எல்‌ஐ‌சி  ஜீவன் ஆனந்த் திட்டம்
 • term திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

கைபேசி எண்
பெயர்
பிறந்த தேதி

1

2

வருமான
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சிமற்றும் தனியுரிமைக் கொள்கையைஏற்றுக்கொள்கிறீர்கள்

எல்.ஐ.சியின் புதிய ஜீவன் ஆனந்த் திட்டமானது அடிப்படையில்  கவனத்தை கவரக்கூடிய பாதுகாப்பு மற்றும் சேமிப்புகளின் இணைப்பை வழங்குகின்ற இணைக்கப்படாத பங்குதாரர் திட்டமாகும். இந்த திட்டம் பாலிசிதாரர் ஆயுள் நாள் முழுவதும் தேவையான நிதி பாதுகாப்பை வழங்குகிறது.  அவர் / அவள் உயிருடன் இருக்கும் பட்சத்தில் இந்த திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசி கால முடிவில் மொத்த தொகையை வழங்குகிறது. இந்த திட்டம் கடன் வசதி மூலம் பணத்தேவைகளை கவனித்து கொள்கிறது. இது உங்களுக்கு தேவைப்படும் அவசியமான பாதுகாப்பை வழங்கும் ஒரு பாரம்பரிய சேமிப்பு காப்பீட்டு பாலிசி என்று சொல்லலாம். இந்த திட்டம் காப்பீட்டாளர் இறக்க நேர்ந்தால் தேவையான நிதி ஆதாரத்தை வழங்கக்கூடிய திட்டம் ஆகும். பாலிசி காலவரையறை முடிவில் உயிரோடு இருக்கும் பட்சத்தில் ஒரு பெரிய அளவு தொகையை வழங்குகிறது.  இந்த திட்டமானது எல்‌ஐ‌சி மூலமாக மிக அதிக அளவு விற்பனையான என்டௌமென்ட் திட்டங்களில் ஒன்றாகும்.

எல்‌ஐ‌சி ஜீவன் ஆனந்த்  திட்டத்தின் முக்கிய தனிச்சிறப்புகள்

 • இந்த திட்டம் செலுத்த வேண்டிய சலுகைகளை மேம்படுத்துவதற்கு போனஸ் அறிவிப்புகளை வழங்குகிறது.
 • நீங்கள் திட்ட கால வரையறை முழுவதும் பிரிமியத்தை செலுத்த வேண்டும்
 • இந்த திட்டமானது  தற்செயலான மரணம் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான கூடுதல் சலுகைகளுக்காக  பயன்பெறுபவர் திட்டத்தை கூடுதலாக எடுத்துக்கொள்ளும் போது , தற்செயலான மரணம்  மற்றும் உடல் ஊனமடைவது நிகழும் பட்சத்தில்  கூடுதல் சலுகைகளை வழங்குகிறது .
 • திட்டமானது   ஒப்படைவு மதிப்பை பெரும் போது திட்டத்தின் கீழ்  கடன் பெற முடியும்.
 • அதிக அளவு காப்பீட்டு தொகை தேர்வு செய்யப்படும் போதும் பிரீமியத்தை  வருடாந்திரம் மற்றும் அரை வருடமாக செலுத்தப்ப டும் போதும் பிரீமியத்திற்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

எல்‌ஐ‌சி ஜீவன் ஆனந்த்  திட்டத்தின் சலுகைகள்

இறப்பு சலுகைகள்

அனைத்து நிலுவை  பிரீமியங்களும் செலுத்தபட்டு இருக்கும் போது,  பின்வரும் இறப்பு சலுகைகளானது  வழங்கப்படுகிறது:

வரையறுக்கப்பட்ட இறப்பிற்கான உறுதி செய்யப்பட்ட காப்பீட்டு தொகையுடன்: நிலையான எளிய மறுமதிப்பீடு போனஸ் மற்றும் இறுதி கூடுதல் போனஸ், இதில் ஏதாவது இருந்தால் அந்த தொகையும் சேர்த்து  வழங்கப்படும். வரையறுக்கப்பட்ட இறப்பிற்கான உறுதிசெய்யபட்ட அதிகபட்ச காப்பீட்டு தொகையானது அடிப்படை காப்பீட்டு தொகையின்  125% மாக இருக்கும் அல்லது வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்குகளாக இருக்கும். இறப்பு காலம் வரை செலுத்தப்பட்ட பிரீமியத்தின் மீது இறப்பு சலுகைகளானது  105% க்கும் குறைவாக இருக்காது.

இலாபங்களில் பங்கேற்பு: நிறுவன ஆதாயங்களில் பாலிசியானது  பங்கேற்கிறது.  நிறுவன அனுபவத்தை பொறுத்து  பாலிசி காலத்தில் பாலிசியானது  நடைமுறையில் இருக்கும் போது நிலையான எளிய மறுமதிப்பீட்டு போனஸ் என்ற தலைப்பின் கீழ் லாபத்தை வழங்குகிறது.  

பாலிசி கால வரையரையின் போது இறப்புக் கோரிக்கைக்கான முடிவில் இறுதி (கூடுதல்) போனஸை வழங்கலாம். அல்லது பாலிசி முழு திறனுடன் மற்றும்  உறுதியாக மிக குறைந்த காலத்திற்கு இயங்கும் போது தொடர்ந்து வாழ்தலுக்கான சலுகை தொகையை வழங்குகிறது.

விருப்ப சலுகை

 எல்‌ஐ‌சியின் தற்செயலான  விபத்து மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான சலுகை பயன்பெறுபவர்: நீங்கள் கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம் பயனாளி  சலுகையை தேர்வு செய்யலாம். பாலிசி கால வரையரையின் போது எதிர்பாராத  மரணம் நிகழ்ந்தால், அடிப்படை திட்டத்துடன் கூட  உறுதி செய்யப்பட்ட விபத்துக்கான  சலுகையாக ஒரு மொத்த தொகையானது வழங்கப்படும். விபத்தின் காரணமாக நிரந்தர ஊனம் ஏற்பட்டால் விபத்துக்கு வழங்கப்படும் தொகை  (விபத்து நாளிலிருந்து 180 நாட்களுக்குள்) விபத்து சலுகைக்கான காப்பீட்டு தொகைக்கு சமமாக இருக்கும். இந்த தொகை 10 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் தவணை முறையில் கொடுக்கப்படுகிறது. மற்றும் அடிப்படை உறுதி செய்யப்பட்ட தொகைக்கான பிரிமியத்தின்  ஒரு பகுதியானது,  எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய  விபத்து சலுகைக்கான காப்பீட்டு தொகைக்கு சமமாக இருக்கும்  விபத்து சலுகை காப்பீட்டு தொகையானது தள்ளுபடி செய்யப்படும்.

எல்‌ஐ‌சி ஜீவன் ஆனந்த் தகுதி வரன்முறைகள்

 • குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டு தொகை: ரூ. 100,000
 • அதிகபட்ச அடிப்படை காப்பீட்டு தொகைக்கு: வரம்பு இல்லை (அடிப்படை காப்பீட்டு தொகை ரூபாய் 5000 /_ மடங்குகளாக இருக்கும்)
 • குறைந்த பட்ச நுழைவு வயது: 18 ஆண்டுகள் (முடிவடைந்து இருக்கவேண்டும்)
 • அதிகபட்ச நுழைவு வயது : 50 ஆண்டுகள் (பிறந்தநாளுக்கு அருகில்)
 • அதிகபட்ச முதிர்வு வயது : 75 ஆண்டுகள் ( பிறந்தநாளுக்கு அருகில்)
 • பாலிசியின் குறைந்தபட்ச கால அளவு: 15 ஆண்டுகள்
 • பாலிசியின் அதிகபட்ச கால அளவு: 35 ஆண்டுகள்
 

குறைந்தபட்சம்

அதிகபட்சம்

காப்பீட்டு தொகை ரூபாய்

ரூபாய். 100,000

வரம்பு இல்லை

பாலிசி காலம் (ஆண்டுகள்)

15

35

பிரீமியம் செலுத்தும் காலம் (ஆண்டுகள்)

5

57

பாலிசிதாரர் நுழைவு வயது (கடந்த பிறந்த நாள்)

18 ஆண்டுகள்

50 ஆண்டுகள்

முதிர்வு வயது (கடந்த பிறந்த நாள்)

_

75 ஆண்டுகள்

செலுத்தும் விதம்

வருடாந்திரம் , அரை வருடம், காலாண்டு, மாதாந்திரம்

ஜீவன் ஆனந்த் திட்டமானது எவ்வாறு வேலை செய்கிறது?

இந்த திட்டத்தின் கீழ், பாலிசிதாரர் திட்டத்தின் காப்பீட்டு தொகை மற்றும் கால வரையறை ஆகியவற்றை தேர்வு செய்ய  முடியும். காப்பீட்டாளரின் வயது அடிப்படையில் காப்பீட்டு தொகை மற்றும் பாலிசி காலவரையறையை எல்‌ஐ‌சி தேர்வு செய்யும், இந்த திட்டத்தின் கீழ், பாலிசிதாரர் பாலிசி கால வரையறை முழுவதும் பிரீமியம் செலுத்த வேண்டும்.

காப்பீடு செய்யும் நபர் திட்டம் முடியும் வரை உயிருடன் இருக்கும் பட்சத்தில், முதிர்வு தொகை +பாலிசி காலவரையறை முழுவதும் பெற்றுள்ள போனஸ் தொகை + ஏதேனும் இறுதி கூடுதல் போனஸ் அறிவிக்கபட்டால் அதுவும் சேர்த்த தொகையானது உறுதிசெய்ய பட்ட தொகைக்கு சமமாக இருக்கும். இப்போது பாலிசிதாரர்  மரணம் அடைய நேரும் போது (பாலிசி கால வரையறைக்கு பிறகு கூட), இறப்பு சலுகைகளுக்கான உறுதியளிக்கப்பட்ட  தொகை கூடுதலாக நியமனதாரருக்கு கிடைக்கும்.

பாலிசி கால வரையறையின் போது பாலிசிதாரர் இறக்க நேரிடும் வழக்கில், நியமனதாரருக்கான இறப்பு சலுகைகள் பின்வருமாறு, இறப்பிற்கான காப்பீட்டு தொகை + இறப்பு காலம் வரையிலான நிலையான  போனஸ் + இறுதி போனஸ் ஏதேனும் இருப்பின் சேர்த்து கொடுக்கப்படுகிறது.

இறப்பிற்கான உறுதிசெய்யப்பட்ட அடிப்படை காப்பீடு தொகையில் 125% க்கு அதிகமாகவும் அல்லது வருடாந்திர பிரீமியம் செலுத்துதலில் 10 மடங்கோ, அல்லது  குறைந்த பட்சம் இறப்பு வரை செலுத்தப்பட்ட பிரிமியங்களின்  105% மாக இருக்கும்.

எல்‌ஐ‌சி ஜீவன் ஆனந்த் திட்டத்தின் பயனாளி

தற்செயலான இறப்பு மற்றும் உடல் ஊனமுற்றோர் சலுகை பயன் பெறுபவர்

 • விபத்து சலுகைகளுக்கான குறைந்த பட்ச காப்பீட்டு தொகை: ரூபாய். 100,000
 • விபத்து சலுகைகளுக்கான அதிகபட்ச காப்பீட்டு தொகை: இந்த திட்டத்தின் கீழ் அடிப்படை காப்பீட்டு தொகைக்கு சமமான அதிகபட்ச தொகையானது தனிநபர் மற்றும் குழு திட்ட பாலிசிகள் போன்ற அனைத்து பாலிசிகளுக்கும் ரூபாய் 100 லட்சமானது பொருந்தும். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமானது விபத்துக்கான உறுதிப்படுத்தப்பட்ட தொகையுடன் விபத்து சலுகைகளை புதிய திட்டத்தில் வழங்குகிறது (விபத்துக்கான உறுதிசெய்யப்பட்ட தொகையானது ரூபாய் 5000/- மடங்காக இருக்கும்) .
 • குறைந்த பட்ச நுழைவு வயது: 18 ஆண்டுகள் (முடிவடைந்து இருக்க வேண்டும்)
 •  அதிகபட்ச நுழைவு வயது: பாலிசி காலவரையின் போது எந்தவொரு பாலிசி ஆண்டிலும் இந்த பாதுகாப்பை தேர்வு செய்யலாம். ஆனால் பாலிசி முதிர்வு ஆண்டுக்கு முன்பு ஆயுள் காப்பீட்டிற்கான வயது 70 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
 • அதிக பட்ச பாதுகாப்பு நிறுத்தும் வயது: 70 ஆண்டுகள் (பிறந்த நாளுக்கு அருகில்) அல்லது பாலிசி காலவரையறை முடிவில், இதில் எது முன்னதாக வருகிறதோ அந்த காலம் ஆகும்.

ஜீவன் ஆனந்த் திட்டத்தின் பிரிமியம் செலுத்துவதற்கான விளக்கப்படம்

வெவ்வேறு வயதினருக்கான ஆரோக்கியமான மற்றும் புகையிலை பயன்படுத்தாத ஆண்களுக்கான பாலிசி காலம் மற்றும் பிரிமியம் செலுத்த வேண்டிய மாதிரி அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கான காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது.

வயது

15 ஆண்டுகள்

25 ஆண்டுகள்

35 ஆண்டுகள்

20 ஆண்டுகள்

ரூபாய். 39,525

ரூபாய். 22,150

ரூபாய். 14.975

30 ஆண்டுகள்

ரூபாய். 41,225

ரூபாய். 23,375

ரூபாய். 16,150

40 ஆண்டுகள்

ரூபாய். 44,100

ரூபாய். 25,700

ரூபாய். 18,550

வரியின் பங்கு

பிரீமியம் - வருமான வரி சட்டபிரிவு 80சி ன் படி இந்த திட்டத்தின் கீழ் செலுத்தப்படும். அனைத்து பிரீமியங்களுக்கும் வரி கிடையாது. ஒரு நபருக்கு ரூபாய் 1.5 லட்சம் வரையிலும் வரிவிலக்கு அளிக்கப்படும். இந்த விலக்கை கோருவதற்க்கு, காப்பீட்டு தொகை 10% தேர்வு செய்யும் பொது பிரீமியத்திற்கு வறையரைப்படுத்தபடும்.

முதிர்ச்சி கோரிக்கை - முதிர்வு தொகைக்கு சட்டப் பிரிவு 10 (10டி) யின் கீழ் வரி கிடையாது, இந்த விலக்கிற்கு உரிமைகோர, குறைந்தபட்சமாக செலுத்தப்பட்ட பிரீமிய தொகையின் 10 மடங்காக காப்பீட்டு தொகை இருக்க வேண்டும்.

இறப்பு கோரிக்கை-

பெறப்பட்ட இறப்பு கோரிக்கைகளுக்கு சட்டப் பிரிவு 10 (10டி) யின் கீழ் வரி கிடையாது, அதிகபட்சமான இறப்பு கோரிக்கைகளுக்கும் வரிவிலக்கு உண்டு  

எல்‌ஐ‌சி  ஜீவன் ஆனந்த் பற்றிய கூடுதல் விவரங்கள்

கருணை காலம்

பிரீமியம் செலுத்துவதற்கான கருணைக் காலம் முப்பது நாட்கள் ஆகும். பாலிசிதாரர் தாமதமாக பிரீமியத்தை செலுத்தினால் பாலிசியின் கெடு முடிவடைந்து விடும். எனினும், பாலிசிதாரர் செலுத்தப்படாத பிரீமியத்தின் முதல் தேதி முதலாக இரண்டு வருடங்களுக்குள் செலுத்த அனுமதிக்கப்படுகிறார். அனைத்து பிரீமியங்களும் நிர்ணயித்த நேரத்திற்குள் செலுத்தப்படுவதன் மூலம் முடிவடைந்த எல்‌ஐ‌சி ஜீவன் ஆனந்த் திட்டத்தை புதுப்பிக்க முடியும்.

ரத்து செய்தல்

காப்பீடு செய்யும் நபர் திட்டத்தை ரத்து செய்யும் தேர்வும் உள்ளது, திட்டம் தொடங்கியதில் இருந்து பதினைந்து நாட்களுக்குள் ரத்து செய்ய முடியும். இதுவரை அவ்வாறு எந்த ஒரு கோரிக்கையும் எழவில்லை.

ஒப்படைவு மதிப்பு சலுகைகள்

பாலிசி மூன்று ஆண்டுகள் நிறைவுற்றவுடன், பாலிசி ஒப்படைவு மதிப்புக்கான  சலுகையை பெற தகுதி உடையது. இந்த திட்டத்தின் மூலம் பாலிசிதாரருக்கு மற்றொரு சலுகையான பாலிசிக்கு எதிராக கடன் பெரும் சலுகையும் உள்ளது.

இவ்வாறு நடந்தால் என்ன செய்வது

பாலிசிதாரர் தற்கொலை செய்துகொண்டால்

பாலிசி தொடங்கிய நாளிலிருந்து பன்னிரண்டு மாதங்களுக்குள் பாலிசிதாரர் தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் செலுத்திய தேதி வரை பிரீமியத்தின் என்பது சதவிகிதமானது நியமனதாரருக்கு வழங்கப்படும்.

பாலிசிதாரர் திட்டம் புதுபித்தலுக்கு பிறகு இறக்க நேரிட்டால், இறப்பு வரை செலுத்திய பிரீமியத் தொகையிலிருந்து அதிகபட்சமாக என்பது சதவிகிதம் அல்லது பெற்றிருக்கும் ஒப்படைவு மதிப்பானது நியமனதாரருக்கு வழங்கப்படும்.

எல்‌ஐ‌சி  ஜீவன் ஆனந்த் வேண்டிய ஆவணங்கள்

இந்தக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யும் நபருக்கு தேவையான ஆவணங்களும் காப்பீட்டு தொகையும் மற்றும் செலுத்த வேண்டிய  பிரீமியமும் மேற்கோள் காட்டவேண்டும். பாலிசிக்கு தேவையான சில ஆவணங்களை விண்ணப்பபடிவத்தில் சரியாக நிரப்ப வேண்டும், பாலிசி யாருடய பெயரில் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான வயது சான்று, பான் அட்டை மற்றும் கே‌ஒய்‌சி ஆவணங்கள், ஆதார் அட்டை, மற்றும் வரி செலுத்தும் விவரங்களையுயம் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு மருத்துவ அறிக்கையும் சமர்பிக்க வேண்டும். மற்றும் ஏதாவது பிரச்சனை இருந்தால் நோய் பற்றிய அறிக்கையும் சமர்பிக்க வேண்டும்.

பொதுவான தகவல்கள்

கிடைக்க கூடியவை

எல்.ஐ.சி. புதிய ஜீவன் ஆனந்த் திட்டமானது இந்திய குடிமக்கள் அல்லாமல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் திட்டமானது கிடைக்கிறது. காப்பீடு செய்ய விரும்பும் போது அவர்களுக்கு பாலிசியானது கிடைக்க கூடியதாக இருக்கிறது, இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து காப்பீட்டு திட்டத்தை வாங்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

காப்பீட்டை பெறுவதற்கு

ஒரு நபர் அவர் / அவள் ஒரு முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் சேர்த்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தால் திட்டத்தை பெற தகுதியுடையவர் ஆகிறார். எல்‌ஐ‌சி ஆல் மேற்கண்டவை சரிபார்ப்பு செய்யப்படும் மேலும் சரிபார்த்தல் முடிந்தவுடன், உறுதி செய்யபட்ட பிறகு  வாடிக்கையாளருக்கு 15 முதல் 20 நாட்களுக்குள் அனுப்பப்படும். காப்பீட்டு சட்டம் 45ன் கீழ், கொடுக்கப்பட்ட தகவல்கள் ஏமாற்றும் படியாகவோ அல்லது நம்ப முடியாததாகவோ இருந்து நிறுவனம் அதனை கண்டுபிடித்தால், 1938 நிறுவன சட்டப்படி திட்டத்தை ஒப்படைக்க வேண்டும்.

எல்‌ஐ‌சி  ஜீவன் ஆனந்த் கோரிக்கைக்கான நடைமுறை

இறப்பு வழக்கில்

பாலிசிதாரரின் மரணத்திற்கான கோரிக்கையை பெறுவதற்கு, பாலிசிதாரரால் உரிமையாளர் என நியமிக்கபட்டவர் கோரிக்கை படிவத்துடன் எல்‌ஐ‌சி மூலமாக வழங்கபட்ட காப்பீடு செய்ப்பட்டவரின் பெயரில் உள்ள அசல் பாலிசி ஆவணங்கள் காண்பிக்கப்பட வேண்டும். இத்துடன் கூடுதலாக, தேவைப்படும் அனைத்து விவரங்களுடன் வங்கி கணக்கு விவரங்கள், மருத்துவ சிகிச்சை விவரங்கள், மற்றும் இறப்பு சான்றிதழ் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.

முதிர்வு வழக்கில்

பாலிசி முதிர்வு அடைந்தவுடன் கோரிக்கையை பெற பாலிசிதாரர்  வெளியீட்டு படிவத்துடன் பாலிசிதாரருக்கு சாதகமாக எல்‌ஐ‌சி வழங்கிய பாலிசியின் அசல் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். தனது கணக்கில் பணத்தை மாற்ற பாலிசிதாரர் வங்கி விவரங்களையும் வழங்க வேண்டும்.

ஒப்படைவு வழக்கில்  

ஒரு பாலிசியை ஒப்படைவு செய்யும் போது வெளியீட்டு படிவம் இணைக்கப்பட வேண்டும், எல்‌ஐ‌சியால் வழங்கப்பட்ட முன்னுரிமை ஆவணங்களுடன் மேலும் அனைத்து சான்றிதழ்களும் சமர்பிக்க வேண்டும். ஒப்படைவு மதிப்பை பெற பாலிசிதாரர் வங்கி கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டும்.