எல்.ஐ.சி சிங்கிள் பிரிமியம் என்டௌமெண்ட் திட்டம்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

கைபேசி எண்
பெயர்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

காப்பீட்டு திட்டங்களில் என்டௌமெண்ட் திட்டமானது அபாய நேர்விற்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் அதனுடன் கூட பொதுவாக திரும்ப பெறக்கூடிய உறுதியளிக்கப்பட்ட தொகையுடன் போனஸ் தொகையானது ஒவ்வொரு வருடமும் குறிப்பாக வழங்கப்படும். மறுமதிப்பீடு போனசும் சேர்த்து உறுதியாக அளிக்கப்படும். மேலும் இந்த சிறப்பான பாலிசி காலமானது பருவகால போனஸ் என்று அழைக்கப்படும். பாலிசி யின் விபரங்கள் மற்றும் தேர்ந்தெடுத்த காலத்தை சார்ந்து மேற்கோள் காட்டப்பட்ட தொகையானது இருக்கும். நீண்ட காலத்தை அடிப்படையாக கொண்ட இந்த திட்டத்தை பாலிசிதாரர் திட்டக் காலம் முழுவதும் வைத்திருக்கும் போது அவரின் மொத்த வருமானத்தை அதிகரிப்பதற்கு இது உதவியாக இருக்கும். மேற்கோள் காட்டப்பட்ட தொகையானது அதிகமாக  இருக்கும் பட்சத்தில்  ஒற்றை பிரிமிய பாலிசிக்கு  தள்ளுபடியானது இருக்கும்.

இந்த திட்டமானது  உண்மையில் அனைவருக்கும் பரிந்துரை  செய்யப்படுகிறது. ஏனெனில் அவர்கள் ஒரு நபரின்  ஆயுள்  காப்பீட்டுடன் முதலீட்டுக்கான நோக்கத்தையும் இணைத்து முழு சேவை ஆற்றுகிறார்கள். வருமான வரி சட்டத்தின்  கீழ்  திட்டத்தில் வரி சலுகைகள் வழங்கப்படுகிறது . பாலிசிதாரர் அபாய நேர்விலிருந்து தன்னை பாதுகாத்து கொள்வதற்கு கூடுதல் தொகையை செலுத்த வேண்டும். ஆனால் முதன்மை பாலிசிக்கு இந்த பாதுகாப்பு கிடையாது.            

இது பாலிசிதாரருக்கு மரபுவழி அடிப்படியில் என்டௌமெண்ட் உடனான இறப்பு மற்றும் முதிர்வு சலுகைகளை வழங்குகிறது, அத்துடன் போனசிற்கான சலுகைகளும்  வழங்கப்படுகிறது.  இந்த திட்டத்தில்,  தொடக்கத்திலேயே பிரிமியமானது  மொத்த தொகையாக  செலுத்தப்படுகிறது. எதிர்பாராத மரணம் ஏற்படும் போது அதிலிருந்து உங்களை பாதுகாக்கவும் மற்றும் முதலீட்டை பெறும் நோக்கத்தோடு  இந்த திட்டமானது சேவை செய்கிறது.  இந்த திட்டம் மக்களுக்கு வருவாய் சலுகைகள் மற்றும் பாதுகாப்பையும்  வழங்குகிறது, அதாவது அவர்களுக்கு தொகையானது குறுகிய காலத்தில் உறுதியாக திருப்பி அளிக்கப்படும்.  எல்.ஐ.சி யின் சிங்கிள்  பிரிமியம் உள்ளிட்ட  திட்டங்கள் பாலிசிதாரருக்கு காப்பீட்டு பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது  பாலிசிதாரருக்கு துரதிஷ்டவசமான நிகழ்வு ஏதேனும் ஏற்பட்டால் அவர் காப்பீடு செய்த மொத்த தொகையும் அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படும். அந்த நபர் மட்டுமே குடும்பத்தின் பாதுகாப்பிற்கான பொருளை ஈட்டுபவராக இருந்தால், இந்த திட்டத்தை பயன்படுத்துவதால் எந்த வித பிரச்சனைகளும் இருக்காது. எல்.ஐ.சி யின் ஒற்றை பிரிமியம் பாலிசியில் தள்ளுபடிகள் கூட உள்ளது. இத்திட்டதின் மூலம் கடன் பெற முடியும். இத்திட்டத்தின் மூலம் பாலிசியை பெறும் நபர்களுக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் வரி சலுகைகள் வழங்கப்படுகிறது.

எல்.ஐ.சி ஒற்றை பிரிமியம் என்டௌமென்ட் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

 • இந்த திட்டமானது 90 நாட்களிலிருந்து 65 வயதிற்கு இடைப்பட்ட எந்த ஒரு நபராலும் எடுக்கப்படலாம்.
 • அந்த நபர் பாலிசியின் வரையறை காலத்தின் முடிவு வரை வாழ்ந்து கொண்டிருக்கும் போது அல்லது  முன்னதாகவே ஏற்படும் இறப்பும்  ஏற்றுக் கொள்ளப்படும்.
 • பாலிசி ஆனது மேற்கோல் காட்டப்பட்ட மொத்த தொகையுடன் கூட தொகுக்கப்பட்ட போனஸும் சேர்த்து முடிவு கட்டப்படும்.
 • எல்‌ஐ‌சி ஈட்டும் லாபத்தில் இந்த பாலிசி ஆனது பங்கேற்கிறது இறுதி கூடுதல் போனஸ் அல்லது மறுமதிப்பீட்டு போனஸ் ஏதேனும் இருந்தால், அந்தத் தொகையை வழங்குகிறது.  
 • குறைந்தபட்சம் 50,000 தொகையிலிருந்து இந்த பாலிசியின் உறுதி செய்யப்பட்ட தொகை இருக்கும்.
 • அதிகபட்ச வரம்பு குறிப்பிடப்படவில்லை ஆனால் தொகையானது 5000 ன் மடங்காக இருக்க வேண்டும் .
 • இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச வயது 90 நாட்களாகும் மற்றும் 65 ஆண்டுகள் வரை இருக்கலாம்.
 • இந்த திட்டத்தில் முதிர்வு வயதானது குறைதபட்சம் 18 ஆண்டுகளாகும் மற்றும் அதிகபட்சமாக 75 ஆண்டுகள்  இருக்க  வேண்டும். பாலிசிதாரர் 8 வயதிற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் அபாய நேர்வுக்கான பாதுகாப்பு காலமானது பாலிசி தொடங்கியதிலிருந்து  2 ஆண்டுகளுக்கு பிறகு  அல்லது எல்.ஐ.சி யின் சிங்கிள் பிரிமியம் பாலிசியின் ஒத்திசைவு ஆண்டு நிறைவில் தொடர்ந்து உடனே அந்த நபர் 8 வயதை அடையும் போது தொடங்கும்.  
 • பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை பாலிசி காலமானது  இருக்கலாம்.

எல்.ஐ.சி சிங்கிள் பிரிமியம் என்டௌமென்ட் பாலிசிகான சலுகைகள்

முதிர்வடைந்த பாலிசி

உயிரோடு இருக்கும் பட்சத்தில்: பாலிசிதாரர் பாலிசியின் இறுதி  காலம் வரையிலும் இருக்கும் போது, மேற்கோள் காட்டப்பட்ட தொகையுடன் கூடுதலான  இறுதி போனஸ்  மற்றும் எளிய  மறுமதிப்பீட்டு போனஸ் இதில் ஏதாவது ஒன்றானது பாலிசியின் முதிர்வு சலுகைகளின் கீழ் காப்பீட்டாளருக்கு வழங்கப்படும். இந்த பாலிசியின் கீழ் ஒவ்வொரு வருடமும் மேற்கோள் காட்டப்பட்ட தொகையின் மீது குறிப்பிட்ட சதவிகிதமானது  எளிய மறுமதிப்பீட்டு போனஸாக அறிவிக்கப்படும். போனஸ் தொகையின் காரணமாக உறுதி செய்யப்பட்ட  தொகையானது அதிகரிக்கப்படாது. இந்த பாலிசியின் முடிவில், காப்பீட்டாளர் அனைத்து பிரீமியங்களையும் குறித்த காலத்தில் செலுத்தி இருக்கும் பட்சத்தில், கூடுதலான இறுதி போனஸானது அறிவிக்கப்படலாம். பாலிசிதாரரை ஊக்கமளிக்கும் வகையில் இந்த இறுதி போனஸானது தரப்படுகிறது.

ஒருவேளைஇறப்பு நேரிடும் போது: பாலிசிதாரர் பாலிசியின் கால வரையறைக்குள் இறக்க நேரிடும் போது மேலும் அவர் ஒற்றை பிரிமியம் மட்டும் செலுத்தப்பட்டிருப்பதால், அந்த தொகை மட்டும் நியமனதாரரிடம் கொடுக்கப்படும். ஏனெனில் ஆபத்து நேர்விற்கான பாதுகாப்பு தேதி தொடங்குவதற்கு முன்பாகவே அந்த நபர் இறந்து விடும் போது இந்த நிகழ்வானது நடக்கும். பாலிசிதாரர் ஆபத்து நேர்விற்கான பாதுகாப்பு தேதி  தொடங்கியதற்கு பின்பு இறக்க நேரிடும் போது, அதன் பிறகு உறுதி செய்யப்பட்ட கூடுதல் தொகையுடன் சேர்த்து போனசும் இறப்பு சலுகையாக வழங்கப்படுகிறது. உறுதி செய்யப்பட்ட தொகையானது  மிகப்பெரிய  மதிப்பை பெற்றிருந்தால் தள்ளுபடியும் கிடைக்கிறது.

கடன்சலுகை

பாலிசியின் முதல் ஆண்டிற்கு பிறகு, பாலிசியின் மூலம் கடன் பெற முடியும்.

வருமானவரிசலுகைகள்

பாலிசிதாரரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கும் மற்றும் பிரிமியம் செலுத்தப்படுவதற்கும் வருமான வரி சலுகைகளானது வழங்கப்படுகிறது.

நீங்கள் பாலிசியில் ஒப்படைவு செய்யும் போது என்ன நடக்கும்?

உத்திரவாதமளிக்கப்பட்ட ஒப்படைவு மதிப்பை இந்த பாலிசியானது  பெற்றுள்ளது. பாலிசியின் ஒரு வருடத்திற்குள் காப்பீடு செய்த நபர்  ஒப்படைவு செய்தால்,  70% பிரீமியமானது திருப்பி கொடுக்கப்படுகிறது. பாலிசிதாரர் பாலிசியின் இரண்டு வருடத்திற்குள் அல்லது அதைவிட அதிகமான காலத்தில்   ஒப்படைவு செய்தால், 90% மான பிரீமியமானது பாலிசிதாரருக்கு திருப்பி கொடுக்கப்படுகிறது. காப்பீடு செய்த நபர் நிலையான மறுமதிப்பீட்டு போனஸிற்கு தகுதியுடையவராவார்.

பாலிசியை பற்றிய கூடுதலான தகவல்

வயதுவரம்பு:

எப்போதுமே, இந்த  பாலிசிக்கு  கருணை  காலமானது கிடையாது;  எல்.ஐ.சி சிங்கிள்  பிரிமியம்  என்டௌமென்ட் பாலிசிக்கு  சோதனை காலமானது   உள்ளது. பாலிசியின் மூலம் நீங்கள் திருப்தி அடையாமலிருந்தால் அதனை ரத்து செய்து கொள்வதற்கான காலமாக  இது கருதப்படுகிறது. பாலிசி ஆவணத்தை பெற்றதிலிருந்து 15 நாட்களுக்குள் ரத்து செய்து கொள்ளப்படும். பாலிசிக்கு எந்த  உரிமை கோரிக்கையும் இல்லையென்றால், இது  ரத்து செய்யப்படலாம்.

ஏன் இந்த திட்டம்

இந்த திட்டமானது லாபகரமான ஒன்றாகும்,  குறிப்பாக பாதுகாப்புடன் கூடிய சேமிப்பு திட்டத்தை நோக்கும் முதலீடு செய்பவர்களுக்கு ஏற்ற திட்டமாகும்.  எல்.ஐ.சி நிறுவனம்  நம்பகமான ஒன்று,  இந்த பாலிசியில்  முதலீடு செய்வது பாதுகாப்பாக இருப்பதோடு எந்த ஒரு அபாயமும் ஏற்படுவதில்லை.