எல்‌ஐ‌சி நவ்ஜீவன்
 • term திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

தொலைபேசி எண்
பெயர்
பிறந்த தேதி

1

2

வருமான
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சிமற்றும் தனியுரிமைக் கொள்கையைஏற்றுக்கொள்கிறீர்கள்

இந்த எல்.ஐ.சி கொள்கை வாங்குவதற்கு கிடைக்கவில்லை. இது நிறுவனத்தால் விற்பனைக்கு மூடப்பட்டுள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால் புதிதாக வெளியிடப்பட்ட திட்டம் எல்‌ஐ‌சி நவ்ஜீவன் திட்டம் ஆகும். இது இணைக்கபடாத இலாபம் உறுதி செய்யப்பட்ட எண்டௌமென்ட் திட்டம் ஆகும். இந்த விரிவான திட்டமானது  முதிர்வுக்கு முன்பு எந்தவொரு நேரத்திலும் பாலிசிதாரர் துரதிஷ்டவசமாக மரணம் அடைய நேர்ந்தால் குடும்பத்திற்கு தேவையான நிதியுதவி வழங்குகிறது  மேலும் முதிர்வு அடைந்த பிறகு பாலிசிதாரர் உயிரோடு இருக்கும் பட்சத்தில் மொத்த தொகையானது அவருக்கு வழங்கப்படும்.

எல்‌ஐ‌சி  நவ்ஜீவன் திட்டத்தின் கீழ், பாலிசிதாரருக்கு தேர்வு செய்யும் விருப்பம் உள்ளது. அவர் / அவள்  மொத்த தொகையை பிரீமியமாக செலுத்த முடியும் (ஒற்றை பிரீமியம்) அல்லது வரையறுக்கபட்ட பிரீமியத்துடன் ஒரு பிரீமியம் செலுத்தும் கால வரையறை ஆனது  5 ஆண்டுகள் ஆகும். விருப்பம் உள்ள ஒருவர் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மூலமாக  எளிதாக இந்த திட்டத்தை வாங்க முடியும்.  அல்லது அருகில் உள்ள கிளைகளுக்கு சென்றும் வாங்கலாம்.

இந்த திட்டமானது 90 நாட்கள் முதல் 65 வயது வரை கிடைக்கும், 45 வயதிலிருந்து அபாய நேர்வுக்கான காப்பீட்டு தொகையை தேர்வு செய்யும் விருப்பம் உள்ளது. இந்த திட்டம் வருமான வரி உடன்பட்ட திட்டமாகும். அதன் கடன் வசதி மூலம் நம்முடைய பணத் தேவைகளையும் கவனிக்கின்றனர்.

நீங்கள் எல்‌ஐ‌சியின் தொடர் வாடிக்கையாளராகவோ அல்லது நிறுவனத்தின் அறிக்கையை சோதித்து இருந்தாலோ, எல்‌ஐ‌சியானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் மாதங்களில் ஒரு புதிய ஒற்றை பிரீமியம் அல்லது குறிப்பாக மற்ற திட்டங்களுடன் வெளி வருவதை கவனித்து இருக்கலாம். மார்ச் மாதத்தில் வெளியான எல்‌ஐ‌சியின் நவ்ஜீவன் காப்பீட்டு திட்டம்  எண். 853  ஆனது இதற்கு உன்னதமான உதாரணம் ஆகும்.

எல்‌ஐ‌சி நவ்ஜீவன் பாலிசியின் தனி சிறப்புகள்

 • ஆன்லைன் தளத்திலும் கிடைக்கும்
 • இந்த என்டௌமென்ட் திட்டமானது ஒற்றை  மற்றும் 5 வருட வரையறுக்க பட்ட பிரீமியம் செலுத்தும் விருப்பம் உள்ளது.
 • 10 முதல் 18 ஆண்டுகள் இந்த திட்டத்திற்கான  காலம் ஆகும்.
 • குறைந்த பட்ச காப்பீட்டு தொகை 1  லட்சம் ஆகும். அதிக பட்ச காப்பீட்டு தொகைக்கு வரையறை  இல்லை
 • இந்த திட்டதில் 90 நாட்களிலிருந்து 65 வயது வரை கிடைக்கும்
 • வருமான வரி சலுகைகள் 80சி பிரிவின் கீழ் உள்ளது
 • கடன் வசதியானது இந்த திட்டத்தின் கீழ் உள்ளது
 • தவணை தொகைகளிலிருந்து இறப்பு சலுகை பெறும் தேர்வு உள்ளது.

வரையறுக்கபட்ட பிரீமியம் செலுத்துதலில், 45 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் காப்பீடு செய்யப்பட்டு இருந்தால் அவர் / அவள் இறப்பின் மீது முழு காப்பீட்டு தொகையும் பெறுவதற்க்கு இரண்டு தேர்வு விருப்பங்கள் உள்ளது.

தேர்வு 1 :  வருடாந்திர பிரீமியத்தின்  10 மடங்கு

தேர்வு 2 :  வருடாந்திர பிரீமியத்தின்  7 மடங்கு

எல்‌ஐ‌சி நவ்ஜீவன் திட்டத்தின் விருப்பங்கள் 1 மற்றும் 2 சித்தரிக்கின்றவை என்ன?

வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் தேர்வுக்கு மட்டுமே இந்த விருப்பம் 1 மற்றும் 2 பொருந்தும். ஆனால் நீங்கள் மொத்த தொகையை முதலீடு செய்யும் போது இது செல்லுபடி ஆகாது. ஒருவேளை நீங்கள் ஒற்றை பிரீமியம் செலுத்தும் விருப்பத்தை தேர்வு செய்தால், இறப்பிற்கான காப்பீட்டு தொகை ஒற்றை பிரீமியத்தின் பத்து மடங்காக இருக்கும்.

எனினும், வரையறுக்கபட்ட பிரீமியம் செலுத்தும் முறையை தேர்ந்தெடுத்தால், கீழே குறிப்பிடபட்டுள்ள தேர்வு உங்களிடம் உள்ளது.

#45 வயதிற்கு குறைவாக உங்கள் வயது இருந்தால்.

இறப்பு சலுகையாக உங்கள் வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கு கிடைக்கும்.

# 45 வயதிற்கு மேல் உங்கள் வயது இருந்தால்

இந்த நிலையில், இதிலிருந்து  இரு விருப்பங்களானது தேர்ந்தெடுப்பதற்காக   உள்ளது

தேர்வு 1: இறப்பு சலுகையாக வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கை  தேர்வு செய்யலாம்.

தேர்வு 1: இறப்பு சலுகையாக வருடாந்திர பிரீமியத்தின் 7 மடங்கை  தேர்வு செய்யலாம்.

எல்‌ஐ‌சி நவ்ஜீவன் திட்டத்தின் சலுகைகள்

எல்‌ஐ‌சியின் மற்ற திட்டங்கள் போல, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகைகள் வழங்குவதை இத்திட்டம் உறுதிப்படுத்துகிறது. முதிர்ச்சி முதல் இறப்பு  வரை  இந்த திட்டமானது பல சலுகைகளை உங்களுக்கு எடுத்து வருகிறது, இந்த திட்டம் நாளைய பொழுதை சிறந்ததாக்குவதற்கு பல்வேறுபட்ட விஷயங்களை கொண்டுள்ளது. எல்‌ஐ‌சி நவ்ஜீவன் திட்டத்தின் கீழ் உங்களுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இறப்பு சலுகைகள்

இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர் இறக்க நேரிடும் போது , இறப்பு சலுகைகளானது  பெயர் குறிப்பிடுவது போல இருக்கும்.

முதல் ஐந்து ஆண்டு பாலிசி கால இடைவேளையில் இறந்தால்: காப்பீடு செய்யப்பட்ட நபர் முதிர்வு காலத்திற்கு முன்பு இறந்தால் இறப்பு சலுகைகள் வழங்கப்படும். அபாய நேர்வு ஆரம்பிக்கும் தேதிக்கு முன்பு: செலுத்தப்பட்ட பிரீமியங்களானது  வட்டி இல்லாமல் திரும்ப கொடுக்கப்படும்.

அபாய நேர்வு தொடங்கும் தேதி அல்லது அதற்கு பிறகு: இறப்பின் மீதான காப்பீடு தொகை ஆனது  வழங்கப்படும்.

பாலிசி தொடங்கியதிலிருந்து  ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு ஆனால் நிர்ணயிக்கப்பட்ட முதிர்வு தேதிக்கு முன்பு மரணம் அடைந்தால்: இறப்பின் மீதான காப்பீட்டு தொகையுடன் போனஸ் சேர்த்து வழங்கப்படும்.

முதிர்வு சலுகைகள்

காப்பீடு செய்யபட்ட நபர் காப்பீட்டு காலம் முடியும் வரை உயிரோடு இருக்கும் பட்சத்தில் அனைத்து பிரீமியங்களும் செலுத்தப்பட்டு இருந்தால் முதிர்வு காப்பீட்டு தொகையுடன் போனஸ் கூடுதலும் சேர்த்து வழங்கபடும்.

இலாபத்தில் பங்கு

காப்பீடு செய்யப்பட்ட நபர் அனைத்து பிரீமியங்கள் செலுத்தியும் மற்றும் ஐந்து ஆண்டுகள் முடிவடைந்திருந்தால், இந்த திட்டத்தின் கீழ்  உள்ள நிறுவனத்தின் அனுபவத்தை சார்ந்து வெளியேறும் நேரத்தில் பாலிசியில் போனஸ் கூடுதல் பெறும் உரிமையானது திட்ட முதிர்வு அல்லது பாலிசி காலத்தில் கிடைக்கும்.

எல்‌ஐ‌சி நவ்ஜீவன் விருப்ப சலுகை பயன்பெறுபவர்

தற்செயலான மரணம் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான சலுகை பயன்பெறுபவர்

தற்செயலான மரணம் ஏற்பட்டால், இந்த திட்டத்தின் கீழ் விபத்துக்கான சலுகை பயன் பெறுபவர் காப்பீட்டு தொகையுடன் இறப்பிற்கான ஒரு மொத்த தொகை உறுதியாக வழங்கப்படும்.

அதிகபட்ச விபத்து சலுகைக்கான உறுதிப்படுத்தப்பட்ட  தொகை

இந்த அடிப்படை திட்டத்தின் கீழ் இறப்பிற்கான உறுதி செய்யப்பட்ட  தொகையானது ஏற்கனவே வழங்கப்பட்ட பாலிசிக்கும் சேர்த்து அதிகபட்சமாக 100 லட்சம் வரையிலும் வழங்கப்படும்.

எல்‌ஐ‌சி நவ்ஜீவன் தகுதி

குறைந்த பட்ச காப்பீட்டு தொகை

ரூபாய். 1,00,000

அதிக பட்ச காப்பீட்டு தொகை

வரம்பு இல்லை

குறைந்த பட்ச நுழைவு வயது

ஒற்றை பிரீமியம் : 90 நாட்கள் (முடிவடைந்து இருக்க வேண்டும்)


வரையறுக்கப்பட்ட பிரீமியம் : 90 நாட்கள் (முடிவடைந்து இருக்க வேண்டும்) தேர்வு 1 ன் கீழ்


வரையறுக்கப்பட்ட பிரீமியம் : 45 ஆண்டுகள் (பிறந்த நாளுக்கு அருகில்) தேர்வு 2 ன் கீழ்அதிக பட்ச நுழைவு வயது

ஒற்றை பிரீமியம் : 44 ஆண்டுகள் (பிறந்த நாளுக்கு அருகில்)

வரையறுக்கபட்ட பிரீமியம் : 60 ஆண்டுகள் (பிறந்த நாளுக்கு அருகில்) தேர்வு 1 ன் கீழ்


வரையறுக்கபட்ட பிரீமியம் : 65 ஆண்டுகள் (பிறந்த நாளுக்கு அருகில்) தேர்வு 2 ன் கீழ்
அதிக பட்ச முதிர்வு வயது

ஒற்றை பிரீமியம் : 62 ஆண்டுகள் (பிறந்த நாளுக்கு அருகில்)

வரையறுக்கப்பட்ட பிரீமியம் : 75 ஆண்டுகள் (பிறந்த நாளுக்கு அருகில்) தேர்வு 1 ன் கீழ்


வரையறுக்கப்பட்ட பிரீமியம் : 80 ஆண்டுகள் (பிறந்த நாளுக்கு அருகில்) தேர்வு 2 ன் கீழ்
பாலிசி காலம்

10 முதல் 18 ஆண்டுகள்

செலுத்தும் முறைகள்

ஒற்றை பிரீமியம் ( மொத்த தொகை) வருடாந்திரம், அரை வருடாந்திரம், காலாண்டு, மாதாந்திரம் (என்‌ஏ‌சி‌எச் மூலம் மட்டும்)

எல்‌ஐ‌சி நவ்ஜீவன் திட்டத்தின் பிரீமிய கணக்கீடு

ஒரு நபர் வரையறுக்கபட்ட பிரீமிய முறையை தேர்வு செய்தால்  பிரிமியம் செலுத்தும் காலவரையறை 5 ஆண்டுகள் ஆகும். காப்பீட்டு தொகை 10 லட்சம் ஆகும், காப்பீட்டாளர் முதல் வருடத்திற்கு மாதம் தோறும் ரூபாய் 9628 செலுத்த வேண்டும். மேலும் அதை போலவே இரண்டாவது வருடம்  முதல் ரூபாய் 9430 செலுத்த வேண்டும். 15 வருடங்கள் கழித்து முதிர்வு காலத்தின் போது, காப்பீட்டாளர் ரூபாய் 10 லட்சம் போனஸ் கூடுதலுக்கான  உரிமை உள்ளது. காலவரையறைக்கான ஒற்றை பிரீமியம் செலுத்தும் போது, 15 வருடங்களுக்கு 10 லட்சம் காப்பீட்டு தொகைக்காக,  ஒரு நபர் ஒரே ஒரு முறை மட்டுமே ரூபாய் 501287 செலுத்த வேண்டும், முதிர்வு காலத்தின் போது 10 லட்சத்துடன் போனஸ் கூடுதல் சேர்த்து  திரும்ப கிடைக்கும்.

எடுத்துக்காட்டு

ஒற்றை பிரீமியம்

ஒற்றை பிரீமிய திட்டத்தின் கீழ் தேர்தெடுக்கப்பட்ட காப்பீட்டு தொகையின் அட்டவணை பிரீமியத்தின் 10 மடங்காக  இறப்பு சலுகையானது இருக்கும்.

எடுத்துக்காட்டு 1

பாலிசிதாரர் வயது – 39 ஆண்டுகள்

பாலிசி காலம் – 12 ஆண்டுகள்

அடிப்படை காப்பீட்டு தொகை – ரூபாய். 600000

அட்டவணை ஒற்றை பிரீமியம் – ரூபாய் 439750

இறப்பின் மீதான காப்பீட்டு தொகை = (ரூபாய். 600000/- அல்லது 10 x ரூபாய் 439750)= ரூபாய். 43,97,500/-

வரையறுக்கப்பட்ட பிரீமிய வழக்கு 1

எடுத்துக்காட்டு 2 - பாலிசிதாரரின் விருப்ப தேர்வு 1

பாலிசிதாரர் வயது – 40 ஆண்டுகள்

பாலிசி காலம் – 12 ஆண்டுகள்

அடிப்படை காப்பீட்டு தொகை – ரூபாய். 400000

பிரீமியம் செலுத்தும் விதம் – அரையாண்டு

அட்டவணை ஒற்றை பிரீமியம் – ரூபாய் 60635

இறப்பின் மீதான காப்பீட்டு தொகை= (ரூபாய். 500000/- அல்லது 10 x ரூபாய் 60635)= ரூபாய். 606350/-

வரையறுக்கப்பட்ட பிரீமிய வழக்கு 2

எடுத்துக்காட்டு 3 - பாலிசிதாரரின் விருப்ப தேர்வு 2

பாலிசிதாரர் வயது – 50 ஆண்டுகள்

பாலிசி காலம் – 12 ஆண்டுகள்

அடிப்படை காப்பீட்டு தொகை – ரூபாய். 600000

பிரீமியம் செலுத்தும் விதம் – அரையாண்டு

அட்டவணை ஒற்றை பிரீமியம் – ரூபாய் 81211

இறப்பின் மீதான காப்பீட்டு தொகை = அதிகபட்சமாக (ரூபாய். 500000/- அல்லது 7 x ரூபாய் 81211) = ரூபாய். 568477/-

வரையறுக்கப்பட்ட பிரீமிய வழக்கு 3

எடுத்துக்காட்டு 4 - பாலிசிதாரரின் விருப்ப தேர்வு 2

பாலிசிதாரர் வயது – 45 ஆண்டுகள்

பாலிசி காலம் – 10 ஆண்டுகள்

அடிப்படை காப்பீட்டு தொகை – ரூபாய். 500000

பிரீமியம் செலுத்தும் விதம் – அரையாண்டு

அட்டவணை ஒற்றை பிரீமியம் – ரூபாய் 80000

இறப்பின் மீதான காப்பீட்டு தொகை =  அதிகபட்சமாக (ரூபாய். 500000/- அல்லது 7 x ரூபாய் 80000) = ரூபாய். 5,60000/-

- / 5 ( Total Rating)