பென்ஷன் பிளான் கால்குலேட்டர்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

கைபேசி எண்
பெயர்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

ஓய்வு பெறுதல் என்றால் என்ன ? இதற்கான அர்த்தத்தை அறிய நீங்கள் அகராதியை புரட்டும் பொழுது, அது வேலை /பணி ஆகியவற்றில் இருந்து முழுமையாக நீங்கும் படிநிலை கொண்ட  வாழ்க்கையின் ஒரு கட்டம் என்பதை அறிய முடியும். தன் வாழ்வின் அத்தகைய சிறந்த கட்டத்தில், ஒரு நபர் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் சுதந்திரமாக வாழ்வதற்கு நேரத்தை கொண்டிருப்பார். பழைய சலிப்பான அலுவலக வாழக்கைக்குள் செல்ல வேண்டி இருக்காது. இந்த நிலையில் ஒருவர் நேசிக்கும் ஒன்றை செய்ய முடியும். இத்தகைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு பென்ஷன் கால்குலேட்டர் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஒரு வலுவான ஓய்வூதிய திட்டம் உள்ளது. 

பென்ஷன் கால்குலேட்டர், நீங்கள் ஓய்வு பெறும் பொழுது எவ்வளவு வருவாய் தேவைபடும் என்பதை மதிப்பீடு செய்யும் கருவியாகும். வயது , வருடாந்திர வருமானம் , சேமிப்பு , இருப்பிடம் மற்றும் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஓய்வூதிய தொகையை கணக்கிட உங்களுக்கு உதவுகிறது. பென்ஷனை கணக்கிட பின்வரும் தகவல்கள் தேவைப்படுகின்றன.

 1. பிறந்த தேதி: பென்ஷன் கால்குலேட்டரின் கணக்கீட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாலிசியை வாங்கும் நேரத்தில் பிறந்த தேதியை வழங்க வேண்டும். இது அடிப்படையில் பதிவுகளை தேக்கி வைக்கும் நோக்கத்திற்கு தேவைப்படுகிறது. இது எப்பொழுதும் அரசாங்க அடையாள சான்று படி பிறந்த தேதியை அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. 
 1. ஓய்வு பெறும் வயது: இது பென்ஷன் கால்குலேட்டர் பற்றிய சிறந்த பகுதியாகும். உதாரணமாக, 60 வயதிற்கு ஊதியம் பெறுதல் போன்ற அரசாங்க விதிகளின்படி அதிகாரப்பூர்வ ஓய்வு பெறும் வயதைப் பெறுவதற்கு பதிலாக உங்கள் விருப்பப்படி ஓய்வு பெறும் வயதினை தேர்வு செய்ய அனுமதிக்கிறது. இந்த அம்சமானது சுய-நிதியளித்தல், தன்னார்வ அல்லது முன்கூட்டியே ஓய்வு பெறுதல் ஆகியவற்றை மனதில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
 1. வருடாந்திர வருமானம்: வருடாந்திர வருமானத்தில், உங்கள் வருமானம் முதலாளிகளால் உங்களுக்கு வழங்கப்படும், ஆனால் உண்மையில் கணக்கில் பெறாத சில வரம்புகளை உள்ளடக்கியது என்பதால் மொத்த வருவாய்க்கு பதிலாக நிகர வருவாயை அளிக்க அறிவுறுத்துகிறது.
 1. சேமிப்பு: இந்த துறையில், நீங்கள் தற்போதைய தேதி வரையில் இருக்கும் சேமிப்பு தொகையை பற்றிய விவரத்தை அளிக்க வேண்டும். இது பணத்தின் அடிப்படையிலான சேமிப்பை மட்டும் குறிக்கவில்லை. நிலையான வைப்பு, தொடர் வைப்பு, சமபங்கு-இணைப்பு சேமிப்பு திட்டங்கள் போன்ற பல்வேறு கருவிகளில் முதலீடு செய்து இருந்தாலும் தெரிவிக்கலாம். 
 1. ஓய்வுக்கு பிறகான இடவசதி : இந்த துறையில் நீங்கள் ஓய்வு பெற்றதற்கு பிறகு இயல்பாகவே வசிக்கும் இடத்தினைப் பற்றிய விபரத்தை அளிக்க வேண்டும். உதாரணமாக, உங்களுக்கு சொந்தமான இடத்தில் அல்லது வாடகைக்கு இருக்கும் இடத்தில் வாழ்வீர்களா என்று. ஒருவேளை நீங்கள் தற்போதும் உங்களின் கடனிற்கான தவணையை கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால், பென்ஷன் கால்குலேட்டரில் உங்களின் வருடாந்திர வருமானத்தில் குறிப்பிட வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஓய்வூதிய திட்டமிடல் மற்றும் எதிர்காலத்திற்கான சேமிப்பு உள்ளிட்டவையை பெரும்பாலானவர்கள் காலம் கடந்தே கவனிக்கிறோம். ஓய்வூதிய கால்குலேட்டர் உதவியுடன் ஓய்வூதியத்திற்கு தேவைப்படும் தொகையைப் பற்றி ஒரு யோசனை பெற முடியும் மற்றும் மென்மையான தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ அழைத்துச் செல்கிறது. 

பென்ஷன் திட்டமிடலின் முக்கியத்துவம் 

 • ஆயுட் எதிர்பார்ப்பு விகிதத்தை அதிகரிக்கிறது : விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன், மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இது பழைய காலத்தை விட நீண்ட ஆயுட்காலம் வரை செல்கிறது. இறுதியில், நீண்ட ஆயுளை பராமரிப்பதற்கு சுகாதார செவினம் தேவை. எனவே, நிதி சேகரிக்க சரியான திட்டமிடல் தேவைப்படுகிறது. 
 • முதலாளியின் பென்ஷன் நிதி பற்றாக்குறை/ பென்ஷன் நிதிகள் : பொதுவாக, பணியமர்த்தும் முதலாளிகள் அளிக்கும் நிதிகள் அல்லது அரசாங்கம் அளிக்கும் பென்ஷன் நிதிகள் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. ஆகையால், ஓய்வு பெற்ற பின்னான வாழ்க்கையில் நிம்மதியாக வாழ மற்றும் உதவும் வகையில் ஊதியம் வழங்கியவரின் பென்ஷன் நிதி உடன் சுய-பராமரிக்கப்படும் ஓய்வூதிய நிதியை வைத்திருக்க வேண்டியது அத்தியாவசியமாகும். 
 • சமூக கட்டமைப்பின் மாற்றம்: ஓய்வு பெற்ற ஒருவர் தனது பணி ஓய்விற்கு பிறகும் ஏற்படும் செலவினங்களுக்கு தனது குடும்பத்தினரை அல்லது பிள்ளைகளை சார்ந்து இருக்க விருப்பாமல் இருக்கலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில், துணையாக இருக்கும் நிதி சார்ந்த திட்டத்தினால் மட்டுமே சுதந்திரமான வாழ்க்கையை பராமரிக்க முடியும்.
 • சமூக பாதுகாப்பு அமைப்பு: நமது நாட்டில் முறையான சமூக அமைப்பு இல்லாமல் இருக்கிறது. எனவே, தினசரி செலவினங்கள் மற்றும் மருத்துவ அவசரநிலை போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் தடை ஆகியவற்றை சந்திக்கும் பொழுது ஒரு நபருக்கு ஏற்படும் செலவினங்களுக்கு போதுமான பணத்தினை முன்கூட்டியே தனிநபர் திட்டமிட வேண்டியது முக்கியமாகும். 
 • குடும்பத்தின் பங்களிப்பாளருக்கு : ஒவ்வொருவரும் முக்கியமான சந்தர்ப்பங்களில் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவ விரும்புகின்றனர். அவர்கள் நேசிக்கும் ஒருவருக்கு உதவ நினைக்கின்றனர். குறிப்பாக பேரக் குழந்தைகளுக்கு செய்ய நினைப்பதை செய்ய விரும்புகின்றனர். எனவே, உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான ஒன்று நிதி மற்றும் பென்ஷன் கால்குலேட்டர் ஆகும்.  இந்த சிறந்த கருவி அதனை நடத்திக் காட்டும். 
 • நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள் : ஓய்வு பெற்ற பிறகு, ஒருவர் தனக்கு ஆர்வமுள்ளதையோ அல்லது பொழுதுபோக்கிற்காக செய்ய விரும்பும் காரியங்கள் மற்றும் அவர்கள் செய்து வந்த வேலையின் போது செல்ல விரும்பிய பயணங்கள் போன்ற கனவுகளையும் செய்ய விரும்புகிறார்கள். இந்த கனவுகளை பூர்த்தி செய்ய ஓய்வூதிய நிதிகள் தேவைப்படும். அதை செய்வதற்கு ஓய்வூதிய நிதியின் தொகையைப் பற்றி அறிந்து கொள்ள பென்ஷன் கால்குலேட்டர் உதவுகிறது. 

பென்ஷன் கால்குலேட்டரின் முக்கியத்துவத்தை நிராகரிக்க முடியாது, ஏனெனில் ஒரு தனிநபரின் ஓய்வூதிய நிதி சேகரிக்க உதவுவது மட்டுமல்லாமல் அவர்களது ஆசைகளையும், இலக்குகளையும் நிறைவேற்ற உதவுகிறது.

பென்ஷன் பிளான் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள் 

 • ஓய்வு பெறும் வயது: பொதுவாக, இந்தியாவில் உள்ள மக்கள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். ஆனால், சிலர் முன்னதாக ஓய்வு பெறும் பொழுது, சில பேர் பணியினை மேற்கொள்ள உடலில் வலிமை இருப்பதாக நினைத்து தானாகவே வேலைக்கு செல்லும் சூழ்நிலைகளும் உள்ளன. ஆகையால், ஓய்வு பெறும் வயதை தீர்மானிப்பதன் பின்னர் மீதமுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கையையும் உறுதி செய்ய வேண்டும். 
 • பணவீக்கம்: வருமானம் இல்லாத பொழுது, அனைத்து செலவினங்களும் உங்களின் சேகரிக்கப்பட்ட தொகையில் இருந்து எடுக்கப்படும், ஓய்வு பெற்றதற்கு பின்னான ஓய்வூதிய நிதியின் கணக்கீட்டில் பணவீக்கமானது முக்கிய பங்காக வசிக்கிறது. எனவே, விலையானது உங்களின் வழக்கமான செலவினங்களை பாதிக்கலாம். 
 • ஆயுள் எதிர்ப்பார்ப்பு: ஓய்வூதிய நிதியைக் கணக்கிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட இறப்பு வயதைத் தேர்வு செய்ய முயற்சிக்க வேண்டும். இந்தியாவில் வாழும் ஆயுள் எதிர்பார்ப்பு விகிதம் 70-8 ஆண்டுகள் ஆகும். ஆனால், நாளுக்கு நாள் ஆயுள் எதிர்பார்ப்பு விகிதம் அதிகரித்து வருவதால் உச்ச வரம்பிற்கு கணக்கிட பாருங்கள்.
 • உழைக்கும் பொழுது செய்த முதலீட்டில் திரும்பும் விகிதம்: நீங்கள் வேலை செய்யும் காலத்தில் பங்குகள், ஈக்விட்டி, ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற நிதி கருவிகளில் முதலீடு செய்ய விரும்பினால், அதிக வருவாய் பெறும் வாய்ப்பினை பெற்றிருக்கலாம். இத்தகைய திரும்பி வரும் பலன், பெரிய ஓய்வூதிய நிதி சேகரிப்பிற்கு உங்களுக்கு உதவும்.
 • ஓய்விற்கு பின்னரான செலவினங்கள் :  இது ஒருவரின் வாழ்க்கைத் தன்மை மற்றும் தற்போது வைத்துள்ள செலவினங்களின் தேவைகளுக்கான தொகையை கணக்கிடுவது முக்கியமாகும்.
 • ஓய்வூதியதிற்கான முதலீட்டின் மீது திரும்ப கிடைக்கும் விகிதம் : வழக்கமாக மக்கள் ஓய்வு பெற்ற பிறகு பண சந்தையில் முதலீடு செய்யும் அபாயத்தை எடுக்க மாட்டார்கள். எனவே, இது திரும்ப கிடைக்கும் விகிதம் பாதிக்கிறது மற்றும் ஓய்விற்கு பிறகு பல ஆண்டுகளுக்கு வேறுபடலாம்.