Sehwag PX
எல்.ஐ.சி வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்

#Virukipolicy | T&C*

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

பிற தகவல்களை உள்ளிடவும்
தொலைபேசி எண்
பெயர்
மின்னஞ்சல்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது (எல்.ஐ.சி) இந்திய அரசுக்கு சொந்தமானது. இந்திய காப்பீட்டு நிறுவனங்களின் பட்டியலில் எல்.ஐ.சியானது முதல் இடத்தை பெற்றுள்ளது. 1956 ல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவின் மூலம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது உருவாக்கப்பட்டது, மேலும் அதன் கீழ் 245 தனியார் நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட தேவைகளையும் மனதில் கொண்டு, அவர்களுக்கு பொருத்தமான அதிக எண்ணிக்கையிலான திட்டங்களை வெவ்வேறு பிரிவின் கீழ் வழங்குகிறது. 

பெயர் குறிப்பிடும் படியான  திட்டங்களில் எல்.ஐ.சி வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா திட்டமும் ஒன்றாகும்.  இது ஓய்வு பெற்ற மக்களுக்கான உண்மையான பென்ஷன்   திட்டமாகும். இந்த திட்டமானது வருடாந்திர வகையின் கீழ் வருகிறது.  இந்த வருடாந்திர திட்டத்தின் படி, தொடர்ச்சியான கால இடைவேளையில் மக்கள் ஓய்வூதியத்தை பெறுவர். இதற்கான  தொகையை செலுத்தும் முறையை நீங்களே தேர்வு செய்ய வேண்டும். இது  ஓய்வுதியதாரர்கள் சாமர்த்தியமான முறையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற திட்டமாகும்.

எல்.ஐ.சி வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா திட்டமானது எப்படி வேலை செய்கிறது

பாலிசியின்  பிரீமிய  காலமானது ஒற்றை பிரீமியமாகும். திட்டத்தின்  துவக்கத்தில்,  உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப பிரீமியத்தை செலுத்த முடியும். இதை தேர்வு செய்த பிறகு நீங்கள் முறையான ஓய்வுத்தியத்திற்கான  தகுதியை பெறுவீர்கள். இந்த திட்டத்தின் கீழ் வாழ்வின் அபாய நேர்விற்கான பாதுகாப்புகள் இல்லை, இது தூய்மையான வருடாந்திர திட்டமாகும் மேலும்  எப்படி இருந்தாலும் உங்களின் முதலீட்டின் ‌மூலம்  நீங்கள் ஓய்வூதியம் பெறலாம். இதற்கான சட்டம் 2017 ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்டது.  இதன் மூலம் மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள்.  இது  ஒரு உடனடியான  பென்ஷன்  திட்டமாகும்.  எனவே நீங்கள் உங்களுடைய  விருப்பத்தின் படி  ஒற்றை பிரீமியத்தை செலுத்த விரும்பினால், வருடாந்திர  வருமானமானது அந்த சமயத்திலிருந்தே  தொடங்குகிறது.  நீங்கள் இந்த  திட்டத்தில் எந்த ஒரு மருத்துவ சான்றிதழ்களையும் சமர்பிக்க வேண்டியதில்லை,  இது மருத்துவ கோரிக்கைகளை ஏற்காது அல்லது வாழ்க்கையின் அபாய நேர்விற்கான பாதுகாப்பை அளிக்காது.

இந்த திட்டத்திலிருந்து நீங்கள் வெளியேற்றுவதற்கான சலுகைகள்

இறப்புசலுகைகள்

மற்ற  எல்.ஐ.சி  திட்டங்கள் போல, நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் எந்த வித இறப்பு சலுகைகளையும் பெற முடியாது. ஒருமுறை பிரிமியத்தை செலுத்த துவங்கிய உடனே உங்களின் பணமானது ஓய்வூதியத்தின் வடிவில் உங்களுக்கு கிடைக்க துவங்குகிறது.  நீங்கள் இறந்த பிறகும் தொகையை பெறுவதற்கு  தேர்வு செய்திருந்தால்,  உங்களின் வாழ்க்கைத் துணை  இந்த சலுகையை  பெறுவார்.  உங்களுக்கு பிறகு மீதமுள்ள  ஓய்வூதியத்தை  உங்களின் வாழ்க்கைதுணை பெறுவார்.

ஓய்வூதியத்தின்விகிதம்

ஓய்வூதியமானது பாலிசிதாரர்  தேர்ந்தெடுத்த வருடாந்திர வகையின்  விகிதத்தையோ அல்லது ஆண்டுத்தொகையாக  பெறுபவர் விகிதத்தையோ  சார்ந்தது.  ஆண்டுத்தொகை திட்டத்தின் படி 7 வகையான இயங்கும் நிலையில் உள்ள திட்டங்கள் உள்ளது.  ஆனால் நீங்கள் முடிவு செய்து செலுத்திய ஒற்றை பிரீமியத் தொகைக்கான திட்டத்தை மீண்டும் மாற்ற முடியாது.  மேலும் இதற்கான சலுகைகளானது உடனடியாக  துவங்குகிறது.

லாப பங்கேற்றல்

பாலிசியானது நிறுவனத்திற்கு லாபம் ஈட்டக்கூடிய தகுதியை பெற்றிருக்க வேண்டும்.  மற்றும் பாலிசி நடைமுறையிலும், செயல்பட தக்கதாகவும் இருக்கும் போது நிறுவனம்  எளிய  மறுமதிப்பீட்டு போனஸ் என்ற தலைப்பின் கீழ் போனசை வழங்குகிறது. பிரீமியம் செலுத்தியதை பொறுத்தே மறுமதிப்பீட்டு போனசானது கணக்கிடப்படும்.

பயனாளிசலுகைகள்

பயனாளிகளுக்கான சலுகைகள் கிடைக்க பெறாத, முற்றிலும் ஒய்வூதியத்தை  அடிப்படையாகக்  கொண்ட ஒரு ஆண்டுத்தொகை திட்டமாகும்.  

எல்.ஐ.சி வரிஷ்தா பென்ஷன்  பீமா யோஜனா பாலிசிக்கான  தகுதி வரன்முறைகள் என்ன?

நீங்கள் பாலிசியின் பிரீமியத்தை 60 வயது முதல் அல்லது அதற்கு பிறகும் கூட துவங்கலாம்.  இது  ஒற்றை  பிரீமியத்தின்  கால திட்டம் ஆகும்.  இந்த பாலிசிக்கு முதிர்வுநிலை வயது கிடையாது. இதற்கான நன்மைகள் பணத்தை  திரும்ப பெறுவதன் மூலமாக கிடைக்கிறது.  நீங்கள் விரும்பினால் உங்களின் இறப்பிற்கு பிறகும் கூட பாலிசியானது  தொடர்கிறது.  உங்களின் வாழ்கைத் துணை  இந்த சலுகைகளை பெறுவார்.  இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக  ரூபாய் 63,960 முதல் அதிகபட்சமாக ரூபாய் 6,39,610  வரையிலான பிரீமியத்தை  பாலிசியில் செலுத்தலாம்.

ஓய்வூதிய சலுகை அல்லது ஆண்டுத் தொகை சலுகை

ஓருமுறை பிரீமியம் செலுத்தும் போதே உங்களின் ஓய்வூதியமானது  துவங்குகிறது. ஓய்வூதியம் பெரும் முறையானது நீங்கள் தேர்ந்தெடுத்த வகையை சார்ந்து இருக்கும்.  நீங்கள் ஓய்வூதியத்தை  வருடாந்திரமாகவோ,   அரை வருடாந்திரமாகவோ, காலாண்டிலோ அல்லது மாதாந்திரமாகவோ பெறுவதற்கு தேர்வு செய்ய முடியும்.  குறைந்தபட்ச  ஓய்வூதிய  தொகை அல்லது  ஆண்டுத் தொகையானது தோராயமாக ரூபாய் 6000  மாக இருக்கும். அதிகபட்சமாக ரூபாய்  60,000 வரைக்கும் தோராயமாக இருக்கும். இந்த  தொகையையானது பொருந்தும் வரிகளை சார்ந்தே மாறுபடும்.

வரிசலுகை:

எல்.ஐ.சி வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா பாலிசியானது, மற்ற பாலிசி திட்டங்களை போலவே வருமான வரி சலுகைகளை வழங்குகிறது. வருமான வரி சட்டப் பிரிவு 80 C யின் கீழ் பிரீமியத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பெறும் ஓய்வுதியத்திற்கு வருமான வரி உண்டு.  ஆகையால் நீங்கள் செலுத்தும் பிரீமியத்திற்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை.

கடன்வசதி:

எல்.ஐ.சி வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா பாலிசிக்கு எதிராக உங்களின் தேவைக்கேற்ப கடன் பெற முடியும். ஆனால்  அதற்கு இந்த பாலிசியில் சேர்ந்து  3 மாதங்களுக்கு  மேல்  இருக்க வேண்டும் அல்லது பாலிசியின் சோதனை காலமானது முடிந்து இருக்க வேண்டும். பாலிசி தொடங்கும் போது இருக்கும் பாலிசிதாரரின் வயதை அடிப்படையாக கொண்டு கடன் தொகையானது இருக்கும். அதிகபட்சமாக பாலிசிக்கு எதிராக நீங்கள் செலுத்திய ஒற்றை பிரீமியத் தொகையில்  75% வரையிலும்  கடன்  பெறமுடியும்.

பாலிசியை ஒப்படைவு செய்தல்

தேவைப்பட்டால் பாலிசியை அதற்கான முன்னேற்பாட்டுடன் ஒப்படைக்கலாம். பாலிசி தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குள்ளாக பாலிசியானது ஒப்படைக்கப்பட்டால் பாலிசிதாரர் செலுத்திய ஒற்றை பிரிமியததின் 98% பெறமுடியும். 15 ஆண்டுகளுக்குள்ளாக நீங்களோ அல்லது உங்களின் வாழ்க்கைத்துணையோ இக்கட்டான நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே பாலிசியை  ஒப்படைப்பதர்க்கான தகுதி உள்ளது. 15 ஆண்டுகள் முடிந்த பிறகு, பாலிசியை ஒப்படைக்கும் போது ஒற்றை பிரீமியமாக அவர் செலுத்திய தொகையானது 100% திரும்ப அளிக்கப்படும்.  ஒப்படைவு  பாலிசியின் மதிப்பை கணக்கிட  இந்த ஆன்லைனில் பல கணக்கீடுகள்  உள்ளது.  இதனை ஆன்லைன் கணக்கீட்டை பயன்படுத்திக் கணக்கிட முடியும்.

எல்.ஐ.சி வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா திட்டத்திற்கான  உதாரணம்

திரு. ஆஷிஷ் எல்.ஐ.சி  வரிஷ்தா  பென்ஷன்  பீமா  யோஜனா பாலிசியில் உறுதி செய்யப்பட்ட தொகையாக 5,00,000 ரூபாயை 2017 ம் ஆண்டில் தன்னுடைய 60 வயதில் வாங்குகிறார்.  திட்டமானது வருடாந்திர பென்ஷன்  முறையாகும்.

பிரீமியம் கணக்கிடும் கருவியை பயன்படுத்தி, நீங்கள் சலுகை  விவரங்களை கணக்கிடலாம்.

திட்டத்தை வாங்குவதற்கானவிவரங்கள்பின்வருமாறு:

வாங்கும் விலை ரூபாய் 5,00,000 உடன்  சேவை வரியாக ரூபாய் 15,450 மும் சேர்ந்து உள்ளது. ஆக மொத்தம்  பிரீமிய கட்டணம் ரூபாய் 5,15,450 ஆகும்.

பென்ஷன்  விவரங்கள்பின்வருமாறு:

  • பென்ஷன் வகை:  வருடாந்திரம்
  • வட்டி விகிதம்:  9.38 சதவிகிதம்
  • வட்டி விகிதம்:  9.38 சதவிகிதம்
  • பென்ஷன் தொகை:  ரூபாய் 46,903

இதன் மூலம் 5,00,000 ரூபாய் பிரீமிய பாலிசிக்கு ஒரு வருடத்திற்கான வட்டி விகிதம்  9.38 சதவிகிதம் ஆகும். இதன் அடிப்படையில், பாலிசிதாரர் அல்லது ஆண்டுத் தொகையை பெறுபவர்  ஓய்வூதியமாக ஒரு ஆண்டிற்கு  46,903 ரூபாயை பெறுவார்.

ஓய்வூதிய காலத்தில் எந்தவித கவலையும் இல்லாமல் நிலையான வருமானத்தை அளிக்கும் நீங்கள் விரும்பக் கூடிய கருவியாக இந்த திட்டம் உள்ளது.