பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டம்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

கைபேசி எண்
பெயர்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

உங்கள் வாழ்க்கையில் முதுமை வயதானது கடினமான பகுதியாக கருதப்படுகிறது. நீங்கள் உடல்ரீதியாக பலவீனமாவது மட்டுமல்லாமல்  பொருளாதார ரீதியாகவும் சார்ந்திருப்பீர்கள். பணி ஒய்வு பெற்ற பின்னர் வழக்கமாக ஓய்வூதியத்தின் ஆதரவுடன் அவர்/அவள் ஓய்வாக வாழ்க்கையை வழிநடத்தலாம் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் உண்மை நிலைமை  முற்றிலும் வேறாக இருக்கும். உங்களுக்கு வயதாகி விட்டால், உங்கள் உடல்நல தேவைகள் அதிகரிக்கும் போது, மனித உடலில் இந்த வேளையில் பல்வேறு உயிரியல் பிரச்சினைகள் ஏற்படுகிறது, இதனால் மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. ஒரு மருத்துவ சிகிச்சைக்கான இந்த நாட்களானது உங்கள் பாக்கெட்டில் ஏற்படும் ஒரு துளை என்பதால், ஒரு நிதி உதவியை வழங்குவதற்காக எல்.ஐ.சி (ஆயுள் காப்பீட்டு கழகம்) ஒரு புதிய பிரதான் மந்திர வயா வந்தனா யோஜனாவுடன் வந்துள்ளது.

பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா ஒரு முறை மட்டுமே பிரீமியம் செலுத்தும் ஓய்வூதிய திட்டமாகும். இந்த ஓய்வூதியத் திட்டம் ஓய்வூதியம் பெறுவது அல்லது கொள்முதல் விலை ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அனைத்து புதிய பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா 2017 ஆம் ஆண்டின் 4 ஆம் தேதி தொடங்கப்பட்டு,  2018 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி வரையும் விற்பனை செய்யப்படும்.  இது ஒரு அரசு உதவி பெரும் மானிய ஓய்வூதிய திட்டமாகும் இது ஆண்டுக்கு 8 சதவிகிதம் உறுதிசெய்யப்பட்ட வருவாயை அளிக்கிறது,  இது வாழும் ஓய்வூதியதாரருக்கு 10 வருடங்கள் காலவரையில் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் சரக்குகள் மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு பெறுகிறது.  ஆன்லைனில் ஆன்லைன் கொள்முதலிலும் கிடைக்கும்.

அடிப்படை தகுதிகள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் 

 • இந்த திட்டத்திற்கு குறைந்தபட்சம் நுழைவு வயதானது 60 ஆண்டுகள் (நிறைவு) ஆகும்
 • இந்த திட்டத்திற்கு அதிகபட்சம் நுழைவுகள் இல்லை
 • பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனாவிற்கு பாலிசி காலமானது 10 வருட காலமாக உள்ளது
 • ஓய்வூதிய முறைகள் - ஆண்டு, அரை ஆண்டுகள், காலாண்டுகள் மற்றும் மாதந்தோறும்
 • குறைந்தபட்சம் கொள்முதல் விலை: மாதத்திற்கு ரூபாய். 1,44,578, காலாண்டிற்கு ரூபாய். 1,47,601, அரை வருஷதிற்கு ரூபாய் 1,49,068, மற்றும் வருடாந்திரதிற்கு ரூபாய். 1,50,000
 • அதிகபட்சமாக கொள்முதல் விலை: மாதத்திற்கு ரூபாய். 7,22,892, காலாண்டிற்கு ரூபாய். 7,38,007, அரை வருஷதிற்கு ரூபாய். 7,45,342, மற்றும் வருடாந்திரதிற்கு ரூபாய். 7,50,000
 • குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை: ரூபாய் 1,000 மாதத்திற்கு, ரூபாய் 3,000 காலாண்டிற்கு, ரூபாய் 6,000 அரை ஆண்டிற்கு மற்றும் ரூபாய் 12,000 வருடத்திற்கு ஆகும்
 • அதிகபட்ச ஓய்வூதிய தொகை: ரூபாய் 5,000 மாதத்திற்கு, ரூபாய் 15,000 காலாண்டிற்கு, ரூபாய் 30,000 அரை ஆண்டுக்கு மற்றும் ரூபாய் 60,000 வருடத்திற்கு ஆகும்
 • இந்த திட்டங்களில் அதிகபட்ச ஓய்வூதியமானது ஒரு முழு குடும்பத்திற்கும், குடும்பத்தில் உள்ள மனைவி மற்றும் சார்ந்திருப்பவர்கள் ஆகியோர்களும் அடங்குவர்

ஓய்வூதியம் வழங்கீடும் முறைகள்

ஓய்வூதிய செலுத்துதல் முறைகள் மாதத்திற்கும், காலாண்டு, அரை வருடம் மற்றும் வருடாந்திரம். ஓய்வூதியம் செலுத்துதல் என்இஎஃப்டி அல்லது ஆதார் இணைக்கப்பட்ட பணம் வழங்கீடு அமைப்பு மூலமாக இருக்கும

பிஎம்விவிஒய் யின் கீழ் நன்மைகள்

 • முதிர்வு சலுகைகள் - பாலிசி காலவரையிலும் வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு, கொள்முதல் விலை மற்றும் இறுதி ஓய்வூதிய தவணையும் சேர்த்து ஓய்வூதியதாரருக்கு வழங்கப்படுகிறது 
 • இறப்பின் சலுகைகள் – பாலிசி காலத்தில் ஓய்வூதியதாரர் எதிர்பாராத சம்பவத்தில் இறக்கும் போது, நியமனதாரருக்கு கொள்முதல் விலை வழங்கப்படும்
 • ஓய்வூதியம் செலுத்தும் முறைகள் - ஓய்வூதியதாரர் பாலிசி காலம்  முழுவதும் வாழும்போது, ஓய்வூதியம் செலுத்தும் முறைக்கு ஏற்ப ஓய்வூதியம் செலுத்துகிறது

ஒப்படைப்பு மதிப்புகள்

இந்த கொள்கையின் கீழ் ஒப்படைப்பு மதிப்பு கிடைக்கும். பாலிசிதாரர் சிகிச்சைக்காக பணம் தேவைப்படுவது போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் முதிர்ச்சிக்கு முன்னர் பாலிசி கால அளவிலிருந்து வெளியேற முடியும். தனக்கோ அல்லது மனைவியின் ஏதாவது தீவிர உடல்நிலை பாதிப்பு / முடிவுநிலை ஏற்படும் போது அத்தகைய சந்தர்ப்பங்களில் செலுத்த வேண்டிய சரண்டர் மதிப்பு, கொள்முதல் விலையில் 98% ஆக இருக்கலாம்.

கடன்

பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனாவின் கீழ் கடன் வசதிகள் உள்ளது. ஆனால் பாலிசி காலம் 3 ஆண்டுகள் முடிந்த பிறகு தான் இந்த வசதி கிடைக்கும். அதிகபட்சம் கடனுதவி 75% வரையிலும் கொள்முதல் விலையில் வழங்கப்படலாம். கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் எல்.ஐ.சி மூலம் அவ்வப்போது தீர்மானிக்கப்படும். பாலிசியின் கீழ் செலுத்தப்படும் ஓய்வூதியத் தொகையில் இருந்து கடன் வட்டிகள் மீட்கப்படும்.

சோதனை காலம்

பாலிசியின் "கொள்கை மற்றும் நிபந்தனை" களில் பாலிசிதாரர் திருப்தி இல்லையெனில், மறுப்பு தெரிவிக்கும் காரணத்தை குறிப்பிட்டு அந்த பாலிசி தொடக்க  நாளிலிருந்து அவன்/அவள் 15 நாட்களுக்குள் நிறுவனத்திற்கு திருப்பித் தரலாம் (இந்த கொள்கை ஆன்லைனில் வாங்கியிருந்தால் 30 நாட்களுக்குள்) இந்த வழக்கில் ஒய்வூதியதாரருக்கு முத்திரை கட்டணம் மற்றும் ஓய்வூதியத் தொகை (ஏதாவது இருந்தால்) மொத்த தொகையிலிருந்து கழித்து விடுவார்.

விதிவிலக்குகள்

தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இந்த பாலிசியின் கீழ் எந்தவொரு விலக்கலும் இல்லாமல்,  முழு கொள்முதல் விலையும் வழங்கப்படுகிறது.

வரி சலுகைகள்

இந்தக் திட்டத்தின் கீழ் வரி சலுகைகள் இல்லை அல்லது மேலும் இந்த திட்டம் மூலம் பெறப்படும் ஓய்வூதியத்தில் நீங்கள் பெறும் ஓய்வூதியமானது வரிக்கு உட்பட்டது. இது உங்கள் வருமானத்தில் சேர்க்கப்படும் மற்றும் நிலையான, வைப்புத்தொகைக்கு அளிக்கப்படும் வரி விகிதத்திலேயே வரி விதிக்கப்படும்.

குறைகள்

இந்த பாலிசியின் குறைபாடுகள்

 • இந்த தொகை 10 ஆண்டுகளுக்கு பூட்டப்பட்டுள்ளது, எனவே அவசரமாக தேவைப்படும் போது (தீவிர உடல்நல கோளாறுகள் தவிர) கிடைக்காது.
 • பணவீக்கத்தில் ஓய்வூதியமானது சரிசெய்யப்படவில்லை. பணவீக்கமானது 7 சதவீதமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, 10 ஆண்டுகளில் ரூபாய் 5,000 வாங்கும் திறன்களில் பேரில்  ரூ .2,500 ஆக குறைக்கப்படும்.

பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா (பிஎம்விவிஒய்) திட்டமானது குறிப்பாக பணிநிறைவிற்கு பின்னர் வழக்கமான வருமானம் தேடும் வயதானவர்களுக்கு ஒரு நல்ல மற்றும் எளிய தயாரிப்பு ஆகும்.