லைஃப் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்
 • term திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

தொலைபேசி எண்
பெயர்
பிறந்த தேதி

1

2

வருமான
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சிமற்றும் தனியுரிமைக் கொள்கையைஏற்றுக்கொள்கிறீர்கள்

லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் என்பது ஒரு ஆன்லைன் நிதியியல் கருவியாகும். இது தேவையான லைஃப் இன்சூரன்ஸ் கவரேஜின் தொகையை அறிந்து கொள்ள உதவுகிறது. இந்த நிதியியல் கருவியானது (டூல்ஸ்), கால்குலேட்டர் , சுருக்கம் , வரைபடங்கள் மற்றும் அட்டவணை போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இது தேவையான லைஃப் இன்சூரன்ஸின்  முழுமையான மாறுபாடுகளை அறிந்து கொள்ள உதவும். 

லைஃப் இன்சூரன்ஸ் தினசரி அடிப்படையில், ஒரு சாதாரண நபருக்கு  பாதுகாப்பு, வெல்த் கிரியேஷன் மற்றும் சேமிப்பு போன்ற வடிவங்களில் பல நன்மைகளை வழங்குகின்றது. இன்றைய நாட்களில் லைஃப் இன்சூரன்ஸ் கீழ் பல தயாரிப்புகளை வைத்திருக்கிறோம். இது தற்போதைய மற்றும் எதிர்காலத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதுகாப்பதில் நமக்கு உதவுகிறது. அவை அவசியமான நேரத்தில் உதவி வழங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. லைஃப் இன்சூரன்ஸ் அல்லது ஆயுள் காப்பீடு என்பது உங்கள் குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கும் ஒன்றாகும்.

மேலே குறிப்பிட்டபடி, லைஃப் இன்சூரன்ஸ் அடிப்படையிலேயே உங்கள் வாழ்க்கையின் கடினமான நேரத்தில் உங்களுக்கான நிதிசார்ந்த உதவியை கொண்டுள்ளது. இது உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பதோடு, உங்களின் செல்வ வளத்தை உருவாக்கவும் கூட உதவி புரிகிறது. PolicyX.com ஆனது ஒரு குறிப்பிட்ட கால அளவில்  உங்களின் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தின் தொகைக்கு முன்கூட்டியே மதிப்பீட்டை பெறுவதில் உங்களுக்கு உதவும் ஒரு சிறந்த கருவியை (டூல்ஸ்) வழங்குகிறது.

லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர், இன்சூரன்ஸ் வழங்குபவருக்கு நீங்கள் செலுத்த வேண்டிய உண்மையான பிரீமியத்தை தீர்மானிக்க உதவுகிறது. பயனுள்ள பல லைஃப் இன்சூரன்ஸ் பிளான்ஸ்-களை வழங்கும் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரின் உதவியுடன், நீங்கள் சரியாக எதைத் தேடுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும் மற்றும் அனைத்திலும் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுப்பதில் உங்களை வழிநடத்துவதற்கு கிடைக்கும் பிளான்களின் எளிமையான ஒப்பிடுதல் உங்களுக்கு உதவுகிறது.

லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும்?

லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரின் நன்மையை பெற, வருமானம், வயது , ஓய்வு பெறும் வயது, மொத்த சொத்துக்கள் போன்ற சில அடிப்படை தகவல்களை பிரீமியம் கால்குலேட்டர் படிவத்தில் நிரப்ப வேண்டும். எளிதாக விவரங்களை நிரப்புவதன் மூலம் உங்களுக்கான உறுதி செய்யப்பட்ட தொகை குறித்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 

 லைஃப் இன்சூரன்ஸ் பிளானில் தகவல்களை பூர்த்தி செய்து, தொடர்புடைய மேற்கோள்களை பெறுவதற்கு அதிக நேரம் எடுக்காது. அதற்காக நீங்கள் சில படிநிலையை பின்பற்ற வேண்டும். 

படி 1: உங்களின் தனிப்பட்ட விவரங்களான பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, வருமானம், குழந்தைகள் எண்ணிக்கை போன்றவற்றை படிவத்தில் நிரப்பவும். புகைபிடிப்பது தொடர்பான கேள்விகளும் கேட்கப்படலாம். 

படி 2: தேவையான தகவல்களை வழங்கிய பிறகு, சில நிமிடங்களில் பிரீமியம், வட்டி விகிதம் மற்றும் அதன் தொடர்புடைய காரணிகள் பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ளக்கூடிய முன்கணிப்பின் சுருக்கத்தை கால்குலேட்டர் உங்களுக்குத் தெரிவிக்கும். 

கணக்கிடுவதில் இருக்கும் கடினமான தெளிவின்மையைத் தவிர்ப்பதற்காக PolicyX.com இல் உள்ள லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் உடன் எளிதாகக் கணக்கிடவும். இப்பொழுது, எதிர்கால திட்டமிடல் சில படிநிலையில் இருக்கிறது.  

லைஃப் இன்சூரன்ஸ் கால்குலேட்டரின் நன்மைகள்

லைஃப் இன்சூரன்ஸ் ஆனது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவைப்படும் ஒன்றாக இருக்கலாம். அந்த தேவை உங்களுக்கு பின் உங்களின் அன்புக்குரியவர்களின் எதிர்கால பாதுகாப்பு, செல்வ வளத்தை உருவாக்குதல், பாதுகாப்பது போன்றவை தொடர்புடையதாக இருக்கும். லைஃப் இன்சூரன்ஸ் அடிப்படையில் டெர்ம் இன்சூரன்ஸ் பிளான்ஸ், குழந்தைகள் இன்சூரன்ஸ், ஓய்வு பெறுவது, முதலீடு போன்ற பல்வேறு பிரிவுகளில் பிரிக்கப்பட்டு உள்ளது. கால்குலேட்டர் உதவி உடன், நீங்கள் விரும்பும் கவரை பெறுவதற்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். கிடைக்கும் பிளான்களின் ஒப்பிடுவதில் நேரடியாக உங்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் உங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு சிறந்த ஒன்றை தேர்வு செய்யலாம். 

உங்கள் நேரத்தை சேமியுங்கள்:-  லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் ஆனது உங்களின் பொன்னான நேரத்தை சேமிப்பதோடு, மோசடி அழைப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள திறம்பட உதவுகிறது. அதே சமயத்தில், பிரீமியம் தொடர்புடைய தேவையான மேற்கோள்கள் பெற உங்களின் அனைத்து ஆவணங்களையும் வழங்க வேண்டிய அவசியமில்லை. சில வினாடிகளிலேயே, நீங்கள் உண்மையில் தேடக்கூடிய ஒன்றை நிச்சயம் பெறுவீர்கள். இது இன்சூரன்ஸ் ஏஜென்ட்களின் தலையீடுகள் இன்றி தேவையான லைஃப் இன்சூரன்ஸ் பிளான்-ஐ வாங்க அனுமதிக்கிறது. 

ஒப்பிடுதலில் உதவி:- கிடைக்கக்கூடிய இன்சூரன்ஸ் பிளான்களின் விரைவான ஒப்பிடுதலுக்கு உங்களுக்கு உதவும் வகையில்   இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு கருவியாக விளங்குகிறது. அதேபோன்று, ஒரே தளத்தில் சிறந்த ஒன்றை தேர்வு செய்யவும் அனுமதிக்கிறது.

பயனுள்ள செலவு: ஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள விரும்பும் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் ஆன்லைனில் இன்சூரன்ஸ் வாங்கும் நுகர்வோருக்கு பல தள்ளுபடிகள் மற்றும் நன்மைகளை வழங்குகிறார்கள். எனவே, நீங்கள் வாங்கக்கூடிய இன்சூரன்ஸ் பிளானின் வகை குறித்து முடிவு எடுத்து விட்டால், பின்னர் அவற்றை ஆன்லைனில் ஒப்பிடலாம் மற்றும் அதே தளத்தில் சிறந்த ஒன்றை வாங்க முடியும். இங்கு ஏஜென்ட் கமிஷன்கள் இல்லை என்பதால் உண்மையில் பயனுள்ள செலவையே கொண்டிருக்கிறது. நீங்கள் நேரடியாக நிறுவனத்திடம் இருந்து பாலிசியை வாங்குவதால் உங்கள் பணத்தை சேமிக்க முடியும். 

 எனவே மேலே கூறப்பட்டுள்ள உண்மைகளின்படி, லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் ஒவ்வொரு அம்சத்திலும் உதவுகிறது என்பது தெளிவாக புரிகிறது. இது உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு சிறந்த பிளான்களை தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு அதிகம் உதவுகிறது. இந்த செயல்முறை 2 நிமிடங்களுக்கு மேலாக எடுத்துக் கொள்ளாது. இத்தகைய நன்மைகளை பெறுவதற்கு, உங்களின் பெயர், வயது, தொலைபேசி எண் போன்ற அடிப்படை விவரங்களை கொண்டு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 

லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம் விகிதத்தை நிர்ணயிக்கும் சிறந்த காரணிகள்

 • உங்களின் வயது 
 • உங்களின் வருமானம் 
 • ஆரோக்கிய பழக்கங்கள் 
 • காப்பீட்டு தொகை 
 • பாலிசி காலம்

லைஃப் இன்சூரன்ஸ் எதற்கு?

இன்றைய நவீன சகாப்தத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளை நிலையான வருவாயைக் கொண்டு நிர்வகிப்பது என்பது மிகவும் கடினமாக உள்ளது. மேலும், நம்முடைய குடும்பத்தில் மோசமான தாக்கத்தை விட்டுச் செல்லும் எதிர்கால அவசரநிலைகள் பற்றி நாம் அறியாமல் இருக்கிறோம். எனவே, ஒவ்வொரு அம்சத்திலும் உதவக்கூடிய ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. அங்கு லைஃப் இன்சூரன்ஸ் ஆனது கச்சிதமாக பொருந்தி நிற்கிறது. லைஃப் இன்சூரன்ஸில் இருக்கும் பல்வேறு வடிவங்கள் ஆனது நம் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை பாதுகாப்பதற்கு உதவி புரிகிறது. லைஃப் இன்சூரன்ஸ் கீழ் இருக்கும் டெர்ம் இன்சூரன்ஸ் (கால காப்பீடு) ஆனது உங்களுக்கு பிறகு உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க உங்களுக்கு உதவுகிறது. மேலும், பணம் திரும்ப பெறுதல் , மானியம் போன்றவை உங்களின் நிகழ்காலத்தை நிர்வகிப்பதில் உங்களுக்கு உதவக்கூடிய செல்வ வளத்தை உருவாக்க  உதவுகிறது. உங்களின் எதிர்காலம் மற்றும் நீங்கள் நேசிக்கும் ஒருவரையும் பாதுகாக்க முதலீடு மற்றும் குழந்தைகள் பிளான்ஸ் போன்ற பல பிளான்களும் உள்ளன. லைஃப் இன்சூரன்ஸின் தேவையை புரிந்து கொள்ள சில காரணங்கள் :

இறுதி செலவினங்களுக்கு பணம் செலுத்துதல்: இன்சூரன்ஸ் செய்தவரின் திடீர் இறப்பிற்கு பிறகு இறுதி சடங்கிற்கு மற்றும் அடக்கம் செய்வதற்கு உண்டாகும் செலவுகள் நம் சேமிப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. மேலும், இன்சூரன்ஸ் செய்தவரின் மறைவு ஏற்படும் சூழ்நிலையில் இன்சூரன்ஸ் செய்தவரின் குடும்பத்திற்கு நிதிச்சுமை மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும், அதனை சமாளிப்பதும் மற்றும் அதே நேரத்தில் உணர்ச்சிகளை கையாள்வதும் கடினமானதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், லைஃப் இன்சூரன்ஸ் ஆனது ஒரு பாதுகாவலர் போன்று செயல்படுகிறது மற்றும் இன்சூரன்ஸ் செய்தவர் விட்டுச் சென்ற நிதியியல் உதவியுடன் உங்களுக்கு துணையாய் நிற்கும். நீங்கள் நேசிக்கக்கூடியவர்கள் உங்களுக்கு பின் நிதி சார்ந்த பாதிப்புகளை எதிர்கொள்வதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் .

குழந்தைகளின் செலவினங்களுக்கான கவர்: எந்தவொரு பெற்றோரை போல, நீங்கள் உங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம் ஆகியவற்றுடன் தொடர்புடைய எதுவாக இருந்தாலும் சரி, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர்களின் எதிர்காலம் பாதுகாக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களுடன்  எதற்கும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள், அதற்கான காரணம் குழந்தை ஆயுள் காப்பீட்டு திட்டத்தை வைத்து இருப்பது மிக முக்கியமானதாகும். இது வாழ்க்கையின் எந்தவொரு கட்டத்திற்கும் ஆதரவாக இருக்கும்.

வருமானத்தை மாற்றுவதற்கு: ஒரு குடும்பத்தில் அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்ளும் ஒரு நபர் திடீரென மறைந்து விட்டால், அவரின் குடும்பத்தினர் தினசரி செலவினங்களை சமாளிப்பது உண்மையில் கடினமான ஒன்றாக இருக்கும். எனவே நீங்கள் வழக்கமான வருமானத்தின் வடிவத்தில் அவசியமான நிதி சார்ந்த பாதுகாப்பை லைஃப் இன்சூரன்ஸ் பிளான் எனும் பயனுள்ள வடிவத்தில் வழங்கலாம். நீங்கள் இருந்து செய்ததை உங்களுக்கு பிறகு இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை பராமரிக்க முடியும். 

இப்பொழுதே கடனை நீக்குதல்: உங்கள் வருமானத்தில் இருந்து மிகப்பெரிய தொகையை எடுத்துக் கொள்ளும் கடன்கள் அல்லது எந்த கூடுதல் இஎம்ஐ போன்றவையைக் கொண்டிருக்கலாம்.  நீங்கள் எப்போதாவது நினைத்தது உண்டா, உங்களின் மறைவிற்கு பிறகு உங்கள் வீட்டில் இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் ? இல்லையென்றால்! ஒருமுறை நினைத்துப் பாருங்கள். உங்களின் கடன்களை நீக்குவதில் உங்களுக்கு உதவும் சிறந்த லைஃப் இன்சூரன்ஸ் பிளானில் முதலீடு செய்யுங்கள்.  

லைஃப் இன்சூரன்ஸின் நன்மைகள்

லைஃப் இன்சூரன்ஸின் பிளான் உடன் நீங்கள் பல நன்மைகளை பெற முடியும். நீங்கள் சிறந்த முடிவை எடுப்பதற்கு உங்களுக்கு உதவி வழங்குவதில் நாங்கள் முதன்மையானவர்களாக இருக்கிறோம்.

 • பாதுகாப்பு எதிர்காலத்தில் நமக்காக என்ன காத்திருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் வாழ்க்கை கணிக்க முடியாதது. உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தால் உங்களுக்கு தேவையான பாதுகாப்பு உடன் லைஃப் இன்சூரன்ஸ் உதவும். நீங்கள் மிகவும் நேசிப்பவர்களை கவனித்துக் கொள்ள நீங்கள் இல்லையென்றால், லைஃப் இன்சூரன்ஸ் பிளான் ஆனது நிதியியல் பாதுகாப்பு எனும் அவசியமான சலுகையை வழங்குகிறது. இது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கை முறையை பராமரித்துக் கொள்ள உதவுகிறது.
 • நிலையான வாழ்க்கையை பராமரிக்க உதவும் லைஃப் இன்சூரன்ஸ் ஆனது குடும்பத்திற்காக சம்பாதிக்கும் நபர் மறைந்த பிறகு அவர் மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு மாற்றாகவும் கூட இருக்கும்.
 • கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தும் சிவில் ஸ்கோர்க்கு வரும் பொழுது, இதேபோன்று அனைவரும் மேம்படுத்த வேண்டும் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் உங்களுக்கு உதவுவதில் இதைப் போன்ற ஒன்றாக இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்துகையில், உங்கள் கடனின் மதிப்பீட்டை கண்டிப்பாக பாதிக்கும்.
 • வரிச் சலுகைகள் லைஃப் இன்சூரன்ஸ் திட்டங்கள் உங்களுக்கான வரி நன்மைகள் உடன் வருகின்றன. ஆமாம், நீங்கள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளை பெறலாம். 

சரியான லைஃப் இன்சூரன்ஸ் பிளானை தேர்வு செய்க

சிறந்த லைஃப் இன்சூரன்ஸ் பிளான்-ஐ தேர்வு செய்வதற்கு, பின்வரும் சிலவற்றை நீங்கள் செய்ய வேண்டும் :-

 முதலில் உங்களின் தேவைகளை சரிபார்க்கவும் - நீங்கள் பயனுள்ள லைஃப் இன்சூரன்ஸ் பிளான்-ஐ வாங்குவதற்கு முன்பு, முதலில் உங்களின் தேவைகளை புரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். அவை, உங்களுக்கு லைஃப் இன்சூரன்ஸ் பிளான் எதற்காக தேவை, உங்களுக்கு எந்த அளவு போதுமானதாக இருக்கும், நீங்கள் கவரில் எதை பெறுவீர்கள் என்பது உள்ளிட்ட தேவைகளை நினைவில் கொள்ள வேண்டும். இது நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் பிளான் பற்றிய ஒரு தெளிவான கருத்தை பெறுவதற்கு உதவுவதோடு, கிடைக்கக்கூடிய பிளான்களை ஒப்பிடவும் உங்களுக்கு உதவுகிறது. அதே சமயத்தில், போதுமான கவர், நிதியியல் உதவி உள்ளிட்டவை குறித்து சிந்திக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். 

பணவீக்கம் விகிதம் - பயனுள்ள லைஃப் இன்சூரன்ஸ் கொண்டிருப்பதற்கான உங்களின் தேவைகளை ஆராயும் பொழுது, தற்போதைய பணவீக்க விகிதத்தை உங்களின் மனதில் வைத்திருக்க மறந்து விடாதீர்கள். நீங்கள் உறுதி செய்த தொகை ஆனது தற்போதைய செலவினங்களை மனதில் வைத்து எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என நீங்கள் கருதக்கூடும். இந்த குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு, பணவீக்க விகிதத்தை மனதில் வைத்து, எதிர்கால அவசரநிலையை வெல்லக்கூடிய தொகையை தேர்ந்து எடுக்கவும்.

ஒப்பிடவும் - நீங்கள் விரும்பிய லைஃப் இன்சூரன்ஸ் பற்றிய ஒரு தோராயமான மதிப்பீட்டை பெற்ற பிறகு, பிரீமியம், உள்ளடங்குபவைகள், விலக்குகள், நன்மைகள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய பிளான்களை ஒப்பிடுவது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். அதே போல், உங்கள் தேவைகள் உடன் பொருந்தக்கூடிய சிறந்த பிளானை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

- / 5 ( Total Rating)