்சமாக வாங்கும் விலை

அதிக பட்சமாகக் கொள்முதல் விலை

மாதாந்திர செலுத்துதல்

ரூபாய். 1,50,000

ரூபாய். 7,50,000

காலாண்டுக்கு ஒரு முறை செலுத்துதல்

ரூபாய். 149068

ரூபாய். 7,45, 342

அரையாண்டுக்கு ஒரு முறை செலுத்துதல்

ரூபாய். 147601

ரூபாய். 7,38,007

வருடத்திற்கு ஒரு முறை செலுத்துதல்

ரூபாய். 144578

ரூபாய். 7,22,892

இந்தத் திட்டத்தில் காணப்படும் தவணைகள் எளிமையாய் உள்ளதால், இது முழுவதும் சில காலங்களுக்கு ஒரு செய்தியாக மட்டுமே இருந்தது. பல மக்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஓய்வூதிய திட்டங்கள் வழங்குபவையெல்லாம் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல ஒருவர் பெறுகின்ற தொகையானது அவர் செய்த முதலீட்டைப் பொறுத்தது. முதலீட்டில் உள்ள வசதிகளைப் போலவே, பாலிசி முடிவடைந்த பிறகும் வருவாயைப் பெறுவது எளிதாகும். கால இடைவெளியைப் பொறுத்து நாங்கள் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தொகையை பட்டியலிட்டுள்ளோம்.

ஓய்வூதிய காலம்

குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை

அதிகபட்ச ஓய்வூதிய தொகை

மாதாந்திர செலுத்துதல்

ரூபாய். 1000

ரூபாய். 3000

காலாண்டுக்கு ஒரு முறை செலுத்துதல்

ரூபாய். 3000

ரூபாய். 15000

அரையாண்டுக்கு ஒரு முறை செலுத்துதல்

ரூபாய். 6000

ரூபாய். 30000

வருடத்திற்கு ஒரு முறை செலுத்துதல்

ரூபாய். 12000

ரூபாய். 60000

 • வர்ஷிதா பென்ஷன் பீமா யோஜனா (விபிபிஒய்)

இந்தத் திட்டமானது 2014-15 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச வயது 60 ஆண்டுகள் ஆகும், இதற்கு அதிகபட்ச வயது ஏதும் கிடையாது. 15 வருட பாலிசி காலத்திற்கு ஏற்புடைய தொகையானது கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

முதலீடுகள் செலுத்தும் காலம்

குறைந்த பட்சமாக வாங்கும் விலை

அதிக பட்சமாகச் கொள்முதல் விலை

மாதாந்திர செலுத்துதல்

ரூபாய். 66,665

ரூபாய். 6,66,665

காலாண்டுக்கு ஒரு முறை செலுத்துதல்

ரூபாய். 66,170

ரூபாய். 6,61,690

அரையாண்டுக்கு ஒரு முறை செலுத்துதல்

ரூபாய்.  65,430

ரூபாய். 6,54,275

வருடத்திற்கு ஒரு முறை செலுத்துதல்

ரூபாய். 63,960

ரூபாய். 6,39,610

இந்தத் திட்டத்தின் கீழ், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட 6095 கோடி ரூபாய் தொகுப்பில் 3.16 லட்சத்தை ஆண்டுத் தொகையாகப் பெற்றுள்ளது. நாம் செய்யும் முதலீட்டைப் பொறுத்து ஓய்வூதியத்தை பெறலாம். இது பற்றிய சில தகவல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. 

ஓய்வூதிய காலம்

குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை

அதிகபட்ச ஓய்வூதிய தொகை

மாதாந்திர செலுத்துதல்

ரூபாய். 500

ரூபாய். 5000

காலாண்டுக்கு ஒரு முறை செலுத்துதல்

ரூபாய். 1500

ரூபாய். 15000

அரையாண்டுக்கு ஒரு முறை செலுத்துதல்

ரூபாய். 3000

ரூபாய். 30000

வருடத்திற்கு ஒரு முறை செலுத்துதல்

ரூபாய். 6000

ரூபாய். 60000

 • மூத்த குடிமக்களைப் பாதுகாக்கும் திட்டங்கள்

மூத்த குடிமக்கள் அனைத்து திட்டங்களின் திரள்களாக உள்ளனர். மூத்த குடிமக்களாக உள்ள பாலிசிதாரர்கள் 8.5% வரை வட்டியினை பெற இயலும். எல்‌ஐ‌சியின் பாலிசி திட்டங்களானது பாலிசிதாரரின் அடிப்படைத் தேவைகளை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களுள் அதிகமானோர் ஓய்வுக் காலத்தில் அதிக அளவு வருவாயைப் பெறுகின்றனர். 

 • புதிய ஜீவன் நிதி

ஓய்வு நிதி பெறும் வயதில் இரட்டை நன்மைகளான ஆயுள் பாதுகாப்பையும், ஓய்வூதிய சலுகைகளையும் இந்த திட்டத்தின் மூலம் நாம் பெறலாம். குறிப்பிட்ட வயது வரை தொகை செலுத்திய பிறகு ஓய்வு நிதி பெறும் காலத்தில் ஓய்வூதிய சலுகைகள் ஆனது நமக்குக் கிடைக்கப் பெறும்  

 • ஜீவன் அக்ஷய் VI

இது உடனடியான ஆண்டுத் தொகை திட்டமாகும். மொத்த தொகையை உடனடியாக செலுத்திய பிறகு இந்தத் திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். தங்களுடைய பணத்தைச் சேமிக்க விரும்பும் மக்களுக்கு இது ஒரு நல்ல திட்டமாகும். சில கூடுதலான சலுகைகளுடன் உறுதி அளிக்கப்பட்ட மாதாந்திர வருவாயைப் பெறுவதற்கான சிறந்த வழியாகவும் இது இருக்கும். 

மேற்கூறிய பாலிசிகள் முழுவதும் விரிவானதாகும், அதோடு பிரதான் மந்திரி அட்டல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கு முற்றிலும் இணையானது. இவை இந்தியாவில் உள்ள ஓய்வூதியங்களின் தேவையை அதிகரிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாலிசியானது 60 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கான கட்டாய ஓய்வூதியத் திட்டமாகும். இது பிரதான் மந்திரி ஜன் தன் யோகாவை அடிப்படையாகக் கொண்டது. இது 2015 ஆம் ஆண்டு அமைப்பு சாரா பிரிவுகளுக்கு உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. எந்த ஒரு ஓய்வூதிய திட்டங்களிலும் இணைக்கப்படாமல் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் மக்களும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யலாம். ஓய்வூதிய தொகையானது 60 வயதிற்குப் பிறகு ரூ. 1000 த்திற்கும், ரூ. 5000 த்திற்கும் இடைப்பட்ட அளவிலிருந்து தொடங்கும். பிஎஃப்ஆர்டிஏ வின் படி ஓய்வூதிய நிதியானது முழுவதும் இந்திய அரசாங்கத்தின் விருப்பத்தை பொறுத்தது. 

மூத்த குடிமக்களுக்கான இத்தகைய பாலிசிகள் அனைத்தும் சிறந்த சலுகைகளைப் பாலிசிதாரர்களுக்காக அளிக்கக் கூடிய நல்ல சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது. இவை கீழே விளக்கப்பட்டுள்ளது. 

மூத்த குடிமக்கள் திட்டத்தின் சிறப்பம்சங்கள்

மூத்த குடிமக்கள் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

 1. ஒரே மாதிரியான ஓய்வூதியக் கட்டண திட்டங்கள் உள்ளன. இது மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் செலுத்தப்படலாம்.
 2. நெஃப்ட் அல்லது ஆதார் அடிப்படையிலான கட்டண வீதம் மூலம் பணம் செலுத்தலாம்.
 3. உத்திரவாதம் அளிக்கக் கூடிய தொகையில் அதிக பட்சமாக 75 சதவிகிதம் கடன் தொகை வழங்கப்படும்.
 4. கடன் மீதான வட்டி விகிதம் 10% அரை வருடாந்திரமாகச் செலுத்த வேண்டும்.
 5. பாலிசி வாங்கிய 15 நாட்கள் வரை சோதனை காலமானது இருக்கும். பாலிசி வாங்கிய விலைக்குச் சமமான பணமானது திரும்பக் கிடைக்கும்.
 6. பி‌எம்‌வி‌வி‌ஒய் மற்றும் வி‌பி‌பி‌ஒய் போன்ற சில பாலிசிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மூத்த குடிமக்களின் நன்மைகளுக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்படுகின்றன. வங்கிகளுடன் ஒற்றுமைப் படுத்திப் பார்க்கும் போது வட்டி விகிதங்களை உயர்த்துவதே அவர்களுடைய முக்கிய நோக்கம் ஆகும். 

மூத்த குடிமக்களுக்குரிய திட்டத்தின் சலுகைகள்

இந்தத் திட்டங்கள் ஒன்று அல்லது மற்ற சலுகைகளை அளிக்கின்றன. சில கொள்கைகளுக்கு கீழ்ப்படிந்த சில முக்கியமானவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வரிசை எண்

சலுகைகள்

1

வரி சேமிப்பு

 • 80சி சட்டத்தின் படி பாலிசிகளுக்கு வரி சேமிப்புகளுக்கு உதவுகின்றன.

2

கடன் வசதிகள் உள்ளன

 • 3 வருட காலக் கெடுவிற்குப் பின்னர், முதலீடு செய்யப்பட்ட தொகையில் 75% வரை கடனுதவி பெற முடியும். எனினும், பி‌எம்‌வி‌வி‌ஒய் மற்றும் வி‌பி‌பி‌ஒய் போன்ற சில திட்டங்களுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்

3

8.5% வரை சிறப்பான வட்டி விகிதங்கள்

4

உறுதி செய்யப்பட்ட மாதாந்திர வருமானம்: பாலிசி கால வரையறைக்குப் பின்னர் காலாண்டு அல்லது ஆண்டுதோறும்

5

ஒய்வூதிய கால வரையறையில் மூத்த குடிமகனாக இருக்கும் பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில் அவருடைய நியமனதாரருக்குத் தொகையானது அளிக்கப்படும்.

6

பாலிசி முதிர்வின் போது பாலிசியின் தொகைக்கு நேரடியாக தொடர்புடைய கூடுதல் சலுகையானது கிடைக்கும்.

7

முக்கிய நோயின் சமயத்தில், 98% வருவாயுடன் பாலிசியை ஒப்படைக்கலாம்.

எல்ஐசி பாலிசியை வாங்குவது மற்றும் பாலிசிகளின் நிலையை எப்படிச் சரிபார்ப்பது?

எல்ஐசி பாலிசியை ஆன்லைன் அல்லது ஆஃப்லைனிலும் வாங்கலாம். இரண்டிற்கும் சில படிநிலைகள் ஆனது இருக்கின்றன. கொள்கைகளை  உடனடியாகப் பெறுவதற்கு அதற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பெரும்பாலான வழிமுறைகள் பின்வருமாறு.

ஆன்லைன்

ஆஃப்லைன்

எல்‌ஐ‌சியின் இ-வலைவாசலில் பதிவு செய்யுங்கள்

முகவரைத் தொடர்பு கொள்ளவும்

எந்தவொரு வலைத்தளத் தொகுப்பிலிருந்து அதை எடுத்துக் கொள்ளலாம்

தகவல் அழைப்பு மைய செயல்பாட்டுக்கு 24 *7  ஐ அழைக்கவும்

வேண்டிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்

தொடர்புடைய எண்ணிலிருந்து எஸ்‌எம்‌எஸ் வந்தவுடன் திரும்ப அழைக்கவும்

பணம் செலுத்துங்கள்

கிளை அலுவலகத்துக்குப் போக வேண்டும்

 

கே‌ஒய்‌சியை நிறைவு செய்ய வேண்டும்

 

நீங்கள் தேர்வு செய்த திட்டங்களின் படி பணம் செலுத்தவும் 

இந்த பாலிசியை வாங்கிய பின்னர், கிடைக்கும் நேரங்களில் பல விதமான தகவல்களைச் சரிபார்க்க ஆவலாக இருக்க வேண்டும். நமக்கு வேண்டிய எல்லா தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு பல விதமான முறைகளில் தகவல்களைச் சரிபார்க்க முடியும். அதேபோலப் பாலிசியின் நிலைகளைக் கண்டறிவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில படிநிலைகள் இருக்கின்றன.

வரிசை எண்

தகுதி நிலைகளின் வகைகள்

ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி

ஆஃப்லைனில் சரிபார்ப்பது எப்படி

1

பாலிசி புதுப்பித்தலின் தேதியைச் சரிபார்த்தல்

எங்கள் பாலிசியை அறிமுகச் சான்றுகளைக் கொண்டு உள்நுழைய மற்றும் சுலபமாகச் சரிபார்க்க முடியும்.

எஸ்எம்எஸ் அல்லது சம்மந்தப்பட்ட முகவர்களுடன் பேசுவதன் வாயிலாகச் சரிபார்க்க முடியும்.

2

ஒப்படைவு மதிப்பு சரிபார்ப்பது

எந்தவொரு சிக்கலான நோய்களுக்கும்  ஒப்படைவு மதிப்பை ஆன்லைனில் சரிபார்க்காலம். இது அன்றைய தேதி வரை முதலீடு செய்யப்படும் தொகையின் அடிப்படையை பொறுத்தது.  உங்களுடைய மொத்த தொகையில் 98% க்கு சமமாக இருக்கும்.

நாம் அதைக் கைமுறையாகக் கணக்கிடலாம். மாறாகத் தொடர்புடைய நபருக்கு எஸ்‌எம்‌எஸ் அனுப்பலாம். அல்லது வாடிக்கையாளர் சேவை மைய செயல்பாட்டுக்கு 24*7 ஐ அழைக்கலாம்

3

கடன் தொகையைச் சரிபார்ப்பது

நம் அனைவருக்கும் தெரிந்த முறைப்படி  எங்களுடைய திட்டத்தின் படி சோதனைக் காலம் முடிவடைந்த பின்னர் கடன் கிடைக்கும். நாம் செலுத்திய தொகைக்கு 75 சதவிகிதம் சமம் ஆகும். நாம் சுலபமாக அதைச் சரிபார்க்கலாம்

அதே செயல் முறை ஆஃப்லைனில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளது. நாம் தொடர்புடைய நபருக்கு எஸ்‌எம்‌எஸ் அல்லது முகவரிடமோ சரிபார்த்துக் கொள்ளலாம்.‌ பொதுவாக, மறுமொழி தாமதமின்றி அளிக்கப்படும்.

4

முதிர்வு தேதியைச் சரிபார்ப்பது

முதிர்வு தேதி பொதுவாக நம்முடைய திட்டத்தைச் சார்ந்து இருக்கும். இது 10 லிருந்து 15 வருடங்களுக்கு இடையில் இருக்கக் கூடும். எனினும், அந்த முறையை நாம் மறந்துவிட்டால் நாம் சுலபமாக ஆன்லைனில் சரிபார்க்க முடியும்.

மேலே உள்ள நிலைகளில் நாம் அதே செயல்முறையைக் கடைப்பிடிக்கலாம். ஒன்று, நாம் முகவர்களை அழைக்கலாம்; எஸ்எம்எஸ் அனுப்பலாம் அல்லது ஆதரவு மையத்தை அழைக்கவும்.

இந்திய அரசாங்கத்தால் சேமிப்பு மற்றும் முதலீடுகளின் கலாச்சாரத்தை உயர்த்துவதற்காக ஒய்வூதிய திட்டமானது ஒரு சிறந்த திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இத்தகைய திட்டங்களில் பல இந்தியர்கள் பெரும்பாலும் உபயோகமடைந்தனர். ஒரு பெரிய அளவிலான நிதியைத்

திரட்ட லட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே முதலீடு செய்துள்ளனர். அதே சமயத்தில் பாலிசிதாரர்கள் முதலீட்டுக் கால வரையறையில் இத்தகைய திட்டங்களின் மூலம் பல சலுகைகளைப் பெறுகின்றனர். முக்கிய வரி சேமிப்புகளான மற்ற நிதி தேவைகளான கடன் மற்றும் ஒப்படைவு போன்றவை ஆகும். நம்முடைய தேவைகளின் படி திட்டங்களை உருவாக்க பரிந்துரைக்கப்படுகிறது. நம்மால் ஒன்றுக்கு மேலான திட்டங்களை எடுக்க முடியும். குறிப்பாக நாம் முதலீடு செய்வதன் மீதான மிகச் சிறந்த வருவாயைப் பெற விரும்புகிறோம். பிரீமியத்தை சுலபமாக ஆன்லைன் கால்குலேட்டர்களின் துணையுடன் கணக்கிட முடியும். இது நம்முடைய நிதித் திட்டமிடலை மிகச்சிறப்பாகச் செய்ய உதவுகிறது.