எல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டம்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

தொலைபேசி எண்
பெயர்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

இந்த எல்.ஐ.சி கொள்கை வாங்குவதற்கு கிடைக்கவில்லை. இது நிறுவனத்தால் விற்பனைக்கு மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் ஒன்றாக எப்போதும் எல்ஐசி உள்ளது. காப்பீடுகள் மற்றும் அதன் சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இதில் உள்ளது, இதுவே மற்றவற்றை விட இந்த ஒன்றை மக்கள் தேர்வு செய்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது. குடிமக்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரையறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்த பிறகு அவர்களுக்கான குறிப்பிட்ட ஒன்றை கண்டறிய இயலும். அண்மையில், எல்.ஐ.சியின் வரையறுக்கப்பட்ட பிரீமியம் என்டௌமென்ட் திட்டமானது அதனுடைய இரட்டை நோக்கங்களின் காரணமாக மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது. இது ஒரே நேரத்தில் சேமிப்பு மற்றும் பாதுகாப்பை கண்டறிவதற்குமான வாய்ப்பை பயனாளாருக்கு வழங்குகிறது.

எல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டம் என்றால் என்ன?

இந்த திட்டம் இரு செயல்களை செய்கிறது. முதலாவதாக,  இந்த திட்டமானது பாலிசிதாரரின் எதிர்பாராத விதமான இறப்பிற்கு பிறகு ஒரு குடும்பத்தினை பாதுகாக்க பொருத்தமானது. இரண்டாவதாக, முதிர்ச்சிக்கு பின்,  பாலிசிதாரருக்கு ஒரு அழகான தொகையினை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டின் இறுதிக்கு பிறகு, இந்த பாலிசியானது போனஸ் தொகையை வழங்குகிறது, இத்தொகையானது முதன்மை தொகையுடன் சேர்க்கப்படும்.

இதன் பெயரிலே குறிப்பிட்டடிருப்பது போல இந்த திட்டம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்குறிய சலுகை ஆகும். இதன் அர்த்தம், செலுத்த வேண்டிய பிரீமியங்களானது வரையறைக்குட்பட்டதாகும். ஒரு குறிப்பிட்ட வருடங்களின் இறுதிக்கு பிறகு,  பாலிசிதாரர் எதனையும் இனி செலுத்த வேண்டியதில்லை. இது இந்த திட்டத்தின் மிகவும் அழகான அம்சங்களில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக,  12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாலிசியானது முதிர்ச்சி அடைந்தால், பாலிசிதாரர் குறைந்தபட்சமாக 8 ஆண்டுகளுக்கான பிரீமியத்தை செலுத்த வேண்டும். அக்காலத்திற்கு பிறகு, அந்த கட்டணங்களை அவர்கள் தாங்கி செல்ல தேவை இல்லை. பாலிசிதாரர் முதிர்ச்சிக்கு முன்னர் எதிர்பாராத விதமாக இறந்துவிட நேர்ந்தால் மற்றும்  இயற்கையாக முதிர்ச்சி அடைந்திருந்தால்,  உண்மையான பாலிசியின் தொகையானது முழுமையாக செலுத்தப்படும்.

விண்ணப்பிப்பதற்கு உரிய வயது:

‘விரைவானது, சிறந்தது’ என்று இங்கே சொல்வது உரித்தானது. இந்த பாலிசிக்கு 18 வயதிற்கு மேற்பட்ட அவன் \ அவள் எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இந்த பிரீமியத்திற்கு விண்ணப்பிக்கும் அதிகபட்ச ஆண்டானது அது வழங்கும் வெவ்வேறு முதிர்ச்சி திட்டங்களை சார்ந்தது.

 • பாலிசி காலம் 12: இங்கே, பாலிசிதாரர் பிரீமியத்திற்கான ஆண்டினை 8 அல்லது 9 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியை தேர்வு செய்ய வேண்டும். 8 ஆண்டுகளில், அதிகபட்ச விண்ணப்ப வயது 57 ஆண்டுகள் ஆகும், மற்றும் 9 ஆண்டுகளில், அதிகபட்ச விண்ணப்ப வயதானது 62 ஆண்டுகள் ஆகும்.
 • பாலிசி காலம் 16: இங்கே, பாலிசிதாரர் பிரீமியத்திற்கான ஆண்டினை 8 அல்லது 9 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்வு செய்ய வேண்டும். பாலிசி காலங்களில் 8 மற்றும் 9 ஆண்டுகளில், அதிகபட்ச விண்ணப்ப வயதானது 59 ஆகும்.
 • பாலிசி காலம் 21: இங்கே, பாலிசிதாரர் பிரீமியத்திற்கான ஆண்டினை 8 அல்லது 9 ஆண்டுகளில் தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பத்திற்கான அதிகபட்ச வயதானது 54 ஆண்டுகள் ஆகும்.

எல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டத்தின் அம்சங்கள்

இந்த பிரீமிய பாலிசியில் குறிப்பிட்ட அம்சங்கள் உள்ளன

- பிரீமியத்தை மாதாந்திரமாக, காலாண்டாக, அரை வருடாந்திரமாக அல்லது வருடாந்திரமாக செலுத்தலாம். பாலிசிதாரர் அவர்களுக்கு பொருத்தமான ஒன்றை தேர்வு செய்யலாம்.

- இந்த பாலிசியுடனான முதிர்ச்சிக்கான குறைந்தபட்ச தொகை 300000 ஆக இருக்கும், அதிகபட்ச தொகைக்கு வரம்பு எதுவும் இல்லை.

- தற்செயலான இறப்பு சலுகைக்கான குறைந்தபட்ச தொகை 100000 மற்றும் அதிகபட்சமாக 1 கோடி ஆகும்.

- 12 வருட கால பாலிசி பிரீமியத்திற்கான அதிகபட்சமாக பாதுகாப்பு நிறுத்தப்படும் வயது 69 ஆண்டுகள் மற்றும் மற்றவர்களுக்கு 70 ஆண்டுகள் ஆகும்.

- பிரீமியங்களில் மாதாந்திரமாக செலுத்தும் முறையில் ஏற்படும் தாமதத்திற்கான கருணை காலம் அல்லது மிகை காலம் 15 நாட்கள் ஆகும் மற்றும் மற்ற பிரீமியம் செலுத்தும் முறைக்கு 30 நாட்கள் கருணை காலம் ஆகும்.  

எல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டத்தின் சலுகைகள்

எதிர்பாராத இறப்பு மற்றும் இயற்கையான முதிர்ச்சிக்கு பின்னர் ஆகிய இரண்டுக்கும் சலுகைகள் உள்ளது.

 1. இறப்புச் சலுகை: இந்த பிரீமியம் பாலிசியில் முதிர்வடைவதற்கு முன் பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால், செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்கள் மற்றும் தவனைகள் ஆகியவை அந்நபரின் குடும்பத்திற்கு வழங்கப்படும். ஆனால் இறப்பு சலுகை என்பது இதை விட சற்று அதிகமாக இருக்கும். இது “இறப்பிற்காக உறுதியளிக்கப்பட்ட தொகை” என்றும் பெயரிடப்பட்டுள்ளது,  இங்கு மறுமதிப்பீட்டு போனஸ்கள் மற்றும் கூடுதலான வருடாந்திர போனஸ்கள் (ஏதேனும் மீதமிருந்தால்) அந்நபரின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.

சாதாரண பாலிசிகளை விட இந்த பாலிசியானது வருடாந்திர பிரீமியங்களைப் போல 10 மடங்கு அதிக நன்மை பயப்பதாக அறியப்படுகிறது. இந்த பாலிசி தொடங்கப்பட்ட போது அடிப்படை தொகையின் 125% த்தை பெறுவதற்கான உத்தரவாதம் உள்ளது. இந்த தொகையானது பாலிசிதாரரின் இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களின் 105% த்தை விட குறைவாக இருக்காது. ஆனால் இந்த பிரீமியங்களானது சேவை வரி மற்றும் இதர செலுத்தக்கூடிய பிரீமியத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது.

 1. முதிர்வுக்குப் பின்னரான சலுகை: பிரீமியத்திற்கான முதிர்வு தொகை அல்லது "முதிர்ச்சிக்காக உறுதியளிக்கப்பட்ட தொகை" என்பது ஏதேனும் மறுமதிப்பீட்டு போனஸ்கள் மற்றும் கூடுதல் போனஸ்கள் இருந்தால் இதனுடனான அதே அடிப்படை தொகையாகும். அனைத்து பிரீமியங்களும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும், மேலும் பிரீமியத்தின் ஆண்டுகள் மற்றும் முதிர்வு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, மொத்த தொகையானது பாலிசிதாரருக்கு செலுத்தப்படும்.
 2. போனஸ்கள்: சாதாரணமாக, மறுமதிப்பீடு மற்றும் கூடுதலான இந்த போனஸ்கள் நிறுவனத்தின் முழுவதிற்குமான இலாபங்களில் பங்கெடுப்பதால் பெறுகின்றன. இவை நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டும், கோரப்பட்டும் உள்ளது மற்றும் இதன் வழியாக பாலிசியின் மொத்த பிரீமியமும் செயல்படும். இந்த பாலிசியானது இறுதியாக கோரப்படும் போது கூடுதலான இறுதி போனஸ் அந்த ஆண்டில் கொடுக்கப்படும். இது பாலிசிதாரரின் எதிர்பாராத இறப்பு வருடத்திலோ அல்லது இயற்கையான முதிர்ச்சிக்கு பிறகு உள்ள ஆண்டிலோ இருக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள முக்கிய சலுகைகளை தவிர,  இந்த பிரீமியம் பாலிசியின் எந்தவொரு பாலிசிதாரரும் சில விருப்ப சலுகைகளான பயன்பெறுவோர் சலுகைகளையும் பெறலாம்:

 • பிரீமியம் வைத்திருப்போரின் தற்செயலான இறப்பு அல்லது விபத்திற்கு பிறகு ஊனமுற்றோருக்காகவும் கோரிக்கையின் கீழ் எல்ஐசி யின் சலுகைகளானது வழங்கப்படும்.
 • பாலிசிதாரர்களுக்கு புதிய கால பயன்பெறுவோர் உத்தரவாதமானது உள்ளது.

இந்த பாலிசியின் அடிப்படை தொகையானது எப்போதும் இந்த பயன் பெறுவோர் சலுகைகளை விட பெரிய தொகையாக இருக்கும் என்பதை பாலிசிதாரர் மறவாதிருக்க வேண்டும். பயனாளிகள் இந்த பயன்பெறுவோர் சலுகைகளை பற்றி ஆன்லைன் தேடல்களிலிருந்து கற்றறிய வேண்டும்.

பிரீமியம் கணக்கிடுதல்

-பெயர்                                                              -வயது                                              -கைபேசி எண்

-மின்னஞ்சல் முகவரி                                        -உறுதியளிக்கப்பட்ட தொகை          -பாலிசி காலம்

-மற்றும் இறுதியாக, பிரீமியம் செலுத்தும் காலம்

கழிவு அல்லது தள்ளுபடி

இந்த பாலிசியில் பாலிசிதாரருக்கு இரு வகையான கழிவு அல்லது தள்ளுபடிகள் வழங்கப்படும். ஆனால் இது அடிப்படைத் தொகையையும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் அவர்களுக்கான செலுத்தும் முறையையும் சார்ந்து இருக்கும்.

- அடிப்படைத் தொகையானது ரூ 300,000 முதல் 490000 வரை இருந்தால்: பிரீமியம் செலுத்தும் முறையானது மாதாந்திரமாக, காலாண்டுகளாக இருக்கும் போது ஒவ்வொரு 1000 ரூபாய்க்கான தள்ளுபடியானது கிடையாது மேலும் சதவிகிதத்திற்கு கூட கிடையாது.

- அடிப்படைத் தொகையானது ரூ 500000 முதல் 990000 வரை இருந்தால்: அடிப்படை தொகையில் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் தள்ளுபடியானது 0.50% ஆக இருக்கும், மற்றும் செலுத்தும் முறையானது அரை வருடாந்திரமாக இருக்கும் பட்சத்தில் சதவீதமானது 1% ஆக இருக்கும்.

- அடிப்படைத் தொகையானது ரூ. 1000000 மற்றும் அதற்கு மேல் இருந்தால்: ஒவ்வொரு 1,000 ரூபாவிற்கும் தள்ளுபடியானது 0.75% ஆகும், மற்றும் செலுத்தும் முறை வருடாந்திரமாக இருக்கும் பட்சத்தில் சதவீதமானது 2% ஆக இருக்கும்.

பொதுமக்கள் மற்றும் எல்.ஐ.சியின் பணியாளர்கள் ஆகியோருக்கு சிஐஈஎஸ் பிரீமியத்தின் அனைத்து வகைகளிலும் 5% மானது தள்ளுபடியாக வழங்கப்படும்.

- / 5 ( Total Rating)